Wednesday, January 23, 2013

விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் புரிந்துக் கொள்வது

விஸ்ரூப களவானித்தனம்

ஜனவரி 25 அன்று திரையிட இருக்கின்ற கமலின் விஸ்வரூபம் படத்தைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எதிர்ப்புகள்! முன்னோட்ட காட்சி படிமங்களை பார்க்கும் போதே ஆழமாக ஒரு செய்தியை, ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்தி வட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. முன்னோட்ட காட்சிகளை வைத்து முடிவுக்கு வர முடியாது என்பதாலும் கமலஹாசன் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல, படத்தைப் பார்த்து விட்டு வருத்தப்பட போகிறீர்கள் என்பதாக எல்லாம் சொன்னார்.

 21.01.2013 அன்று இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியபோது, அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள். கமல் "வருத்தப்படுவீர்கள்" என்று சொன்ன சரியான அர்த்தத்தை அன்றுதான் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமலின் விஸ்வரூபம் படங்களை பார்த்துதான் புரிந்துக் கொள்ள வேண்டுமா அவரின் முந்தைய போக்குகளை பார்த்தாலே புரிந்துக் கொள்ளலாமே? ஒவ்வொருவருக்கும் எதாவது வகையிலான கொள்கை இருக்கும். அது இயல்புதான். கமலுக்கும் கடவுள் மறுப்புக் கொள்கை இருப்பதாக காட்டிக் கொள்ளக் கூடியவர். அதையாவது என்றாவது நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறரா? கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் என்று தான் சொல்கிறேன் என அசினிடம் வலிவது போல் காட்சிகளை தசாவதாரத்தில் வைக்கவில்லையா? அதுதான் கமலின் உண்மையான நேர்மையற்ற களவானித்தனம்.

விருமாண்டியில் விடிய விடிய மரணதண்டனை தவறு என்று பெரும் மனிதாபிமான அறிவுஜீவிபோல் பாடம் எடுத்தவர் அப்படியே அவருடைய அடுத்த படமான உன்னை போல் ஒருவனில் அந்தர் பல்டி அடித்து என்கவுண்டர்களையும் மரணதண்டனைகளையும் நியாயப்படுத்தினாரே? தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம், இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.
அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை. 

‘ஹே ராம்’திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது இந்து மதவெறியை அம்பலப்படுத்தும் படம் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை.. படத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட இளைஞனின் பார்வையில்தான் பிரச்சினையைக் காட்டுகிறது. முஸ்லிம்கள் கலவரம் செய்யும் காட்சியுடன்தான் படமே தொடங்குகிறது. வசனங்கள் சில ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துவது போல அமைத்திருக்கலாம். ஆனால் அவை ரசிகனைச் சென்றடையாது. காட்சிப் படிமங்கள்தான் திரைப்படம் என்பது உண்மையில் இது ஆர்.எஸ்.எஸ் திரைப்படம்.

“ இது குதர்க்க வாதம். முஸ்லிம் மக்களை, முதியவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் இந்து வெறியர்கள் வேட்டையாடியதும் படத்தில் இடம் பெறத்தான் செய்கிறது. இறுதிக் காட்சியில் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் இந்து மதவெறிக் குண்டர்கள் புகுந்து கொலை வெறியாட்டம் நடத்துகின்றனர்.ஆர்.எஸ்.எஸ் காரனாக வரும் ஸ்ரீராம் அபயங்கர் முஸ்லிம் மக்களைக் கொலை செய்வதை ‘வேட்டை’ என்று ஒரு ஓநாய் ரத்த வெறியுடன் கூறுகிறான்.இவையனைத்திற்கும் மேலாக, மத நல்லிணக்கத்துக்காப் பாடுபட்டகாந்தியைக் கொன்றவன் யாரோ ஒரு இந்துவல்ல; பார்ப்பனந்தான் காந்தியைக் கொன்றான் என்ற உண்மையைத் தைரியமாக அம்பலப்படுத்தியிருக்கிறார் கமலஹாசன். 

