Sunday, January 30, 2011

தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்

திவுலகில் உள்ள சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பிறருக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு சமையல் கலை, கைவினை, இயற்கை மருத்துவம் போன்றவற்றை சொல்லலாம். சரி நானும் எனக்கு தெரிந்த கலைகளை பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு இடுகிறேன்.(வெளக்கம் போதுமா)

சரி எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு உடற்பயிற்சி இயக்க வல்லுனர்
நோய் தீர்க்கும் உடற்பயிற்சி முறைகளை செயல் ரீதியாக கற்று இருக்கிறேன் இங்கு சவூதியிலும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இரும்பு கருவிகளை பயன்படுத்தாமல் ஆனால் அதைவிட அதிக பலன்கள் தரக்கூடிய பக்க விளைவுகளை எற்ப்படுத்தாத மைதான விளையாட்டு முறையிலான(Athletics exercise)வற்றை சொல்லி கொடுக்கிறேன். அப்புறம் சிலம்பாட்டம், களரி, போன்ற மண்சார்ந்த கலைகளும் தெரியும் .சர்க்கரை நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறைகள், இருதய நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறைகள் என்று பல வகை இருந்தாலும் நான் இந்த பதிவில் சொல்லி கொடுக்க போவது தொந்தியை குறைக்க செய்யவேண்டிய உடற்பயிற்சி முறைகள் மட்டும். இந்த கிரவுண்ட் எக்ஸர்சைஸ் முறையில் ஒவ்வொரு உறுப்புகளையும் தனிதனியாக இயக்கலாம் வயிறை குறைக்க மட்டும் 35 வகையான பயிற்சி முறைகள் இருக்கின்றன அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்.


இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்
ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு

1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.

4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம்

                           இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்
விரிப்பின் மீது நேராக உட்கார்ந்து கால்களை நெடுக நீட்டிக் கொள்ள வேண்டும். பின்பு முன்னுக்கு குனிந்து மூச்சை விட்டுக் கொண்டே, கைகளால் கால்களின் பக்கவாட்டில் தேய்த்துக் கொண்டே சென்று கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரலால்,கொக்கி போல் மடக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். கால் கட்டை விரல்களை கெட்டியாகப் பிடித்ததும், வயிறு எக்கிக் கொள்ளும். இப்படி கால் கட்டை விரல்களைத் தொட முயற்சிக்கும் போது முழங்கால் உயரக்கிளம்பும் அப்படி கால்கள் மேலெழும்புவதைத் தடுத்து உடலைக் கால்கள் மேல் வளைத்துக் கொஞ் சம் கொஞ்சமாக கால் கட்டை விரலை பிடித்து விட வேண்டும்.(பருமனாக இருப்பவர்கள் கால் கட்டை விரலைக்கூட தொடமுடியாது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானது)கால் கட்டை விரல்களை பிடித்த பிறகு, தலையை கொஞ்சம் கொஞ்சமாக குனிந்து நெற்றி முழங்கால்களை சேரும்படி நெருக்க வேண்டும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும்.

இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்


இந்த பயிற்சி செய்யும் போது வயிறு நன்றாக மடிக்கப்படுவதால் வயிற்றிலுள்ள கொழுப்புகள் எரிந்து தொந்தி குறையும். காற்றுக் குழாய், விதானம், சிறுநீர்க்குழாய், இருதயத்திற்குப் போகும் கீழ் இரத்தக் குழாய், இதயத்திலிருந்து வரும் பெரிய இரத்த நாளம், ஆகாரக் குழாய், சிறுநீர்ப்பை, மண்ணீரல் பெருங்குடல் இவை அனைத்துமே விரிவடைந்து நன்கு செயல்படும் .இப்படி செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் பற்றிக் கூறவும் வேண்டுமா?
மேலும் சிறுநீர்த் தடையையும் இப்பயிற்சி நீக்குகிறது. நாடி இயக்கங்களின் குறைகளைப் போக்குகிறது. முதுகெலும்பிற்கு பலத்தைக் கூட்டுகிறது. இடுப்பு பலம் பெறுகிறது. இடுப்புவலி வாயுத்தொல்லை போன்ற உபாதைகள் நீங்கும்
இப்பயிற்சியை இடைவிடாமல் செய்து வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வராது எப்படி? இந்த பயிற்சியினால் கல்லீரலுக்கு நல்ல இரத்த ஒட்டம் கிடைக்கிறது. கல்லீரலில் இன்சுலின் என்ற திரவம் சுரக்கிறது. இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது இன்சுலின் என்ற பொருளே ஆகும். இது போதுமான அளவு கல்லீரலில் உற்பத்தி ஆகாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து அது நமது உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடும். இப்பயிற்சியை செய்யும்போது கல்லீரலில் நன்கு புத்துணர்வுடன் செயல்படுவதால் அங்கு இன்சுலின் தாராளமாக உற்பத்தியாகிறது. இந்த இன்சுலின் இரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பெண்கள் இந்த பயிற்சியை செய்யலாம். இதனால் அவர்களுக்கு பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரவே வராது.

சில முன்னெச்சரிக்கைகள்
ஹெரண்யா நோய் உள்ளவர்களும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.

கர்ப்பவதிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் எளிதில் இப்பயிற்சி கைகூடாது . அதற்காகப் பயிற்சியை விட்டுவிடக்கூடாது.

ஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலி குறையும் பயிற்சியும் கைகூடும்.

மொத்தம் வயிற்றுக்கான 35 பயிற்சிகளில் இரண்டை இந்த பதிவில் சொல்லுவதாக இருந்தேன் ஆனால் பதிவு மிகவும் நீளமாகி விட்டதால் இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த அடுத்த பயிற்சியை இரண்டாவது பதிவாக இடுகிறேன்.


இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது இமெயில் பன்னுங்கள்.

53 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ. ஹைதர் அலி, மிகவும் அத்தியாவசியமான இடுகை.

    படிக்கும்போதும், வீடியோ பார்க்கும்போதும் செய்வதற்கு மிக எளிதான பயிற்சி என்றுதான் தொன்றியது. ஆனால், என்னால் பெருவிரலை கூட தொட இயலவில்லை. எனக்கும் தொந்தி என்று ஏதோ ஒன்று இருப்பதை(?) இன்றுதான் அறிந்து கொண்டேன்...!

    ரொம்ப முயன்றால் கால்கள் பக்கவாட்டில் விரிகின்றன... அல்லது தலைக்கு மேலே முழங்கால்கள் உயர்கின்றன.

    சரி, போகட்டும்.

    தொந்தி உள்ளவர்கள், தங்கள் தொந்தியை குறைக்க என்ன விதமான பயிற்சிகள் தங்களிடம் உள்ளன மாஸ்டர்? தலைப்புக்கு ஏற்றவாறு, 'தொந்தியுடன் உள்ள ஒருவர்' செய்யும் பயிற்சி வீடியோ இணைப்புடன் அதை வெளியிடுங்கள்..!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

    என்னவருக்கு இந்த பதிவு தேவையானது .

    இந்த பதிவை படிக்க மெயில் அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
  3. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்January 30, 2011 at 1:33 PM

    அஸ்ஸலமு அலைக்கும்

    ரொம்ப நன்றி ஹைதர் அண்ணே தம்பிக்கு தேவையான பதிவாதான் போட்டிருக்கின்றீர்கள்.இந்தியாவில் இருக்கும்போது ஸ்லிம்மா தொப்பையே இல்லாமல் இருந்தேன்.துபாய் சாப்பாடு சாப்பிட்டு எடை கூடினதுமட்டுமல்லாமல் தொப்பையும் கூடிடுச்சு.
    இனிமேல் நானும் தினமும் முயற்சி செய்து என் தொப்பையை குறைத்துவிடுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அண்ணா நல்ல பதிவு. அதுவும் ரொம்ப விரிவாக, விளக்கமாக.....

    நானும் முயற்சித்து பார்க்கிறேன் ;)

    ReplyDelete
  5. I have been treated for compressed fracture in the back bone. can I do this?
    subbu

    ReplyDelete
  6. ப்பூ .. இவ்வளவுதானா .. ஆரம்பிக்கிறேன்.

