Monday, January 23, 2012

'மாவோ':சொந்த தேசத்து மக்களை அகதிகளாக்கிய கம்யூனிசம்

இணையத்தில் மாவோவை ஆசானாக கொண்ட மாவோயிஸ்ட்கள், சீடர்கள் வினவு,மற்றும் செங்கொடி வகைறாக்கள்.இந்தியாவில் எப்படியும் மவோயிஸ கொள்கை கொண்ட ஒரிஜினல் கம்யூனிஸ ஆட்சி அதிகாரத்தை பிடித்து விடுவோம் என்கிற கனவோடு எழுதிக் கொண்டிருக்கும் குழு. அவரவர் கொள்கையை எழுதுவது தவறில்லை. ஆனால் அவர்கள் பின்பற்றும் வழிமுறை? நேர்மையற்றது,மிகத்தவறானது

ஆசியாவில் இந்த மாவோயிஸ கம்யூனிஸம் ஆட்சி செலுத்திய இடங்களின் பின்னே ஒரு வரலாறு இருக்கிறது. எங்கெயெல்லாம் புத்த/பவுத்த மதத்தின் செல்வாக்கு இருந்ததோ அங்கு தான் இவர்களின் சரக்கு மிக ஈஸியாக செல்லுபடியாகி இருக்கிறதுஎளிமையாக ஊடுருவி அதிகாரத்தை பிடிக்க முடிந்திருக்கிறதுஉதாரணத்திற்கு சீனாதிபெத்வியட்நாம்தற்போது நேபாளம்……….  இவர்களுக்கு மேடை அமைத்து கொடுத்தது வேறு யாருமில்லை. நம்ம புத்த மகான்’ தான்.

அரசப்பதவிகளை உதறித் தள்ளிவிட்டு  துறவியான புத்தர் தன்னுடைய சீடர் போர்க்களத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றபோது அதுகூட கூடாதென்று தடுத்தார்.வியாட்நாமை பிரான்ஸ்,அமெரிக்க்கா போன்ற வல்லரசு நாடுகள் ஆக்கிரமித்து கொடுமையான போரை அவர்கள் மீது திணித்தபோது புத்த பிக்குகள் எதிர்த்து ஆயுதமேந்தி போராடவில்லை. புத்த மதமும் அப்படி அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக புத்த பிக்குகள் தன்னை தானே எரித்து தற்கொலை செய்துக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.அனுதாபப்பட்டு உச்சு கொட்டி எழுதிய தலைப்பு செய்திகளாக பத்திரிக்கையில் வரமுடிந்ததே தவிர தீர்வு கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் ராஜக போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாட்நாமிய புத்த பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து போராட்டம் நடத்திய புகைப்படம்.


ராணுவப்போராட்ட அரசியலுக்கு புத்த மதத்தில் இருந்த வெற்றிடத்தை நிரப்ப அங்கு கம்யூனிஸ போராளிகள் தேவைப்பட்டார்கள்வல்லரசுகளுக்கு எதிராக போராடினார்கள்புத்த மதத்தையும் சேர்த்து வென்றார்கள். அமெரிக்கா மட்டுமல்ல புத்த மதமும் தான் வியட்நாமிய அரசியலிருந்து வெளியேறியது. அந்த இடத்தை கம்யூனிஸ கொள்கை பிடித்துக் கொண்டது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட்கள் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு சக்தியாக இருந்து சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கி அவர்களின் மதநம்பிக்கையை அழித்துஅடக்கி ஒடுக்கியிருக்கிறார்கள்.

சீனாவில் சீன மக்கள் குடியரசு’ என்ற பெயரில் மவோ ஆட்சியில் அமர்ந்த கையோடு திபெத் பற்றிய தனது ஆக்கிரமிப்பு கொள்கையை அறிவித்தது.திபெத் ஆக்கிரமிக்கப் படவேண்டும்அதன் தாய்நாடான சீன மக்கள் குடியரசோடு திபெத் இணைக்கப்பட வேண்டும்சீனாவின் ஒரு பகுதி தான் திபெத். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று அறிவித்து சுதந்திர நாட்டின் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுப்போம்” என்றது.

