Tuesday, March 29, 2011

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -4


ந்த பயிற்சிகளைப் பற்றி
இந்த பயிற்சியை யார் வேண்டுமானலும் செய்யலாம்,Low pressure, high pressure உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் செய்யலாம். இப்பயிற்சிகளை செய்ய செய்ய அவைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

இந்த வீடியோவை கவனித்து பாருங்கள்

 


செய்முறை விளக்கம்
இப்பயிற்சியை சில இடங்களில் சரியாக செய்யவிட்டால் எந்த பலனும் கிடைக்காது அது போன்ற இடங்களை மட்டும் நான் உங்களுக்கு சுட்டி காட்டுகிறேன்.

இரண்டு கைகளையும் காது மடல்களை ஒட்டினற்போல் மேலே தூக்கவும் பிறகு மூச்சை சாதரணமாக விட்டுக் கொண்டே கீழே குனிந்து கைகளால் தரையை தொட வேண்டும் அப்படி தொடும்போது முழங்கால்கள் டைட்டாக இருக்க வேண்டும் முன்னே வரக்கூடாது.


மூச்சை விட்டுக் கொண்டே மார்பை முன்னே தள்ளி தலையை பின்னே தள்ள வேண்டும் கைகளை வளைக்கக் கூடாது.

பின்னேயுள்ள கால்களை டைட்டாக வைத்து முன்னேயுள்ள காலை மடக்கி முழங்கைகளை முழங்காலின் வெளியே வைத்து இடுப்பை திருப்ப வேண்டும் இதை அப்படியே எதிர்மறையாக செய்ய வேண்டும்.

                                    

                                    
                                
                                    

                         


கைகளை வளைக்காமல் நேர்க்கொட்டில் நீட்டி முழங்கால்கள் வளையாமல் டைட்டாக வைத்து பாதங்களின் பின்புறம் தரையை தொட வேண்டும்(மூச்சை சாதரணமாக விடவும்)
                                                                                                                                                                                             
கடைசியாக
மேலேயுள்ள வீடியோ முழுமையானது இல்லை அதனுடைய தொடர் இருக்கிறது பாதி வீடியோவை அடுத்த பதிவில் இடுகிறேன்.
எனென்றால் இதை முதலில் பழகிக் கொள்ளுங்கள்.

இப்பதிவில் எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.

Wednesday, March 23, 2011

கண்களை பாதுகாக்க,மூளை புத்துணர்ச்சி பெற எளிய உடற்பயிற்சி

 நான் உடற்பயிற்சி பதிவுகளை தனி பதிவாக இடலாம் என்று முடிவெடுத்திருந்தேன் ஆனால் நண்பர்கள் போனில் என்னை உரிமையோடு கடிந்து கொண்டார்கள் முதலில் ஒரு தளத்தை ஒழுங்க நடத்துங்கள் என்று சொன்னார்கள் அதனால் இந்த வலைப்பூவிலேயே உடற்பயிற்சி பதிவுகள் தொடர்கின்றன.

இப்பயிற்சியை பற்றி


நம் உணர்வின் இருப்பிடம் மூளை. அது ஒரு சதைக் கொத்து. நமது மண்டை ஒட்டினால் நன்கு மூடப்பட்டு பத்திரமான நிலையில் இருக்கின்றது இது. மூளைக்கும் நம் உடலிலுள்ள அவயங்கள் அனைத்திற்கும் தொடர்பு உண்டு.நம் உணர்வின் இருப்பிடமே மூளைதான்.எனவே இப்படிப்பட்ட நம் மூளையை நாம் நன்றாகப் பராமரித்து வர உதவுவதுதான் இந்த பயிற்சி.எவ்வளவு ரத்தத்தை நம் மூளைக்குக் கொண்டு செல்கிறோமோ,அவ்வளவுக்கு நம் மூளையில் தெளிவு ஏற்படும்.

இப்பயிற்சியை செய்முறை                                        இந்த வீடியோவை கவனித்து பாருங்கள்

இந்த வீடியோவில் உள்ளது போல் செய்ய முடியாதவர்கள் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யக்கூடிய எளிமையான முறை.
இப்பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.இப்பயிற்சியை முதன் முதலில் செய்பவருக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கும்.

2.இப்பயிற்சியை செய்யும்போது வேறொருவரின் துணை இருந்தால் ரொம்ப நல்லது. 

3.ஆரம்பத்தில் சுவற்றின் உதவியோடு கால்களை உயரத்தூக்கி பயிற்சி பெறுங்கள்.

4.இப்பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும் எனபது மிக மிக முக்கியம். மூச்சைக் கட்டுப்படுத்தாமல், தடையின்றி சுவாசிக்க வேண்டும்.

5. இப்பயிற்சியை ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும்

செய்முறை விளக்கம்:

இப்பயிற்சியை செய்யும்போது தலைக்கு நல்ல மென்மையான துனியை நான்காக மொத்தமாக மடித்து வைத்துக் கொண்டு முழங்கால் மண்டியிட்டு அமர்ந்து மடிக்கப்பட்ட துனியின் மீது கைவிரல்களைக் கோர்த்து முழங்கால்களை நிலத்தில் ஊன்றி உறுதியாக வைக்க வேண்டும். இது தலையைத் தரையில் நிலைக்கச் செய்வதற்கான களம் அமைப்பது போன்ற ஏற்பாடகும். அடுத்து தலையை வளைத்து கோர்த்த இரண்டு கைகளுக்கிடையே வைத்து ஊண்ற வேண்டும்.

கைகளால் பிடரியை கோர்த்து பிடித்துக் கொண்டு இடுப்பை மேலே உயர்த்தி,கால்களை தூக்க வேண்டும் உடல் வளைவின்றி நேராகத் தலைகீழ்,கால் மேலாக நிறுத்த வேண்டும். முதுகெலும்பு,முன் உடற் பகுதிகள் எல்லாம் செங்குத்தாக மேலேற வேண்டும்.

