Sunday, December 25, 2011

பதிவுலகுக்கு வருகிறார் பாவாடா ஸ்டார்..!

"பாலா பதறணும்... அமீர் அலறணும்!" என்ற முழக்கத்தோடு சினிமா திரைப்பட உலகில் திடீரென்று குதித்து பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் புரட்சியாளர் பவர் ஸ்டார். இப்போது "வினவு விழுந்து புரள‌ணும்... கேபிள் சங்கர் கேள்வி குறியாகணும்!" என்கிற வெறியோடு பதிவுலகுக்குள் நுழைகிறார் முறைப்படி பதிவு ஆரம்பிக்கப் போகிறார். அதற்கு முன்,

"பவர் ஸ்டார்" என்கிற பெயர் (நியூமரால‌ஜி) எண் கணிதப்படி எட்டி உதைப்பதால் 'டி. ராஜேந்தர்' என்ற பெயரை 'விஜய ரஜேந்தர்' என்று மாற்றி இருப்பதுபோல், தன்னுடைய பெயரில் எக்கராணத்தைக் கொண்டும் "ர்" வரக்கூடாது என்ப‌தால் 'பாவாடா ஸ்டார்' என்ற பெயரோடு வலைப்பூவில் வளைத்து வளைத்து எழுதி அனைவரையும் கட்டம் கட்டி ஓரங்கட்டப் போகிறார். இனி பாவாடா ஸ்டார் அவர்கள் சொல்வதை கேட்போம்.
நான் ஏன் பதிவுலகிற்கு வந்தேன் என்று சின்னபுள்ளத் தனமாக கேள்வி கேட்கபிடாது. சினிமாவில் கோடி கோடியாக கொட்டிப் புகழடைவதை விட இங்கு ஓசியாக மொக்கைப் பதிவு எழுதி புகழடைய முடியும். அங்கு கட் அவுட் வைக்க காசு, தலையில் விக் வைக்க காசு. இங்கு அப்படியா? சைடு பாரில் "என்னைப் பார் யோகம் வரும்" என்று வழுக்கையை மறைக்க தலையில் தொப்பி, கையில் குடையோடு இளிக்கின்ற கட் அவுட் வைத்தால் ஓசிதானே!


பிளாக் ஆரம்பிப்பது ஃப்ரீ என்று சொன்னதற்காக 'தமிழ் பாதி', 'போடா நண்பா' என்று பல ப்ளாக்குகள் ஆரம்பிக்க போகிறேன் என்று நினைக்காதீர்கள். 'ஐடியா மணி' மணியாக குண்டக்க மண்டக்க வருவதால் அதையெல்லாம் இங்கு கொட்டி ஹிட்ஸ் பெற ஒரு பிளாக் போதுமா? அதுவும் ஓசியாக கிடைக்கும்போது..? நல்லாயிருக்கே நியாயம்...! இத்தனை ப்ளாக்குகளில் எழுதுவதால் என்னை வேலையில்லா வெட்டிப்பய‌ என்று நினைக்காதீர்கள். நான் படம் சம்பந்தமாக படித்துக் கொண்டிருக்கிறேன். 


சரி வெட்டித் தனமாக எழுதினாலும் ஹிட்ஸ் கண்டிப்பாக வேணும். அதற்காக என்ன செய்வேன் என்று கேட்கிறீர்களா? ஹும்.. என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களை எனக்கு அறவே பிடிக்கவில்லையென்றாலும் அவர்களை பிடித்ததுபோல் பில்டப் கொடுத்து பதிவு எழுதுவேன். அதிலும் தொடர்ச்சியாக தமிழ்மண மகுடத்தில் வரமுடியவில்லையா..? கைவசம் பல ஐடியா இருக்கு!  


சினிமாவில் நடிக்கும்போது ஹிட் ஆகுறதுக்கு நடிகைகளை கைக்காசு செலவழித்து போஸ்டர்களில் பிட்டுப்பட ரேஞ்சுக்கு போஸ் கொடுக்க வைத்தவன் பதிவுலகில் மட்டும் விட்டுறுவேனா? அதுவும் ஓசியாக கிடைக்கும்போது புது நடிகை "இலியானா"விலிருந்து பல பலியானதுகளின் படங்களைப் போட்டு ஃபேஸ்புக்கு, ஆர்குட்டு, டுவிட்டரு, ப்ளாக்கு, கூகுள் ப்ளஸ்ஸு, கூகுள் பஸ்ஸு.... இந்த மாதிரி இணையத்தின் இண்டு இடுக்கு எல்லாவற்றிலும் புகுந்து நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை முகப்பில் காட்டி கட்டி இழுத்துறமாட்டேன்? பாவாடா ஸ்டாரா.. கொக்கா..?
இன்னும் நிறைய பாவாடா ஸ்டாரிடம் ஐடியா கோணி கோணியாக இருக்கு, அவுத்து விடுறேன் இருங்க. பதிவுகள் ஹிட் ஆகணும்.. என்ன செய்றது..? எந்த விதமான கருத்துடனோ, கொள்கையுடனோ கூடாமல், 'இயற்கைக்கு விரோதமான முறையில்' என்னை மாதிரியான சுய இன்பர்கள் பெற்றெடுக்கிற மொக்கைப் பதிவுகளுக்குச் சென்று "சரக்கே இல்லையென்றாலும் ருசிகரமாக இருக்கிறது, அபத்தமாக இருந்தாலும் நகைச்சுவையாக இருக்கிறது, முட்டாள்தனமாக இருந்தாலும் விறுவிறுப்பாக இருக்கிறது" என்று கருத்துரைப் போட்டுவிட்டு அப்படியே வந்துவிடக் கூடாது, ஒருவரி 'உங்களுக்கு ஓட்டுப் போட்டு இருக்கிறேன்' என்று எழுத வேண்டும்.
மேலேயுள்ள வீடியோவில் காசுக் கொடுத்து திரட்டிய ஜால்றாக்களைப்போல் பதிவுலகில் ஓட்டுப் போட்டு கிடைக்கிற ஜால்றாக்களை வைத்து ஜல்லி அடிக்கலாம். பிடித்திருந்தால் மட்டும் ஓட்டுப் போடும் நேர்மையான பதிவர்களை அவர்களின் மெயில் ஐடிக்கு மடல் இட்டு ஓட்டுப் போடச் சொல்லி மிரட்டலாம். அப்படியும் மசியவில்லை என்றால் ஹி.. ஹி.. ஹி.. என்னதான் நான் அசிங்கமாக எழுதினாலும், சண்டைப் போட்டாலும் நீங்களும் என் நண்பர்கள்தான் என்று பதிவின் முகப்பில் எழுதி வைத்து கெஞ்சி பெற்றுக் கொள்ளலாம்.
என்னுடைய இந்த வீடியோவில் உள்ளது போன்று கெஞ்சி நடித்தவனுக்கு ஓட்டுக்காக கெஞ்சுவதெல்லாம் ஒரு மேட்டரா? (மீன் குஞ்சுக்கு நீந்த கத்துக் கொடுக்க வேண்டுமா என்ன?) 


