Wednesday, December 28, 2011

அவன் என்னை திட்டவில்லை...


ஒரு மனிதனின் சிகரத்தை
தம்மால் எட்ட முடியாதபோது
மக்கள் அவன் மீது பொறாமை கொள்கிறார்கள்.
அவர்கள் அவனது எதிரிகள்
அழகானப் பெண்களின் சக்களத்திகளைப் போல
அவர்கள் பொறாமையால் வெறுப்பால்
அவனைக் கீழ்த்தரமாகப் பேசுவார்கள்

அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
அருட்கொடைகளுக்காக
அவர்கள் பொறாமைக்கு ஆளாகிறார்கள்

அதற்காக இறைவன்
அந்த அருட்கொடைகளை
அவர்களிடமிருந்து பறித்து விடமாட்டான்.

வீணர்களின் அநீதி குறித்து
நீ முறையிடுகின்றாய்
ஆனால்,சாதனையாளர்கள் எவரும்
பொறாமைக்காரர்களின் பிடியிலிருந்து தப்பியதில்லை
பொறாமையின் தொடர் பிடியில் சிக்கித் தவிக்கும்
மதிப்புக்குரிய நண்பனே!
கீழ்த்தரமானவன்
பொறாமை கொள்ளப்படமாட்டான்
என்பதை புரிந்துக் கொள்!

ஒருவன் புகழின் வானத்தை தொட்டால்
நட்சத்திரங்கள் எண்ணிக்கையில்
எதிரிகள் இருப்பார்கள்
அவர்கள் முழுப் பலத்தைப் பயன்படுத்தி
அவன் மீது அம்பெய்வார்கள்
ஆனால்,
அவர்களால் அவனது எல்லையைத்
தொட முடியாது

சிறுவன் கடலில்
கல் எறிவதால்
கடல் காயமடையாது

என்னைத் திட்டி கொண்டிருக்கும்
ஒரு முட்டாளை நான் பார்த்த போது
‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி
வேகமாக நடந்து சென்றேன்.


டிஸ்கி
பொறாமைக்காரர்களும் தவறானக் கொள்கை உடையவர்களும் உங்களை விமர்சித்தால், அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனெனில்,
பொறாமையால் அவர்கள் உமிழ்கின்ற வார்த்தைகளையும் விமர்சனங்களையும் நீங்கள் தாங்கிக் கொண்டால் உங்களுக்கு நன்மை வழங்கப்படும். மேலும் அவர்களது விமர்சனம் உங்களது மதிப்பை உயர்த்தும். உங்களை உலகிற்கு அடையாளப்படுத்தும். எப்போதுமே சாதாரணமானவர்களைப் பார்த்து பிறர் பொறாமை கொள்வதில்லை.
செத்த நாயை மக்கள் உதைப்பதில்லை.

Tuesday, December 27, 2011

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார்.  ‘ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’

 ‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’

‘அதில்லை...’

 ‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’

 ‘இல்லை’

 ‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’

 ‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம் செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா? என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?

எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர். ‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?’

 ‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத் திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?’

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

இறைவன் குர்ஆனில்
“சொல்வதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லுங்கள்” என்கிறான் .

 “நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள்.ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்” 
(அல்குர் ஆன் 49:11)

டிஸ்கி நேற்று நான் எழுதிய மொக்க பதிவில் இந்த வரம்புகளை பேணவில்லை இனிமேல் அது போன்ற மொக்கை பதிவுகளை எழுதுவதில்லை நண்பர்களிடம் தவறுகளை கண்டால் இனி நேரடியாக பதில் சொல்லுவேன் நிறைய நண்பர்கள் இஸ்லாத்தின் படி நேற்று எழுதிய பதிவு தவறு என்று மெயிலிலும் நேரடியாகவும் சொன்னார்கள் அவர்களுக்கு நன்றி.

Sunday, December 25, 2011

பதிவுலகுக்கு வருகிறார் பாவாடா ஸ்டார்..!

"பாலா பதறணும்... அமீர் அலறணும்!" என்ற முழக்கத்தோடு சினிமா திரைப்பட உலகில் திடீரென்று குதித்து பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் புரட்சியாளர் பவர் ஸ்டார். இப்போது "வினவு விழுந்து புரள‌ணும்... கேபிள் சங்கர் கேள்வி குறியாகணும்!" என்கிற வெறியோடு பதிவுலகுக்குள் நுழைகிறார் முறைப்படி பதிவு ஆரம்பிக்கப் போகிறார். அதற்கு முன்,

