Monday, May 30, 2011

உடற்பயிற்சியும் அவசர புத்தியும்.


 லை தெறிக்க ஓடி கொண்டிருந்தவனை ஒருவன் நிறுத்தி எதற்காக ஓடுகிறாய் என்று கேட்டானாம் அதற்கு ஒடிக் கொண்டிருந்தவன் எல்லோரும் ஓடுறாய்ங்ளா? அதான் நானும் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று பதில் சொன்னனாம்.

நண்பர் ஒருவர் என்னிடம் வந்தார் மாஸ்டர் இரண்டு மாதத்தில் ஊருக்கு வெக்கஸேன் போகிறேன் ஊருக்கு போனவுடன் திருமணம் அதனால் என்னுடைய தொந்தியை குறைத்து ஜெஸ்ட்ட கூட்டி கைகளில் ஆம்ஸ் வந்து நல்ல ஆரோக்கியமானவனாக மாறுவதற்கு உங்கள் வகுப்பில் பயிற்சி இருக்கிறதா என்று கேட்டார்.

அவருடைய அறியாமையை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது அவருக்கு உடற்பயிற்சி சம்பந்தமாக ஒரு சில விளக்கங்கள் கொடுத்தேன்.அதை உங்களோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
முதலில் ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.

வெளித்தோற்றத்தில் ஆம்ஸ் ஜெஸ்ட் இருந்து விட்டால் அது ஆரோக்கியமான உடலா?
ஆளாளப்பட்ட அர்னால்டு ஸ்வாஷ்நெகர் அவர்களால் கூட இருதய அறுவை சிகிச்சையிலிருந்து தப்ப முடியவில்லை இரண்டு முறை இருதய (பைபாஸ்) அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

சில தொழில்ரீதியான (ஜிம்) உடற்பயிற்சி நிலையங்களில் 6 மாதத்தில் உடலை ஒரு வழி பன்னி பாடி பில்டர் ஆக்கி விடுகிறோம் என்று சொல்லி இரும்புக் கருவிகளை பயன்படுத்தி ஒரளவுக்கு வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் வெளிப்புற தோற்ற அழகிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை உள்ளுருப்புகளுக்கு கொடுப்பதில்லை.

விளைவு அளவுக்கதிகமான பாரம் ஏற்றி வண்டியின் அச்சு முறிவது போல்
உடல் நலக் கேட்டை அறியாமல் பெற்றுக் கொள்கின்றனர்.

அதாவது உளுத்துப் போன கதவிற்கு அழகிய வண்ண பெயிண்ட் அடித்து புதிதான வலிமையான கதவு போல காட்டிக் கொள்ளும் உத்தி இது.

பிறருக்காக வாழதீர்கள். உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்யுங்கள். நாம் ஒன்றும் உடலை கட்டழாக்கி சினிமாவில் நடிக்க போவதில்லை. பிறருக்காக வாழ்வது வேதனையானது.

கிரவுண்ட் உடற்பயிற்சி யோகா இவைகள் நீண்ட நாட்களாக செய்தால் தான் பலன் கிடைக்கும் ஆனால் பலன் நிரந்தரமானது எதிர்வினை இல்லாதது. உள்ளுருப்புகளை பாதுகாத்து ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.

உங்களுக்கு புரியும் மொழியில் சொல்லுவதாக இருந்தால்.

ஒரு கம்யூட்டர் வாங்குகிறோம் (ஹார்டுவேர்) வெளித்தோற்றம் அழகாக இருக்கிறது ஆனால் (சாப்ட்வேர்) அத்தியாவசிய உள்ளுருப்புகள்  சரியில்லை என்றால் அந்த கம்பியூட்டரை புறக்கனிப்போம் அல்லவா.

யோகாவும் கிரவுண்ட் உடற்பயிற்சிகளும் உள்ளுருப்புகளை பேணி பாதுகாக்கும் ஆனால் சிறிது கால தாமதமாகும். ஆனால் துரதிஷ்டமாக நம்பிக்கையோடும் பொறுமையோடும் தினசரி தொடர்ச்சியாக உடற்பயிற்சி யாரும் செய்வதில்லை ரெடிமேட் உலகில் அனைத்தையும் ரெடிமேடாக பெற்றுக் கொள்ள ஆசைப் படுகிறார்கள். 

ஒரு வாகனமோ, ஒரு இயந்திரமோ சரியாக இயங்க வேண்டுமானால் அதற்கு இரண்டு முக்கியத் தேவைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே!
அதாவது –
1.அதன் உள்ளுறுப்புகள் பழுதுபடாது நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
2.அதை இயக்க விரும்பியவுடனே செயல்படுமாறு அதற்கு ஒரு லயம் (ரிதம்) இருக்க வேண்டும்.
உடலும் ஒர் இயந்திரமே. அது நன்கு இயங்க இந்த இரண்டு அம்சங்களையும் உடற்பயிற்சிகள் வெகு சிறப்பான முறையில் நிர்வகிக்கிறது.
நமது உடல் நலம் நல்ல, நிலையில் இயங்க அத்தியாவசியமான உள்ளுறுப்புகளை உடற்பயிற்சி செம்மைப்படுத்துகிறது.
எந்த இயந்திரமும் மூன்று நிலைகள் உண்டு.
1.வேகம், 2.மந்தம், 3.நிதானம். வேகமாக ஓடும் இயந்திரம் சீக்கிரத்தில் பழுதுபட்டு விடும். மந்தமாக ஓடும் இயந்திரம் அனைவராலும் புறக்கணிக்கப்படும்.
நிதானமாக ஓரே சீரில் ஓடும் இயந்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். நிதானம் எனப்படும் நடுவு நிலையே உடல் என்ற இயந்திரத்திற்கு அத்தியாவசியமானது.

உடற்பயிற்சிகளை பொறுத்த வரை அவசரப் பாடதீர்கள் பார்க்க எளிமையான பயிற்களாக இருந்தாலும் நிரந்தர பலன்களை அளிக்கக் கூடியவைகளை தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள். நடுநிலையை பேனுங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் ரோம்பவும் முருக்கேற்ற தேவையில்லை.

