Sunday, June 19, 2011

கிணறு வெட்ட பணம் மிச்சமானது


திவேழுதுபவர்கள் பொதுவாக எதை பார்த்தாலும் அது சம்பந்தமாகஒருபதிவு எழுதலாமே என்று தோன்றும். இந்த பொதுப்புத்தியிலிருந்து நான் மட்டும் என்ன விதிவிலக்கானவான?


நான் இப்போது விடுமுறையில் வந்து வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களின் கணிப்பு சரிதான் அது சம்பந்தமான பதிவு தான் இது.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.


எல்லோரும் ஊரில் வீடு கட்டும் போது முதலில் தேவைப்படுவது தண்ணீர் வசதிதான் அதற்காக அனைவரும் முதலில் ஆழ்குழாய் கிணறு(ஃபோர்) அமைப்பார்கள். என்னுடைய கிராமம் வைகை ஆற்று படுகை அருகில் இருந்தும் 250 அடி 300 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் அமைத்து நீலத்தடி நீரை தேவையில்லாமல் வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்.


நானும் அவுங்க போட்ட ரூட்டில் போக விருப்பமில்லை கிணறு வெட்டினால் என்ன? என்று எண்ணம் தோன்றியது.
கிணறு வெட்டி வீடு கட்ட போகிறேன் என்று ஊரில் சொன்ன போது அனைவரும் கேலி பன்னினார்கள் இந்த காலத்துல போயி….? கிணறு வெட்டிக் கிட்டு…..? என்று இழுத்தார்கள்.


சரி ஃபோர் போட செலவு எவ்வளவு என்று விசாரித்த போது நீர் முழ்கி மோட்டார் இதர வகைகள் அனைத்தும் சேர்த்து 1,20,000 ரூபாய் பட்ஜெட் ஆனாது.
இதே கிணறு வெட்ட மொத்த செலவு 10,000 ரூபாய் தான் .35 அடியில் தண்ணீர் வந்து விடும் என்று இலக்கு வைத்து வெட்டிக் கொண்டிருக்கும் போது 16 அடியில் தண்ணீர் ஊற்று வந்து விட்டது. 


தண்ணிர்க்குள் முங்கி முங்கி மண் அள்ளி 8 அடிக்கு தண்ணீர் கிடக்கிறது.



கிணறு வெட்டுவதையும் அவர்களின் உழைப்பையும் பாருங்கள்

தண்ணீரை வெளியே கொண்டு வர டெக்ஸ்மோ மோட்டார் மற்றும் பிட்டிங் செலவு 15.000 மொத்தம் 25,000 த்தில் தண்ணீர் கிடைத்து விட்டது ஒரு இலட்சம் மிச்சம்.



நிலத்தடி நீரையும் பாழக்கவில்லை.

17 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.ஹைதர் அலி,

    ///கிணறு வெட்ட மொத்த செலவு 10,000 ரூபாய் தான் .35 அடியில் தண்ணீர் வந்து விடும் என்று இலக்கு வைத்து வெட்டிக் கொண்டிருக்கும் போது 16 அடியில் தண்ணீர் ஊற்று வந்து விட்டது. தண்ணீரை வெளியே கொண்டு வர டெக்ஸ்மோ மோட்டார் மற்றும் பிட்டிங் செலவு 15.000 மொத்தம் 25,000 த்தில் தண்ணீர் கிடைத்து விட்டது ஒரு இலட்சம் மிச்சம்.///

    ஒருத்தருக்கு கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது என்று boar போட்டால்... எந்த முயற்சியும் இன்றி, எல்லாரும் அதே ரூட்டில் போய்விடுகிறார்கள்.

    அல்ஹம்துலில்லாஹ்...
    நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்..!

    தங்கள் மாற்று சிந்தனைக்கும், முயற்சிக்கும் வாழ்த்துக்கள் சகோ.

    நிறைவாய் வீடுகட்டி இனிதாய் குடிபுக துவா செய்கிறேன்.

    (வீடியோ & போட்டோ நன்றாக இருக்கிறது).

    ReplyDelete
  2. உங்களைப்போலவே எல்லாரும்
    சிந்தித்து செயல் பட்டால் நல்லது
    தானே. அதேபோல உங்க வீடும் நல்ல
    படியா கட்டி முடித்து கிரஹப்பிரவேச
    பத்ரிக்கையும் அனுப்புங்க.என்னென்ன
    புதுமைகள் செய்தீங்கன்னும் சொல்லுங்க.

    ReplyDelete
  3. நீங்கள் செய்த இரண்டாவது புத்திசாலித்தனம் டெக்ஸ்மோ மோட்டார் பொருத்தியது. ஆயுளுக்கும் உழைக்கும். எங்க ஊரு மோட்டாருங்க.

    ReplyDelete
  4. சகோதரர் ஹைதர் அலி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    சூப்பர் சகோதரர். அழகான ஆக்கம். தாங்கள் இனிதே குடியேற என்னுடைய வாழ்த்துக்கள்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்!

    வீட்டைக் கட்டிப்பார்: கல்யாணம் பண்ணிப் பார்.

    அந்த அளவு சிரமம் உள்ள வேலை. எந்த சிக்கலும் இல்லாமல் நலமுடன் பணி முடிய இறைஞ்சுகிறேன்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்! சிக்கனத்தில்தான் சகோ பரக்கத் கிடைக்கும். நீங்கள் நினைத்ததைவிட அழகான முறையில் வீட்டைக்கட்டி, சந்தோஷமான முறையில் குடிபுக இறைவன் உதவி செய்வானாக! குழந்தைகள் கிணற்று கிட்டே போகாதபடி தடுப்பு வைத்துவிடுங்க சகோ.

    ReplyDelete
  7. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    உங்களுடைய வாழ்த்திற்கும் நிறைவன துஆ விற்கும் நன்றி சகோ

    ReplyDelete
  8. ஹைதர், ஸலாம்.

    வீடு கட்டுவதற்கு வாழ்த்துகள். இறைவன் பரக்கத்தை அதிகமாகத் தருவானாக.

    எனக்குச் சில சந்தேகங்கள்; தெளிவுபடுத்துங்க.

    போர் போடுவதற்கும், கிணறு வெட்டுவதற்கும் இவ்வளவு வித்தியாசமா? செலவு இவ்வளவு கம்மின்னா ஏன் யாரும் இதைச் செய்யறதில்லை?

    கிணற்றுக்கும், ஆழ்துளை குழாய்க்கும் என்ன வித்தியாசம்? ரெண்டும் ஒரே கான்செப்ட்தானே? அப்புறம் எப்படி, போரில் நீர் வர 200-300 அடி ஆகுது; அதுவே கிணற்றில் 50 அடிக்குள்ள தண்ணி வருது?

    நிலத்தடி நீர் பாழாவதிலும், ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

    கிணற்றில் தண்ணீர் வற்றியதால் போர் போட்டார்கள் என்று ஆஷிக் சொன்னார். அப்படியானால், போரில் வற்றாதா? (எங்க வீட்டில அதுலயும் வற்றி, குழாயை இன்னும் இறக்கிப் போட்டாங்கன்னு ஞாபகம்!!)

    (இன்னொரு பதிவுக்கான கேள்விகளாக இருக்கோ? ;-))))) )

    ReplyDelete
  9. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்June 20, 2011 at 12:36 AM

    அஸ்ஸலாமு அலைக்கும்
    வீடு கட்டுகின்றீர்களா சகோ வாழ்த்துக்கள்.நீண்ட நாட்களுக்குப் பின் பதிவெழுதி அழகான தகவல் தந்திருக்கின்றீர்கள் சகோ.

    ReplyDelete
  10. @Lakshmiஅவர்களுக்கு

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  11. @DrPKandaswamyPhD

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா

    நீங்க கோயமுத்துர் காரவுகளா?

    ReplyDelete
  12. @Aashiq Ahamed

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    வாழ்த்துக்கு நன்றி சகோ

    ஆனால் துஆ மிஸ்ஸிங்

    ReplyDelete
  13. @சுவனப்பிரியன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    உங்களுடைய துஆ விற்கு நன்றி சகோ

    ReplyDelete
  14. @அஸ்மா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    உங்களுடைய துஆ விற்கு நன்றி சகோ

    //குழந்தைகள் கிணற்று கிட்டே போகாதபடி தடுப்பு வைத்துவிடுங்க சகோ.//

    கண்டிப்பாக சகோ மேலே மூடி செய்து பாதுகாப்பாக மூடி விட்டேன் சகோ

    உங்களுடைய அறிவுரைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. சகோதரர் ஹைதர் அலி,

    வ அலைக்கும் ஸலாம்,

    ----
    ஆனால் துஆ மிஸ்ஸிங்
    -----

    என்றைக்குமே நம் சகோதர சகோதரிகள் என் துவாவில் இருப்பீர்கள். மறந்துவிட்டேன் சகோதரர்...

    கூடிய விரையில் தாங்கள் வீடு கட்டி முடிக்க இறைவன் அருள் புரிவானாக..ஆமீன்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  16. @ஹுஸைனம்மா

    //வீடு கட்டுவதற்கு வாழ்த்துகள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    //இறைவன் பரக்கத்தை அதிகமாகத் தருவானாக.//

    மிக்க மகிழ்ச்சி

    //எனக்குச் சில சந்தேகங்கள்; தெளிவுபடுத்துங்க.//

    தேளிவுப்படுத்திவிடுவோம்

    //போர் போடுவதற்கும், கிணறு வெட்டுவதற்கும் இவ்வளவு வித்தியாசமா?//

    கண்டிப்பாக நிறைய வித்தியாசம் இருக்கிறது

    //செலவு இவ்வளவு கம்மின்னா ஏன் யாரும் இதைச் செய்யறதில்லை?//

    அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

    ஒன்று.
    நீரோட்டம் இல்லாத பகுதிகளாக இருக்கலாம் ஆழமாக வெட்டிய ஆக வேண்டிய சூழல் இருந்தால் ஆழ்குழாய் தான் சரிபட்டு வரும்.

    இரண்டு.
    என்னதான் அரசாங்க பள்ளியில் கல்வி நன்றாக சொல்லிக் கொடுத்தாலும் தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டு என் மகன் அந்த பள்ளியில் படிக்கிறான் என்று பெருமை அடிக்கிற புத்தி.

    மிச்சத்திற்கு மறுபடிக்கும் பதில் தருகிறேன்

    ReplyDelete
  17. @Aashiq Ahamed

    எனக்கு தெரியும் சகோ சும்மா ஜாலிக்கு

    ReplyDelete