Monday, October 31, 2011

பயங்கர தீவிரவாதியின் உண்மை கதை

அந்த நாள் (11.9.2001) காலை பத்து மணிக்கு நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியிலுள்ள தனது இல்லத்திலிருந்து 23 வயது நிரம்பிய முஹம்மது சல்மான் ஹம்தானி என்ற இளைஞர் (பாகிஸ்தானி- அமெரிக்கா) ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் தனக்குக் கிடைத்திருந்த புதிய ஆராய்ச்சியாளர் பதவியில் சேருவதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
முஹம்மது சல்மான் ஹம்தானி
அப்போது மன்ஹாட்டனிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கடுமையான புகைமூட்டம் வருவதைக் கண்டு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்கிறார்.

அவசரகால மருத்துவ சிகிச்சை பற்றிய தொழில்நுடபம் பயின்றிருந்த அவர் அந்தக் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தன்னிடமிருந்த சான்றிதழையும் அடையாள அட்டையையும் காவலர்களிடம் காண்பித்து மேலே சென்றார்.

அப்படிச் சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. அவரைப் பற்றி தகவல்களும் வெளிவரவில்லை.

2605 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இந்த நிகழ்வு அமெரிக்காவையே உலுக்கியது.அதன் காரணமாக உலகில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன. அமெரிக்காவிலுள்ள சிறுபான்மை மக்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டனர்.அமெரிக்கா ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்று சொல்லித் தக்குதல்களைத் தொடங்கியது.

இச்சம்பவம் பற்றி சல்மான் ஹம்தானியின் தாயார் திருமதி ஹம்தானி ‘இந்து’ நாளிதழ் செய்தியாளரிடம்,நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடம் தாக்கப் பட்டபோது அதில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் எனது மகன் அங்கு சென்றிருக்கிறான். இயல்பாகவே அன்பும் இரக்கமும் பிறருக்கு உதவும் எண்ணமும் கொண்டிருந்த அவன் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டதில் வியப்பில்லை என்றார்.

இந்த வீடியோவை பாருங்கள் சல்மானின் தாயார் மற்றும் நண்பர்கள்,அவர் படித்த கல்லூரியின் ஆசீரியர்களின் வாக்குமூலங்கள்.


மகனின் நிலை பற்றித் தெரியாத அவர் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி தனது மகனின் இறந்த உடல் கிடக்கிறதா என்று பார்த்துள்ளார். ஒன்றும் கிடைக்கவில்லை.

பின்னர் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு தனது மகன் சிகிச்சை பெற்று வருகிறானா என்று பார்த்து விசாரித்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் தனது மகன் இல்லை என்பதை அறிந்த அவர் பெரும் துயரத்துக்கு ஆளானர்.காவல்துறையினரிடம் சென்றும் விசாரித்தார் ஒன்றும் பலன் இல்லை.

ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் நியூயார்க் காவல் துறையினர் சல்மான் ஹம்தானி தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் என்று செய்தியை பரப்பினர். இதனால் அவரது தாயார் பெரிதும் அதிர்ச்சி அடைந்து தன் மகன் பொருட்டு பிரார்த்தனை செய்வதற்காக அவர் மக்காவுக்குச் சென்றார்.அந்த நேரத்தில் ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழ் சல்மான் ஹம்தானி காணமால் போயிருக்கலாம் அல்லது தலைமறைவாகி இருக்கலாம் என்று தினமலர் பாணியில் செய்தி வெளியிட்டது.

அன்று காலை 11 மணி அளவில் அவர் வர்த்தக மையக் கட்டிடத்தின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தார் என்றும் கையில் குர்ஆனை வைத்துக் கொண்டிருந்தார் என்றும் அந்த இதழ் தினமலர் பாணியில் அடித்து விட்டது

அவர் பிறப்பால் பாகிஸ்தானி இது போதுமே சந்தேகப்பட உலக மீடியாக்கள் முழுவதும் பாகிஸ்தான் என்றலே தீவிரவாத நாடு மார்க்கேட்டில் காய்கறி விற்பது போல் வெடிகுண்டுகளை விற்கும் நாடு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. நம்ம விசயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூட போடாத சண்டையா? பயன்படுத்தாத ஆயூதமா?.

பிரபல எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் பாகிஸ்தான் பயண அனுபவம் பல போலி பிம்பங்களை உடைக்கிறது (கொஞ்சம் பாருங்கள்)


சரி விஷயத்துக்கு வருகின்றேன்
அமெரிக்காவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் சீக்கியர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.பல்பீர்சிங் சோதி உள்ளிட்ட பல சீக்கியர்கள் கொல்ல்லப்பட்டனர். முஸ்லிம்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பலரும் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் சல்மான் ஹம்தானி இல்லை.

தனது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும்; சிறையில் இருக்கக்கூடும் என எண்ணியிருந்த அவரது தாயாரின் நம்பிக்கையும் இது பின்னர் தகர்த்தது. ஒரு திருப்பமாக, சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பின் சல்மான் ஹம்தானியின் இறந்த உடலைத் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் நியூயார்க் காவல் துறையினர்க்கு கிடைக்கிறது.

எனினும் அவர்கள் சுமார் ஆறுமாதங்களுக்குப் பிறகு அதாவது 2002, மார்ச்சில் தான் புகன் விசாரனையை முடித்துக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போன போது சல்மான் ஹம்தானி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.
முஹம்மது சல்மான் ஹம்தானியின் உடலை அமெரிக்க பள்ளிவாசலில் அடக்கம் பன்ன கொண்டு சென்றபோது.

அதன்பின்னர் சல்மான் ஹம்தானி ஒரு வீரராக அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப் பட்டார் அவரது பெயர் யு.எஸ் பேட்ரியாட் ஆக்டில் இடம் பெற்றது. உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது அதில் சிக்குண்டவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்றபோது வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

2002 ஆம் ஆண்டு நியூயார்க் இஸ்லாமிய பண்பாட்டுக் கழகம் நடத்திய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் புளூம் பெர்க்கும் நகர காவல்துறை ஆணையாளர் ரே கெல்லியும் காங்கிரஸ் செனட்டர் கேரி ஆக்கர் மேனும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு சல்மான் ஹம்தானியின் வீரத்தை நினைவுகூர்ந்தனர்.

களங்கப்படுத்தப்பட்ட தனது மகன் மீட்சி பெற்றார் எனக் கூறுகிறார் திருமதி ஹம்தானி.
(ஆதார நூல்கள்.நன்றி: இந்து 12.9.11, நன்றி சமரசம் 16-31 ஆக் 
படங்கள் கூகுள் வீடியோ யூ டியுப்)

Friday, October 28, 2011

சவூதியில் மங்காத்தா (கள்ளசூதாடிகள்)

மலேசியாவில் மங்காத்தா என்ற பதிவில் மலேசியாவில் சூதாட்டத்தினால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் அவலம் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள. இங்கே அழுத்துங்கள் இதனுடைய தொடர்ச்சி தான் இனி வரபோகிற பதிவு.


பல லட்சக்கனக்கான தொழிலாளர்கள் வன்ன வன்ன கனவுகளுடன் வெளிநாட்டு வேலைக்காக வந்தாலும் எல்லோருக்கும் சரியான வேலை அதற்கான வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. சிலருக்கு நல்ல வேலை கிடைத்தும் மனநிறைவு அடைவதில்லை. மேலும் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று யோசிக்கிறார்கள், யோசித்து சரியான வழிகளில் முயற்சிப்பது தவறு இல்லை அது வரவேற்க வேண்டிய ஆரோக்கியமான விடயமும் கூட ஆனால்?


