Monday, May 16, 2011

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

 ரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை.


எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா? 


30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன், பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.


இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை  கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.

80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.



2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?


ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம். என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?


சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.







இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.




இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800 (இ.9200)ரியால்.




இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.
சம்பளம் 1000(இ.11500) ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.



இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200(இ.13800) ரியால்.

இறுதியாக 


இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

38 comments:

  1. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்May 16, 2011 at 2:15 AM

    அஸ்ஸலாமு அலைக்கும்

    சரியாக சொன்னீர்கள் சகோ வலைகுடாவில் வாழ்க்கையை தொலைத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.எனக்கு பழக்கமானவர்களையும் எங்க ஊர்காரர்களையும் சந்திக்க நேரும்போது அவர்களுடைய கஷ்டங்களை என்னிடம் சொல்வதுண்டு.அவர்களிடம் இந்த கம்மியான சம்பளம்தான் நம் நாட்டிலேயே கிடைக்குதே இங்கு வந்து ஏன் கஷ்டப்படுகின்றீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் வீட்டிலுள்ளவர்கள் தான் எங்களை அனுப்பிவைக்கின்றார்கள் என்று சொல்கின்றனர்.கம்மி சம்பளம் அதிக உடலுழைப்பு அரிதான விடுமுறை நாட்கள் என்ன வாழ்க்கை இது

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்!

    சிறந்த பகிர்வு தோழரே! ஆனால் தற்போது படிப்பதில் சமூகம் ஓரளவு ஆர்வம் காட்டுகிறது. மற்ற சமூகங்களை ஒப்பிடும்போது நாம் இன்னும் கல்வியின் அவசியத்தை சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆடம்பரங்களையும், வரதட்சணைகளையும் ஒதுக்கி நமது உறவுகளை குறைந்த பட்சம கல்லூரியை தொட வைப்போம்.

    ReplyDelete
  3. சகோதரர் ஹைதர் அலி,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    -------
    அப்படி வருவதாக இருந்தால்சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள்
    --------

    நச்...என் உறவினர்கள் சிலருக்கும் தாங்கள் குறிப்பிட்டது போன்ற ஆதங்கம் உண்டு. நம்மை நாமே சீர்தூக்கி பார்க்கவேண்டிய தருணம் இது.

    தற்போதைய சூழ்நிலையில் இது மாறி வருகின்றது என்பதும் உண்மை.

    சொல்ல வேண்டிய விசயத்தை நேரடியாக, தெளிவாக சொல்லியிருக்கிண்றீர்கள். ஜசக்கல்லாஹ்

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. படிக்கவே கஷ்டமாக உள்ளது.

    ReplyDelete
  5. எந்த மாதிரி குடும்ப சூழ்நிலையோ? இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டு இருக்கிறார்களே. :-(

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
    இதைவிட கொடுமை, இப்படிப்பட்ட வேலைகளுக்கு ரூ.ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்துவருவதுதான்.
    தோட்டவேலைகள் பற்றியும் எழுதி இருக்கலாம்.

    ReplyDelete
  7. தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.ஹைதர் அலி.
    மிக அவசியமான பதிவு. ஆரோக்கியமான வாதங்கள்.
    சிந்திப்போர் நிச்சயம் பயன்பெறுவர்.
    சிறந்த முயற்சி.
    நன்றி.

    ReplyDelete
  8. நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை! நம் ஊரில் இது எத்தனையோ பேருக்கு தெரியாத ஒன்று. எப்படியாவது வெளிநாடு வந்து விட்டால் அப்புறம் சொர்க்கம் தான் என்ற நினைப்புள்ளவர்களே அதிகம். அதிலும், கடைநிலை வேலை செய்யும் லெபர்களுக்கு குடும்பத்தை அழைத்து வர விசா அனுமதி கிடையாது என்பது வடிகட்டிய அயோக்யத்தனம். ஆனாலும் கேட்க முடியாது. அந்த நாட்டு சட்டம் அப்படி. மிஞ்சி கேட்டாலும், வந்தா வா வராட்டி போ என்ற அளவிலேயே பதிலும் கிடைக்கும்.