"பவர் ஸ்டார்" என்கிற பெயர் (நியூமரால‌ஜி) எண் கணிதப்படி எட்டி உதைப்பதால் 'டி. ராஜேந்தர்' என்ற பெயரை 'விஜய ரஜேந்தர்' என்று மாற்றி இருப்பதுபோல், தன்னுடைய பெயரில் எக்கராணத்தைக் கொண்டும் "ர்" வரக்கூடாது என்ப‌தால் 'பாவாடா ஸ்டார்' என்ற பெயரோடு வலைப்பூவில் வளைத்து வளைத்து எழுதி அனைவரையும் கட்டம் கட்டி ஓரங்கட்டப் போகிறார். இனி பாவாடா ஸ்டார் அவர்கள் சொல்வதை கேட்போம்.
நான் ஏன் பதிவுலகிற்கு வந்தேன் என்று சின்னபுள்ளத் தனமாக கேள்வி கேட்கபிடாது. சினிமாவில் கோடி கோடியாக கொட்டிப் புகழடைவதை விட இங்கு ஓசியாக மொக்கைப் பதிவு எழுதி புகழடைய முடியும். அங்கு கட் அவுட் வைக்க காசு, தலையில் விக் வைக்க காசு. இங்கு அப்படியா? சைடு பாரில் "என்னைப் பார் யோகம் வரும்" என்று வழுக்கையை மறைக்க தலையில் தொப்பி, கையில் குடையோடு இளிக்கின்ற கட் அவுட் வைத்தால் ஓசிதானே!


பிளாக் ஆரம்பிப்பது ஃப்ரீ என்று சொன்னதற்காக 'தமிழ் பாதி', 'போடா நண்பா' என்று பல ப்ளாக்குகள் ஆரம்பிக்க போகிறேன் என்று நினைக்காதீர்கள். 'ஐடியா மணி' மணியாக குண்டக்க மண்டக்க வருவதால் அதையெல்லாம் இங்கு கொட்டி ஹிட்ஸ் பெற ஒரு பிளாக் போதுமா? அதுவும் ஓசியாக கிடைக்கும்போது..? நல்லாயிருக்கே நியாயம்...! இத்தனை ப்ளாக்குகளில் எழுதுவதால் என்னை வேலையில்லா வெட்டிப்பய‌ என்று நினைக்காதீர்கள். நான் படம் சம்பந்தமாக படித்துக் கொண்டிருக்கிறேன். 


சரி வெட்டித் தனமாக எழுதினாலும் ஹிட்ஸ் கண்டிப்பாக வேணும். அதற்காக என்ன செய்வேன் என்று கேட்கிறீர்களா? ஹும்.. என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களை எனக்கு அறவே பிடிக்கவில்லையென்றாலும் அவர்களை பிடித்ததுபோல் பில்டப் கொடுத்து பதிவு எழுதுவேன். அதிலும் தொடர்ச்சியாக தமிழ்மண மகுடத்தில் வரமுடியவில்லையா..? கைவசம் பல ஐடியா இருக்கு!  


சினிமாவில் நடிக்கும்போது ஹிட் ஆகுறதுக்கு நடிகைகளை கைக்காசு செலவழித்து போஸ்டர்களில் பிட்டுப்பட ரேஞ்சுக்கு போஸ் கொடுக்க வைத்தவன் பதிவுலகில் மட்டும் விட்டுறுவேனா? அதுவும் ஓசியாக கிடைக்கும்போது புது நடிகை "இலியானா"விலிருந்து பல பலியானதுகளின் படங்களைப் போட்டு ஃபேஸ்புக்கு, ஆர்குட்டு, டுவிட்டரு, ப்ளாக்கு, கூகுள் ப்ளஸ்ஸு, கூகுள் பஸ்ஸு.... இந்த மாதிரி இணையத்தின் இண்டு இடுக்கு எல்லாவற்றிலும் புகுந்து நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை முகப்பில் காட்டி கட்டி இழுத்துறமாட்டேன்? பாவாடா ஸ்டாரா.. கொக்கா..?
இன்னும் நிறைய பாவாடா ஸ்டாரிடம் ஐடியா கோணி கோணியாக இருக்கு, அவுத்து விடுறேன் இருங்க. பதிவுகள் ஹிட் ஆகணும்.. என்ன செய்றது..? எந்த விதமான கருத்துடனோ, கொள்கையுடனோ கூடாமல், 'இயற்கைக்கு விரோதமான முறையில்' என்னை மாதிரியான சுய இன்பர்கள் பெற்றெடுக்கிற மொக்கைப் பதிவுகளுக்குச் சென்று "சரக்கே இல்லையென்றாலும் ருசிகரமாக இருக்கிறது, அபத்தமாக இருந்தாலும் நகைச்சுவையாக இருக்கிறது, முட்டாள்தனமாக இருந்தாலும் விறுவிறுப்பாக இருக்கிறது" என்று கருத்துரைப் போட்டுவிட்டு அப்படியே வந்துவிடக் கூடாது, ஒருவரி 'உங்களுக்கு ஓட்டுப் போட்டு இருக்கிறேன்' என்று எழுத வேண்டும்.
மேலேயுள்ள வீடியோவில் காசுக் கொடுத்து திரட்டிய ஜால்றாக்களைப்போல் பதிவுலகில் ஓட்டுப் போட்டு கிடைக்கிற ஜால்றாக்களை வைத்து ஜல்லி அடிக்கலாம். பிடித்திருந்தால் மட்டும் ஓட்டுப் போடும் நேர்மையான பதிவர்களை அவர்களின் மெயில் ஐடிக்கு மடல் இட்டு ஓட்டுப் போடச் சொல்லி மிரட்டலாம். அப்படியும் மசியவில்லை என்றால் ஹி.. ஹி.. ஹி.. என்னதான் நான் அசிங்கமாக எழுதினாலும், சண்டைப் போட்டாலும் நீங்களும் என் நண்பர்கள்தான் என்று பதிவின் முகப்பில் எழுதி வைத்து கெஞ்சி பெற்றுக் கொள்ளலாம்.
என்னுடைய இந்த வீடியோவில் உள்ளது போன்று கெஞ்சி நடித்தவனுக்கு ஓட்டுக்காக கெஞ்சுவதெல்லாம் ஒரு மேட்டரா? (மீன் குஞ்சுக்கு நீந்த கத்துக் கொடுக்க வேண்டுமா என்ன?) 