    ஹலோ! காலை நீட்டி எப்டீங்க உக்கார்ரது? தொந்தி தடுக்குதே! :)

    முயற்சித்ததுதான். மீண்டும் முயல்கிறேன்.

    ReplyDelete
  7. இந்தப் பயிற்சிக்கு வயசு ஏதும் தடை உண்டா? யோகாவில் இதைச் செய்தது உண்டு. கால் பெருவிரலைத் தொட்டுவதுண்டு. அதன்பின் முதுகை வளைத்து முயற்சிததில்லை.

    ReplyDelete
  8. @முஹம்மத் ஆஷிக்

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    ///என்னால் பெருவிரலை கூட தொட இயலவில்லை.//

    .(பருமனாக இருப்பவர்கள் கால் கட்டை விரலைக்கூட தொடமுடியாது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானது)

    இப்படி பதிவில் விளக்கம் கொடுத்து இருந்தேன் கவனித்தீர்களா?

    அதாவது தொந்தி இல்லாதவர்கள் கால் கட்டை விரலை தொட்டால் தான் பலன் ஆனால் தொந்தி உள்ளவர்கள் கட்டை விரலை தொடமலே பலன் கிடைக்க ஆரம்பித்துவிடும்.

    //தலைப்புக்கு ஏற்றவாறு, 'தொந்தியுடன் உள்ள ஒருவர்' செய்யும் பயிற்சி வீடியோ இணைப்புடன் அதை வெளியிடுங்கள்..!///

    கண்டிப்பாக அடுத்த பதிவில் முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  9. @ஆயிஷா அவர்களுக்கு

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்....

    //என்னவருக்கு இந்த பதிவு தேவையானது .இந்த பதிவை படிக்க மெயில் அனுப்பி உள்ளேன்.//

    ரொம்ப நல்லது சகோ
    அடுத்தடுத்த பதிவுகளில் உள்ள பயிற்சிகளையும் செய்தார்கள் என்றால்
    (இன்ஷா அல்லாஹ்) ஆரோக்கியம் நிச்சயம்

    நன்றி சகோ

    ReplyDelete
  10. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    இந்த பதிவில் உணவுக் கட்டுப்பாடு பற்றி எழுத மறந்து விட்டேன்

    விரைவில் ஜிரணமாகாத புரோட்டா சப்பத்தி ஹப்ஜா இவைகளை சாப்பிட்டு விட்டு துங்கினீர்கள் என்றால் கண்டிப்பாக தொப்பை வைக்கும் அதனால் இரவில் புரோட்டா சாப்பிடதீர்கள்

    அடுத்த பதிவில் உணவு கட்டுப்பாடு சம்பந்தமாக விரிவாக எழுதுகிறேன்

    ReplyDelete
  11. @ஆமினா

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    என்ன ரொம்ப நாட்களாக உங்களை கணவில்லை


    //நானும் முயற்சித்து பார்க்கிறேன் ;)//

    முயற்சி செய்து பாருங்கள் உங்களால் முடியும்

    ReplyDelete
  12. @Samudra

    உங்களுடைய முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. @தருமி அவர்களுக்கு


    //ஹலோ! காலை நீட்டி எப்டீங்க உக்கார்ரது? தொந்தி தடுக்குதே! :)//

    எந்த இடம் தடுக்கிறதோ அந்த பகுதி போக போக வளைந்துக் கொடுக்க ஆரம்பித்து விடும் தடுத்து வலி எற்படும் போதே இந்த பயிற்சிக்கான பலனை அடைய ஆரம்பித்து விடுகிறீர்கள்

    தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. @தருமி அவர்களுக்கு

    //இந்தப் பயிற்சிக்கு வயசு ஏதும் தடை உண்டா?//

    இல்லை

    ///யோகாவில் இதைச் செய்தது உண்டு. கால் பெருவிரலைத் தொட்டுவதுண்டு. அதன்பின் முதுகை வளைத்து முயற்சிததில்லை.//

    நீங்கள் எற்கனவே யோகா செய்யக்கூடியவராக இருந்தால் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம்

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
    நீண்ட நாட்களாக முயற்சி (நேரத்திற்காக) செய்து நமது சமூகத்துக்கு தேவையான பதிவு இட்டுள்ளீர்கள். மற்ற சமுதாய மக்களை காட்டிலும் நமது சமுதாய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எல்லோரும் படித்து பயன் பெற வாழ்த்துகள்! அதே சமயம் சீராக ௩௦ முப்பது நிமிடங்கள் தினந்தோறும் நடப்பதால் நாம் தேவையில்லாத கலோரியை நீக்கி விடலாம் என்ற கருத்தைப்பற்றியும் விவரிக்கவும் மாஸ்டர் அவர்களே!

