Wednesday, November 21, 2012

அறிவே ஆயுதம்

பயங்கரவாத நாடான இஸ்ரேல். சுற்றிலும் அரபு நாடுகள் சூழ தனித்து நின்று நான் முரடன், பெரும்ரவுடி, பலம் வாய்ந்தவன் என்பதை நிருபிக்க தனது ஆயுத பலத்தை இக்கட்டுரை எழுதும் இந்நேரத்தில் கூட நிருபித்துக் கொண்டு இருக்கிறது. யூதர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் சுற்றியுள்ள அரபுக்கள் (முஸ்லிம்கள்) ஏன் வலிமை குன்றிப் போயுள்ளனர்? என்பதையும் பார்ப்போம்.

இந்த உலகில் மொத்தம் உள்ள யூதர்களின் எண்ணிக்கை 1.41 கோடி ஆகும்.70 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். 50 இலட்சம் பேர் ஆசியாவிலும், 20 இலட்சம் பேர் ஐரோப்பாவிலும், ஒரு இலட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் வாழ்கின்றனர். இவ்வுலகில் உள்ள யூதருக்கு 100 முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் யூதர்கள் முஸ்லிம்களின் வலிமையை விட நூறு மடங்கு அதிகம் வலிமையுடன் காணப்படுகிறார்களே! இது ஆச்சர்யமாக உள்ளது.

நாசரேத்தில் இயேசு யூதராக இருந்தார். உலகில் எல்லாக் காலங்களிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய, நூற்றாண்டின் சிறந்த மனிதர் என டைம் இதழ் புகழ்கின்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யூதராக இருந்தார். உளவியலின் தந்தை, சிக்மன் ஃபராய்டு ஒரு யூதர். கார்ல் மார்க்ஸ், பால் சாமுவேல்சன், மில்டன் ஃப்ரீட்மேன் ஆகியோர் யூதர்களாக இருந்தனர்.

பெஞ்சமின் ரூபின் மனித குலத்திற்கு மருந்தை உடலுக்குள் செலுத்தும் ஊசியை வழங்கினார் ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பு மருந்தை முதலில் உருவாக்கினார். அலர்ட் ஸாபின் தற்போதுள்ள போலியோ சொட்டு மருந்தை உருவாக்கினார். கொர்ட்ருட் எலியன் லீகேமியா என்ற நோயைப் போக்கும் மருந்தை கண்டுபிடித்தார். பாருச் பிளம்பர்க் ஹெபாடிடிஸ் B தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். பால் எர்லிக் சிஃபிலிஸ் என்ற பாலியல் நோய்க்கு சிகிச்சை அளித்தார். எலீ மெட்ச்நிகாஃப் தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார்.

பெர்னார்டு கட்ஸ் நரம்புத் திசு மாற்ற ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார். ஆண்ட்ரூ ஸ்கேலி ‘ என் டோக்ரினாலஜி’ ஆய்வில் நோபல் பரிசைப் பெற்றார். ஆரோன் பெக் உளவியல் சிகிச்சையை கண்டு பிடித்தவர். கிரிகரி பின்கஸ் மாத்திரையை முதலில் உருவாக்கியவர். வால்ட் என்பவர் கண் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர். ஸ்டேலி கோஹன் கருவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசைப் பெற்றார். வில்லம் கோஃப் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை உருவாக்கினார். இவர்கள் அனைவரும் யூதர்கள் ஆவர்.

கடந்த 105 வருடங்களில் 1.41 கோடி உள்ள யூதர்கள் 180  நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். 140 கோடி உள்ள முஸ்லிம்கள் மூன்று நோபல் பரிசுகளை மட்டுமே வென்றுள்ளனர். (அமைதிக்காகத் தரப்படும் விருதுகள் நீங்கலாக.)

யூதர்கள் ஏன் வலிமையுடன் திகழ்கின்றனர்?  ஸ்டேன்ஸி மெஸார் முதல் மைக்ரோ சிப்பைக் கண்டு  பிடித்தவர். லியோ ஸலார்ட் முதன் முறையாக நியூக்ளியர் சங்கிலித் தொடர்பைக் கண்டுபிடித்தார். பீட்டர் ஸ்கல்ட்ஸ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்; சார்லஸ் அட்லர் - போக்குவரத்து சிக்னல் விளக்கு; பென்னோ ஸ்ட்ராஸ் - ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்; ஐசடோர் கிஸி - ஒலித் திரைப்படங்கள்; எமைல் பெர்லினர் - தொலைபேசி மைக்ரோ ஃபோன்; சார்ல்ஸ் கின்ஸ்பர்க் - வீடியோ ஒளிப்பதிவுக் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்தனர்.

ரால்ஃப் லாரன் (போலோ), லீவிஸ் ஸ்ட்ராஸ் (லீவிஸ் ஜீன்ஸ்), ஹோவர்டு ஸ்கல்ஸ் (ஸ்டார்பக்ஸ்), செர்ஜிபிரின் (கூக்ளி), மைக்கேல் டெல் (டெல் கம்யூட்டர்), லேரி எல்லிசன் (ஓராகள்), டொன்னா கரண் (DKHY),இர்வ் ராப்பின்ஸ் (பாஸ்கின்ஸ் & ராபின்ஸ்), பில்ரோசன்பர்க் (டன்கின் டொனட்ஸ்) ஆகியோர் தொழில் உலகில் முன்னணி முதலீட்டாளர்கள் ஆவர்.

(2006 ல் அதிகாரத்தில் இருந்த யூதர்கள் மட்டும் )ரிச்சர்டு லெவின்,யேல் பல்கலைக்கழகத் தலைவர் ஒரு யூதர். அவரைப் போன்றே  ஹென்ரி கிஸ்ஸிங்கர் (அமெரிக்கா உள்துறைச் செயலாளர்). ஆலன் கிரீன்ஸ் பான், ஜோசப் லிபர்மேன், மெடலின் ஆல்பிரைட் காஸ்பர் வீன்பர்கள், மேக்ஸிம் லிட்வினோவ். டேவிட் மார்ஷல் (சிங்கப்பூரின் முதல் முதலைமைச்சர்), ஐசக் இஸாக்ஸ் (ஆஸ்திரேலிய காவ்ர்னர் ஜெனரல்), பெஞ்சமின் டிஸ்ரேலி, யெவ்ஜனி பிரிமா கோவ் (ரஷ்யப் பிரதமர்), பாரி கோல்டு வாட்டர், ஜார்ஜ் ஸாம்போய் (போர்ச்சுகல் அதிபர்), ஜான் டெட்ஸ் (CIA, இயக்குநர்), ஹெர்ப் கிரே (கனடா துணைப் பிரதமர்), பியர்ரி மென்டஸ் (பிரான்ஸ் பிரதமர்), மைக்கேல் ஹோவர்டு (இங்கிலாந்து உள்துறைச் செயலாளர்), புரூனோ கிரிஸ்கி (ஆஸ்திரிய வேந்தர்), ராபர்ட் ரூபின் (அமெரிக்க நிதிச் செயலாளர்) ஆகியோரும் யூதர்களே.

ஊடகத் துறையில், வோல்ஃப் பிளிட்சர் (CNN), பார்பரா வால்டர்ஸ் (ABC News), யூகின் மேயர் (வாஷிங்டன் போஸ்ட்), ஹென்ரி கிரன்வால்ட் (TIme - எடிட்டர்), காதரின் கிரஹாம் (வாஷிங்டன் போஸ்ட் அதிபர்), ஜோசப் லெலிட் (நியூயார்க் டைம்ஸ் எடிட்டர்), மேக்ஸ் ஃப்ரான்கல் (நியூயார்க் டைம்ஸ்) ஆகிய யூதர்கள் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

உலக வரலாற்றில் இடம் பெற்ற மிகச் சிறந்த ஐரோப்பா கொடையாளரின் பெயரை உங்களால் கூற முடியுமா? அவர்தான் ஜார்ஜ் ஸோரஸ். ஒரு யூதர். இதுவரை அவர் 4 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வாழங்கியுள்ளார். உலகில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த உதவி கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வால்டர் அனன்பர்க் என்ற மற்றோரு யூதர் 2 பில்லியன் டாலர்களை வழங்கி 100 நூலகங்களைக் கட்டியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மார்க் ஸ்பிட்ஸ் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். லென்னி கிரேஸல்பர்க் மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றவர். ஸ்பிட்ஸ், கிரேசில் பர்க் மற்றும் போரிஸ் பெக்கர் ஆகியோர் யுதர்களே.