இவ்வளவு கெஞ்சலுக்கு பிறகும் 'ஓட்டுப் போட மாட்டோம்' என்று அடம் பிடித்து நேர்மையுடன் விமர்சிக்கிறார்களா? விமர்சிப்பவர்களின் வலைப்பதிவில் அனானியாகச் சென்று இறங்கி மொட்டைக் கடுதாசியைச் சொருகுவது...  இப்படி பழிவாங்கும் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.


உங்களுக்கு ஒன்று ஆச்சரியமாக இருக்கலாம். "புதிதாக பதிவுலகில் குதிக்க போகிற எனக்கு எப்படி இவ்வளவு பதிவுலக ராசதந்திரங்களும் தெரியும்?" என்ற கேள்வி உங்களை தொலைத்து எடுக்கலாம் எனக்கு இது போன்ற ராசதந்திரங்களை கற்றுக் கொடுத்த ஆசான்,மேதகு ஐடியா பணி அவர்களின் பதிவு எழுதும் பாணிகளை பலவருடங்களாக உற்று நோக்கி கற்றுக் கொண்டேன்.

என் குரு நாதரின் சமீபத்திய ஒரே எரிச்சல்: என்ன தான் உருண்டு பிரண்டு பலவகையாக யோசித்து எழுதினாலும் தமிழ்மண மகுடத்திற்கோ நம்பர் ஓன் ஹிட்ஸ்க்கோ போகமாட்டிகிது. புதுசு புதுசா பதிவளர்கள்முளைத்து
ஆக்கப்பூர்வமாக வேற எழுதி தொலைத்து விடுகிறார்கள். பரிணாமத்தைப் பற்றி, இனவாதத்தைப் பற்றி, உயிரியல் கொட்படாம் (யாருக்கு வேண்டும்) இப்படி அவர்களுக்கு எழுதுவதற்கு கருத்தோ மார்க்கமோ கொள்கையோ இப்படி எதாவது ஒன்று இருக்கிறது. நமக்கு..?


பின்னூட்டம் வேறு பதில் சொல்ல முடியாத அளவுக்கு போடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அதனை நீக்க வேண்டியதாகி விடுகிறது. யாரு அது சிட்டிசன் ஓப் வேர்ல்டு ? இதுகளை எல்லாம் யாரு பதில் சொல்லதெரியாதவர்களிடம் கேள்வி கேட்க சொன்னது? தொந்தரவு தாங்க முடியவில்லையே.


ஆனாலும், எனக்கும் என் ஆசானுக்கும் மொக்கைகள்,மனம் போன போக்கில் எழுதுகிற கிசுகிசு பதிவுகள்,நடிகையின் படங்கள் பதிவுக்கு சமபந்தமே இல்லையேன்றாலும் சொருகிற யுக்தி. இவை போன்றவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி ஹிட்ஸ் பெறுவோம் சிரிக்காதீங்கே சீரியஸ்.
தன்னம்பிக்கை தான் வாழ்க்கை. என்னது யாருக்கா? மறுபடிக்கும் ஆரம்பத்திலிருந்தா? இப்படி ஒரு கேள்வியா? இப்படிக்கு: தன்னம்பிக்கையுடன் உங்கள் பவர்ஃபூல் பவர் ஸ்டார் என்ற பாவாடா ஸ்டார். 
டிஸ்கி  சமீபத்தில் சினிமா உலகில் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி கலக்கிய பவர் ஸ்டார் அவர்கள் பதிவுலகிற்கு வந்தால் எப்படி இருக்கும் அது தான் இந்த பதிவு

Wednesday, December 21, 2011

ஈழத்தமிழனே எங்களை எப்போது புரிந்துக் கொள்ள போகிறாய்..?.

முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்
என்ற தலைப்பில் சந்ருவின் பக்கம் என்ற பிளாக்கில் சகோதரர் யோகராஜா சந்ரு என்ற பதிவர், இலங்கை முஸ்லிம்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட்டதாக புதிய சில குற்றங்களை தகவல்களாக பகிர்ந்து இருந்தார். "ஒரு சில நன்னெறி தவறிய தீய முஸ்லிம்களின் குற்றச்செயல்களால், இலங்கையின் மொத்த முஸ்லிம் ஆண்களையும் குற்றம் சாட்டுவதாக உள்ளது இந்த தலைப்பு" என்ற விமர்சனம் பலரிடம் இருந்து வரவே அந்த தலைப்பில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டார். நன்றி 

இருந்தாலும் மனதில் வலிகுறைய வில்லை சவூதியில் வீட்டு வேலைக்கு வந்து மாட்டிக் கொண்ட ஈழ சகோதரியை மீட்க போகும் போது அரபி செருப்பை கழட்டி அடித்தபோது வலிக்கவில்லை.ஆனால் சொந்த சகோதரன் மண்ணை அள்ளி தூற்றும் போது மனது வலிக்காமல் இருக்க முடியவில்லை.

ஏன் நமக்குள் புரிதலில் இத்தனை தவறுகள்? எப்போது புரிந்துக் கொள்ள போகிறோம்? போராளிகளை(காட்டிக் கொடுத்தார்களா இல்லையா என்பது வேறுகதை) காட்டிக் கொடுத்தார்கள் என்று சொல்லப்பட்டு பள்ளிவாயிலில் தொழுகும் போது என் சகோதரர்கள் கொல்லப்பட்டு 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில்முழு தமிழ் முஸ்லிம்களையும் துடைத்தெறிந்த சம்பவம் நீங்காத வடுவாக பதிந்து இருந்தும்.
யாழ்ப்பாணாத்திலிருந்து விரட்டப்பட்டு அகதி முகாமில் அடிப்படை வசதியின்றி இருக்கும் தமிழ் முஸ்லிம்கள்.
என் தமிழ் முஸ்லிம் சகோதரன் அமீர் ஈழ சகோதரனுக்கு சாந்தியும் சாமதானமும் உண்டாக வேண்டும் என்பதற்காக போராடி சிறை சென்ற போதெல்லாம் ஈழ மக்களுக்காக போராடும் தமிழ் இஸ்லாமியர்கள் என்று தலைப்பிட்டு எழுதவில்லையே ஏன்? அப்போது தமிழர்களா தெரிந்த உனக்கு ஒரு சிலர் தவறு செய்யும் போது மட்டும் எப்படி இஸ்லாமியனாக தனியாக தெரிகிறார்கள்?.
மனது வலிக்கிறது என் தமிழ் சகோதரனே எப்போது புரிந்துக் கொள்ள போகிறாய்?

Friday, December 16, 2011

முல்லை பெரியாரும் கள்ள பயல்களும்


வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் அருட்கொடை. பல நாடுகளை சேர்ந்தவர்கள், ஒரே நாட்டிலுள்ள பல மாநிலத்தவர்கள் அவர்களிடையே மாறுபடும் பழக்கவழக்கங்கள்,கலாச்சாரம், பண்பாடு இவைகளை பல நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் செய்யாமலே அவர்களுடன் கொஞ்சம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நெருங்கி பழகும் குணமும் இருந்தால் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

இங்கு மலையாளிகளிடம் நெருங்கி பழகிய வரை எனக்கு தெரிந்தவரை அவர்களிடம் இன உணர்வும் மாநில வெறியும் அதிகம்.  ஒரு வெளிநாட்டுக்காரன் ஒரு தமிழனை நீ எந்த நாட்டுக் காரன் என்று விசாரித்தால் யோசிக்காமல் நான்(இந்தி) இந்தியன் என்று சொல்வார்கள், (நானும் அப்படித்தான் சொல்லி இருக்கிறேன்). அதற்கு பிறகு இந்தியாவில் நீ எங்கே என்று அவர் மேலும் தொடங்கும் போது மெட்ராஸி என்று சொல்லுவார்கள். ஆனால் இதே கேள்வியை மலையாளிகளிடம் கேட்டால் எடுத்தவுடனே நான் கேரளா என்பார்கள். அப்புறம் கேரளா எங்கு இருக்கிறது என்று கேட்டால் இந்தியாவில் இருக்கிறது என்பார்கள்.

இங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் ரூமை உள்வாடகை விடுவதற்காக பொது இடத்தில் விளம்பர நோட்டீஸ் ஒட்டும் போது South Indian Only என்ற வாசகத்தை பயன்படுத்துவர்கள். அதே மலையாளிகள் கேரளா ஒன்லி என்று மலையாள மொழியில் நோட்டீஸ் அடித்து ஒட்டுவார்கள். மலையாளம் வாசிக்க தெரிந்தவர்களுக்குத்தான் அது புரியும். அப்படியொரு  குறுகிய மாநில,இன,மொழி வெறி கொண்டவர்கள்.