இப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்


இப்படி முறைப்படி பயிற்சி செய்யும்போது தலைகீழுள்ள பூமியின் பற்றி இழுக்கும் புவியிர்ப்பு விசையின் காரணமாக அதிகமான ரத்தம் மூளைக்கு இழுக்கப்படும். இச்சமயம் மூளையானது தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெறுகிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைகிறது.

இப்பயிற்சியினால் கண்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.தலைவலி,
ஜலதோஷம், தலைமுடி உதிர்தல், பல்வலி நீங்கும். சிலர் வாயுத் தொல்லையால் அவதிப்படுவர் இரத்த ஒட்டம் சிலருக்கு சில பகுதியில் சரியாக நடைபெறாது. அந்த பகுதிகளில் பக்கவாத நோய் ஏற்படும் அபாயம் உண்டு.இதனைப் போக இப்பயிற்சி செய்தால் போதும்.

தலையில் வழுக்கை விழும் வாய்ப்பு குறையும்.

சில முன்னெச்சரிக்கைகள்

இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும், கர்ப்பிணிகளும் இப்பயிற்சியை செய்யக் கூடாது. சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாது. மது அருந்தியவர்களும் செய்யக்கூடாது.இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.

   

Tuesday, March 22, 2011

நூறு பேர்(The 100) புத்தக அறிமுகம்

"100 பேர்" நூல் முதலில் வெளிவந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன
(இதன் தமிழ் முதல் பதிப்பு1998).இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் கான்பது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு.

The100 தமிழக்கம
நூலாசிரியர்ஹெச்.ஹார்ட்
பதிப்பாசிரியர்
மணவை முஸ்தபா
இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும்.மற்ற மனிதனின் அன்றாட வாழ்விலும் ஏற்ப்படுத்திய பாதிப்பின் மொத்த அளவினை கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் உலகின் மாபெரும் புகழ் வாய்ந்த100 நபர்களில் முதலிடத்தை முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்து முழு ஐரோப்பாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.சரியான செய்தியைக் கொண்டு சேர்த்தார்.இந்நூல் ஆசிரியர் கிறிஸ்துவர் என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம்.
இங்கு கணொளியாக ஆங்கில புத்தகத்தின் விளக்கம்
இனி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முதலிடத்திற்கு வருவதற்கு காரணமேன்ன என்பதை நூலாசிரியர் தனது முதல் அத்தியாயத்தில் சொல்வதை பார்ப்போம்.
1 முஹம்மது நபி (570-632)

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்;மற்றும் சிலர் “ஏன் அப்படி” என்று வினாவும் தொடுக்கலாம்: ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே ஆவார்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் தாக்கம் சக்திமிக்கதும்,எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பேற செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாக தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று:
கிரிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவர்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரனமாக இருந்தாலும், அதன் இறையமையிலை (THEOLOGY) உருவாக்கியதில் முதனமையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும்,புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான துய பவுல்தான்.(St.PAUL)

ஆனால் இஸ்லாத்தின் இறையமையியல் (THEOLOGY) அதன் அரநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அசமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொருப்பினை மேற்க்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தான்.

முஹம்மது நபி வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும்,கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன: அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன.எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும்,போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை.

ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவவத்தின் மீது ஏசுநாதரும்,தூய பவுலும் ஒருங்கினைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது:

மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல்,முஹம்மது நபி சமயத்தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவாரக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

இந்நூல் உலகளவிய இஸ்லாமிய அழைப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது


அஹ்மத் தீதாத் அவர்கள் The 100 புத்தகத்திலிருந்து
மேற்கோள் காட்டுகிறார்கள்

இப்படியே இந்த புத்தகத்தைப் பற்றி எழுதினால் பெரிய பதிவாகி விடும் அதனால் ஒரு சில குறிப்புகள் மட்டும்.

கிழேயுள்ள லிங்க்யில் the 100 ஆங்கில புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://docs.google.com/uc?
The 100 -Michael Hart.pdf - Google Docs

Saturday, March 19, 2011

தலைமுடி கொட்டுவதை நிறுத்த, முழு உடலும் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சி

   இன்று நான் சொல்லிக் கொடுக்க போகிற பயிற்சி மிக முக்கியமானது இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் மிகப்பெரும் பலனை அடைவீர்கள். இது முழு உடலுக்கான பயிற்சி.

இதனை யோக பயிற்சியாளர்கள் சர்வாங்காசனம் என்று அழைப்பார்கள்.
சர்வ+அங்க+ஆசனம்=சர்வங்காசனம். அங்கம் என்றால் உடற்பகுதி என்று பொருள்.சர்வம் என்றால் எல்லாம் என்று பொருள்.

இந்த பயிற்சி எப்படி முழு உடலுக்கும் பலன் அளிக்கிறது என்பதை பார்ப்போம்

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி.

இந்த சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருந்தால் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒன்றையொன்று தொடர்பு கொண்டு தொழில் புரியும் நம் உடலில் உள்ள கோளங்களில் ஒன்று கெட்டாலும்,மற்ற எல்லாக் கோளங்களும் பாதிக்கப்படும்.


தைராய்டு சுரப்பியின் வரைபடம்
தைராய்டு சுரப்பி

முக்கியமாக,கழுத்தில் குரல் வளையை ஒட்டினாற்போல் உள்ள தைராய்டு கோளமானது சிறுதாமரை இலையைப் போன்று தோற்றமுடையது.உடல் வளர்ச்சிக்கு இதன் ஆரோக்கியம் அவசியமாகும்.

இக் கோளமானது தனது பணியை ஒழுங்காகச் செய்யாவிடின்,மனித உருவத்தில் இருக்கும் அபூர்வ ஜந்துவாகத்தான் மனிதன் இருக்க வேண்டி இருக்கும். வளரவே மாட்டான்.இதன் விளைவாக பெண்கள் பெண்மையையும்,ஆண்கள் ஆண்மையையும் இழக்கின்றனர்.