இந்தப் பூமியில் 1,476,233,470 முஸ்லிம்கள் வழ்கின்றனர். 100 கோடி மக்கள் ஆசியாவிலும் 40 கோடி மக்கள் ஆப்ரிக்காவிலும் 4.4 கோடி பேர் ஐரோப்பாவிலும் 60 லடசம் பேர் அமெரிக்காவிலும் உள்ளனர். ஒவ்வொரு யூதருக்கும் 100 முஸ்லிம்கள் உள்ளனர்.ஆனாலும் பலம் குன்றிப் போயிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

இஸ்லாமிய மாநாட்டு அமைப்பில் (OIC)  57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து 500 பல்கலைக்கழகங்களை மட்டுமே அமைத்துள்ளனர். 30 இலடசம் முஸ்லிம்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் என்ற விகிதத்தில். அமெரிக்கா 5758 பல்கலைக்கழகங்களையும் இந்தியா 8407 பல்கலைக்கழங்களையும் பெற்றுள்ளன.

2004 இல் ஷாங்காய் ஜியோ டான்க் பல்கலைக்கழகம் நடத்திய உலகப் பல்கலைக்கழங்களின் தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடத்தில் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

YNDP தகவல்படி கிறிஸ்தவ நாடுகளில் கல்வியறிவு விகிதம் 90% கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் 15 நாடுகளில் எழுத்தறிவு 100%, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் சராசரி 40% மட்டுமே.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பத்து லட்சம் முஸ்லிமுக்கு 230 விஞ்ஞானிகள் மட்டுமே உள்ளனர். அமெரிக்கா 4000 விஞ்ஞானிகளையும் ஜப்பான் 5000 விஞ்ஞானிகளையும் பெற்றுள்ளது. முழு அரபுலகிலும் முழு நேர ஆராய்ச்சியாளர்களின் மொத்த எண்ணிக்கை 35000 மட்டுமே. முஸ்லிம் நாடுகள் அந்தந்த நாடுகளின்  மொத்த வருமானத்தில் கல்விக்காக 0.2 % மட்டுமே செலவிடுகின்றன. கிறிஸ்தவ நாடுகள் 5% செலவிடுகின்றன.

முஸ்லிம் உலகம் அறிவை உற்பத்தி செய்வதில், பெறுவதில் பின்தங்கி உள்ளதே இதற்கு காரணம்.

1000 மக்களுக்கு எத்தனை நாளிதழ்கள், புத்தகங்கள் உள்ளன என்பதை வைத்து அந்த சமூகத்தின் அறிவை எடை போட முடியும். பாகிஸ்தானில் 1000 மக்களுக்கு 23 நாளிதழ்கள் உள்ளன. சிக்கப்பூரில் 360. UK வில் 10 லட்சம் மக்களுக்கு 2000 புத்தகங்கள், எகிப்தில் 20 மட்டுமே.

முஸ்லிகள் ஏன் வலிமை குன்றி உள்ளனர்? நாம் அறிவை உற்பத்தி செய்யவில்லை.

முஸ்லிம்கள் ஏன் அதிகாரமின்றி உள்ளனர்? நாம் அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்தவில்லை.

முஸ்லிம்கள் ஏன் பலத்தைப் பெறவில்லை? நாம் அறிவை பயன்படுத்தவில்லை.

அறிவு சார்ந்த சமூகத்திற்குத்தான் எதிர்காலம் என்பதை நாம் கவனத்தில் கொண்டு, கல்வி அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் மாற்றத்தை ஏற்படுத்தும். அப்போதுதான் நாம் வலிமையானவர்களாய் திகழ முடியும்.

16 comments:

 1. வீறு கொண்டு எழுந்த சமுதாயம் இன்று ஏனோ பின் வாங்கி விட்டது!!

  ReplyDelete
 2. வீறு கொண்டு எழுந்த முஸ்லிம் சமுதாயம் ஏனோ பின் வாங்கி

  விட்டது!

  ReplyDelete
 3. Really superb, A thoughtful writing.

  ReplyDelete
 4. சலாம் சகோ.. சிந்திக்கக் தூண்டும் பதிவு...நாம்தான் கல்வியின் மூலம் இனி முன் நோக்கி போக வேண்டும்...