நவம்பர் 2,1949-ல் திபெத்திய வெளிநாட்டு அமைச்சகம் ஒரு கடிதத்தை மாவோவுக்கு அனுப்பிவைத்தது. அதன் சாரம் இதுதான்:-
திபெத் ஒரு வித்தியாசமான நாடு.திபெத் முழுக்க முழுக்க புத்த மதம்ஆழமாக பரவியுள்ளது.தலாய் லாமா அவர்களின் தலைமையில் திபெத் இயங்கி வருகிறது.முந்தைய காலம் தொட்டு இன்றைய தேதிவரையில் திபெத் தனிநாடாகவே இருந்து வந்திருக்கிறது.திபெத்தின் அரசியல் நிர்வாகம் எந்தவொரு வேற்று நாட்டினரின் அதிகாரத்துக்கும்உட்பட்டிருக்கவில்லை. திபெத், தம்முடைய பிரதேசங்களை தாமாகவே பாதுகாத்துக் கொள்கிறது. இது ஒரு மத நம்பிக்கையுள்ள நாடு.


எந்த விளக்கத்தையும் கேட்க மாவோ தயராக ல்லை. ஜனவரி 1,1950.அதிகாலையில் கரகரத்த குரலில் ரேடியோ பீகிங் இந்த வருடம் செம்படைக்கு ஒரு முக்கியப் பணி ஒதுக்கப் பட்டிருக்கிறது. திபெத் கைப்பற்ற படவேண்டும் உடனடியாக போரை தொடங்கியது. அதுவும் எப்படி?????? திரும்பத் திரும்ப வானொலியிலும் துண்டறிக்கைகளிலும் தன்னை ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக காட்டிக் கொள்ளமால்,திபெத்தை விடுவிக்க வந்த நண்னாகக் காட்டிக் கொள்ள முனைந்தது மவோவின் ஆக்கிரமிப்பு படை.


மாவோ உறுதியான குரலில் திபெத்துக்குச் சில வாக்குறுதிகளை அளித்தார்.(பின்னர் கொடுத்த வக்குறுதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை)


1.திபெத்திய லாமாக்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள்பாதுகாக்கப்படும்;மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்படும்.

2.லாமாக்களின் கோயில்கள் பாதுகாக்கப்படும்.

3.திபெத்தின் தற்போதைய நிர்வாகத்திலும் ராணுவத்திலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது.

4.திபெத்தியப் படைகள் சீனாவின் பாதுகாப்புப் படைகளுடன் ஒன்றிணைக்கப்படும்.அனைத்து லாமாக்களும் அதிகாரிகளும் அவர்களது பதவிலேயே தொடர்ந்து நீடிக்கலாம்.

5.எந்தவிதமான முன்னேற்ற ஏற்பாடாக இருந்தாலும் அது திபெத்தியர்களைக் கலந்தாலோசித்த பிறகே நடைமுறைப்படுத்தபடும்.
1951-ல் சிறிய எதிர்ப்புகளைத் தகர்த்துவிட்டு திபெத்துக்குள் நுழைந்ததுசெம்படை. முதன்முறையாக சீனாவின் தலைமையை திபெத் ஏற்றுக் கொண்டது., ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அடிபணிந்தது.(அன்று பணிந்த திபெத் இன்று வரை விடுபடவில்லை)
திபெத்தில் அரசியல் ட்சி அதிகாரத்தை வலுவாக பிடித்தபிறகு தங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாற்றமாக மவோ’ கம்யூனிஸ்ட்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள்…..

1.புத்த மதத்துக்கு சொந்தமான மடங்களின் சொத்துக்கள், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திபெத்தியர்கள் மீது புத்தமதம் செலுத்திவரும் நம்பிக்கையை அழித்து விட சீனா துடித்தது. மதத்தலைவர்கள் முக்கியத்துவத்தை இழக்க வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டனர். புத்தமதத்துக்கு எதிரான கருத்துக்களைப் போதிக்கும் புத்தகங்கள் திபெத்துக்குள் பெருமளவு கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

2.பொற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடாலயங்களுக்கு அனுப்பும் வழக்கத்தை நிறுத்தச் சொன்னார்கள் கம்யூனிஸ்ட்கள். மடாலயங்களுக்கு அனுப்பப்படாத குழந்தைகளுக்கு நவீன கல்வி அளிக்கப்படும் என்றார்கள்.

3.அரசாங்கம் ஏற்று நடத்தும் ஒரு சில மடாலயங்கள் தவிர்த்து(!?) பிற புத்த மடங்களை பொதுமக்கள் வேறுவகையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.(இவர்கள் தான் தாலிபான்கள் புத்த சிலையை இடித்ததை கண்டிக்கும் மகா உத்தமர்கள்)

4.மதச்சடங்குகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்கள்.

5.பிரார்த்தனைக் கொடிகள்,துபத்திகள் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்றார்கள்.

6.தலாய் லாமாவின் அனைத்து புகைப்படங்களையும் மக்கள் அழித்து விட வேண்டும் என கூறினார்கள்.


உச்சகட்டமாக தலாய் லாமாவின் அதிகாரத்தை மாவோயிஸ சீ அரசு ரத்துசெய்தது.தலாய்லாமா மற்றும் திபெத்திய பழைய அரசாங்க பிரதிநிதிகள்இந்தியாவிற்கு தப்பி அகதிகளாக வந்தனர்அதற்கு பிறகு இலட்ச கணக்கான திபெத்திய மக்கள் அகதிகளாக இந்திய எல்லைக்குள் வந்தவண்ணம் இருந்தனர். (இன்றும் அகதிகளாக இருக்கின்றனர்.)
தலாய்லாமா தப்பி இந்தியா வந்தபோது நேரு அவரை சந்திக்கிறார்
இதனிடையில் லாமா கிளம்பிய மறுநாள் விடிந்ததும் சீன படைகள் அரண்மனையை சுற்றி வளைத்தன. ஆனால் லாமா தப்பிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. திபெத் எங்கும் அவரை தேடும் பணி தீவிரமானது. எல்லைகள் எல்லாம் அடைக்கபட்டன. அவருக்கு ஆதரவானவர்கள் கொல்லபட்டனர். இந்த கொடுமையான செய்கையால் சுமார் 87000 திபெத்தியர்கள் கொல்லபட்டனர். மேலும் 27000 பேர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

இலங்கையின் ஈழதமிழ்மக்கள் சில நாடுகளில் அகதிகளாக இருப்பது போலவே1952 லிருந்து இவர்களும் அகதிகளாக திரிகிறார்கள். நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை நிறுவி அதற்கு பிரதமரையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்

நாடு கடந்த திபெத் பிரதமர் (கெலோன் டிரிப்பா)லாப்சங் சங்கே-தலாய்லாமா

அன்று மவோ தொடங்கி வைத்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட இந்த மக்கள் 60 வருடங்களாக அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனதுகோரிக்கையை சீனா செவி சாய்த்துவிடும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சீனா இதுவரை செவிசாய்க்கவில்லை. தேசிய இன விடுதலையை பற்றி வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்ட்களும் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.


இதே கம்யூனிஸ்ட்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது கதற கதற அடித்து கம்யூனிஸ்ட்களை ஆப்கானியர்கள் வெளியேற்றியதை இந்த திபெத்தியர்கள் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் கம்யூனிஸ சர்வதிகார அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைக்கும். 

18 comments:

  1. சலாம் சகோ.ஹைதர் அலி,

    //'மாவோ':சொந்த தேசத்து மக்களை அகதிகளாக்கிய கம்யூனிசம்//

    ம்ம்ம்... அது..!

    இருங்க சகோ.
    படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்..!..!

    ReplyDelete
  2. மாவோ & கம்யுனிசம்.........
    என்ன ஒரு ஃபாஸிசம்...!!!