Thursday, May 19, 2011

ஜெயலலிதாவின் சாம, தான, பேத, தண்டத்தில் வீழ்ந்த இஸ்லாமிய இயக்கங்கள்.சாமம்- (சிறுபான்மையினரின் காவலர்) இன்சொல் கூறு; உறவாடி கெடு
தானம்- (பதவி, பணம், இலவசங்கள்) கொடுத்துக் கெடு 
பேதம்- மிரட்டி காரியம் சாதித்தல் அல்லது பயங்காட்டுதல்
தண்டம்- தண்டித்தல், அடித்தல் மெளரிய பேரரசர் சந்திர குப்தனின்பார்ப்பன அரசவையின் அமைச்சராக இருந்தசாணக்கியன், மேலே கூறிய இந்த நான்கு அடிப்படையில்தான் பார்ப்பன ஆட்சியை நிலைநாட்டினான் என்று வரலாறு சொல்லுகிறது. இதைஅர்த்த சாஸ்த்திரம்என்பார்கள். 

இந்த புத்தகத்தை படித்துப் பாருங்கள்.சாணக்கியனின் நயவஞ்சகம், நம்பிக்கை மோசடிஇவைகளை 'ராஜதந்திரம்' என்ற சொல்லோடு உங்களின் கண்முன் நிறுத்தும்.

சாணக்கியன் அப்படி உண்மையில் அப்படி செய்தானா அவன் சாதித்தானா என்பது கூட சந்தேகம்தான். ஆனால்செல்வி ஜெயலலிதாஇந்த சூத்திரத்தை அச்சு பிசகாமல் செய்யக்கூடியவர்.


சாமம் ‍ (சிறுபான்மையினரின் காவலர்) இன்சொல் கூறு; உறவாடி கெடு


கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்சிறுபான்மையினரின் விரோத அரசு'என்று கருணாநிதியைச் சாடியவர் தன்னை சிறுபான்மையினரின் காவலராக காட்டிக் கொண்டார். அதைவிடக் கொடுமை, விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக சிறைக்குள் தள்ளப்பட்ட வை.கோ. வின் வாயால்ஈழத்தாய்'என்று பட்டம் பெற்றார். உண்ணாவிரதம் இருந்து வை.கோ. கையால் பழச்சாறு குடித்தார். கடைசியில் இவர் வை.கோ.விற்கு அல்வா கொடுத்தது வேறு கதை.


தானம் - (பதவி, பணம், இலவசங்கள்) கொடுத்துக் கெடு 

இஸ்லாமிய இயக்கங்களான‌ த.த.ஜ, த.மு.மு.க இந்த இரு அமைப்புகளோடும் தானத்தில் இறங்கினார். த.மு.மு.க வுக்கு மூன்று பதவிகள் என்றால் த.த.ஜ. வுக்கு 5% இட ஒதுக்கீடு. த.மு.மு.க வின் பேரம் படிந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தேர்தல் அறிக்கையில் வெளியிடச் சொன்னார்கள். கலைஞர் அறிவித்த இலவசங்களை அப்படியே காப்பி அடித்து ஒன்றுக்கு இரண்டு என்று அறிவித்தவர், இடஒதுக்கீட்டை மட்டும் காரண காரியத்தோடு மறுத்ததால் அவர்கள் வெளியேறினாலும் த.மு.மு.க வின் பிரச்சாரத்தின் காரணமாக இடஒதுக்கீடு தருவார் என இஸ்லாமிய மக்களை நம்பவைத்தார். 


பேதம் - மிரட்டி காரியம் சாதித்தல் அல்லது பயங்காட்டுதல்

இதற்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை கேரளாவைப் போல் இரண்டு சீட், மூன்று சீட் வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்திருந்தால் மூன்றாவது படித்தரத்தை பயன்படுத்தியிருப்பார். நம் மக்கள் வாரி வழங்கி தனிப்பெரும்பான்மை பெறச் செய்துவிட்டபடியால் இனி நேராக தண்டம்தான். அதைத்தான் நரேந்திரமோடி விஷயத்தில் செய்தார்.
தண்டம் - தண்டித்தல், அடித்தல்.


நரேந்திர மோடியை பதவியேற்பு விழாவிற்கு வரவழைத்து முதல் அடியை முறைப்படி தொடங்கி வைத்தாலும், இன்னும் ஜெயாவிடம் நிறைய எதிர்பார்க்கலாம். ஆனால் அடி வாங்கிய‌ முனகல்கூட இல்லாமல் எப்படி இந்த இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன என்பதுதான் இன்றைய ஆச்சரியம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற ம.ம.க

த.மு.மு.க என்ற பெயரோடு இருந்தபோது மேடைகளில் 'அரசியலில் இறங்கினால் செருப்பைக் கழற்றி அடியுங்கள்' என்று வீரவசனம் பேசினார்கள். 'அல்லாஹ் மீது சத்தியமாக தேர்தலில் போட்டியிடமாட்டேம்' என்று சத்தியம் செய்தார்கள். ஆனால் ம.ம.க (மனிதநேய மக்கள் கட்சி) என்ற அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்து, தேர்தல் பாதையை தேர்ந்தேடுத்தார்கள்.


நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக வழியிலான போராட்டக் குழு அமைக்கப்பட்டு, அதற்கு 'ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி' (A.F.F) என பெயரிட்டு கறுப்புக் கொடியை கையில் ஏந்தி மரண வியாபாரி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லாஹ், இப்போது மோடி அழைக்கப்பட்ட பதவியேற்பு விழாவிற்கு ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கிற அளவுக்கு அரசியல் தெளிவு பெற்றுவிட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இவர்களும் எந்தவித போராட்டங்களும் அறிவிக்காமல் இருப்பது மர்மமாக இருக்கிறது. அவர்களுடைய இணைய தளத்தில் கூட இதைப்பற்றி எழுதவில்லையே, ஏன்? 


எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் போராடத்தான் செய்வோம்' என்று சொல்கிற இவர்கள் நரபலி மோடி வருகைக்காக ஏன் போராடவில்லை? ஏன் இந்த மவுனம்?

விடியல் வெள்ளி, PDF, SDPI, MNP 

இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 'தவ்ஹீத் ஜமாஅத்', 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' இவர்கள் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியபோது பகடி செய்தார்கள். "அபூஜஹ்ல் போருக்கு வந்தபோது, முஹம்மது நபி(ஸல்)அவர்கள் 'திரும்பிப் போ, திரும்பிப் போ! அபூஜஹ்லே திரும்பிப் போ! என்று போர்டு வைத்துக் கொண்டு போராடவா செய்தார்கள்?" என்று கேலி செய்தவர்கள், மோடி போயஸ் தோட்டத்திற்கு விருந்துக்கு வந்தபோது 'நரமாமிசம் தின்ற மோடியே! உனக்கு போயஸ் தோட்டத்தில் விருந்தா?' என்று போர்டு வைத்துக்கொண்டு போராடினார்கள்.ஜனநாயக வழியில்அப்போதுபோராட வந்தது மகிழ்ச்சிக்குரியதே! அப்படி போராடியவர்கள் இப்போது மவுனமாக இருப்பது ஏன்? முதலில் அடிக்கு அடி கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்கள், பிறகு ஜனநாயக வழியில் தங்களை மாற்றிக் கொண்டவர்கள், அதைக் கூட புறக்கணிக்கின்ற காரணம் என்ன?

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்


தவுஸன் வால்ட் சவுண்டில் அலறிப் பேசக்கூடிய அந்த அமைப்பின் தலைவர்S.M.பாக்கர், ஜெயலலிதா வென்றவுடன் 'அதற்கு நாங்கள்தான் காரணம்; ஒவ்வொரு வீடு வீடாக சென்றோம்; மக்களைத் தட்டி எழுப்பினோம்' என்று சுடச்சுட ராஜ் டிவிக்கு பேட்டிக் கொடுக்கத் தெரிந்த அவருக்கு, மோடி வருகையைக் குறித்துப் பேச மறுத்தது ஏன்? தவுஸன் வால்ட் ஸ்பீக்கர் ஆஃப் ஆன ரகசியம் என்ன?இறுதியாக

'தமிழ்நாட்டில் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு,முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் மோடி வருகையை எதிர்க்காமல் இருந்த விஷயத்தில்!


Monday, May 16, 2011

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

 ரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை.


எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா? 


30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன், பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.


இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை  கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.

80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?


ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம். என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?


சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.
இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800 (இ.9200)ரியால்.
இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.
சம்பளம் 1000(இ.11500) ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200(இ.13800) ரியால்.

இறுதியாக 


இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

Tuesday, May 10, 2011

மதமும் அறிவியலும். புத்தக பகிர்வு
றிவியலும், தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு மனித வாழ்வியல் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள இன்றைய காலகட்டம் அறிவியல் யுகம் என அழைக்கப்படுகின்றது. பகுத்தறிவுக்கும்,சுதந்திரமான சிந்தனைக்கும், ஆய்வு முயற்சிகளுக்கும் அறிவியல் வளர்ச்சி களம் அமைத்துக் கொடுத்துள்ள நவீன காலப் பிரிவில் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பெற்ற மதத்தின் நிலைபற்றிய வினாக்கள் அவ்வப்போது எழுப்பப்படுவதைப் பார்க்கின்றோம்.

மனித வரலாற்றில் மத நம்பிக்கைகள் செல்வாக்குச் செலுத்திய காலம் மறைந்து, அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் தோன்றிவிட்டதாக ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.மதத்தினதும், அறிவியலினதும் களங்களையும், பரிமாணங்களையும் தெளிவுப்படுத்தி ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலப்பிரிவில் மதத்திற்கும், அறிவியலுக்குமிடையில் நடைபெற்ற போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்கி, மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய இஸ்லாமிய நோக்கை இந்நூல் விளக்கின்றது.

சிந்தனைத் தெளிவு வேண்டி நிற்கின்ற ஒரு தொனிப்பொருள் பற்றிய இந்நூல் வாசகர்களின் அறிவுக்கு விருந்தாக அமையும் என்ற நோக்கில் இந்த நூல் பகிர்வை பதிவிடுகிறேன்.

இனி இந்த புத்தகத்திலிருந்து ஒரு சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

மதத்திற்கும் அறிவியலுக்குமிடையிலான போராட்டத்தின் ஆரம்பம்.

மதம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து எப்போது, ஏன் தோன்றியது என்ற வினாவிற்கான விடையை நாம் முதலில் கண்டறிதல் வேண்டும். மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்த ஐரோப்பிய நோக்காகும்.

தங்களது ஏகாதிபத்தியவாத அமைப்பின் அடிப்படையில் கீழைத்தேய நாடுகளை அடிமைப்படுத்தி தங்களது ஆட்சியை இந்நாடுகளில் திணித்த ஐரோப்பியர், உலக வரலாற்றையும், அதன் நிகழ்வுகளையும் ஐரோப்பாவை மையமாக வைத்தே நோக்கினர். உலகம் முழுவதும் ஐரோப்பாவை அச்சாணியாக வைத்தே சுற்றிச் சுழலுகின்றது என்ற மனப்பான்மையில் அவர்கள் செயல்பட்டனர்.

ஐரோப்பிய வரலாற்றின் நிகழ்வுகளின் அடிப்படையில் உலக வரலாற்றின் நிகழ்வுகளை நோக்குவதும், ஐரோப்பிய வரலாற்று அனுபவங்களை உலக வரலாற்று அனுபவங்களாகக் கொள்ளும் மனப்பிரமையும் இதனடிப்படையிலேயே உருவாகியது.

