கல்வி அறிவின் விளக்கு
ஆன்மாவின் உயிரோட்டம்
நன்னடத்தையின் எரிபொருள்
மகிழ்ச்சியும் பரந்த மனமும்
கல்வியால் ஏற்படும்
கல்வி தெளிவற்றை தெளிவாக்கும்
தவறியதை கண்டுபிடிக்கும்
மறைவானதை கண்முன் நிறுத்தும்
கல்வி கற்க இரவில் விழிப்பது
எனக்கு மிகவும் இனிமையானது
கடினமானவற்றைப் புரிந்து கொள்ள
தொடர்ந்து முயல்வது
எனக்கு மிகவும் விருப்பமானது,இதமானது
சுவையான உயர் ரக பானத்தை விட
கணினியில் எழுதும் போது எழும்
கீ போர்டின் ஓசை
மிகவும் இனிமையானது
காதலியின் ஓசையை விட
என் நிலையை அடைய முயல்பவனே!
சிகரத்தில் ஏறும்போது
தளர்ந்து பாதியில் திரும்பியவனுக்கும்
சிகரத்தைத் தொட்டவனுக்கும் இடையே
எவ்வளவு வேறுபாடு உண்டு?
நீ இரவு முழுவதும் அயர்ந்து உறங்குகிறாய்
நான் கண்விழித்து உழைக்கின்றேன்
என்னை வெல்ல இன்னும் உனக்கு ஆசை உண்டா?
அறிவு சிறந்த அருட்கொடை!
அறிவைச் சுமந்த ஆன்மா
ஆனந்தம் அமைதியை பெறுகிறது
அறிவு சிறந்த அருட்கொடை!
ReplyDeleteஅறிவைச் சுமந்த ஆன்மா
ஆனந்தம் அமைதியை பெறுகிறது
அருமையாய் கல்வியின் சிகரத்தை காட்சிப்படுத்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வள்ளுவர் வாக்குக்கேற்ப, கற்றலும் கற்றதன்படி நடத்தலுமே வாழ்க்கையில் உன்னதமடையும் வழிகள். அக்கல்வியின் பெருமையை உத்வேகமூட்டும் வரிகளில் சொல்லி சோர்ந்திருப்பவரை எழுப்பும் அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteமிகச் சிறப்பான அறிவு பற்றிய கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
#கணினியில் எழுதும் போது எழும்
ReplyDeleteகீ போர்டின் ஓசை
மிகவும் இனிமையானது
காதலியின் ஓசையை விட#
கணினியின் மீது அவ்வளவு காதலா சகோ?நல்லா இருக்கு...
கொடூரமாக தெருவில் கொல்லப்படும் ஆதிவாசி தொழிலாளிகள்.
ReplyDeleteபாலக விபசாரிகள்,
கதற கதற நொறுக்கப்படும் சிறுமி, கற்பழிக்கப்பட்ட பெண்கள். ,
மேல் சாதியினரால் நாக்கு அறுக்கப்பட்ட கீழ் சாதியினர்கள்.
பிராமிணர்களின் எச்சில் இலை மேல் உருளும் கீழ் சாதியினர்கள். Brahmanism,
Tamil Police Corruption caught on camera, Tamil Nadu Police Real Face,
நாம் திருந்துவது எப்போ? நாம் பிறரை குறை சொல்லுமுன் நம்மை நாம் சிந்திப்போமா?
CLICK >>>>>>>>இதுதான் சுதந்தர இந்தியாவா ? கண்டிருக்கிறீர்களா இந்த கொடூரத்தை? நாம் திருந்துவது எப்போ? <<<<<< TO READ
.
.
முத்தான வரிகள் அனைத்தும்!.
ReplyDeleteகல்
ReplyDeleteகற்றபின் நில்
தகுந்தபடி
கல்வியைப் பற்றிய சகோவின் அற்புதமாக கவிதை
கணினியின் கீ போர்ட் ஓசை...
ReplyDeleteவரிகள் அருமை!
கணினியில் எழுதும் போது எழும்
ReplyDeleteகீ போர்டின் ஓசை
மிகவும் இனிமையானது
காதலியின் ஓசையை விட//
கணினியோடு காதலா ?
அருமையான கருத்துக்களடங்கிய பதிவு. நன்று. தொடருங்கள். நானும் உங்களை போலத்தான் சகோ. இரவுக் கோழிதான். படிப்பது பெரும் பொழுதுபோக்கு.
ReplyDeleteதலைல ஆசிரியர் கொட்டும் போது வார ஓசையும் இனிமைதாங்க ...மிக அருமையான கவிதை
ReplyDelete// கல்வி அறிவின் விளக்கு
ReplyDeleteஆன்மாவின் உயிரோட்டம்
நன்னடத்தையின் எரிபொருள்
மகிழ்ச்சியும் பரந்த மனமும்
கல்வியால் ஏற்படும்
கல்வி தெளிவற்றை தெளிவாக்கும்
தவறியதை கண்டுபிடிக்கும்
மறைவானதை கண்முன் நிறுத்தும்//
கல்வி பற்றிய தங்கள் கருத்து சாசலச் சிறந்தது
பிச்சை புகினும் கற்றல் நன்றே
என்பது ஆன்றோர் வாக்கு!
வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
சிறந்ததை அறிந்துகொள்ள
ReplyDeleteசிரத்தை எடுத்துக்கொள்
என அறிவுறுத்தும்
அழகிய கவிதை நண்பரே.....
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@கீதமஞ்சரி
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு நன்றி
@kovaikkavi
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@NKS.ஹாஜா மைதீன்
ReplyDelete//கணினியின் மீது அவ்வளவு காதலா சகோ?நல்லா இருக்கு..//
எந்த ஒரு விடயத்தையும் விரும்பி செய்யும் போது அது அழகு பேறும் அந்த வகையில் கணினியை எழுத்தை விரும்புகிறேன்
வருகைக்கு நன்றி சகோ
@UNMAIKAL
ReplyDeleteசுட்டிகளுக்கு நன்றி
@Syed Ibramsha
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
@செய்தாலி
ReplyDelete//கல்வியைப் பற்றிய சகோவின் அற்புதமாக கவிதை//
நன்றி சகோ
@Seeni
ReplyDeleteநன்றி சகோ
@சசிகலா
ReplyDeleteஎந்த ஒரு விடயத்தையும் விரும்பி செய்யும் போது அது அழகு பெறும் அந்த வகையில் கணினியை எழுத்தை விரும்புகிறேன் சகோதரி
@துரைடேனியல்
ReplyDelete///நானும் உங்களை போலத்தான் சகோ. இரவுக் கோழிதான். படிப்பது பெரும் பொழுதுபோக்கு.//
அட நம்ம ஆளு
வருகைக்கு நன்றி சகோ
@சிட்டுக்குருவி
ReplyDelete///தலைல ஆசிரியர் கொட்டும் போது வார ஓசையும் இனிமைதாங்க ///
ஆஹா ஹா ஹா வலிக்குமே
வருகைக்கு நன்றி சகோ
@புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி
@மகேந்திரன்
ReplyDelete//சிறந்ததை அறிந்துகொள்ள
சிரத்தை எடுத்துக்கொள்
என அறிவுறுத்தும்
அழகிய கவிதை நண்பரே.....//
கருப்பொருளை உணர்ந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே
சமயத்தில தனிமை கூட இனிமையே/நல்ல படைப்பு வாழ்த்துக்கள்.
ReplyDelete