இந்த தைராய்டு சுரப்பி முறையாக இயங்க இப்பயிற்சி உதவி செய்யும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு


1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்
ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.5.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

6.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

7.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.

8.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

9.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை


1.இப்பயிற்சியை செய்யத் தொடங்குவதற்கு முன்னர், ஏதாவது பேச வேண்டுமெனில் பேசிவிட வேண்டும்.ஏனெனின் இப்பயிற்சியை செய்யும்போது வாய்மூடியே இருக்க வேண்டும்.
(நீ மட்டும் பேசலாமா என்று கேட்காதீர்கள் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக பேசினென்)


2.வாயில் உமிழ் நீர் ஊறினால் கூட விழுங்கக் கூடாது. பயிற்சி மூடியும் வரை உமிழ் நீரை வாயில் வைத்துக் கொண்டு பயிற்சி முடிந்த பிறகு தான் உமிழ வேண்டும். அப்படி முடியவில்லையெனில் பயிற்சியை முடித்துக் கொண்டு பிறகு செய்யவும்.
      வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம்இந்த வீடியோவை நன்றாக கவனித்துப் பாருங்கள்


செய்முறை விளக்கம்:


முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் கால்களுடனும், உடலுடனும் சேர்த்தாற் போலும் நீட்டிக் கொள்ளவும்.
பின்னர், மூச்சைப் பிடித்துக் கொண்டு,சேர்த்து நீட்டி வைத்துக் கொண்டிருந்த இரண்டு கால்களையும் மேலே தூக்குங்கள். அப்படியே தூக்கிக் கொண்டே புட்டம் முதுகு முதலியவைகளையும் தூக்கி, இரண்டு கைகளையும் மடித்து இடுப்புக்குக் கீழே கொண்டு வந்து பிடித்து உடலை நேராய் நிமிர்த்தவும், தலை முன்பக்கம் குனிந்து முக வாய்க்கட்டை மார்பில் அழுத்தும்படி பார்த்துக் கொள்ளவும்.

கால்களை மேலே தூக்கும் போது மூச்சை விடக்கூடாது. கால்களை அகற்றக் கூடாது.

வாய் மூடியிருக்க வேண்டும். மூச்சை சாதாரணமாக விட்டுக் கொண்டு இருக்கவும். இப்பொழுது இப்பயிற்சி செய்பவரின் உடல் பாரமெல்லாம் நிலத்தின் மீதிருக்கும். தலை,கழுத்து தோள்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும்.

உடலின் பாரத்தை கைகளின் மீது சுமத்தக் கூடாது. அதற்குபிறகு இரத்தம் முகத்திலும் மயிர்கால்களிலும் இரத்த ஓட்டம் பாய்வதற்காக உங்களுடைய கால்களை சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்றுங்கள்.(ஆரம்பத்தில் பத்து முறை போதுமானாது)

பிறகு இரண்டு கால்களையும் நேராக வைத்து இடது காலை மேலே நிறுத்தி விட்டு வலது காலை மடக்காமல் கால்களை தலைக்கு நேராக இறக்கி தரையைதொடுங்கள் இப்படி இரண்டு கால்களைம் மாற்றி மாற்றி செய்யலாம்.
(இதுவும் ஆரம்பத்தில் பத்து முறை போதுமானாது)

சிலருக்கு எடுத்தவுடனே தரையை தொடுவதேன்பது முடியாது அவர்கள் சைக்கிள் ஓட்டுவது மட்டும் செய்தால் போதுமானாது பயிற்சி நன்றாக கைகூடிய பிறகு தரையை தொட முயற்சி செய்யுங்கள்.

இப்பயிற்சியை முடிக்கும் சமயம், இடுப்பின் அடியைத் தாங்கும் கைகளைத் தளர்த்தி, கைகளின் மேலே உடலை நழுவவிட்டுக் கொண்டே வந்து,கால்களை தரையில் வையுங்கள்.அதன்பின் கைகளை பக்க வாட்டில் நீட்டிக் கொண்டு சற்று இளைப்பாறிக் கொள்ளலாம்.

இரண்டு கால்களை மேலே தூக்குவது சுலபமாக இருக்கும். ஆனால் இடுப்பையும்,முதுகையும் சேர்ந்தாற் போல் தூக்குவது முடியாமல் சிரமமாய் இருக்கும். பிறகு நாளாக,நாளாகச் சரியாகி விடும். மிகவும் முடியாதவர்கள் சுவரின் உதவி கொண்டும் செய்யலாம்.

அதாவது-

கால்கள் இரண்டையும் சுவரில் சாய்த்து வைத்து தூக்கி, கைகளை மடக்கி முழங்கைகளை ஊன்றி, மூச்சைப் பிடித்து, இரண்டு குதிகால்களை மட்டும் சுவரில் படும்படியாக வைத்து, இடுப்பு, முதுகு இவற்றை நன்றாக தூக்க வேண்டும்.கைகளை இடுப்பில் கொடுத்து நன்றாகப் பிடித்துக் கொண்டு தூக்க வேண்டும். இப்படி பழகிய பின்பு சுவரின் உதவியின்றி இப்பயிற்சியை எளிதாக செய்யலாம்.

இப்பயிற்சியால் எற்படும் பலன்கள்:


இதனால் முதுகு,கழுத்து, முழங்கால் இவற்றில் வலி ஏற்படலாம். நாளாக நாளாகச் சரியாகிவிடும்.


இப்பயிற்சியினால் முடி கொட்டுவது நின்று முடி நன்றாக வளரும்.இது முதுமையை சீக்கிரம் வரவிடாது தடுக்கும் ஆற்றல் உடையது.தொண்டையில் சதை வளர்வதைத் தடுக்கும்.


தைராய்டு கோளமானது சரிவர வேலை செய்யுமாயின் ஆளை வளர்த்து. இளமையைக் காக்கும்.ஆண்களைக் காட்டிலும் தைராய்டு கோளமானது பெண்களுக்குத்தான் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்,பிரசவம்,குழந்தைகளுக்குப் பால் கொடுத்தல் போன்றவை இவை துனையுடன் தான் செயல்படும். இத் தொந்தரவுகள் இல்லாதிருக்க,பெண்களும் இப்பயிற்சியை மேற்கொள்ளுதல் மிகுந்த பயனைத் தரும்.


இந்த பயிற்சியை செய்வதன் மூலம் இனப்பெருக்க உறுப்புகளில் தோன்றக்கூடிய அனைத்துப் பிணிகளையும் வரவொட்டாமல் தடுத்துக் கொள்ளலாம். இரத்த அழுத்தம் இருதய வியாதி,யானைக்கால் வியாதி, பொன்னுக்கு வீங்கி, காக்காய் வலிப்பு போன்றவையும் இப்பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்து வருபவர்களிடம் வரவே பயப்படும்.இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.

    
Thursday, March 10, 2011

கணினியில் இருந்து கண்களைப் பாதுகாக்க எளிய பயிற்சி முறைகள்.

  பெண்கள் வீட்டின் கண்கள், கண் போல் பாதுகாப்போம் இது போன்ற பழமொழிகளுக்கும், கண்ணை மையப்படுத்தி எழுதப்படுகின்ற பாடல்களுக்கும் கவிதை வரிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த அளவுக்கு கண் என்பது மிக முக்கியமான உறுப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனை நாம் சரியான முறையில் பாதுகாக்கிறோமா? அதற்கான பயிற்சிகள் செய்கிறோமா?

எந்த ஒரு விஷயமும் அது நம்மிடம் இல்லாத போதுதான் அதனுடைய மதிப்பு விளங்கும். ஒரு நிமிடம் கண்களைக் கட்டிக்கொண்டு அலுவலகத்தில் அல்லது வீட்டில் நடந்துப் பாருங்கள் முழு வாழ்க்கையும் இருண்டுவிட்ட மனநிலையை உணர்வீர்கள்.


ஒரு காலத்தில் விளையாட்டு பொழுதுபோக்கு என்றால் அது முழு உடல் சார்ந்து இருக்கும் ஆனால் இன்று விளையாட்டு, பொழுதுபோக்கு அனைத்துக்கும் கணினியைச் சார்ந்துதான் இருக்கிறோம்.
கணினியில் நிறைய நண்மைகள் இருந்தாலும் அது முதலில் முதலில் காவு வாங்குவது நமது கண்களைத்தான்.


சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

எப்படி காலையில் எழுந்ததும் பல் துலக்குவது என்பது நடைமுறைப் பழக்கத்தில் இருக்கிறதோ அதேபோன்று மற்ற உறுப்புகளுக்கும் செய்யவேண்டிய பயிற்சிகளையும் நடைமுறை பழக்கமாக மாற்றிக் கொண்டால் பற்களை விட முக்கியமான உறுப்பான கண்களை பாதுகாத்து விடலாம்.

பயிற்சிக்குள் நூழையும் முன்

காலையிலும் மாலையிலும் ஐந்து நிமிடங்கள் நம் கண்களுக்காக ஒதுக்கி கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்யலாம். நாள் முழுவதும் நமக்காக வேலை செய்யும் கண்களுக்காக ஒரு நாளில் பத்து நிமிடம்கூட ஒதுக்கவில்லை என்றால் எப்படி

இந்த பயிற்சியை எப்போது வேண்டுமானலும் செய்யலாம் கணினியில் நீங்கள் இருக்கும் போது 20 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த பயிற்சிகளை செய்துவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் கைகளை நீட்டி செய்ய வசதி இல்லையென்றால், கைகளை நீட்டாமல் கண்களை சுழல விடுங்கள்.
.(செய்து பாருங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள்)

சரி வாங்க, இப்ப பயிற்சிக்குள் நூழைவோம்


              இந்த வீடியோவை நன்றாக கவனித்து பாருங்கள்
செய்முறை விளக்கம்:
1. நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை தோள்களுக்கு நேராக நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண் பார்வையை மட்டும் திருப்பி வலது கட்டைவிரலை பாருங்கள். பின்பு இடதுகட்டைவிரலை பாருங்கள். இப்படி 20 முறை பார்க்கவும்(வலதைப் பார்த்து இடதை பார்ப்பது ஒருமுறை என்ற கணக்கில்)


2.அதன் பிறகு இடதுகட்டைவிரலில் ஆரம்பித்து வலது கட்டைவிரலை பார்க்கவும் இதுவும் 20 முறை


3.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதிப் பத்தில் வேகமாக செய்ய வேண்டும்
இந்த வீடியோவையும் நன்றாக கவனித்து பாருங்கள்
(இது இரண்டாவது சுழல் பயிற்சி முறை)

1.நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண் பார்வையை மட்டும் திருப்பி வலது கட்டை விரலை   பாருங்கள். பின்பு தரையை பாருங்கள். பிறகு இடதுகட்டைவிரலைப் பாருங்கள். பிறகு மேலே மேற்கூரையை பாருங்கள்.

2.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதிப் பத்தில் வேகமாக செய்ய வேண்டும் (மோத்தம் 20 முறை செய்ய வேண்டும்)
.
      எதிர்மறையாக செய்யக்கூடிய இந்த வீடியோவை கவனித்து பாருங்கள்

இந்த வீடியோ செய்முறை விளக்கத்தில் சிறு பிழை நிகழ்ந்து விட்டது
(சுட்டிக் காட்டிய சகோ. ராஜவம்சம் அவர்களுக்கு நன்றி)
கீழே உள்ள விளக்கத்தைப் படித்து அதன்படி மாற்றி செய்யவும்

1. நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை தோள்களுக்கு நேராக நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண்பார்வையை மட்டும் திருப்பி முதலில் இடது கட்டைவிரலைப் பாருங்கள். பிறகு தரையை பாருங்கள். பிறகு வலது கட்டைவிரலை பாருங்கள். அப்புறம் மேற்கூரையை பாருங்கள்.

2.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதி பத்தில் வேகமாக செய்ய வேண்டும் (மோத்தம் 20 முறை செய்ய வேண்டும்)

கண்களை வேகமாக சுழல விட வேண்டும்
இந்த புகைப்படத்தில் உள்ளது போன்று

பயிற்சி முடிந்த பிறகு 

கைவிரல்களை சூடு பறக்க தேய்த்து விட்டு கண் இமைகளின் மீது மெதுவாக
(பொத்துவது போல்) தடவி விடவும்.

இந்த பயிற்சியினால் ஏற்ப்படக்கூடிய பலன்கள்:

-இந்த பயிற்சின் மூலம் கண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது.

-கண்களை சுற்றியிருக்கின்ற நரம்புகளுக்கு நல்ல வேலை கொடுத்து அவைகளை செயல்பட வைக்கிறது.

-கண்களில் கருவளையத்தை போக்கி விடும்.

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பலனை உடனடியாக உணர்வீர்கள்!

பதிவு எழுதுபவர்கள், ஐ.டி துறையில் உள்ளவர்கள், வீடியோ கேம் பார்க்கும் சிறுவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய பயிற்சி.

வாழ்வில் ஒளி பெற கண்ணொளி அவசியம். கண்களை 'கண்களைப்போல்' போற்றிப் பாதுகாப்போம்!

இறுதியாக,


இதை விட முக்கியமான பயிற்சி ஒன்று இருக்கிறது அதை அடுத்த பதிவில்
சொல்லித் தருகிறேன் அந்த பயிற்சியின் மூலம் மூளை நன்கு புத்துணர்ச்சி பெறும். முடி கொட்டுவது நின்று, முடி நன்றாக வளரும்.

அந்த பயிற்சியை நீங்கள் ஒரளவுக்கு ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

 இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.
     

Thursday, March 3, 2011

நான் புரிந்து கொண்ட நபிகள்-அ.மார்க்ஸ், புத்தக அறிமுகம்

ஆசிரியர்:அ.மார்க்ஸ்
கருப்பு பிரதிகள்
45A,இஸ்மாயில் மைதானம்
லாயிட்ஸ் சாலை,சென்னை-5
ரண்டு அம்சங்களை இங்கே குறிப்பிட வேண்டியவை. பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மரணத்திற்குப் பிந்திய ஒரு வாழ்வை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் மதமன்று. ஒரு மத நிறுவனத்தை மட்டுமின்றி இவ்வுலகிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு
சமூகத் திட்டத்தையும் முன் வைத்து இயங்குவதால் அது மிகுந்த செயலூக்கத்துடன் வரலாற்றில் தலையிடுகிறது.

அதுபோலவே நபிகள் ஒரு வெறும் இறைத்தூதர் மட்டுமன்று. அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும்கூட. வாளெடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.

அவரின் அன்றாட வாழ்க்கை, உரையாடல்கள்,வெற்றிகள், தோல்விகள், மாண்புகள், பலவீனங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நம்பத் தகுந்த, எல்லோரும் ஏற்றுக் கொண்ட வரலாற்று ஆவணங்களாக அவை உள்ளன.இறைத்தூதர் முஹம்மதின் வாழ்வை அறிய அறிய அவரின் மானுடத் தன்மையில் நான் என் உளம் இழந்தேன். அவரது ஆளுமையில் கரைந்து போனேன்.

மானுடராய் நம் முன் வாழ்ந்ததன் விளைவாகவும் சமகால வரலாற்றில் செயலூக்கமிக்க ஓரங்கமாக விளங்கியதன் விளைவாகவும் அவரின் வாழ்வு வண்ண மயமானதாக அமைகிறது. ஏராளமான சம்பவங்கள். ஏராளமான மனிதர்கள்.

நகைச்சுவை பேசி நண்பர்களோடு சிரிக்கிற ஒரு ஏசு நாதரையோ, புத்தரையோ நாம் பார்த்துவிட முடியாது.சிரித்து மகிழ்கிற, அழுது குலுங்கிற, காதல் வயப்படுகிற, மன்னிக்கும் மாண்புகள் நிறைந்த ஒரு மாமனிதராக முஹம்மது நபிகள் நம்முன் நிற்கிறார்.

முன்னுரை பகுதியில் அ. மார்க்ஸ் அவர்களுக்கே உரித்தான எழுத்தாற்றலோடு எழுதியவைகள்.

இனி இந்த புத்தகத்தில் என்னைக் கவர்ந்த நான் கோடிட்ட வரிகள் உங்கள் பார்வைக்கு


எங்களைப் பொருத்தமட்டில் நபிகளையும் இஸ்லாமையும் நோக்கி நாங்கள் ஈர்க்கப்பட்டதற்கு இறையியல் சார்ந்த காரணங்களைக் காட்டிலும் அரசியல் சார்ந்த காரணங்களே முதன்மை பெறுகின்றன. அரசியல் மற்றும் சமூகவியல் அடிப்படையில் நம்மை ஈர்க்கக்கூடிய தகுதி இன்றைய பெருமதங்களில் இஸ்லாமுக்கு மட்டுமே உண்டு.

மதங்களின் சமூகவியலைப் பற்றி ஆய்வு செய்கிறவர்கள் இஸ்லாம், பவுத்தம்,கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களை மட்டும் மனிதகுல முழுமைக்குமான மதங்கள் (Universal Religions)என்பார்கள். நாடு, இனம், மொழி,சாதி எல்லாவற்றையும் கடந்து யாரொருவரும் எந்தக் கணத்திலும் இம்மதங்களுக்குள் சரண் புக முடியும்.

