Thursday, September 1, 2011

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்.(பாகம்-3)


இமாம் புகாரி அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு விரிவாக எழுதுகிறேன் என்பதற்கு அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து விட்டு நாம் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்று நினைக்கிறேன்.


(ஸஹீஹான) சரியான ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் இமாமவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.ஓர் ஊரிலிருந்த பெரியவர் ஒருவரிடம் சில ஹதீஸ்கள் இருப்பதை அறிந்து நீண்ட நெடுந்தூரம் நாள்கணக்காக கால்நடையாகப் பயணம் செய்து அவரைக் காணச் சென்றார்கள்.

அவர் ஒரு பையைக் காட்டி தம் ஒட்டகத்தை அழைத்தபோது அது,அதில் தமக்குரிய உணவு இருக்குமென நம்பி அருகில் வந்ததும் அவர் அதைப் பிடித்துக் கட்டினார். அவர் அந்த பையை உதறியபோது அதில் எதுவுமே இல்லை. இதை தொலைவிலிருந்து கவனித்த இமாம் அவர்கள், உடனே அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிவிட்டார்கள். காலிப்பையை காணம் உள்ள பை போல் காட்டி ஒரு வாயில்லாப் பிராணியை ஏமாற்றும் இவர், எவரைத்தான் ஏமாற்றமாட்டார்? இவர் சொல்லை எப்படி நம்புவது என இமாம் திரும்பி விட்டார்கள்.
ஸஹீஹ்
(பலமானது)
ளயீஃப்
(பலமற்றது)
மவ்ழூஉ
(புனையப்பட்டது)
ஹஸன்
(அறிவிப்பாளர் தகுதியில் சிறு குறைபாடு இருந்து வேறு பல வழிகளில் ஹதீஸின் கருத்தை சொல்லக்கூடியது)
ஹதீது முஅல்லக்
(ஹதீஸை சொன்னவர்களில் ஒருவர் அல்லது இருவர் பெயர் விடுபட்டிருந்தால்)
முன்கத்ஃ
(அறிவிப்பாளர் வரிசையில் சஹாபாக்களுக்கு அடுத்து யாரேனும் விடப்பட்டிருந்தால்)
மக்தூஃ
ஒரு ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு இரண்டாவது தலைமுறையினரால் சொல்லப்பட்டிருந்தால்.
 (இதை இன்னும் விரிவாக நூலை தொகுத்த முறையில் பார்ப்போம்)

இப்படி ஹதீஸ்களை தொகுப்பதில் தனக்கு தானே கண்டிப்பான நியதிகளை வகுத்துக் கொண்டு ஹதீஸ் தொகுக்கும் கலையில். புது வழிமுறைகளை ஏற்ப்படுத்தி சென்ற மாமேதை.
சரி தொடருக்கு வருவோம்
சென்ற தொடரில் 

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் (பாகம்-2) இதில் மதீனாவில் விட்டுவிட்டு சென்றார்கள் என்பதை பார்த்தோம்.இங்கு இமாம் புகாரி அவர்களின் தாயின் தியாகத்தை நினைவு கூற வேண்டியதிருக்கிறது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த மகனுக்கு தாய் பாசம் மட்டுமே கிடைத்த சூழலில் மார்க்க கல்வி கற்பதற்காக அதனையும் இழந்து 16 வயதில் மகனை மக்காவில் விட்டு விட்டு ஊர் திரும்புகிறார்கள் இன்றைய காலம் மாதிரி சாப்பிட்டயா? உடல்நலம் எப்படி இருக்கிறது? என்று மணிக்கொருமுறை கைத்தொலைபேசியில் உரையாடுகிற தொழில்நுட்பம் வளர்ந்த காலமல்ல அவ்வளவு ஏன் கடித போக்குவரத்துக் கூட நவீனமாக இல்லாத காலம் அதுவும் உஸ்பேக்கிஸ்தான் எங்கிருக்கிறது மக்கா எங்கிருக்கிறது. இவர்களின் தியாகத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

இமாம் புகாரி மக்காவில் வந்ததிலிருந்து அதற்குபிறகு 16 வருடங்களாக மதீனா.எகிப்து,ஷாம்,பாலஸ்தீன்,ஜோர்டன்,லெபனான்,சிரியா,ஈராக் பாக்தாத்,கூபா,பஸார.(இன்றைய ஈராக்) இப்படி ஒவ்வொரு நாடாக பயணம் செய்தார்கள் பிற நாடுகளில் இருக்கின்ற மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்பதற்காகவும்,ஹதீஸ் செவிவழி கேட்டுயிருந்த அறிவிப்பாளர்களை நேரடியாக சந்தித்து ஹதீஸ்களை திரட்டுவதற்காகவும் மாதக் கணக்கில் வருடக் கணக்கில் பயணம் செய்தார்கள் தன்னுடைய வாழ்நாளை பயணங்களிலேயே அதிகமாக செலவழித்தார்கள்.