    ReplyDelete
  16. இன்சுலின் சுரப்பது கல்லீரலில் அல்ல. கணையம் (pancreas) என்னும் உறுப்பே இன்சுலினைச் சுரக்கச் செய்கிறது.

    ReplyDelete
  17. @M. Farooq
    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    //அதே சமயம் சீராக ௩௦ முப்பது நிமிடங்கள் தினந்தோறும் நடப்பதால் நாம் தேவையில்லாத கலோரியை நீக்கி விடலாம் என்ற கருத்தைப்பற்றியும் விவரிக்கவும்//

    ஆம் இந்த நடை பயிற்சியின் மூலமும் கலோரியை நீக்கலாம்

    ஆனால் எந்த வேகத்தில் நடக்க ஆரம்பித்தமொ அதே வேகத்தொடு 40 நிமிடங்கள் ஒரே சீராக நடக்க வேண்டும் அப்படி செய்தால் பலன் கிடைக்கும்

    ReplyDelete
  18. @லதானந்த் அவர்களுக்கு

    //இன்சுலின் சுரப்பது கல்லீரலில் அல்ல. கணையம் (pancreas) என்னும் உறுப்பே இன்சுலினைச் சுரக்கச் செய்கிறது.//
    கணையம் இன்சுலினை கட்டுப்படுத்துவது உன்மைதான் அதே போன்ற வேலையை கல்லீரலும் செய்கிறது இந்த லிங்கில் பார்க்கவும்
    http://www.satyamargam.com/973

    http://www.google.com/url?sa=t&source=web&cd=1&ved=0CBIQFjAA&url=http%3A%2F%2Ftamil.webdunia.com%2Fmiscellaneous%2Fhealth%2Farticles%2F0812%2F06%2F1081206071_1.htm&ei=oR1HTdKOMsf44AbE2LEH&usg=AFQjCNH4CgSfR-GWTMMTo383o9dRmY9pGQ&sig2=QFfsH0Y6gCoByURvYTz15w

    அப்புறம் கணையமும் இந்த பயிற்சியை செய்யும் போது நசுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. @Riyas அவர்களுக்கு

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. //சவூதியிலும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் //.. சொல்லவே இல்ல.. சிறிய பயிற்சி தான்.. நிறைய விளக்கத்துக்கு ரெம்ப நன்றி.

    இது சவுதிலையா?? கத்துகிடீகிங்க??

    ReplyDelete
  21. @Rahim


    //.. சொல்லவே இல்ல..//

    நீங்க கேக்கவே இல்லே..

    //சிறிய பயிற்சி தான்.. நிறைய விளக்கத்துக்கு ரெம்ப நன்றி.//

    இருக்கட்டும் இருக்கட்டும்

    //இது சவுதிலையா?? கத்துகிடீகிங்க??//

    இல்லை ஊரில் கற்றுக் கொண்டேன்

    ReplyDelete
  22. தொந்தியினால் ஏற்படும் பயன்களை பற்றி என் நண்பன் எனக்கு சொன்னதுங்க அதுக்காக என்னை திட்டாதிர்கள் மக்களே !

    1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

    2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

    3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
    அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

    4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

    பாடலாசிரியர் வைரமுத்து கூட.........

    நீ காற்று நான் மரம்…

    என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

    என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    நீ பந்தி
    நான் தொந்தி
    என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

    அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

    தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.
    தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

    இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
    இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
    படைத்துள்ளது.

    ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
    தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

    இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

    போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

    அப்படின்னு கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள்லாம் ஜாலியா பேசிக் கொள்வோம்ங்கோ...ஆனால் பாருங்க தொந்தி விசயத்தில் மட்டும் நாங்கள் கரெக்ட்டா நடந்துகிட்டோம்,காரணம் தொந்தி இருந்தால் எந்த பிகரும் நம்மளை பார்க்காது பாருங்க அதுக்குத்தான்.
    உங்களின் அறிய பதிவைக் கண்டு நானும் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி அண்ணே !

    ReplyDelete
  23. மிகவும் நல்ல பதிவு...

    /ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது./

    பலர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தாலும் நாளடைவில் கைவிடுவதற்கு இதுவே முதற்காரணமாக் இருக்கிறது. இதை நீங்கள் அழுத்தந்திருத்தமாக கூறியிருப்பது பலர் நம்பிக்கையுடன் பயிற்சி செய்ய ஊக்குவிக்கும்.

    @அந்நியன் --ஊருக்கு உபதேசமா? ஆண்கள் எல்லாரும் இதைத்தான் அங்கங்க குட்டிசுவத்துல உக்காந்து பேசுவீங்களோ?;)

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோதரர் ஹைதர் அலிக்கு முதலில் " ஆல் இன் ஆல் ஹைதர் அலி" என்ற பட்டம் கொடுப்பது சால சிறந்தது என்று நினைகிறேன்,

    எனக்கு என்று கார் கிடைக்காத வரை டாக்ஸி ஸ்டாண்ட் இல் இருந்து எனது ரூமிற்கும், எனது ரூம் இல் இருந்து டாக்ஸி ஸ்டான்டிர்க்கும் தினமும் ஒரு ஒரு கிலோ மீட்டராவது நடந்து கொண்டு இருந்தேன்.இபொழுது அதுவும் இல்லை, காலை 8 மணியில் இருந்து அலுவலகம் முடியும் வரை உட்கார்ந்து பார்க்கும் வேலையே. உடல் உழைப்பிற்கு வேலையே இல்லை. கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 59 கிலோ எடை கொண்ட நான் சுமார் 6 கிலோ கூடிவிட்டேன், எனது புகை படத்தை பார்த்த மாத்திரமே நீங்கள் புரிந்து கொண்டு இருபிர்கள் என்று நினைகிறேன் எடை குறைக்கவேண்டும் என்ற காரணத்திற்கு தான் தினமும் இரவில் "பரோட்டா" சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன், இபொழுது தான் புரிகின்றது புரோட்டா சாப்பிட்டால் எடை கூடும் என்று. தகவலுக்கு நன்றி இன்று முதல் பரோட்டாவிற்கு குட் பை.(இரவில் வேற என்ன சாபிடவேண்டும் என்று சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும் உங்களுக்கு தெரியும் நான் வசிக்கும் இடத்தில எது எது கிடைக்கும் என்று.)

    நன்றி
    சகோ ஜே ஜே

    ReplyDelete
  25. //nrenrum16 சொன்னது…//
    @அந்நியன் --ஊருக்கு உபதேசமா? ஆண்கள் எல்லாரும் இதைத்தான் அங்கங்க குட்டிசுவத்துல உக்காந்து பேசுவீங்களோ?;) //

    என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே ?
    ஊருக்கு உபதேசம் பண்ணும் நான்,முதலில் நல்லவனாக இருக்கவேணுமே !
    சரிங்க உங்கள் கணிப்பின்படியே கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன்,படிக்கிற வயசிலே கொஞ்சம் அப்படியும் இப்படியும் இருக்கத்தானே செய்யும்,அதுக்குப் போயி இப்படி கேட்கலாமா ?

    எல்லா ஆண்களையும் இழுக்காதிர்கள் அப்புறம் கைதர் அண்ணன் சண்டைக்கு வந்திடப் போகிறார்கள் அதான் மன்னுச்சுடுங்க மக்களே என்று,பின்னூட்டத்தின் தலைப்பிலயே எழுதி இருக்கேனே ?

    ReplyDelete
  26. நண்பர் ஹைதர் அலி!

    தற்காலத்துக்கு மிகவும் தேவையுள்ள பதிவு. மதியம் நன்றாக தூங்கி விட்டு பிறகு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்தால் தொந்தி விழுவதை உடற் பயிற்சி இல்லாமலேயே குறைத்து விடலாம்.