இறுதியில் இந்து மதவெறி பிடித்த கமலஹாசனை அம்ஜத் (ஷாருக்கான்) என்கிற முஸ்லிம் நண்பன் தன் உயிர்த் தியாகத்தால் நெறிப்படுத்துகிறான். இந்த காட்சியும் முஸ்லிம்களை நியாயமாகவும், சரியாகவுமே சித்தரிக்கிறது. எனவே இது பார்ப்பன இந்து மதவெறியை அம்பலப்படுத்தும் படம் தான் என்றும் யாரையும் ஒரு முடிவுக்கு வரவிடமுடியாமல் காய் நகர்த்துவதில் கமல் கில்லாடி.ஹே ராமில் முஸ்லிம்களை வேட்டையாட வருமாறு ஆர்.எஸ்.எஸ்காரன் ஸ்ரீராம் அபயங்கர் அழைக்கும்போது “நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை” என்று மறுக்கிறான். இருப்பினும் சாவர்க்கரின் புத்தகத்தை வாங்கி, மேல் அட்டைப் போட்டு மறைத்து படிக்கிறான்.

’ஹே ராம்’ மகாராஷ்டிராவிலும் டில்லியிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டபோது காந்திக்கெதிரான வசனங்களை ஸ்ரீராம் அபயங்கர் பேசும்போது கைதட்டி பா.ஜ.க. ரசிகர்கள் வரவேற்ற அதேநேரத்தில் கம்யூனிஸ பத்திரிக்கைகள் பார்ப்பனக் கும்பலை அம்பலப்படுத்தும் இந்தப் படம் ஒருவேளை தடை செய்யப்படுமானால் அதற்குக் காரணம் சங்கர மடத்தின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று எச்சரித்தன.

கமலின் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் உலகமயமாக்களை எதிர்க்கிற மார்க்சிய,கம்யூனிஸ, நாத்திகத்தை போதிக்கும் திரைப்படம் என்று கம்யூனிஸ பத்திரிக்கை தீக்கதிர் உச்சி மோந்திருந்த அதேவேளையில், உலகமயமாக்களின் ஒன்னாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதிய ஜனதாவின் தலைவர் இல.கணேசனும் சிறந்த ஆன்மீக படம் என்று பாராட்டினாரே? இதுதான் கமல்.

வெள்ளித்திரையில் சிவப்புநிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமாக் கொட்டகையில் 50,100 அபராதம் கட்டிய கம்யூனிஸ ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட நீயும் கடவுள், நானும் கடவுள் என்கிற அத்வைத ஆன்மீகக் கொள்கை கொண்ட திரைப்படம் காட்டப்பட்டது. உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். ஆனால்Rss கொள்கையை சொல்லும் இணையதளங்களிலும்,முகநூலிலும் முகமூடியாக, அடையாளப்படமாக உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் மொட்டை மாடியில் லேப்டாப் வைத்து உட்காந்திருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்.
தேவர்மகன் திரைப்படத்தில் தென்மாவட்ட அருவா கலாச்சாரத்தையும்,ஜாதி வெறியையும்,கலவரங்களையும் சாடுவதாக அவைகள் தவறு என்று சொல்லும் தோணியில் படம் துணிந்து எடுத்திருப்பதாக பத்திரிக்கைகள் அப்போது பாராட்டின. ஆனால் இன்றும் எனது தென்மாவட்ட ராமநாதபுர கிராமங்களில் நடக்கும் தேவர்சமூக திருமண பத்திரிக்கைகளிலும் டிஜிட்டல் கல்யாண பேனர்களிலும் தெருவில் ஒட்டப்படும் போஸ்ட்டர்களிலும் கமல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அரிவாளோடு நிற்கிற தேவர்மகன் ஸ்டில்களைதான் போடுகிறார்கள். அவர்கள் திருவிழாக்களில்,கல்யாண பந்தல்களில் போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல்கள் ஒலிக்கிறது எனில்.இதில் கமல் பிராண்ட் களவாணித்தனம் தெரியவில்லையா?

விஸ்வரூபமும் அப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அமெரிக்காவிற்கு எதிரான காட்டமான வசனங்களும், அமெரிக்கா அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொல்வதாக காட்சிகளும் இருக்கும், அந்த தைரியத்தில் தான்  படத்தைப் பார்த்தால் எனக்கு பிரியாணி வாங்கி தருவீர்கள் என்றார், மறுபுறம் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்கிற காட்சி படிமங்களை மிக அழுத்தமாக பதியவைத்து இறுதியில் அமெரிக்கா செய்வது நியாயம் தான் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்பது போல் விடை பெறுவார்.

எல்லோரும் முட்டாள்கள், நான் சகலகலா வல்லவன் அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். என்கிற சாதுரிய நரித்தனம் விஸ்வரூபமாக வெளிவர இருக்கிறது. இம்முறை அனுமதிக்க மாட்டோம். இம்முறை கமலின் முகத்(சினிமாத்)திரை கிழியும்.

பின்குறிப்பு:
Auro 3 தேர்ந்த இசை, தேர்ந்த நடிகர்கள்,துல்லியமான ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு,பெரும் பொருட்செலவு... எல்லாம் சரிதான். பிச்சை எடுப்பதற்கு யானை வாங்க வேண்டுமா?

38 comments:

  1. பிரியாணி போச்சே!!!

    ReplyDelete
    Replies
    1. பிரியாணி மட்டுமா போச்சு???

      Delete
  2. விஸ்வரூபம் திரைப்படம் துபாய், அபுதாபி உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.இதை VOXCinemas அதிகாரப்போர்வமாக அறிவித்துள்ளது.

    ReplyDelete
  3. படம் பார்த்தவர்கள் அதன் கதை என்னவென்றும் எப்படி சித்தரிக்கிறது என்றும் ஏன் என்றும் விவரமாகப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முன்னோட்டக் காட்சிகளிலிருந்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆஃப்கானிஸ்தானில் நிகழ்வது போலத் தோன்றும் கதை அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை.

    ReplyDelete
  4. //ஆனால்Rss கொள்கையை சொல்லும் இணையதளங்களிலும்,முகநூலிலும் முகமூடியாக, அடையளப்படமாக உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் மொட்டை மாடியில் லேப்டாப் வைத்து உட்காந்திருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்.// சுட்டிகள் ??

    ReplyDelete
  5. பிச்சை எடுப்பதற்கு யானை வாங்க வேண்டுமா? ஒரே வரியில் முடித்து விட்டீர்கள்

    ReplyDelete
  6. //இம்முறை அனுமதிக்க மாட்டோம். இம்முறை கமலின் முகத்(சினிமாத்)திரை கிழியும்.//-----டன்... டன்ன்டனா... டன் டன்...!

    ReplyDelete
  7. குவைத் தமிழ் இஸ்லாமியச் (K -Tic) சங்கத்தின் உயர்மட்ட குழு நேற்றிரவு அவசரமாக கூடி விஸ்வரூபம் என்ற இழிவான திரைப்படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது.

    குவைத் அரசாங்க அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து இந்த திரைப்படத்தின் கதை குறித்தும், இதனால் விளையப்போகும் மோசமான விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து, குவைத் நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கத்தின் நிர்வாகிகள் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட தமிழக நாளிதழை குவைத்தில் தடை செய்தவர்கள் இந்த அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்
    விஸ்வரூபத்தை எப்படி புரிந்து கொள்வது ? கமலை புரிந்தால் ஓரளவு புரியலாம் .அதை நமக்கு அவன் சொன்ன படியே புரிய வேண்டும் எனில் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை அவன் .உள்ளே மிருகம் வெளியே கடவுள் விளங்க முடியா கவிதை என்று சொல்லி இருக்கிறான் .கடவுள் இல்லை என்பான் இருந்தால் நல்லா இருக்கும் என்பான் .கம்யுனிசம் பேசி கொண்டே கடவுள் என்பான் .
    பெயரிலேயே கமலையும்(தாமரை ) வைத்து இருப்பான் .ஹசனையும் வைத்து இருப்பான் .இரு பக்கமும் தலை உள்ள விஷ பாம்பு என்பதை இப்போது தான் நாம் புரிய ஆரம்பித்து இருக்கிறோம்

    ReplyDelete
  9. கவலையேபடாதீர்கள். படம் ஓடப்போவதில்லை. ஆனால் நீங்கள் கொடுக்கும் விளம்பரத்தால் கொஞ்சம் ஓடலாம்.

    ReplyDelete
    Replies
    1. வந்தால்தானே... கொஞ்சம்மாவது ஓடும்..!
      இன்னொரு 'குற்றப்பத்திரிக்கை' ஆனால்...?!

      Delete
    2. அப்படியே ஓடினாலும் அது முஸ்லிம்கள் போட்ட பிச்சையே !!!

      Delete
    3. படம் வந்தால்தானே... ஒடுமா ஓடாதா பேச்செல்லாம்..?
      அதற்குள் இன்னொரு 'குற்றப்பத்திரிக்கை' ஆகிவிட்டால்..?

      Delete
  10. விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்

    உள்துறைச் செயலாளரிடம்

    முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தல்


    இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் இன்று தமிழக உள்துறைச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    "கமலஹாசன் எழுதி இயக்கி நடித்து வெளிவர உள்ள விஸ்வரூபம் திரைப்படம் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் ஏற்கனவே கடந்த 7.1.2013 அன்று தங்களை நேரில் சந்தித்து அச்சத்தையும், ஐயங்களையும் பதிவு செய்திருந்தோம்.

    திரைப்படத்தைப் பார்க்காமல் எந்த முன்முடிவுக்கும் வர இயலாது என்ற காரணத்தினால் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்க அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர்களுக்கு கடந்த 21ஆம் நாள் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு முழுமையாகப் பார்க்கப்பட்டது.

    வழக்கமான ஒரு திரைப்படமாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவிற்கு அப்படம் முழுவதும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் காயப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது எங்களால் உணர முடிந்தது.

    உலகம் முழுவதும் வாழும் 160 கோடி முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்றி வரும் திருக்குர்ஆனையும், முஸ்லிம்களின் வழிபாட்டு முறைகளும் கூட மிக மோசமாக சித்தரிக்கப்பட்டு, இதயங்களை ரணப்படுத்துகிறது.

    உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன், தீவிரவாதக் குழுக்களின் கையேடு புத்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளதை முஸ்லிம் சமுதாயம் எள்முனையளவும் ஏற்றுக்கொள்ளாது.

    சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கிவிட்டு திரையிடப்படும் அளவிற்கு சில வசனங்களில் மட்டும் வலிகளை ஏற்படுத்தாமல், முழுக் கதையின் களங்களும் தளங்களும் காயங்களை உண்டாக்குபவை; உடன்பாடற்றவை; ஆட்சேபத்திற்கு உரியவை.


    விஸ்வரூபம் திரைப்படம் இப்போதுள்ள நிலையிலோ அல்லது சிறிது திருத்தங்களுடனோ வெளியிடப்படும் பட்சத்தில் அது நல்லிணக்கமும், அமைதியும் நிலவும் தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து விடுமோ என்ற எங்கள் அச்சத்தை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறோம்.

    விஸ்வரூபம் திரைப்படம் நாளை மறுநாள் திரையிட திட்டமிட்டிருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இப்படம் திரையரங்குகளிலும் மற்றும் டி.டி.எச்.சிலும் வர இயலாத அளவுக்கு படத்தின் உபகரணங்களைப் பறிமுதல் செய்யும்படி ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.''

    முஹம்மது ஹனீபா

    ஒருங்கிணைப்பாளர்,

    தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள்.

    ReplyDelete
  11. அஸ் ஸலாமு அலைக்கும் அண்ணா..,

    கமலின் இரட்டை வேட மனப்பான்மையை தோலுரிப்பதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.

    //இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்கிற காட்சி படிமங்களை மிக அழுத்தமாக பதியவைத்து இறுதியில் அமெரிக்கா செய்வது நியாயம் தான்//
    இதே ரீதியில்தான் மற்ற படங்களையும் எடுத்துள்ளார். சாதாரண மக்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலே மனதில் தெளிவான ஒரு பிம்பத்தை தக்க வைக்கும் முயற்சி. அல்ஹம்துலில்லாஹ், இயக்கங்களின் ஒற்றுமையோடும், அல்லாஹ்வின் அருளோடும் இதனை இம்முறை கையும் களவுமாக பிடித்து விட்டோம். இதை வெளிவரவிடாமல் செய்வது, அரசின் கையில் உள்ளது. பார்க்கலாம்.... மோடியின் நட்பு என்ன சொல்கிறது என்று.

    இன்னொரு Zero Darkh Thirtyக்கு கமல் அடித்தளமிட்டுள்ளார். அவரின் சினிமா வாழ்க்கையே இத்தோடு Zeroவாகிவிடுமோ???? :))

    ஜஸாக்குமுல்லாஹு க்ஹைர்ண்ணா, பதிந்தமைக்கு :)

    வஸ் ஸலாம்.

    ReplyDelete
  12. Flash News :

    http://dinamani.com/latest_news/article1432742.ece

    'விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தமிழக அரசு தடை'

    By dn, சென்னை

    First Published : 23 January 2013 08:39 PM IST

    கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதில் இஸ்லாமியர்களை தவறாக விமர்சித்திருப்பதாக முஸ்ஸீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று உள்துறை அமைச்சகத்திடம் விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்ஸீம் அமைப்புகள் மனு கொடுத்தனர். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    ReplyDelete
  13. கமலின் விஸ்வரூபமா ...??
    முஸ்லிம்களின் விஸ்வரூபமா ...??
    யார் ஜெயிக்கபோறாங்க ..?? இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் .....
    சொந்த செலவில் [70 கோடி] சூனியம் வைத்துக்கொள்வது இதுதானா கமல் ...????!!!!!

    ReplyDelete
  14. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்கிற காட்சி படிமங்களை மிக அழுத்தமாக பதியவைத்து இறுதியில் அமெரிக்கா செய்வது நியாயம் தான் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்பது போல் விடை பெறுவார்.
    என்கிற சாதுரிய நரித்தனம் விஸ்வரூபமாக வெளிவர இருக்கிறது. இம்முறை அனுமதிக்க மாட்டோம். இம்முறை கமலின் முகத்(சினிமாத்)திரை கிழியும்.

    ReplyDelete
  15. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்கிற காட்சி படிமங்களை மிக அழுத்தமாக பதியவைத்து இறுதியில் அமெரிக்கா செய்வது நியாயம் தான் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்பது போல் விடை பெறுவார்.
    என்கிற சாதுரிய நரித்தனம் விஸ்வரூபமாக வெளிவர இருக்கிறது. இம்முறை அனுமதிக்க மாட்டோம். இம்முறை கமலின் முகத்(சினிமாத்)திரை கிழியும்.

    ReplyDelete
  16. அண்ணே, இப்போ லேட்ஸ் நியூஸ் "விஸ்வரூபம் தடை".... எங்க ஊர்யண்டா முசல் புடிக்கிற நாயை முஞ்சிய பார்த்து தெரிஞ்சிக்கலாமுன்னு எள்ளுப்பாட்டி சொல்லுவங்கா..... ஆனால் ஒலகமகா நாயகனிடம் மர்தநாயகம் படம் கிடைத்திருந்தால் குரங்கு கையில் பூமாலை கிடைச்ச கதையாக போகியிருக்கும்... என்று இப்போ எள்ளுப்பாட்டி சொல்லிருப்பா ஆனால் பூட்டுக்குச்சுண்ணா, பூட்டுக்குச்சுண்ணா....:(

    ReplyDelete
  17. // உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். ஆனால்Rss கொள்கையை சொல்லும் இணையதளங்களிலும்,முகநூலிலும் முகமூடியாக, அடையாளப்படமாக உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் மொட்டை மாடியில் லேப்டாப் வைத்து உட்காந்திருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள்.//

    A wednesday னு நசிருத்தீன் ஷா நடிச்ச படத்தை பார்த்து இருக்கலாம் :-))

    என்னமோ எப்பப்பார்த்தாலும் வன்முறை வெடிச்சிடும்னு பூச்சிக்காட்டுறதையே வேளையா வச்சிக்கிட்டு ஒரு க்ருப்பு அலையுது, திருப்பி பதிலுக்கு வன்முறை தான் நடக்கும்னு தெரியாதா?
    -----------------
    உண்மைகள்,
    //தமிழகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில்//
    எங்களுக்கு இக்கருத்து பிடிக்கலை எதிர்ப்பு தெரிவிக்கிறோம்னு சொல்லாமல் என்னங்கய்யா வன்முறை வெடிக்கும்னு சொல்வது போல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும்னு சொல்லிக்கிட்டு, படம் பிடிக்கலைனா பார்க்காம போகலாமே?

    இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா தமிழ்நாடும் குஜராத் போல தன்னால் ஆகிடும், உங்களுக்கு எல்லாம் வாயில வாஸ்த்து சரியில்லை :-))

    மத சகிப்பு தன்மையோட சும்மா இருக்கவங்களையும் மதவாதியாக ஆக்கும் செயல்.
    -------------------
    தலைய வெட்டி கொன்னாக்கூட அதான் சட்டம், அந்த சட்டம் தெரிஞ்சு தானே அந்த நாட்டுக்கு வேலைக்கு போனே எனப்பேசும் அறிவு ஜீவி மார்க்க பந்துக்களுக்கு, சென்சார் போர்டும் சட்டப்படி செயல்ப்படுது ,அது அனுமதி கொடுத்தது சட்டப்படி சரினு ஏன் தெரியலை?

    இது போன்ற படங்களுக்கு ஆதரவு தர விரும்பாத என்னைப்போன்றவர்களையும் படத்தை பார்க்கும் ஆசையை தான் தூண்டுது இந்த போராட்டமெல்லாம் :-))
    -----------------------------

    ReplyDelete
    Replies
    1. உலகில் எவரும் 100 % பரிசுத்தமானவர்கள் இல்லை . கமிலின் விஸ்வரூபம் படத்தை விரும்பியவர்கள் பார்க்கட்டும் விருப்பமில்லாதவர்கள் வீட்டில் இருக்கட்டும் .

      Delete

  18. இந்தியாவில் மட்டும் தான் ரிலீஸ் இல்லை. உலகம் முழுக்க நாளைக்கு ரிலீஸ்.
    தமிழனுக்கு திருட்டு dvd ல் விஸ்வரூபம் பார்க்க வேண்டும் என்ற தலைவிதி என்ன செய்வது.
    நான் நாளைக்கு படம் பார்க்க போகின்றேன்.
    வந்து கதை சொல்கின்றேன்
    அமேரிக்கா, கனடாவில் ரிலீஸ்

    ReplyDelete
  19. உலகில் எவரும் 100 % பரிசுத்தமானவர்கள் இல்லை . கமிலின் விஸ்வரூபம் படத்தை விரும்பியவர்கள் பார்க்கட்டும் விருப்பமில்லாதவர்கள் வீட்டில் இருக்கட்டும் .

    ReplyDelete
  20. விஸ்வரூபம் திரைப்படம் துபாய், அபுதாபி உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.இதை VOXCinemas அதிகாரப்போர்வமாக அறிவித்துள்ளது.

    ReplyDelete
  21. மலேசியவில் வெடித்தது விஸ்வரூபம் படத்திற்கான எதிர்ப்பு. அல்ஹம்துலில்லாஹ்.

    இன்ஷாஅல்லாஹ் நாளை மதியம் 2.30 மணிக்கு (ஜூம்மா தொழுகைக்கு பிறகு) மலேசிய தலைநகர் கோலாலம்பூர் கொம்லக்ஸ் சுல்தான் அப்துல் சமத், ஜாலான் ராஜா என்ற முகவரியில் அமைந்துள்ள மலேசிய தகவல் அமைச்சின் அலுவலகத்தில் அயோக்கியன் விபச்சாரநாயகன் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை முற்றிலுமாக தடை செய்திடவும் எந்தவகையிலும் குறிப்பாக தனியார் தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்ப தடைவிதிக்க கோரியும்.... மிம் என்கிற மலேசிய இந்திய முஸ்லிம் மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் சார்பில் கவனஈர்ப்பு கடிதம் கொடுக்கப்படவுள்ளது... வாய்ப்புள்ள சகோதரர்கள் இதனையே அழைப்பாக ஏற்று வருகைதந்து நமது எதிர்ப்பை உணர்வை பதிவுசெய்யுங்கள்....

    மேலும் விபரங்களுக்கு மிம் பேரவையின் பொதுசெயலாளர் சகோதரர் கமால்பாட்சா அவர்களை +6019 246 1416 என்கிற அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்...

    (படம்;மிம் பொதுசெயலாளர் கமால்பாட்சா மற்றும் மிம் தேசிய துணைத்தலைவர் அமீர் ஹம்ஸா )

    நன்றி: வேங்கை இப்ராஹீம்

    ReplyDelete
  22. விஸ்வரூபம் படத்தை முஸ்லிம் அமைப்புகளுக்கு கமல்ஹாசன் போட்டு காட்டினார். படத்தை பார்த்த அமைப்பினர் முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

    மேலும் விஸ்வரூபம் படம் மிலாதுநபி விழாவான 25ம் தேதி திரையிடப் படுகிறது. இது முஸ்லிம் களை வருத்தமடைய செய்துள்ளது.

    நாங்கள் உயிரை கொடுத்தாவது, படம் வெளிவரவிடாமல் தடுப்போம். இந்த படத்தை வெளியிட அனுமதி கொடுத்த தணிக்கை குழு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 25–ந் தேதிக்குள் இதற்கு ஒரு நல்ல முடிவு காண அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    அல்ஹொய்தா தீவிரவாதிகளுக்கு இந்திய அரசின் உளவு அமைப்பான ரா அமைப்பு அதிகாரி பயிற்சி கொடுப்பது போல காட்சிகள் உள்ளன.மேலும் இஸ்லாமிய மத கோட்பாடுகளையும் தவறாக அந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் இந்த படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது. இந்த படம் வெளிவந்தால், தேசிய ஒருமைப்பாட்டையே பாதிக்கும்.

    ReplyDelete
  23. விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக தடை விதித்தது


    கொழும்பு: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது.

    பல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது.

    விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

    இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/vishwaroopam-screening-suspended-168525.html

    ReplyDelete
  24. SALAM,

    முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

    கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

    ReplyDelete
  25. இதற்க்கு பதில் அடி கொடுங்கள்......
    http://feedproxy.google.com/~r/sinthikkavum/Kgnn/~3/U-6Ajagv2rk/blog-post_2139.html?utm_source=feedburner&utm_medium=email
    January 24, 2013 at 4:38 AM
    செ.கதிர்வேலு said...
    சாதி ,சமயம்,மதம் என்ற போர்வையில் நாட்டை அழித்துக் கொண்டு இருக்கும் மதவாதிகளை வெளிச்சம்போட்டு காட்டுவதில் தவறில்லை ,நாம் அனைவரும் சகோதரர்கள் எனற உணர்வில் இருந்தாலும் ,முஸ்லிம் எனற மதவாதிகளும் இந்துத்துவா என்ற மதவாதிகளும் மத வெறிபிடித்தவர்கள என்பது உலகமே அறியும் .அதே நேரத்தில் இன்று உலகத்தில் தீவிரவாதி களும்,கடத்தல்காரர்களும் ,நக்சல் பார்ட்டிகளும்,எந்த மதத்தில் அதிகம் உள்ளார்கள் என்று பார்ப்போமானால் முஸ்லிம்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ,இதை நடிகர் கமலதாசன் துணிச்சலுடன் படம் எடுத்து காட்டுவதில் தவறில்லை ,விஸ்வருபம் படத்தை பார்த்தாவது மக்கள் திருந்தினால் நல்லதுதான் .தங்களுடைய தவறை காட்டிவிட்டால் தாங்கள் குற்றவாளிகள் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு உளார்கள்.உலக குற்றவாளிகளில் முதல் இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.அவர்கள் தவறு செய்யாமல் ,மனிதனாக வாழ பழகிக் கொண்டால் நாடே நலம் பெரும் .எல்லோரும் ஓர்குலம் எல்லோருக்கும் ஒரே இறைவன் என்பதை அறியாத இந்த மதவாதிகள் குருடன் யானையைக் கண்ட காட்சிபோல் அலைந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவார்கள் இவர்களை நினைத்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் உள்ளது.மனம் திருந்துங்கள் மனிதனாக வாழுங்கள்.

    அன்புடன் ஆண்மநேயன்.--கதிர்வேலு.

