Tuesday, December 27, 2011

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார்.  ‘ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’

 ‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’

‘அதில்லை...’

 ‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’

 ‘இல்லை’

 ‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’

 ‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம் செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா? என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?

எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர். ‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?’

 ‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத் திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?’

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

இறைவன் குர்ஆனில்
“சொல்வதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லுங்கள்” என்கிறான் .

 “நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள்.ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்” 
(அல்குர் ஆன் 49:11)

டிஸ்கி நேற்று நான் எழுதிய மொக்க பதிவில் இந்த வரம்புகளை பேணவில்லை இனிமேல் அது போன்ற மொக்கை பதிவுகளை எழுதுவதில்லை நண்பர்களிடம் தவறுகளை கண்டால் இனி நேரடியாக பதில் சொல்லுவேன் நிறைய நண்பர்கள் இஸ்லாத்தின் படி நேற்று எழுதிய பதிவு தவறு என்று மெயிலிலும் நேரடியாகவும் சொன்னார்கள் அவர்களுக்கு நன்றி.

20 comments:

 1. குரு சிஷ்யன் கதை சொன்ன செய்தி அருமை. இங்கே ஏதோ கருத்து மோதல் நடந்து கொண்டிருப்பதை அறிகிறேன். மொக்கைப் பதிவுகள் ‌தேவையற்றவை என்பதே என் கருத்தும் ஹைதர் சார்! நன்றி!

  ReplyDelete
 2. Aashiq Ahamed said... 37
  சகோதரர் நிரூபன்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  //முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றிய பதிவுகள், ஈழ மக்களின் அவலங்கள் தொடர்பான பதிவுகள், ராஜீவ் கொலை தூக்குத் தண்டனை தொடர்பான பதிவுகள் மற்றும் செங்கொடி தீக்குளிப்பு விவகாரங்கள் இதில் ஏதாவது ஒன்றில் தாங்கள் பங்களிப்பு நல்கியிருந்தால்....நானும் இந்த பவுடர் ஸ்டாரின் கருத்தினைக் கண்டித்திருக்க முடியும்.//

  திரும்ப உங்கள் முகத்தை நன்றாக காட்டியதற்கு நன்றி. ஒருவேளை நீங்கள் மேலே கூறியவற்றில் ஒன்றிலாவது என் பங்களிப்பை காட்டினால் உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வீர்கள்? செய்தவற்றை சொல்லிக்காட்டுவது மிகுந்த சங்கடமாக இருந்தாலும் நீங்கள் இங்கே பொதுவில் கேட்டுவிட்டதால் சொல்கின்றேன். இதோ ராஜபக்சே குறித்து நான் எழுதிய கடிதம் தருமி அவர்களின் தளத்தில் வெளியான ஆதாரம்.

  http://dharumi.blogspot.com/2011/04/497.html

  தமிழக மீனவர்கள் படுகொலை, ராஜீவ் கொலை வழக்கு etc என்று பிரச்சனைகள் வரும்போது பொதுவிலும் சரி, மறைமுகமாகவும் சரி...என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்திருக்கின்ரேன். உங்களிடம் அதனையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை சகோதரர். நான் பதில் சொல்ல வேண்டியது இறைவனுக்கு மட்டுமே.

  இவ்வளவு கேவலமாகவும் மனிதர்கள் இருப்பார்கள் என்று மறுபடியும் நிரூபித்ததற்கு நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. சகோதரர் ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

  //நேற்று நான் எழுதிய மொக்க பதிவில் இந்த வரம்புகளை பேணவில்லை இனிமேல் அது போன்ற மொக்கை பதிவுகளை எழுதுவதில்லை நண்பர்களிடம் தவறுகளை கண்டால் இனி நேரடியாக பதில் சொல்லுவேன் நிறைய நண்பர்கள் இஸ்லாத்தின் படி நேற்று எழுதிய பதிவு தவறு என்று மெயிலிலும் நேரடியாகவும் சொன்னார்கள் அவர்களுக்கு நன்றி.//

