Sunday, January 30, 2011

தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்

திவுலகில் உள்ள சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பிறருக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு சமையல் கலை, கைவினை, இயற்கை மருத்துவம் போன்றவற்றை சொல்லலாம். சரி நானும் எனக்கு தெரிந்த கலைகளை பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு இடுகிறேன்.(வெளக்கம் போதுமா)

சரி எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு உடற்பயிற்சி இயக்க வல்லுனர்
நோய் தீர்க்கும் உடற்பயிற்சி முறைகளை செயல் ரீதியாக கற்று இருக்கிறேன் இங்கு சவூதியிலும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இரும்பு கருவிகளை பயன்படுத்தாமல் ஆனால் அதைவிட அதிக பலன்கள் தரக்கூடிய பக்க விளைவுகளை எற்ப்படுத்தாத மைதான விளையாட்டு முறையிலான(Athletics exercise)வற்றை சொல்லி கொடுக்கிறேன். அப்புறம் சிலம்பாட்டம், களரி, போன்ற மண்சார்ந்த கலைகளும் தெரியும் .சர்க்கரை நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறைகள், இருதய நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறைகள் என்று பல வகை இருந்தாலும் நான் இந்த பதிவில் சொல்லி கொடுக்க போவது தொந்தியை குறைக்க செய்யவேண்டிய உடற்பயிற்சி முறைகள் மட்டும். இந்த கிரவுண்ட் எக்ஸர்சைஸ் முறையில் ஒவ்வொரு உறுப்புகளையும் தனிதனியாக இயக்கலாம் வயிறை குறைக்க மட்டும் 35 வகையான பயிற்சி முறைகள் இருக்கின்றன அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்.


இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்
ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு

1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.

4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம்

                           இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்
விரிப்பின் மீது நேராக உட்கார்ந்து கால்களை நெடுக நீட்டிக் கொள்ள வேண்டும். பின்பு முன்னுக்கு குனிந்து மூச்சை விட்டுக் கொண்டே, கைகளால் கால்களின் பக்கவாட்டில் தேய்த்துக் கொண்டே சென்று கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரலால்,கொக்கி போல் மடக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். கால் கட்டை விரல்களை கெட்டியாகப் பிடித்ததும், வயிறு எக்கிக் கொள்ளும். இப்படி கால் கட்டை விரல்களைத் தொட முயற்சிக்கும் போது முழங்கால் உயரக்கிளம்பும் அப்படி கால்கள் மேலெழும்புவதைத் தடுத்து உடலைக் கால்கள் மேல் வளைத்துக் கொஞ் சம் கொஞ்சமாக கால் கட்டை விரலை பிடித்து விட வேண்டும்.(பருமனாக இருப்பவர்கள் கால் கட்டை விரலைக்கூட தொடமுடியாது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானது)கால் கட்டை விரல்களை பிடித்த பிறகு, தலையை கொஞ்சம் கொஞ்சமாக குனிந்து நெற்றி முழங்கால்களை சேரும்படி நெருக்க வேண்டும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும்.

இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்


இந்த பயிற்சி செய்யும் போது வயிறு நன்றாக மடிக்கப்படுவதால் வயிற்றிலுள்ள கொழுப்புகள் எரிந்து தொந்தி குறையும். காற்றுக் குழாய், விதானம், சிறுநீர்க்குழாய், இருதயத்திற்குப் போகும் கீழ் இரத்தக் குழாய், இதயத்திலிருந்து வரும் பெரிய இரத்த நாளம், ஆகாரக் குழாய், சிறுநீர்ப்பை, மண்ணீரல் பெருங்குடல் இவை அனைத்துமே விரிவடைந்து நன்கு செயல்படும் .இப்படி செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் பற்றிக் கூறவும் வேண்டுமா?
மேலும் சிறுநீர்த் தடையையும் இப்பயிற்சி நீக்குகிறது. நாடி இயக்கங்களின் குறைகளைப் போக்குகிறது. முதுகெலும்பிற்கு பலத்தைக் கூட்டுகிறது. இடுப்பு பலம் பெறுகிறது. இடுப்புவலி வாயுத்தொல்லை போன்ற உபாதைகள் நீங்கும்
இப்பயிற்சியை இடைவிடாமல் செய்து வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வராது எப்படி? இந்த பயிற்சியினால் கல்லீரலுக்கு நல்ல இரத்த ஒட்டம் கிடைக்கிறது. கல்லீரலில் இன்சுலின் என்ற திரவம் சுரக்கிறது. இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது இன்சுலின் என்ற பொருளே ஆகும். இது போதுமான அளவு கல்லீரலில் உற்பத்தி ஆகாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து அது நமது உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடும். இப்பயிற்சியை செய்யும்போது கல்லீரலில் நன்கு புத்துணர்வுடன் செயல்படுவதால் அங்கு இன்சுலின் தாராளமாக உற்பத்தியாகிறது. இந்த இன்சுலின் இரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பெண்கள் இந்த பயிற்சியை செய்யலாம். இதனால் அவர்களுக்கு பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரவே வராது.