    ReplyDelete
  27. பார்ப்பதற்கு மிக எளிதாகத் தெரிந்தாலும் கஷ்டமானதுதான். கட்டைவிரலைத் தொடுவதே பெரும்பாடாய் இருக்கும்போது, தலையை வைத்து முழங்காலைத் தொடுவதா? அவ்வ்வ்...

    ReplyDelete
  28. மிகவும் பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  29. இந்த பயிற்சி பேக் பெயினுக்காக டாக்டர் சொல்லி கொடுத்தது, நல்ல பலன்.

    ReplyDelete
  30. @அந்நியன் அவர்களுக்கு2

    என் அழைப்பை ஏற்று வந்து கருத்திட்டமைக்கு நன்றி

    பதிவளர்களிலேயே வெளிப்படையாக பேசக் கூடியவர்களில் நீங்களும் ஒருவர்

    அதே சமயத்தில்
    நாவினால் சறுக்கி விழுதல்
    காலினால் சறுக்கி விழுவதை விட
    கடினமானது என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்

    நன்றி சகோ

    ReplyDelete
  31. @enrenrum16 அவர்களுக்கு

    //@அந்நியன் --ஊருக்கு உபதேசமா? ஆண்கள் எல்லாரும் இதைத்தான் அங்கங்க குட்டிசுவத்துல உக்காந்து பேசுவீங்களோ?;)//

    குட்டி சுவத்துல ஒக்காந்து தேவையில்லாத விஷயங்களை பேசுவது தவறுதான் அது ஆண்களாக இருந்தாலும் குற்றம் குற்றமே.

    ”நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்”(அல்குர்ஆன் 9:71)

    நன்மையை ஏவக்கூடிய நல்ல நண்பாரக சகோதரியை நான் பார்க்கிறேன் அந்நியன் நீங்கள்?

    ReplyDelete
  32. @ஜேஜே அவர்களுக்கு

    //.(இரவில் வேற என்ன சாபிடவேண்டும் என்று சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும் உங்களுக்கு தெரியும் நான் வசிக்கும் இடத்தில எது எது கிடைக்கும் என்று.)//

    உங்க ஏரியாவில் ஒட்ஸ் கிடைக்குமா?
    இரவில் ஒட்ஸ் கஞ்சி குடியுங்கள்

    அதாவது நீர் அகாரமாக சப்பிட்டால் தொந்தி வைக்காது

    ReplyDelete
  33. @அந்நியன் அவர்களுக்கு2

    //ஊருக்கு உபதேசம் பண்ணும் நான்,முதலில் நல்லவனாக இருக்கவேணுமே !//

    ”பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு உங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்களா?”(அல்குர்ஆன் 2:44)

    //சரிங்க உங்கள் கணிப்பின்படியே கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன்,படிக்கிற வயசிலே கொஞ்சம் அப்படியும் இப்படியும் இருக்கத்தானே செய்யும்,அதுக்குப் போயி இப்படி கேட்கலாமா ?//

    நீங்க கெட்டவர் இல்லை என்பது பதிவுலகிலுள்ள அனைவருக்கும் தெரியும் நீங்க ஜாலியாகத்தான் பேசினீர்கள்

    //எல்லா ஆண்களையும் இழுக்காதிர்கள் அப்புறம் கைதர் அண்ணன் சண்டைக்கு வந்திடப் போகிறார்கள்//

    கண்டிப்பாக சண்டைக்கு வர மாட்டேன் ஆண்கள் பக்கம் தவறு இருக்கும் பட்சத்தில்

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

    அன்புச் சகோதரர் ஹைதர் அலி.. நிச்சயமாக என் போன்ற பெரிய வயிறு (தொப்பையை இப்படி கூட சொல்லலாம் தானே?) கொண்டவர்களுக்கு உபயோகமிக்க பதிவு.. நிச்சயம் முயற்சி செய்து பார்க்கிறேன்.. இறைவன் நாடினால் என்னுடைய முயற்சியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன்..


