நண்பர் ஒருவர் என்னிடம் வந்தார் மாஸ்டர் இரண்டு மாதத்தில் ஊருக்கு வெக்கஸேன் போகிறேன் ஊருக்கு போனவுடன் திருமணம் அதனால் என்னுடைய தொந்தியை குறைத்து ஜெஸ்ட்ட கூட்டி கைகளில் ஆம்ஸ் வந்து நல்ல ஆரோக்கியமானவனாக மாறுவதற்கு உங்கள் வகுப்பில் பயிற்சி இருக்கிறதா என்று கேட்டார்.
அவருடைய அறியாமையை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது அவருக்கு உடற்பயிற்சி சம்பந்தமாக ஒரு சில விளக்கங்கள் கொடுத்தேன்.அதை உங்களோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
முதலில் ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.
வெளித்தோற்றத்தில் ஆம்ஸ் ஜெஸ்ட் இருந்து விட்டால் அது ஆரோக்கியமான உடலா?
ஆளாளப்பட்ட அர்னால்டு ஸ்வாஷ்நெகர் அவர்களால் கூட இருதய அறுவை சிகிச்சையிலிருந்து தப்ப முடியவில்லை இரண்டு முறை இருதய (பைபாஸ்) அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சில தொழில்ரீதியான (ஜிம்) உடற்பயிற்சி நிலையங்களில் 6 மாதத்தில் உடலை ஒரு வழி பன்னி பாடி பில்டர் ஆக்கி விடுகிறோம் என்று சொல்லி இரும்புக் கருவிகளை பயன்படுத்தி ஒரளவுக்கு வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் வெளிப்புற தோற்ற அழகிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை உள்ளுருப்புகளுக்கு கொடுப்பதில்லை.
விளைவு அளவுக்கதிகமான பாரம் ஏற்றி வண்டியின் அச்சு முறிவது போல்
உடல் நலக் கேட்டை அறியாமல் பெற்றுக் கொள்கின்றனர்.
அதாவது உளுத்துப் போன கதவிற்கு அழகிய வண்ண பெயிண்ட் அடித்து புதிதான வலிமையான கதவு போல காட்டிக் கொள்ளும் உத்தி இது.
பிறருக்காக வாழதீர்கள். உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்யுங்கள். நாம் ஒன்றும் உடலை கட்டழாக்கி சினிமாவில் நடிக்க போவதில்லை. பிறருக்காக வாழ்வது வேதனையானது.
கிரவுண்ட் உடற்பயிற்சி யோகா இவைகள் நீண்ட நாட்களாக செய்தால் தான் பலன் கிடைக்கும் ஆனால் பலன் நிரந்தரமானது எதிர்வினை இல்லாதது. உள்ளுருப்புகளை பாதுகாத்து ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.
உங்களுக்கு புரியும் மொழியில் சொல்லுவதாக இருந்தால்.
ஒரு கம்யூட்டர் வாங்குகிறோம் (ஹார்டுவேர்) வெளித்தோற்றம் அழகாக இருக்கிறது ஆனால் (சாப்ட்வேர்) அத்தியாவசிய உள்ளுருப்புகள் சரியில்லை என்றால் அந்த கம்பியூட்டரை புறக்கனிப்போம் அல்லவா.
யோகாவும் கிரவுண்ட் உடற்பயிற்சிகளும் உள்ளுருப்புகளை பேணி பாதுகாக்கும் ஆனால் சிறிது கால தாமதமாகும். ஆனால் துரதிஷ்டமாக நம்பிக்கையோடும் பொறுமையோடும் தினசரி தொடர்ச்சியாக உடற்பயிற்சி யாரும் செய்வதில்லை ரெடிமேட் உலகில் அனைத்தையும் ரெடிமேடாக பெற்றுக் கொள்ள ஆசைப் படுகிறார்கள்.
ஒரு வாகனமோ, ஒரு இயந்திரமோ சரியாக இயங்க வேண்டுமானால் அதற்கு இரண்டு முக்கியத் தேவைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே!
அதாவது –
1.அதன் உள்ளுறுப்புகள் பழுதுபடாது நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
2.அதை இயக்க விரும்பியவுடனே செயல்படுமாறு அதற்கு ஒரு லயம் (ரிதம்) இருக்க வேண்டும்.
