யார் இந்த பக்கீர்ஷாக்கள்? என்கிற முந்தைய மூன்று பாகங்களை வாசிக்காதவர்கள்கீழேயுள்ள இணைப்பை அழுத்தி, படித்துவிட்டு பின்னர் இந்த பகுதியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்..
யார் இந்த பக்கீர்ஷாக்கள்?
யார் இந்த பக்கீர்ஷாக்கள்-பாகம்2
யார் இந்த பக்கீர்ஷாக்கள்-பாகம்.3
மார்க்கம் தனிமையை, துறவறத்தை அனுமதிக்கவில்லை.
மார்க்கத்தைப் பொறுத்தவரை தீய செயல்களிலிருந்து விலகி வாழ்வதுதான் உண்மையான துறவறம்.தனிமை.தீயவர்கள்,வீணான கரியங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள், சீர்கேடுகளை விளைவிப்பவர்கள் ஆகியவர்களிடமிருந்து விலகிச் செல்வது தான் துறவறம்.
இந்த சூஃபியாக்கள், பக்கீர்கள் வேறு வகையான தவறான துறவறத்தை மேற்கொண்டு ஆசிரமம் அமைத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குபுறத்தில் வாழ்ந்தார்கள். சமகால அரசியலில் என்ன நடந்தாலும் இவர்கள் சட்டை செய்வதுமில்லை.
இரண்டு வாசல்படிகளை எவன் மிதிக்கவில்லையோ அவன் பாக்கியசாலி,“ஒன்று அரசனின் வாசல்படி, இரண்டு வைத்தியனின் வாசல்படி” என்றுதத்துவம் பேசினார்கள். இவர்களுடைய சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் இதேபோதனையை செய்தார்கள். பூமிக்கு கீழேயுள்ள(மண்ணறை வாழ்க்கை)வைகளையும் வானுக்கு மேலேயுள்ள(மறுமை வாழ்க்கை)வைகளையும் பற்றி மட்டும் பேச வேண்டும் என்ற இவர்களின் தத்துவமே பின்னாளில் இவர்களின் வீழ்ச்சிக்கும் சரிவுக்கும் பாதையை திறந்துவிட்டது. அரசாளும்வர்க்கம் “சபாஷ் இதுவல்லவா மார்க்கம்; சூபி இஸ்லாம் அமைதி புறா” என்று புகழ்ந்தார்கள்.
இவர்கள் ஆபத்தற்றவர்கள் என்பதால் அன்றைய ஆளும் அதிகார மையங்கள் இவர்களை பராமரித்தார்கள். இன்றும்கூட இந்தியாவின் ஆளும் வர்க்கமாக உள்ள பார்ப்பனர்கள் வஹாபிஸத்தை எதிர்ப்பதையும் சூஃபிஸத்தை இந்தியாவிற்கு ஏற்ற மார்க்கம் என்று புகழ்வதை பார்த்திருப்பீர்கள். இதற்குள் வலுவான கடந்தகால அரசியல் காரணங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை கொண்ட மவோயிஸ்ட்களிலிருந்து,நாத்திகர்கள், கம்யுனிஸ்ட்கள், பின்நவீனத்துவவாதிகள் என அனைவருக்கும்,“இந்த உலக (துனியா) வாழ்க்கை தேவையில்லை, “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கேன்ன” என்கிற சூஃபிஸ கொள்கை சர்க்கரைப்பந்தலாக இனிப்பதன் கராணமும் இதுதான். அரசியல் அதிகாரங்களை அடைய நினைக்கும் இவர்களின் அபிலாஷைகளுக்குஒருபோதும் சூஃபிகள் தடைகற்களாக இருக்கமாட்டார்கள், இருக்கவும்முடியாது.
தொடர்ந்து ஆளும் வர்க்கமாக தொடர நினைக்கும்
இந்துத்துவாவாதிகளும்,அதிகாரத்தை வருங்காலங்களில் கைப்பற்ற கனவு காணும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளும் மூடப்பழக்கமற்ற குர்ஆன் ஹதீஸ் அடிப்படைக் கொண்ட ஒரிறைவாதிகளை தூற்றுவதையும், தாயத்து,தட்டு, மாந்திரீகம், கல்லறைவழிபாடு போன்ற உச்சகட்ட மூடப்பழக்கத்தை மார்க்கமாக கொண்ட சூஃபிஸவாதிகளை ‘மூடப்பழக்கத்தை ஒழிக்க பிறந்த முற்போக்குவாதிகள்(!?)’ என கள்ளமவுனம் சாதிப்பதும் மறதியினாலோ,எதர்த்தமானதோ
அல்ல.