அதே போன்று பத்திரிக்கை வாசிப்பது செய்திகளை தெரிந்துக் கொள்வது இதில் மலையாளிகளுக்கு ஆர்வம் ஆதிகம். இரண்டுக்கும் மேற்பட்ட மலையாள நாளிதழ்கள் சவூதியில் அச்சடிக்கப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் அவர்கள் நடத்தும் ஹோட்டல்களில் முழுநேரமும் செய்தி சானல்கள் ஒடிக் கொண்டு இருக்கும். நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கின்ற ஹோட்டல்களில் முக்கால்வாசி டிவி வைத்திருக்க மாட்டார்கள். அப்படியே வைத்திருந்தாலும் அழுகுனி டிவி சீரியல்களும், குத்து பாட்டுக்களும் ஓடிக் கொண்டு இருக்கும். இவர்கள் கொலவெறி பாடல்களில் மயங்கி இருந்த கால கட்டத்தில் அவர்கள் "DAM 999" என்ற படத்தை எடுத்து உலகம் முழுவதும் கேரளாவுக்கு ஆதரவான குரலை ஏற்படுத்தமுடிகிறதை வைத்து புரிந்துக் கொள்ளலாம்.

இது ஒரு வகையான ஊடகத்தை வளைத்து திரித்து தங்கள் கருத்தை திணிக்கும் கள்ளத்தனம். இந்த முல்லை பெரியாறு விவாகரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க, பிழைக்க துடிக்கும் பிழைப்புவாதிகள். இரு மாநில மக்களின் நல்லுறவை குலைத்தாவது லாபமடைய நினைக்கும் மனநிலை  அரசியல், ஆன்மிக, மாநில, மொழி, இனம் என்ற போர்வையில் எத்தனை வகையான கள்ளத்தனங்கள்.

இதில் மீடியாக்களின் பொறுப்பற்ற விளம்பரத்தனமான பார்வைகள் மிக அசிங்கமானவை. காலையில் சிற்றுண்டி சாப்பிட இங்குள்ள (சவூதி - ரியாத்திலுள்ள) கேரளா ஹோட்டலுக்கு போயி சேட்டா ஒரு செட் புரோட்டா என்று ஆர்டர் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் கேரளா கைராளி டிவி  நியூஸ் சானலில் முல்லை பெரியாறு ஒடிக்கிட்டு இருந்தது.

அதில் தமிழக கேரளா எல்லையில் உள்ள மலையாளிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கவர் ஸ்டோரி செய்தி. பேட்டி எடுப்பவர்களிடம் தமிழ் கலந்து பேசும் மலையாளிகள் எங்கள் வீட்டுக்குள் தமிழ்காரவுங்கே புகுந்து ஆடு, கோழி பணம் இவைகளை கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள் பாதுகாப்பில்லை என்று அழுகிறார்கள். அதை பார்த்து விட்டு ஆபிஸ்க்கு வந்து தமிழ் செய்திகளை பார்த்தால் தமிழக மக்கள் மலையாளிகளால் பாதிக்கப்பட்ட செய்திகளை கதை கதையாக செய்தி சானல்கள் ஒப்பித்து பாதிக்கப்பட்டவர்களை செய்தியாளர் களத்தில் சந்தித்து கள செய்திகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

மலையாள செய்தி சானல்களை தொடர்ச்சியாக பார்க்கும் மலையாளி, தமிழர்கள் இன வெறியர்கள் அவர்களுக்கெதிராக எதிர்தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைப்பது போலவே தமிழ் நியூஸ்களை பார்க்கும் தமிழக மக்களும் உசுப்பேத்தப்படுகிறார்கள். இருபக்கமும் கொம்பு சீவி விடும் வேலையை மீடியாக்கள் திறம்பட செய்கின்றன.

எத்தனையோ தமிழர்கள் கேரளாவில் பல தலைமுறையாக அங்கேயே பிறந்து வளர்ந்து மாநில மொழி பேசி மலையாளிகளாக மாறி போயிருக்கிறார்கள். அதே போல் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மலையாளிகள் அவர்களின் மொழி மறந்து தமிழ் பேசி தமிழர்களாக மாறி இருக்கின்றனர். இப்படி இருக்கிறவர்களை இது போன்ற தருனங்களில் அங்கு தமிழர்கள்கிறுக்கர்களால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பக்கத்து வீட்டு தமிழனாகி போன மலையாளியை தூக்கி போட்டு மிதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மற்றதன் சிறப்பொக்கும் என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நன்மொழிகளை வழங்கியவர்கள் செய்யக் கூடிய காரியமல்ல இது. நியாயமான முறையிலான போராட்டங்களின் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது தான் சரியான வழிமுறையாகும். ஆனால் இதுபோன்ற அநீதியான செயல்களை யார் இரு பக்கமும் செய்கிறார்கள்? இங்கு தான் கள்ள பயல்கள் வருகிறார்கள்.முதல் வகையான கள்ளர்கள் சமூக விரோதிகள்.


சுனாமி, இயற்கை பேரழிவு நடந்த போது இரக்கமுள்ள அனைத்து மக்களும் உதவி செய்து கொண்டு இருக்கும் போது சில சமூக விரோதிகள் இந்த சூழலை பயன்படுத்தி கொள்ளையடித்தனர். பிணங்களின் கையில் இருந்த மோதிரத்திற்காக விரலை அறுத்தவர்கள், தோட்டிற்காக காதை அறுத்தவர்கள்.