மத்தியகாலப் பிரிவில் ஐரோப்பாவில் கிறிஸ்தவத் திருச்சபை மிக சக்தியும், அதிகாரமும் படைத்த ஒரு நிறுவனமாக விளங்கியது. இக்காலப்பிரிவில் கிறிஸ்துவத் திருச்சபையின் அதிகாரத்தில் ஆட்சி மட்டுமின்றி, அறிவு, கலாச்சார, பண்பாட்டு முயற்சிகளும் கட்டுப்பட்டிருந்தன.

பதினைந்தாம், பதினாறம் நூற்றாண்டில் அறிவுத்துறையில் ஏற்பட்ட இந்த விழிப்புணர்வே பதினேழாம் நூற்றாண்டில் நவீன அறிவியலுக்கான அஸ்திவாரத்தை இட்டது. இந்த நவீன அறிவியல் வானவியலோடு (Astronomy) ஆரம்பமாகியது. மத்திய கால கிறிஸ்தவ பிரபஞ்சவியல் (Medieval Comology) பூமியை மத்தியாகக் கொண்டு அதன்கீழ் நரகமும் உயரே சுவர்க்கமும் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்பன மேலே உள்ள சுவர்க்கத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிப்ப்வை எனவும் போதித்தது. ஐரோப்பாவில் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான போராட்டம், வானவியலோடு தொடர்புடைய பூமியின் இந்த மத்திய நிலைப்பற்றிய கோட்பாட்டுடனேயே ஆரம்பமாகிறது.

சூரியக் குடும்பம் (Solar System) என அழைக்கப்படும் கிரகங்களின் குடும்பத்தின் மையமாக சூரியன் விளங்கின்றதா அல்லது பூமி விளங்கின்றதா என்பது தொடர்பாகவே இந்தப் போராட்டம் ஆரம்பமாகியது. இவ்விடயத்தில் கிரேக்கப் புவியியலாளர் டாலமி (Ptolemy) யின் கோட்பாட்டையே மத்திய கால கிறிஸ்துவத் திருச்சபை அங்கீகரித்திருந்தது. பிரபஞ்சத்தின் மத்தியில் பூமி அமைந்திருக்க சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் என்பன பூமியைச் சுற்றிச் சுழலுக்கின்றன என்பதே இக்கோட்பாடாகும்.

இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த கொபர்நிகஸ்(Copernicus 1473 -1543) என்னும் வானவியலாளர், வானில் உள்ள கோளங்கள் சுற்றுவது பற்றி ஒரு நூலை(On the Revelation of the Heavenly Bodies) 1543ஆம் ஆண்டு எழுதினார். இப்பூமியானது நிலையாக சுற்றிச் சுழலுகின்றது எனவும், அது நாளைக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருவதாக இந்நூலில் அவர் குறிப்பிட்டார். ஆனால் இக்கோட்பாடு கிறிஸ்துவத் திருச்சபையின் போதனைக்கு மாற்றமாக உள்ளதால் திருச்சபையின் எதிர்ப்பை அது தோற்றுவிக்கும் என்ற பயத்தில் அந்நூலை அவர் வெளியிடவில்லை.

வானவியலைப் போன்றெ மருத்துவக் கலையைப் பொறுத்தளவிலும் கிறிஸ்தவச் திருச்சபை அதன் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. மத்திய காலப்பிரிவில் நோய்களுக்கு நிவாரணம் காண்பதில் அறிவியல்ரீதியாக செயல்படாது, கிறிஸ்தவர்கள் அ|றிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்பட்டனர்.

அக்காலப்பிரிவில் ஸ்பெயினில் முஸ்லிம்களால் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் கல்விகற்ற யூதர்களே மருத்துவத்துறையில் ஈடுபட்டனர். இவ்வாறு மருத்துவத்துறையில் ஈடுபட்டோரை மந்திரவாதிகளாக கிறிஸ்தவர்கள் கருதினர். உடலியல்(Anatomy) மிக இழிவான கலையாகக் கருதப்பட்டதுடன், மருத்துவ ஆய்விற்காக உடலை அறுத்துப் பரிசோதனை செய்வதையும் கிறிஸ்தவ திருச்சபை கண்டித்தது.

1847 ஆம் ஆண்டு ஸிம்ப்ஸன்(Simpson) என்னும் மருத்துவர் குழந்தைப் பேற்றின்போது பிரசவ வேதனையைக் குறைக்க மயக்க மருந்தைப் பரிந்துரை செய்தபோது கிறிஸ்துவ குருமார்கள் அதனை ஆட்சேபித்தனர். 
“துன்பத்திலும் வேதனையிலுமே நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பீர்கள்” 
(In Sorrow Shalt Thou Bring Forth Children Gen 111:16) என்ற பைபிளின் போதனைக்கு எதிராக இது அமைவதாக அவர்கள் வாதாடினர்.

இவ்வாறு அறிவு வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் எதிராகவும், அறிவியல் விளக்கங்கள், கண்டுபிடிப்புகளை மறுக்கும் வகையிலும், கிறித்தவ திருச்சபையும் அதனைப் பிரதிநிதித்துவப் சிந்தனைப் போக்கை ஐரோப்பாவில் தோற்றுவித்தது. கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக திருச்சபையின் இரும்புப் பிடிலிருந்து விடுபடும் பொருட்டு சுதந்திரச் சிந்தனையை விரும்பியவர்களால் தொடுக்கப்பட்ட அறிவுப் போராட்டம் வரலாற்று ஓட்டத்தில் மதத்திற்கே எதிரான ஒரு போராட்டமாக மாற்றமடைந்தது.

இக்காலப்பிரிவில் இஸ்லாம் எப்படி அறிவியலுக்கு உறுதுணையாக நின்றது இஸ்லாமிய காஃலீபாக்கள் எப்படி இது போன்ற அறிஞர்களை அரவனைத்து அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டார்கள் என்பதையும் இந்நூல் ஆசிரியர் விளக்குகிறார்.

