Saturday, March 3, 2012

கடன் பயங்கரவாதம்: தீர்வு என்ன?-3

இந்த பதிவின் முதல் பகுதியை பார்வையிடஇங்கே அழுத்துங்கள்  மற்றும் இரண்டாம் பகுதியை பார்வையிட இங்கே அழுத்துங்கள் இன்று மனித குலம் சந்தித்து நிற்கும் மிகப் பெரும் கொடுமைகள் கடன் பயங்கரவாதம் என்பதை சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்.


இதனை முறியடிப்பது எப்படி? என்னதான் தீர்வு? சில அதிகார வெறிபிடித்த அரசியல்வாதிகள் மற்றும் வங்கியாளர்களின் போராசையை வெற்றிக் கொள்வது எப்படி? இவர்களுக்கு எதிராக பாமர மக்களை அணி திரட்டுவதற்கும் மக்கள் எழுச்சியைத் தூண்டி விடுவதற்கும் என்ன செய்ய வேண்டும்? ‘கடன் பயங்கரவாதம்’ மீது எப்படி போர் தொடுக்கப் போகிறோம்?


சர்வதேசப் பொருளாதாரத்தை ஜனநாயகமயமாக்குவதற்கும், உலகை வாழ்வதற்கு ஏற்ற இடமாக ஆக்கவும் இங்கு பதினொன்று குறிப்புகள் தரப்படுகின்றன. இவையாவும் மிகச் சுலபமான, உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய வழிமுறைகள் எனச் சொல்ல மாட்டேன். இவற்றை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் உறுதியும் தொடர் முயற்சியும் அர்ப்பணிக்கும் பண்பும் காட்டப்பட்டால் வெற்றி நிச்சயமே.


பதினொன்று அம்சத் திட்டங்கள் விவரம் வருமாறு:

1.முதலாவதாக உலக வர்த்தக அமைப்பை (WTO)க் கலைத்து விட்டு அதன்
 இடத்தில் முழுக்க முழுக்க ஜனநாயகமான,வெளிப்படையாகச் செயல்படக் கூடிய, ஓர் அமைப்பு நிறுவப்பட வேண்டும். இந்த அமைப்பு (WTO)வைப் போல் பன்னாட்டு வணிக அமைப்புகளுக்குப் பதிலளிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது.அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த உலகின் குடிமக்கள் அனைவருக்கும் பதிலளிக்கக் கூடிய வகையில் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தொழிலாளர்கள், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதை உறுதிசெய்யும் வகையில் வணிகக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
2. பன்னாட்டு நிறுவனங்கள் சமூகப் பொறுப்பு உணர்வுடன் செயல்படுவது சட்டரீதியாக உறுதி செய்யப்பட வேண்டும். அவை சமூகத்துக்குப் பயனளித்தால் இயங்க அனுமதிக்கப்படும். இல்லையேல் அவை கலைக்கப்பட்டு விடும். பொதுமக்களின் தேவைகளை மதித்து இந்த விடயத்தில் பதிலளிக்கும் பொறுப்பு உணர்வுமிக்கவையாக பன்னாட்டு நிறுவனங்கள் இருந்தாக வேண்டும்.

பொதுமக்களின் ஆய்வுக்குட்படும் வகையிலும் யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கின்ற வகையிலும் அவற்றின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருத்தல் வேண்டும்.வாழ்வாதாரத்தை வழங்குபவையாகவும், எல்லவிதமான சுற்றுச் சூழல் மற்றும் தொழிலாளர் சட்டங்களுக்குட்பட்டவையாகவும்,அவை செயலபட வேண்டும். பங்குதாரர்கள் விழிப்புடன் செயல்படக் கூடியவர்களாக இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் நடத்தையைச் சீர்படுத்த உதவும்.
3. சர்வதேச நிதிக்கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். நாணயத்தின் மதிப்பில் நிகழ்கின்ற ஏற்ற இறக்கங்களைக் கணித்து வணிகம் செய்வது கொழுத்துப் போன முதலீட்டாளர்களுக்கு வேண்டுமானால் குறுகிய கால லாபங்களைத் தரலாம். ஆனால் நீண்டகால வளர்ச்சிக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. நாணயப் பரிமாற்றங்கள் மீது 1 சதவீத வரி விதித்தாலே போதும். நாணய மதிப்பு மீதான சூதாட்டமும் வணிகமும் நின்று விடும். உண்மையான நிதி முதலீடும் பாதிக்கப் படாது. உலகெங்கும் பள்ளிக் கூடங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களைக் கட்டி அமைப்பதற்கு உதவியாக பெரும் நிதி உருவாகும்.

4. மூன்றாம் உலகின் எல்லாக் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கான ஜுபிலி நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தர வேண்டும். கட்டவமைப்பு திருத்தப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக வேண்டும். ஒரு நாட்டு மக்களின் நல வாழ்வுக்குத் துணை போகும் பொருளாதார முடிவுகளை எடுக்கிற உரிமையையும் அதிகாரமும் அந்நாட்டு அரசுக்கு மட்டுமே உண்டு. இந்த விடயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் தலையீடுக்கு இடம் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

5. வணிக ஒப்பந்தங்களில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் இருக்கின்ற பொருளாதார மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கு இணக்கமானவையாகவும் மனித உரிமைகள் தொடர்பான உயர் சட்டங்களுக்குட்பட்ட வகையிலும் வணிக விதிகள் இருக்க வேண்டும். நியாயமான வணிகம், கடன் நீக்கம், மைக்ரோ கடன், வளர்ச்சிக் கொள்கைகள் உள்ளூர் மக்கள் கையில் இருப்பது போன்ற விடயங்களைக் கொண்ட மாற்று வணிக ஒப்பந்தங்களை ஊக்குவிக்க வேண்டும்.

6.வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது நுகர்வியம் அல்ல. தங்கு தடையற்ற முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலமே வளர்ச்சி சாத்தியமாகும். ஏற்றுமதி சார்ந்ததாக சர்வதேச வளர்ச்சி இருக்கலாகாது. உணவு உத்தரவாதம், நீடித்த சீரான வளர்ச்சி,ஜனநாயக பங்கேற்பு ஆகியவையே சர்வதேச வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.
7.ஐ.டி.பி. (இஸ்லாமிய வளர்ச்சி வங்கி) உறுப்பினர் நாடுகளில் பொருளாதாரக் கட்டமைப்புக்கு அடிப்படை இஸ்லாமிய வழிமுறையாக இருக்க வேண்டும். சத்துணவு,கல்வி,ஒழுக்க,தார்மிக வளர்ச்சி போன்றவற்றில் பெண்களுக்கு இருக்கின்ற முக்கிய பங்கை கருத்தில் கொண்டே கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.(இஸ்லாமிய வங்கியைப் பற்றி விரிவாக பிறகு பார்போம்)

8. உள்ளூர் அளவிலும் சர்வதேச அளவிலும் வலுவான, சுதந்திரமான தொழிலாளர் யூனியன்கள் கட்டமைக்கப்பட்டு, யூனியன் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பற்பல நாடுகளில் தங்களின் பணியை விரிவுப்படுத்திக் கொண்டே போகிற சூழலில் யூனியன்கள் எல்லைகளைத் தாண்டி பாலங்கள் அமைத்து சர்வதேச அளவில்  வலுப்பெறுவதற்கு யூனியன்கள் முனைப்புக் காட்டி வருகின்றன. யூனியன்களின் அந்த முயற்சிகளுக்கு சமூக ஆர்வலர்கள் ஆதரவளித்து எந்தவொரு சுதந்திர சந்தை ஒப்பந்தத்திலும் முக்கியமான பகுதியாக ‘தொழிலாளர் சுதந்திரம்’ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

9.முதலீடு மீதான சமூகக் கட்டுப்பாட்டை வளர்த்து, சமூகப் பொறுப்பு உணர்வுள்ள முதலீடுகளுக்கு ஆதரவளித்து, உள்ளூர் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வகையில் முதலீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்தும் திறன் கொண்டவைகளாக சமூகங்கள் இருக்க வேண்டும்.

10. சுதந்திர வணிகத்துக்குப் பதிலாக நியாயமான வணிகத்தை ஊக்குவிக்க வேண்டும். அடிமட்ட வணிகம் தழைக்க உதவும் வகையில் ஆதரவு, பயிற்சிக்கான பின்னல்கள் ஏற்படுத்தப்படுவதும் அவசியமாகும். செல்வம் பரவலாகப் பங்கிடப்படுவதற்கும், சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வணிகம் நிலை பெறுவதற்கும் இது உதவும். பண்டங்களுக்கு நியாய வணிக சான்றளிக்கப்பட்டது, ஆர்கானிக், சுற்றுச் சூழல் ஊறு விளைவிக்காதது என முத்திரைச் சான்று அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

11. இருபதாம் நூற்றாண்டில் பலவேறு அரசாங்கங்கள் 17 கோடி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தன. போர்க்களங்களில் மாண்ட வீரர்களின் உயிரிழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை. எல்லா நாடுகளையும் ஆயுதமில்லா நாடாக ஆக்கிவிட்டு, எல்லா இராணுவ நடவடிக்கைகளையும் ஒழித்து விட்டால், இவ்வாறாக முதல் மாதத்தில் சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் உணவு, உடை, உறைவிடம் கொடுத்து கல்விப் பயிற்சியும் புகட்டி விட முடியும்.
இறுதியாக ஒன்று

நாம் எத்தகைய வெட்கங் கெட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், தெரியுமா? கூலியாக உணவு தரப்படுகிற உலகில், தண்டனையாக உணவு மறுக்கப்படுகிற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏழை அமெரிக்கர்கள்,ஏழை ஈராக்கியர்கள்,ஏழை இந்தியர்கள், ஏழை ஆப்ரிக்கர்கள்,ஏழை பாலஸ்தீனர்கள், ஏழை இந்துக்கள், ஏழை கிறிஸ்துவர்கள் மற்றும் ஏழை முஸ்லிம்கள் எல்லாருமே பல விடயங்களில் ஒரே மாதிரியானவர்களாக,பொதுவான பிரச்சனைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோருமே பிரமிடின் அடிப்பாகமாக இருக்கிறார்கள். அந்த பிரமிடை தலைகீழாகத் திருப்பியமைப்பதில் நாம் உதவ வேண்டும்.

மூன்றாம் உலகக் கடன் ஏற்படுத்திய நெருக்கடியால் தான் நம்மால் ஐ.எம்.எப்., உலக வங்கி, யூ.எஸ்.டிரெஷ்ஷரி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகியவை எந்த அளவுக்கு உலகை கவ்விப் பிடித்து வைத்துள்ளன என்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

நம்மில் எல்லாருமே மற்றவர்களுடன் அமைதியாக வாழவும், சுதந்திரத்தை அனுபவிக்கவும்,அன்பு,கண்ணியம், மரியாதை ஆகியவற்றை உணரவுமே விரும்புகிறோம். சமூகங்களாக வாழ்ந்து, சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காமல் பணியாற்றவும், இனச்செருக்கின் அடிப்படையிலான துவேஷத்தை ஒதுக்கித் தள்ளவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறாக சொத்துரிமைக்குப் பதிலாக பகிர்தல் நிலை பெற்று விடக் கூடிய சர்வதேச சமூகம் மலர்ந்து விடும்.

References:டாக்டர் மன்சூர் துர்ரானி
பேராசிரியர். மலிக் முஹம்மத் ஹுஸைன்
நூல்: உலக மயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
படங்கள்: கூகுள்

8 comments:

  1. இந்த தொடர் பொறுமையாக படிக்கவேண்டியது. இப்போது ஓட்டு மட்டுமே வீட்டிற்கு சென்று படித்து பின்னூட்டத்துடன் வருகிறேன் சகோ.

    ReplyDelete
  2. சலாம் அண்ணா

    //
    11. இருபதாம் நூற்றாண்டில் பலவேறு அரசாங்கங்கள் 17 கோடி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தன. போர்க்களங்களில் மாண்ட வீரர்களின் உயிரிழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை. எல்லா நாடுகளையும் ஆயுதமில்லா நாடாக ஆக்கிவிட்டு, எல்லா இராணுவ நடவடிக்கைகளையும் ஒழித்து விட்டால், இவ்வாறாக முதல் மாதத்தில் சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் உணவு, உடை, உறைவிடம் கொடுத்து கல்விப் பயிற்சியும் புகட்டி விட முடியும்.//



    இந்த பாய்ன்ட் செம நச் அண்ணா. போர் நடவடிக்கைகளை ஒழித்தாலே அதற்கு செலவிடப்படும் தொகையில் உலகமக்களின் நலனில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிக அதிக அக்கறை காட்ட முடியும். ஆனால் இது மற்ற நாட்டின் வளங்களை தனதாக்க முயற்சிக்கும் குணம் இருக்கும் வரை சாத்தியப்படாது :'(

    ReplyDelete
  3. maasha alla !

    nalla aazhamaana pathivu!

    ReplyDelete
  4. இந்த தொடர் பதிவின் மூலம் அதிக விடயங்கள் தெரிந்துகொண்டேன் சகோ. நன்றி!

    ReplyDelete
  5. சலாம் சகோ....
    #கூலியாக உணவு தரப்படுகிற உலகில், தண்டனையாக உணவு மறுக்கப்படுகிற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    .#

    வருத்தம் தரும் உண்மை

    ReplyDelete
  6. பார்த்துங்கோ.... ஆயுத வியாபாரம் ஆயிரம் ஆயிரம் சதம் லாபம் தரும் தொழில்.. இந்திய சாம்பிள் பாருங்க..

    http://ofb.gov.in/index.php?wh=Purchase&lang=en
    http://maharashtra.olx.in/belgium-make-gun-for-sale-iid-315465537
    இது அரசு கொடுக்குற துப்பாக்கியின் விலை. சுமார் 75௦௦௦

    மார்க்ஸ்ன் சொல்வது ..
    ஒரு பொருளின் விலை என்பது .. அதன் மூல பொருளின் விலையும்
    அதை தயாரிக்க கொடுக்கப்படும் சம்பளம் இவற்ற்ன் மொத்த மதிப்பே ஆக்கும் .

    துப்பக்கியின் எடை 800 கிராம் ...
    மூல பொருள் இரும்பின் விலை அதிக பட்சம் 50 ரூபாய் வரும்...
    துப்பாக்கி பல வருடங்களா தயாரிக்கிறார்கள் வடிவைம்ப்பு செலவு எல்லாம் எடுத்து இருப்பார்கள் .. உற்பத்தி குலி என ஒரு துப்பாக்கிக்கு 800 ரூபாய் வைத்தாலும் இதர செலவுகளுடன் 1000 ரூபாய்க்கு விற்கலாம்.
    ஆனால் விற்கும் விலை 80000.
    80000/1000 * % = 8000 % லாபம்.

    இது சாதாரண துப்பாக்கி ..அவர்கள் குறிப்பிடும் அளவு படியே 25 மீட்டர் சுட முடியும் ..அவ்வளவு தன.. இன்னம்
    SLR, automatic machine gun, ன்னு எத்தனை இருக்கு...

    இது இல்லாம குண்டுகல் ராகேட் ன்னு என்ன விலை என்ன லாபம்னு நினைச்சு பாருங்க...
    ஆயுத லாபத்துக்காக இஸ்ரேல் விளையடிய விளையாட பாருங்க..

    http://www.amanushyam.com/2012/02/blog-post_5777.html?utm_source=feedburner&utm_medium=feed&ut%C2%AB

    பார்த்துட்டு அப்பரம் சொல்லுங்க ... ஆயத் வியாபரத்தி உலக நாடுகள் நிறுத்துவாங்கள ?
    இன்னொரு விஷயம் பாருங்க
    உலக அளவில் ஒரே அரசு வந்தால் தான் இது சாத்தியம்.
    இத யாரவது உளவு அதிகாரி பர்ர்த்தால் உங்கள கூட டார்கெட் பண்ணலாம்.

    ReplyDelete
  7. உலக அளவில் ஒரே அரசு இருந்தால் மட்டுமே உலக அமைதி ராணுவம் இல்ல நிலை எல்லாம் சாத்திய படும்.

    ஆனா இங்க நடப்பது நேர் எதிர்.. புது நகரம் புது மாவட்டம் மாநிலம் நாடுன்னு பிரிவினை தன் பண்ணுறாங்க ...
    பிரிவினையால் மக்களுக்கு எந்த லாபாம் இல்லை.

    புது அரசு இயநதிரத்தல் புது செலவு வரி பணம் விரயம் தன் மிச்சம்
    புதிய பதவிக்கு மக்கள் பணத்தை பலி கொடுத்து அரசு விளையாடும் விளையாட்டு இது...

    ஒரே உலக அரசு வருமா சொல்லுங்க ..

    ReplyDelete