சில முன்னெச்சரிக்கைகள்
ஹெரண்யா நோய் உள்ளவர்களும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.

கர்ப்பவதிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் எளிதில் இப்பயிற்சி கைகூடாது . அதற்காகப் பயிற்சியை விட்டுவிடக்கூடாது.

ஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலி குறையும் பயிற்சியும் கைகூடும்.

மொத்தம் வயிற்றுக்கான 35 பயிற்சிகளில் இரண்டை இந்த பதிவில் சொல்லுவதாக இருந்தேன் ஆனால் பதிவு மிகவும் நீளமாகி விட்டதால் இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த அடுத்த பயிற்சியை இரண்டாவது பதிவாக இடுகிறேன்.


இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது இமெயில் பன்னுங்கள்.

Saturday, January 22, 2011

தினமலரின் காவி நரித்தனம்

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான செய்திகளை உருவாக்குவதில் தினமலரின் பங்கு கனிசமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இது போன்ற காவி ஊடகங்கள் முஸ்லிம்களுக்கெதிராக மட்டுமில்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராகவும் செய்திகளை வெளியிடுகின்றனர். மண்டல் கமிஷனுக்கு எதிராக உயர் ஜாதி வகுப்பினர் நடத்திய போராட்டங்களைப் பூதாகரமாக்கி வெளியிட்டனர். நாடே இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கினர். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களைத் திட்டமிட்டு மறைத்தனர்.

 “வாளின் முனையை விட பேனாவின் முனை வலிமை மிக்கது”
என்பது நாம் வாழும் காலத்திற்கே மிகவும் பொருந்தி வருகிறது.
“ஆவதும் ஊடகத்தாலே அழிவதும் ஊடகத்தாலே” என்பது நிதர்சன உண்மை.
ஊடகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைப்பவர் உலகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மக்களின் சிந்தனை, நடை, உடை, பாவனை, உணவு, பொழுதுபோக்கு இத்தனையிலும் ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவர்கள் மக்களை சிந்திக்க விடுவதில்லை. மக்களுக்காக அவர்கள் சிந்திக்க விரும்புகிறார்கள். மேல்நாட்டு ஆதிக்க சக்திகளும் நம் நாட்டு ஆதிக்க சக்திகளும் இஸ்லாத்தைத் தமது பொது எதிரியாகக் கருதுகின்றன. பொதுவாக ஆதிக்க சக்திகள் ஒரு பொது எதிரியைக் காட்டியே தமது பலத்தை பெருக்கிக் கொள்வர். கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர்கள் ஒரு பொது எதிரியை தேடிக் கொண்டிருந்த வேளையில் முஸ்லிம்களில் ஒரு நுண்ணிய பிரிவினர் செய்த வன்முறைச் செயல்கள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எல்லா நிலைகளிலும், எல்லா வகைகளிலும் மோசமாகச் சித்தரித்து முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்கி சமூகங்களுக்கிடையில் இடைவெளியை அதிகரிப்பது என்ற ‘ஒற்றைத் திட்டத்தின்’ கீழ் செயல் பட துவங்கினர். அதற்காக அவர்கள் பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.
உதாரணத்திற்கு 22/01/2011 சனிக்கிழமை இன்று தினமலரின் வலைத்தளத்தியுள்ள முகப்பு செய்தியை பாருங்கள்.

16hrs : 49mins ago
பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். .
என்ற செய்தியை சிறிய புகைப்படத்தோடு போட்டு விட்டு
உடனே பா. ஜ.க 30 பஸ்களை கொளுத்தியவுடன் பா.ஜ வன்முறை கட்சி என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக. இதுலாம் சின்ன வன்முறைங்க இதைவிட பெரிய வன்முறையேல்லாம் முஸ்லிம்கள் நடத்தி இருக்கிறார்கள் என்பதை நிருபிக்க காஷ்மீர் சம்பந்தமான வீடியோவை சம்பந்தமே இல்லாமல் வெளியிட்டுயிருக்கிறார்கள் (அதாவது பா.ஜ வுக்கு புகைப்படம் என்றால் முஸ்லிம்களுக்கு அதைவிட பவர்புல்லான காணொளி)
இந்த வீடியோவை பார்த்தீர்களா? கடந்த வருடத்தில் காஷ்மீர் மக்கள் செய்த கலவரத்தால் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பு 700 கோடியாம் (இதோடு 30 பஸ்களை இனைத்து பார்த்தால் இது சாதரணம் அல்லாவா) சுற்றுலா தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கு சேர்க்கவில்லையாம் .

ஒரு கல்லில் இரு மங்காய் அடிக்கிற ஆதிக்க சக்தியின் ஊடகத்தின் நரித்தனத்தை பாருங்கள்.

1. காஷ்மீர் காட்டுமிராண்டி முஸ்லிம் மக்களை விட பா.ஜ.தொண்டர்கள் இந்திய நாட்டிற்கு பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்தி விடவில்லை.

2.பார்த்தீகளா காஷ்மீர்ல தேவையில்லாமா போராடி இப்ப பாதிப்பு யாருக்கு அந்த மக்களுக்கு தான் பாத்தீகளா காஷ்மீர்ல தொழில் துறைகள் நசிந்து வறுமையில 10 வருஷம் பின்னாடி போயிட்டாக அதனால அரசங்கத்த எதிர்த்து யாரும் போராட கூடாது .போராடினால் காஷ்மீர்க்கு ஏற்பட்ட நிலை தான் எல்லாருக்கும் என்று மறைமுகமாக பயமுறுத்தி அட்வைஸ் பன்னி ஊளை விடுகிறது தினமலர் காவி நரி தமிழ்நாட்டில் நம்பர் ஒன் பத்திரிக்கைகாக போட்டியிடும் மற்ற பத்திரிக்கையான,


























இந்த கல்லெறித் திருவிழாவிற்கு காரானமானவன் ஜனவரி எட்டாம் தேதி காஷ்மீரில் கொல்லப்பட்ட இனாயத்கான் என்ற பதினாறு வயது இளைஞன் தான் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்ற துடிப்பான பையன் டூவிஷன் வகுப்புக்குப் போகும் வழியில் பாதுகாப்புப் படையினர் அவனை சுட்டு கொன்றனர். அவனை அடக்கம் செய்யும் போது, இனாயத், தேரே கூன்ஸே இன்கிலாப் ஆயேகா” (இனாயத் உன்னுடைய உதிரத்திலிருந்து புரட்சி வந்தே தீரும்) எனும் முழக்கம் விண்ணை அதிர வைத்தது இறந்த உயிர்களுக்கு நீதி கேட்டு சொந்த உயிர்களை பணயம் வைத்து முடிவுறாத முழக்கங்களுடன் தெருவுக்கு வருகிறார்கள் இனியும் வருவார்கள்.
கொல்லப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்க, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக செய்திகளை மறைப்பதற்குத்தான் அரசு பெரிதும் முயன்றது. 
சென்ற ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் பதின்பருவ இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள் மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி 57க்கும் மேற்பட்டவர்கள் இது வரை கொல்லப்பட்டார்கள். சிலர் விளையாட்டு மைதானத்திலும் வீட்டுச்சரிவுகளின் அருகிலும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