இம்மூன்று மதங்களிலும் கூட இஸ்லாம் தனித்துவமாக விளங்குவதற்கு காரணம் அது மட்டுமே தன்னை அண்டியவர்களுக்கு இந்த மண்ணிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூகத் திட்டத்தை முன் வைக்கிறது. தன்னை ஏற்று வந்தவர்களுக்கான ஒரு மத நிறுவனத்தை (Church/சங்கம்)  அமைப்பதைப் பற்றி மட்டுமே கிறிஸ்தவமும், பவுத்தமும் பேசின.

இவ்விரு மதங்களையும் நிறுவிய இயேசும், புத்தரும் நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டக்கூடிய ஒரு அரசைத் தாமே உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லாதவர்களாக இருந்தனர். எனவே நிலவும் அரமைப்புகளுடன் அவர்கள் நிறுவிய மதமும் அவர்களும் சமாதானமாகிப் போனார்கள்; சமரசம் செய்து கொண்டார்கள்.

நிலவுகிற அரசமைப்பிற்குக் கட்டுப்படுதலைக் கிறிஸ்தவம் எப்போதும் போதித்து வந்தது. தான் வாழ்ந்த காலத்திலேயே புத்தர் அரசுகளோடும், ஆதிக்க சக்திகளோடும் பல சமரசங்களைச் செய்து கொண்டார். சமூகத்திலுள்ள ஆதிக்க சக்திகளின் நிர்ப்பந்தம் வந்தபோது கடனைத் தீர்த்துவிட்டு வருகிறவர்களுக்கு மட்டுமே சங்கத்தில் இடம் உண்டு என்றார். அடிமைகளுக்கு இடமில்லை என்றார்.


கொல்லாமையைப் போதித்த புத்தர் ஒரு கட்டத்தில் அரசப் படைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தார்.அன்று உருவாகி வந்த முடியரசு ஒன்றால் அவர் பிறந்த சாக்கிய சமூகம் அவரது கண்முன் அழிக்கப்படுவதை ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே புத்தரால் முடிந்தது.


ஆனால் இஸ்லாமோ அரசுகளற்ற இனக்குழுச் சமூகங்கள் மத்தியில் ஒரு சிறிய பிரிவாக உருவாகி ஒரு இயக்கமாகப் பரிணமித்து, ஏக இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்கிற கருத்தியலைப் பிரச்சாரம் செய்து, எண்ணற்றத் தியாகங்களை மேற்கொண்டு ஒரு கட்டத்தில் புலம் பெயர்ந்து, கொண்ட கொள்கைக்காகப் போராடி, அவற்றை நிறுவுவதற்கான ஒரு அரசியல் கட்டுமானத்தை (அரசை) உருவாக்கியது.

மறுமை குறித்த உயர் நோக்கங்களோடு நில்லாமல், இம்மையில் சமத்துவத்தையும், நீதியையும் நிலைநாட்டும் செயல் திட்டங்களும் கொண்டு இயங்கியதால்தான் இங்கேயே தோன்றிய மதங்களாயினும், வெளியிலிருந்து வந்தவையாயினும் இந்தியாவின் சாபக்கேடான வருணத்தையும், சாதியையும்,தீண்டாமையையும் ஒப்பீட்டளவில் வென்ற ஒரே மதமாக இஸ்லாம் மட்டுமே அமைந்தது.

இப்படி வித்தியாசமான கோனத்தில் அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துக்கள் ஜொலிக்கின்றன. அ. மார்க்ஸைப் பற்றி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை அதனால் இந்நூலை வெளியிட்ட கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் ஆசிரியர் அ.மார்க்ஸைப் பற்றி கொடுத்துள்ள குறிப்புகளை சுட்டிக் கட்டி இந்த நூல் அறிமுகத்தை முடித்துக் கொள்கிறேன்.


அ. மார்க்ஸ்மதங்களை முற்றிலும் நிராகரித்த பெரும் சிந்தனையாளர் பெரியாருக்குக் கூட இஸ்லாத்தின் மீது தனிக் கரிசனம் இருந்தது. இந்தச் சாதீயச் சமூகத்தில்  கலகமாக இஸ்லாம் மட்டுமே இருக்க இயலும் என்பதாலேயே அவர் இறுதி வரை மதமற்றத்தை வலியுறுத்தி வந்தார். அவரின் சாதியொழிப்புச் சமத்துவ நடவடிக்கைகளுக்குக் கையில் கிடைத்த நாயகர்களில் தலையாயவர் நபிகள் நாயகம். 

மற்ற மதங்களை அழிக்க முனைந்த பெரியார் இஸ்லாத்தை மட்டும் சீர்த்திருத்தப் பார்வையோடு, 'சந்தனக் கூடு வைக்காதீர்சமாதியை வணங்காதீர்என அதில் கலந்து போன மூடநம்பிக்கைகளை மட்டும் ஒழிக்க வேண்டுகோளிட்டதன் பின்னணியும் இதுவே. ஹிஜ்ரி ஆண்டு முறையைக் கடைப்பிடிப்போம்என்று கூடச் சொன்னார்.

பெரியார் முன்னிருந்த சமூகச் சூழல் இன்னும் பெரிதாய் மாறிவிடவில்லை.
இந்நிலையில் இப்பனியைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டவர் அ.மார்க்ஸ் எப்போதும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கருத்தியலோடு உற்ற நட்பைப் பேணி வருபவர் அவர்.விமர்சனங்களே இன்றி அதீத நிலை எடுத்துத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டுபவர் என்கிற குற்றசாட்டு கூட அவர் மீது உண்டு.

Wednesday, March 2, 2011

இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம்-புத்தக அறிமுகம்


இஸ்லாமை இன்றுசர்வதேசப் பயங்கரவாதமாகஅமெரிக்கா முன்னிறுத்திவருகிறது. இந்தியாவிலும் இந்துத்துவா சக்திகள் இஸ்லாமியரை எதிரியாகக் காட்டிவருகின்றன. சராசரி மனிதனிலிருந்து, “அறிவுஜீவிகள்வரை இஸ்லாம் குறித்து, தவறான தப்பெண்ணங்களே நிலவிவருகின்றன. இஸ்லாமியர் குறித்தும், ஒரு  பொய்யான பொதுப்புத்தி மக்களிடையே நிலவிவருகிறது. இஸ்லாம்- எதிர்ப்புச் சக்திகள் இந்தப் பொதுப்புத்தியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இஸ்லாமியர்கள் குறித்த தவறான எண்ணங்களைப் போக்குவது இன்று சனநாயக வாதிகளின் முக்கியக் கடமைகளில் ஒன்று.

