Wednesday, March 23, 2011

கண்களை பாதுகாக்க,மூளை புத்துணர்ச்சி பெற எளிய உடற்பயிற்சி

 நான் உடற்பயிற்சி பதிவுகளை தனி பதிவாக இடலாம் என்று முடிவெடுத்திருந்தேன் ஆனால் நண்பர்கள் போனில் என்னை உரிமையோடு கடிந்து கொண்டார்கள் முதலில் ஒரு தளத்தை ஒழுங்க நடத்துங்கள் என்று சொன்னார்கள் அதனால் இந்த வலைப்பூவிலேயே உடற்பயிற்சி பதிவுகள் தொடர்கின்றன.

இப்பயிற்சியை பற்றி


நம் உணர்வின் இருப்பிடம் மூளை. அது ஒரு சதைக் கொத்து. நமது மண்டை ஒட்டினால் நன்கு மூடப்பட்டு பத்திரமான நிலையில் இருக்கின்றது இது. மூளைக்கும் நம் உடலிலுள்ள அவயங்கள் அனைத்திற்கும் தொடர்பு உண்டு.நம் உணர்வின் இருப்பிடமே மூளைதான்.எனவே இப்படிப்பட்ட நம் மூளையை நாம் நன்றாகப் பராமரித்து வர உதவுவதுதான் இந்த பயிற்சி.எவ்வளவு ரத்தத்தை நம் மூளைக்குக் கொண்டு செல்கிறோமோ,அவ்வளவுக்கு நம் மூளையில் தெளிவு ஏற்படும்.

இப்பயிற்சியை செய்முறை



                                        இந்த வீடியோவை கவனித்து பாருங்கள்

இந்த வீடியோவில் உள்ளது போல் செய்ய முடியாதவர்கள் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யக்கூடிய எளிமையான முறை.




இப்பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.இப்பயிற்சியை முதன் முதலில் செய்பவருக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கும்.

2.இப்பயிற்சியை செய்யும்போது வேறொருவரின் துணை இருந்தால் ரொம்ப நல்லது. 

3.ஆரம்பத்தில் சுவற்றின் உதவியோடு கால்களை உயரத்தூக்கி பயிற்சி பெறுங்கள்.

4.இப்பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும் எனபது மிக மிக முக்கியம். மூச்சைக் கட்டுப்படுத்தாமல், தடையின்றி சுவாசிக்க வேண்டும்.

5. இப்பயிற்சியை ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும்

செய்முறை விளக்கம்:

இப்பயிற்சியை செய்யும்போது தலைக்கு நல்ல மென்மையான துனியை நான்காக மொத்தமாக மடித்து வைத்துக் கொண்டு முழங்கால் மண்டியிட்டு அமர்ந்து மடிக்கப்பட்ட துனியின் மீது கைவிரல்களைக் கோர்த்து முழங்கால்களை நிலத்தில் ஊன்றி உறுதியாக வைக்க வேண்டும். இது தலையைத் தரையில் நிலைக்கச் செய்வதற்கான களம் அமைப்பது போன்ற ஏற்பாடகும். அடுத்து தலையை வளைத்து கோர்த்த இரண்டு கைகளுக்கிடையே வைத்து ஊண்ற வேண்டும்.

கைகளால் பிடரியை கோர்த்து பிடித்துக் கொண்டு இடுப்பை மேலே உயர்த்தி,கால்களை தூக்க வேண்டும் உடல் வளைவின்றி நேராகத் தலைகீழ்,கால் மேலாக நிறுத்த வேண்டும். முதுகெலும்பு,முன் உடற் பகுதிகள் எல்லாம் செங்குத்தாக மேலேற வேண்டும்.

இப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்


இப்படி முறைப்படி பயிற்சி செய்யும்போது தலைகீழுள்ள பூமியின் பற்றி இழுக்கும் புவியிர்ப்பு விசையின் காரணமாக அதிகமான ரத்தம் மூளைக்கு இழுக்கப்படும். இச்சமயம் மூளையானது தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெறுகிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைகிறது.

இப்பயிற்சியினால் கண்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.தலைவலி,
ஜலதோஷம், தலைமுடி உதிர்தல், பல்வலி நீங்கும். சிலர் வாயுத் தொல்லையால் அவதிப்படுவர் இரத்த ஒட்டம் சிலருக்கு சில பகுதியில் சரியாக நடைபெறாது. அந்த பகுதிகளில் பக்கவாத நோய் ஏற்படும் அபாயம் உண்டு.இதனைப் போக இப்பயிற்சி செய்தால் போதும்.

தலையில் வழுக்கை விழும் வாய்ப்பு குறையும்.

சில முன்னெச்சரிக்கைகள்

இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும், கர்ப்பிணிகளும் இப்பயிற்சியை செய்யக் கூடாது. சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாது. மது அருந்தியவர்களும் செய்யக்கூடாது.



இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.

   

20 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    பயனுள்ள பதிவு. தொடருங்கள்.

    ReplyDelete
  2. சுவனப்பிரியன்

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    தொடர்கிறேன் சகோ

    நன்றி

    ReplyDelete
  3. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்March 23, 2011 at 11:26 PM

    ///////////நான் உடற்பயிற்சி பதிவுகளை தனி பதிவாக இடலாம் என்று முடிவெடுத்திருந்தேன் ஆனால் நண்பர்கள் போனில் என்னை உரிமையோடு கடிந்து கொண்டார்கள் முதலில் ஒரு தளத்தை ஒழுங்க நடத்துங்கள் என்று சொன்னார்கள் அதனால் இந்த வலைப்பூவிலேயே உடற்பயிற்சி பதிவுகள் தொடர்கின்றன.////////////////
    ரொம்ப டோஸ் வாங்கினாப்ல இருக்கு ஹா...ஹா...

    ReplyDelete
  4. Chitra

    தொடர்ச்சியான உங்களின் ஆதரவுக்கு

    நன்றி சகோ

    ReplyDelete
  5. ஐயா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மிக உபயோகமாய் இருக்கிறது. உங்கள்
    ஆலோசனை தேவை. என் மகனுக்கு வயது 19. ஆரோக்கியமாய் இருக்கிறான். ஆனால் எடை
    54 கிலோ. உயரம் 176 செ.மீ. எடை கூட என்ன செய்ய வேண்டும்? நன்கு சாப்பிட்டாலும் ஒல்லியாக
    இருக்கிறான். உடல் பயிற்சி கூடத்தில் மூன்று மாதம் பயிற்சி எடுத்தும் ஒன்றும் பயனில்லாமல்
    விட்டு விட்டான். ஸ்டாமினா அதிகரிக்கவும் எடை கூடவும் என்ன செய்யலாம்? நாங்கள் முட்டை
    கூட தவிர்க்கும் முழு சைவம். whey protein சாப்பிட்டால் எடை கூடும் என்கிறார்கள். செய்ற்கையாய்
    இப்படி செய்வது சரியா? உங்கள் பதில் வேண்டி,
    உஷா

    ReplyDelete
  6. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    //ரொம்ப டோஸ் வாங்கினாப்ல இருக்கு ஹா...ஹா...//

    ஆமா சகோ கொஞ்சம் ஒவர் டோஸ் தான்

    ReplyDelete
  7. சகோதரி உஷா அவர்களுக்கு

    //ஐயா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மிக உபயோகமாய் இருக்கிறது.//
    நன்றி சகோதரி

    // உங்கள்
    ஆலோசனை தேவை. என் மகனுக்கு வயது 19. ஆரோக்கியமாய் இருக்கிறான். ஆனால் எடை
    54 கிலோ. உயரம் 176 செ.மீ. எடை கூட என்ன செய்ய வேண்டும்? நன்கு சாப்பிட்டாலும் ஒல்லியாக
    இருக்கிறான். உடல் பயிற்சி கூடத்தில் மூன்று மாதம் பயிற்சி எடுத்தும் ஒன்றும் பயனில்லாமல்
    விட்டு விட்டான். ஸ்டாமினா அதிகரிக்கவும் எடை கூடவும் என்ன செய்யலாம்?//

    சிலருக்கு மரபனு காரணமாக இருக்கும்
    மரபனு கோளறுகளை எந்த பயிற்சியாலும் யோகவாலும் மாற்ற முடியாது இவருடைய தந்தை அல்லது தாத்தா இந்த வயதில் இப்படிதான் இருந்தார் என்றால் இவரும் அந்த வயதில் அப்படித்தான் இருப்பார்.

    உதரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளலாம் என்னுடைய தந்தை பார்வை குறைபாடு உடையவர் அதனால் நான் கண்ணடியில் இருந்து தப்ப முடியவில்லை.

    அப்ப பயிற்சிகள் எதற்கு?
    நமது தவறான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து இந்த பயிற்சிகள் நம்மை காப்பாற்றும்.

    //நாங்கள் முட்டை
    கூட தவிர்க்கும் முழு சைவம். whey protein சாப்பிட்டால் எடை கூடும் என்கிறார்கள். செய்ற்கையாய்
    இப்படி செய்வது சரியா?//

    அசைவம் சாப்பிட்டால் தான் எடை கூடும் என்பது தவறான நம்பிக்கை

    சைவ உணவிலேயே அதிக புரோட்டின் உள்ள பயறு வகைகள் உள்ளன

    இருபது கொண்டை கடலை நூறு கிராம் ஆட்டிறைச்சிக்கு சமமானது

    இது போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    விரைவில் இது சம்பந்தமாக ஒரு விரிவான பதிவு போடுகிறேன்

    நன்றி

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.ஹைதர் அலி, மீண்டும் ஒரு உடல் நலனுக்கான நல்லதொரு பதிவு. மிக்க நன்றி, மாஸ்டர்.

    ReplyDelete
  9. ஷர்புதீன்

    அண்ணே முடியால

    ReplyDelete
  10. முஹம்மத் ஆஷிக்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    மிக்க நன்றி, மாஸ்டர்

    மாஸ்டரா அப்ப சகோ இல்லையா?

    ReplyDelete
  11. master,
    enathu paiyan karathe class selkiran. avan adikkadi kaalmutti valikkirathu ena avathippatukiraan. yethaavathu payirchi irundhaal sollungal
    nandri

    ReplyDelete
  12. mugi அவர்களுக்கு
    கண்டிப்பாக வீடியோ கிளிப்போடு ஒரு பயிற்சி சொல்லி தருகிறேன்

    முழங்கால் வலிக்கு ஆட்டுக்கால் சூப் வராத்திற்கு ஒரு முறை செய்து கொடுங்கள் முழங்கால் உறுதி பேறும்

    நன்றி

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும்.

    பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    அருமையாக சொல்லி தந்து இருக்கின்றிகள் செய்து பார்ப்போம்.

    ReplyDelete
  15. ஆயிஷா அபுல். அவர்களுக்கு
    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    நன்றி சகோ

    ReplyDelete
  16. அந்நியன் 2 அவர்களுக்கு
    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    என்ன சகோ ஊருக்கு போயிட்டு வந்துட்டீகளா?

    நன்றி சகோ

    ReplyDelete
  17. மிகவும் பயனுள்ள பதிப்பு. இது போன்ற பதிவுகள் தொடரவும்.

    ReplyDelete
  18. @Sanjoy

    வருகைக்கு நன்றி தொடர்கிறேன்

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்.

    பயனுள்ள பதிவு

    ReplyDelete