இவ்வளவு கெஞ்சலுக்கு பிறகும் 'ஓட்டுப் போட மாட்டோம்' என்று அடம் பிடித்து நேர்மையுடன் விமர்சிக்கிறார்களா? விமர்சிப்பவர்களின் வலைப்பதிவில் அனானியாகச் சென்று இறங்கி மொட்டைக் கடுதாசியைச் சொருகுவது...  இப்படி பழிவாங்கும் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.


உங்களுக்கு ஒன்று ஆச்சரியமாக இருக்கலாம். "புதிதாக பதிவுலகில் குதிக்க போகிற எனக்கு எப்படி இவ்வளவு பதிவுலக ராசதந்திரங்களும் தெரியும்?" என்ற கேள்வி உங்களை தொலைத்து எடுக்கலாம் எனக்கு இது போன்ற ராசதந்திரங்களை கற்றுக் கொடுத்த ஆசான்,மேதகு ஐடியா பணி அவர்களின் பதிவு எழுதும் பாணிகளை பலவருடங்களாக உற்று நோக்கி கற்றுக் கொண்டேன்.

என் குரு நாதரின் சமீபத்திய ஒரே எரிச்சல்: என்ன தான் உருண்டு பிரண்டு பலவகையாக யோசித்து எழுதினாலும் தமிழ்மண மகுடத்திற்கோ நம்பர் ஓன் ஹிட்ஸ்க்கோ போகமாட்டிகிது. புதுசு புதுசா பதிவளர்கள்முளைத்து
ஆக்கப்பூர்வமாக வேற எழுதி தொலைத்து விடுகிறார்கள். பரிணாமத்தைப் பற்றி, இனவாதத்தைப் பற்றி, உயிரியல் கொட்படாம் (யாருக்கு வேண்டும்) இப்படி அவர்களுக்கு எழுதுவதற்கு கருத்தோ மார்க்கமோ கொள்கையோ இப்படி எதாவது ஒன்று இருக்கிறது. நமக்கு..?


பின்னூட்டம் வேறு பதில் சொல்ல முடியாத அளவுக்கு போடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அதனை நீக்க வேண்டியதாகி விடுகிறது. யாரு அது சிட்டிசன் ஓப் வேர்ல்டு ? இதுகளை எல்லாம் யாரு பதில் சொல்லதெரியாதவர்களிடம் கேள்வி கேட்க சொன்னது? தொந்தரவு தாங்க முடியவில்லையே.


ஆனாலும், எனக்கும் என் ஆசானுக்கும் மொக்கைகள்,மனம் போன போக்கில் எழுதுகிற கிசுகிசு பதிவுகள்,நடிகையின் படங்கள் பதிவுக்கு சமபந்தமே இல்லையேன்றாலும் சொருகிற யுக்தி. இவை போன்றவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி ஹிட்ஸ் பெறுவோம் சிரிக்காதீங்கே சீரியஸ்.
தன்னம்பிக்கை தான் வாழ்க்கை. என்னது யாருக்கா? மறுபடிக்கும் ஆரம்பத்திலிருந்தா? இப்படி ஒரு கேள்வியா? இப்படிக்கு: தன்னம்பிக்கையுடன் உங்கள் பவர்ஃபூல் பவர் ஸ்டார் என்ற பாவாடா ஸ்டார். 
டிஸ்கி  சமீபத்தில் சினிமா உலகில் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி கலக்கிய பவர் ஸ்டார் அவர்கள் பதிவுலகிற்கு வந்தால் எப்படி இருக்கும் அது தான் இந்த பதிவு

48 comments:

 1. hihi
  ஒரே காமடியா இருக்கு:)

  ReplyDelete
 2. சலாம்!

  வித்தியாசமான முயற்சி! பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்...

  சகோதரர் ஹைதர் அலி,

  ஹா ஹா ஹா....அடிச்சு தள்ளிட்டீங்க. அப்படியே பதிவுக்கு ஆதரவா வோட்டு போட்டு தன் உண்மை முகங்களை வெளிக்காட்டுபவர்களை பற்றியும் எழுதிருக்கலாம். இன்ஷா அல்லாஹ் பெரியண்ணன் எழுதுவார்னு நினைக்குறேன்.