மக்காவிலிருந்து பாக்தாதிதிற்கு மட்டும் கிட்டதட்ட 7 முறை திரும்ப திரும்ப பயணம் செய்திருக்கிறார்கள் அன்றைய காலப்பகுதியில் பெரிய மார்க்க அறிஞர் என்று போற்றப்பட்ட ‘இமாம் அஹமது’(ரஹ்) அவர்களை சந்திப்பதற்காக அவர்களிடம் ஹதீஸ் கலையை கற்றுக் கொள்வதற்காக. நேரடியாக சந்தித்து ஆலோசனைகளைப் மார்க்க கல்வியை மேருக்கேற்றிக் கொண்டார்கள்.

நாம் இன்று புகாரியில் வருகிறது என்று ஈஸியாக சொல்கிறமே அதனை அவர்கள் தொகுக்கும் போது வீட்டுக்குள் அமர்ந்து அல்லது A.C.க்கு கிழே இருந்து கொண்டு இணையத்தில் தேடி எடுத்து பதிவிடுகிற நம்மை போன்ற டேபிள் எழுத்தளராக இருக்கவில்லை. இரவு பகலும் கொவெறு கழுதையிலும்,ஒட்டகத்திலும் தூசி மணல்,கடுங்குளிர்,பாலைவனவெயில்
இவைகளை கடந்து தான் சேகரிக்க முடிந்தது.

இமாமவர்களின் மணவர் சொல்கிறார். நான் ஒரு இரவு பார்த்தேன் இமாம் புகாரி அவர்கள் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்து விளக்கை பத்த வைப்பதும் ஏதோ குறிப்பு எழுதுவதுமாக இருந்தார்கள். ஹதீஸை தொகுக்கும் சிந்தனையில் அந்த ஆர்வத்தில் முழிப்பு வரும்போதேல்லாம் ஹதிஸ்களின் தரத்தை குறித்துக் கொள்வதும் அறிவிப்பாளர்களில் பெயர்களை குறித்துக் கொள்வதுமாக இருந்தார்கள் என்பதை நான் விளங்கிக் கொண்டேன் என்கிறார்.

இமாவர்கள் மொத்தம் 20 நூல்களை எழுதியுள்ளர்கள் ஒவ்வொரு நூல்களும் பல பாகங்கள் கொண்டவை. அவைகள் ஹதிஸ் துறையை சர்ந்த நூல்கள், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைச் சார்ந்த நூல்கள், பிக்ஹு (சட்டநூல்கள்) என்று வகைப்படுத்தலாம். அவைகளில் சில "கிதாபுல் தாரீக்" என்ற நூலில் ஹதீஸ்களை யார் யாரேல்லாம் அறிவித்தார்களோ அவர்களை சகல தகவல்களையும் தொகுத்து எழுதி மிகப் பெரும் சதனையை புரிந்தார்கள்.தனது பதினெட்டாம் வயதில் எழுதிய “தாரீகுல் கபீர்” பிறகு “தாரீகுல் அஸ்கர்”, "தாரீகுல் அவ்ஸத்" கிதாபுல் குன்னா, கிதாபுல் உஹ்தான், "கிதாபுல் அதபில் முஃப்ரத்" கிதாபுல் அஃபாஃ" ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்கள்
இமாமவர்கள் இவ்வளவு நூல்களை ஏன் எழுத வேண்டும்?  முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாக்கை சரியான முறையில் கொடுத்து செல்ல வேண்டும்  என்ற ஒரே காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. 

அவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும் முகமாக நாம் சமூகத்தில் சில குழுவினர் சரியான ஹதீஸ் சரியற்ற ஹதீஸ் என்பதேல்லாம் கிடையாது அரபியில் ஒரு வார்த்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி சொல்லப் படுபவைகள் அனைத்தும் ஹதீஸ்துதான் நிலைப்பாடு எடுக்கிறார்கள் இது எவ்வளவு பெரிய தவறு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நூல்களில் முதல் இடத்திலிருப்பது "ஸஹீஹ் புகாரி" எனும் நூல் ஆகும்.
82-க்கும் மேற்பட்ட விரிவுரை நூல்கள் வெளி வந்துள்ளன. அவற்றில் முகவும் சிறந்தது, இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானீ (ரஹ்) எழுதிய "ஃபத்ஹுல் பாரியும்" அடுத்து இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கஸ்தலானீ (ரஹ்) எழுதிய "இர்ஷா துஸ்ஸாரி"யும் அதை அடுத்து இமாம் ஸகரிய்யா அல் அன்ஸாரீ (ரஹ்) எழுதிய "துஹ்ஃபத்துல் பாரீ"யும் ஆகும்.