உடலும் ஒர் இயந்திரமே. அது நன்கு இயங்க இந்த இரண்டு அம்சங்களையும் உடற்பயிற்சிகள் வெகு சிறப்பான முறையில் நிர்வகிக்கிறது.
நமது உடல் நலம் நல்ல, நிலையில் இயங்க அத்தியாவசியமான உள்ளுறுப்புகளை உடற்பயிற்சி செம்மைப்படுத்துகிறது.
எந்த இயந்திரமும் மூன்று நிலைகள் உண்டு.
1.வேகம், 2.மந்தம், 3.நிதானம். வேகமாக ஓடும் இயந்திரம் சீக்கிரத்தில் பழுதுபட்டு விடும். மந்தமாக ஓடும் இயந்திரம் அனைவராலும் புறக்கணிக்கப்படும்.
நிதானமாக ஓரே சீரில் ஓடும் இயந்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். நிதானம் எனப்படும் நடுவு நிலையே உடல் என்ற இயந்திரத்திற்கு அத்தியாவசியமானது.
உடற்பயிற்சிகளை பொறுத்த வரை அவசரப் பாடதீர்கள் பார்க்க எளிமையான பயிற்களாக இருந்தாலும் நிரந்தர பலன்களை அளிக்கக் கூடியவைகளை தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள். நடுநிலையை பேனுங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் ரோம்பவும் முருக்கேற்ற தேவையில்லை.
நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.ஹைதர் அலி...
ஊருக்கு வேக்கேஷன் போனாலும் பதிவிடுவதில் என்னே ஒரு அலாதி ஆர்வம்..! அதுவும், உடற்பயிற்சி குறித்து..!
//ரோம்பவும் முருக்கேற்ற தேவையில்லை.//---ம்ம்ம்...
எதிலும் உடனடி பலன் கேட்பவர்களுக்கு தக்க பாடம் இக்கட்டுரை.
மிக்க நன்றி சகோ.
ஊர் எப்படி இருக்கிறது..? என்ன மாற்றம்..? பகிர்க.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteநல்ல அறிவுரை, அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteஹைதர்பாய்! சிறந்த பதிவு. பயணம் சுகமாக இருந்ததா? ஊரின் நிலவரத்தையும் பதிவிடவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான பதிவு சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஹைதர்பாய்!
ஆரோக்கியத்திற்க்கு அழகான ஆலோசனை..............
சகோதரரே,
ReplyDeleteஅருமையான ஆக்கம். தேவையானதும் கூட. தொடரட்டும் உங்களது எழுத்துப் பணி.
அன்புடன்
அனீஸ்
பொறுப்புள்ள ஓர் ஆசிரியரை உங்களில் காண்கிறேன். வாழ்க!
ReplyDeletePAKKI ADAN KOYYALA
ReplyDeleteVARA LATEST NEWS ILLAYA
@ஈரோடு தங்கதுரை
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே பார்த்தேன் படித்தேன்
@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
ஊர் அப்படியேத்தான் இருக்கிறது சகோ
தங்களின் வருகைக்கு நன்றி
@இளம் தூயவன்
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
நீங்க ஊருக்கு வரலையா?
@Abdul Kader
ReplyDeleteநன்றி சகோ
@அனீஸ்
ReplyDeleteதங்களின் ஊக்கத்திற்கு நன்றி சகோ
@rajasundararajan
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கே
@PAKKI
ReplyDeleteஇருக்கு பக்கி
உடலை முருக்கேற்றுவதில் தவறில்லை .உள்ளுருப்புகளுக்கும் அதக்குரிய பயிசிகளை செய்து ஜிம் செய்யலாம் . யாரும் அழகாக எடுப்பான தோற்றத்துடன் இருப்பதக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. நீங்கள் சொல்கிற யோகா கிரவுண்ட் உடற்பயிற்சி போன்றவைகளையும் மேட் கொண்டே உடல் வலு பயிச்சிகளையும் மேற்கொள்ள முடியும் . நீங்கள் ஜிம் செய்வதை தவிர்க்க சொல்வது நல்லதல்ல.
ReplyDelete