Friday, April 1, 2011

யார் இந்த புத்தர்?,புத்த மதம் ஓர் ஆய்வு

புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்று நாம் தெளிவாக அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில் புத்தர் நூல் எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் தன்னுடைய போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர் ஊக்குவிக்கவில்லை.

அவரைப் பின்பற்றியவர்களும் அவருடைய வாழ்நாளிலோ அல்லது அதனை அடுத்து வந்த காலகட்டத்திலோ இப்பணியில் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆதாரமும் இல்லை.

  புத்தர் இறந்து ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு வைசாலியில் கூடிய பேரவையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் புத்தமத கொள்கைகளும் நெறிமுறைகளும் உருக்கொடுக்கப்பட்டன அதனால் அப்பேரவையில் கூடிய புத்த புத்த பிக்குகள் மெய்த்தன்மையையும் உள்ளீட்டையும் மாற்றியமைத்து விட்டார்கள் என (201.Secret Books of the Buddist)தீப்வம்ஸா,வின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 புத்தருடைய போதனைகளை நூலக்கம் செய்யும் பணி அப்போதிலிருந்து தொடங்கியது ஏறக்குறைய 400 ஆண்டுகாலம் அதாவது கி.பி.முதல் நூற்றாண்டு வரை இப்பணி தொடர்ந்தது கடைசியில் மீண்டும் கொன்னகத் திரிபுகளால் பாதிப்படைந்து அதனுடைய அடிப்படைக் கோட்பாடுகளே தடம் புரண்டு போயின எனவே புத்தர் நூல்கள் என்று எதனையும் எடுத்துக் கொண்டு விட முடியாது கனிஷ்கர் காலத்து இறுதி வடிவாக்கத்திலிருந்து தப்பிப் பிழைத்து நம்மை சேர்ந்துள்ள ஆகமங்களையே தவிர வேறு இல்லை அம்மூன்று நூல்களும் திரிபிடகம் என்றழைக்கப்படுகின்றன. 

'திரிபிடகம் என்றால் பாலி மொழியில் ‘மூன்று கூடைகள்’ என்று பொருளாம்.

1. விநய பிடகம் - ஒழுக்கங்கள் நியமங்கள் பற்றியது. தொகுத்தவர் யாரேன்று அறியப்படவில்லை. கி.மு. 350 முதல் கி.மு.250 வரை பற்பல காலகட்டங்களில்  உருவாகியுள்ளது.

2.ஸுத்த பிடகம் -வெற்றிக்கான வழிகள்,ஒழுக்க நியதிகளைப் பற்றியது . புத்தருடைய விளக்கங்களே பெரும்பாலும் உள்ளன. தொகுப்பாசிரியர், காலம் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் இல்லை.

3.அமிதம்ம பிடகம் -ஒழுக்க நியதிகள், புலன்களுக்கு அப்பாற்பட்ட நுண்ணிய விடயங்கள் தொடர்பானது.கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இறுதியில் எழுதப்பட்டது என்ற குறிப்பு மட்டும் உள்ளது.

கெளதம புத்தர் உண்மையிலேயே என்ன போதித்தார் என்பது நமக்குத் தெரியாது. புத்தருடைய போதனைகளாக இந்த நூல்கள் முன்வைக்கும் விஷயங்களைப் பற்றியே இனி பார்க்கப்போகிறோம்.


புத்த மதம் உலகில் நீண்டகாலம் தொடர்ந்து இன்றும் நிலைத்திருப்பதற்குக் காரணம்,ஆள்வோரையும் சமூக அமைப்பையும் எதிர்த்துப் போராடி வலிமையானதொரு பண்பாட்டு நெறியை நிலை நாட்டியதால் அல்ல! மாறாக, ஆள்வோர் எத்தகைய கொடுங்கோலர்களாக இருந்தாலும் அவர்க்கு பணிந்து கட்டுண்டு கிடக்க வேண்டும் என்று போதித்தது தான் காரணம்!


சரி விஷயத்துக்கு வருவோம். யார் இந்த புத்தர் ?

உலகில் தோன்றிய மற்ற தத்துவ ஞானிகள்,சிந்தனையாளர் களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்தொரு கோணத்தில் மனித வாழ்வை
அணுகியுள்ளர் .மனிதன் எதற்காக இவ்வுலகில் தோன்றினான்? அவன் எவ்வாறு வாழ வேண்டும் என்கிற விஷயங்களில் பக்கம் அவர் சிந்தனையைச் செலுத்தவே இல்லை. ஆகையால் இயல்பாகவே அவர் மனிதன் எத்தகைய முறைப்படி வாழ்ந்தால் தனக்கும் தான்சார்ந்த மனித இனத்துக்கும் பயன் சேர்க்க முடியும் என்பது குறித்து எங்குமே பிரச்சாரம் செய்யவில்லை.