இந்துத்துவாவாதிகளும்,அதிகாரத்தை வருங்காலங்களில் கைப்பற்ற கனவு காணும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளும் மூடப்பழக்கமற்ற குர்ஆன் ஹதீஸ் அடிப்படைக் கொண்ட ஒரிறைவாதிகளை தூற்றுவதையும், தாயத்து,தட்டு, மாந்திரீகம், கல்லறைவழிபாடு போன்ற உச்சகட்ட மூடப்பழக்கத்தை மார்க்கமாக கொண்ட சூஃபிஸவாதிகளை ‘மூடப்பழக்கத்தை ஒழிக்க பிறந்த முற்போக்குவாதிகள்(!?)’ என கள்ளமவுனம் சாதிப்பதும் மறதியினாலோ,எதர்த்தமானதோ
அல்ல.
சரி விஷயத்துக்கு வருகிறேன்
அன்றைய இஸ்லாமிய,இந்துமன்னர்கள் பற்றற்ற பக்கீர்களுக்கு காணிகளை ஒதுக்கி, அவர்களின் மஹான்களுக்கு தர்ஹா கட்டுவதற்கும், அதைச்சுற்றி சூழல் சார்ந்த ஆன்மீகம் வியாபரம் செய்வதற்கும் ஏதுவாக இவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் போன்றவற்றை செய்து கொடுத்தார்கள்.
தாயத்து விற்கும் பக்கீர்ஷா பிரிவை சேர்ந்த சாயிபுகளின் வியாபர கடைகள்
கட்டும் தாயத்துக்களை வீடு வீடாக சென்று அறுத்தெறியும் குர்ஆன், ஹதீஸை பின்பற்றும் தவ்ஹீத் பெண் பிரச்சாரகர்.
தற்கொலை, இணைவைப்பு இரண்டும் (ஹாரம்) இஸ்லாத்திற்கு விரோதமானது என எச்சரிக்கும் ஒரிறைக் கொள்கைவாதிகள். இவர்கள் ஆளும் வர்க்கங்களின் தலைவலிகள்.
வீடு வீடாக சென்று கொட்டடித்து, மஹான்களின் அருமை பெருமைகளை பாடி காணிக்கைகளை பெற்ற இவர்களின் நடொடி வாழ்க்கைமுறை மாறி
பக்தர்கள் இவர்களின் குடியிருப்புக்களை (தர்ஹாக்களை) நோக்கி வர குடியிருப்புக்களில் தங்கி வியாபரம் செய்த பக்கீர்களில் சாயிபுகள்,லெப்பைகள் என இரு புதிய பிரிவுகள் உண்டாகியது (இன்றும் நாகூர்,ஏர்வாடி தர்ஹா போன்றவற்றினை நிர்வகிப்பது சாஹிபுகள் தான்).
இந்த இஸ்லாமிய புதிய பூசாரி (சாயிபுகள்) அல்லாத, வாய்ப்பு கிடைக்காத ஏழை பக்கீர்கள் அல்லது புகழ்பெற முடியாத ஒவ்வொரு ஊர்களிலும் இஸ்லாத்திற்கு விரோதமாக இருக்கும் தாய்த்து தெரு குடியிருப்புவாசிகள் கொட்டடித்து பாட்டு பாடி பிழைப்பது மட்டும் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால் வேறு தொழில்களிலும் ஈடுபாட்டார்கள்.
ஆரம்பத்தில் தியாகம், அர்ப்பணிப்பு, கொள்கை க்காக தன்னையே விட்டுகொடுத்தல், இந்தியாவில் இஸ்லாத்தின் தூதை பரப்பக்கூடியப் பணி தங்களுடைய தோளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து செயல்பட்ட சிறு கூட்டம் இவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?ஆனால் அதுதான் உண்மை!
