கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பணத்தை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற உலகை கற்பனை செய்து பாருங்கள். அந்த உலகில் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கும்,கலைஞர்களின் கலை வடிவங்களுக்கும், கவிஞர்களின் கவிதைவரிகளுக்கும்,பெரும் பெரும் நாளிதழ்களில் வெளியாகும் ஓட்டுமொத்த ஆக்கங்களுக்கும், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளி,ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும், இன்னும் அறிஞர்களின் அறிவுக்கும்,சீர்திருத்தவாதிகளின் ஓழுக்கக் கருத்தோட்டங்களுக்கும்,எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு.
எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்கி விட முடியும்.
எல்லாமே விற்பனைக்கே...! எல்லாமே சந்தை மயமாக்கப்பட்டுவிட்டன.....! எவர் பணம் தருகின்றாரோ, எவரால் அவற்றை விலை கொடுத்து வாங்க முடிகின்றதோ அந்த நபர் முன்பு அவையெல்லாம் பெட்டி பம்பாக அடங்கிப் போகும் என்கிற அளவுக்கு அந்த உலகம் இயங்குகின்றதென வைத்துக் கொள்ளுங்கள்.
அவையெல்லாவற்றுக்கும் உரிய விலையைத் தரக்கூடிய ஆற்றலும் சக்தியும் சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இருக்கின்றது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனங்களுக்கோ உலக வளங்களுக்கெல்லாம் முழுமுதல் உரிமையாளராக ஆவதைத் தவிர வேறு எந்த நோக்கமோ, லட்சியமோ ஆசையோ இல்லை.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்த உலகம் எத்தகையதாக இருக்கும்? எந்த நிறம் கொண்டதாக இருக்கும்? எந்த மணம் கொண்டதாக இருக்கும்?
மனித பண்பாடுகளின் வரலாற்றை பல்வேறு வண்ணங்களைக் கொண்டதாக ஆக்கியதில் மிகப் பெரும் பங்கற்றுகின்ற யாதொரு கூற்றுக்கும் அந்த உலகத்தில் இடம் இருக்குமா? சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலுக்கும், கொள்கைகள் மற்றும் மாண்புகள் பற்றிய அறிவார்ந்த விவாதங்களுக்கும் பண்பாடுகளின் ஒப்பாய்வு மற்றும் புரட்சிகள் போன்றவற்றுக்கும் அந்த உலகில் இடம் இருக்குமா?
உதராணத்திற்கு இந்த கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விளையாட்டிற்கும் நமது மண்ணுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? இந்த செயற்கைத் தனமான விளையாட்டு எப்படி இந்தியாவின் மானத்தை காக்கின்ற விளையாட்டாக மறிப் போனது?
இந்தியாவையும் நம்மையும் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்கள் கோடைக் காலங்களில் ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு ஓய்வு எடுப்பதற்காக எஸ்டேட்களில் தங்கியிருந்த போது காட்டிற்கு சென்று இயற்கை சூழலை கெடுத்து மிருகங்களை எந்த தேவையில்லாமல் கொன்று பொழுதை கழிப்பார்கள். அல்லது அதிக உடல் உழைப்பு இல்லாத விளையாட்டான கிரிக்கெட் விளையாடுவர்கள்.
வெள்ளைக்காரர்கள் வெறும் சடங்குரீதியான சுகந்திரம் மட்டும் தான் கொடுத்து சென்றுயிருக்கிறார்கள் என்பதற்கான நிகழ்கால ஆதரமாக நிறைய விஷயங்கள் இருக்கின்றன அதில் கிரிக்கெட் முக்கியமான பாத்திரம் வகிக்கிறது.
வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போயி அரை நூற்றாண்டு மேலாகியும் அந்த வெள்ளைக் கலர் மேலுள்ள மோகம் குறையாமல். வெயில் பிரதேச நாட்டைச் சேர்ந்த நமக்கு தோல் கருப்பாகத்தான் இருக்கும் அதுதான் அழகு, ஆரோக்கியம் என்பதை கூட உணராமல். உணவுக்கு செலவழிப்பதை விட முகத்தை சிகப்பாக்க பேர் அன் லவ்லி கீரிம்களுக்கு செலவழிக்கிற மனநிலை எப்படி உருவாக்கப்பட்டது?
இங்கிலாந்து போன்ற குளிர் பிரதேச நாடுகளில் காலில் ஷு மாட்டிக்கொண்டு
குளிர்க் காற்று உள்ளே போகமால் இருக்க காலர் பட்டனை இறுக்கமாக பூட்டி அதற்குமேல் டை எனும் துணி கயிற்றால் இறுக்கமாக கட்டிக் கொள்வது அவர்களுடைய சூழல் சார்ந்த தேவை ஆனால் வெயில் பிரதேசங்களில் வாழும் நாம் கொளுத்தும் வெய்யிலில் கணத்த ஷு மாட்டி இறுக்கமாக டை கட்டி ஆஸ்ப்பாட்டஸ் ஷீட் மேயப்பட்ட ஸ்கூலில் நாம் பிள்ளைகளை உட்கர வைக்கிறோமே இது எந்த வகையான தேவை? இதுதான் நாகரீகமா?
இது காலனித்துவ அடிமைப் புத்தி இல்லையா?
அட ரொம்ப போக வேனாங்க. மனித வரலாற்றின் எந்தவோரு காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டாலும் பண்பாடுகள் முற்றாக ஒழிந்து போனாலும் உணவு, பானங்கள் தொடர்பான சுவைகளும் விருப்புகளும் காலத்தை வென்று நிற்கும். பத்து வருஷத்துக்கு முன்னாடி நமக்கு கோகோ கோலா, பெப்ஸி. ஹம்பர்கர். பிட்ஸா இவைகளை பரவலாக தெரியுமா? நம்ம பெப்ஸி உமா அக்காவால் எப்படி ஒவ்வோரு கிராமத்திற்கும் பெப்சியை கொண்டு போய் சேர்க்க முடிந்தது? நம்ம விக்ரம் அண்ணே சேவல் மாதிரி கத்தி கத்தி சண்ட போடுற படத்துல லஞ்ச ஒழிப்பு ஆபீஸர் ஆகுறதுக்கு முன்னாடி பிட்ஸா கடையில மிகக்கவுரமான வேல பாத்து பிட்ஸா தான் டாப்புன்னு ஏன் பாட்டு பாடனும்? இதையே சாதரன புரோட்டா கடையில வேல பாக்குற மாதிரி ஏன் காட்டவில்லை இரண்டும் மைதா மாவு தானே?
365 நாட்களும் 24 மணி நேரமும் நடக்கும் இந்த சிந்தனை ரீதியான ஊடக பயங்கரவாத தக்குதல்களில். உணவின் சுவை, குணம்,மனம், காரம் தொடர்பான விருப்புவெறுப்புகளையும் (Taste buds) நாம் சமையல் அறை வரை இந்தப் விளம்பரங்கள் தாக்குதல் தொடுக்க முடியும் என்றால் போழுது போக்குக்கான விளையாட்டைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
மனதை மயக்கும் விளம்பரங்கள் கிரிக்கெட் மீதான மோகத்தை ஊட்டி வளர்க்கிற வணிக, விளம்பர உத்திகள், வணிக நிறுவணங்களில் விளம்பரக் கருவியாக கிரிக்கெட் மாறி ஒரு மாயப் பின்னலாக இன்றைய கிரிக்கெட் ரசிகர்களைச் சுற்றி பிணைந்து சிறைப்படுத்தி இருக்கிறது.
சரி இந்த வீடியோவை பாருங்கள்
நன்றி சிலம்பம் குறும்படம் - www.sangamamlive.in
அருமையான குறும்படம் எனக்கு தேவையானதை வெட்டி எடுத்திருக்கிறேன் முழுமையாக பார்க்க மேலேயுள்ள லிங்கில் பாருங்கள்.
ஒரு சிலம்பட்டக்காரன் என்றமுறையில் அந்த பெரியவரின் வேதனையை நான் உணர்ந்தேன் உண்மையில் சிலம்பாட்டம் கிரிக்கெட்டை விட எந்த வகையில் தாழ்ந்தது?
சிலம்பம் என் கிராம வாழ்வோடு தொடர்புடையது எனது இராமநாதபுர கிராமங்கள் போன்ற தேன்மாவட்ட கிராமங்களில் வழிவழியாக சொல்லித் தரப்படும் நலிந்த விளையாட்டு.
இதில் உடல் உழைப்பு கூடுதலாக தேவைப்படுகிற முழு உடலும் இயங்கிற உடல்பயிற்சியோடு செய்யக்கூடிய சிறந்த விளையாட்டு
கணினியில் முழு நேரமும் டைப் செய்வாதல் வரக்கூடிய விரல் முடக்கு வியாதி மணிக்கட்டு வலி இவைகளை போக்கக்கூடியாது சிலம்பாட்டத்தில் கிரிக்கெட்டை விட மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் தான் அதிகமான வேலை.
ஆதி மனிதன் கையில் இருந்த இந்த தடி முனி சீவப்பட்டு ஈட்டியாக பரினமித்து
கருமருந்து தடவப்பட்ட அம்பாக மாறி துப்பாக்கி விசையில் தொட்டாகவாக உறுமாறி திப்பு சுல்தான் கையில் ஏவுகணையாக நின்று காலனித்துவ ஆட்சியாளர்களை பல ஆண்டுகள் கலங்கடித்தது.
மீண்டும் நம் மண்ணின் விளையாட்டு மறுகாலனித்துவ ஆட்சியாளர்களின் விளையாட்டை தொற்கடிக்க வேண்டுமேன்றால்.
சிலம்பை கையில் எடு கிரிக்கெட்டை தூர எறி