Thursday, April 14, 2011

'ஆபாசம் நின்று கொல்லும்’

ரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது.

வரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.

1,திருமண முறிவுகள் அதிகமானது

2.அதிக வரி வசூலித்து மக்களுக்கு இலவச ரொட்டியும் கேளிக்கைகளும் அளித்தது

3.இன்ப வெறி-அதுவும் விளையாட்டுப் போட்டிகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது.

4.மக்களின் தரம் தழ்ந்ததை உணராமல்,படைக்கலன்களை வாங்கிக் குவித்தது.
                                                                                                                                                                          
5.சமயம் என்பது வெறும் குறியீடாக மாறி தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தம் 
இல்லாமல் போனது.


இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கேளிக்கையில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் -நுகர்வுகளில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் அழிவுகளின் பக்கமாகத்தான் செல்ல வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய மேலை நாடுகள் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

அங்கு நிலைமை என்ன? திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.லிவிங் டுகெதர் -கொஞ்ச நாளைக்குச் சேர்ந்து வாழ்வோம்; பிரிந்து விடுவோம்; கல்யாணமெல்லாம் தேவையில்லை என்கிற நிலை அங்கு உருவாகி விட்டது.

திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது மிகச் சாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது.

இதன் காரணமாக சிங்கிள் பேரண்ட் ஃபேமிலி -தாயுடனோ அல்லது தந்தையுடனோ வாழும் நிலை. மொத்தத்தில்,குடும்ப வாழ்வே அங்கு சிதைந்துப் போய் விட்டது.

இன்று ஆபாசம் ஆக்டோபஸ் மாதிரி ஆகி விட்டது. அதனுடைய கால்கள் பதிக்காத இடமே இல்லை. ஆபாசத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை இன்று உருவாகி விட்டது.

ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்கிற போது, இந்த ஆபாசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று சொல்கிறார்கள். ஆபாசத்தை வரையறை செய்யவே முடியாது என்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள், காலத்துக்கு காலம் இதனுடைய வரைமுறை மாறும் என்கிறார்கள்.

இங்கே ஆபாசமாகக் கருதப்படுவது மேலை நாட்டில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை; ஒரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவது இன்னொரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை.

ஆகவே ஏன் தலையைப் போட்டு உடைத்துக் கொள்கிறீர்கள்? இது முடியவே முடியாத காரியம் என்று சொல்கிறார்கள்.

ஏன் முடியாது? ஆபாசத்தை ஏன் வரையறை செய்ய முடியாது?
.மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காதிருந்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.மறைவில் பேச வேண்டியதை வெளியில் பேசினால் ஆபாசம்.

.நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை வெளிப்படையாகச் செய்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.

.திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு எந்த உறவை வைத்துக் கொண்டாலும் அது ஆபாசம்.

.இச்சைகளையும் வக்கிரங்களையும் தூண்டக் கூடிய எல்லாச் செயல்களும் ஆபாசம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பு.

இன்று சினிமாவிலே பெண்களை ரசித்துப் பார்க்கிறீர்களே, உங்கள் பெண்களை இது போன்ற காட்சிகளில் நடிக்க விடுவதற்கு தயாரா?

உங்களுக்கு பாவம் என்றால், உங்களுக்கு ஆபாசம் என்றால்,உங்களுக்கு அசிங்கம் என்றால் அந்தப் பெண்களுக்கும் அது ஆபாசம் தான்.

ஒரு தீமைக்கு உடனடியாக யாரும் பலியாகி விடுவதில்லை. அது சில கட்டங்களைக் கடந்து வருகிறது.

முதலாவதாக அப்சர்வேஷன் -பார்த்தல்; இரண்டாவதாக இமிடேஷன் -அதைக் காப்பி அடித்தல்; மூன்றாவதாக டிசென்சிடிசெஷன்  -மரத்துப் போதல். கடைசியில் ஜஸ்டிபிகேஷன் -அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறோம்.

நாமே இதற்குப் பலியாகி விட்டோமே! குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே! அப்படியானால் நாம் மரத்துப் போன மனிதர்களாக மாறி விட்டோம் என்பதுதானே பொருள்?

மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும்? மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள்.

நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா?

ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை.

பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம்.
அடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம்.

அடுத்தப்படியாக கட்டுபாடற்ற பாலியல் சுதந்திரம். செக்ஸ் எனபது சுதந்திரமானது. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்?நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் குறுக்கிடாதீர்கள் எனும் மனப்பான்மை.

மக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம்.

ஆபாசத்தை எதிர்ப்பது எப்படி?

ஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.

’ஆபாசத்தைப் பார்க்கதே; ஆபாசத்தைப் பேசாதே; ஆபாசத்தைச் செய்யாதே!

உங்கள் கண்களை,உங்கள் காதுகளை,உங்கள் நாவை,உங்கள் கால்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


வெட்கத் தலங்களின் மூலம் நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல ஆபாசம்...!
‘கண்கள் செய்யும் விபச்சாரம்;காதுகள் செய்யும் விபச்சாரம்;கால்கள் செய்யும் விபச்சாரம்’ என்று நபிகள் (ஸல்) அவர்கள் பட்டியல் போட்டார்கள்.

 இறுதியாக, ஆபாசத்தை வளர்க்கிறார்களே அவர்களிடம் ஒரு வேண்டுகோள்:
‘உங்கள் வயிற்றை வளர்ப்பதற்காக எங்கள் ஒழுக்கத்தைச் சாகடிக்காதீர்கள்

40 comments:

 1. பல நாட்கள் கழித்து நல்ல கருத்துகள் அடங்கிய பதிவை வாசித்த திருப்தி!

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அளிக்கும் வரஹ்...

  அளவுகோள் அறியா ஆபாசத்துக்கு எதிராக நல்ல விழிப்புணர்வூட்டும் ஒரு பதிவு. நன்றி சகோ.ஹைதர் அலி.
  ----------------------------------------
  //மூன்றாவதாக இம்யூனிசேஷன் -மரத்துப் போதல்//--இது சரியா என்று சற்று கவனியுங்கள்.

  ReplyDelete
 3. உண்மையாகவே மிக நல்ல பதிவு. ரோம பேரரசு வீழ்ந்த ஐந்து காரணங்களில் தமிழ் நாட்டில் முதல் மூன்று காரணங்களும் மெதுவாக ஐந்தாவது காரணமும் நடந்து வருகிறது. கவலை அளிக்கிறது!

  ReplyDelete
 4. கலையுலகுக்கு புதுமுகங்கள் என்று படத்துக்கு படம் புதிது புதிதாக குடும்ப பெண்களை கொண்டு வந்து சீரழிக்கும் பாலசந்தர் பாரதிராஜா போன்ற டைரக்டர்கள் தங்கள் குடும்ப பெண்களை ஒரு போட்டோ கூட எடுக்க அனுமதிப்பதில்லை. மற்ற குடும்பங்கள் எப்படி சீரழிந்து குட்டிச் சுவரானாலும் பரவாயில்லை. தான் வயிறு வளர்க்க வேண்டும். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.

  இவர்கள்தான் சிறந்த டைரக்டர்கள்.

  சிந்திக்க வைத்த பதிவு.

  ReplyDelete
 5. சகோதரர் ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அசத்தலான கட்டுரை. ஜசக்கல்லாஹு க்ஹைர்.

  உங்கள் கல்வி ஞானத்தை பெருக்க இறைவன் போதுமானவன்...

  நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 6. கை குடுங்க நண்பா நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. //நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா?//

  சரியான கேள்வி.

  //மக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம்.//

  இதை vice versaஆகவும் சொல்லலாம். ஆபாசங்கள் பெருகுவதால், நாண உணர்வு குறைந்துவிட்டது.

  எச்சரிக்கையாக இருக்க விரும்புபவர்களுக்கு பல படிப்பினைகள் தரும் கட்டுரை.

