திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை காட்டிலும் மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும்.
இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூடா உறவு ஆகும். இன்று இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகி விட்டது. முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன. இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன.முன்பு இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டனர். இப்போது வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
கள்ளக்காதல் ஆபாசம் அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல், கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதல் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.
அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக பல பெண்களின் வாழ்வு பாழாகிப் போகின்றது. வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே! அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால். எதுமறியா குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன. மக்களிடையே ஒழுக்க மாண்புகள் குறைந்து போனதே இதற்குக் காரணம் என்று ஒற்றை வரியில் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது.
பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார். படிப்பு,அறிவு,அழகு, பொழுதுபோக்கு,வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை,கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர். இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.
படிப்பு, பதவி, வருமானம், திறமை,நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும் சண்டை,சாச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியலாம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம்.
வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.குடிகாரக் கணவன், வேலைக்குச் செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர்.
தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.
அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர். மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது. கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மணவிலக்குப் பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன.
திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு/ ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.
கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது.மற்ற குடும்பங்களை விட இந்தக் குடுமபங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஆபத்தான இணைய நட்பு வீட்டுக்குவீடு கணினி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதன் வழி நாம் பெறும் அனுபவங்கள் போற்றத்தக்கதாய் இல்லை. ஆர்குட்டில் ஆரம்பித்து, பேஸ்புக்,டிவிட்டர்- என நீளும் இணைய தளத் தொடர்புகள் ஏழுகடல்,ஏழுவானம் தாண்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும் இராஜகுமாரியைக்கூட எளிதில் வசப்படுத்தும் நவீன சிலந்தி வலையாக அமைந்துள்ளது இப்படி இன்றைய அறிவியல் பொறிகளின் மீது நாம் பழியை அடுக்கியுரைத்தாலும் சில பல தவறுகள் நம்பக்கம் இருப்பதையும் சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்
ஆண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ,அலுவலகத்திலோ சந்தித்து சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன.கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.
வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம்.இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர்.
அலுவலகத்தில் நடக்கும் விழாக்கள், பார்ட்டிகள், மதுபரிவர்த்தனைகள் நடைபெறும் நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் கூடா உறவுக்கு வழிவகுக்கும் செயல்காளகும்.
அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த சம்பவங்களும் சில வேளைகளில் பெண்களே உயர் அதிகாரிகளை வளைத்துப் போட தங்களையே தரத்துணிந்து விடுகின்ற சம்பவங்களும் மீடியாவில் அடிக்கடி அடிபட்ட செய்திகள்.
வறுமை வேலை வாய்ப்பின்மை காரணமாக தவறான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர்.இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு தமது கற்பைக் கொடுத்து விடுகின்றனர். சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர்.
தீர்வுகள்
குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிட்டாது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம்.“ ஒருவரையொருவர் நேசிப்பதற்கு திருமணத்தை விடச் சிறந்த உறவு எதுமில்லை” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.திருமணம் என்பது புனிதமானது. அது ஒரு அறச் செயல்,வழிபாடு. அதனை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் எடுத்துக் கொள்வது விபரீதத்தில்தான் முடியும்.
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்
“திருமணம் இறைநம்பிக்கையில் ஒரு பகுதி”(நூல் பைஹகி)
“ திருமணம் என்பது எனது வழிமுறை”(இப்னு மாஜா)
“தாம்பத்திய உறவும் ஒரு அறமே” (முஸ்லிம்)
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ۚ ذَٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَِ
“....அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான். மேலும் , தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றினான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும்! அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு தானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்!” (குர்ஆன் 7:176)
எனவே நாயைபோல் அலையாமல் தீய இச்சைகளிலிருந்து மனதைத் தடுத்து கள்ள உறவுகளிலிருந்து தப்புவதற்கான தீர்வுகளை அடுத்த பதிவில் (இறைநாடினால்) விரிவாக பார்போம். தொடரும்

சலாம் சகோ...
ReplyDeleteகூட்டுகுடும்பம் என்ற அமைப்பில் ஒன்று கூடி வாழ்பவர்களுக்கு இந்த கள்ள உறவுகள் ஏற்படும் வாய்புகள் குறைவு...கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போனதும் ஒரு காரணம்...
அருமையான பதிவு. ஆழமான அலசல். நல்ல தீர்வு. இந்த தீமைக்கெதிராக நிச்சயம் பிரச்சாரங்கள் செய்யப்படவேண்டும். மக்களின் மனதிலும் மாற்றங்களை முடிந்தவரை ஏற்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கு அப்பாற்பட்ட உறவுகள் நிச்சயமாக விபரீத விளைவுகளையே உண்டாக்கும். அருமையான பதிவு சகோ.
ReplyDeleteசலாம் சகோ ஹைதர் அலி,
ReplyDeleteஆஹா...அருமையான சமுதாய சிந்தனை உள்ள பதிவு.