மங்களுர் விமான விபத்து நடந்து பல உயிர்கள் கருகி இறந்து கிடக்க உறவினர்கள் பிணத்தை கூட அடையாளம் காண முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் போது சில திருட்டு சமூக விரோதிகள் பயணிகள் கொண்டு வந்த பொருட்கள், நகைகளை கருகிய உடல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டுபிடித்து கொள்ளையடித்தவர்கள்.


எகிப்து புரட்சி நடந்தபோது இது போன்ற சமூக விரோதிகள் கடைகளில் புகுந்தும் வீடுகளில் புகுந்தும் கொள்ளையடித்தனர். ஆனால் இதனை தொடர விடாமல் போராட்டக்காரர்களே ஒரு குழு அமைத்து சமூக விரோதிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

இலண்டன் கருப்பு இனத்தவரின் போராட்டங்களின் போது ஊடுருவி சமூக விரோதிகள் கடைகளை கொள்ளையடித்தை இங்கிலாந்தின் மீடியாக்கள் கருப்பர்கள் கொள்ளையர்கள், திருடர்கள். அதற்காகத்தான் கலவரம் செய்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தியது. அதன் பிறகு சமூக விரோதிகள் தான் இந்த செயலை செய்தவர்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

முல்லை பெரியாறு போன்ற போராட்ட பிரச்சனைகளை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மலையாளிகள் வீடுகளில் புகுந்தும், கேரளாவில் தமிழர்கள் வீடுகளில் புகுந்தும் திருடுகிறவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துகிறவர்கள் இந்த சமூக விரோதிகள் தான். இவர்களை அடையாளம் காண வேண்டும். அதை விட்டு விட்டு இதை ஒரு மாநிலத்தவரின் பன்பாக பார்க்கக் கூடாதுஇரண்டாவது கள்ளர்கள் சந்தர்ப்பவாத,வகுப்புவாத அரசியல்வாதிகள்.


திருவனந்தபுரத்தில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், ஏ.கே.அந்தோனியின் வீட்டை தாக்க முற்படும் பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பின் போராட்டக்காரர்கள் முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் எனவும், புதிய அணைகட்டப்பட வேண்டும் எனவும் கோரி, கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்ட ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில்.
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் "டேம்-999 " என்ற இந்த படத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும். மத்திய அரசு தயாராக இல்லையெனில் தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் குழுக்கள் பலமுறை சோதனை நடத்தி அணை பலமாக உள்ளது என தெளிவுப்படுத்தியும் கூட மக்களிடம் பீதியை ஏற்படுத்த கேரள அரசு செயல்பட்டு வருவதாக ஊருக்கு ஊரு பேச்சு என்பது போல் அறிக்கை விடுகிறார்.

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் செல்லும் முல்லைப் பெரியாறு மதகு பகுதியில் கேட்டுகளை உடைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது இளைஞர் காங்கிரசாருக்கும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட. இந்த மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்திருக்கிறார்கள். இதுவெல்லாம் சுத்த அரசியல் கள்ளத்தனங்கள்.

இவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அதனுடைய நியாயங்களை ஆதரிப்போம்.

Wednesday, December 7, 2011

தினமலர் தீக்குளித்து தற்கொலை


உலகத்திலேயே நம்பர் ஒன் (பொய் & பிராடு) பத்திரிக்கையான தினமலர் உண்(பொய்)மையின் உரைகல்லைக் கொண்டு பயங்கரமாக உரசியதால் பத்திரிக்கை தர்மம், நேர்மை போன்றவைகள் ஏற்கனவே அரைகுறையாக எரிந்து அழுகி நாறி போயிருந்த நிலையில் நாற்றம் அதிகமாகவே தன்னை முழுமையாக எரித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இப்போது இருப்பது வெறும் பிணம் மட்டும் தான்.

மறுபடியும் இந்த தினமலர் என்ற தினபிணம் தனது நரித்தனத்தை காட்டியிருக்கிறது. எத்தனை முறை அம்பலப்பட்டாலும் இன்னும் நம்மை நம்பக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் தினமலருக்கே உரித்தான மட்டரகமான பணியில் 07/12/11 வியாழன் இன்று 

“தீ மிதித்து மொகரம் அனுசரிப்பு இந்துக்களும் பங்கேற்றதால் ஒற்றுமை”
என்ற வழக்கமான போஸ்ட் தந்திர உத்தியோடு ஒரு செய்தி. தலைப்பை பாருங்க என்ன ஒரு நரித்தனம் (செய்தி தலைப்பு போடுவதற்காகவே தனியாக ஸ்பெஷல் வகுப்பு எடுப்பார்கள் போல).இந்த செய்தியின் தலைப்பை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு இது சமய நல்லிணக்க செய்தி போன்று தெரியும் (அதுதான் தினமலரின் ஸ்பெஷாலிட்டி) ஆனால் செய்தியை ஊன்றி படித்தால் தினமலரின் அக்மார்க் சானக்கியத்தனம் புரியும். 
தினமலர் வெளியிட்ட செய்தி படிக்க படத்தை
அழுத்துங்கள்
தினமலர் இணையதள ஸ்கிரின் ஷாட்