நூல்
மதமும் அறிவியலும்
ஆசிரியர்
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி
Friday, May 6, 2011

வினவே..! யார் பயங்கரவாதி..? மாவோயிஸ்டா..? தாலிபானா..? பதில் சொல்..!

       வன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்?

பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி,டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க இருவருக்கும் சண்டை.கூட்டம் கூடிவிட்டது.

சட்டென டிப்டாப் தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலைகீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய் பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபாடாது. ஏனென்றால்,அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை,ஏழைதான் திருடுவான்.

இந்த தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.

இப்போது சொல்லுங்கள்... அவர் மூன்றாவது மனிதர் என்ன செய்ய வேண்டும்?

யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி டிப்டாப் திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமையல்லவா?

 ஆனால் அந்த நபர் வருகிறார் அடிவாங்கி கிழிந்த சட்டையின் ஒட்டை வழியாக அந்த உள்பனியனை பார்க்கிறார். ஆ பச்ச பனியன் உள்ளே அல்லாஹு அக்பர் என்று எழுதியிருக்கிறது. இவருக்கு முகம் சிவக்கிறது செவப்பு பனியன் போட்டு அதில் செவ்வணக்கம் என்று அல்லவா இருக்க வேண்டும்? அவர் எதிர்பார்த்தது இல்லை ஏண்டா இப்படி திருடுற சார் இவனை அடியுங்க சார் என்கிறார்

  இது புனைவாக இருந்தாலும் சுடும் உண்மை


டிப்டாப் ஆசாமி அமெரிக்க வல்லாதிக்க வெறியர்கள் காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு மண் வீடுகளில் வசிக்கின்ற ஆப்கானியர்களின் வீட்டில் புகுந்து திருடுகிறான் கொல்லுகிறான் ஊடக பலமில்லாத ஊமையர்களான ஆப்கானியர்களின் வீட்டில் நடக்கும் எழவு வீட்டு ஒப்பாரி வெளியே கேட்பதில்லை.

தங்களை முற்போக்குவாதிகள், நடுநிலைவாதிகள், கம்யூனிஸ்ட்கள், மார்க்ஸிஸ்ட்கள் என்று சொல்லி கொள்கிற வினவு குழுவினர் பாதிக்கப்பட்டவன் செவப்பு சட்டைக்காரனா என்று குழியைத் தோண்டி பார்க்கிறார்கள். செவப்பு சட்டையாக இருந்தால், பார்த்தீர்களா அநியாயத்தை மக்களுக்காக போராடிய போராளிகளை புதைத்து விட்டார்கள் என்று அலறுகிறார்கள். அதே வேறு கலராக இருந்தால் இவர்களும் சேர்ந்து மண்ணை அள்ளி மூஞ்சியில் போடுகிறார்கள்.

ஆம் வினவு என்கிற நக்சலைட்டுகள், அல்லது ம.க.இ.க அமைப்பைச் சேர்ந்த  குழுவினர்.
பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்! என்ற பதிவில் அப்பட்டமாக அதை தான் செய்தார்கள்.

இந்த அவதூறு பதிவில் வரிக்குவரி அவதூறுகள் அள்ளி வீசப்பட்டு இருக்கிறது. தாலிபான்களை பயங்கரவதிகளாக சித்தரிக்கிற ஊடகங்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இப்படி ஒரு பிரச்சாரத்தை யார் முடுக்கி விட்டு சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் அரசியல் ஆதாயம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா வினவு?

  
கடந்த நூறு ஆண்டுகளில் உலகளவில் சுமார் நூறு செய்தி நிறுவனங்கள் சேவையாற்றிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அது இருபதாகச் சுருங்கிவிட்டது. இதில் 66% செய்தி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது உலகில் 0.3விழுக்காட்டினராக இருக்கும் யூதர்களே ஆவர். அவர்கள் தரும் செய்திகளை ஊடகங்கள் எவ்வித விசாரணையுமின்றி அப்படியே வெளியிடுகின்றன.

இந்தியாவில் எட்டு விழுக்காட்டினராக (8%)இருக்கும் உயர் ஜாதிப்பிரிவினரே தேசிய ஊடகத்தின் மேல்மட்டத்தில் எழுபத்தோரு (71%) விழுக்காடு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.இவர்கள் மாவோயிஸ்ட்களை பற்றி வெளியிடும் செய்திகளை மட்டும் மறுத்து பாசிச முதலாளிவர்க்க ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் என்று சொல்ல தெரிகிற வினவுக்கு தாலிபான்களை பற்றி வெளியிடுகிற செய்திகள் மட்டும் எப்படி உண்மையாக்கப்படுகிறது?

 1980,90 களில் கம்யூனிஸ நாடுகளை குறிவைத்து உள்ளே புகுந்து துவம்சம் செய்த ஜேம்ஸ்பாண்ட், ராம்போ போன்ற ஹாலிவுட் கதாபத்திரங்கள் இப்போதெல்லாம் கம்யூனிஸ நாடுகளுக்குள் நுழைவதில்லை. பெரிய முண்டாசு கட்டி, தாடி வைத்திருப்பவர்களை ஹாலிவுட்டில் துவம்சம் செய்து கொண்டிருக்கின்ற விஷயம் வினவு குழுவினருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லையே?
மாவோயிஸ்ட்களின் அரசியலை தெரிந்துக் கொள்வதற்காக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க நேர்ந்தது. 

இந்த புத்தகத்தில். 112 வது பக்கத்தில் ஒரு செய்தியை பாருங்கள்.

இயக்கத்தில் புதிதாகச் சேருவோருக்கு -குறிப்பாகச் சிறுவர்களுக்கு வன்முறையின் மீதான பயம் போகவேண்டுமென்பதற்காக மாவோயிஸ்ட்கள் மேற்கொள்ளும் ஓர் உத்தி, ஆப்கனிஸ்தானில் தாலிபன் இயக்கத்தில் எப்போதும் கடைப்பிடிக்கப்படுவது.

குற்றவாளி என்று அவர்கள் தீர்மானிக்கும் ஒருவரைப் பொது இடத்தில் கட்டிவைத்து ரத்தம் வர அடிப்பது, விரல்களை வெட்டுவது போன்ற தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றுவது, சுட்டுக் கொல்வது ஆகியவற்றைப் புதியவர்கள் முன்னிலையிலேயே பெரும்பாலும் செய்வார்கள். இம்மாதிரி ஏழெட்டு தண்டனை நிறைவேற்றங்களைப் பார்த்தபிறகு, ஒரு சில தண்டனைகளைப் புதியவர்களே நிறைவேற்றவும் வாய்ப்புத் தரப்படும். அதன் பிறகு அவர்களுக்கு ரத்த பயம் இராது.

அதே புத்தகத்தில் 114ம் பக்கத்தில் இன்னொரு செய்தியை பாருங்கள்.


கடத்தல் மாவோயிஸ்ட்களின் மிக முக்கியமான வருமான வழி இதுதான். ஆள்கடத்தல்,வழிப்பறி, பெரும் நில உடமையாளர்களிடமிருந்து அபகரிப்பது என்று சில வழிகளில் மாவோயிஸ்டுகள் தமது வருமானத்தைப் பெறுகிறார்கள். தவிரவும் மலைக்காடுகளில், மறைவிடத்தில் போதைப் பயிர் விளைவித்து, அதை ஏற்றுமதி செய்வதன் மூலமும் மாவோயிஸ்டுகள் தமது தேவைகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அப்புறம் 115ம் பக்கத்தில்.

ஆகஸ்ட் 14,2007 அன்று ஒரிஸ்ஸா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்டத்தில் ஒரு கிராமவாசியை(போலீஸ் இன்ஃபார்மர் என்று சொல்லப்பட்டவர்) மாவோயிஸ்ட்கள் வெட்டிக் கொன்றார்கள். தனி இடத்தில் கொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடலை ஊர்ப் பொதுவுக்குக் கொண்டு வந்து போட்டு, ஆதிவாசி மக்களை சத்தமிட்டு அழைத்து, அவர்கள் எதிரே, கொல்லப்பட்ட மனிதரின் உடலைப் பிய்த்து அப்படியே பச்சையாகத் தின்னத் தொடங்கினார்கள்.

இறந்தவர் பெயர் முகுந்த மாதி.சம்பவம் நடந்த இடம்,பண்டிகுடா. மாவோயிஸ்ட் இயக்கத்தின் பப்லூர் பிரிவு கமாண்டர் பகத் என்பவரே அப்படிக் கொலை செய்து மனித மாமிசத்தைத் தின்றார்.

இந்த புத்தகத்தில் உள்ள செய்திகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்களா வினவு? முடியாது தானே?

கிழக்கு பதிப்பகம் படிக்காதீர்கள், ஏதாவது பரபரப்பாக எழுதி வியாபரத்தை பெருக்கும் உத்தி. மாவோயிஸ்ட்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? கீழைக்காற்று பதிப்பக புத்தகங்களை படியுங்கள் என்று சொல்ல உங்கள் வாய் எத்தனிக்கிறதா? தேவையில்லை, நாங்கள் நிதானமாகத்தான் இருக்கிறோம். உங்களை போன்று பிற கொள்கைகளை இழிவுபடுத்தி எங்கள் கொள்கைதான் சரி என்று நிரூபிக்கிற தேவை எங்களுக்கு இல்லை.
மாவோயிஸ்ட்களை சந்தித்து பேசும் எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள்


மாவோயிஸ்ட்கள் நல்லவர்கள் என்பதற்காக அவர்களை நேரடியாக சந்தித்த அருந்ததி ராய் அவர்களை பற்றிய விளக்கங்களை விரிவாக எழுத தெரிந்த உங்களுக்கு, தாலிபான்களின் சிறைக் கைதியாகி இருந்து தாலிபான்களைப் பற்றி உண்மைகளை சொன்ன யுவான் ரிட்லியின் செய்திகளை மறைக்கும் அவசியமென்ன வினவு?

பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்! இந்த பதிவில் நீங்கள் வைத்த அவதூறுகள் பா.ராகவனையும் மிஞ்சி விட்டீர்களே.


இதோ உங்களுடைய அவதூறுகள்


//பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர்.//


இது அப்பட்டமாக இந்துத்துவா வாதிகளின் பொய் பிரச்சாரத்தை அதாவது மதரசாக்களில் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள் என்ற அவதூறுகளை வினவும் தனது பங்கிற்கு மெருகேற்றி விடுகிறார். இஸ்லாமிய அடிப்படையிலான மதரசாக்களுக்கும் தீவிரவாத‌த்திற்கும் என்ன சம்பந்தம்? குர்ஆன் வாங்க அமெரிக்க டாலர் கொடுப்பதற்கு முன் இஸ்லாமியரிடம் யாரிடமும் குர்ஆன் இல்லை அப்படித்தானே? 

//பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்///


அல்கைய்தா என்ற ஒரு அமைப்பே கிடையாதாம், உங்களுக்கு தெரியுமா வினவு? கீழேயுள்ள இரண்டு வீடியோவையும் பாருங்கள்.

                                              


// பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது.//

அய்யா வினவு பர்தா போடாவிட்டால் பெண்களை அடிக்க முடியுமா? கட்டுன புருஷன் மனைவியை அடிப்பதற்கு இஸ்லாத்தில் தடை இருக்கும்போது அது எப்புடியிண்ணே புர்கா போடாத பெண்களை அடிக்க முடியும்?


”என் துணைவியரிடம் மதீனாவை சேர்ந்த பெண்கள் பலர் தங்கள் கணவர்கள் தங்களை அடிப்பதாக முறையிட்டுள்ளனர்.இவ்வாறு மனைவியை அடிப்பவர்கள் உங்களில் சிறந்தவர்கள் இல்லை.மக்களே! அல்லாஹ்வின் பெண் அடியார்களை உங்கள் மனைவிமார்களை அடிக்காதீர்கள்!” (நூல்:அபூதாவூத்)
இப்படி நடைமுறையில் ஒரு ஹதீஸ் இருப்பது உங்களுக்கு தெரியுமா வினவு?


அப்புறம் கல்வி கற்ற பெண்களுக்கு கல்லடி கிடைத்ததா? இந்த செய்தி ஒங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
”கல்வி கற்பது ஆண் பெண் இருவர் மீதும் கட்டாய கடமையாகும்” (அல்குர்ஆன்) என்று ஒரு வசனம் இருப்பது ஒங்களுக்கு தெரியுமா வினவு?

தீவிர மதவாதிகளான கடுங்கோட்பாட்டு கொள்கையுடைவர்கள் என்று உங்களால் சான்றிதழ் கொடுக்கப்பட்ட தாலிபான்கள் எப்படி குர்ஆன் கட்டளைக்கு எதிராக செயல்படுவார்கள்?


தாலிபான் என்கிற புஷ்துன் மொழி வார்த்தையின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா? கல்வி அளிப்பவர்கள் என்று பொருள்.

யுவான் ரிட்லி (Yvonne Ridley) என்கிற செய்தி சேகரிப்பாளர் தாலிபான்கள் கூட இருந்து தாலிபான்களின் உண்மை சித்திரத்தை உலகுக்கு சொன்னாரே அவரைப் பற்றி சொல்ல உங்களை தடுத்தது எது? இதுல நடுநிலைவாதியாம்!


இனி யுவான் ரிட்லி சொல்வதை பாருங்கள்.
யுவான் ரிட்லி அவர்கள்
"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டியிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்தியிருக்கிறேன்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப்  போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...  

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?

இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச  மரியாதை அளித்தால் போதுமாம்.//புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது.//
இஸ்லாமிய சட்டப்படி இப்படி இடிப்பது தவறுதான். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விஷயத்தில் அவர்கள் கம்யூனிஸ்ட் போல செயல்பட்டார்கள். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனும்போது ஜெகத்தினை எரிப்போம் என்று பாரதியார் சொன்னது போல.
இதே தமிழீழவாதி சீமான் சொல்வதை கேளுங்கள்.
//ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது.//


இப்படி உங்கள் பார்வையில் காலாவதியான இந்த மார்கத்தைப் பற்றி இவ்வளவு பெரிய பதிவா? இதில் ஒன்று மட்டும் தெரிகிறது இன்னும் உலகம் அழியும் வரை இயங்குவியல் மார்க்கமாக இருக்கிறது என்பதை உங்கள் எதிர்ப்பின் மூலம் விளங்கிக் கொள்கிறோம் வினவு.                                                                                                                                             

Monday, May 2, 2011

இஸ்லாம் vs. கம்யூனிஸம் ஒரு பறவை பார்வை
இஸ்லாம் மக்களுக்கு நல்லதையே செய்திட வேண்டும் என்று வாதாடுகின்றது. எல்லா காலங்களுக்கும், எல்லா சமுதாயங்களுக்கும் இஸ்லாம் ஒன்றேதான் வழிகாட்டும் வல்ல மார்க்கம். கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய செயலிழந்து ஒருவித மந்த நிலையில் இருந்து வருவதால் இஸ்லத்தின் பொருளாதாரச் சட்டங்களும் செயலற்றவைகளாக இருந்து விட்டன.

அப்படியானால் ஏன் நாம் நமது ஆன்மாவை தூய்மைப்படுத்திட இஸ்லாத்தையும்,நமது பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிட கம்யூனிஸத்தையும் பின்பற்றக் கூடாது? அப்படி செய்வதனால் கம்யூனிஸம் நமது சமுதாய அமைப்பையோ அல்லது சமுதாய அமைப்பின் ஏதேனும் ஒரு பகுதியையே பாதிக்காது.

இதனால் நாம் நமது ஒழுக்கப்பண்புகள், நமது சமுதாய நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பாதுகாக்கின்றவர்களாகவும், அதே நேரத்தில் நமது பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மிகவும் நவீனமானதொரு கொள்கையும் கொண்டவர்களாக திகழலாம்.
இப்படி ஒரு கருத்தை எடுத்து வைத்து முஸ்லிம்களிடையே சபலத்தை ஏற்படுத்துவது கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால சூழ்ச்சியின் நவீன கண்டுபிடிப்பாகும்.

முதலில் அவர்கள் கீழை நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இஸ்லாத்தை எதிர்த்திட தலைப்பட்டனர். இதனால் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின்பால் இருந்த பிடிப்பு அதிகரித்திடவே செய்தது இதை கண்ட கம்யூனிஸ்ட்கள்  தங்களுடைய தக்குதலை பசப்பு வார்த்தைகளால் திசை திருப்புகிறார்கள்.

கம்யூனிஸம் என்பது சமுதாயத்தில் நீதியை நிலை நாட்டுதல் என்பதன் மற்றொரு பெயரேயாகும்.கம்யூனிஸம், அரசு தனது குடிமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திட கடமைப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்துகின்றது,இஸ்லாம் இவற்றையே அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லுகின்றது.ஆகவே கம்யூனிஸம் இஸ்லாத்தின் எதிரியல்ல.

இஸ்லாம் கம்யூஸத்தின் எதிரி என்று சொன்னால்,இஸ்லாம் சமுதாயத்தில் நீதியை நிலைநாட்டிட விரும்பவில்லை என்று பொருளாகிவிடும். இப்படி யாராவது சொல்வார்களா? நிச்சயமாக சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட எந்தக் கொள்கையையும் இஸ்லாம் எதிர்ப்பதில்லை.

இப்படி பசப்பு மொழி பேசி ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள் கம்யூனிஸ்ட்கள்.
இத்தகையசூழ்ச்சிவாதம்இதற்கு முன்னால் ஏகாதிபத்தியவாதிகளால் எடுத்து வைக்கப்பட்டதேயாகும். இந்த ஏகாதிபத்தியவாதிகளும், முதலில் இஸ்லாத்தின் மீது எதிர்ப்புக் கணைகளையே எடுத்து வீசினார்ஆனால் அவை முஸ்லிம்களை சலனப்படுத்தவில்லை

மாறாக முஸ்லிம்கள் தங்களை இதுபோன்ற பிதற்றல் வாதங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தலைப்பட்டனர்.தங்களுடைய எதிர்ப்புவாதம் எடுபடாமல் போகவே அவர்கள் வேறு விதமாக சூழ்ச்சியைத் திருப்பினர்
அப்போது அவர்கள் மேற்கொண்ட தந்திரவாதம் இதுதான்:மேலை நாடுகள் கீழை நாடுகளில் சிறந்ததொரு கலாச்சாரத்தை பரப்பிடவே முனைகின்றன. இஸ்லாம் எவ்வாறு கலாச்சராத்தைநல்ல  பண்பாட்டை எதிர்க்கும்? அதுதான் பண்பாட்டின் பாசறையாயிற்றேஇதோடு அவர்கள் விடவில்லை.


நீங்கள் இந்த மேலைநாட்டு நாகரிகத்தை கடைப் பிடியுங்கள்.அதே நேரத்தில் நீங்கள் உங்கள் மதம் விரும்புவது போல் நோன்பிருங்கள், தொழுகையும் நிறைவேற்றுங்கள்என்றும் சொன்னார்கள்.
ஒரு முறை இந்த முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தினுள் வந்துவிட்டார்களேயானால், அவர்கள் தங்களது மதத்தை மறக்க ஆரம்பித்துவிடுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கி இஸ்லாத்தை மறந்துவிடுவார்கள் என்பதே அவர்களின் திட்டம்.இதையே அவர்கள் நிறுபித்துக் காட்டினார்.

இதன் விளைவாக காலப்போக்கில் இஸ்லாம் என்றால் என்ன எனபதையே தெரியாத ஒரு தலைமுறை தோன்றியது. இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அறியுமுன்னே, எந்தக் காரணமும் இல்லாமல் இஸ்லாத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.

இதே சூழ்ச்சி முறையைத்தான் கம்யூனிஸ்ட்கள் இன்று பின்பற்றிட முயற்சிக்கின்றனார் அவர்கள் சொல்லுகிறார்கள். முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருக்கட்டும்; தொழுகைகையை நிறைவேற்றட்டும்; நோன்பிருக்கட்டும்; இன்னும் இதுபோன்ற கடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும்; நோன்பிருக்கட்டும்;இன்னும் இது போன்ற கடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும். கம்யூனிஸத்தை அவர்களின் பொருளாதாரக் கொள்கையாக மட்டும் ஏற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் கம்யூனிஸம் எந்த விதத்திலும் இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. அப்படி இருக்க முஸ்லிம்கள் கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

முஸ்லிம்கள் ஒரு முறை கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வார்களேயானால், காலப்போக்கில் அவர்கள் கம்யூனிஸத்தால் ஆட்கொள்ளப்பட்டுவிடுவர். அதன் மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாம் இந்த உலகில் சாதிக்க விரும்பும் இலட்சியத்தையும் மூட்டை கட்டிவைத்துவிடுவார்கள். ஏனெனில் நாம் வாழும் உலகம் விரைவான மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. அதில் பெரிய மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது.அதில் பெரிய மாற்றங்களைக் கூடச் செய்வதற்கு சிறிதளவு காலமே போதுமானது.

இதைத் தெரிந்திருந்தும், சில முஸ்லிம்கள் தங்களை கம்யூனிஸத்திற்கு அடிமைப்படுத்திக் கொண்டார்கள். ஏனெனில் கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.தாங்கள் சிந்தனையில் ஈடுபடதேவை இல்லை. சில இலட்சியங்களை நோக்கி நடப்பதில் ஏற்படும் கஷ்டங்களுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

இன்னும் இதுபோன்ற மனோ நிலையைக் கொண்ட முஸ்லிம்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கற்பனை உலகில் சஞ்சரிப்பதை நாடுகின்றனர். தாங்களே சிந்தித்து தங்களது வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக தங்களை அடுத்தவர்கள் வழி நடத்தட்டும் என்று வாளா இருந்து விடுகின்றனர்.

இங்கே நாம் ஒன்றைக் கவணிக்கவேண்டும். அதாவது இஸ்லாம், தனது கொள்கைகளுக்கு எதிராக இல்லாத கொள்கைகளை  எதிர்ப்பதில்லை.
உண்மை என்னவெனில் கம்யூனிஸம் இஸ்லாத்தின் கொள்கையை ஒத்ததல்ல. ஓரிரு விஷயங்களில் அது இஸ்லாத்தைப் போன்று காட்சியளித்தாலும், உண்மையில் அது இஸ்லாத்தைப் போன்ற ஒன்றல்ல.

தங்களிடம் ஏற்கனவே வலுவானதொரு கொள்கையை கொண்டிருக்கும் முஸ்லிம்கள், கம்யூனிஸத்தையோ அல்லது முதலாளித்துவத்தையோ அல்லது சோஷயலிசத்தையோ ஏற்றுக்கொள்ள தேவை இல்லை. இவைகள் ஓரிரு விஷயங்களில் இஸ்லாத்தைப்போல் காட்சியளிப்பினும் சரியே!

இறைவன் திருமறையில் கூறுகின்றான்:
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்தான் பாவிகளாவார்கள்”(அல்குர்ஆன் 5:47)

நாம் உண்மையிலேயே கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ளலாமா?
அப்படி அதை ஏற்றுக்கொண்ட பின்னரும் முஸ்லிம்களாக வாழலாமா? வாழ முடியுமா?