பணம் ஒன்றே குறிக்கொளாய் குறுக்கு வழியில் எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற எண்ணமே பல தகாத அசிங்கமான தொழில்களுக்கும் செயல்களுக்கும் ஈட்டு செல்கிறது. அரபிகள் நம்பி ஒப்படைத்து செல்லும் அலுவலகத்தில், கடைகளில் திருடுவது.சாரயம் காய்ச்சுவது,வட்டிக்கு விடுவது கள்ளத்தானமாக சூதாடுவது இவையெல்லாம் இங்கு தடை செய்யப்பட்டு இருந்தும் அதனை மீறி செயல்படுவது இதனால் சிலர் ஆதாயமடைய பலரின் வாழ்க்கையை நாசமாகி விடுகிறது.
                                                          மலேசியா சூதாட்ட கடை
மலேசியாவை பொறுத்த வரை சூதாட்டம் சட்டப்படி தடை செய்யப்படவில்லை பிரத்யேகமான சூதாட்ட கடைகள் இருக்கின்றன. ஆனால் சவூதியில் சூதாட்டம் தடை செய்யப்பட்ட குற்றசெயல் மலேசியாவில் உள்ள சூதாடிகளை விட இங்குள்ள கள்ளசூதாடிகள் இருவகையான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.


ஓன்று. சூதாட்டத்தில் பெரும்பாலும் பணத்தை இழந்து ஏமாற்றப்படுகிறார்கள்

இரண்டு. ஒரு பெரும் பரிசுத் தொகை விழுந்து அதனை அந்த ஏஜெண்ட் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டால் அதை இங்கு யாரிடமும் போய் முறையிட முடியாது (அப்படி நிறைய சம்பவங்கள் நடந்து மனநோயளியானவர்கள் இருக்கிறார்கள்)


பீகாரைச் சேர்ந்த நண்பன் 10 ரியால் எழுதினால் 4000 ரியால் கிடைக்கும் என்று சொன்னவனிடம் ஏன் பத்து ரியாலுக்கு எழுதுகிறாய் 100 ரியாலுக்கு எழுது 40000 ரியால்.இந்திய மதீப்பிற்கு 520000 கிடைக்குமே என்று கிண்டலாக சொன்னபோது. இல்லே பாய் அவ்வளவு எழுதுனா ஏஜெண்ட் கொண்டு வந்து தரமாட்டார்கள் என்று இயல்பாக சொன்னார்.


தூங்க போவதற்கு முன் பயங்கரமாக ஒதி கொண்டு தூங்க செல்வார்
அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் கனவில் வந்து நல்ல அடிக்கக் கூடிய நம்பராக சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில். இப்படித்தான் ஒருமுறை கனவில் நம்பர் வந்தது அதில் இரண்டாயிரம் ரியால் அடித்தது என்றவரிடம். அந்த கனவில ஷைத்தான் வந்திருப்பான் என்றேன். கடுப்பாகி விட்டார்.
தாய்லாந்து லாட்டரி என்று சொல்லப்படுகின்ற இந்த சூதாட்ட லாட்டரிக்கு பெரும் நெட்வேர்க் இருக்கிறது பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இதன் எஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.


எனக்கு தெரிந்து திருநேல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நடுத்தர வயதுடைய நண்பர் 8 வருடங்களாக ஊருக்கு போகமாலும் வீட்டுக்கு பணம் அனுப்பாமாலும் சம்பாதிக்கும் முழு சம்பளத்தையும் தாய்லாந்து லாட்டரியில் தொலைத்துக் கொண்டிருந்தவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். 


இங்குள்ள இஸ்லாமிய அமைப்பு மூலமாக அவரை சடலத்தை மீட்டெடுத்து. அவருடைய ஊர் முகவரியை கண்டுபிடித்து அவருடைய மனைவியிடம் உங்கள் கணவர் இறந்துவிட்டார் அவருடைய உடலை ஊருக்கு அனுப்புகிறோம் என்று சொன்னபோது அவருடைய மனைவி சொன்ன பதில் ஆச்சர்யமடைய வைத்தது. அவர் இறந்து எட்டு வருடங்களாகி விட்டது குடும்பத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை நானும் இரண்டு பெண் குழந்தைகளும் பீடி சுத்தி தான் கஞ்சி குடிக்கிறோம். அவர் உயிரோடு இருந்த வரை எந்த நல்ல, கெட்ட காரியங்களை பற்றியும் விசாரித்ததில்லை. அவர் எங்களுக்கு பயன்படவில்லை அதனால் அவரை அங்கேயே புதைத்து விடுங்கள் என்றார்.


இங்கு என் நண்பர் மாதம் 1500 ரியால் சம்பளம் வாங்கும் கடைநிலை ஊழியர் அதில் மாதம் 1000 ரியாலுக்கு தாய்லாந்து லாட்டரி எழுதுவார். ஒரு மூன்று நமபர்களை எடுத்துக் கொண்டு அதை பலவகைகளை மாத்தி மாத்தி எழுதி ஒவ்வோரு நம்பருக்கும் பத்து பத்து ரியாலாக எழுதுவார்.
இப்படிதான் எழுதுவார்கள் (இது நண்பனுக்கு தெரியாமல் அவர் அறையில் சுட்டது ஒருவேளை நாளை இந்த பதிவை நண்பன் படித்தால் என்னை அடிக்க கூட வரலாம்)


மனநோயளி போன்று எதோ யோசனையில் நம்பர்களை மாத்தி மாத்தி எழுதிக் கொண்டிருப்பர் அதற்கு சில ஷாட்டுகள் வைத்திருப்பார் அதையும் பாருங்கள்.


இவரை எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன் ஒரு கட்டத்தில் உன் வேலையை பாத்துகிட்டு போ என்று கோபமாக திட்டி விட்டார். வெளிநாட்டிற்கு வந்து வாலிபத்தையும் இழந்து மனைவி மக்களோடு இருக்கும் குடும்ப சூழலும் அற்றுப் போய் ஹராமாக (தடுக்கப்பட்ட) வழியில் செல்பவர்களை நினைத்து வேதனைப் பட்டுயிருக்கிறேன். எப்பவாவது யாருக்காவது,அல்லது இவர்களுக்கு விழுகிற பரிசுத்தொகைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.


திருவள்ளுவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

இதனை சாலமன் பாப்பையா அவர்கள் விளக்கும்போது: 
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.


திருவள்ளுவர் மட்டுமல்ல தமிழ் சங்க இலக்கிய நள தமயந்தி கதையில்.


இக் கதைகளின்படி, நளன் நிடத நாடு என்னும் நாட்டை ஆண்டுவந்தான். நீரும் நெருப்பும் இன்றிச் சமையல் செய்வதில் நளன் வல்லவனாம். இவனுடைய மனைவி தமயந்தி. மகிழ்ச்சியுடன் குறைவற்ற வாழ்வு வாழ்ந்துவந்த இவனைச் சனி பீடித்ததால், துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல் நாட்டு அரசனுடன் சூது விளையாட்டில் ஈடுபட்டுத் தனது நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன் தானும் வருவேன் எனத் தமயந்தி பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும் முள்ளிலும் நடந்து துன்பப் படுவது கண்டு பொறாத நளன், வழியிலேயே அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப் பெற்று மனைவியுடன் வாழ்வதையும் கூறுவதே இவனுடைய கதையாகும்.மனைவியை வைத்து சூதாடிய மகாபாரத கதைகள்,அனைத்து மத வேதங்களும் சூதாட்டத்தை பெரும் தீமையாகவே பார்க்கின்றன என்னதான் கதை சொன்னாலும் அறிவுரை சொன்னாலும் இறையச்சம், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் இல்லாதவர்களை ஒன்றும் செய்து விடமுடியாது நாம் எதாவது சொன்னால் நான் நாசமா போகிறேன் உனக்கென்ன என்கிறார்கள்.


திருக்குர்ஆன் இப்படி எச்சரிக்கிறது
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (திருக்குர்ஆன்: 5-91)


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் (ஹலாலானதா, ஹராமானதா)முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி


Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவு தமிழர்களை ஏய்க்கும் அறிவா?

இந்த படத்தை பாருங்க அதுக்கப்புறம். “தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா” என்ற வாசகம் ஆயிரம் முறை நினைவுக்கு வரும் அப்படி ஒரு தமிழனின் பெருமை பேசும் படத்தை எடுத்திருக்கிறேன் என்று டயலாக் அடிக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

வன்கொடுமைகளாலும் போர்களாலும் தலைகுனிந்து நிற்கின்ற தமிழனை ஒரு திரைப்படம் தலைநிமிர வைத்து விடும் என்றால் இதை விட கேவலாம் வேறு என்னவாக இருக்க முடியும்? ஒரு திரைப்படத்தை வைத்து தமிழனை தலைநிமிர வைக்க வேண்டிய துரதிஷ்டத்தை எங்கு போய் முறையிடுவது.

சரி இவ்வளவு உன்னதமான நோக்கத்திற்கு எடுக்கப்பட்ட படத்தில் இவ்வளவு ஆபாசங்கள் ஏன்? ஒருவேளை இதுவும் தமிழனை வாய் பிளந்து, தலைநிமிர்ந்து பார்க்க வைக்கிற உத்தியோ?

அல்லது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது தலைநிமிர்ந்து பார்த்தால் பதவி போய்விடும் என்று பம்மியவர்களின் வாரிசு
பட தயாரிப்பளர் பரமஏழை!? உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில கோடிகளுக்கு அதிபதியாகி தலைநிமிர வேண்டும் என்பதாக கூட இருக்கலாம்?

சோழ மன்னனின் வரலாற்று கதையை எடுக்க போகிறேன் என்று வக்கிரமான “ஆயிரத்தில் ஒருவன்”படம் எடுத்த செல்வராகவன் இதே டயலாக்கைதான் விட்டார். ஐரோப்பா நாடுகளிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக இருக்கிற ஈழத்தமிழனின் தாயக ஆசைகளை “தாய் தின்ற மண்ணே” என்று பாடல் வைத்து அவனின் பர்ஸை கொள்ளையடித்தது.அந்தப் படம் வேறு என்ன சாதித்தது? ரீமாசென்,ஆன்ட்ரியா இரண்டு நடிகைகளையும் ஆபாசமாக காட்டி சில அற்பர்களின் கண்களுக்கு விருந்தாக்கியதை தவிர?


சரி கதைக்கு வருகிறேன்


 “போதி தர்மரை தமிழர் என்றும் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்த்வர் என்றும்” என்று சொல்கிறார்கள் ஏழாம் அறிவு திரைப்பட கோஷ்டி.


போதி தர்மர் தமிழரா? இல்லையா? என்பதை பிறகு பார்ப்போம். தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்ட மாணவன் என்ற முரையில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.  “காரத்தே” என்ற ஜப்பானிய மொழி சொல்லுக்கு நேரடி தமிழ் சொல் வெறும் கைகளால் சமாளித்தல் என்று பொருள்.


புத்த மதம் இந்தியாவில் தான் தோன்றியது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அப்படி தோன்றிய புத்த மதம் என்னதான் அஹிம்சையை போதித்தாலும். காட்டில் இருந்த புத்த பிக்குகள் கள்வர்களிடமிருந்தும் காட்டு கொடிய விலங்குகளிடம் இருந்தும் பாதுகாக்க சில தற்காப்பு கலைகள் அவசியமாக இருந்தன அப்படி தற்காக்கும் போது கொல்லக்கூடாது என்பதற்காக ஆயூதங்கள் இல்லாமல் வெறும் கைகளால் சமாளிக்கின்ற கலைகளை காட்டு விலங்களின் அசைவுகள், அவை சண்டையிடும் முறை இவைகளை உன்னிப்பாக கவனித்து தற்காக்கும் கலையை விலங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.


 “குங்பூ” ஸ்டைலில் இதனை பார்க்கலாம் டைகர்,சினேக்,மங்கி,ஈகிள் போன்ற வகைகளில் சொல்லித் தருவார்கள் புலி எப்படி பாய்ந்து தாக்கும். கழுகு எப்படி விரல்களால் பிடிக்கும் என்பன இவையெல்லாம் காட்டின் விலங்குகளிடம் புத்த பிக்குகள் கற்று உலகிற்கு அளித்த தற்காப்பு கலைகள். புத்த மதம் ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளுக்கு பரவியபோது இந்த தற்காப்பு கலைகளும் சேர்ந்தே அங்கு பரவியது. நீங்கள் கவனித்துப் பாருங்கள் புத்த மதம் எந்தெந்த நாடுகளில் இருக்கிறதோ இந்த தற்காப்பு கலையும் சேர்ந்தே இருக்கும்.


சரி போதி தர்மர் தமிழரா?


இதனை விளக்க நண்பர் திங்கள் சத்யா அவர்கள்
http://marakkanambala.blogspot.com/2011/10/blog-post.html  இந்தலிங்கில் விரிவாக கிழே


‘‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்’ என ஜப்பானியர்கள் கூறுவதாக’’ சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா’ என்று பெயர் மாற்றியதே அவர்தான்’’ என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், ‘‘‘ஏழாம் அறிவு’ திரைப்படம், தாங்கள் கடவுளாகப் போற்றிவரும் ‘போதி தர்மரை’ இழிவுபடுத்துவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கில், வரலாற்றைத் திரித்துக் கூறி அவரை ‘தமிழராக’ சித்தரிப்பதாகவும், எனவே, அப்படத்தை தடை செய்யவேண்டும்’’ எனக் கோரியிருக்கிறது பவுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘நாகர் சேனை’ அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பானது சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

‘‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நாயகன் சூர்யாவும், ‘காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவுக்குப் போய், தற்காப்புக் கலையை நிறுவிய போதி தர்மருக்கு, சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் உள்ளன. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் நாங்கள் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்துள்ளோம். படம் வெளியான பிறகு, ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடந்துகொள்வான்’ என்று தமிழர்களை உசுப்பேற்றும்விதமாகப் பேசியுள்ளனர்.

இங்கே, போதி தர்மரை ‘தமிழர்’ என்று ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் அடையாளப்படுத்தக் காரணம், ‘உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளை, உண்மைக்கு மாறாக தட்டியெழுப்பி, கோடிக்கணக்கில் காசு பார்க்கும் முயற்சிதானே ஒழிய, தமிழ் பற்று அல்ல. படம் குறித்த விளம்பரத்தில்கூட, ‘10 நிமிட காட்சிக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டதாக’ சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

உண்மையில், ‘போதி தர்மர்’ ஒரு தமிழரே அல்ல. போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், அதாவது கி.பி. 300 முதல் கி.பி. 600-ம் ஆண்டுகள்வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.’’ என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இவர்களின் காலத்தை ‘‘தமிழகத்தின் இருண்ட காலம்’’ என, சிலர் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்’ தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது’ என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.’’ என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்’’ என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்’. களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

யாப்பருங்கல விருத்தி’ நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்’ என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்’ எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்” என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலில், ‘‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்.’’ எனச் சொல்வதுடன், ‘‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்’’ என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே’’ என்பதுடன், ‘‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்’’ என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’

‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,

‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.

‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார். ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.

நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.

முடிவுரை:

சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா&சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.

தரவுகள்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பவுதமும் தமிழும்’ மற்றும் தமிழ் விக்கிபீடியா. கருத்துப் பிழைகள் இருப்பின், தயவு செய்து சுட்டிவிட்டுச் செல்லவும்.


Sunday, October 23, 2011

ஆடுகளாகிப் போன சிங்கங்கள்...!

அன்றுவியட்நாமை வல்லரசுகள்
ஆக்கிரமித்த போது
எதிர்த்து நின்ற பெண் சிங்கம்
இன்று அதே வியட்நாமில் மேற்கத்திய சூழலில்
வளர்ந்து ஆடாக மது சுமக்கும் மாது


ஒரு நிறைமாத  கர்ப்பிணி பெண்சிங்கம் ஒன்று இரைத்தேடி ஆட்டு மந்தைகளுக்கு ஊடாக பாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆடுகள் விலக பெரும்பாறையொன்றில் மோதி இறக்கும் தருவாயில் குட்டி சிங்கம் பிறந்து விட்டது. தாய் இல்லாமல் விடப்பட்ட அந்த சிங்கம் ஆட்டுமந்தையில் ஆடுகளோடு ஆடாக வளர ஆரம்பித்தது. ஆடுகள் தின்னும் உணவைத் தின்று, அவைகள் போன்றே பயந்து, ஆட்டுக்குரல் போன்றே சன்னமாக கத்தி மேய்ப்பானிடம் அடி வாங்கி வளர்ந்து வந்தது.