இவ்வாறு கடந்த juneல் மட்டும் 13 குழந்தைகள் துடிதுடித்துச் செத்திருக்கிறார்கள், ஸ்ரீநகரில் கனி மெமோரியல் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற பதின்மூன்று வயதே ஆன வமிக் பாரூக் ஜனவரி 31ஆம் நாள் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி இறந்தான் அடுத்த ஐந்து நாள்களுக்குள் ஷாஹித் பாரூக் எனும் பதினாறு வயது இளைஞன் தன் வீட்டின் அருகிலேயே எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கொல்லப்பட்டான். ஏப்ரல் 13ஆம் நாள் ஜீலம் நதிக்கரை ஒரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் சுபைர் அஹமது பட்(17) இராணுவத்தினர் தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் பிள்ளைகள் நதியில் குதித்து விட்டனர்.

மற்றவர்கள் எல்லாம் நீந்திக் கரை சேர்ந்தபோது சுபைர் மட்டும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டன். அவனைக் காப்பாற்றப் படகுக்காரர்கள் சிலர் முயன்ற போதும் அவர்கள்மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தது இராணுவம். அதனால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சுபைரின் சாவை சாதாரண விபத்து என்று குறிப்பிட்டு வழக்கை முடித்திவிட்டார்கள். நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை இதுதான் இந்திய அரசாங்கம் கஷ்மீரிகளுக்கு வழங்கும் பாதுகாப்பின் இலட்சனம். ஒரு சுகந்திர நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பும் மரியாதையும் கூட காஷ்மீர் மக்களுக்கு கிடைப்பதில்லை.
700 கோடி அரசாங்க இழப்பீடுகளை பற்றி ஊளையிடும் தினமலர் என்றைக்காவது ஜனநாயக வழியில் போராடி தங்களுடைய விலை மதிக்கமுடியாத108 உயிர்களை இழந்த காஷ்மீரிகளைப் பற்றி ஒரு தலைப்பு செய்தியாவது வெளியிட்டுருக்குமா?
ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய நடுநிலையாளர்களும், முஸ்லிம்களும் தினமலரை போன்று பாசிச சிந்தனை கொண்ட பத்திரிகைக்கு எதிரான உண்மையை சொல்லும் மாற்று ஊடகத்தை கட்டமைப்பது அவசியம்.
இவையே நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய கடமைகள். ஒப்பாரி வைப்பதை நிறுத்திச் செயலில் இறங்குவோம்.
ஊடகத்தை ஊடகத்தால் சந்திப்போம்.

Thursday, January 13, 2011

உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்-புத்தக அறிமுகம்

ஸ்லாமிய புத்தகங்கள் என்றாலே பெரும்பாலும். மார்க்கச் சட்ட நூல்கள் அதாவது ஜனாஸாவின் சட்டங்கள், குளிப்பின் விதிமுறைகள், தொழுகையின் சுன்னத்துக்கள்- ஃபர்ளுகள், நபிமொழித் தொகுப்புகள், மண்ணறை வேதனைகள் போன்ற நூல்கள் தான் கிடைக்கின்றன இஸ்லாமிய பதிப்பகங்களும் இவை போன்ற நூல்களைதான் வெளியிடுகிறார்கள். இவைகளியிருந்து வித்தியாசப்பட்டு உலகமயமாக்கலின் உண்மை நிலையையும், சமூக, அரசியல்,பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் அது ஏற்படுத்தி வருகின்ற பாதிப்புகளையும், முஸ்லிம் இளைஞர்கள் மீது அது சுமத்துகின்ற பொறுப்புகளையும் இஸ்லாமிய மார்க்க பார்வையில் விவரிக்கிறது இந்நூல்.இந்த புத்தகத்திலிருந்து என்னைக் கவர்ந்த நான் கோடிட்ட சில பக்கங்களின் வரிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
 உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள சூழல் மாற்றங்களில் முஸ்லிம் இளைஞர்களும் சரிசமமாக பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார்.