கிடைத்த ஒரு சில அழைப்பாளர்களுக்கென்று பிரத்யேகமான சட்டங்களை சூபிக்கள் உருவாக்கினார்கள். (இந்த சட்டங்களுக்கும் இஸ்லாத்திற்கு ம் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வேறு விஷயம்)
1.சூபிக்களிடம் உங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவேன் என்று பையத்(சத்தியப்பிராமணம்) செய்ய வேண்டும்.
(ஏனென்றால் குறைவான நபர்கள் இருந்ததால் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது.)
2.உழைத்து சம்பாதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டும்.
(இருக்கிறதே அற்ப நபர்கள். இவர்களும் சம்பாத்தியம் வியாபரமென்று போய்விட்டால்
அழைப்புபணியை யார் செய்யுறது? அதனால 24 மணி நேர ஊழியர் தேவை.)
3.இந்த வாழ்க்கையை ஒரு பயணியை போல் வாழ வேண்டும்.பயணி என்பதை நினைவில் மறக்காமல் இருப்பதற்காக தன்னை முஸாபர்என்றே அறிமுகப்படுத்த வேண்டும். (அரபி மொழிப்படி (முஸாபர்) என்றால் பயணி.ஆனால் பேச்சு வழக்கில்
பிச்சைக்காரர்களை குறிக்கும் சொல்லாக மாறியதற்கு இந்த பக்கீர்கள் தான் காரணம்.)
4.உலக வாழ்க்கையில் மையத் (உயிரற்ற பிணம்) போல இருப்பேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.
இதை ஒரு சடங்காக செய்வார்கள். 6அடி குழி வெட்டி அதில் உயிரோடு சில நொடிகள் புதைத்து அப்புறம் வெளியே எடுப்பார்கள். அதாவது ‘மெளத்தா(இறந்து) போய் விட்டார்.நடமாடுவது மையத்(பிணம்). அதற்கு எந்த ஆச பாசமும் கிடையாது என காட்டுவதற்கு!ஒருவர் பக்கீர் ஆவது என்றால் சும்மா ஆகிவிடமுடியாது. இதற்கு மேற்கூறிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
இப்படி அவர்களின் அன்றைய பார்வையில் தெளிவான பிரச்சார இயக்கமாக ஆரம்பித்து இன்று சிதைந்து சாம்பிராணி போடுவது, கந்தூரி மற்றும் திருவிழாக்களில் பலூன் வியாபரம், அம்மி,ஆட்டுக்கல் ஆகியவற்றை உளியை வைத்து கொத்தி கொடுப்பது,(மய்யத்) மரணித்த மனிதர்களை அடக்குவதற்கு குழி வெட்டுவது, வெளியூர்களுக்கு சென்று வீடு வீடாக கொட்டடித்து பிச்சை எடுப்பது என இப்படி அடையாளம்மாறிபோனார்கள்.
பின் குறிப்பு:
இவர்களைப் பற்றிய நிறைய தகவல்களை ஆய்வுரீதியாக சேகரித்து வைத்திருக்கிறேன்.விரைவில் பிரபல பதிப்பகத்தின் மூலம் புத்தகமாக (இன்ஷா அல்லாஹ்) வெளியிடப்போகிறேன். உங்களுடைய ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன். பதிவு இத்தோடு முற்று பெறுகிறது.
உங்கள் ஆய்வு பதிப்பாக வரும்போது நிச்சயம் அது ஒரு நல்ல விளைவை உண்டாக்கும்.ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிரொம்.வாழ்த்துகள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரர் அண்ணன் ஹைதர் அலி,
பக்கீர்களை பற்றிய உங்களின் ஆய்வுகள் புத்தகமாக வர போகிறது என்ற செய்தி மகிழ்வை கொடுக்கிறது. அச்சு ஊடகத்தில் காலடி எடுத்து வைக்கும் உங்களின் எழுத்துப்பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
சூபிகள் அரசியலற்ற மொக்கைகளாக இருப்பதால் தான் இவர்களை (இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் உட்பட) உலகம் ஆதரிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அது மட்டுமே காரணமில்லை. சூபியிசத்தை ஆதரிப்பவர்கள் பலரும் பல்வேறு விடயங்களுக்காக சூபி கூட்டத்தை ஆதரிக்கிறார்கள். அதில் நீங்கள் குறிப்பிடும் காரணம் பிரதானமான ஒன்று.
ஸலாம் சகோ.ஹைதர் அலி...
ReplyDeleteஅருமையான பதிவுத்தொடர்.
இன்ஷாஅல்லாஹ், விரைவில் மேலும் பல தகவல்களுடன் புத்தகமாக வெளிவர வாழ்த்துகள்.
////தொடர்ந்து ஆளும் வர்க்கமாக தொடர நினைக்கும் இந்துத்துவாவாதிகளும்,அதிகாரத்தை வருங்காலங்களில் கைப்பற்ற கனவு காணும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளும் மூடப்பழக்கமற்ற குர்ஆன் ஹதீஸ் அடிப்படைக் கொண்ட ஒரிறைவாதிகளை தூற்றுவதையும், தாயத்து,
தட்டு, மாந்திரீகம், கல்லறைவழிபாடு போன்ற உச்சகட்ட மூடப்பழக்கத்தை மார்க்கமாக கொண்ட சூஃபிஸவாதிகளை ‘மூடப்பழக்கத்தை ஒழிக்க பிறந்த முற்போக்குவாதிகள்(!?)’ என கள்ளமவுனம் சாதிப்பதும் மறதியினாலோ,
எதர்த்தமானதோ அல்ல.////
---சூப்பர்..!
பதிவில் இதை போல்ட் எழுத்தில் போடுங்க சகோ..!
.
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஹைதர் அலி!
ReplyDeleteஅருமையான ஆக்கம். புத்தகமாக வெளி வருவது கண்டு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஅருமையான ஆக்கம் சகோ. ஆய்வுகட்டுரை புத்தகமாக வெளீவரப்போவதை கண்டு மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள்
தாயத்து,சைனைடு படம் செம கலக்கல் :-)
எங்கள் ஊரிலும் இப்படியான ஆட்கள் சிலர் அலைகிறார்கள். அதில் ஒரு முதியவர் பற்றிய செய்தி ரொம்பவே ஆச்சர்யமூட்டியது. அவரின் மகன்கள் வெளீநாடுகளில் வசிக்கிறார்களாம். ஆனால் பாத்தியா, தாயத்து மந்திரிச்சு தருவதுன்னு எல்லா மூடப்பழக்க செயல்களும் செய்வார். இவர் பிச்சை எடுக்கிறார். ஏன்னா குலத்தொழிலாம். விடமுடியாதாம்.... என்ன கொடுமை :-(
ReplyDeleteஇவர்களை பற்றி பல செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி சகோ
சலாம் சகோ...
ReplyDelete"இவர்களின் நடோடி"
என்று உள்ளது....
புத்தகமாக வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஅறியாத பல செய்திகள்!
பக்கிர்ஷாக்கள் பற்றி
அறிய தந்தமைக்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
@Barari
ReplyDelete//உங்கள் ஆய்வு பதிப்பாக வரும்போது நிச்சயம் அது ஒரு நல்ல விளைவை உண்டாக்கும்.ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிரொம்.வாழ்த்துகள்.//
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ
ரொம்ப மகிழ்ச்சி தொடர்ந்து ஆதாரவு தாருங்கள்
@பி.ஏ.ஷேக் தாவூத்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
//பக்கீர்களை பற்றிய உங்களின் ஆய்வுகள் புத்தகமாக வர போகிறது என்ற செய்தி மகிழ்வை கொடுக்கிறது. அச்சு ஊடகத்தில் காலடி எடுத்து வைக்கும் உங்களின் எழுத்துப்பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.//
தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோ
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//பதிவில் இதை போல்ட் எழுத்தில் போடுங்க சகோ..!//
போட்டு விட்டேன் சகோ நன்றி
@சுவனப்பிரியன்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோ
நானும் மகிழ்ச்சியடைகிறேன்
@ஆமினா
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//அருமையான ஆக்கம் சகோ. ஆய்வுகட்டுரை புத்தகமாக வெளீவரப்போவதை கண்டு மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள்//
மனமார்ந்த நன்றி சகோ
@ஆமினா
ReplyDeleteநான் அதுபோன்றவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் சகோ
@NKS.ஹாஜா மைதீன்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
சுட்டிக் கட்டிமைக்கு நன்றி சகோ
விரைவில் புத்தகமாக வரும்
@G u l a m
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அறிந்து புரிந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