இஸ்லாம் தோன்றியதின் சமூகப் பின்னணி, அதன் வரலாற்றுப் பங்களிப்பு ஆகியன குறித்து இந்நூல் வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துரைக்கிறது. இஸ்லாம் குறித்து இசுலாம்-அல்லாதவர்கள் மத்தியில் நிலவிவரும் தவறான கருத்துக்களை மாற்றாமல், அடிப்படையில் ஒரு சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியாது என இந்நூல் ஆசிரியர் உறுதியாகக் கருதுகிறார். அந்த வகையில் இந்துக்கள் மத்தியில் நிலவிவரும் தப்பெண்னங்களை நீக்க இந்நூல் பெருமளவு உதவும்.

இஸ்லாமை உயர்த்திப் பிடிப்பது எங்கள் நோக்கமல்ல. மாறாக ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள தவறான கருத்துக்களைக் களைந்தெறிய உதவுவது சனநாயக வாதிகளின் கடமை என்ற முறையில் இந்நூலை வெளிக்கொணர்ந்துள்ளோம்.

இந்த வரிகளை படித்தப் பிறகு இப்புத்தகம் எத்தகைய தன்மையுடையது யாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதை ஊகித்திருப்பீர்கள் இஸ்லாமிய எழுத்தாளர்களைவிட சில சந்தர்ப்பங்களில் மற்று சித்தாந்த கொள்கையுடைய எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு இஸ்லாத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை இப்புத்தகத்தைப் படித்தால் தெரிந்துக் கொள்வீர்கள்.

இப்புத்தகத்தின் சிறப்பம்சம் வரலாற்றுச் சான்றுகளை ஆதாரபூர்வமாக இந்தூல் பேசுகிறது ஒரு விடயத்தை சொன்னால் அதற்கான ஆதாரத்தையும் இந்நூல் சுட்டிக் காட்ட தவறுவதில்லை.

இந்நூலின் ஆசிரியரைப் பற்றி

எம்.என்.ராய் அவர்கள்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் 1887-ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாளன்று எம்.என்.ராய் பிறந்தார்
இவர் சோவியத் ருசியாவிற்கு வெளியில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் என்ற பெயர் எடுத்தவர்.

1920இல் சூலை-ஆகஸ்ட் மாதங்களில் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில்.லெனினால் தயாரிக்கப்பட்டிருந்த ஆய்வுக் கட்டுரையும் ராயால் தயாரிக்கப்பட்டிருந்த ஆய்வுக் கட்டுரையும்,கம்னியூஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில் அதன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. மாநாடு இரண்டு ஆய்வுக் கட்டுரையையுமே ஏற்றுக் கொண்டது.

இவரது அரசியலை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒரு தீவிர தேசியவாதியாக தன் அரசியல் வாழ்க்கையை துவக்கிய இவர், அதே தீவிரத்தோடு ஒரு கம்யூனிஸ்டாக மாற்றம் பெற்று, பின் இறுதியில் ஒரு ஆக்கப்பூர்வமான தீவிர மனிதநேயவாதியாக விளங்கினார்.


இனி இந்நூலில் வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாத்தின் வரலாற்றுப் பாத்திரம் குறித்து எழுதிய குறிப்புகளையும் நான் கோடிட்ட பக்கங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இஸ்லாமின் நம்ப முடியாத வெற்றிக்கு ஆன்மீக காரணங்கள் இருந்தது போலவே, சமூகஅரசியல் காரணங்களும் இருந்திருக்கின்றன. இந்த முக்கியமான கருத்திற்கு ஜிப்பனின் பின்வரும் கூற்று சான்றாக விளங்குகிறது


"அன்றைய ஜொராஸ்டரின் மதத்தைக் காட்டிலும் மிகத் தூய்மையானதும் மோசஸின். கட்டளையைக் காட்டிலும் மிகத் தாரளப் பன்பும் கொண்டிருந்ததுமான, முகம்மதுவின் மதமானது பகுத்தறிவுக் கருத்தோடு மிகக்குறைவான முரண்பாட்டையும், ஏழாம் நூற்றாண்டின்போது கிறித்துவத்தின் எளிமையை எள்ளி நகையாடி வந்த மாயாவாதம், மூடநம்பிக்கை ஆகிய நம்பிக்கைகளோடு அதிக முரண்பாட்டையும் கொண்டிருந்தாகத் தோன்றுகிறது.
(நூல்: ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்)

இஸ்லாமின் கண்கவர் வெற்றிக்கு அதன் தொடக்க காலத் தொண்டர்களின் இராணுவ வலிமையைக் காட்டிலும், அதன் விடுதலை, சமத்துவக் கோட்பாடுகளே காரணமாக இருந்திருக்கிறது என்ற உண்மைக்கு மற்றொரு வரலாற்றாசிரியர் பின்வரும் சான்றை முன் வைக்கிறார்:

அராபியர்கள் வெற்றி கண்ட ஒவ்வொரு கிறித்துவ நாட்டின் விசயத்திலும் வரலாறு வாய்ப்புக் கேடாக ஒரு செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. அராபியர்கள் முன்னேறிச் செல்ல அந்நாட்டு மக்கள் சாதகமாக இருந்ததே அவர்களது வெற்றிக்குரிய காரணமாக  இருந்திருக்கிறது.
அரபு வெற்றியாளர்களைக் காட்டிலும் பெரும்பாலான கிறித்துவ அரசுகளின் நிர்வாகம் மிக மோசமான ஒடுக்குமுறை கொண்டதாக இருந்திருக்கிறது என்ற செய்தியானது அந்த அரசுகளுக்கு அவமானம் தரும் ஒரு செய்தியாகும்…..சிரியா நாட்டு மக்கள் முகம்மதுவின் சீடர்களை வரவேற்றார்கள்.

