வானிலிருந்து சாட்லைட்கள் அமுதையும் பொழிகிறது. விஷ அமிலத்தையும் பொழிகிறது. துரதிஷ்டவசமாக அதிகமான இணைய பயனாளர்கள் அமில மழையில் நனைந்து இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.
இணையத்தின் ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அறிவுக்களஞ்சியம். கேட்டதை கொடுக்கும் அலாவுதீன் பூதம் என்ற
கற்பனையை விஞ்சக்கூடிய தேடு பொறிகள். இறைக்க இறைக்க நீர் சுரக்கும் கிணறு.
இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இது என்னை போன்றவர்களுக்கு இனிப்பானச் செய்தி.
நம் உள்ளம் கவர்ந்த உரைகள். கருத்தாழம் மிக்க கலந்துரையாடல்கள். ஆச்சரியமூட்டும் அசையும் காணொளிகள். மனம் கிளரும் ஒளிப்படங்கள். இவற்றை கேட்பதோடு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பதிவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்
அன்றாட தமிழ் பத்திரிக்கையின் (பிராடு) மற்றும் உண்மைசெய்திகள்
வித்தியாசமான நாடு கடந்த நண்பர்களால் நடத்தப்படும் குழுமங்கள்
எழுத்து திறனை உளி கொண்டு செதுக்கி நம்மை ஒளிர செய்யும் நட்புகள்.
வாசிப்பார்வத்தை தண்ணீருற்றி வளர்க்கும் ஏராளமான பதிவாளர்களின் கவிதை கட்டுரை சிறுகதை மற்றும் நேர்காணல்களை தாங்கி வரும் இணைய தளங்கள்.
யாரிடமும் முறையிட முடியாத சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள்.
உலகின் எந்த மூலையிலிருந்தும் உறவை வளர்க்கும்
உபயோகமான இணையதோழமைகள்.
இணையத்தின் விஷம் தோய்ந்த மறுபக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
அரசியலில் அடாவடித்தனம் செய்பவர்கள், தம் சுயத்தை
இழந்து நடிப்பு,விளையாட்டு விளம்பரத்துறைகளில் விலைபோனவர்கள்,
மேக்-அப் மன்னர்கள், வெகுளி வேடம் தரித்தவர்கள், ஆபாசப் பேர்வழிகள், சமூக விரோதிகள், கீழமை எண்ணம் கொண்டவர்கள், இவர்களின் பாதுகாப்பான புகலிடமாக இணையம் மாறிபோயிருக்கிறது
இணையம் ஒரு திறந்த ஊடகம். தெளிந்த மனதையும் சிதறடிக்கும் சக்தி கொண்டது.
இயற்கையான வெட்கத்தின் பாற்பட்ட மெல்லுணர்வுகளை வக்கிரமாக தீர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இணையத்தில் உண்டு
தன் சொந்த வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்திருப்பவர்கள் (பஸ் ஸ்டாண்ட்) பொது கழிவறையை அசிங்கப்படுத்துபவர்கள். யார் வந்தார்கள் அசிங்கமாக கிறுக்கினார்கள் என்று யாருக்கும் முகம் தெரியாது.
பொது கழிவறையில் பொறுப்பில்லாமல் கிறுக்குபவர்களை விட மூர்க்கமான வக்கிர ஆபாச பேர்வழிகள் திறந்த இணைய ஊடகத்தில் இறைந்து கிடக்கிறார்கள்.
தன் வீட்டை தன் குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொண்டே அடுத்த வீட்டு குடும்ப பெண்களை திருடுகிற திருட முயற்சிக்கிற கேடு கெட்டவர்களுக்கு இணையம் எளிமையான பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
புகழ் பெற வேண்டும் என்பதற்காக இணையத்தில் பொறுப்பில்லாமல் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க தயங்காத விளம்பர பிரியர்களின் விளம்பரங்கள் குப்பைபோல் கொட்டி கிடக்கின்றன.
ஒரு பெண்ணும் இளைஞனும் சாட்டிங்கில் நீண்ட நாட்களாக (அசிங்கமான) நட்பாக பழகியதில் அந்த இளைஞனின் ரோமண்டிக்கான பேச்சில் மயங்கிய அந்த பெண் இருவரும் நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து நகரின் மத்தியுள்ள பூங்காவில் சந்திக்க திட்டமிட்டனர்.அடையாளம் கண்டுக் கொள்ள welcome என்ற பெயர் பொறித்த சிகப்பு கலர் டி சார்ட் அணிந்து வர வேண்டும் என்று முடிவெடுத்து சந்தித்தார்கள். சந்தித்த பிறகு தான் தெரிந்தது இத்தனை நாள் தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞான் தன்னுடைய மகன் என்று.
இது அமெரிக்காவில் 2006-ல் நடந்த உண்மை சம்பவம்.
தீயை விளக்கேற்ற பயன்படுத்தாமல் தானும் அந்த வீட்டில் தான்வசிக்கின்றேன் என்ற பொது அறிவுகூட இல்லாமல் வீட்டை எரிக்க பயன்படுத்துகிறவர்களை தனிமைப்படுத்துவது அல்லது எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
இந்த இணையத்தை அழிவு பனிகளுக்கு பயன்படுத்தாமல் ஆக்கப் பனிகளுக்கு எப்படி பயன்படுத்துவது என்கிற விஷயத்தை
பதிவாளர்களும் கருத்து சொல்லுபவர்களும் இனைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து தெரிவிப்பவர்களிடம் விட்டு விடுகிறேன்
எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை உங்களுடைய கருத்தை பதியுங்கள்
1.இந்த தீமைகளை களைய வேண்டும் ஏன்றால் உண்மையான இறைநம்பிக்கைஆன்மீகம் ஊடக களைய முடியும் இப்படியும்
2.எல்ல பிரச்சனைகளுக்கும் மத புத்தகத்தில் ஏன் தீர்வை தேடுகிறீர்கள் சமூக அக்கறையும் மக்களை நேசிக்கின்ற பண்புள்ளவர்கள் இருந்தால் போதுமானது என்றும்
3. பெரிய சமூதாய அக்கறையெல்லாம் தேவையில்லை சுயநலமாக யோசித்து பாருங்கள் யார் பாதிக்கப்படுகிறர்களோ அந்த இடத்தில் நாம் மகனை மகளை வைத்துப்பாருங்கள் இப்படி சுயநல சிந்தனை இருந்தால் போதும் இணையத்தை சீர்திருத்தி விடலாம் இப்படியும் கருத்து கூறலாம்
வாருங்கள் சகோதரர்களே சகோதரிகளே நண்பர்களே
வலையுகத்தை சரியான இலட்சிய நோக்கத்திற்காக பயன்படுத்துவோம்
அதன் பிறகு இரண்டாவது பதிவில் எனக்கு தெரிந்த உடன்பாடன தீர்வை சொல்லுகிறேன்
தொடரும்