மொகரம் பண்டிகையின் போது, முஸ்லிம் பள்ளி வாசல் முன் நடந்த தீமிதி நிகழ்ச்சியில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.ராயபுரத்தில் உள்ளது மஜித்த பர்குண்டா பள்ளி வாசல். இங்கு மொகரம் பண்டிகையை ஒட்டி அசேன் உசேன் தீமிதி திருவிழா நடைபெறும். பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார். அவர் நினைவாக இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 40க்கும் மேற்பட்டோர் முறைப்படி விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்த தீ மிதித்தனர். இதில் 15 பேர் இந்துக்கள்.மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதி நிகழ்ச்சி நடத்துவதற்கான குழியை வெட்டுகின்றனர். ஐந்து நாள் வரை குழியைக் காய வைக்கின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவுக்குப்பின் அதிகாலை 3 மணிக்கு தீ மிதி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் 10ம் நாள் மொகரம் பண்டிகை. அன்று தீ மிதிக்கும் குழியை மூடி நிகழ்ச்சி நிறைவு செய்கின்றனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீபா கூறும் போது, ""தீமிதிக்கும் நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் கலந்து கொள்கிறேன். இந்துக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்,'' என்றார்.மண்ணடி, ஐஸ்ஹவுஸ், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளி வாசல்கள் முன்பும் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த செய்தியில் இந்துக்கள் கலந்து கொண்டதால் ஒற்றுமை என்று எழுதியிருக்கும் தலைப்பிற்குள்ளே கலந்து கொள்ளவில்லையென்றால் ஒற்றுமை கிடையாதா? என்ற எதிர் கேள்வி இயல்பாக வரும். ஒற்றுமையை ஏற்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்க பண்டிகையில் கலந்துக் கொள்வது தான் ஒற்றுமை என்பது போல் உளறிக் கொட்டியிருக்கிறது.


அதற்கு அடுத்தபடியாக பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார் என்று அசிங்கமாக வரலாற்றை திரித்து, முஸ்லிம்களின் உயிருக்கு மேல் மதிக்கக்கூடிய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மகளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற அவதூறை கை கூசாமல் எழுதுகிறது எவ்வளவு பெரிய அபாண்டம்.

தற்கொலை எந்த சூழலிலும் எந்த காரணத்திற்காகவும் செய்யக் கூடாது. வாழ்க்கையில் எதிர்த்து போராடியே ஆக வேண்டும் என்று போதித்த தலைவரின் மகளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று புளுகியிருப்பது எதார்த்தமானது அல்ல.


வரலாற்று உண்மை என்ன?

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாசத்துக்குரிய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் நபியவர்கள் இறந்த ஆறு மாதத்திற்கு பிறகு இயற்கையான முறையில் இறந்தார்கள்.அப்போது அவரது மகன்கள் ஹசன் (ரலி),ஹுசைன் (ரலி) இருவரும் சிறுவர்கள் (புகாரி 3903)

ஹிஜ்ரி வருடம் 11ஆம் ஆண்டு ரமளான் மாதம் 3ம் நாள் செவ்வாய் இரவு பாத்திமா (ரலி) மரணித்தார்கள்(நூல்:அல் இஸாபா 11583)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அலீ (ரலி), ஃபழ்ல் (ரலி) ஆகியோர் கப்ரில் இறங்கி இரவில் அடக்கம் செய்தனர். (அல் இஸாபா 11583 பாகம் 2, பக்கம் 128)


பாத்திமா (ரலி) இறந்தது ஹிஜ்ரி 11ல் அவரது மகன் ஹுசைன் (ரலி) போரில் கொல்லப்பட்டது ஹிஜ்ரி 61-ல். கிட்டதட்ட 50 வருட இடைவெளி. கவனிக்கவும் இதுதான் தினமலர் செய்தி தரும் இலட்சணம்.

தற்கொலை செய்யக் கூடாது என்பதற்கான இஸ்லாமிய சட்டங்கள்.

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்(குர்ஆன்2:195)


உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் (குர்ஆன்4:29)
கொஞ்சம் இந்த வீடியோக்களை பாருங்கள் தற்கொலை எப்படி முழுமையாக தடுக்கப்பட்ட (ஹாராம்) என்பதை Dr.Kvs ஹபிப் முஹம்மது விளக்குகிறார்
கற்பைக் காக்க தற்கொலை செய்யலாமா? என்ற கேள்விக்கு விரிவான விளக்கத்தை தருகிறார். மார்க்க அறிஞர் பி.ஜே அவர்கள்.


தினமலரின் மேல் ஆரம்ப காலகட்டங்களில் (1999 களில்) நல்ல அபிப்ராயம் இருந்தது. அறியாமல் எழுதுகிறார்கள் என்று நினைத்து அப்போது பெரிதாக இணையதள வசதியில்லாத காலம் என்பதால் பிளாக்கில் பின்னூட்டம் (கருத்துரை) எழுவதற்கு முன்பே சரியான நிலைப்பாடை விளக்கி வாசகர் கடிதங்கள் எழுதியிருக்கேன். அவர்கள் ஒன்றை கூட பிரசுரித்தது கிடையாது.