  சகோதரர், மன்னிப்பு என்பது இஸ்லாத்தில் அழகிய பண்பு. ஆனால் அதனை இவர்களை நோக்கி காட்ட கூடிய நிலையில் நாம் இருக்கின்றோமா என்பது தான் புலப்படவில்லை. உங்கள் முந்தைய பதிவில் எந்த தவறும் இருப்பதாக நான் எண்ணவில்லை. அவர்கள் வரம்பு மீறினால் நாமும் வரம்பு மீற நமக்கு அனுமதி உண்டு. அந்த அடிப்படியிலேயே உங்கள் முந்தைய பதிவை கண்டேன்.

  முக்கிய பாய்ன்ட்டை கவனிக்க...கேட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் வரவில்லை. நிரூபன் போன்றவர்கள் மூக்குடைப்பட்டு தோலுரிக்கப்பட்டு நின்றது தான் மிச்சம். அல்ஹம்துலில்லாஹ்...

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 5. சகோதரர் ஹைதர் அலி,

  சற்றே ஆழ்ந்து சிந்தித்து பார்ப்போம். பிரச்சனை எங்கிருந்து ஆரம்பித்தது?

  சந்த்ரு என்பவர் "முஸ்லிம் ஆண்களால்" என்று போட்ட பதிவின் தலைப்பு தானே. இதில் என்ன நியாயம் இருக்கின்றது?. அடுத்து ஈழ விதவைகள் பிரச்னைக்கு சில தீர்வுகளை வைத்தோம். ஒரு நேர்மையுடைய மனிதர்களாக இருந்தால் ஆரோக்கியமான முறையில் அங்கே விவாதிருப்பார்கள். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. நாற்று குழுமத்தில் இது குறித்து நடந்த விவாதத்தில், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் அந்த வாதத்தையே நம்மை கேட்காமல் அழித்தார்கள். சரி அழித்து விட்டாவது சொல்லிருக்கலாம் இல்லையா? அந்த நாகரிகம் கூட இல்லாமல், ஒருவர் வந்து யார் அழித்தீர்கள் என்று கேட்ட பிறகு "நான் தான்" என்று வருகின்றார் ஒருவர். இது தான் இவர்களின் உயரிய நடத்தை.

  சரி அழித்துவிட்டு சும்மா இருந்திருக்கலாம் அல்லவா?. எதற்காக மணி என்பவரது "புதிய மதம் உருவாகுவது எப்படி" என்ற பதிவு? அந்த பதிவினால் வந்த வினை தான் உங்கள் பதிவு. மணி பதிவு வந்திருக்காவிட்டால் உங்கள் பதிவு வந்திருக்காது. சரி தானே?

  இப்படி எல்லா குற்றங்களையும், நேர்மை இன்மையையும் தங்களிடத்தே கொண்டுள்ள அவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொல்லியதில் என்ன தவறு?

  நான் பதிவுலகில் இந்த அளவு கேவலமான மனிதர்களை பார்த்ததில்லை. இதை தாண்டி ஒரு அசிங்கமான மனிதர்களை இனி பார்க்க கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை..

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் அண்ணன் ஹைதர் அலி,
  என்னதான் சொன்னாலும் அந்த ஈனப்பிறவிகளான மரமண்டைகளுக்கு ஏறப்போவதில்லை. பாருங்கள் எத்தனை மைனஸ் ஓட்டுக்கள். ஏன் இத்தனை மைனஸ் ஓட்டுக்கள் தெரியுமா? நீங்கள் அவர்களை பற்றிய உண்மைகளை சென்ற பதிவில் மறைமுகமாக போட்டுடைத்து விட்டீர்கள். இன்னும் நேரடியாக அவர்களை பற்றி சொல்லும் போது பல இடர்பாடுகள் வரும். கவிதை வழியில் உண்மையை சொன்ன செல்வியையே பெண்ணென்றும் பாராமல் படுகொலை செய்தவர்கள் அவர்களின் அரசியல் ஆசான்கள். எனவே இன்னும் பல இடர்பாடுகளை உங்களுக்கு உருவாக்குவார்கள். எச்சரிக்கையாக இருக்கவும்.