மனித வாழ்வில் தோன்றுகின்ற சோதனைகளுக்கும் மற்றங்களுக்கும் என்ன காரணம்? குழந்தைப் பருவம், வலிபம்,முதுமை,ஆரோக்கியம்,நோய், பிறப்பு,வருத்தம், கவலை,பிணி,மூப்பு இவை போன்ற மாற்றங்களுக்கான மூல காரணம் என்ன? இவற்றிலிருந்து விடுதலை அடைவது எப்படி?- இது பற்றி மட்டுமே அவர் சிந்தித்தார். மனிதனுடைய தனி நபர் -சமூக வாழ்வில் குறுக்கிடும் ஏனைய பிரச்சனைகளின் பக்கம் அவர் கவனம் செலுத்தவே இல்லை.

பல்லாண்டு காலம் சிந்தித்தும் தியானத்தில் ஆழ்ந்தும் இக்கேள்விக்கு விடை காண அவர் முயற்சித்தார். விடையாக அவர் கண்டது என்னவெனில் வாழ்க்கை என்பதே ஒரு சோதனை.அதில் மனிதன் சிக்கிக் கொண்டுள்ளான். பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படுகின்ற எல்லா மாற்றங்களும் அச்சோதனைகளின் வடிவங்களே! மனிதப் பிறப்புக்கென தனிப்பட்ட எந்தவோரு காரணமும் கிடையாது.

வீணாகவே அவன் படைக்கப்பட்டுள்ளான்.துன்பங்களில் சிக்கி இன்னலுறுவதைத் தவிர அவன் இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. மனிதன் வாழ்வதற்குரிய இடமல்ல இவ்வுலகம். உண்மையில் அவனுக்கு இங்கு எந்த இன்பமும் மகிழ்ச்சியும் கிடையாது.ஒவ்வோர் இன்பத்தைத் தொடர்ந்தும் துன்பம் வருகிறது. மகிழ்ச்சியின் பின்னால் சோகம் மறைந்துள்ளது.பிறப்பின் பின்னால் இறப்பு ஒட்டிக் கொண்டுள்ளது.இத்தகைய மாற்றங்கள் ஒன்றையடுத்து ஒன்றாகத் தொடர்கின்றது. ஒவ்வொன்றும் ஒரு துன்பமாகவே உள்ளது.

ஆசை எனும் தளையிலிருந்து அவன் விடுபடாத வரை அவன் இறந்து கொண்டேயிருப்பான். மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருப்பான்.இதிலிருந்து விடுதலையை எப்படி அடைவது? பெளத்தம் தரும் பதில் ‘நிர்வாணம்’ வாழ்க்கை என்பதொரு துன்பம். அத்துன்பத்திருக்கு ஆசையே காரணம்.இல்லாமை, இருப்பை உணராமையில்தான் ஆசையிலிருந்து விடுபடுவதற்கான வழி இருக்கின்றது.ஆசையையும் பற்றையும் முற்றிலும் அறுத்தெறிந்துவிட வேண்டும்.


உலகத்தோடு எந்தவிதமான தொடர்பையும் மனிதன் வைத்துக் கொள்ளக் கூடாது .எதையாவது நேசிப்பது,எதையாவது எதிர்ப்பது,எதன் மீதாவது பிரியம் வைப்பது -எதுவுமே இருக்கக் கூடாது. பாசம்,அன்பு,பிரியம் அனைத்தையும் உள்ளத்திலிருந்து துடைத்துவிட்டு உலகோடு எத்தொடர்பும் கொள்ளதிருக்க வேண்டும். இத்தொடர்புகள் அவன் மறுபடியும் பிறக்கக் காரணமாய் அமைகின்றன. இவற்றை அறுப்பதால் இருப்பிலிருந்து விடுபட்டு ‘இல்லாமை’ நோக்கி நகர முடியும்.இதுதான் ‘நிர்வாணம்’ இந்த நிர்வாண நிலையை மனிதன் அடைய வேண்டும் என்றே பெளத்தம் போதிக்கின்றது.

நிர்வாண நிலையை எவ்வாறு அடைவது? 

நிர்வாண நிலையை அடைய எட்டுக் கட்டளைகளான. (பாலி மொழியில்)

1.சம்மாதிட்டி

2.சம்மாசங்ப்போ

3.சம்மா வாசா

4.சம்மா கம்மந்தோ

5.சம்மா ஜீவோ

6.சம்மா வாயா மோ

7.சம்மா ஸதி

8.சம்மா சமாதி

இந்த எட்டுக் கட்டளைகளின் பொருள் என்ன? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்

(தொடருங்கே ஆய்வுன்ன சும்மாவா ? )

17 comments:

 1. நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  //உலகத்தோடு எந்தவிதமான தொடர்பையும் மனிதன் வைத்துக் கொள்ளக் கூடாது//===ம்ம்ம்ம்ம்.... சர்த்தான்.... அப்புறம் ஏன் புத்தர் தம்மைச்சுற்றி மற்ற மக்களுடன் தொடர்பு வைத்திருந்தார்...?