எகிப்தின் காப்டுகள்(மரபு வழி கிருஸ்த்தவர்கள்) அரபுகளின் ஆதிக்கத்தின் கீழ் தங்களைத் தாங்களே ஒப்படைத்துக் கொண்டனர். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பெர்பர்கள், ஆப்பிரிக்காவை வெற்றி கொள்ள அரபுக்களுக்கு உதவி புரிந்தனர் இந்த நாடுகள் அனைத்தும் கான்ஸ்டான்டிநோபிள் அரசின் மீது கொண்டிருந்த வெறுப்பின் காரணமாக, தங்களை முகம்மதியர்களின் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துக் கொண்டார்கள்.
(பின்லே-“பைசாண்டியப் பேரரசின் வரலாறு)

கிறித்துவ மூட நம்பிக்கையால்.கிரேக்க அறிஞர்கள் பண்டைய கல்வி நிலையப் பதவிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்த கிரேக்க அறிஞர்களை கலீபாக்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர். இவர்களின் பணிக்கு உயரிய மரியாதை கிட்டி வந்தது.

அறிவாளிகள் பற்றி கலீபா அல்மேனஸ் சொல்லிருந்த கருத்துக்களை, அரபு வரலாற்றாசிரியரான அபுல்பேரானகயஸ் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.

"அறிஞர்கள்(ஆலீம்கள்) நபிமார்களின் வாரிசுகள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. அவனின் சிறந்த,மிகப்பயனுள்ள ஊழியர்களும் இவர்களே.இவர்கள் பகுத்தறிவு நுட்பங்களை வளர்த்துக் கொள்வதற்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
(நூல்:ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்) இசுலாமும் இந்தியாவும் என்ற அத்தியாயத்தில்

பார்ப்பனிய ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைக்குள்ளாகியிருந்த ஜாட்டுகள் இன்னும் இதர விவசாயச் சாதிகளின் உதவியோடு தான் முகம்மது பின் காசிம் சிந்துப் பகுதியை வெற்றிக் கண்டார்.(எலியட்:”இந்திய வரலாறு”)

பண்டைய இந்துப் பண்பாட்டின் உறுதியான ஆர்வலரான ஹேவல் முஸ்லிம்கள் மீது அனுதாபமோ அல்லது அவர்கள்பால் இரக்கமோ காட்டதவர்.இந்தியாவில் இஸ்லாம் பரவியது குறித்து அவர் முன்வைத்துள்ள சுவையான சான்று பின்வருமாறு:

இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டவர்களுக்கு,நீதிமன்றத்தில்,ஒரு முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனைத்து உரிமைகளும் கிடைத்து வந்தன. அங்கு நீதிமன்றங்களில் அராபியச் சட்டங்களையோ, பழக்க வழக்கங்களையோ அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. குர்-ஆனே அனைத்து வழக்குகளையும் தீர்மானித்து வந்தது. மதமாற்றம் என்ற இந்த வழிமுறையானது இந்துச் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடையே குறிப்பாக, பார்ப்பனியத்தின் கடுமையான விதிமுறைகளால்அசுத்தமான வர்க்கங்கள்எனக் கருதப்பட்டு வந்த மக்களிடையே வலுவான பாதிப்பைச் செலுத்தி வந்தது.
(ஹேவல்- நூல்: இந்தியாவில் ஆரிய ஆட்சி)

கடுமையான முஸ்லிம்- எதிர்ப்பு வெறி கொண்ட ஹேவலே கூட வெறுப்போடு ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார். அது பின் வருமாறு

இந்து சமூக வாழ்வின் மீது முஸ்லிம்கள் அரசியல் கோட்பாடு செலுத்திய பாதிப்புகள் இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தன.
ஒன்று, அது சாதி அமைப்பின் உக்கிரத்தை அதிகப்படுத்தி,அதற்கு எதிராக ஒரு கலகத்தைத் தட்டி எழுப்பியது.பெடோயின்களுக்கு(Bedoins காட்டரபிகள்) அது காட்டியிருந்த  மனதைக் கவரும் மயக்கத்தைப் போலவே இந்துச் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் எதிர்காலம் குறித்து ஒரு கவர்ச்சியை அது காட்டியிருந்தது.. இஸ்லாம் சூத்திரனை ஒரு சுகந்திர மனிதனாக்கி அவனை உள்ளார்ந்த விதத்தில் பார்ப்பனர்களின் எசமானனாக உருவாக்கியது. இதில் சிலர் தங்கள் சுயமான மேதமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். மறுமலர்ச்சியை போலவே இதுவும் சாராம்சத்தில் ஒரு நகர வழிபாடாக இருந்தது. நாடோடிகளை அவர்கள் கூடாரத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. சூத்திரனை கிராமத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. வாழ்க்கையில் முழு இன்பக் கிளர்ச்சி கொண்ட ஒரு மனிதகுல வகையை இது வளர்த்தியிருந்தது.
(ஹேவல்- நூல்: இந்தியாவில் ஆரிய ஆட்சி)

இப்படி புத்தகம் முழுவதும் வரலாற்று ஆதராங்களோடு விளக்கியிருக்கிறார் இஸ்லாத்தை ஆய்வுரீதியாக விளங்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்
அதே சமயத்தில் இப்புத்தகத்தில் ஒரு சில குறைபாடுகள் இல்லாமலில்லை

நூலின் பெயர்: இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்
ஆங்கில ஆசிரியர்: எம்.என்.ராய்
தமிழாக்கம்:வெ.கோவிந்தசாமி
வெளியீடு:
விடியல் பதிப்பகம்
3.மாரியம்மன் கோயில் வீதி
உப்பிலிப்பாளையம்
கோவை-641015