    முஹம்மது ரஃபீக்

    ReplyDelete
  35. @சுவனப்பிரியன் அவர்களுக்கு


    //மதியம் நன்றாக தூங்கி விட்டு பிறகு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்தால் தொந்தி விழுவதை உடற் பயிற்சி இல்லாமலேயே குறைத்து விடலாம்.//

    இல்லை நண்பரே நாம் எந்த அளவுக்கு கலோரிகளை உட்க்கொள்கிறமொ அந்த அளவுக்கு உடலுழைப்பு இல்லையேன்றால் உடம்பில் கொழுப்பாக சேர்ந்துவிடும்

    ReplyDelete
  36. @ஹுஸைனம்மா அவர்களுக்கு

    தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் பயிற்சி கைகூடும்

    நன்றி சகோ

    ReplyDelete
  37. @Jaleela Kamal

    உங்களின் அனுபவரிதியான கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  38. @Rafiq அவர்களுக்கு

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்

    இந்த சகோதரனும் உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்கிறேன்

    ReplyDelete
  39. நான் 21 வயது ஆண் ..5 '11 உயரம் ..79 kg ..கணினியில் அதிக நேரம் செலவிடுவதால் ...இடுப்பில் மட்டும் சதை விழுகிறது ..தொப்பை இல்லை ..இடுப்பு பகுதியை குறைக்க ..ஏதும் உடற்பயிற்சி கற்று குடுங்கள் ...நன்றி

    ReplyDelete
  40. @பெயரில்லா அவர்களுக்கு

    இடுப்பை குறைப்பது சம்பந்தமாக விரைவில் ஒரு பதிவு இடுகிறேன்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  41. ok aavalaodu ethirpaarkiren ..iduppu kuraiya .. nandri

    ReplyDelete
  42. Assalam Alaikum mr. Hyder. This is Rafi, ur ex-student with Aswar moulavi learning karate. I visit ur website today. Masha allah it is great and wallaahi i wonder and praying to god to give you more ajar in duniya and in aakira. Masters are always masters - you proved it. Really i am proud of you.

    ReplyDelete
  43. மிகவும் பயனுள்ள இடுகைக்கு நன்றி

    உங்கள் இடுகைக்கு என் முதல் வருகை இது... எனக்கு சிசேரியன் நடந்து ஒரு மதம் ஆகிறது நான் இதை செய்யலாமா? (இது எனது இரண்டாவது குழந்தை .).

    ReplyDelete
  44. @காற்றில் எந்தன் கீதம்

    சகோதரி அவர்களுக்கு

    மன்னிக்கவும் நீங்கள் இப்போது இந்த பயிற்சியை செய்யக் கூடாது குறைந்தது 6 மாத காலமாவது ஆக வேண்டும்.

    ReplyDelete
  45. நல்ல உபயோகமான பயிற்சி முறை. மிக்க நன்றி

    A K M இஸ்மாயில்

    ReplyDelete
  46. அஸ்ஸலாமு அலைக்கும்

    மிகவும் அவசியமான - அற்புதமான படைப்பு.

    நான் எனது தளத்தில் தங்களது ஆக்கத்தைப் போட்டிருந்தேன். (www.chittarkottai.com).

    வாசகர் ஒருவர் தங்களுடன் தொடர் கெண்டு விவரம் கேட்க உள்ளார்.

    தங்களது போன் நம்பரைத் தந்தால் நலமாக இருக்கும்

    வஸலாம்
    முயீனுத்தீன்

    ReplyDelete
  47. @Chittarkottai

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    rriyasali15@gmail.com
    இந்த ஐடியில் அவரை தொடர்பு கொள்ள சொல்லுங்கள் சகோ

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  48. மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர்

    ReplyDelete
  49. மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர்

    ReplyDelete
  50. மிகவும் பயனுள்ள பகிர்வு அண்ணே ச்சூப்பர்

    ReplyDelete
  51. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

    இப்பொழுதுதான் பார்க்க நேரிட்டது இந்த பதிவு,

    என்னுடைய சந்தேகம்
    வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.
    என்று சொல்லி உள்ளீர்கள் , வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து 13 வருடம் ஆகிவிட்டது, இப்பொழுது இந்த பயிற்சி செய்யலாமா விளக்கம் தரவும் அண்ணன்.

    ReplyDelete