இன்றைய எதார்த்தத்தை பேசி உள்ளீர்கள் சகோ. எவ்வளவு பார்த்தாலும் ஏன் நம்ம மக்களுக்கு விளங்க மாட்டேங்குது என்று புரிய வில்லை சகோ.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருந்தால் அங்கே சைத்தான் இருக்கிறான் என்பது நபி மொழி.
சரிப்பா நபி ஸல் சொன்னா கேட்கவேண்டாம். அது உங்களுக்கு வேப்பங் காயாய் கசக்கும்.
தினசரி வாழ்க்கையில், ஒரு பெண்ணை தனிமையில் சந்திக்கையில் நமக்கு என்னென்ன மன சஞ்சலங்கள் தோன்றுகிறது என்று ஒவ்வொரு ஆணுக்கம் நன்றாகவே தெரியும். இது இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று தான் அர்த்தம். இது பெண்களுக்கும் பொருந்தும்.
அப்படி இருக்கையில் நண்பர்களுடன் சகஜமாக பழக விடுகிறார்கள், அப்புறம் குய்யோ முறையோ என்று கத்தி என்ன பிரயோஜனம்?????
ஆணும் பெண்ணும் நெருப்பு, பஞ்சுமாதிரி. தனியா இருந்தா கண்டிப்பா பத்திக்கும். அதுவும் ஆபாசமாக உடல் அங்கங்களை படம் பிடித்து கட்டும் உடை அணியும் இந்த காலத்தில் கேட்கவே வேண்டாம்.
தவறு நடக்க எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்து விட்டு, சமுதாயம் கேட்டு விட்டது என்று புலம்புவது ஒரு போலிப் பொலம்பல் அல்லது அறிவிலிகளின் புலம்பல் என்றே கொள்ளத் தோன்றுகிறது.
கடுப்பா இருக்கு சகோ இவங்கள நெனச்சா.... எதார்த்தமான சட்டங்கள எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிஞ்சிக்காம விதாண்ட வாதம் பேசிக்கிட்டு இருக்காங்க.
.
ReplyDelete.
CLICK >>>> ஆணும் பெண்ணும் நட்பாக பழக இஸ்லாம் அனுமதிக்கிறதா? TO HEAR.
.
.
.
.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோ. ஹைதர் அலி,
நீங்கள் சொல்லுவதெல்லாம் சரிதான்,
கள்ளத்தொடர்புகளை கற்றுக்கொடுக்கும் சினிமா, டீவி சீரியல்களிலுருந்து தற்போது முதல் தூர விலகினால், குறைந்த பட்சம் அடுத்த 20 வருடங்களில் நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்.
இது போன்ற வெளிபடையான செய்திகளுடன் கூடிய விழிப்புணர்வு அவசியமே என்றாலும், கள்ளத்தொடர்புகளுக்கு அடிமையாகிறவர்கள் திருமணமானவர்களே.. இதனால் தான் திருமணமானவன் விபச்சாரம் செய்தால் கள்ளெரிந்து கொலை செய்ய சொல்கிறது இஸ்லாமிய சட்டம். இப்படி கடுமையான தண்டனைக்கு உட்பட்ட பாவத்தை நம்மவர்கள் பலர் செய்கிறார்கள் என்பது வேதனையே.
கள்ளத்தொடர்பிலிருந்து தப்புவதற்கான தீர்வு பதிவை விரைவில் எதிரிப்பார்க்கிறோம்.
//வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே//
ReplyDeleteஉண்மைதான். ஆண்கள் அதிக பாதிப்பில்லாமல் தப்பிவிடுகின்றனர் - இவ்வுலகில். எனினும், மறு உலகில் ஆண், பெண் வேறுபாடின்றி தம் செய்லகள் அனைத்திற்கும் பதில் தர வேண்டும் என்கிற அச்சம் இல்லாமல் போனதே இது அதிகரிப்பதற்குக் காரணம்!!
alhamthulillh!
ReplyDeletenalla visayangal!
theervum arumai!
இந்த கால சூழலுக்கு ஏற்ற பதிவு . வறுமை , காதல் தோல்வி , நாகரிகம் இப்படி எத்தனை எத்தனை காரணங்கள் சொன்னாலும் இது போன்ற அவலங்களுக்கு அவரவர் மனதே காரணம் . திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலும் .
ReplyDelete@NKS.ஹாஜா மைதீன்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
தனி குடித்தனம் வைப்பது தவறில்லை ஆனால் வீட்டில் பெரிய மனுசர்கள் இருக்க வேண்டும்.
குடும்பங்களில் உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.