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 4. காணொளி பார்த்ததில் இருத்து பார்ப்பவர் எல்லாம் பவர் ஸ்டார் மாதிரியே தெரியுது.
  அவரமாதிரி நானும் "என் பார்வைய கொடுத்துடுடா, நீ நல்லா இருப்ப என் பார்வைய கொடுத்துடுடான்னு" கதறி அழனும் போல இருக்கு.

  ReplyDelete
 5. சலாம் சகோ....பாவாடா ஸ்டார் பதிவுலகத்திற்கு வந்து நீங்க சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்தால் அவர்தான் பதிவுலகில் நம்பர்-1...
  அவரை யாரும் அசைச்சுக்க முடியாது.

  ReplyDelete
 6. //தன்னுடைய பெயரில் எக்கராணத்தைக் கொண்டும் "ர்" வரக்கூடாது என்ப‌தால் 'பாவாடா ஸ்டார்' என்ற பெயரோடு//

  இதிலையும் ர் (ஸ்டார்) இருக்கே - இப்ப என்ன செய்விகே..இப்ப என்ன செய்விகே?

  ReplyDelete
 7. @மனசாட்சி

  பவர் என்கிற வார்த்தையில் மட்டும் ர் வரக்கூடாது ஸ்டாரில் 8ம் இலக்கணப்படி விதிவிலக்கு.

  எப்பூடி?

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும்
  இந்த பதிவு கண்டிப்பா சினிமா பவர் ஸ்டாரை பற்றியல்ல என்று புரியுது. பாவம் அந்த பச்சபுள்ள ஏதோ தான் உண்டு தன் சினிமா உண்டுன்னு இருக்குது. சினிமாவுல ஹிட்டான பிறகு ஏதோ முதலமைச்சர் போஸ்டோ இல்லை எதிர்க்கட்சி தலைவர் போஸ்டோ வாங்க தான் அவர் முயற்சி பண்ணுவார். மாறாக இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் "பாவாட ஸ்டார்" என்பவர் வேற ஒரு நபரா இருக்கலாம். அந்த பாவாட ஸ்டாரே இங்கே வந்து எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னு சொன்னாதான் எங்களுக்கெல்லாம் யார் அந்த பாவாட ஸ்டார்னு தெரியும். இவ்ளோ "ஐடியா" உங்களுக்கு எங்கே உதிக்குது ஹைதர் பாய்? பதிவுலகில் முதன்முதலில் வித்தியாசமான முயற்சி. பாவாட ஸ்டார் சீக்கிரம் களத்துக்கு வாங்க.

  ReplyDelete
 9. ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க ஹைதர். பாவாட ஸ்டார் ரியலா வந்துட்டான்னு நெனச்சாலே பக்குங்குது. ஏழாம் அறிவு ஸ்டில்லை வெச்சு கிராபிக்ஸ் படம் அட்டகாசம். உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. நிஜமென்று நம்பி பேரச்சத்துடன் படிக்க ஆரம்பித்தேன். இவ்வாண்டு என்னை அலற வைத்த பதிவு இது என்றால் மிகையில்லை. ஏன் ஹைதர் இப்படி? அவ்வ்!

  ReplyDelete
 11. எனக்கு ஒன்னுமே புரியலயே... இன்னும் வளரனுமோ????

  ReplyDelete
 12. why like this?dont comment about others,if u wnat to comment,comment them directly.that s correct and islam also show the way like that only,

  ReplyDelete
 13. //ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்//,

  சும்மா கலக்கல்....

  ReplyDelete
 14. //ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்//,

  சும்மா கலக்கல்....

  போஸ்டர்தான் கொஞ்சம் செக்ஸியா இருக்கு :)).

  ReplyDelete
 15. Salam
  bro
  yaarunga athu en talaivar'ah keli seivathu? :)
  ungaluku
  'idea mani'kanakil erukum pola!!! :) :) :)

  ReplyDelete
 16. பாடி ஸ்ராங்கு பேஸ்மென் கொஞ்சம் வீக்கு. இருந்தாலும்
  அருமையான பதிவு ஹைதர் எலி ..

  எலியா? அலியா?

  பாவம் அவருக்கே டவுட்டு போல .

  ReplyDelete
 17. @Anonymous
  அண்ணே அனானி

  //எலியா? அலியா?//

  எலியுமில்லை அலியுமில்லை புலி இப்ப உறுமுகிறேன் பாருங்கள்.

  மியாவ்! மியாவ்! மியாவ்!

  ReplyDelete
 18. ஸலாம்

  ஒன்னுமே புரியல அண்ணே ...
  சந்தேகமா இருக்கு

  பாவாட ஸ்டார் நீங்க தானோ ..

  ஒட்டு அதிகமா வாங்கிருகீங்க!!!!

  ReplyDelete
 19. சகோதரா வணக்கம்
  அந்த மானம் கெட்ட ஜடியாமணியை பப்ளிக்காவே திட்டனும் அவனின் வண்டவாளங்களை நல்லா சொல்லியிருக்கீங்க.

  அவனுக்கு நினைப்பு அவன் தான் புத்திசாலி மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று.

  அவனின் அல்லக்கை கூட்டம் ஒன்று இருக்கு அது இருக்கும் வரை ஆடுவான்.அதில் நொந்த சாமி என்று ஒரு அடி முட்டாள் இருக்கான் பாருங்க அவன் இவனை விட வடிகட்டின முட்டாள்

  பாருங்க ஒரு நாள் அவனின் அல்லக்கைகளே அவனுக்கு ஆப்பு வைப்பார்கள்.

  மன்னிக்க வேண்டும் சகோதரா கொஞ்சம் கோபம் ஜாஸ்த்தியாக வந்துடுச்சி

  ReplyDelete
 20. உங்கள் தகுதிக்கு ஏற்ற பதிவுதான்;; அதிலும் புலி உறுமுவது நீங்க விரும்பியது போல்தான்...!

  ReplyDelete
 21. @சகோதரர்
  காட்டான்


  நான் தவறாக எழுதி இருந்தால் நடுநிலைவாதி என்ற முறையில் உங்கள் கருத்தை சொல்லுங்கள்

  உங்களுக்கு தெரியும் என்னை இப்படி எழுத தூண்டிய சூழல் எதுவேன்பது சமூக பதிவுகள் எழுதிய கொண்டிருந்த நான் மொக்கை பதிவும் எழுத வேண்டியது இருக்கிறது

  ReplyDelete
 22. கோட்டான்December 26, 2011 at 6:54 AM

  போறபோக்கில் ஒருத்தர் சாக்கடையை அள்ளி மொத்த குடும்பத்தினர் மீதும் வீசுவார். அவருக்கு சாமரம் வீசி முதுகு சொரிந்து விடுவீர்கள். பதிலுக்கு பதிலாக அவர் சாக்கடை வீசியவர் மீது மட்டும் தண்ணீரை ஊற்றினால் கூட, //உங்கள் தகுதிக்கு ஏற்ற//---அடடா! என்னய்யா நீதி இது? எவனும் இங்கே இளிச்சவாயன் கிடையாது. அந்தக்காலம் இறந்தகாலம். அறிக.

  ReplyDelete
 23. சகோதரர் காட்டான்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  நான் கேட்கும் சிலதே சிலதான கேள்விகளுக்கு பொறுமையுடன் உண்மையான பதில்களை சொல்ல முயற்சியுங்கள் சகோதரர்.

  1. முஸ்லிம் ஆண்களின் என்று தொடங்கும் சகோதரர் சந்துருவின் தலைப்பு - இதில் என்ன நேர்மை இருக்கின்றது சகோதரர்?

  2. அடுத்து, ஈழ பிரச்னைக்கு சில தீர்வுகளை தான் முன்வைத்தோம். அதில் மாற்றுக்கருத்து இருந்தால் ஆரோக்கியமான முறையில் வாதித்திருக்கலாம். இதை செய்தார்களா சிலர்?

  3. நாற்று குழுமத்தில் நடந்த விவாதத்தில் எளிதான கேள்வியை தான் கேட்டோம். கடைசி வரை பதிலில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரவில்லை என்பது சாதாரண நிகழ்வு தான். ஆனால், ஒரு குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமல் அந்த வாதங்களை எங்களுக்கு தெரியாமலேயே நீக்கியது. இவ்வாறான கீழ்த்தரமான செயலை நான் பார்த்ததில்லை. இது தான் உங்களில் சிலரின் வாத முறையா?. இது தான் உங்களில் சிலரின் தராதரமா?

  4. அடுத்து, தங்கள் இயலாமையை சாந்தப்படுத்திக்கொள்ள மறைமுகமாக தாக்கி ஒரு பதிவு. ஆனால் இதிலும் ஒரு நன்மையை இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான். சகோதரர் நிரூபன் போன்றவர்களின் உண்மை முகங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்.

  இப்போது உங்களில் சிலரின் பாணியிலேயே ஒரு பதிவு.

  கடைசியாக, எங்கள் மீது உங்களில் சிலருக்கு அப்படி என்ன வெறுப்பு சகோதரர்?

  உண்மையாக சொல்கின்றேன். உங்களில் சிலருடன் இப்படியாக கருத்து மோதல் வரும்போது மிக வருத்தமாகவே உள்ளது. வேற என்ன சொல்வது...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 24. Kalakkittinga Sago. Ina vaatham Matha vaatham pidithavargal Tamilargalaagavum iruppathu vedhanai thaan.

  ReplyDelete
 25. முறையற்ற புரிந்துணர்வு தான் இதற்கு எல்லாம் காரணம் நண்பா.நாற்றில் உங்கள் கருத்துக்கள் மட்டுமல்ல.பலரது கருத்துக்களும் முன்னர் காணாமல் போயிருக்கின்றது.அதற்கு அதிகப்படியான மட்டுனர்கள் இருப்பது காரணம்.உங்களுக்கு மட்டும் இந்த கதி ஏற்பட்டிருக்கின்றது என தவறாக விளங்க வேண்டாம்.நிரூபனின் உள்குத்து பதிவை உங்களுக்கு என நினைத்ததை என்னவென்று சொல்வது.அனானிகளுடன் மோதலாம்.அல்லது புறந்தள்ளிவிடலாம்.பதிவுலகில் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் எதற்காக சண்டைபோட்டுக்கொள்ளவேண்டும்.இது உங்களுக்கு மட்டுமான அட்வைஸ் அல்ல.அவர்களுக்கும் தான்.எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்.காரணம் பதிவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களையும் தாண்டி மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இதில் உள்ளது.பொறுப்பாக நடந்து கொள்க.

  ReplyDelete
 26. சகோதரர் அனானி,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

  //நிரூபனின் உள்குத்து பதிவை உங்களுக்கு என நினைத்ததை என்னவென்று சொல்வது.//

  தவறு...தவறு..தவறு...மிக தவறாக நினைத்து விட்டீர்கள். நான் சகோதரர் நிரூபனின் பதிவை சுட்டி காட்டவில்லை. மதம் தொடங்குவது எப்படி என்ற பதிவை பற்றி சொன்னேன். அதில் ஆதரவு வோட் போட்டு தன் முகத்தை நிரூபன் காட்டியதை தான் சொன்னேன்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 27. நான் படித்ததிலேயே படு மட்டமான பதிவு அந்த ஐடியா சனியோட இன்றைய பதிவு.

  ///தாடியையும், மீசையையும் பார்க்கும் போது, பொண்ணுங்களுக்கு கிளர்ச்சி உண்டாகும்னு விஞ்ஞானம் சொல்லுதாம்///

  ///தாடிவைச்சிருக்கிறதே ஆபாசமாம்///

  ///உங்க பாலியல் உறுப்பாகிய தாடியை ரொம்ப நீளமா வளர்த்து, ஆபாசமா அலையுறீங்க!///

  ///போதாக்குறைக்கு இண்டெர்நெட்டுல உங்க படம் எல்லாம் போட்டு, ரொம்ப நல்லா போஸ் குடுக்குறீங்க!/// ((நண்பா தாடிவெச்ச ஹைதர் அலி, இதென்ன கூத்து..?))

  ///இண்டெர்நெட்டுலயும் யாரையாச்சும் பொண்ணுங்களை மடக்கலாம்னு ப்ளான் பன்ணுறீங்களா? ஸோ, மதத்தின் பேரைப் பயன்படுத்தி நல்லாவே சதைக்கு அலையுறீங்க?///((சரியா போச்சு போங்க))

  நாய விரட்ட கல்லை எடுக்கறேன்னு போயி வசமா வாங்கி கட்டிக்கிட்டீங்க.

  கவலையை விடுங்க. அவங்க உங்களை மட்டும் திட்டலை...

  இயேசு கிருஸ்து, திருவள்ளுவர், கார்ல் மார்க்ஸ், மன்மோகன் சிங் உட்பட தாடிவெச்சு இருக்கும் எல்லா பெரிய அரசியல்தலைவர்களையும், சிந்தனைவாதிக்ளையும், விஞ்ஞானிகளையும், மதத் தலைவர்களையும், சாமியார்களையும், முனிவர்களையும் ரிஷிகளையும் திட்டி இருக்காங்க.

  இதன்மூலம் அவங்க முட்டாள்கள் என்பதும் இஸ்லாமிய எதிர்ப்பு வெறி தலைக்கேறினால் மண்டையில் உள்ள மூளை வேலை செய்யாது என்பதும் நிரூபணம் ஆகிவிட்டது.

  இந்த கழிசடைகளையும் அங்கே இந்த குப்பையை ஆதரித்து பின்னூட்டம் இட்ட முட்டாள்களையும் விட்டுத்தள்ளுங்க.

  பதில் சொல்ல வக்கும் திராணியும் இல்லாத இனி இவர்களை இனி ஒரு பொருட்டாகவே எவரும் மதிக்க மாட்டார்கள்.

  குரைக்கிற நாய் கடிக்காதுன்னு பழமொழி இருக்கு.

  ReplyDelete
 28. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  சகோ சந்துருவின் பதிவு, ஒரு கேவலமான கேலிப்பதிவு, நாற்றில் நிருபனின் பதிவு.. இவற்றுக்கேல்லாம் எதிர்வினையாக (அதிலும் நல்ல முறையாக) எடுத்துச்சொல்லும் போது கேட்காதவர்கள் இப்படிப்பட்ட பதிவுகள் உருவாவதைதான் விரும்புகிறார்கள் போலும்? வசையோடு கூடிய இதற்கும் எதிர்பதிவுகள் இடுவார்களோ?

  ஆனால் ஒன்று! பதிவுலகில் ஹிட் பெற வேண்டுமானால் ஒன்று இஸ்லாத்தை தாக்கி எழுத வேண்டும், அல்லது இஸ்லாத்தை நீக்கி எழுத வேண்டும் இது என்ன மனப்பான்மையோ....?

  இஸ்லாமியர் குழு மனப்பான்மையோடு செயல்பட்டுகொண்டிருப்பதாக கூறி மற்றோரு நிலையில் தாழ்வு மனப்பான்மையோடு இஸ்லாத்தை குழுவாக விமர்சித்துக்கொண்டிருப்பது முரண்பாடான வேதனை!

  ReplyDelete
 29. @Aashiq Ahamed
  தவறு...தவறு..தவறு...மிக தவறாக நினைத்து விட்டீர்கள். நான் சகோதரர் நிரூபனின் பதிவை சுட்டி காட்டவில்லை. மதம் தொடங்குவது எப்படி என்ற பதிவை பற்றி சொன்னேன். அதில் ஆதரவு வோட் போட்டு தன் முகத்தை நிரூபன் காட்டியதை தான் சொன்னேன்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ//

  வணக்கம் சகோ,
  தாங்கள் பின்னூட்டம் ஊடாக இங்கே என் பெயரினைப் பாவித்திருப்பதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்,
  காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சகோதரன் ஹைதர் அலி அவர்கள் மதுரன், மதிசுதா, மற்றும் KSS.ராஜ் (நண்பர்கள் தளம்) ஆகியவற்றில் இலங்கைப் பதிவர்கள் தான் ஆபாசத்தினை வலைப் பதிவுகளில் புகுத்துவதாகவும், வலையில் இலங்கைப் பதிவர்கள் தான் ஆபாச கருத்துக்களை எழுதுவதாகவும் சுட்டியிருந்தார். அப்போது அவர் கண்களுக்கு ஏனைய பதிவர்கள் தெரியவில்லையா என்பது வேடிக்கை. இது ஓர் பிரிவினை வாதக் கருத்து. இக் கருத்தினை கையிலெடுத்து ஐயோ..ஹைதர் அண்ணர் எமக்கு எதிராக பிரிவினை வாதம் பேசி விட்டார் என்று போர்க் கொடி தூக்கியிருக்க எங்களாலும் முடியும். ஆனாலும் எம்மால் சிறு சிறு கருத்துக்களை வைத்து ஆதங்கம் தேடிக் கொள்ளும் பண்பு இல்லை என்பதால் அப்படியே விட்டு விட்டோம்.

  இப்போது பவுடர் ஸ்டாரின் பதிவினை நான் வன்மையாக கண்டிக்கவில்லை என்றும் நான் ஓட்டளித்திருப்பதாகவும் நீங்கள் கூறியிருக்கிறீங்க. ஏற்றுக் கொள்கின்றேன், ஆனால் ஒரு கேள்வி,
  முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றிய பதிவுகள், ஈழ மக்களின் அவலங்கள் தொடர்பான பதிவுகள், ராஜீவ் கொலை தூக்குத் தண்டனை தொடர்பான பதிவுகள் மற்றும் செங்கொடி தீக்குளிப்பு விவகாரங்கள் இதில் ஏதாவது ஒன்றில் தாங்கள் பங்களிப்பு நல்கியிருந்தால்....நானும் இந்த பவுடர் ஸ்டாரின் கருத்தினைக் கண்டித்திருக்க முடியும்.

  நீங்கள் உங்களை நீங்களே சுருக்கி ஓர் குறுகிய வட்டப் பரப்பினுள் மதம் தொடர்பான சமரினை செய்து கொண்டிருக்கும் போது அதில் உள்ள சில காமெடிகளை மாத்திரம் ரசித்து விட்டு கமெண்ட் போட்டு, எனக்கு ஓட்டுப் போட்டவருக்கு ஓட்டுப் போட்டு விட்டு வருவதில் என்னய்யா தவறு கண்டீர்கள்?


  சில வேளை தாங்கள் பதிவுலகில் உள்ள ஏனைய பதிவர்களைப் போன்று எல்லோர் வலையிலும் சகஜமாக மதம் தொடர்பான கருத்துக்களைத் தவிர்த்துப் பழகியிருந்தால் அடியேனும் பவுடர் ஸ்டாரின் பதிவினைக் கண்டித்திருக்க வாய்ப்பிருக்கும். ஆகவே என் முகத்தினை நான் காட்டி விட்டேன் என நீங்கள் இங்கே ஆதங்கப்படுவது நியாயமற்றது சகோ,

  ReplyDelete
 30. @நிரூபன்

  நண்பா நிருபன் உங்களின் குழு மனப்பாண்மை மறுபடிக்கும் வெட்ட வெளிச்சமாகி விட்டது

  ReplyDelete
 31. @நண்பர்
  நிரூபன்


  //காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சகோதரன் ஹைதர் அலி அவர்கள் மதுரன், மதிசுதா, மற்றும் KSS.ராஜ் (நண்பர்கள் தளம்) ஆகியவற்றில் இலங்கைப் பதிவர்கள் தான் ஆபாசத்தினை வலைப் பதிவுகளில் புகுத்துவதாகவும், வலையில் இலங்கைப் பதிவர்கள் தான் ஆபாச கருத்துக்களை எழுதுவதாகவும் சுட்டியிருந்தார்.//

  நான் எங்கு இலங்கை பதிவர்கள் மட்டும் ஆபாசத்தை பரப்புகிறார்கள் என்று சொன்னேன் நீருபிக்க முடியுமா?

  சரி நான் குழு மனப்பன்மை இல்லாமல் அனைவரையும் சொல்லி இருக்கிறேன்

  பார்க்க: மாயஉலகம்,அந்தியன்2,அமீனா குட்டி சுவர்க்கம்,அன்புடன் மாலிக்கா,

  இங்கு எல்லாம் போய் உங்களுக்கு போட்ட மாதிரியே பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் ஐயா

  ஒரு நிமிடம் அனைத்தையும் வெட்டி எடுத்து வருகிறேன்

  உங்களின் குழு மனபண்மையை தோலுரிக்க

  ReplyDelete
 32. ஹைதர் அலி said...
  நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  ஆமா நானும் நிறைய இலங்கையை சேர்ந்த பதிவளர்களின் பதிவை பார்த்திருக்கிறேன்

  பரபரப்பாக தலைப்பு போட்டு எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பார்கள்

  உங்களுடைய இந்த பதிவு நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
  October 14, 2011 8:44 AM

  http://www.sirakuhal.com/2011/10/blog-post_13.html

  ஹே...ஹே..
  இது நீங்க தானே எழுதினீங்க.

  ReplyDelete
 33. @நிரூபன்

  நான் தான் எழுதினேன் இங்கு மட்டுமல்ல இன்னும் பல இடங்களில்

  ReplyDelete
 34. @நிரூபன்


  //பொதுவாக இலங்கை தமிழர்கள் என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம். அவர்கள் தூய தமிழ் பேசும் அழகு இருக்கே கேட்டுகிட்டே இருக்கலாம். நாம் எறங்கி என்று சொல்வதை அவர்கள் இறங்கி என்று சரியாக உச்சரிப்பார்கள். அவர்கள் அந்த தமிழில் நம்மை திட்டினாலும் கோபம் வராது. திட்டும் போதும் கூட அவர்களின் தமிழ் உச்சரிப்பை ரசிப்பேன். அவர் குர்ஆன் வகுப்பு எடுக்கும் போது நமக்குத் தெரியும் என்று சொல்லுவதற்குப் பதிலாக எங்களுக்குத் தெரியும் என்று ஆரம்பிப்பார். அப்போது நான் மெளலவி உங்களுக்கு தெரியும் .ஆனால் எங்களுக்கு தெரியாதுல்லே என்று சீண்டுவேன்.//

  இப்படியும் எழுதி இருக்கேன்

  ReplyDelete
 35. உலகின் மிக சிறந்த அறிவாளிக(ல்)ள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அண்ணன் நிரூபனுக்கு
  ஜால்ராக்கள் சத்தம் அதிகம் இருந்தால் வீணையின் சத்தம் சரியாக கேட்காது. எனவே ஜால்ரா சத்தத்தை குறைத்து விட்டு நல்லா தெளிவான மனநிலையில் இருந்து தாங்கள் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்கள் சரிதானா என்று (எத்தகைய உற்சாக பானமுமில்லாமல் இருக்கின்ற மனநிலை) சிந்தித்து பாருங்கள். மற்றபடி இணையத்தை அதிகம் ஆபாசமாக்கியது வெளிநாட்டில் வசிக்கும் ஈழ தமிழர்கள் என்றே நான் குற்றச்சாட்டு வைக்கிறேன்.

  ReplyDelete
 36. சகோதரர் நிரூபன்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  //முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றிய பதிவுகள், ஈழ மக்களின் அவலங்கள் தொடர்பான பதிவுகள், ராஜீவ் கொலை தூக்குத் தண்டனை தொடர்பான பதிவுகள் மற்றும் செங்கொடி தீக்குளிப்பு விவகாரங்கள் இதில் ஏதாவது ஒன்றில் தாங்கள் பங்களிப்பு நல்கியிருந்தால்....நானும் இந்த பவுடர் ஸ்டாரின் கருத்தினைக் கண்டித்திருக்க முடியும்.//

  திரும்ப உங்கள் முகத்தை நன்றாக காட்டியதற்கு நன்றி. ஒருவேளை நீங்கள் மேலே கூறியவற்றில் ஒன்றிலாவது என் பங்களிப்பை காட்டினால் உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வீர்கள்? செய்தவற்றை சொல்லிக்காட்டுவது மிகுந்த சங்கடமாக இருந்தாலும் நீங்கள் இங்கே பொதுவில் கேட்டுவிட்டதால் சொல்கின்றேன். இதோ ராஜபக்சே குறித்து நான் எழுதிய கடிதம் தருமி அவர்களின் தளத்தில் வெளியான ஆதாரம்.

  http://dharumi.blogspot.com/2011/04/497.html

  தமிழக மீனவர்கள் படுகொலை, ராஜீவ் கொலை வழக்கு etc என்று பிரச்சனைகள் வரும்போது பொதுவிலும் சரி, மறைமுகமாகவும் சரி...என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்திருக்கின்ரேன். உங்களிடம் அதனையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை சகோதரர். நான் பதில் சொல்ல வேண்டியது இறைவனுக்கு மட்டுமே.

  இவ்வளவு கேவலமாகவும் மனிதர்கள் இருப்பார்கள் என்று மறுபடியும் நிரூபித்ததற்கு நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 37. இவர்களுக்கு (அதாவது முஹம்மத் ஆஷிக் குறிப்பிட்ட ஈ ஈ தமிழர்களாகிய) ஏதோ சமூக அக்கறை இருப்பது போன்றும் வலையுலகில் இருக்கும் முஸ்லிம்கள் அமைதியாக இருப்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்க ரொம்பவும் மெனக்கெடுகிறார் நிருபன். ஆனாலும் பாருங்கள் என் தம்பி ஆஷிக் அஹமத் ஆதாரத்துடன் நிருபனின் முகத்தை கிழித்து விட்டார். இவர்களின் ஆபாசங்கள் இணையத்தில் எல்லை தாண்டுவதை இவருடைய டோஸ்டானேவே (அதாங்க கஞ்சா டாக்குடர் பவுடர் மணியே) ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் பெண்கள் இல்லாதபோது தான் இப்படி இணையத்தை ஆபாசமாக்குவார்களாம். பெண்கள் வந்து விட்டால் எல்லாத்தையும் மூடிகிட்டு கம்முனு உட்கார்ந்துகிடுவார்களாம்.

  ReplyDelete
 38. @Aashiq Ahamed


  மாயஉலகம்,அந்தியன்2,அமீனா குட்டி சுவர்க்கம்,அன்புடன் மாலிக்கா,ரியாஸ் அலி,ஆஹா பக்க்ங்கள் அப்துல் காதர், நாண்சி பற்றிய பதிவு என்று அனைத்தையும் திட்டி இருக்கிறேன்

  இவர்களுக்கு என்ன ஒரு குழு மனபண்மை பாருங்கள்

  தமிழக பதிவளர்களை திட்டும் போது வராத நீருபன் இலங்கை பதிவளர்களை விமர்சிக்கும் போது நீ யாருடா எங்க குழுவை விமர்சிக்க என்று கிளம்புறரர்

