அரபு மொழியில் புகழ் பெற்ற எழுத்தாளரான டாக்டர் ஆயிழ் அல்கர்னீயின்
‘லா தஹ்ஸன்’ எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இந்நூல்.ஆயினும் மொழிபெயர்ப்பின் வாடையே இல்லாமல் அழகான தமிழில் வந்திருக்கிறது.
மனித வாழ்க்கையில் ஏற்ப்படுகின்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில்,மிகவும் கவனத்துடன்,படிப்போர் மனதைத் தொடும் வகையில்,சிறந்த முறையில் இந்த நூல் அமைந்துள்ளது.குழப்பம்,தடுமற்றம்,நம்பிக்கையின்மை,பதற்றம்,கவலை,
சோர்வு,துக்கம்,அமைதியின்மை,விரக்தி,ஏமாற்றம்,இழப்பு,தோல்வி ஆகிய நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த நூல் அலசுகின்றது.
இனி இந்நூலிருந்து ஒரு சில வரிகள் உங்கள் பார்வைக்கு
உழைத்துக் கொண்டே இரு…!
வாழ்க்கையில் வேலயில்லாமல் சும்மா இருப்பவர்கள் தாம் பொய்களையும்,வதந்திகளையும் பரப்புகிறார்கள்.ஏனெனில்,அவர்களது சிந்தனை சிதறிக் கிடக்கிறது.
வேலையில்லாமல் இருப்பவனின் சிந்தனைதான் மிகவும் அபாயகரமானது.
அவனது சிந்தனை ஓட்டுநர் இல்லாமல் பள்ளத்தை நோக்கி வேகமாகச் செல்லும் வாகனத்தைப் போன்றது.அது வலப்பக்கமாகவும் சாயும்.இடப்பக்கமாகவும் சாயும்.
உனது வாழ்க்கையில் வேலை இல்லாத நாளை நீ சந்திக்க நேர்ந்தால் அன்றைய நாளில் கவலை,துக்கம்,துயரம் ஆகியவற்றை எதிர்கொள்ள நீ தயாராக இரு.ஏனெனில்,சோம்பல்,வாழ்க்கையின் இழுப்பறைகளிலிருந்து இறந்தகால,நிகழ்கால,வருங்காலக் கோப்புகளை மெதுவாக இழுத்து உனது சிந்தனைக்குக் கொண்டு வரும்.
அது உன்னைக் குழப்பத்தில் அமிழ்த்தும்.எனவே,எனக்கும் உனக்கும் நான் கூறும் அறிவுரை இதுதான் :வேலையற்று இருப்பதற்குப் பதிலாக,பயன் தரும் வேலைகளில் ஈடுபடு.ஏனெனில்,வேலையில்லாமல் இருப்பது உன்னை நீயே கொஞ்சம் கொஞ்சமாகப் புதைக்கும் செயல்.மெல்ல மெல்ல சாகடிக்கும் மாத்திரையால் நீ தற்கொலை செய்து கொள்ளும் விபரீதம்.
களைப்பாறுதல் என்பது பிறரது உரிமையைப் புறக்கணித்தலாகும்.சோம்பல். என்பது கைதேர்ந்த திருடன்.இந்த எண்ணப் போர்களில் சின்னாபின்னமாக்கப்பட்டு பலியாகப் போவது உனது அறிவுதான்.
எனவே இப்போதே எழு! தொழு,அல்லதுஓது,அல்லது இறைவனைத் துதி,அல்லது நூல்களைப் படி,அல்லது எழுது,அல்லது உனது அலுவலகத்தை ஒழுங்குபடுத்து,அல்லது வீட்டை அழகுபடுத்து,அல்லது பிறருக்கு உதவு.இப்படி ஏதாவது ஒரு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இரு.
உழைப்பு எனும் கத்தியால் சோம்பலை அறுத்து விடு.நீ இத்தகையப் புத்துணர்ச்சி தரும் செயல்பாடுகளை நிறைவேற்றினாலே போதும்.உனது வாழ்வில் ஐம்பது சதவீத மகிழ்ச்சி ஏற்பட்டு விடும்.இது உலக மருத்துவர்கள் தரும் உத்தரவாதம்.
சுயசார்பற்று வாழாதே!
பிறரது பண்புகளை உனக்குள் புகுத்தாதே. மற்றவர்களில் நீ மறைந்து போகாதே. இது நிரந்தர வேதனை.பெரும்பாலானோர் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காகத் தங்களையே மறந்து விடுகிறார்கள். தங்களது குரல்களை,அசைவுகளை,வார்த்தைகளை,திறமைகளை,நல்ல பண்புகளை மறந்து விடுகிறார்கள்.இறுதியில் தமது இருப்பையும் சுயசார்பையும் இழந்து போலித்தனமாக வாழ்கிறார்கள்;அதனால் அவதியுறுகிறார்கள்.
ஆதி மனிதர் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை,ஒரே வடிவில் இருவர் இருக்க மாட்டார்கள்.பிறகு எப்படி அவர்களது குணங்களும் திறமைகளும் ஒரே மாதிரி இருக்க முடியும்?
நீ மற்றொருவன், உலகில் உன்னைப் போல் வேறு எவரும் பிறந்திருக்க முடியாது.இனி பிறக்கவும் முடியாது.
