இறைவன் குர்ஆனில் நபிமார்களைப் பற்றியும், இறைவனின் அருள் பெற்ற நல்லடியார்களைப் பற்றியும், அநியாயக்கார சமூகத்தினர்கள் பற்றியும் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான், எதற்காக? நாம் பழங்கதைகளை தெரிந்துக் கொள்வதற்காகவா? இல்லை அதன்மூலம் படிப்பினைப் பெறுவதற்காகவா? பழங்கால மனிதர்கள் செய்த தவறுகள் நவீன வடிவில் நம்மிடம் இன்று இருந்தால் படிப்பினைப் பெற்று நம்மை திருத்திக் கொள்வதற்காகத்தான் இறைவன் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான்.
இஸ்லாமிய வரலாற்றில் சரியான ஹதீஸ் எது? பலஹீனமான ஹதீஸ் எது? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் எது? அறிவிப்பாளர்களின் தரம் என்ன? போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து, ஸஹீஹான ஹதீஸ்களை கடுமையான உழைப்பிற்குப் பின் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற இமாமவர்களின் மீது இட்டுக்கட்டி (மேற்கண்ட) இப்படி ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்.
இமாம் புகாரி அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக இணையத்தில் உலாவியபோது பல சகோதரர்கள் புகாரி இமாம் அவர்களின் பிறப்பு, பெயர், எழுதிய நூல், சொந்த ஊர், இறப்பு போன்ற விஷயங்களை மட்டும் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். (இறைவன் அந்த சகோதரர்களுக்குரிய நற்கூலியை வழங்குவானாக!) ஆனால் இமாமவர்களின் ஆளுமையைப் பற்றி படிக்கும்போது நம்மை வியக்க வைக்கிறது! "இன்று இறைவேதமான குர்ஆனுக்கு அடுத்து உலக முஸ்லிம்களால் நம்பக்கூடிய ஒரு நூலாக புகாரி கிதாப் இருக்கிறது. இறைவன் இவ்வளவு பெரிய அந்தஸ்தை இந்த நூலுக்கு கொடுத்திருக்கிறான்."
போன்ற விஷயங்களை (இன்ஷா அல்லாஹ்) விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
இமாம் புகாரி போன்ற அறிஞர்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்? இந்த அறிஞர்கள் இஸ்லாத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? நமக்கு அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகள் என்ன? அவர்களின் தியாகங்கள் போன்றவற்றை நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வளவு ஏன்? இமாம் புகாரி அவர்களின் இயற்பெயர் பெரும்பாலான நம்முடைய சகோதரர்களுக்கு தெரிவதில்லை.
இதை விடக் கொடுமை, சிலர் இமாம் புகாரி அவர்களைப் பற்றி தவறாக அறிந்து வைத்திருக்கிறார்கள். 'புகாரி ஷரீப் ஓதும் விழா'என்று சொல்லிக் கொண்டு 25, 30 வருடங்களாக அரபியில் ஒன்றும் புரியாமல் வேக வேகமாக ஓதி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
புகாரி ஷரீப் ஒதும் விழா |
சரி, அரபியில் ஓதிவிட்டு அதற்கான விளக்கத்தை தமிழில் சொல்லிக் கொடுக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. மாறாக இமாம் அவர்களைப் பற்றியும் புகாரி நூலைப் பற்றியும் தவறாக சொல்லிக் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு கீழுள்ள இந்த செய்தியைப் பாருங்கள். (இது புகாரி ஷரீப் ஓதியவர்களின் ப்ளாகிலிருந்து எடுத்தது).
"அவர்களின் இப்புனிதமான கிரந்தம் பெரும் சிறப்புகளைப் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கிரந்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவன் தனது கடற்பயணத்தைத் தொடர்ந்தால் அவனது வாகனம் கடலில் ஒருபோதும் மூழ்கிவிட மாட்டாது. மழை இல்லாத கிராமத்தில் இந்தக் கிரந்தத்திலுள்ள நபிமொழிகள் பாராயணம் செய்யப்பட்டால் அங்கே அழ்ழாஹ்வின் அருள் மழை இறக்கப்படும். பஞ்சம், வறுமையுள்ள இடங்களில் இக்கிரந்தம் ஓதப்படும்போது அங்கே அழ்ழாஹ்வின் அருள் பரக்கத் இறங்கும்".
இஸ்லாமிய வரலாற்றில் சரியான ஹதீஸ் எது? பலஹீனமான ஹதீஸ் எது? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் எது? அறிவிப்பாளர்களின் தரம் என்ன? போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து, ஸஹீஹான ஹதீஸ்களை கடுமையான உழைப்பிற்குப் பின் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற இமாமவர்களின் மீது இட்டுக்கட்டி (மேற்கண்ட) இப்படி ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்.
இமாம் புகாரி அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக இணையத்தில் உலாவியபோது பல சகோதரர்கள் புகாரி இமாம் அவர்களின் பிறப்பு, பெயர், எழுதிய நூல், சொந்த ஊர், இறப்பு போன்ற விஷயங்களை மட்டும் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். (இறைவன் அந்த சகோதரர்களுக்குரிய நற்கூலியை வழங்குவானாக!) ஆனால் இமாமவர்களின் ஆளுமையைப் பற்றி படிக்கும்போது நம்மை வியக்க வைக்கிறது! "இன்று இறைவேதமான குர்ஆனுக்கு அடுத்து உலக முஸ்லிம்களால் நம்பக்கூடிய ஒரு நூலாக புகாரி கிதாப் இருக்கிறது. இறைவன் இவ்வளவு பெரிய அந்தஸ்தை இந்த நூலுக்கு கொடுத்திருக்கிறான்."
எனவே நாம், புகாரி இமாம் என்றால் யார்?
இந்த நூலை ஏன் அவர்கள் தொகுத்தார்கள்?
இந்த நூலில் என்னென்ன விஷயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது?
வாசிக்கப்படுக்கின்ற ஹதீஸ்கள் நடைமுறையில் நாம் பின்பற்றுகிறோமா?
அல்லது வெறும் புத்தகம் வாசித்து முடிப்போம் என்ற ரீதியில் வாசிக்கிறோமா?
போன்ற விஷயங்களை (இன்ஷா அல்லாஹ்) விரிவாக தெரிந்துக் கொள்வோம்.