    நீங்கள் சொன்ன இந்த அனுமதி குறித்து நிறைய பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

    நீங்கள் முதலில் சொன்ன கதை மிக அருமை! நெஞ்சார வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  9. எனது இப்பதிவையே பின்னூட்டமாக வைக்கிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/blog-post_30.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. சலாம்!
    நான் மனேஜராக வேலை பார்த்த ஸ்வீட் கடையில் சாப்பாடு /இடம் குடுத்து
    மாதம் 4500 சம்பளம் இருக்கிறது , ஆனால் ஆள் இல்லை இங்கே .. என்னத்த சொல்ல

    ReplyDelete
  11. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //கம்மி சம்பளம் அதிக உடலுழைப்பு அரிதான விடுமுறை நாட்கள் என்ன வாழ்க்கை இது//
    மாற்று வழிநோக்கி நாம் பயணிக்க வேண்டும் சகோ

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  12. @சுவனப்பிரியன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
    நீங்கள் பின்னூட்டத்தில் கூறிய அனைத்தையும் நாம் சமூகம் கண்டிப்பாக நடைமுறையில் கொண்டு வர வேண்டும்

    நன்றி சகோ

    ReplyDelete
  13. @Aashiq Ahamed

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //நம்மை நாமே சீர்தூக்கி பார்க்கவேண்டிய தருணம் இது.//

    ஆமாம் சகோ இந்த பதிவும் அது போன்ற முயற்சி எற்பட வேண்டும் என்கிற நோக்கிற்காக எழுதப்பட்டது சகோ

    ஜஸாக்கல்லாஹ் கைர

    ReplyDelete
  14. @அமுதா கிருஷ்ணா

    உங்கள் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. @Chitra
    //எந்த மாதிரி குடும்ப சூழ்நிலையோ? இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொண்டு இருக்கிறார்களே. :-(//

    சரியாகச் சொன்னீர்கள் அவர்களின் குடும்ப சூழல் இவர்களை இவ்வாறு சுழல வைக்கிறது

    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. @மு.ஜபருல்லாஹ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //இதைவிட கொடுமை, இப்படிப்பட்ட வேலைகளுக்கு ரூ.ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்துவருவதுதான்.//

    இந்த ஒரு லட்சம் கடனை அடைக்க சில வருடங்கள் ஆகி விடும் பாவம் இவர்கள்

    //தோட்டவேலைகள் பற்றியும் எழுதி இருக்கலாம்.//

    தோட்ட வேலை, டிரைவர் வேலை இவைகள்ப் பற்றி எழுதியிருக்கலாம் விடுபட்டு விட்டது. பிறிதொரு சமயத்தில் எழுதிருவோம் சகோ.

    நன்றி சகோ

    ReplyDelete
  17. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

    உங்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும் சகோ

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  18. @bandhu

    //நீங்கள் முதலில் சொன்ன கதை மிக அருமை! நெஞ்சார வாழ்த்துகிறேன்!//

    உங்களின் உளப்பூர்வமான வாழ்த்துக்கு நன்றி சகோ

    ReplyDelete
  19. @ஷர்புதீன்

    உங்களின் ஆதங்கம் புரிகிறது சகோ

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. Assalamu Alaikkum......
    Good Article.

    ReplyDelete
  21. @ismailmohemed

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

    நல்ல பதிவு சகோ.!

    வளைக்குடாவில் வாழ்வைத் தொடங்கியுள்ள நான் முதலில் வருத்தப்பட்டது அது போன்ற தொழிலாளிகளை பற்றி தான். அதிலும் குறிப்பாக, கொழுத்தும் வெய்யிலில் சாலைகளில் வேலை செய்பவர்களை பார்க்கும் வருத்தம் அளிக்கிறது. இந்நிலை மாற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்..!