இது உங்கள் இடம் என்கிற பகுதியில் இஸ்லாத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வருகிற கற்பனை கதை பாணியிலான கடிதங்கள் வெளியாவதை பார்த்து தெளிவடைந்தேன். உதாரணத்திற்கு தாலி கட்டும் பழக்கம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இது உங்கள் இடம் என்கிற இடத்தில் வருகிற பதிலை பாருங்கள்.

முகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து ஆட்சி செய்த போது கடைத்தெருவுக்கு வந்து திருமணம் முடிக்காத இந்து பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். தவறுதலாக திருமணமான பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடக்கூடாது என்பதற்காக தாலிக் கயிறு அடையாளமும் கட்டும் பழக்கமும் ஏற்பட்டது என்று ஒரு வாசகர்!? எழுதுகிறார். இது அந்த பகுதியில் வரவேற்பை பெறுகிறது. இந்த செய்தியை படிக்கிற சகோதர இந்துக்கள் தங்கள் மனைவியின் தாலியை பார்த்தால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அடியாளத்தில் ஏற்பட வேண்டும் என்கிற தந்திரத்தை புரிந்துக் கொண்டேன்.

அடுத்து ஒரு செய்தி. அப்போது பயர் என்கிற ஓர் பாலின உறவு கொள்கிற இளம் விதவைகளின் கதையை மையமாக கொண்ட படம் நந்திதாஸ் என்கிற நடிகை மேட்டுக்குடி உயர்ஜாதி பெண்ணாக நடித்து சர்ச்சைக்குள்ளான நேரம். இது உங்கள் இடத்தில் ஒரு வாசகர்!? கேள்வி கேட்கிறார். அதற்கு பதில்
முகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது அந்த இஸ்லாமிய பெண்களிடம் அந்த பழக்கம் இருந்தது. அப்படியே அந்த பழக்கம் இந்துப் பெண்களை தொற்றிக் கொண்டது என்று அதே முகலாய கதையை கைக்கூசாமல் வாசகர் என்ற பெயரில் விஷத்தை விதைத்தார்கள்.

அதற்கு கருத்தியல்ரீதியாக பதில் எழுதினேன். இஸ்லாத்தில் கணவன் இறந்து விட்டால் மறுமணம் செய்து வைத்து விடுவார்கள். மறுமணம் செய்து வைக்க மறுக்கிற சமூகத்தில் தான் லெஸ்பியன் / ஓர் பாலின உறவு தேவைப்படும் என்கிற ரீதியில் நான் எழுதிய வாசகர் கடிதங்கள் எந்த குப்பையில் கிடக்கிறதோ? தெரியவில்லை.


தினமலர் இலவச இணைப்பு சிறுவர் மலரில் குருபக்தி என்ற என்ற பட சிறுகதையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கற்பனையான உருவப்படம் வரைந்து நபித் தோழரான அபுபக்கர் (ரலி) அவர்கள்  நபியவர்கள் காலில் விழுந்து வணங்குவது போல் வரைந்திருந்தது.


நபியவர்கள் நடந்து வரும்போது மரியாதைக்காக எழுந்த நபித் தோழரின் தோளைப் பிடித்து அமுக்கி அமர சொன்னார்கள் நபிகளார். அவர்கள் காலில் விழுவதை அனுமதிப்பார்களா? காலில் விழுவதை இஸ்லாம் தடை செய்த விஷயமும் முஹம்மது நபிக்கு உருவம் வரையக்கூடாது என்கிற விஷயமும் தனக்கு தெரியாது என்று சமாளித்தது.


தினமலர் அளித்த விளக்கம் முழுப்பொய் என்பதை நிருபிக்கும் விதமாக டென்மார்க்கில் வெளியாகி பல கலவரங்களையும்  உயிர் பலியும் ஏற்படுத்திய முஹம்மது நபி உருவப்பட கார்டூனை தமிழ் பத்திரிக்கையில் அதுவும் ரமளான் மாதத்தில் வெளியிட்டு தன் உண்மை முகத்தை காட்டியது.இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமல்ல இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூக மக்களை பற்றியும் இதே பாணியிலான செய்திகளை வெளியிடுவது அனைவரும் அறிந்த உண்மை.உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தினமலரை தீக்குளிக்க வைத்த போது.

நியாய உணர்வுள்ள நடுநிலைவாதிகளும், சிறுபான்மை இன மக்களும் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மற்றும் தமிழினவாதிகளும் தினமலரை அம்பலப்படுத்தி புறக்கனிக்க வேண்டும்.

தினமலர் சென்னை தொடர்பு எண்கள். அனைவரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.


மெயில் ஐடி coordinator@dinamalar.in


Mobile No: -             9944309600      
Ph:             044 2841 3553      , 2855 5783

            044-24614086      

உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள்