பகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள். இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது.
பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.
இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)
மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.
இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)
மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர் ஆன் 41: 34-35 )
நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.
அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.
அவமானங்களைப் பொறுத்தவரையில் பல கற்பனையானவை; சில நாமாகவே தேடிக் கொண்டவை. இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்கப்பட்டவை இத்தகைய ‘அவமானங்களை’ பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை வேண்டுமென்றே நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் அதனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43)
“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். ”(திருக்குர்ஆன் 24:22)
பழிவாங்கும் உணர்வு படைத்தோர் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளுக்கும் உங்களால் பழிவாங்க முடியாது. முழுமையான நீதி வழங்கும் அதிகாரமும் வல்லமையும் உங்கள் கையில் இல்லை. எனவே அநீதி இழைத்தவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
இறைவாக்கையே தமது வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் மன்னித்தார்கள்.
* வசைமாரிப் பொழிந்தவர்களை
* அவதூறுகள் கிளப்பியவர்களை
* கொலை செய்ய முயன்றவர்களை
* நாடு துறக்க காரணமாக இருந்தவர்களை
* சமூக பொருளாதாரத் தடைகளை விதித்தவர்களை
ஆக அத்தனை பேரையும் மன்னித்தார்கள். “ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. இறைவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்” என்று கூறினார்கள், மேலும் தம் இறுதி உரையில் “ இன்றோடு பழிக்குபழி வாங்குவது நிறுத்தப் படுகிறது. என் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னித்து விடுகிறேன்” என்று முழங்கினார்கள்.
ஆயிரம் கொடுமைகள் இழைக்கப்பட்ட நிலையிலும் அண்ணல் நபியால் அமைதியாகத் தமது பணிகளைச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவர்களின் மன்னிக்கும் மாண்பும் ஒரு காரணமாகும். அவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களும் அவர்களது நண்பர்களாக மாறியதன் ரகசியமும் அண்ணலாரின் மன்னிக்கும் மாண்பே ஆகும்.
(நன்றி :எங்கே அமைதி..! எனும் நூலிருந்து ஒரு பகுதி)
சலாம் அண்ணா..
ReplyDeleteசொல்ல வார்த்தைகளே இல்ல அண்ணா... கட்டுரை படித்து முடித்ததும் மனம் பல கேள்விகளை எழுப்புது...
மன்னிப்பை விட பெரிய தண்டனையை யாரும் யாராலும் கொடுத்துவிட முடியாது... தமக்கு அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதன் மூலம் நாம் தான் உயர்ந்து நிற்கிறோம்.தாழ்ந்துவிடுவதில்லை ஒருபோதும்!
அதே போல் அடுத்தவர்களை அவமானப்படுத்துவதாக கருதிக்கொண்டு தங்களை தாங்களே அவமானப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் உண்மையே...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
வ அலைக்கும் வஸ்ஸலாம் தங்கச்சி
Deleteவிரிவான நேர்த்தியான பின்னூட்டத்திற்கு நன்றிம்மா
மாஷா அல்லாஹ்
ReplyDeleteமென்மையான,மேன்மையான பதிவு
அல்ஹம்துலில்லாஹ்
Deleteஇரண்டே வார்த்தைகளில் முழுப்பதிவின் தன்மையை விளக்கியதற்கு
நன்றி சகோ
மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால் உறவு,நட்பு வட்டாரங்களில் பிரச்சினை எழாது ..நம் நபியை விட மன்னிக்கும் மனப்பான்மையை வேறு யாரிடமிருந்து நாம் கற்று கொள்ள முடியும்?
ReplyDelete///.நம் நபியை விட மன்னிக்கும் மனப்பான்மையை வேறு யாரிடமிருந்து நாம் கற்று கொள்ள முடியும்?///
Deleteமிக அருமையாக சொன்னீர்கள் சகோ வருகைக்கு நன்றி
//கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.//
ReplyDeleteமன்னித்துவிட்டால் அப்புறம் எதற்கு தண்டனை கொடுக்க வேண்டும்?
இதை இப்படி புரிந்து கொள்ளுங்கள் குற்றம் இழைத்தவர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் நாம் சட்டத்தை கையில் எடுத்து தண்டிக்கக் கூடாது சட்டப்படியான தண்டனை கிடைக்கட்டும் என்று பொறுமையாக இருப்பதும் மன்னிப்பது தான்
Deleteதண்டனை காலம் முடிந்து வெளியில் வருபவரை மறுபடியும் போட்டுத் தள்ளுவதை பொருத்திப் பாருங்கள் புரியும்
//மன்னித்துவிட்டால் அப்புறம் எதற்கு தண்டனை கொடுக்க வேண்டும்?//
Deleteசகோ. விஜய், மன்னிப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், ஆனால் தண்டனை நிர்ணயம் என்பது (அரசாங்கத்தால்) குற்றங்கள் குறையவேண்டும் என்னும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுவது. இவை கடுமையாக இருக்கும் பட்சத்தில் பலன் உண்டு. :)
மன்னிக்கும் மாண்பை வலியுறுத்தி அருமையான ஆக்கம் சகோ.
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் கைர சகோ
Deleteசலாம் சகோ!
ReplyDelete//ஆயிரம் கொடுமைகள் இழைக்கப்பட்ட நிலையிலும் அண்ணல் நபியால் அமைதியாகத் தமது பணிகளைச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவர்களின் மன்னிக்கும் மாண்பும் ஒரு காரணமாகும். அவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களும் அவர்களது நண்பர்களாக மாறியதன் ரகசியமும் அண்ணலாரின் மன்னிக்கும் மாண்பே ஆகும்//
சத்தியமான வார்த்தைகள்! அகிலத்தார் அனைவருக்கும் முன்மாதிரியல்லவா அண்ணல் நபி(ஸல்)அவர்கள்? பகிர்ந்துக் கொண்டமைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :)
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வ இய்யாக்கும்
/. “ (தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)
ReplyDelete/// அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே.. அருமையான பதிவு.. வழக்கம் போலவே... ஜசாக்கல்லாஹு க்ஹைர் :)
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Deleteஎன்னை கவர்ந்த ஹதீஸ் தங்கச்சி
வ இய்யாக்கும் வருகைக்கு நன்றிம்மா
மாஷா அல்லாஹ்
ReplyDelete(மாஷா அல்லாஹ்) இறைவனின் நாட்டப்படி தான் நடந்தது
Deleteஇறைவன் தான் அவர்களின் ஆளுமையை செதுக்கினான்
வருகைக்கு நன்றி சகோ
வாவ்... அருமையான, நேர்மறையான பதிவு சகோ... குட் வொர்க்...
ReplyDelete// இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். //
முற்றிலும் உண்மை...
வாங்க சிராஜ் அண்ணே
Deleteஇது நேர்மறைக்கு கிடைக்கும் வெற்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDelete== (தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” ==
மாஷா அல்லாஹ்
தெளிவான ஒரு பகிர்வுக்கு ஜஸாகல்லாஹ் கைரன் மச்சான்!
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்... மச்சான்
Deleteவருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி மச்சான்
சலாம்! அழகிய பகிர்வு சகோ.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
Deleteநல்ல எண்ணங்களை மனதில் தைக்கும் நல்ல பகிர்வு...
ReplyDeleteநன்றி...
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
Deleteமாஷா அல்லாஹ்...
ReplyDeleteஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியமான பண்பு..
அல்லாஹ் உங்கள் அறிவை விசாலமாக்க போதுமானவன்...
எனக்கு ஒரு கேள்வி இருக்கு,,,
தீங்கிழைத்து,அவமானப்படுத்திய ஒரு உறவினர்...நம்மை கடும் வேதனைக்கு ஆளாக்கியவர்..
நம்மிடம் மன்னிப்பு கேட்கவில்லை..இன்னும் அதை ஒரு பொருட்டாக சட்டைகூட செய்யவில்லை....
அப்படியான சூழலில் அவரை எப்படி மன்னிப்பது...
அவரிடம் எப்படி இயல்பாக பழகுவது..
மன்னித்துவிட்டேன் அப்டீன்னு சொன்னா....நாந்தா உங்கிட்ட மன்னிப்பே கேக்களியே என்பார்..
இன்னும் தவறை முற்றும் உணராத இப்படிப்பட்டவர்களை மன்னித்து நமக்கருகில் கொண்டுவந்தால்...அவர்கள் நம்மை ஏப்பசாப்பை என கருதி திரும்பவும் அவர்கள் வேலையை காட்டுவார்களே!
இவர்களை விட்டு தூர இருப்பதுதானே சிறந்தது...
இப்படியானவர்களை மன்னிக்க மனம்வருவதும் இல்லயே...
என் உறவுக்கார??ருடன் என்னோட நிலை இது...இப்படியே இருப்பது எனக்கும் மன உளைச்சலைத்தான் தருகிறது...
என்ன செய்யலாம்...சொல்லுங்கண்ணா....
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
Deleteதம்பி அஷிக் விரிவாக சொல்லி விட்டார் என்று நினைக்கிறேன்
ஹா ஹா தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி ஜஸாக்கல்லாஹ் கைர
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteநல்ல பதிவு..இதில் உள்ள தகவல்கள் ,அறிந்த ஒன்றாக இருந்தாலும் கூட உள்ளே இருக்கும்’’ தான் ‘’ என்பவரின் ஆதிக்கம் அதிகம் ஆகும் போது, அந்த நேரத்தில் இவை அனைத்தும், நம் அனைவருக்குமே மறந்து விடுகிறது..
//மன்னிப்பதால் கண்ணியம் உயருமே தவிர தாழ்வதில்லை.//
என்றும் மறக்காமல் மிகவும் அழுத்தம் திருத்தமாக மனதில் பதிய வைக்க வேண்டிய வரிகள்..
நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:)
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
Deleteநன்கு படித்து உணர்ந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி
@ ரஜின்,
ReplyDeleteயார் எப்படி இருந்தா என்ன? நீங்களே மனசால மன்னிச்சிட்டு முடிந்தவரை நட்பு பாராட்டியே இருங்க. இறைவன் உங்களுக்கு துணையா உதவியாளர்களை நிறுத்தி வைப்பான். என்றாவது ஒருநாள் உங்க உறவினர் உங்களை புரிந்துக்கனும்னு துவா செய்துகிட்டே இருங்க...இந்த ஹதீஸ்சையும் பார்த்திடுங்க...
ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர்" என்றார். அதற்கு நபியவர்கள், "நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
வஸ்ஸலாம்..
சகோதரர் அஷிக் எனது சார்பாக அருமையான பதில் கருத்திட்டமைக்கு
Deleteஜஸாக்கல்லாஹ் கைர சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே இந்த பதிவை இரண்டவாதுமுறையாக படிக்கிறேன். அருமையான பதிவு நெஞ்சில் நிறுத்தவேண்டிய வரிகளை கொண்ட பதிவு. ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ
ReplyDelete//இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள்// முற்றிலும் உண்மை சகோ.
வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்
Delete//இந்த பதிவை இரண்டவாதுமுறையாக படிக்கிறேன். அருமையான பதிவு நெஞ்சில் நிறுத்தவேண்டிய வரிகளை கொண்ட பதிவு. ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ//
உண்மையில் உங்களை போன்ற வாசகர்களின் ஊக்கத்தால் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது ரொம்ப நன்றி சகோதரரே
//பகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை//
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் காக்கா
முதல் வரியிலேயே முடிந்துவிட்டது சப்ஜெக்ட் ...அருமை அருமை ..
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே
Delete//முதல் வரியிலேயே முடிந்துவிட்டது சப்ஜெக்ட் ...அருமை அருமை///
சில வார்த்தைகள் அப்படித்தான் ஆழ்ந்த விளக்கத்தை விளங்கிக் கொள்பவர்களுக்கு கொடுத்து விடுகிறது வருகைக்கு நன்றி சகோதரரே
நல்ல ஒரு ஹதீஸ் எடுத்து தந்த ஆசிக் அகமது ஜெஸக்கல்லாஹ் ஹைர் சகோ.
ReplyDeleteமீ டு
Deleteவருகைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி :)):))
ReplyDeleteசலாம் சகோ.ஹைதர் அலி,
ReplyDelete/நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன. அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது./
நபி ஸல்... அவர்களின் இறுதிப்பேருரை:
(மக்களே!) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.
(மக்களே!) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக (மன்னித்து) நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சகோ.ஹைதர் அலி.
சலாம் சகோ.ஹைதர் அலி,
ReplyDeleteநமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன. அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.
நபி ஸல்... அவர்களின் இறுதிப்பேருரை:
(மக்களே!) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.
(மக்களே!) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக (மன்னித்து) நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சகோ.ஹைதர் அலி.
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
சலாம்,
ReplyDeleteமன்னிக்கும் குணத்தை பற்றிய உங்கள் கட்டுரை அருமை சகோ.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...
என் தளத்தில் இப்பொழுது:
நரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்
கட்டுரையை பற்றி :
பதிவுலகில் இருபவர்களுக்கே இவ்விசயம் தெரியவில்லை என்றால் மற்ற மக்களை பற்றி யோசியுங்கள்,நம் ஊடகங்கள் அப்படி உள்ளது....
நீங்கள் அறிந்த இவ்வசயத்தை பிறருக்கும் சொல்லுங்கள் முடிந்தால் இந்த கட்டுரையின் லிங்கையும் உங்கள் தளத்தில் கொடுங்கள்,பிறருக்கும் இவ்விசயம் தெரிய உதவுங்கள்.
http://tvpmuslim.blogspot.in
சலாம்
ReplyDeleteஅருமை...அருமை...அருமை....
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅருமை...அருமை...அருமை.
Please visit
ReplyDeletehttp://seasonsnidur.blogspot.in/2012/10/blog-post_17.html
மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."