இந்த பயிற்சியைப் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள இங்கேஅழுத்துங்கள்
இது பழைய பதிவுதானே ஏன் மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? இதன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.
வெளிநாட்டு வாழ்க்கையில் எற்படக்கூடிய நட்புகள் ரயில்பயண நட்புக்கு இணையானது அவரவர் ஸ்டாப் வரும்போது இறங்கி போய்க் கொண்டே இருப்பார்கள். ஒரே கம்பெனியில் வேலை பார்த்திருப்பார்கள், சிரித்து மகிழ்ந்து பேசி, சின்ன பெரிய சண்டைகள் போட்டு, மிகவும் நட்பாக பழகி திடீரென்று வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.
நன்பர்கள் பாரூக்,சாதிக்கின்,ஜாபர்
என்னதான் இமெயில் ஐடி, போன் நம்பர் கொடுத்து விட்டு சென்றாலும் பிடிவாதமாக பழைய நட்பை தொடர்ந்தால்தான் உண்டு இல்லையென்றால் அந்த நட்புகள் நாளடைவில் அதிக இடைவெளி ஏற்பட்டு என்னைக்காவது நினைவுக்கு வருவார்கள். அப்படி என்னோடு நட்பாக இருந்து பிரிந்து சென்ற இலங்கை நண்பன், மெளலவி ‘சாதிக்கின்’ என்பவர்.
இவர் இஸ்லாமிய பிரச்சாரகர், பல அரபு தெரியாத நண்பர்களுக்கு அரபி வகுப்புகள் எடுத்து (அலிப்,பே) அ,ஆ விலிருந்து கற்றுக் கொடுத்து குர்ஆன் ஓதத் தெரியாத பல நண்பர்களை குர்ஆனை அரபியில் ஒத வைத்தவர். எனக்கும் நெருங்கிய நண்பர் என்னிடம் உடற்பயிற்சிகள் சில நாட்கள் கற்றுக் கொண்டவர் இப்போது இலங்கை சென்று விட்டார் நட்பும் அவ்வளவுதான் முடிந்து விட்டது.
இந்த வீடியோவில் என்னுடைய அறையில் பயிற்சி கற்றுக் கொள்ளும் நண்பன் ‘சாதிக்கின்’மெளலவி
இந்த பயிற்சி செய்யும் போது வீடியோ எடுக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டார் அவருக்கு தெரியாமல் ரகசியமாக நண்பர் பாரூக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் அது இவருக்கு தெரிந்து போய் பறிக்க ஒடி வருகிறார் பாருங்கள்.
டிஸ்கி
தமிழ் மண ஓட்டு போடhttp://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138464
டிஸ்கி
தமிழ் மண ஓட்டு போடhttp://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138464
மாப்ள நல்லா சொல்லி கொடுத்திருக்கீங்க நானும் ட்ரை பணரேன்யா நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு,
ReplyDeleteசிலஇசுலாமிய, கிருத்துவ மதவாதிகள் மனித சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் யோகா இந்துக்களுடையது ஆதலால் செய்யகூடாது என்று தடை செய்கின்றனர். அதே நேரத்தில் இங்கே ஒரு இசுலாமிய சகோதரர் யோகா கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சியைத்தருகின்றது.
தொடரட்டும் உங்கள் நற்பணி.
நன்றி
யோகா உடல்நலத்தை சீர்படுத்தும்,நல்ல அனுபவ பதிவு உங்க நண்பருக்கும் உங்களுக்கும் நன்றிகள்!
ReplyDeleteஸலாம் சகோ.ஹைதர் அலி,
ReplyDeleteசவூதி தாவா சென்டர்களில் தமிழ் பிரிவில் இலங்கை மவுலவிகளின் பங்கு மிகப்பெரியது.
இப்படி ஒரு நல்ல மவுலவிக்கு, அப்படி ஒரு விவகாரமான பயிற்சியை எல்லாம் கற்றுக்கொடுத்து ஒரு தாயியை 'ஒரேயடியாய்' ஊருக்கு பத்தி வைத்த உங்களை......................
என்னத்த....
ஒண்ணும் சொல்றதுக்கில்லே..!
என்னத்த சொல்ல... நல்ல விஷயம் தான் ... இருந்தாலும் கூச்சமா இருக்கு..
ReplyDelete@R.Puratchimaniதிரு புரட்சிமணி,
ReplyDeleteஇசுலாமிய சகோதரர்கள் யோகா பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இசுலாமிய சுவனபிரியன் என்பவரிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள் யோகா தீமை தரும் என்று சொல்கிறார்
ஹைதர் அலி என்ற தமிழர் யென்றில்மென்.
சலாம் சகோ...
ReplyDeleteபார்த்தேன் ..பண்ணினால் நல்லதுதான்....நன்றி
@விக்கியுலகம்
ReplyDeleteவாங்கே மாப்ளே நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இந்த பக்கம் வந்து ம்ம்
இருந்தாலும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி
நல்ல ட்ரை பண்ணுங்கோ மாப்ளே
@R.Puratchimani
ReplyDeleteநண்பர் R.Puratchimani
//சிலஇசுலாமிய, கிருத்துவ மதவாதிகள் மனித சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் யோகா இந்துக்களுடையது ஆதலால் செய்யகூடாது என்று தடை செய்கின்றனர்.//
நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என்பது என் நிலைப்பாடு
யோகா ஒரு மருத்துவ முறை அது மருத்துவத்தை இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது என்று சுருக்குவதில் எனக்கு உடன்பாடில்லை
வருகைக்கு நன்றி
@வீடு K.S.சுரேஸ்குமார்
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
அப்பூடியாவது ஊருக்கு போனாரே அதுவரை மகிழ்ச்சி அவர் ஊரில் தாவா செய்து கொண்டு மனைவி பிள்ளைகளோடு அருகிலேயே இருக்கட்டும்
@சிராஜ்
ReplyDeleteகூச்சப்பட ஒன்றுமில்லை மருத்துவமாக பாருங்கள்
@thequickfox
ReplyDeleteநண்பருக்கு
//இசுலாமிய சகோதரர்கள் யோகா பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இசுலாமிய சுவனபிரியன் என்பவரிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள்//
ஹா ஹா
சுவனப்பிரியன் முசுலிம்களுக்கு என்ன முழு அத்தாரிட்டியா? ஒரு விஷயத்தில்கருத்து வேறுபாடு கொண்டு சரி தவறு என்று நினைப்பது இயல்புதானே நண்பரே
//ஹைதர் அலி என்ற தமிழர் யென்றில்மென்.//
எங்கள் தாய் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மொழி தமிழ்தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை எங்கள் தாய்மொழி தமிழ் தான்
@NKS.ஹாஜா மைதீன்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலம் சகோ
வருகைக்கு நன்றி
@ஹைதர் அலி
ReplyDeleteசரியாக சொன்னிர்கள் மனிதர்களுக்காக வழங்கப்பட்டது ஹிந்துக்களுக்காக அல்ல , விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் உழைப்பது ஒட்டுமொத்த மனிதர்களுக்காக அன்றி ஒரு சிலருக்காக அல்ல