வருகைக்கு நன்றி சகோ
@துரைடேனியல்
ReplyDeleteவாங்கே சகோதரரே
//இந்த தீமைக்கெதிராக நிச்சயம் பிரச்சாரங்கள் செய்யப்படவேண்டும்.//
கண்டிப்பாக சகோ தீமைகளுக்கு எதிராக கைகோர்ப்போம் வருகைக்கு நன்றி
@சகோ சிராஜ்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
//கடுப்பா இருக்கு சகோ இவங்கள நெனச்சா.... எதார்த்தமான சட்டங்கள எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிஞ்சிக்காம விதாண்ட வாதம் பேசிக்கிட்டு இருக்காங்க.//
அப்புடிலாம் கடுப்பாகி விடப்பிடாது பொறுமையாக சொல்லிக் கொண்டே இருப்போம் சகோ மற்றம் ஏற்படும்
ஒரு பதிவு போடும் அளவுக்கு நீள பின்னூட்டம் இயல்பான கருத்துடன் இட்டமைக்கு ரொம்ப நன்றி சகோ
@VANJOOR
ReplyDeleteவழக்கம் போல சுட்டிகளுக்கு மிக்க நன்றி
@தாஜுதீன்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//சினிமா, டீவி சீரியல்களிலுருந்து தற்போது முதல் தூர விலகினால், குறைந்த பட்சம் அடுத்த 20 வருடங்களில் நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்.//
தூர விலகுவதை விட உள்புகுந்து அதில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தலாம் விரைவாக கருத்துகளை கொண்டு சேர்ப்பதற்கு வலுவான உகந்த மீடியா இவை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
@ஹுஸைனம்மா
ReplyDelete//உண்மைதான். ஆண்கள் அதிக பாதிப்பில்லாமல் தப்பிவிடுகின்றனர் - இவ்வுலகில். எனினும், மறு உலகில் ஆண், பெண் வேறுபாடின்றி தம் செய்லகள் அனைத்திற்கும் பதில் தர வேண்டும் என்கிற அச்சம் இல்லாமல் போனதே இது அதிகரிப்பதற்குக் காரணம்!!//
சரியாகச் சொன்னீர்கள் இதுவும் ஒருவகையான அநீதி
மார்க்கம் ஆண்களுக்கும் கற்பு உண்டு என்கிறது குர்ஆனில் ஆண்களே உங்கள் கற்பை பேணிக் கொள்ளுங்கள் என்கிறது பார்க்க:
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
குர்ஆன் 33:35)
@Seeni
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
ReplyDeleteஅருமையான பதிவு சகோ... தகாத உறவுக்கான நிறைய காரண காரியங்களை அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்.
இனி வரும் காலங்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது ஏனெனில் சிறுவர்களின் கைகளில் தவழும் வீடியோ, ப்ளூடூத் மற்றும் இன்டெர்நெட் வசதி கொண்ட மொபைல்கள், அதில் பலான படங்களை டவுன் லோட் செய்தும் ப்ளூ டூத்கள் மூலம் பட பரிமாற்றம் நடத்தியும் கண்டு களிக்கின்றனர்,
இது பெரும்பாலும் டீன் ஏஜ் வயதினரைத்தான் பெரும்பாலும் பாதிக்கிறது. வயது ஆக ஆக மோகம் முற்றி எந்த அளவுக்குச் செல்லுமோ என்று தெரியவில்லை, நாம் அனைவரும் ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி பயணத்திக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உணமை.
இளமையின் காதலை கூட ஒரு புறம் தள்ளிவிடலாம். ஆனால் திருமணத்திற்கு பின் வரும் முறையற்ற உறவால் ஏகத்துக்கும் வன்முறை, வன்மங்களீன் பிறப்பிடமாகிபோகிறது.
ReplyDeleteகள்ள உறவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை அழகாய் பட்டியலிட்டுள்ளீர்கள்..
தன் பழகும் பெண்ணை பற்றி தன் மனைவியிடமும், தான் பழகும் நபரை பற்றி தன் கணவனிடமும் மறைக்காமல் சொல்ல பழகிக்கொண்டாலே கள்ளகாதல் என்ற ஒன்று வராதிருக்கும். மேலும் தன்னை சிக்கல்களீலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும். முடிந்த அளவு கணவன் மனைவிக்குள் சமூகத்தை, சந்தித்த நபர்களை, அன்றாட நிகழ்வுகளை பற்றிய பகிர்வு அதிகமிருந்தாலே நல்ல புரிதல் கிட்டும். எத்தனை தொலைவு இடைவெளி இருந்தாலும் எத்தகைய தீய வழியிலும் தன் மனதினை செலுத்த மனம் வராது
அருமையான ஆக்கம் அண்ணா
பாவா, உங்க மகிமையே மகிமை.....
ReplyDeleteDear Islamic Brother, Assalamu Alaikum.
ReplyDeleteThis is the best article which I have never read in my life time. You have cited the practical ways, which should be implemented by each and every human being, whoever and whatever religion they are.
I can say that you have ignited minds towards the illegal relationship and their consequences.
Hats off!
May Allah bless good health, wealth to you and your family and continue your service toward the better things. Aameen!
By
Imtiaz
எளிமையான மொழி நடையில்.....யதார்த்தமாக உலக நடப்பை சொன்னீர்கள்....
ReplyDeleteபெண்கள் ஆண்கள் இருவரும் சிந்தித்து உணரக்கூடிய அழகான பதிவு
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் கைரா