Tuesday, January 17, 2012

காதியானிகள்(அஹமதியாக்கள்) யார்? புத்தக அறிமுகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சாபிலுள்ள ‘காதியன்’ எனும் ஊரில் மிர்சா குலாம் அஹமத் என்பவர் தன்னை ஒரு ‘நபி’ என்று அறிவித்துக் கொண்டார் அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆளும் வர்க்க அரசு இவர்களுக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தது.மிர்சா குலாம் அஹமதைப் பின்பற்றுபவர்கள் ‘காதியானிகள்’ என்றும் ‘அஹமதியாக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மிர்சா குலாம் அஹமத் அவர்கள் தன்னை ‘நபி’ என்று மட்டுமல்ல, தானே ‘ஏசுவின் மறு வருகை’ என்றும் தானே ‘மாஸீஹ் மவ்ஊத்’(வாக்களிப்பட்ட மஸீஹ்) என்றும், தானே ‘கல்கி’ அவதாரம் என்றும் இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டார்.தொடக்கத்தில் தன்னை ‘நிழல் நபி’ என்று அழைத்துக் கொண்டார், போகப் போக ,தானே நபி’என்றும் வாதிடத் தொடங்கினார்.

அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் இந்த தீக்குறும்பர்களின் திருகுதாளச் செயல்பாடுகள் இலேசாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இவர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு உதவியது போல் இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் இன்றைய 'செங்கொடி' வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஆகவே காதியானிகள் யார்?, அவர்களின் கொள்கைகள் என்ன?, அவருடைய தீய நோக்கத்தின் பின்னணி என்ன?,அவர் எந்த அளவுக்கு வழிகெட்டுப் போனவர் எனபதை அஹமதின் நூல்கலிலிருந்தே ஏராளமான எடுத்துகாட்டுகளைத் தந்து காதியானிசத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளது இப்புத்தகம்.

இந்நூலின் ஆசிரியர் P.P. அப்துல் ரஹ்மான், காதியானிஸத்தின் கொள்கை பற்றிய உர்தூ மூல நூல்களை எல்லாம் சேகரித்து,மிர்சா குலாம் பற்றியும் அவரது முன்னுக்குப் பின் முரணான,அபத்தமான நபித்துவ வாதங்கள் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்தே எடுத்தெழுதிய,
‘காதியானிஸம் ஓர் தொகுப்பு’ என்ற ஏழு தொகுதிகளைக் கொண்ட மலையாள நூலின் முதலாம் தொகுதி தமிழாக்கம் தான் இந்நூல்.

ஏழு தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியும் தனித் தன்மையுடன் இருப்பதால் தொடர்ச்சியாய் வாசிக்காவிட்டாலும் பாதகமில்லை;எனினும் அனைத்துத் தொகுதிகளையும் வாசிப்பதே பலனளிக்கும்.

பின்குறிப்பு:
 காதியானிகள் சம்மந்தமாக விரிவாக எளிமையாக விளக்கி தொடர் பதிவு (இன்ஷா அல்லாஹ்) எழுத போகிறேன் விரைவில்.

நூல்:காதியானிகள் யார்?
தொகுப்பாசிரியர்
P.P. அப்துல் ராஹ்மான்
தமிழில்
K.M முஹம்மது
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை-600012

14 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  புத்தக அறிமுகத்திற்கு ஜசாக்கல்லாஹ்.

  //காதியானிகள் சமப்ந்தமாக விரிவாக எளிமையாக விளக்கி தொடர் பதிவு (இன்ஷா அல்லாஹ்) எழுத போகிறேன் விரைவில்//

  இன்ஷா அல்லாஹ், படிக்க ஆர்வமுடன் இருக்கின்றேன். உங்களுக்கு இறைவன் நற்கூலியை வழங்குவானாக...ஆமீன்.

  வஸ்ஸலாம்..

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  மற்றுமொரு உபயோக நூல் அறிமுக பகிர்வு! காதியானிகள் குறித்த இன்னும் சில தகவல்களை அதிகப்படுத்தி இருக்கலாமே..!

  //பின்குறிப்பு:
  காதியானிகள் சமப்ந்தமாக விரிவாக எளிமையாக விளக்கி தொடர் பதிவு (இன்ஷா அல்லாஹ்) எழுத போகிறேன் விரைவில்.//

  அப்படினா ஓகே. இன்ஷா அல்லாஹ்
  :)

  எளிதாக எல்லோரும் அறிந்திட புத்தக வெளியீட்டகத்தின் தொடர்பு எண்ணையும் தந்திருக்கலாமே!

  ReplyDelete
 3. alhamdulillah.

  great job. well done


  Keep it up


  bro.asalam

  ReplyDelete
 4. சலாம்! சகோ ஹைதர் அலி!

  சிறந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! தொடரையும் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அருமையான புத்தக அறிமுகம் அண்ணா. ஜஸக்கல்லாஹ் ஹைர்

  சீக்கிரம் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 6. ஸலாம் சகோ.ஹைதர் அலி,

  முக்கிய விஷயங்களை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

  முஸ்லிம்களில் யாரெல்லாம் தூய இஸ்லாமிய(குர்ஆன் & நபிவழி) நெறிகளிலிருந்து தடம் மாறி பயங்கரவாதிகளாகினரோ...

  குர்ஆன் & நபிவழி இவற்றில் இல்லாத அல்லது இவற்றுக்கு மாறான தன்னிச்சையான தம் புதிய தவறான கொள்கைகளால் வழிகெட்டும் போனார்களோ...

  அவர்களை எல்லாம் தேடிப்பிடித்து அவர்களையே 'முஸ்லிம்கள்' என முன்னிறுத்தி அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும்,

  அவர்களின் தீய செயல்களையே காரணம் காட்டி,

  தூய இஸ்லாத்தை அப்படியே தம் வாழ்வியல் கொள்கையாக பின்பற்றும் நல்லோரை 'வஹ்ஹாபிகள்' போன்ற வேறு பெயர்கள் கொண்டும் வில்லன்களாக சித்தரிக்க முயல்வதும்...

  அன்றைய மற்றும் இன்றைய இஸ்லாமோஃபோபியா காரர்களின் (இவர்கள் எந்த நிற கொடியை ஏந்தி வைத்திருந்தாலும்..) ஒரே முக்கிய இலக்கு ஆகி விட்டது.

  ஏனெனில், இவர்களின் கொள்கைகளில் உள்ள ஓட்டைகளை இந்த வஹ்ஹாபிகள்தான் வெளிச்சமிடுகிறார்கள் என்று செம காண்டு..!

  தொடர்ந்து சோதனைகளை வென்று
  சாதனைகளாக்க இறைநாட்டத்தை இறைஞ்சுவோம்.

  மீண்டும் ஒரு நல்ல புத்தக பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 7. Assalamu alikum bro good post bro
  // பின்குறிப்பு: காதியானிகள் சம்மந்தமாக விரிவாக எளிமையாக விளக்கி தொடர் பதிவு (இன்ஷா அல்லாஹ்) எழுத போகிறேன் விரைவில்//
  insha allah i'm waiting for your post
  jazhakallahu kair

  ReplyDelete
 8. ///அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆளும் வர்க்க அரசு இவர்களுக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தது./////

  இத்தகவலை கண்டு வியப்படைகிறேன்... இதை அரசே செய்ததா அல்லது அப்போதைய ஆளுனர் செய்தாரா?

  ReplyDelete
 9. சலாம் சகோ ஹைதர் அலி,

  காதியானிகள் பற்றி தொடர் பதிவா. கேட்கவே சந்தோசமாக இருக்கிறது. நானும் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். புத்தகம் படித்தால் ஆசிரியரின் பார்வை மட்டும் தான் தெரியும், நீங்கள் பதிவிட்டால் பின்னூட்டங்களில் நடக்கும் சண்டை மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். LOL .....

  காத்திருக்கிறேன் சகோ.

  ReplyDelete
 10. மதி கெட்டு பகிரங்கமான வழிகேட்டில் இருக்கும் மிகச் சொற்ப எண்ணிக்கையில் உள்ள காதியானிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வதால்
  என்ன பயன் ?!

  ReplyDelete
 11. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

  ---- >
  புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
  ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

  இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
  < ----

  ReplyDelete
 12. எழுதுகள் சகோதர வாழ்த்துக்கல். கன்டிப்பாக இவர் மூகமுடி கிழிக்கப்படவேண்டியவர்கள். இவர் யூதர்களைவிட ஆபத்தனவார் எந்த வித ஆயுதங்கள் இல்லமல் அப்படி சாய்த்துவிடுவார்கள். குர்ஆன் ஹதீஸ் இருந்த போது இவர்களின் பர்ப்பு வேகது.

  ReplyDelete
 13. நண்பர் ஹைதர் அலி,

  \\இவர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு உதவியது போல் இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் இன்றைய 'செங்கொடி' வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள்//

  இந்த வாக்கியத்தை நீங்கள் இன்னும் சற்று விளக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete