Thursday, January 12, 2012

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு



"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால்  உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உணவகத்தைப் பற்றிய செய்தி இது:

எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று சவூதி அரேபியாவின் உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.


உணவுக்குப் பணம் கொடுக்க இயலாதவர்களும் இலவசமாக எங்கள் உணவகத்தில் வந்து உண்டு செல்வதற்காக எங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம் என்று தாயிஃப் நகரிலுள்ள அந்த உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார். தனது பெயரையும் குறிப்பிட அவர் விரும்பவில்லை.

இச்செய்தியை சவூதி அரேபியாவின் பிரசித்திப் பெற்ற ஓகாஸ் அரபு நாளேடு தெரிவித்துள்ளது.
நண்பகலிலிருந்து மதியம் 2 மணி வரை யாரும் வந்து உணவுண்டு செல்லலாம் என்று அந்த உரிமையாளர் அறிவித்துள்ளார்,


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து.  இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்.

நன்றி:http://ihzannetwork.blogspot.com/

13 comments:

  1. சவுதியில் இலவச உணவகம் // வரும் பாருங்கள் பின்னூட்டங்களும் பதிவுகளும் அண்டார்டிகாவில் இல்லையா பெர்முடாவில் இல்லையா இதென்ன சவுதியில் ஜுஜுபி .

    ReplyDelete
  2. நல்ல மனசு அந்த உணவாக உரிமையாளருக்கு...

    ReplyDelete
  3. @Barari

    //வரும் பாருங்கள் பின்னூட்டங்களும் பதிவுகளும் அண்டார்டிகாவில் இல்லையா பெர்முடாவில் இல்லையா இதென்ன சவுதியில் ஜுஜுபி .//

    அப்புடியா? அஹா பயமாக இருக்கு சகோதரரே இருந்தாலும் நீங்களல்லாம் இருக்கும் போது எனக்கு என்ன பயம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

    ReplyDelete
  4. @NKS.ஹாஜா மைதீன்

    உண்மைதான் சகோ சின்ன உதவி செய்தால் கூட பேப்பரில் போஸ் கொடுக்கிற காலத்தில் தன்னுடைய பெயரை சொல்லமால் மறைக்கிறார் என்றால் அந்த நேர்மை மிக உயர்வானது

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  5. சலாம் சகோ ஹைதர் அலி,
    நல்ல ஆக்கம். இது போன்ற உணவகங்கள் பெருக வேண்டும். ஏழைகள் பசி நீங்க வேண்டும். இதேபோல் நமது கோயம்புத்தூரில் ஒரு உணவகம் இருப்பதாகவும் அதில் நீங்கள் சாப்பிட்டுவிட்டு விருப்பப் பட்டால் பணம் தரலாம் என்றும் படித்ததாக நியாபகம்.
    பட் உறுதியா தெரியல...

    ReplyDelete
  6. Assalamu alikum bro " ya allah antha hotel owneruku ella vazhikalilum barakath thantarulvayaga" aameen
    ethai engaluku pakirntamaiku jazhkallahu kair bro!

    ReplyDelete
  7. @சிராஜ்
    //நமது கோயம்புத்தூரில் ஒரு உணவகம் இருப்பதாகவும் அதில் நீங்கள் சாப்பிட்டுவிட்டு விருப்பப் பட்டால் பணம் தரலாம் என்றும் படித்ததாக நியாபகம்.//
    aam bro mettupalyam road'il antha hotel ullathu!
    Nan pala tadavai parthu eruken but poi sapitatillai!

    ReplyDelete
  8. நீங்கள் எது செய்தாலும், அது அண்டார்டிகாவில் இல்லையா, பெர்முடாவில் இல்லையா என்று 'எதையும் ஏற்று கொள்ளும் மனம்' இல்லாத அவர்கள் அப்படி தான் சொல்வார்கள்,

    அவர்கள் எது சொன்னாலும் அதை 'ஏற்று கொள்ளும் மனம்' இல்லாத நீங்கள் 'இது ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பதாக' சொல்வீர்கள்.

    ஒருவருக்கொருவர் சளைத்தவர்களா என்ன?

    ReplyDelete
  9. @Anonymous
    அண்ணே அனானி அவர்களுக்கு

    //அவர்கள் எது சொன்னாலும் அதை 'ஏற்று கொள்ளும் மனம்' இல்லாத நீங்கள் 'இது ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பதாக' சொல்வீர்கள்.

    ஒருவருக்கொருவர் சளைத்தவர்களா என்ன?//

    நான் அப்படி சொல்லவிலை பாருங்கள்ள்:
    http://valaiyukam.blogspot.com/2011/08/blog-post_14.html

    மதங்களுக்கிடையே இருக்கிற வேற்றுமை பண்போ அல்லது அதிசயதக்க முறையில் இருக்கின்ற ஒற்றுமைகளோ நம்மை ஒற்றுமைப் படுத்தி விடாது.
    பிற சமயத்தருடன் ஒற்றுமையாக இருக்க சில வழிமுறைகளை உளப்பூர்வமாக கடைபிடித்தால் போதுமானது என்று நினைக்கிறேன்.


    1.நாமேல்லாம் முதலில் மனிதர்கள் இறைவனின் ஒரே படைப்புகள் என்கிற மனிதத்தை முன்னுறுத்திருக்கிற போது மனங்கள் ஒன்று படும்.


    2.அனைவரும் நல்லவர்களே என் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் நல்லவர்கள் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் இழிவானவர்கள் கெட்டவர்கள் என்று நினைக்க கூடாது (எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள்) ஒரு சமூகத்தை குற்றவாளி சமூகமாக பார்க்கக் கூடாது


    3.எல்ல இனத்தவரை குறித்தும் மதத்தினரை குறித்தும் நல்லேண்ணம் கொள்வது எங்கு நல்ல விஷயங்கள் கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்வது.



    4.தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புவது பிறரின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது, காயப்படுத்தக் கூடாது.


    5.நல்லிணக்கத்தை குலைப்பவர்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அவர்கள் ஆன்மீக போர்வை போர்த்தி வந்தாலும் சரியே.

    ReplyDelete
  10. @சிராஜ்
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    //நல்ல ஆக்கம். இது போன்ற உணவகங்கள் பெருக வேண்டும். ஏழைகள் பசி நீங்க வேண்டும்.//

    இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்.

    பாருங்கள் சகோ

    ReplyDelete
  11. @s.jaffer.khan

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நானும் அவருக்கு துஆ செய்கிறேன்

    தங்கள் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  12. @s.jaffer.khan

    //aam bro mettupalyam road'il antha hotel ullathu!
    Nan pala tadavai parthu eruken but poi sapitatillai!//

    தகவல்களை உறுதிபடுத்தி உதவியதற்கு நன்றி சகோ

    ReplyDelete
  13. //////உண்மைதான் சகோ சின்ன உதவி செய்தால் கூட பேப்பரில் போஸ் கொடுக்கிற காலத்தில் தன்னுடைய பெயரை சொல்லமால் மறைக்கிறார் என்றால் அந்த நேர்மை மிக உயர்வானது//////
    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, அந்த மனிதர் நிச்சயம் ஏதோ ஒன்றை பெறவே இதுபோன்று அறிவித்திருக்கின்றார் அந்த ஏதோ ஒன்று என்பது நிச்சயம் மனிதர்களிடத்தில் அறவே எதிர்பார்க்காமல் அல்லாஹ்விடத்தில் மட்டுமே எதிர்பார்க்கின்றார் என்ப‌து மட்டும் நன்றாக தெரிகின்றது.

    ReplyDelete