  ReplyDelete
 5. யாராக இருந்தாலும் கல்வி தான் கடைசி வரை...

  ReplyDelete
 6. நேரத்துகேற்ற மிக அவசியமான பதிவு ஹைதர் காக்கா !!

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நன்பரே, நல்ல விளக்கத்தை தந்து கல்வின் சிறப்பை அழகா சொல்லி இருக்கிறீர்கள் அனைத்து சமுகத்திறகும் இது ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு... நன்றி

  ReplyDelete
 8. மிக நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. இதை படிக்கும் போது நம் நிலையை நினைத்து வருத்தமாக உள்ளது அண்ணா.
  ஏதாவது செய்து இதை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.அல்லாஹ்தான் காப்பாத்தணும். :(

  ReplyDelete
 10. கல்வியில் பின்தங்கவில்லை பிண்தள்ளப்பட்டுள்ளோம்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் அருமையான கட்டுரை ....


  நம் சமுகத்தில் அறிவுக்கு ஒன்றும் பஞ்சமில்லை ....ஆனால் அதை எங்கு பயன் படுத்த வேண்டும் என்று தெரியவில்லை ..
  உதாரணம் நம் நாட்டை யெடுத்து கொள்வோம் ....பொறியில் துறையில் ஆதிகமாக இருபது நம சமுகத்தை சார்ந்த பிள்ளைகள் தான் ஆனால் அவர்கள் தன தாய்நாட்டுக்கும் தன சமுகத்துக்கு வேலை செய்யாமல் வேறு ஏங்கோ உழைத்து கொண்டு கலைத்து கொண்டு இருகிறார்கள் !!!!


  - கரையில் இருந்து

  ReplyDelete
 12. மிகவும் அருமையான தொகுப்பு. பல தெரியாத தகவல்கள்.
  ஆனால் நீங்கள் மிகப்பெரும் தவறு செய்கிறீர்கள். உங்களைப்போன்ற படித்தவர்களே குரானை தவறாக புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைத்துகூட பார்க்கவில்லை.
  யூதர்களையும் முஸ்லிம்களையும் ஒப்பீடு செய்வது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல.

  //5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;//
  இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி காண்பீர்கள்?
  குரான் என்பது அன்றைய சூழ்நிலையை மனதில் கொண்டு இறக்கப்பட்டது. மனித நேயத்திற்கு பொருந்தாத கருத்துக்களுக்கு இன்று இடம் தரக்கூடாது.
  யூதர்களை எதிரிகளாக பார்ப்பதை நிறுத்துங்கள்.
  அறிவே ஆயுதம் அல்ல. அன்பே அல்லா, அறிவே அல்லா என்று கூறி சுக்பி வழியில் அவனை அடையுங்கள்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ புரட்சிமணி அவர்களே

   //மிகவும் அருமையான தொகுப்பு. பல தெரியாத தகவல்கள்.///

   நன்றி

   //ஆனால் நீங்கள் மிகப்பெரும் தவறு செய்கிறீர்கள்.//

   அச்சச்சொ

   ///உங்களைப்போன்ற படித்தவர்களே குரானை தவறாக புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைத்துகூட பார்க்கவில்லை.
   யூதர்களையும் முஸ்லிம்களையும் ஒப்பீடு செய்வது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல.////

   இரு சமூகம் போர்க்களத்தில் நிற்கும் போது அவர்களின் தரத்தைப் பற்றி பேசுவது காலங்காலமாக நடைமுறை வழக்கு ஐயா அவ்வகையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

   //5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;//
   இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி காண்பீர்கள்?
   குரான் என்பது அன்றைய சூழ்நிலையை மனதில் கொண்டு இறக்கப்பட்டது. மனித நேயத்திற்கு பொருந்தாத கருத்துக்களுக்கு இன்று இடம் தரக்கூடாது.
   யூதர்களை எதிரிகளாக பார்ப்பதை நிறுத்துங்கள்.////

   கண்டிப்பாக இந்த வசனம் போர்க்கால சூழலில் இறங்கியது சமதானக் காலத்தில் பொருந்தது மறுபடியும் யூதர்கள் வலிந்து போரை முன்னேடுத்து அப்பாவி மக்களை கொல்ல வரும்போது இந்த வசனம் மறுபடியும் நடைமுறைக்கு கால காலத்துக்கும் வரும் ஐயா

   ///அறிவே ஆயுதம் அல்ல. அன்பே அல்லா, அறிவே அல்லா என்று கூறி சுக்பி வழியில் அவனை அடையுங்கள்
   நன்றி////

   சுஃபி வழியை நீங்கள் தேர்ந்தெடுக்க சொல்வதின் பிண்ணனியை விடுங்கள் பரமாத்மா கிருஷ்ணனிடம் மாகபாரத போரில் அர்ஜீனன் போரிட முடியாது என்று சொன்னபோது கிருஷ்ணன் செய்த உபதேசத்தை மறுபடியும் படித்துப் பாருங்கள் புரியும்.

   வருகைக்கு நன்றி ஐயா

   Delete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. ஐயா,
  தங்கள் பதிலுக்கு நன்றி
  //இரு சமூகம் போர்க்களத்தில் நிற்கும் போது அவர்களின் தரத்தைப் பற்றி பேசுவது காலங்காலமாக நடைமுறை வழக்கு ஐயா அவ்வகையில் எடுத்துக் கொள்ளுங்கள்.///

  இரு சமூகம் எங்கே போரில் நிற்கின்றது? இஸ்ரேல் என்ற அரசும் ஹமாஸ் என்ற இயக்கத்திற்கும் தான் சண்டை.
  நீங்கள் இந்த பிரச்சனையை யூதர்கள்,முஸ்லிம்கள் பிரச்சனையாக அணுகக்கூடாது.(நானும் சற்றுமுன்பு வரை தவறாகத்தான் புரிந்து வைத்திருந்துள்ளேன் ) இஸ்ரேல் மக்கள் தொகையில் 16 சதவீதம் முஸ்லிம்கள். காசாவுக்கு ஆதரவாக யூதர்களும் உள்ளார்கள் என்று நீங்களே பதிவிட்டுள்ளீர்கள்.
  அப்படி இருக்கும்பொழுது
  ##
  //5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;//
  //கண்டிப்பாக இந்த வசனம் போர்க்கால சூழலில் இறங்கியது சமதானக் காலத்தில் பொருந்தது மறுபடியும் யூதர்கள் வலிந்து போரை முன்னேடுத்து அப்பாவி மக்களை கொல்ல வரும்போது இந்த வசனம் மறுபடியும் நடைமுறைக்கு கால காலத்துக்கும் வரும் ஐயா
  //
  ##
  என்பது ஏற்ப்புடையது அல்ல.தவறு செய்வது யூதர்கள் அல்ல இஸ்ரேல் அரசாங்கம் தானே?
  இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக பார்ப்பது தவறுதானே?
  கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.


  //பரமாத்மா கிருஷ்ணனிடம் மாகபாரத போரில் அர்ஜீனன் போரிட முடியாது என்று சொன்னபோது கிருஷ்ணன் செய்த உபதேசத்தை மறுபடியும் படித்துப் பாருங்கள் புரியும்.//
  போரை கிருஷ்ணர் செய்ய சொல்லி இருந்திருந்தாலும் அல்லா செய்ய சொல்லி இருந்திருந்தாலும் அது அந்த காலம்.
  இந்த காலத்தில் நாம் சண்டை இட்டால் அது உலகப்போராக மாறி உலக அழிவிற்கு வித்திடாதா ?
  கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஐயா.

  நன்றி

  ReplyDelete
 15. ஜனநாயக நிழலில் முஸ்லிம்!!??

  ஆட்சியாளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில பண்புகளை அது சுமந்திருப்பதால் "ஜனநாயகம்" (Democracy ) சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம் என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை அடிப்படையாககொண்டதுமல்ல. .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்கு எடுக்கும் தேவை ஏன்?

  ஆன்மீக வாழ்வையும் ,உலக வாழ்வையும் பிரிப்பது ! எனும் அடிப்படையில் கிறிஸ்தவ உலகம் இந்த ஜனநாயகத்தை தனது கட்டாயத்தேவையாக பண்டைய கிரேக்கரின் பின் மத்திய ஐரோப்பாவின் மதகுரு சர்வாதிகாரத்தை எதிர்க்க பயன்படுத்தி கடவுளுக்குரியதை கடவுளுக்கும் ,அரசருக்குறியதை அரசருக்கும். எனும் விதியின் கீழ் மதச்சார்பின்மை கோட்பாட்டை நோக்கியதாக திசை மாற்றி ஜனநாயகத்தின் நவீன பயண்பாடு ஆரம்பிக்கின்றது என்பதுதான் வரலாறு.

  முஸ்லிம் சமூகம் இதன்பக்கம் வழிகாட்டப்படும் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் . இஸ்லாத்த்தினில் பிரத்தியோகமானதும் நிலையானதுமான ஒரு அரசியல் வழிகாட்டல் இல்லையா ?!! 'வஹி' இந்தவிடையத்தில் குறைபாடு செய்துவிட்டதா ?!! அல்லாஹ் (சுபு ) எம்மை பாதுகாக்க வேண்டும் .

  அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
  அவர்கள் நிராகரிப்பாளர்கள் ! (TMQ 5:44)

  அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
  அவர்கள் அநியாயக்காரர்கள் ! (TMQ 5:45)

  அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
  அவர்கள் பாவிகள் ! (TMQ 5:47)

  (நபியே !)"நிச்சயமாக அல்லாஹ்விற்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி
  உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? ... (TMQ 5:40)

  போன்ற அல்குர் ஆன் வசனங்களும் இன்னும் பல ஏராளமான அல்குர் ஆன் வசனங்களும் தெளிவாக இருக்க முஸ்லிம்' உம்மாவை ' தவறான ஒரு படு பாவத்தை நோக்கி இந்த ஜனநாயகம் இட்டுச்செல்கின்றது என்பது ஒரு வெளிப்படையுண்மை.

  இதோ உதாரணம் துருக்கி ,எகிப்து ,பாகிஸ்தான் ,போன்ற முஸ்லிம் நிலங்களில் கூட இஸ்லாமிய 'ஷரியாவை ' அமுல் படுத்த 51% வாக்குகளை எதிர் பார்த்து நிற்கின்றது !!ஒரு முஸ்லிமின் முன் இஸ்லாமிய 'ஷரியா' வும் ஒரு தெரிவு !!!??? அவ்வளவுதான்.

  இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைக்கமுடியும்
  எனும் வாதமே நகைப்புக்கிடமானது ! ஏனெனில் இதனோடு இணைவு என்பதே முதலாளித்துவத்தை தலுவச்சொல்லும் 'கலிமா ' தான் ஏனெனில் அது தனக்கென பிரத்தியோகமான ஓர் அரசியல் ,பொருளாதார, சமூகவியல் வழிமுறைகளை கொண்டது .

  அதனூடாக பயணிக்க நிணைப்பவர்களுக்கு தனது சிந்தனைகளோடும் , வழிமுறைகளோடும் முரண்படாத வரை ஒரு செயல் சுதந்திரத்தை தாராளமாக அள்ளிவழங்கும் அமெரிக்காவின் வாசிங்க்டன் முதல் இஸ்ரேலின் டெல்அவிவ் வரை இதில் தடையே இருக்காது ! அதன் கொள்கை சார் சுயரூபத்தை புலப்படுத்துமிடம் என்று அவர்கள் தனிமனித சுதந்திரமாக கருதுமிடங்களில் இஸ்லாம் தனது சட்டங்களை சொல்லவரும்போதுதான் ஆட்கள் தொகையே வாழ்வின் சட்டங்களையும் , அரசியலையும் ,அதிகாரத்தையும் தீர்மானிப்பதாக அது கூறும் !

  இன ,மத, குல, நிற ,வர்க்க, பிரிவுகளை மறைமுகமாகவோ ,வெளிப்படையாகவோ அங்கீகரித்து அது மனித உரிமையாகவும் ,தனி மனித சுதந்திரமாகவும் வரையறுக்கும் ! தேச, தேசிய எல்லைகளை இயல்பாக்கி கீழ்த்தரமான இன, மத, சாதி மோதல்களை தூண்டிவிடும் .இதுதான் ஜனநாயகத்தின் சுயரூபம் !!!! மேலே தந்த சுருக்கமான ஜனநாயகத்தின் விளைவுப்பொருட்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் ! சற்று இது பற்றி சிந்திப்போமா?

  ReplyDelete