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து விடுவோம் இவர்களுக்கு குத்த குத்த குணிந்து கொண்டே இருக்கனும் ஏண்டா குத்துறே என்று நிமிர்ந்தால் தவறை மறைப்பதற்காக நிமிர்கிறான் என்பார்கள் இனி நிமிர்ந்து நிற்போம் குத்தியவன் ஏன் குத்தினோம் என்று புலம்பட்டும் இது மாதிரி

      Delete
  26. இதற்க்கு பதில் அடி கொடுங்கள்......
    http://feedproxy.google.com/~r/sinthikkavum/Kgnn/~3/U-6Ajagv2rk/blog-post_2139.html?utm_source=feedburner&utm_medium=email
    January 24, 2013 at 4:38 AM
    செ.கதிர்வேலு said...
    பதில் கொடுத்தமைக்கு நன்றிகள்
    சஜக்கல்லாஹ் ஹைரன்........

    ReplyDelete
  27. அமெரிக்காவுக்கு ஆதரவான படம் அதனால்தான் அமெரிக்காவில் போய் தங்கி அதனை வெளியிடுகிறார்

    ReplyDelete
  28. துப்பாக்கி படத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சப்ப, பெருசா தெரியல , இப்ப முஸ்லிம் ஜாதி தலைவர்கள் தடை கேட்டு இருப்பது கேக்கவே கடுப்பா இருக்கு.
    எப்படியும் நெட் ல காப்பி வரும் , பாக்கத்தான் செய்வாங்க.

    உனக்கு புடிக்கலனா நீ பாக்காத. நீ ஏன் அடுத்தவன் பாக்குறத கெடுக்குற ? ஜாதி தலைவர்களுக்கு எடுத்து சொல்லி , தடைய நீக்க சொன்னா ஜாலியா தியேட்டர் லையே பாக்கலாம்.

    ReplyDelete
  29. நான் நேற்று தான் விஸ்வரூபம் படம் பார்த்தேன். இது இஸ்லாம் போர்வையில் இருக்கும் தீவிரவாதிகள் பற்றிய கதை. கதையின்படி கமல் ஒரு முஸ்லிம். அவரால் முஸ்லிம்களுக்கு பெருமைதான். தீவிரவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் நிச்சயம் ஆதரிக்கும் படம். படத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் உண்மை காட்சிகள். ஓசாமா பின் லேடன், முல்லா ஓமர் போன்றோரை ஆதரிப்பவரே இந்த படத்தை எதிர்ப்பவர். முஸ்லிம் நண்பர்களே தயவு செய்து படத்தை பாருங்கள். யாரோ சிலரின் பேச்சுகளை கேட்டு குழம்பாதீர்கள். எதிர்ப்பு தெரிவிக்கும் அன்பர்கள் தயவுசெய்து இஸ்லாத்தை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் எவை என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு பஞ்சம் இருக்கும் அதுதான் கதை. இந்தப் படமும் கதைக்காண பஞ்சப் பாட்டிலேயே உள்ளது.

      கதை ஒன்றும் பிரமாதம் எல்லாம் இல்லை கமலின் காக்கிச் சட்டை விஜய்யின் போக்கிரி இரண்டையும் மிக்ஸ் செய்தால் அதுதான் விஸ்வரூபம்.

      இந்தக் கதைக்காக கமல் ஒன்றும் அப்படி மெனக்கெட்டிருக்க மாட்டார் என்று கருதுகிறேன். கமலுக்கும் வயதாகி விட்டதாலோ என்னவோ அறைத்த மாவை இன்னும் மெருகூட்ட வேண்டும் என்பதால். அவர் எடுத்துக் கொண்ட கதையின் களம்தான். விஸ்வரூபம்.

      கமலின் ஐம்பது வருட சினிமா வாழ்வில் ஒன்று சாதித்து விட வில்லை என்று விஸ்வரூபத்தை பார்க்கும் போது தெரிகிறது. இதே கமலின் ஆளவந்தான் திரைப்படத்தை விட விஸ்வரூபம் ஒன்றும் பெரிதில்லை.

      ஒட்டு மொத்த கமலின் அபிமானியான அதி மேதவிகள் எல்லோரும் கமல் அற்புத கலைஞன் அவனுக்கு சமுகம் அற்புதமான வறவேற்பு அளிக்க வில்லை என்று தமிழிலில் கூப்பாடு போட்டவர்கள் எல்லாம் விஸ்வரூபதின் கதையில் நமது தாய் மொழியான தமிழலை வளர்க்க கமல் எதவது முயற்ச்சித்து இருக்கிறாரா என்று விளக்கம் தரவேண்டும்.

      Delete