    ReplyDelete
  23. @Abdul Basith

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //நல்ல பதிவு சகோ.!//
    அல்ஹம்துலில்லாஹ் சகோ

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  24. SALAM!
    உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்களின் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது மார்க்.45/100 நன்றி!

    ReplyDelete
  25. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

    Anna Hyder Ali, Nice efforts...But I like to tell you the truth which bitters.
    1. As per our old sayings, we need to earn at all cost, for that reason everyone is migrating from here and there.
    2. If we have sufficient works at India with of-course Good pay, no one is going to come abroad.
    3.Indeed, the achievements what you mention like he has made his daughter married if remarkable. Which he cannot do in good way if he stays back in India... Same applies for others.
    4. I totally disagree with your concept that we should not come..If anyone really think so, he should be the first to go out and die in hunger in India..This is what is the moral of your Blog.
    5. Really if we want to make any change is that speak with Indian government to have minimum wadges fixed for Indian workers.

    With Care...

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரரே தங்களின் கூற்று 100% உண்மையாக இருந்தாலும் உணர்பவர்கள் ,சம்பந்தபட்ட தொழிலாலர்கள் மட்டுமே!அனுப்பி வைக்கும் பெற்றோர்களோ & மனைவியோ அல்ல. அவர்களுக்கு இது புரிவதில்லையே என்ற ஏக்கத்தில் நாட்களை கடத்துபவர்கள் எத்தனை பேர்.எனவே இச்செய்தி பெண்களின் மனதில் புரியவைக்க வேண்டும். பணத்தைவிட கணவனின் அன்பும் அரவணைப்பும் அவசியம் என்பதை உணர வேண்டும்.

    ReplyDelete
  27. @BaSHa

    தமிழில் எழுதுங்கள் அண்ணே

    ReplyDelete
  28. @Barakathullah

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    தங்களின் முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    வெளிநாட்டு மோகத்தால் படிப்பில் அலட்சியத்துடன் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில நல்லுள்ளம் கொண்டவர்களின் முயற்சியால் தற்சமயம் குறைந்த வண்ணமே இருக்கின்றன,

    இது போன்ற சிறந்த ஆக்கங்களுக்காக உங்களுக்கு இறைவன் தக்க கூலி வழங்குவானாக.

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும் (வ ரஹ்)

    உண்மை நிலையை எளிமையாய் எடுத்துரைத்து, இன்றைய மக்களுக்கு கல்வியின்பால் விழிப்புணர்வை மீண்டும் தூண்டியிருக்கும் இச்சகோதரருக்கு சமுதாயம் நன்றி செலுத்தவேண்டும்.

    அறிவில் நுனிப்புல் மேய்ந்தவராய்திரியும் ஒருவரால் எழுதப்பட்டதலல... இவ்வரிகள்!

    இன்டர்நெட் வசதியில் விரிவாய் திளைத்திருக்கும்
    இன்று, இங்குக் குழுமத்தில், இவர் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்து (கருத்து) க்களனைத்துமே...

    அன்று 70 80 மற்றும் 90 களில் வளைகுடா வந்தவர்களால், தனி நபர்களால் சொந்த அனுபவத்தின் வசனங்களாய்... வீட்டுக்கு வீடு ஒவ்வொரு குடும்பத்திலுமே மொழியப்பட்டவைதான்.

    கல்வியின் திறனைப்பற்றி உணர்வதற்கு, அன்றைய நம் சமுதாய மக்களுக்கு (மிகக் குறிப்பாக குடும்பப்பெண்களுக்கு) செவியும் சிந்தனையுமில்லாமல் போனது.