  ReplyDelete
 2. சிறந்த பதிவு சகோ. புதிய விபரங்களைத் தெரிந்து கொண்டோம்.

  ReplyDelete
 3. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்April 1, 2011 at 11:02 PM

  ////////இருப்பை உணராமையில்தான் ஆசையிலிருந்து விடுபடுவதற்கான வழி இருக்கின்றது.ஆசையையும் பற்றையும் முற்றிலும் அறுத்தெறிந்துவிட வேண்டும்.//////////
  எல்லோரும் ஆசையை துறந்துவிடவேண்டுமென புத்தர் "ஆசை"ப்பட்டார்.ஆசை யாரைத்தான் விட்டது.

  ReplyDelete
 4. சகோ முஹம்மத் ஆஷிக்

  நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  புத்த மதம் ஒரு இயங்குவியல் தன்மையில்லாத மதம்

  அது இப்படித்தான் பல கேள்விகளை நம்மிடையே எழுப்புகிறது

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். சகோ ஆஷிக் போல் ஆய்வுக் கட்டுரை. தொடக்கமே அருமை. தொடருங்கள் தொடருகிறோம் வல்ல இறைவன் துனையுடன். தோழமையுடன்

  ReplyDelete
 6. சகோ சுவனப்பிரியன்

  //சிறந்த பதிவு சகோ. புதிய விபரங்களைத் தெரிந்து கொண்டோம்.//

  ஆம் ஒரு விஷயத்தை பற்றி எழுத ஆரம்பிக்கும் போது அது சம்பந்தமாக நிறைய தெரிந்து கொள்கிறோம்

  ReplyDelete
 7. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

  //எல்லோரும் ஆசையை துறந்துவிடவேண்டுமென புத்தர் "ஆசை"ப்பட்டார்.ஆசை யாரைத்தான் விட்டது.//

  எப்புடி இதுலாம்

  ReplyDelete
 8. சகோ Feroz

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  /சகோ ஆஷிக் போல் ஆய்வுக் கட்டுரை. தொடக்கமே அருமை. தொடருங்கள் தொடருகிறோம் வல்ல இறைவன் துனையுடன். தோழமையுடன்//

  நன்றி சகோ

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பல புதிய தகவல்களோடு நல்ல ஆய்வு! தொடருங்க சகோ. இறைவன் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

  ReplyDelete
 10. சகோ அஸ்மா அவர்களுக்கு
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  இறைவன் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

  அல்ஹம்துலில்லாஹ்

  ReplyDelete
 11. சகோதரர் ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  பல தகவல்களை அறிந்து கொண்டேன். அடுத்த பதிவை எதிர்நோக்குகின்றேன். தரமான பதிவுகளை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 12. ஏழு.கலைக்கோவன்April 8, 2011 at 11:09 PM

  ஆய்வு கட்டுரை என்பதற்க்கான எந்த பின்பற்றுதல்களும், சொற்கள்
  கையாடல்ளும், ஏதும் இல்லாமல் தரமின்றி இருக்கிறது. இக்கட்டுரையின் நோக்கம் ஆய்வு இல்லை. புத்தரின் மீதும் அவரின் தம்மத்தின் மீதும் காழ்புணர்ச்சியும், சரியான புரிதல் இல்லாததால் நையாண்டித்தனமும் செய்யப்பட்டுள்ளது.

  தலைப்பே தவறு- யார் இந்த புத்தர்? சாதாரண மனிதருக்கே பயன்படுத்தாத வார்த்தைகளை உயர்வெய்தியவர்களுக்கு பயன்படுத்துவது
  உங்களின் அறியாமையும்,வெறுப்பையும் காட்டுகிறது.

  இதைத் தொடர்ந்து கட்டுரையின் துவக்கத்தில் என்ன தான் போதித்தார்? என்ற கேள்வியும் பண்பும் நாகரிகமும் இல்லாதது. விருப்பு வெறுப்பு அற்று திறனாய்வு செய்வது தான் ஆய்வில் மிக முதன்மையானது. முதலில் புத்தர் என்பதின் பொருள் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவில் ஹைதர் பாய் என்ன அப்படி புத்தரை நய்யாண்டி செய்து விட்டார்.அவர் சொந்தமாக கற்பனை செய்து எழுத வில்லை வரலாறு படித்து விட்டு எழுதுகிறார்

   Delete
 13. next time translate in English & Shinhala

  ReplyDelete
 14. please send English & Shinhala Translate

  ReplyDelete
 15. பதிவில் எழுத்துக்களுக்கு சிகப்பு கலரை தவிற்க்கலாமே அது மிகவும் தொந்தரவு பயக்கிறது கண்களுக்கு................. அருமையான ஆய்வு குறித்து எழுதியிருக்கிறீர்கள் நான் நிறைய தெரிந்துகொண்டேன் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் பாவிப்பானாக

  ReplyDelete
 16. அருமையான பதிவு காத்திருக்கிறோம் இன்னும் தெரிந்து கொள்ள

  ReplyDelete