 அடுத்த தொடரில்(4ம் பாகத்தில்) முற்றும்

14 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  இமாம் புஹாரி (ரஹ்)அவர்களைப் பற்றிய செய்தியினை மிக அழகாக தொகுத்துள்ளிர்கள் அன்றைய காலக் கட்டங்களிலும் இவ்வளவு செய்திகளை மிக கஷ்ட்டத்துடன் சேகரித்து அதனை இன்று நாம் படிப்பதற்கு மிக சுலபாமக் ஆக்கி தந்தமைக்கு அல்லாஹ்விற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வோம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஜஸாக்கல்லாஹ் ஹைர் அன்பு சகோ. அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //"கிதாபுல் தாரீக்" என்ற நூலில் ஹதீஸ்களை யார் யாரேல்லாம் அறிவித்தார்களோ அவர்களை சகல தகவல்களையும் தொகுத்து எழுதி மிகப் பெரும் சதனையை புரிந்தார்கள்.//---ஈடு இணையற்ற மிகக்கடுமையான அளப்பறிய பணி..! சாதனைதான் இது. ஐயமில்லை.

  தொடர்ந்து எழுதுங்கள் சகோ.ஹைதர் அலி..! மேலும் நிறைய எழுதுங்கள். அறிய ஆவல்.

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரர் ஹைதர் அலி,

  தெரியாத பல விசயங்களை அறிந்துக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...

  மிகவும் ஆக்கப்பூர்வமான பணி உங்களுடையது. இந்த உழைப்பை நம் உம்மத்தினருக்கு என்றென்ரும் பயனுள்ளதாக இறைவன் அமைத்து தரவேண்டும்...ஆமீன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 5. @அந்நியன் 2

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //இமாம் புஹாரி (ரஹ்)அவர்களைப் பற்றிய செய்தியினை மிக அழகாக தொகுத்துள்ளிர்கள் //

  அல்ஹம்துலில்லாஹ்

  //அன்றைய காலக் கட்டங்களிலும் இவ்வளவு செய்திகளை மிக கஷ்ட்டத்துடன் சேகரித்து அதனை இன்று நாம் படிப்பதற்கு மிக சுலபாமக் ஆக்கி தந்தமைக்கு அல்லாஹ்விற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வோம்.//

  கண்டிப்பாக சகோ

  தங்கள் வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. @அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்)

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  வ இய்யாக்கும்

  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 7. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //தொடர்ந்து எழுதுங்கள் சகோ.ஹைதர் அலி..! மேலும் நிறைய எழுதுங்கள். அறிய ஆவல்.//

  தங்களின் அறிவுத் தேடலுக்கு என்னுடைய வழ்த்துக்கள்

  ஊக்கத்திற்கு நன்றி சகோ

  ReplyDelete
 8. @Aashiq Ahamed

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //தெரியாத பல விசயங்களை அறிந்துக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...//

  நானும் தான் சகோ

  //மிகவும் ஆக்கப்பூர்வமான பணி உங்களுடையது. இந்த உழைப்பை நம் உம்மத்தினருக்கு என்றென்ரும் பயனுள்ளதாக இறைவன் அமைத்து தரவேண்டும்...ஆமீன்.//

  நன்றி சகோ தங்களின் பிரார்த்தனையால் மனம் மகிழ்கிறது சகோ நன்றி

  ReplyDelete
 9. இமாம் புஹாரி (ரஹ்)அவர்களைப் பற்றிய செய்தியினை மிக அழகாக தொகுத்துள்ளிர்கள்

  ReplyDelete
 10. @மாலதி

  தங்களின் வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 11. அடுத்த பாகம் படிக்க ஆவலாக உள்ளேன். அல்லாஹ் உங்களின் இந்த சீறிய முயற்சியை பொருந்திக்கொள்வானாக.. ஆமீன்

  ReplyDelete
 12. அல்லாஹ் உங்களின் சீறிய முயற்சியை பொருந்திக்கொள்வானாக.. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன்...

  ReplyDelete