 அப்பொழுது  ஒரு நாள் பெரிய சிங்கம் ஒன்று இரைக்காக அந்த ஆட்டு மந்தை மீது பாய்கிறது. ஆடுகள் எல்லாம் பயந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓட ,அந்த குட்டி சிங்கமும் ஓடுகிறது. இதைப் பார்த்த இரைத் தேடி வந்த சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஆடுகள் ஓடுவது சரி இவன் ஏன் ஓடுகிறான்?

 இரையை விட தனது கேள்விக்கான பதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆடுகளை விட்டு விட்டு அந்த குட்டி சிங்கத்தை பாய்ந்து பிடிக்கிறது.

"ஏய் நீ ஏன் என்னை பயந்து ஓடுகிறாய்? நீ சிங்கம் என்னைப் போல் ஒருவன்."

"இல்லை நான் ஆடு அவர்களோடு தான் வளர்ந்தேன் அவர்களின் உணவைத்தான் தின்கிறேன் நான் சிங்கமல்ல ஆடு."

"ஸ்ஸ்ஸ்... 
சொன்னா கேளு! நீ சிங்கம் ஆடுகளோடு சேர்ந்து ஓடி என்னை அசிங்கப்படுத்தாதே!


சரி நான் சிங்கம் என்பதற்கு என்ன ஆதாரம்?

இங்கே குளத்துக்கு பக்கம் வா தண்ணீரில் உன் முகத்தை பாரு என் முகத்தை பாரு ஒரே மாதிரி இருக்கா?

எங்கே என்னை மாதிரி கர்ஜனை செய்? ம்ம் அது.கதை சொல்லும் நீதி


"வரதட்சணை வாங்குவது கேவலம் வாங்காதே! நீ சிங்கம்" என்று சொல்லும் போது இல்லை சீர், வீடு, பைக், வாங்கி கொடுப்பது எங்க ஊர் வழக்கம் என்று  நண்பர்கள் ஆடுகளாக விலை போகும் போதும்,


"ஏங்க உங்க பெண்ணுக்கு வரதட்சனை கொடுக்குறீங்கே?" என்று கேட்டால்  "இல்ல தம்பி கொடுக்கவில்லை என்றால்பொண்ணு கரையேறாது" என்று பெண் சிங்கங்கள் சொல்லுவதை கேட்கும் போதும்,


தர்ஹா,சமாதிவழிபாடு,சந்தனக்கூடு,தயத்து போன்ற விஷயங்களை எங்களின் முன்னோர்கள் செய்தார்கள் அதனால் நாங்களும் செய்கிறோம் என்று தர்ஹாவதிகள் சொல்லும் போது.


"கீழ்ஜாதி என்று தன்னை நினைத்துக் கொள்கிற நண்பன் ஆதிக்க சாதீக்காரர்களை பார்த்து தாழ்வுமனப்பான்மையுடன் ஒதுங்கும் போதும், 

இந்த கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை

Wednesday, October 19, 2011

சவூதியில் தமிழ்மணத்துக்கு தடை


இந்த செயலை செய்தவர்கள் யாரக இருந்தாலும் என்னுடைய கண்டனங்கள் இது மிகப்பெரிய தவறு.

இது சம்பந்தமாக விரிவாக எழுத நேரமில்லை

நீங்கள் சவூதியில் இருக்கிறீர்களா? தமிழர? இணைய வசதி இருக்கா?

தயவு செய்து unblock request  கொடுங்கள் 


குறைந்தது 25 நபர்களாவது இந்த பரிந்துரை கொடுக்க வேண்டும்


இன்னும் 24 மணிநேரம் தான் டைம் இருக்கு ப்ளீஸ்


கிழேயுள்ள இந்த லிங்கில் கொடுக்கவும் 


http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/mail anupitten
unblock panna. may be 24 hrs needed to unblock

தொடர்புக்கு என் மெயில் ஐடி. 

rriyasali15@ gmail.com

Sunday, October 16, 2011

தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா
பெயர்:                                          பெயரிலி(உண்மையான பெயர் யாருக்கு தெரியும்)

புனைப்பெயர்:                          தமிழ்மண நிர்வாகி

தொழில்:                                    அசிங்கமாக திட்டுதல்

உப தொழில்:                            தமிழ்மண நிர்வாகி என்று அவ்வப் போது

பதிவர்களை மிரட்டுவது

நீண்டகால சாதனை:            ப்ராபைல் இல்லாமலே காலத்தை ஓட்டுவது

சமீபத்திய சாதனை:            ///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் 


உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்///” என்று அனைவரையும் இஸ்லாமிய முகமனையும் கேலி பன்னியது.

புரியாதது:                                இன்னும் எத்தனை பேர் கிளம்ப

போகிறார்கள் என்பது

புரிந்தது:                                 பதிவர்களில் ரோஷக்காரர்களும் இருக்கிறார்கள்

எதிரி:                                     ஜால்ரா போட மறுக்கும் பதிவர்கள்

நண்பர்கள்:                         தேடிக் கொண்டு இருக்கிறேன்

தேவை:                              பதிவர்களை மதிக்க கற்றுக் கொண்டு புரிந்துணர்வுடன்

கூடிய மன்னிப்பு
                   

Friday, October 14, 2011

கொலை செய்ய வைத்த வலை நட்பு


வலைப்பின்னலில் சில சிலந்திகளும் பூச்சிகளும் 

சிலந்திகள் வலைவிரித்து காத்துக் கொண்டு இருக்கின்றன

பூச்சிகள் வலையில் விழுந்து வாழ்வை இழப்பதற்காக


காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மனைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்! என்ற தலைப்பில் (இந்நேரம்.காம்யிலிருந்து இச்செய்தியை விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக பகிர்கிறேன்.)


காதல் மனைவியை கொன்று விட்டு
தற்கொலை செய்துக் கொண்ட
மகேஷ்குமார்
தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவிலுள்ள மூணாறு விடுதி ஒன்றில் சமீபத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அவ்விடுதியில் அறை எடுத்திருந்த அவளுடைய கணவனே கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் மகேஷ் குமாரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், மகேஷ் குமார் நேற்று காலை அவருடைய சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியக்காரன் பாளையத்தில் தன் வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் மகேஷ்குமார் காவல்துறையினருக்குத் தன் மனைவியினைக் கொலை செய்வதற்கான காரணத்தை விவரித்து உருக்கமான கடிதம் ஒன்று எழுதி உள்ளார். முழுமையாக ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் காவல்துறையினர் வெளியிட்ட்டுள்ளனர்.

அக்கடிதத்தில் மகேஷ்குமார் எழுதியுள்ள விவரம் வருமாறு:
"மதிப்புக்குரிய காவல்துறையினருக்கு,
எனக்குத் தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதைச் செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...

படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்குத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானதுதான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்குக் கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.

படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் `சாரி' என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரைச் சரி செய்துகொள்கிறார்கள். அப்படியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக்கொள்கிறார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியும்

எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும். அவள் செய்தாள்...

சரி... மீண்டும் அவளை நான் அடைந்த பிறகு, அவளை எச்சரித்தேன். அழுது, கெஞ்சி அவளிடம் வேண்டிப்பார்த்தேன். எந்தப் பிரயோசனமும் இல்லை. நான் அவளுக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்தேன். நான் அவளை மன்னித்து என்னோடு வாழ மீண்டும் அனுமதித்தேன். அவளுடைய மாமா மற்றும் வீட்டு உரிமையாளருக்கு இது தெரியும். (ஏனென்றால் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் அவளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்).

ஆனால் அவள் மீண்டும் என்னுடைய மன்னிப்பைத் தவறாக பயன்படுத்தத் தொடங்கினாள். ஆகவே நான் விவாகரத்து பெற விரும்பி மனு செய்தேன். அவள் அதைப் புரிந்து கொண்டுத் தெளிவான மனநிலையில் என்னோடு திரும்பி வருவாள் என்று நினைத்தேன்.

எப்படி இருந்தாலும் இந்தக் காதல் கதையின் கடைசி கட்டத்துக்கு வந்தாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை பயணம் கடைசி கட்டத்துக்குப் பயணித்தது அது ஏற்கனவே முடிந்து விட்டது. எப்போது அவள் வழி தவறினாளோ அப்போதே வாழ்க்கை முடிந்து விட்டது).

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவளுக்கு எந்தக் குறையும் வைக்காமல் சந்தோஷமாக இருக்க விரும்பினேன். அந்தக் காரணத்தால்தான் மீண்டும் ஒருமுறை தேனிலவுக்காக அழைத்துச்சென்றேன். நான் அனைத்து வகையிலும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தேன்.

என்னுடைய திட்டம் நான் தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான். அவள் அவளுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்...

இறுதியாக நான் அவளிடம் பிச்சைக்காரனைப் போல மண்டியிட்டு வேண்டினேன். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும்போது, அவளுடைய குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொள்வது போல... நானும் என் குழந்தையாக கருதிய அவளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், அதையும் ஒருநாள் தள்ளிப்போட்டேன். ஏனென்றால் அவளுடன் தொடர்பு வைத்து இருந்த 3 வாலிபர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். முயற்சியும் செய்தேன்.

ஷாம்(ஷமிலா)வுக்காக நான் எதையும் செய்ய துணிந்தேன். நான் எடுத்த இந்த முடிவுக்காக கடவுளாலோ, அரசாங்கத்தாலோ பழிக்குப்பழி தீர்க்கப்படும்.

என் அருமை ஷாம்!

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது நான் தவறான தகவல்கள் தருகிறேன் என்றால், தயவுசெய்து கடந்த 6 மாதங்களாக ஷமிலாவின் மொபைல் பில்லைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். திருமணமான ஒரு பெண், அதிகாலை 3 மணி வரை எப்படி பேசியிருக்கிறாள், 'சாட்டிங்' செய்து இருக்கிறாள் என்று...

தயை கூர்ந்து சமூகத்துக்குத் தொல்லை கொடுக்கும் இது போன்றவர்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (இந்திய சட்டப்படி யார் கொலை செய்ய காரணமாக இருக்கிறார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டும்...)

எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.

2-வது ஒருவன், அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளைப் பங்கிட்டுகொண்டார்கள்.

4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான். குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.

இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.

6-வது முக்கிய நபர் மதுரையைச் சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கி அவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.

(அவர்கள் காரில் அழைத்துச்சென்ற நேரம் நான் குறுக்கே புகுந்து காரைத் தடுத்தேன். அவர்கள் 3 பேரும் என்னைப் பிடித்து வீதியில் தள்ளினார்கள். அப்போது ஷமிலா "என்னிடம் நீ போ, என்னுடன் வராதே" என்று விரட்டினாள். அவள் சென்ற 6 மணி நேரமும், அவளுடைய மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது).

டி.வி. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடிகராக இருப்பவன் தினமும் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருப்பான். இவனுடைய தொடர்பு கடந்த 30-ந் தேதிவரை ஷமிலாவுடன் இருந்தது. ஷமிலா என்னிடம் திருந்தி விட்டதாக கூறினாள். அவளுடைய வாழ்க்கையையும், என்னுடைய ஆழமான நம்பிக்கையையும் புரிந்துகொண்டதாக கூறினாள். நான் குறிப்பிட்ட இந்த நபர்களிடம் பேசமாட்டேன்... இனிமேல் இதுபோன்ற செயலைச் செய்ய மாட்டேன் என்று என்னிடம் கூறி இருந்தாள். அவை எல்லாம் நாடகம் என்பதும், என்னை முட்டாளாக்க அவள் நடத்திய நாடகம் என்பதையும் செப்டம்பர் 18-ந் தேதி அவள் அவர்களுடன் தங்கியபோது புரிந்துகொண்டேன்.

8-வதாக ஒருவன். இவன் அந்த டி.வி. நடிகரின் நண்பன். இவனும் அந்த செப்டம்பர் 18-ந் தேதி பார்ட்டியில் அவளைப் பகிர்ந்து கொண்டவன். இவனும் ஷமிலாவை மிகவும் கவர்ந்து, நள்ளிரவில் போன் பேசியும், மெசேஜ் அனுப்பியும் வந்தான்.

9-வதாக ஒருவன் ஒரு பகுதிநேர வேலை தொடர்பாக அவளை அணுகி, அந்த நாள் முதல் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி குறுகிய காலத்தில் நட்பை வளர்த்துக்கொண்டவன். இதுபோலவே 10-வதாக ஒருவனும் ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்தான். இவர்கள் தவிர ஏராளமான எண்களில் இருந்து நள்ளிரவு மெசேஜ் மற்றும் போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.
நன்றி, மன்னிப்புடன்..."
மேற்கண்டவாறு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், தன் மனைவி ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 10 பேரின் பெயர், அவர்களது முகவரி, செல்போன் எண் ஆகியவற்றையும் மகேஷ்குமார் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ள பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அடிப்படையிலும் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Wednesday, October 12, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே...

முட்டாள்களே,

என்ன ஆயிற்று உங்களுக்கு..?

என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்?

சமாதி வனக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போராடிய எனக்கே சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி,பக்தி மணக்க மயிலிறகு மந்திரங்களும் சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்....

நெஞ்சு பொறுக்குதில்லையே

ஒரே இறைவன்,குர்ஆனும் நபிவழியும் நம் வழிகாட்டுதல் என்று ஒரிறைக் கொள்கை சொன்ன என் பாடங்களை தர்கா விளக்கு திரியில் போட்டு எரிக்கின்றீர்களே...

நான் சொன்னேனா?

எனக்கு கந்தூரி வேண்டும்,உரூஸ் வேண்டும்,பூஜை வேண்டும்,நேமிதம் வேண்டும் என்று யாரிடம் சொன்னேன்?

என்னை ஏன் இழிவுப்படுத்துகிறீர்கள்?

இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள்.அவனுக்கு இடைத்தரகர் தேவையில்லை என்று ஓங்கி ஒலித்த என்னிடமே கையேந்துகிறீர்களே?

மூடர்களே உங்கள் இழி செயலால் நான் குறுகி நொடிந்து போகிறேன்.

ஜோஸ்யங்களும் மாந்திரீகங்களும் மடத்தனத்தின் முகவரி என்று உரத்து சொன்ன என் பெயரில் பொழப்பு நடத்த யாகம் செய்யும் சுயநலமிகளே,

இறைவன் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்வோம்?

மரண சிந்தனையின் வாசல் கதவில் நின்று ஆணும் பெண்ணுமாய் கொண்டாடிக் கொள்ளி கொளுத்துகின்றீர்களே...

இது இணைவைப்பின் கொடூர விதை என்பதை நீங்கள் அறிவதில்லையா?

என் மட மக்களே,

தெரியாமல்தான் கேட்கிறேன்.இந்த யானைக்கும் எனக்கும் என்னதான் தொடர்பு?

என் சமாதியில் கொடிக் கம்பம் நட்டு பச்சை நட்சத்திரங்களுடன் கொடிகளைப் பறக்க விட்டு என் கொள்கையில் சுண்ணாம்பு நீர்க்கச் செய்து கொக்கரிக்கின்றீர்களே....

என்ன நியாயம் இது?

நிறுத்துங்கள்

எனக்கும் இவ்வுலகிற்கும் இனி தொடர்பில்லை.நீங்கள் கேட்பதை நானறியேன்.

எடுத்துரைக்கும் என் கடமை முடிந்து போனது.

எனக்கேன் தர்கா? என்னைக் கண்ணியப்படுத்த விரும்பினால் இடித்துத் தள்ளிவிட்டு ஓரிறை நோக்கி போ...

எனக்காகப் பிரார்த்தனை செய்.

அதைவிட்டு...

மூடத்தனத்திற்கு என்னை காரணியாக்கும் கொடுமை தொடருமானால் மஹ்ஷர் காத்துக் கிடக்கிறது.

உங்கள் யாவருக்கும் எதிராய் என் விரல் நிளும்...

விரக்தி பெருமூச்சுடன்...
இறையடிமை

Tuesday, October 11, 2011

பார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை

சொந்த வாழ்க்கையின் கசப்பான அனுபவத்தை கண் பார்வை அற்றவர்களுக்கு ஒரு அருட்கொடையாக மாற்றியவர்தான் ‘பிரெய்ல் லூயி’.


தோல் தொழிலாளியான தந்தையின் கடையில் இருந்த கத்தியை எடுத்து விளையாடும் போது எதிர்பாராவிதமாக கத்தி கண்ணில் ஊடுருவியதால் தன்னுடைய மூன்றாம் வயதிலேயே சிறுவன் பிரெயில் பார்க்கும் சக்தியை இழந்தார். பார்வைத் திறனை வெற்றிக் கொள்ளும் அறிவாற்றலைப் பெற்ற இந்தச் சிறுவரின் அதற்குப் பிறகான வாழ்க்கை ஒரு உலக மகா அதிசயமாகி விட்டது.
பிரெய்ல் லூயி
ஈரானிய திரைப்படத்தில்
பிரெல் லூயியாக நடித்த சிறுவன்

இந்த கல்விக் கூடத்தின் நிறுவனராக இருந்த வாலன்டின் ஹேய் சாதாரணமான ரோமன் டைப்பில் காகிதத்தில் உப்பி நிற்கும் ஒரு எழுத்து முறையை பார்வையற்றவர்களுக்காக உருவாக்கியிருந்த காலம் அது. கடினமானதும் வேகம் குறைந்ததுமாக இந்த முறை அமைந்திருந்தது. எனவே பார்வையற்ற மாணவர்களுக்கு எழுத்தைப் பயிற்றுவிக்க இந்த முறை பயன்படவில்லை.


தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு வாசிப்பதற்காக ஒரு பாட முறையை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை இந்த காலகட்டத்தில் பிரெய்லை ஆட்கொண்டது.

போர்க்கலங்களில் இருந்து இரவு நேரங்களில் செய்திகளை எழுதவும் வாசிக்கவும் சான்ஸ் பார்பியன் என்ற பிரெஞ்சு ராணுவக் கேப்டன் உருவாக்கிய ‘நைட் ரைட்டிங்’(இரவு எழுத்து) என்றமுறை இந்த விஷயத்தில் பிரெயிலுக்கு உதவிகரமாக அமைந்தது.

உப்பி நிற்கும் 12 புள்ளிகளை (Dots) அடிப்படையாகக் கொண்டது இந்த முறை. 15 வயது மட்டுமே உடைய பிரெய்ல் ‘நைட் ரைட்டிங்’ முறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டதோடு, அதை தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.பார்பியான்  ‘நைட் ரைட்டிங்’முறையில் தேவையான மாறுதல்களை மேற்கொண்ட பிரெய்ல் மிக வெகமாக வாசிக்க உதவும் சில புதிய முறைகளையும் அதில் இணைத்தார்.
பார்வையற்றவர்களுக்கு,தாளில் உப்பி நிற்கும் புள்ளிகளை (Dots) விரல் நுனிகளால் தொட்டுணர்ந்து வாசிக்க உதவுமாறு உருவாக்கப்பட்ட பிரெய்ல் லிபி(பிரெய்ல் கோடு)யின் வரலாறு இதுதான்.

பிரெல் லூயி எழுத்து முறையில்
ஆங்கில எழுத்துக்கள்
(அலுவலகத்திற்கு லிப்டில் ஏறும்போது அந்த பட்டனில் உள்ள நமபர்களை தடவிப் பாருங்கள் இதுவும் பிரெல் லூயியின் தொழில் நுட்பம் தான்)

பத்தாண்டுகளுக்குப் பிறகு 1829-இல்தான் பிரெய்ல் உருவாக்கிய இந்த முறை (பிரெய்ல் லிபி) வெளியாகியது.அவர் ஆசிரியராகப் பணியாற்றிய பாரிஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் இருந்துதான் இந்த முறையை அறிமுகப்படுத்தினார். சர்வதேச அரங்கில் இந்த முறைக்கு அங்கீகாரம் கிடைக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டன.

1932-இல் கூடிய சர்வதேச மாநாடுதான் பிரெய்ல் கோடுக்கு (பிரெய்ல் லிபி) அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கவும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கிடையில் மிகவும் தரமான ஒரு வழிமுறையாக இதை ஏற்றுக் கொள்ளவும் முடிவு செய்தது. இன்றைக்கு பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் கோடு
(பிரெய்ல் லிபி) உலகின் ஏராளமான மொழிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது கண்கூடு. இசைக்கான கோடுகளாகவும் சில வகை சுருக்கெழுத்துக்கும் (Short Hand) மட்டுமின்றி விஞ்ஞானம் மற்றும் கணித இயலுக்கும் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாசிப்பு மற்றும் அறிவுலகக் கதவை திறந்து விட்ட இந்த மேதையின் வாழ்க்கை 43 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1809 ஜனவரி நான்காம் நாள் பாரிஸ் நகருக்கு அருகில் குவ்ரே என்னுமிடத்தில் பிறந்த பிரெய்ல் காச நோயால் பாதிக்கப்பட்டு 1852 ஜனவரி ஆறாம் நாள் பாரிசில் உயிர் துறந்தார்.

ஊரையடித்து உலையில் போட்டு பெரும் பணமுதலைகளாக மாறிய லாட்டரி சீட்டு கம்பெனி அதிபர்கள் தமிழக அரசின் தடையால் சம்பாதிக்க முடியாமல் போனதால் லாட்டரி சீட்டு மீதான தடையை விலக்க கோரி ஊர்வலம் நடத்தினார்கள். அதில் முன்வரிசையில் ரயிலில்,கடைத் தெருவில் லாட்டரி விற்றுக் கொண்டிருந்த பார்வையற்றவர்களை பொறுக்கி எடுத்து.அவர்களை எங்கே செல்லும் இந்த பாதை என்ற சினிமா பாடலை பாட வைத்து தமிழக அரசு, மற்றும் பொதுமக்களின் அனுதபத்தைப் பெற நினைத்து கேடு கெட்ட அரசியல் பண்ணினார்கள்.

பிரெய்ல் லூயி போன்றவர்கள் உலகத்திலுள்ள ஒவ்வொரு பார்வையற்றவருக்கான ஆக்கபூர்வமான கல்வி ஒளியை அளித்ததை நினைவு கூரும்போது இது போன்ற கேடு கெட்டவர்களின் செயல்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

சரி கண்களை மூடிக்கொண்டு கீ போர்டு எழுத்துக்களை தடவிப் பாருங்கள்
F.J. இரண்டு இடங்களில் இந்த பிரெய்ல் லூயி அவர்களின் தொழில் நுட்பத்தை அறிவீர்கள்.பேக்ஸ் மிஷினில் 5 நமபர் எழுத்திலும் மொபைலில் 2.5 இரு என்களுக்கு அருகிலும் இந்த தொழில் நுட்பத்தை அறிவீர்கள்.

Tuesday, October 4, 2011

சவூதி வரை வந்த சாதீயம்

நண்பர் பாலமுருகன் பரமக்குடி பக்கத்தில் இருக்கிற தலித் கிராமத்தைச் சேர்ந்தவர் எனக்கு பக்கத்து ஊர்க்காரர். இங்கு சவூதியில் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார். மாதம் இந்திய மதிப்பிற்கு 40000 சம்பளம் வாங்குகிறார்.

இன்னும் அதே ஊரைச் சார்ந்த நண்பர்கள் அனைவரும் ஒரே ரூமில் பத்தாஹ் என்கிற ஏரியாவில் இருக்கிறார்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு முதல் நாள் வியாழன் இரவே அவர்களின் ரூமிற்கு சென்று தங்கி இருந்து விட்டு வெள்ளிகிழமை மாலைதான் என் ரூமிற்கு வருவது வழக்கம். 

நண்பர் வருடா வருடம் சித்திரை மாதம் ஊருக்கு வருவார். எனக்கு ஆரம்பத்தில் முதல் வருடம் அவர் ஊருக்கு சித்திரை மாதம் போகும்போதே சந்தேகம். என்ன சித்திரை மாதம் யாரவது ஊருக்கு விடுமுறையில் போவார்களா? மண்டையை பிளக்கிற வெயில் அதுவுமில்லாமா அடிக்கடி கரண்ட் கட் ஆகும் ஏன் இந்த மாதம் கம்பெனியில் விடுமுறை வாங்கிட்டு போகிறார் என்ற கேள்வி புரியாத புதிராக இருந்தது.

அடுத்த ஆண்டுகளில் கொஞ்சம் நெருங்கி பழகிய பிறகு இதை அவரிடமே நேரடியாக கேட்டு விட்டேன். ஏங்க சித்திரை மாசம் ஊருக்கு போறீங்கே மண்டை பிளக்கிற கத்திரி வெயிலு. கரண்ட் வேற புடுங்கிருவாய்ங்க. இரவு நேரத்தில் கசகசன்னு வேர்க்கும். ஏன் ஒரு நாலு மாதம் கழித்து மழை காலத்துல போனால் என்ன? 

நண்பர் சொன்ன பதில் சித்திரை திருவிழாவுக்கு ஊருல இருக்கனும்.
அப்ப சரிதான் திருவிழாவுக்கு எல்லா நண்பர்களும், உறவினர்களும் வருவாங்க சந்திக்கலாம் அதைவிட ஆத்துல எறங்கிற ஆழகர் சாமியை தரிசிக்கலாம் (நண்பருக்கு தெய்வ பக்தி அதிகம் என்று மனதில் நினைத்துக் கொண்டே) என்பதற்காகத்தனே ஊருக்கு போறீங்க? சரிதான் அதற்காக கரண்ட் கட்டு, வெயில் இதையெல்லாம் பொறுத்துகிறலாம் என்று சொன்ன போது.

நண்பர் அதற்கு அளித்த பதில் ஒரு நிமிடம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது என்னங்க சொல்றீங்க? உண்மையாகவா? 


ஆமா ஹைதரு நான் பறையர் சாதியை சேர்ந்தவன் என்பதால் நான் தான் சாமி ஆத்துல எறங்கும் போது கொட்டடிக்கனும், ஏன் அதுக்கு ஊரில் ஆள் இல்லையான்னா? இருக்காங்க ஆனா எங்க ஊரைச் சேர்ந்த மூக்குலத்தோர்(கள்ளர்,தேவர்,மறவர்) ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் ஆத்துல கள்ளழகராக வேடம் போட்டு ஆத்துல எறங்கும் போது அந்த ஊரைச் சேர்ந்த நாங்கள் தான் பரம்பரை பரம்பரையாக கொட்டடித்துக் கிட்டு போவது வழக்கம். அப்பாவுக்கு வயசாகி விட்டது முடியாது.சவூதிக்கு விசா கிடைத்தவுடன் ஊரிலுள்ள ஆதிக்க சாதீக்காரர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை பன்னினார்கள், ஏண்டா எல்லா பறபயலும் துபாயி, சிங்கப்பூரு, சவூதின்னு போயிட்டா எவண்டா இங்கே கொட்டு அடிப்பாய்ங்க?
என்று சவுண்ட் விட்ட அவர்களிடம். ஐயா தம்பிக்கு வருடா வருடம் லீவுல திருவிழா மாசத்துல ஊருக்கு கொட்டடிக்க வந்துரும். அனுமதி கொடுங்கய்யா என்று கேட்ட பிறகு டேய் வருஷமானா திருவிழாவுக்கு கரெக்டா வந்துரனும் சரியா? என்ற மிரட்டி அவர்கள் வழிவிட்ட பிறகு தான் நான் சவூதி வர முடிந்தது என்றார்.

சரி உங்க வீட்டுக்கு எதாவது சமான் வாங்கி கொடுத்து விடுறீங்கலா பெட்டி கட்ட போறேன் என்று கிளம்பி விட்டார். என் பசங்களுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கி கொடுத்து விட்டேன் இப்படி என் மகனுக்கும் அறிமுகமாகி விட்டார்.


  
இந்த வீடியோவை பாருங்கள்

அடுத்த வருடம் அதே சித்திரை மாதத்தில் நான் ஊருக்கு போக வேண்டிய அவசர சூழல் இப்ப இரண்டு பேரும் ஒன்றாக பயணம். சவூதியிலிருந்து இலங்கை இலங்கையிலிருந்து திருச்சி ஏர்போர்ட். ST  வேன் சர்வீஸில் புக் பன்னி விட்டதால் அவர்களே ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரை கொண்டு விட்டு விடுவார்கள் எனது ஊர் வருவதற்கு முன்பாக நண்பரின் கிராமம். நண்பர் எழுந்து இன் பன்னியிருந்த சட்டையையும் பேண்டையும் கழட்டி கைலிக்கு மாறினார். ஏங்க ஊரு வந்தவுடன் கைலிக்கு மாறுறீங்க? ஆமா பேண்ட் போட்டுகிட்டு போனா உயர்ஜாதிக்காரவுங்க முறைத்துப் பார்ப்பார்கள்.

அடப்பாவிகளா தலையில் அடித்துக் கொண்டேன் வண்டி நின்றது உள்ளே ஒத்தையடி பாதை அதனால் வண்டி போகாது தலையில் சூட்கேஸை தூக்கி வைத்துக்கிட்டு நடக்க ஆரம்பித்தார் சரி நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி விட்டு நான் ஊருக்கு வந்து விட்டேன். நாளை என்று சொன்னனே தவிர அவரைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

பரமக்குடி ஆத்துல சித்திரை திருவிழா நான் குடும்பத்தோடு போயிருந்தேன். பெரிய ராட்டினம், மரணகினறு, பாம்புப்பெண், போன்ற பொழுதுபோக்கு கட்டண அரங்குகளும், நிறைய ஸ்டால் கடை போட்டு இருப்பார்கள் ஊருக்கு போய் இருக்கும் போது பசங்கள கூட்டிட்டு போகாட்டி அவ்வளவுதான்! அதுவுமில்லாம என் மனைவி ஒவ்வொரு ஸ்டால் கடையா கையை காட்டி எனக்கு அது வாங்கி தா இது வாங்கி தா என்று சின்னபுள்ள மாதிரி கேட்டு வாங்குவதை எப்பூடி மிஸ் பன்ன முடியும்.


இப்புடி வாங்கிட்டு, சுத்தி பாத்துகிட்டு இருக்கும் போது என் மகன் சின்னவன் அத்தா அத்தா அங்கே பாருங்க என்று கையை பிடித்து இழுத்தான். என்னடா 
சொல்லு அந்த அங்கே கொட்டடிச்சுக் கிட்டு போறரே அவர் நம்ம பாலமுருகன் அங்கிள் தானே டாய்ஸ் கொண்டு வந்து கொடுத்தாரே அவர் தானே அவன் கைகாட்டிய திசையில் பார்த்தேன்.

 ஆமா பலமுருகன் சவூதியில் அழகான கலரில் பேண்ட் சார்ட் போட்டு அதை இன் பன்னி வருவார் அவ்வளவு அழகாக அங்கு இருப்பவர். இப்ப பழைய அழுக்கு வெட்டியே தூக்கி கட்டிகிட்டு அது நழுவிடாம இருக்க முதலை மார்க் நாலு இஞ்சி அகல பச்சை கலர்ல பெல்ட்டு கட்டிகிட்டு. உடம்பில் சட்டை இல்லாமல் காலில் செருப்பு இல்லாமல் தோளில் கொட்டோடு இணைக்கப்பட்ட வாரை மாட்டிகிட்டு. கள்ளழகர் வேடம் போட்ட ஆதிக்க சாதிகாரவுங்க பின்னாடி மூர்க்கமாக கொட்டடித்துக் கொண்டே போயிகிட்டு இருந்தார்.

மறுபடியும் என் மகன் அத்தா அது பாலமுருகன் அங்கிள் தானே? என்று கேட்டு இயல்புக்கு கொண்டு வந்தான். இல்லப்பா அவரு வீட்டுக்கு உனக்கு டாய்ஸ் கொண்டு வந்தருலே அப்ப இப்புடியா டிரஸ் போட்டு இருந்தாரு அவரு ஜீன்ஸ் டீசார்ட் போட்டு இருந்தார்ல இந்த அங்கிள் கிட்ட அதுலாம் இல்ல பாரு அவரு இல்ல இவரு என்றேன்.டிஸ்கி

எனக்கு பலதரப்பட்ட நண்பர்கள் அதிகம் ஒவ்வொரு நண்பனின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது அதனால் தான் தவிர்க்க முடியாமல் என்னைப் பற்றியும் என் நண்பர்களையும் அவர்களின் அனுமதியோடு எழுத வேண்டியது இருக்கிறது இவர்களை மையப்படுத்தி இந்த சமூகத்தின் மனசாட்சியை கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது. மற்றபடி இது புனைவோ, சுயசொறிதலோ அல்ல.  

Monday, October 3, 2011

ஆபத்தான உணவு முறையும் உடல் உழைப்பும்(பாகம்-2)


இந்த பதிவின் முதல் பாகத்தை பார்க்க.  இங்கே அழுத்தவும்


உணவு முறையில் மாற்றம் தேவை

நம் நாட்டு உணவில் 90 சதவீதம் தானிய வகை (அரிசி)யாக உள்ளது. தானிய உணவில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து அதிகம் உள்ளது. இது அதிக கலோரிகளை தரும் உணவு வகை; எளிதில் கொழுப்பு சத்தாக மாறும் தன்மைக் கொண்டது.

மீன், மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இதன் சிறப்பு இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல்.(LDL) கொழுப்பு, கெட்ட கொஸட்ராலைக் குறைக்கிறது. உடல் அணுக்களை (செல்களை) தாக்கும் ஆக்ஸிடன்ட் என்ற மூலக்கூறுக்கு எதிராகப் போராடும் ஆன்டி அக்ஸிடன்ட் (Antioxidant) தன்மை இந்த ஒமேகா-3க்கு உண்டு. ஆகவே இந்த ஒமேகா-3 இரத்த அழுத்தம்,மாரடைப்பு,சர்க்கரைநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தையும் ஆயுளை நீளச் செய்யும் என்பது அறிவியல் ஆய்வின் தீர்வு.


நண்பர் மீண்டும் கேட்டார், “என்னங்க நீங்க! நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது அதிகம் பசிக்கத்தானே செய்யும்.அதற்காக அரைகுரையாக சாப்பிட முடியுமா?

இதுஒர் சரியான கேள்வி.இதற்கும் பதில் இருக்கிறது.

நலம் தரும் நார்ச்சத்து

உணவில் காய்கறி,கீரை,பழங்கள் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய்,வெங்காயம்,முள்லங்கி,காரட் இவற்றை அரிந்து பச்சையாக (Salad) உட்கொள்ளலாம் இவற்றில் நார்ச்சத்து அதிகம்;  உடல்நலத்திற்கு உகந்தது. இந்த வகை உணவில் நார்ச்சத்து அதிகம். அதில் பூஜ்யக் கலோரிதான் உள்ளது. இதை அதிகம் சாப்பிடும்போது தானிய வகை உணவு குறைகிறது. இதனால் குறைந்த கலோரி உணவில் சாப்பிட்ட திருப்தி ஏற்படுகிறது. மேலும் நார்ச்சத்து பல நன்மைகளைக் கொண்டது.காய்கறி, கீரையில் உள்ள நார்ச்சத்துக்குக் கழிவாக மலக்குடலில் வெளியேறும் மலத்தில் நீரைத் தேக்கி வைக்கும் சக்தி அதிகம். மலச்சிக்கல் ஏற்படாது எளிதாக மலம் வெளியேறும்.

பெருங்குடல்,மலக்குடல்,நார்ச்சத்து உணவால் சிறப்பாக கழிவேற்றம் செய்கிறது. இதன் காரணமாக பெருங்குடல் புற்றுநோய்,பெருங்குடலில் மலம், மலப்பைகளாகத் தேங்குதல் (Colonic Diverticulosis) போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.(மொத்தத்தில் ஆபத்தில்லா உணவு)

வயிற்றில் அரைக்கப்பட்ட உணவு கொஞ்சம் கொஞ்சமாக சிறுகுடலை அடைய,நார்ச்சத்து உணவு உதவுவதால் சிறு குடலில் செரிப்புத் தன்மை நிதானமாகவும் சீராகவும் நடைபெறுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக அதிகரிக்கிறது.அதை கட்டுப்படுத்தும் இன்சுலினும் சீராக சுரக்கிறது. இதனால் இரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.சர்க்கரை நோயும் கட்டுப்படுத்தப்படுகிறது.

 “காய்கறி விற்கும் விலையில் தினமும் காய்கறியை எப்படி சாப்பிட முடியும்?என்கிறார் என் நண்பர்.

நியாயமான கேள்விதான். ஆனால் ஒவ்வொரு காலத்திலும் ஒருவகையான காய்கறிகள் அதிகம் விளையும். விலையும் குறைவாக இருக்கும். அந்தந்த சீசனில் விளையும் பழம்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பப்பாளி எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் எளிய இனிய பழம். இது மலச்சிக்கலுக்கு ஓர் அற்புத மருந்து. வைட்டமின் ஏ,வைட்டமின் சி தாது உப்புகள் கொண்ட ஒரு ஆன்டி அக்ஸிடன்ட் உணவு. இதை அடிக்கடி சேர்க்கலாம்.இப்படி முறையாக உணவு உண்ணும் முறையில் மாற்றங்களை ஏற்ப்படுத்தினால் நலமாக வாழலாம்.


உடல் உழைப்பு குறைந்த நாற்காலி அலுவலர்களுக்கு உடல் உழைப்பை அதிகரிக்க எளிய வழிகள்.

.காலை அல்லது மாலையில் 1 மணி நேரம் உடற்பயிற்சி, அல்லது நடைப்பயிற்சி செய்யலாம். நான் இங்கு நண்பர்கள் ரூமிற்கு சொல்லும் போதேல்லாம் ஒவ்வொரு நண்பர்களும் ரூமிலும் வீட்டுக்குள்ளே ஓடுகிற மெஷின் வாங்கி வைத்திருக்கிறார்கள். அனைவரும் ஒரே குரலில் சொல்லும் வார்த்தை வாங்கிய புதிதில் 10 நாட்கள் செய்தேன் அப்புறம் டைமில்லை என்பார்கள்.அந்த மெஷின்கள் தூசி புடிச்சு போயி கிடக்கும். உண்மையில் தொடர் உடற்பயிற்சிகள் தான் பலனை கொடுக்கும்.

.சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுள்ள இடங்களுக்குச் செல்ல வாகனங்களைத் தவிர்த்து நடந்தே செல்லலாம்.

.கீ போர்டில் இருந்து கையை எடுத்து விட்டு சும்மா சாட்டில் பேசிக் கொண்டு இருக்காமல். உறவினர் நண்பர்களை நேரிலே நடைபயணமாகச் சென்று ‘ஹலோ’ சொல்லி கருத்துப் பரிமாறுங்கள். வாழ்க்கையில் பிடிப்பும் தெம்பும் பிறக்கும்.