முஸ்லிம்களில் பெரும்பாலோர் விவசாயிகளாக, சிறு வியாபாரிகளாக, தொழிலாளர்களாக, குடிசைத் தொழிலில் ஈடுபடுகிறவர்களாத்தான் இருக்கிறார்கள்.உலகமயம் குறி வைத்து முழுங்குவதும் இவர்களைத்தான்.
வட இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலோர் குடிசைத் தொழில்களில்தான் ஈடுபட்டிருக்கின்றார்கள். முராதாபாதின் பித்தளைத் தொழில், பிவண்டி,மாலிகவுள்ள வாட்டாரத்தின் விசைத்தறித் தொழில், அலிகரின் பூட்டுத்தொழில், கான்பூரின் தோல் பதனிடும் தொழில்-இவையெல்லா தொழில்களும் தாராளமயமாக்கல்(liberalisation) கொள்கை காரணமாக இந்தத் தொழில்கள் அனைத்துமே பெரும் சரிவுக்கு உள்ளாகி நிற்கின்றன பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதை அழகாக விவரிக்கிறார்


                உலகமயம் குறி வைத்து விழுங்குவது இவர்களைத்தான்

இந்த புத்தகத்தில் அத்தியாயம்:8 தலைப்பு: இது வளர்ச்சியா அல்லாது வீழ்ச்சியா? பகுதியில்
  ஜியாவுத்தீன் சார்தர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
Touch of midas’மிடாஸின் தொடுதல்என்று பொருள்
மிடாஸ்என்கிற மன்னனின் கதையைப் படித்திருப்பீர்கள். மிடாஸின் பக்தியை மெச்சிய தேவதைகள் என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறோம்என்கிறார்கள். போராசை பிடித்த மிடாஸ் நான் தொட்டதெல்லாம் தங்கமாகி விட வேண்டும்என்று கேட்கிறான்.தேவதைகள் அவ்விதமேநடக்கும் என வரம் கொடுத்து விடுகிறார்கள்.
மகிழ்ச்சியில் திளைத்த மிடாஸ் கும்மளமிட்டுக் கொண்டு வீடு திரும்புகிறான். ஆனால் அவனுடைய மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. சாப்பிடுவதற்காக உனவைத் தொட்டால் அது தங்கமாகி விடுகிறது.குடிக்கிற நீரும் தங்கமாகி விடுகிறது. உடுத்துகிற ஆடையும் தங்கமாகி விடுகிறது. அன்பு மனைவி, அருமை மகள் எல்லாருமே தங்கப் பதுமைகளாகி விடுகிறார்கள்.
தன்னுடைய நூலின் தொடக்கத்தில் போராசை பிடித்த மிடாஸின் கதையை எழுதுகிற ஜியாவுத்தீன் சர்தார், நவீன அறிவியல் வளர்ச்சி கூட மிடாஸ் பெற்ற வரம் போன்றது தான். இந்த மிடாஸின் தொடுதலால் எல்லாமே, எல்லா வசதிகளுமே கிடைத்து விடுகிறது. ஆனால் நீர்வளம், உணவு தானியங்கள், மழை போன்ற வாழ்வாதாரங்களும் அடிப்படைத் தேவைகளும் அழிந்து போகின்றன, என்று அழகாக சுட்டிக்காட்டியுள்ளார்.
9.வளர்ச்சிக்கான மற்று வழி இருக்கின்றதா?
10.படிப்படியான மாற்று வழிகள்
11.எளிமையான வாழ்க்கை முறை
12.நுகர்வியப் பண்பாட்டிலிருந்து விடுதலை
13.சமூக ஏற்றத்தாழ்விலிருந்து விடுதலை
14.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம்
15.அறிவுக் களங்களைக் கைப்பற்றுவோம்

 உலகமயமாக்கலின் உண்மை முகங்களையும் அவற்றிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்று விரிவாக சில தலைப்புகளில் விளக்கியுள்ளார் புத்தகத்தை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
நூல்:
உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
ஆசிரியர்கள்:
சையத் சஆதத்தில்லாஹ் ஹீஸைன்
     டாக்டர் மன்சூர் துர்ரானி
போராசிரியர் மலிக் முஹம்மத் ஹீஸைன்

        தமிழில்
T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
       வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்