நீ இவனை விட முற்றிலும் மாறுபட்டவன்.எனவே கண்மூடித்தனமாக இவனைப் பின்பற்ற வேண்டும்,அவனைப் போல வாழ வேண்டும் என உன்னை நீ வற்புறுத்தாதே.
நீ நீயாக வாழு.உனது இயல்பு எதுவோ அதன்படி வாழு.
நீ எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறாயோ அவ்வாறு வாழு.உனது குரலை,பேச்சு நடையை மாற்றாதே.உனது நடை எதுவோ அவ்வாறே நட.அதற்கு மாறு செய்யாதே.வேத அறிவிப்புக்கு ஏற்ப உன்னை நீ செதுக்கு.ஆனால்,உனது இருப்பை வீணாக்கி விடாதே. உனது குணம் என நாங்களும் உன்னைப் புரிந்து வைத்திருக்கிறோம்.
உனக்கென ஒரு சுவை உண்டு.உனக்குரிய சுவையை சுவைத்து,நிறத்தை ரசித்து நீ வாழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.ஏனெனில்,நீ இவ்வாறே படைக்கப் பட்டிருக்கிறாய்.இதுதான் உனது குணம் என நாங்களும் உன்னைப் புரிந்து வைத்திருக்கிறோம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் சுயசார்பற்றவராக இருக்க வேண்டாம்.(நூல்:திர்மிதி)
மனிதர்களின் பண்புகள் மரஞ் செடிகளின் உலகத்திற்கு ஒப்பானது.அவற்றில் சில இனிக்கும்.சில புளிக்கும்.சில உயரமாக இருக்கும்.சில குட்டையாக இருக்கும்.மனிதர்களின் பண்புகளும் இப்படித்தான் அமைந்துள்ளன.எனவே,நீ வாழைப் பழத்தைப் போன்றவனாக இருந்தால்,எட்டிகாயைப் போல மாற நினைக்காதே.
ஏனேனில்,உனது அழகும்,மதிப்பும் நீ வாழைப் பழமாக இருப்பதால் தான் கிடைக்கின்றன.நமது நிறம்,மொழி,திறமை,ஆற்றல் ஆகியவை வேறுபட்டிருப்பது இறைவனது சான்றுகளில் ஒன்று.அவனது சான்றை நீ மறுக்காதே.
நூல்: கவலைப்படாதே
ஆசிரியர்:
டாக்டர் ஆயிழ் அல்கர்னீ
தமிழில்
டாக்டர் அ.ஜாகிர் ஹுசைன் பாகவி எம்.ஏ.,பி.ஹெச்.டி
அரபு மொழி உதவிப் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம்.
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை -600012
நல்லதொரு புஸ்த்தக அறிமுகம்
ReplyDeleteஇப்புத்த்கத்தை படிக்க ஆவலாக
இருக்கிறேன்
சலாம்!
ReplyDeleteசிறந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தோழரே!
@ரஹ்மத் நிஸா
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
@சுவனப்பிரியன்
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
அருமையான புத்தகம். உற்சாகமான கருத்துக்கள்.நன்றிசகோதரா!
ReplyDelete@மு.ஜபருல்லாஹ்
ReplyDeleteபடித்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
ReplyDeleteஅருமையான புத்தகம். வாங்கி படிக்கணும். சகோ,சென்னையில் வெளியிட்டது உங்களுக்கு{சவுதிக்கு}
எப்படி தெரிய வந்தது. எங்கு வாங்குனிர்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅருமையான அறிமுகம் ஹைதர் அண்ணே.தாங்கள் புத்தகத்திலிருந்து கொடுத்த ஒரு சில வரிகளை படிக்கும்பொழுதே மெய் மறந்துவிட்டேன்.இன்ஷா அல்லாஹ் முழு புத்தகத்தையும் படித்தால் என்னவாகுமென்று சொல்லவே தேவையில்லை.
@ஆயிஷா அபுல்.
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//சென்னையில் வெளியிட்டது உங்களுக்கு{சவுதிக்கு}
எப்படி தெரிய வந்தது. எங்கு வாங்குனிர்கள்.//
சென்னையில் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் வாங்கி சவூதி வருகின்ற நண்பர்களிடம் கொடுத்து விட்டார்கள்.
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
படித்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி
நல்ல புத்தகம் சகோ
கண்டிப்பாக வாங்கி படியுங்கள்
அஸ்ஸலாமு அழைக்கும். புத்தக மதிப்புரை வழங்கி வாங்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள். தோழமையுடன்
ReplyDelete@Feroz
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
நல்ல விஷயங்களை தேடி எடுத்து பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்.
உங்களுக்கு ஆவல் ஏற்பட்டதில் மகிழ்ச்சி
வாசிப்பு பழக்கத்தை அதிகமாக்குங்கள்
நன்றி சகோ
ஸலாம் சகோதரரே நீ வீரும்புவதை உன் சகேதரனுக்கும் விரும்பு என்று நபிகள் நாயகம் சொன்ன மாதிரி படித்ததை பகிர்ந்துள்ளீர்கள்..நன்றி..
ReplyDelete@Sadikeen
ReplyDeleteஆமாம் சகோ நான் விரும்பியதை எனது சகோதரர்களுக்கும் விரும்புகிறேன்
உங்களுடைய வருகைக்கு நன்றி சகோ