  ReplyDelete
 8. அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்,
  ஹைதர் அலி பாய்,

  பல நாட்களுக்கு பிறகு மீண்டும் மூளையை கசக்க சொல்லும் பதிவு. நீங்கள் குறிப்பிட்டுள்ள
  விஷயத்திற்கு கால்கள் கிடையாது. இற‌க்கைதான் உண்டு. அரபியில் 'ش'என்னும் எழுத்துக்கு ஒரு
  விஷேஷமுண்டு. அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் சொல் பரவுவதை குறிக்கும். உதாரணத்துக்கு,
  ஷம்ஸ், ஷய்த்தான், ஷஜர்(மரம்), ஷிர்க் இப்படி... அது போல இந்த ஆபாசமும் (ஷஹூத்)
  பரவுகின்ற ஒரு நோயே. இத தடுக்க ஈமான், மறுமையின் மீதான பயம், கேள்வி கணக்கின் பயம் போன்றவை மட்டுமே மருந்து. வேறெந்த மாற்று வழியும் இல்லை.முன் பின் தெரியாத ஆண்/பெண்ணிடம் என்று தொடங்கி இன்று பல இடங்களில் தத்தம் குழந்தைகளையே பலியாக்கிப்
  பார்க்கும் இந்த அவலத்தை ஒழிக்கத்தான் அல்லாஹூ சுப்ஹானஹூவத ஆலா பர்தாவை அணிய சொன்னான், ஆண்களுக்கு பெண்களைக் கண்டால் தலை குனிய சொன்னான். ஹ்ம்ம்... ஊரெங்கும் புர்க்காவைப் போடாதே, பெண்களை அடிமையாக்காதே என்று உப்புக்கு உதவாத கோஷத்தை ைப்பவர்களுக்கு
  இதன் பின்னுள்ள அருமருந்து தெரியாமல் போனதில் வியப்பே இல்லை.

  அல்லாஹூ ஹாஸிப்னி ஹிஸாபன்ய் யஸீறா
  (யா அல்லாஹ் மறுமை நாளில் எனது கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக்)
  இந்த து'ஆவை மட்டுமே நாள் முழுதும் நினைவில் வைத்தால் போதும், மனதில்
  அந்த நாளின் மீதான பயம் போதும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் வழி
  காட்டிடவேண்டும்!!

  ReplyDelete
 9. ஆணுக்கு காம உணர்வுகள் அதிகமாமே!

  ReplyDelete
 10. @r.selvakkumar அவர்களுக்கு

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. @முஹம்மத் ஆஷிக்

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //மூன்றாவதாக இம்யூனிசேஷன் -மரத்துப் போதல்//--இது சரியா என்று சற்று கவனியுங்கள்.//

  சுட்டி காட்டிமைக்கி நன்றி

  திருத்தி விட்டேன்

  ReplyDelete
 12. @bandhu அவர்களுக்கு

  உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 13. @சுவனப்பிரியன்

  சிந்திக்க வைத்த பின்னூட்டம்

  நன்றி சகோ

  ReplyDelete
 14. ASSALAMU ALAIKKUM BROTHER.

  TAMIL CONVERTER WORK PANNUDHULAI EVENING IDHARKKU PINNOOTTAM PODUKIREN.

  ReplyDelete
 15. நல்ல அசத்தலானபதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 16. @Aashiq Ahamed

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 17. @ஹுஸைனம்மா

  //இதை vice versaஆகவும் சொல்லலாம். ஆபாசங்கள் பெருகுவதால், நாண உணர்வு குறைந்துவிட்டது.//

  நீங்க சொன்னது தான் சரி

  இப்படியும் எழுதியிருக்கலாம்

  நன்றி சகோ

  ReplyDelete
 18. @அன்னு
  வ அலைக்கும் வஸ்ஸலாம்
  வ றஹ்மத்துல்லாஹ்

  //அல்லாஹூ ஹாஸிப்னி ஹிஸாபன்ய் யஸீறா
  (யா அல்லாஹ் மறுமை நாளில் எனது கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக்)
  இந்த து'ஆவை மட்டுமே நாள் முழுதும் நினைவில் வைத்தால் போதும், மனதில்
  அந்த நாளின் மீதான பயம் போதும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் வழி
  காட்டிடவேண்டும்!!//

  இந்த துஆ வை மனனம் செய்து கொள்கிறேன்.