  மற்றபடி தேவையற்ற வருத்தங்களை நீங்கள் தெரிவித்ததில் எனக்கு உடன்பாடில்லை. நேரடியாக வந்து சொல்லியிருந்தால் மிக சரி தான். ஆனால் அவர்கள் பாணியிலேயே ((அசிங்க ஆபாச படங்கள் போடுவது எல்லாம் அவர்களின் பாணி. ஹிட்சுக்காக தம்முடைய குடும்பத்தாரின் அங்க அவயங்களை காட்டுகின்ற படத்தை கூட இணையத்தில் போட தயங்காதவர்கள் அந்த குரூப்பினர். அந்த பாணியை நான் சொல்லவில்லை.)) பதில் பதிவு போட்டது தப்பில்லையே ஹைதர் பாய். எனவே உங்களின் வருத்தத்தை வாபஸ் வாங்குங்கள். எத்தகைய குற்ற உணர்ச்சியும் உங்களுக்கு தேவையில்லை.

  ReplyDelete
 7. செல்வி - ஈழத்தை சேர்ந்த கவிதையாளர். விடுதலைப்புலிகளின் அறமற்ற அரசியலை எழுத்து மூலம் விமர்சித்தார் என்பதற்காக அவரை பெண்ணென்றும் பாராமல் படுகொலை செய்து தனது பயங்கரவாத முகத்தை காட்டியது எல்.டி.டி.ஈ அமைப்பு.

  ReplyDelete
 8. Arumaiyana Sinthanaigal. Ama etho sandai nadakkuthu nu theriyuthu. Ethu eppadiyo aapaasa pathivargalai pathivulagam purakkanikka vendum enpathe en karuthu.

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  //“சொல்வதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லுங்கள்” என்கிறான் .

  “நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள்.ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்”
  (அல்குர் ஆன் 49:11)//

  இதற்கொப்ப

  //நேற்று நான் எழுதிய மொக்க பதிவில் இந்த வரம்புகளை பேணவில்லை இனிமேல் அது போன்ற மொக்கை பதிவுகளை எழுதுவதில்லை நண்பர்களிடம் தவறுகளை கண்டால் இனி நேரடியாக பதில் சொல்லுவேன் நிறைய நண்பர்கள் இஸ்லாத்தின் படி நேற்று எழுதிய பதிவு தவறு என்று மெயிலிலும் நேரடியாகவும் சொன்னார்கள் அவர்களுக்கு நன்றி.

  நேற்று நான் எழுதிய மொக்க பதிவில் இந்த வரம்புகளை பேணவில்லை இனிமேல் அது போன்ற மொக்கை பதிவுகளை எழுதுவதில்லை நண்பர்களிடம் தவறுகளை கண்டால் இனி நேரடியாக பதில் சொல்லுவேன் நிறைய நண்பர்கள் இஸ்லாத்தின் படி நேற்று எழுதிய பதிவு தவறு என்று மெயிலிலும் நேரடியாகவும் சொன்னார்கள் அவர்களுக்கு நன்றி.//

  இப்படி பொதுவில் சொன்னதை

  குழுவாய் நின்று விமர்சிக்கும் குழு பார்த்திருக்குமா?

  ReplyDelete
 10. @guna thamizh

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 11. @கணேஷ்

  நன்றி கணேஷ் அவர்களே

  உங்களுக்கு முன் நான் ரொம்ப சிறியவன் சார்

  ReplyDelete
 12. @பி.ஏ.ஷேக் தாவூத்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  உள்குத்து மொக்க பதிவு தான் போட மாட்டேன் என்று சொன்னேன் மற்றபடி நேருக் நேர் பதில் சொல்லுவேன் கவணிக்க

  ReplyDelete
 13. @பி.ஏ.ஷேக் தாவூத்

  இது எனக்கு புதிய தகவல் அறிந்துக் கொண்டேன் நன்றி சகோ

  ReplyDelete
 14. @துரைடேனியல்

  நன்றி நண்பரே என்னுடைய ஆசையும் அதுதான்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 15. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
  அருமையான விளக்கங்கள்.
  புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

  இந்த கேள்விப்படுதை எல்லாம் பரப்புவோரை விடுங்கள்.

  தானே புதிய நச்சுக்கருத்தை உருவாக்கி இணையத்தில் உலாவ விடும் கொடிய விலங்குகள் இருக்கின்றன.

  அவர்கள் எல்லா விதத்திலும் மோதி பார்த்துவிட்டு... எதுவும் முடியவில்லை என்றவுடன்... இன்று திறந்து விட்டு இருக்கும் ஒரு புளுகு மூட்டை என்ன தெரியுமா சகோ..?


  வைரஸ்..!


  நான் அவர்களின் குழுமத்துக்கு வைரஸ் அனுப்பினேனாம்..!

  எது தெரியுமா...?

  நீங்கள் ஓட்டு போட்டீர்களே..? மேலும் பத்து பேர் ஓட்டு போட்டார்களே..? சகோ.ஆஷிக் போல திறந்தும், ஓட்டு போடாமல் மூடினார்களே..?

  இந்த....

  http://apps.facebook.com/opinionpolls/result?pid=AB7UOi6y7bU

  ....முகநூல் ஓட்டு லிங்க் தான் வைரஸாம்..!

  அடப்பாவிகளா..!
  இதைக்கூட டெஸ்ட் பண்ணி பார்த்துவிடக்கூடாது என்று அழித்து விட்டனர்... அந்த பொய்யர்கள்..! எங்கே போய் முறையிட இந்த அபாண்ட குற்றச்சாட்டை...!!!

  இவர்களுக்கு தினமலரே தேவலாம் போல சகோ..!

  தொப்புளை சுத்தி ஊசி போட்டுக்குவோம் வாங்க..!

  ReplyDelete
 16. சில வரலாறுகளை நாம் படிக்க மறந்து விடுவதால் பொய்களும் புரட்டுகளுமே வரலாறுகளாக வருங்கால தலைமுறைக்கு காட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாறு தான் இலங்கை முஸ்லிம்களை குறித்த வரலாறு. 1915 -ல் சிங்கள பேரினவாதத்திற்கு பலியாக ஆரம்பித்த முஸ்லிம்கள் (அன்றைக்கு ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் சர் . பொன் இராமநாதன் சிங்களவர்களுடன் கைகோர்த்து குற்றவாளிகளை இங்கிலாந்து வரை சென்று காப்பாற்றவும் செய்தார்.) தொடர்ச்சியாக தமிழ் மேலாண்மை பயங்கரவாதிகளினாலும் ஊரை விட்டு நிர்கதியாய் விரட்டப்படுதல் மற்றும் இனப்படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். ஆனால் இதை சரியாக நாம் வரலாற்றில் ஆவணப்படுத்தவில்லை. விளைவு இன்று முஸ்லிம்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைக்க முயற்சிக்கின்றனர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள். எவ்வளவு காலம் தான் உண்மை ஊரை ஆளும்? நம் மூத்த சகோதரர் வாஞ்சூர் அப்பா உண்மையை தொடராக வெளியிடுதலின் முயற்சியில் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறார். அதன் சுட்டி
  ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

  ReplyDelete
 17. நல்ல பதிவு,

  இன்று என்னுடைய வலைப்பூவில் ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க

  ReplyDelete