    ReplyDelete
  3. இந்தியாவில் இந்துக்கள் முஸ்லீம்களை வெறுத்து அடித்து கொன்றாலும் மதம் தான் முக்கியம். இந்தியாவில் இந்துக்கள் செய்கிற இந்த பயங்கரவாதத்தை தான், மற்ற முஸ்லீம் நாடுகளில் இருக்கும் முஸ்லீம்கள் செய்கிறார்கள். இதுதான் உலக நீதியாக இருக்கிறது. உங்களுக்கு என்ன கவலை. இந்துக்கள் உங்களை தாக்கினால் தானே உங்கள் மதவெறி வளரும்.அப்போதுதான் நாம் எல்லோரும் முஸ்லீம் என்று முஸ்லீம் சகோதரர்களிடம் பேசி ஒரு கூட்டத்தை காட்டி காசு சம்பாதிக்க முடியும். ஆணாதிக்கத்தின் உச்சம் என்றால் அது இந்த அறுவெறுப்பான முஸ்லீம் மதம் தான். மதம் மிருகத்திற்குதான் பிடிக்கும். மனிதற்கு பிடித்தால் அவனுக்கு பெயர் மனிதனா? இந்தியாவில் எல்லோரையும் முஸ்லீம்களாக மாற்றி ஒரு புரட்சி எல்லாம் செய்ய முடியாது. அதுவும் உலகின் மிகப்பெரிய சுயநல கொடியவர்களான பார்ப்பனர்கள் இருக்கும் வரை சாத்தியமே இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மேற்குலக நாடுகளே துணையாக இருக்கும். அப்படி நிகழ்தால் உங்கள் கதி அதோ கதிதான்.கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் கூட இந்துவாக இருப்பதால் அவர்களுக்கு பிரச்சனை இல்லை.

    ReplyDelete
  4. மாவோவின் கம்யூனிஸ கொள்கை பற்றி கம்ப்ளீட்டாக சொன்னதற்கு நன்றி தல. ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது என்பது யாரும் செய்யாதது இல்லை, ஆனால் வரமுறை மீறீ அந்த நாட்டினுடைய மத சடங்குகள் மற்றும் மத தலைவர்கள் மீது அடக்குமுறை கூடாது.

    மாவோவும் ஒரு சராசரியான அரசியல்வாதி என்று நிரூபித்து விட்டார்.

    நல்லதொரு ஆக்கம். வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  5. பாசிசம், இடதுசாரி, வலது சாரி, பார்ப்பனியம், தலித் - இவங்கெல்லாம் யாரு’னு விளக்கமா ஒரு பதிவு போடுங்கப்பா.. இந்த வார்த்தைகளுக்கு விளக்கம் தெரியாம ஒரு பதிவுமே புரியமாட்டேங்குது....

    ReplyDelete
  6. உலகில் அழிந்து வரும் கொள்கைகளில் முதலிடத்தை பிடிக்கப்போகிற கொள்கை இந்த கம்யூனிசம்.

    இரட்டைவேடம்... நிஜத்தில் காணவேண்டுமென்றால் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளிலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  7. சலாம் சகோ....

    விரிவாக அலசி உள்ளீர்கள்...புத்த பிக்குகளின் உயிர் எரிப்பு போராட்டம் அந்த படம் இதுவரை நான் பார்க்காதது...

    ReplyDelete
  8. மாவோ வினால் அவரின் கம்யூனிச கொள்கையினால் அந்த நெருப்பில் எரியும் புத்த பிக்கை பார்த்தால்...

    தமிழக "ஒரிஜினல்(?)" கம்யுநிஸ்டுகளுக்கு...

    இதேபோல ராஜபக்சேயை எதிர்த்து தற்கொலை செய்த முத்துக்குமரன் நியாபகம் வருமா..?

    மூன்று பேருக்கு தூக்கு தண்டனை தரக்கூடாது என்று தீக்குளித்த செங்கொடி நியாபகம் வருமா..?

    ReplyDelete
  9. கரையில் இருந்துJanuary 24, 2012 at 5:46 AM

    anonymous அவர்களுக்கு தங்களுடைய உண்மை சம்பவத்தை யெடுத்து சொன்னால் இம்மைகள் பார்க்க மாறுகிறதோ , மனம் பதருகிறதோ ????

    உண்மையாக தங்கள் சொல்லுவது நடைபெறும் என்றல் அது உங்களை போன்ற நபருகளுக்கு ஆப்கானில் நடந்தது தான் இந்த பாசிஷ வாதிகளுக்கும் நடக்கும்.....இறைவன் நாடினால் !!!

    ReplyDelete
  10. //இதே கம்யூனிஸ்ட்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது கதற கதற அடித்து கம்யூனிஸ்ட்களை ஆப்கானியர்கள் வெளியேற்றியதை இந்த திபெத்தியர்கள் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் ‘கம்யூனிஸ சர்வதிகார அரசாங்கத்திடமிருந்து’ விடுதலை கிடைக்கும்.//
    ??????????????????????????????????
    புத்த மத கோட்பாட்டில் ஜிஹாத் உண்டா..?
    ??????????????????????????????????
    //அரசப்பதவிகளை உதறித் தள்ளிவிட்டு துறவியான புத்தர் தன்னுடைய சீடர் போர்க்களத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றபோது அதுகூட கூடாதென்று தடுத்தார்.//

    ReplyDelete
  11. அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ்,
    தோழர்களின் பழைய நட்பினால், செம்படைகளின் நெளிவு, சுளிவுகளை அப்பட்டமாக பதிவர் காட்டி இருக்கிறார்.... இன்னும் அதிகமாக அவர்களின் முகமூடிகளை கிழிக்க மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறேன் ....
    பொதுவாக புத்த பிக்குகள் சாந்த செருபிகள், வம்புதும்புக்கு போகாதவர்கள் ஆனால் சீலோன் பிக்குகள் அப்படியல்ல ...பேராசை பிடித்தவர்கள் .
    என்றைக்காவது ஒரு நாள் திபெத் , நிச்சயமாக சுதந்திர நாடாகும் .....
    " NOBODY EVER GREEN "

    ReplyDelete
  12. //பாசிசம், இடதுசாரி, வலது சாரி, பார்ப்பனியம், தலித் - இவங்கெல்லாம் யாரு’னு விளக்கமா ஒரு பதிவு போடுங்கப்பா.. இந்த வார்த்தைகளுக்கு விளக்கம் தெரியாம ஒரு பதிவுமே புரியமாட்டேங்குது....//

    அவ்வ்வ்வ்வ்வ்

    தயவு செய்து ஒரு பதிவு போடுங்க யாராச்சும்... எனக்கும் புரியல :-)

    ReplyDelete
  13. //3.அரசாங்கம் ஏற்று நடத்தும் ஒரு சில மடாலயங்கள் தவிர்த்து(!?) பிற புத்த மடங்களை பொதுமக்கள் வேறுவகையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.(இவர்கள் தான் தாலிபான்கள் புத்த சிலையை இடித்ததை கண்டிக்கும் மகா உத்தமர்கள்)//

    அப்ப தாலிபான் செஞ்சது தப்புனு ஒத்துக்கறீங்க...குட்.

    ReplyDelete
  14. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிளும் வளரும் வலதுசாரி தீவிரவாதம்.


    அமெரிக்காவிலும் ஐரோப்பாவிளும் வளரும் வலதுசாரி தீவிரவாதம்.

    http://tamilkhilafa.blogspot.com/2011/08/blog-post_18.html

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    கம்யூனிஷம் குறித்த நேர்த்தியான பதிவு!
    முற்றிலும் அறியாத செய்திகள்!

    இனியும் தொடர....
    வாழ்த்துகளும் -துஆவும்

    ReplyDelete
  16. /* இதே கம்யூனிஸ்ட்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது கதற கதற அடித்து கம்யூனிஸ்ட்களை ஆப்கானியர்கள் வெளியேற்றியதை இந்த திபெத்தியர்கள் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் ‘கம்யூனிஸ சர்வதிகார அரசாங்கத்திடமிருந்து’ விடுதலை கிடைக்கும். */

    சலாம் சகோ ஹைதர் அலி,

    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். உண்மை என்ன வென்றால். அடுத்து ஒருத்தர் தற்பொழுது கதற கதற அடி வாங்கிகிட்டு இருக்கார். வெளிய இன்னும் சரியா தெரியல.

    பெரியண்ணே தாலிபான்களுடன் போர் நிறுத்தத்திற்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

    ReplyDelete
  17. பாவம் சகோ புத்த மதத்தினர். திபத்தின் கதை உண்மையிலே வருத்தமானது தான்.

    ReplyDelete
  18. இதற்கான மறுப்பு செங்கொடி தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் காண்க.

    http://senkodi.wordpress.com/2012/01/29/tibet-lama/

    ReplyDelete