    நம் சமுதாயம் கல்வியில், செல்வத்தில், வாழ்க்கைத்தரத்தில் முழுமை அடையாவிட்டாலும், இன்று இத்தனை (குறைந்தசபட்ச) மாறுதல் ஏற்பட்டிருப்பதற்குக் காரணமே... இத்தலைமுறைப் பெண்கள் கல்வியின் கூரைக்குள் நுழைந்துவிட்டதால்தான் என்பதை யாருமே மறுக்கமுடியாது.

    வாழ்வின் முதல்படியே கல்விதான்... என்பதை ஒருவர் சொல்லித்தான் இனி தெரியவேண்டும் என்ற அன்றைய அவல நிலை இன்று மாறிவிட்டது.

    பட்டமேற்படிப்பின் அவசியத்தை மக்கள் (இன்றைய தாய்க்குலங்கள்) உணர ஆரம்பித்துவிட்டார்கள். இனி நம் சமுதாய வாரிசுகளின் வாழ்வு படிப்படியாய் செழிப்பது நிச்சயம், இன்ஷா அல்லாஹ்!

    தெளிவான அன்புடன்,

    - Cuddalore Jn. _ 3M Ghouse _ +966-569503324

    ReplyDelete
  31. இந்த பதிவுக்கு பின்னூட்டமாக எனது இப்பதிவையே வைக்கிறேன், பார்க்க:
    வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?..

    அன்புடன்
    ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  32. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    அற்புதமான பதிவு . நான் இது வரை வெளிநாடு சென்றதில்லை . ஆனால் அங்கு படும் அவதிகளை என் கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள். உங்கள் பதிவு கடைசியில் நெருடலை ஏற்படுத்தி விட்டது.படித்து விட்டு வா என்பதை தவிர்திருக்கலாம். நன்றாக படி .. போட்டி போடு .... சொந்த நாட்டிலேயே அரசு வேலைக்கு முயற்சி செய் .என்று எழுதி இருக்கலாம் . நாளைய தலைமுறையாவது குடும்பத்திற்காக இல்லாமல் குடும்பத்துடன் இருக்கட்டும் .

    ReplyDelete
  33. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    அற்புதமான பதிவு . நான் இது வரை வெளிநாடு சென்றதில்லை . ஆனால் அங்கு படும் அவதிகளை என் கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள். உங்கள் பதிவு கடைசியில் நெருடலை ஏற்படுத்தி விட்டது.படித்து விட்டு வா என்பதை தவிர்திருக்கலாம். நன்றாக படி .. போட்டி போடு .... சொந்த நாட்டிலேயே அரசு வேலைக்கு முயற்சி செய் .என்று எழுதி இருக்கலாம் . நாளைய தலைமுறையாவது குடும்பத்திற்காக இல்லாமல் குடும்பத்துடன் இருக்கட்டும் .

    ReplyDelete
  34. வெளிநாட்டு வாழ்கை பற்றி நன்றாக எழுதி உள்ளீர்கள் நன்றாக இருந்தது
    தாங்கள் எழுதியது அனைத்தும் உண்மை நான் கூட எனது வலை பூவில்
    இது பற்றி எழுதி உள்ளேன்
    http://elleriexpress.blogspot.com/2012/04/blog-post.html

    ReplyDelete
  35. 7:29 PM
    நம்மை வாழவைத்த அரபுநாடுகள் | புதுமனைkpm
    puthumanaikpm.blogspot.c

    ReplyDelete
  36. அஸ்ஸலாமு அலைக்கும் ஹைதர் அலி பாய், வெளிநாட்டின் கஷ்டங்கள் பற்றி மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  37. அஸ்ஸலாமு அலைக்கும்

    ReplyDelete
  38. படத்துடன் விளக்கமான கட்டுரை .ஒன்றை இழந்து ஒன்றை தேட வேண்டிய நிலை .இன்ஷா அல்லாஹ் காலம் நன்மையாக அவர்களைப் போன்றவர்களுக்கு அமையும்

    ReplyDelete