  வழிகாட்டலுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 19. @kalai
  //ஆணுக்கு காம உணர்வுகள் அதிகமாமே!//

  அப்புடியா?

  தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 20. @அந்நியன் 2
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  NHM ரைட்டர் உங்களிடம் இல்லையா

  மிகவும் எளிமையானது

  நன்றி சகோ

  ReplyDelete
 21. @Lakshmi

  ரொம்ப மகிழ்ச்சி சகோ

  ReplyDelete
 22. அஸ்ஸலாமு அலைக்கும்,


  விழிப்புணர்வூட்டும் நல்ல அருமையான பதிவு சகோ

  ReplyDelete
 23. மேலதிகமான தகவலை onlinepj.com ற்கு சென்று அறிந்துகொள்ளலாம் நண்பா!

  ReplyDelete
 24. @ஆயிஷா அபுல்.

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 25. ஆபாசத்தை எதிர்ப்பது எப்படி?

  ஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.
  இந்த கருத்து அனைத்து தர மக்களுக்கும் செல்லவேண்டிய கருத்து.
  மிக சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 26. @மு.ஜபருல்லாஹ் அவர்களுக்கு

  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 27. நண்பரே நல்ல கருத்துக்கள் தொடருங்கள்

  இனி நானும் உங்களை தொடர்கிறேன்

  ReplyDelete
 28. @ரஹ்மத் நிஸா

  உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 29. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நல்ல பதிவு சகோ.

  //ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை//

  இதை ஒவ்வொரு டைரக்டர் வீட்டு வாசலிலும் எழுதி ஒட்டி வைக்கலாம். இதுபோன்ற ஒரு கடமை உணர்ச்சி இருந்தால் ஊரும் உலகமும் உருப்பட்டு விடுமேன்னு அதை ஃபாலோ பண்ணுவாங்களோ மாட்டாங்களோ..? ஹ்ம்.. என்னத்த‌ சொல்ல..?

  அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!

  ReplyDelete
 30. @அஸ்மா

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்.. //அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!// இதயங்களை புரட்டக்கூடியவனே எங்கள் இதயங்களை இஸ்லாத்தின் பால் புரட்டுவாயாக? இந்த துஆ நினைவுக்கு வருகிறது சகோ நன்றி சகோ

  ReplyDelete
 31. Assalamu alaikum,

  nalla arumayana karuthu, valthukkal

  ReplyDelete
 32. assalamu alaikkum such a wonderful article

  ReplyDelete
 33. @shahul
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  உங்களின் வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 34. @khaleel

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 35. நல்ல பதிவு.. காலத்தின் தேவை.. வசனங்களை இன்னும் கூர்மையாக சொல்ல நினத்திருக்கிரீர்கள்... அனால், எல்லாவறையும் இங்கே சொல்ல முடியாது என்று விட்டு விடீர்கள். சொல்ல வந்தது எல்லா வற்றையும் சொல்லியிருக்கலாமே.. எனது ஐந்து நட்சத்திர வாக்கு உங்களுக்கே.. தொடருங்கள்..

  ReplyDelete
 36. //மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும்? மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள்.

  நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா?

  ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி...! தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை.

  பெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம்.
  அடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம்.
  ///// செம்ம செம்ம செம்ம.... அருமையான பகிர்வுக்கு நன்றி அண்ணே...
  அஸ்ஸலாமு அழைக்கும்

  ReplyDelete
 37. என்னோட மூஞ்சில குத்துற மாதிரி இருக்கு இந்த பதிவு... இந்த சினிமா பார்க்குறத குறைக்கிரதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க சகோ...

  ReplyDelete
 38. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..

  மாஷா அல்லாஹ்..

  அருமையான பகிர்வு..

  நெத்தியடி வார்த்தைகள்..

  தொடரட்டும் உங்கள் வெற்றி படலம் வல்ல இறைவனின் உதவியோடு...

  ReplyDelete