Sunday, June 19, 2011

கிணறு வெட்ட பணம் மிச்சமானது


திவேழுதுபவர்கள் பொதுவாக எதை பார்த்தாலும் அது சம்பந்தமாகஒருபதிவு எழுதலாமே என்று தோன்றும். இந்த பொதுப்புத்தியிலிருந்து நான் மட்டும் என்ன விதிவிலக்கானவான?


நான் இப்போது விடுமுறையில் வந்து வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களின் கணிப்பு சரிதான் அது சம்பந்தமான பதிவு தான் இது.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.


எல்லோரும் ஊரில் வீடு கட்டும் போது முதலில் தேவைப்படுவது தண்ணீர் வசதிதான் அதற்காக அனைவரும் முதலில் ஆழ்குழாய் கிணறு(ஃபோர்) அமைப்பார்கள். என்னுடைய கிராமம் வைகை ஆற்று படுகை அருகில் இருந்தும் 250 அடி 300 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் அமைத்து நீலத்தடி நீரை தேவையில்லாமல் வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்.


நானும் அவுங்க போட்ட ரூட்டில் போக விருப்பமில்லை கிணறு வெட்டினால் என்ன? என்று எண்ணம் தோன்றியது.
கிணறு வெட்டி வீடு கட்ட போகிறேன் என்று ஊரில் சொன்ன போது அனைவரும் கேலி பன்னினார்கள் இந்த காலத்துல போயி….? கிணறு வெட்டிக் கிட்டு…..? என்று இழுத்தார்கள்.


சரி ஃபோர் போட செலவு எவ்வளவு என்று விசாரித்த போது நீர் முழ்கி மோட்டார் இதர வகைகள் அனைத்தும் சேர்த்து 1,20,000 ரூபாய் பட்ஜெட் ஆனாது.
இதே கிணறு வெட்ட மொத்த செலவு 10,000 ரூபாய் தான் .35 அடியில் தண்ணீர் வந்து விடும் என்று இலக்கு வைத்து வெட்டிக் கொண்டிருக்கும் போது 16 அடியில் தண்ணீர் ஊற்று வந்து விட்டது. 


தண்ணிர்க்குள் முங்கி முங்கி மண் அள்ளி 8 அடிக்கு தண்ணீர் கிடக்கிறது.



கிணறு வெட்டுவதையும் அவர்களின் உழைப்பையும் பாருங்கள்

தண்ணீரை வெளியே கொண்டு வர டெக்ஸ்மோ மோட்டார் மற்றும் பிட்டிங் செலவு 15.000 மொத்தம் 25,000 த்தில் தண்ணீர் கிடைத்து விட்டது ஒரு இலட்சம் மிச்சம்.



நிலத்தடி நீரையும் பாழக்கவில்லை.