  இருங்க அனைத்தையும் வெட்டிக்கிட்டு இருக்கேன்

  ReplyDelete
 39. அதிகமாக தமிழர்களால் vaasikkappadum செய்தி இணையதளம் தட்ஸ்தமிழ் என்ற இணையதளமாகும். அதிலே போய் பின்னூட்டங்களை கொஞ்சம் வாசிக்கவும். அதுவும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த செய்திகள் வந்தால் எவ்வளவு ஆபாசமான பின்னூட்டங்கள். வார்த்தைகளே காட்டி கொடுத்து விடும் அது ஈழ தமிழர்கள் தான் போட்டது என்று. அதுவும் அவருடைய குடும்பம் குறித்து எவ்வளவு வசவுகள். நன்றி கெட்ட மனிதர்கள் என்று தான் இந்த பின்னூட்டமிட்டவர்களை அடிக்கடி சொல்வேன் என் நண்பர்களிடம். இரண்டு முறை ஆட்சியை ஈழ தமிழர்களுக்காக பறி கொடுத்த அவரை (அதில் இருந்தது சுயநலமா இல்லை பொதுநலமா என்று எனக்கு தெரியாது.) அவர் குடும்பத்தை எவ்வளவு அருவருப்பாக திட்டுகிறார்கள் ஈழ தமிழர்கள்? இன்றுவரைக்கும் அந்த தளத்தில் சென்று பார்க்கலாம். அதில் அதிகம் ஆபாசத்தை உண்டாக்குவது பெரும்பாலான விடுதலைப்புலி ஆதரவு ஈழ தமிழர்கள் தான். இதை நிருபன் மறுக்க முடியுமா? இல்லை தட்ஸ்தமிழ் பின்னூட்டங்களை தான் மறைக்க முடியுமா?

  ReplyDelete
 40. அப்புறம் அவருடைய (நிருபனுடைய) தளத்திலும் வினவை போன்றே ஒரு கோமெடி நிகழ்கிறது. அது இன்னாடானா ஒரே மனிதர் பல பெயரில் வந்து கருத்து சொல்லும் யுக்தி. அப்போ தானே கருத்துக்கள் அதிகமாக வருகிறது என்று தமிழ்மணத்திற்கு கணக்கு காட்ட முடியும்? (அரைகுறை பொம்பளைங்க போட்டோ போட்டு ஹிட்ஸ் தேடுறவங்க இது கூட செய்ய மாட்டாங்களா - மை மைன்ட் வாய்ஸ்).

  சிவா என்பவர் வந்து முதலில் ஒரு கருத்தை சொன்னார். அதே கருத்தை இப்போ பீட்டர் சொல்லிருக்கார். ஆனால் பாருங்கள் இப்போ சிவா தன் கருத்தை அழித்து விட்டார். ஏன் என்றால் பீட்டர் அதே கருத்தை பின்னாடி சொல்லியிருப்பதால். பீட்டர் இப்போ உள்ளே இருக்கார். அதனால சிவா வெளியே இருக்கார். அடேங்கப்பா உள்ளே - வெளியே ஆட்டம் ஜூப்பரப்பு நிருபன்.

  அது சரி இவர்களின் தானை தலைவனே அறம் சார்ந்து செயல்படாத போது விசிலடிச்சான் குஞ்சுகளிடம் எப்படி அறம் சார்ந்த செயல்களை எதிர்பார்க்க முடியும்?

  ReplyDelete
 41. அஸ்ஸலாம் அலைக்கும்..
  ஹைதர் அலி பாய் ,
  பதிவை படிக்கும்போது எதுவும் புரியவில்லை
  பதிவின் கடைசி வரியும், பின்னுட்டங்களையும்
  படித்தபின் தான் புரியுது , புது கூத்தின் ஆரம்பமோ ??!!!
  உங்க பல பதிவுகளில் , நாகரிகம் , கண்ணியம் மிகையாக இருக்கிறது
  அத (ஒரு மொக்க பதிவர் புது வேடம் போட்டு) கெடுத்து கொள்ளாதீங்க
  என்பதே என்னைய போன்றவர்களின் அவா ....
  நாய் நம்பள கடித்தால், நாம நாய கடிக்கிறோமா !!?? இல்லையே
  "பிஸ்கோத்து பிட்டு பசங்க" உசுப்பு எத்தரானுங்கனு, நீங்களும்
  அவங்க போல வேஷம் கட்டாதீங்க ....
  "இஸ்லாம் நமக்கு அப்படி சொல்லிதரல என்பதை மறக்காதீங்க "

  ReplyDelete
 42. அஸ்ஸலாம் அலைக்கும்..
  ஹைதர் அலி பாய் ,
  பதிவை படிக்கும்போது எதுவும் புரியவில்லை
  பதிவின் கடைசி வரியும், பின்னுட்டங்களையும்
  படித்தபின் தான் புரியுது , புது கூத்தின் ஆரம்பமோ ??!!!
  உங்க பல பதிவுகளில் , நாகரிகம் , கண்ணியம் மிகையாக இருக்கிறது
  அத (ஒரு மொக்க பதிவர் புது வேடம் போட்டு) கெடுத்து கொள்ளாதீங்க
  என்பதே என்னைய போன்றவர்களின் அவா ....
  நாய் நம்பள கடித்தால், நாம நாய கடிக்கிறோமா !!?? இல்லையே
  "பிஸ்கோத்து பிட்டு பசங்க" உசுப்பு எத்தரானுங்கனு, நீங்களும்
  அவங்க போல வேஷம் கட்டாதீங்க ....
  "இஸ்லாம் நமக்கு அப்படி சொல்லிதரல என்பதை மறக்காதீங்க "

  ReplyDelete
 43. அஸ்ஸலாமு அழைக்கும்,
  சகோ. ஹைதர்,
  ஈழத்து ஈன பிறவி, கொட்டை எடுத்த பு(ளி)லி, பெயரிலியின் வாரிசு, பவுடர் ஸ்டார் ஐடியா மணி யின் பதிவை நேற்று தான் பார்த்தேன். அதற்கு பதில் இட வேண்டும் என்று இருந்தேன், வேலை பளு காரணமாக இட முடியவில்லை இன்று சகோ.ஹைதர் அவர்கள் நான் நினைத்ததை செய்து விடு இருக்கிறார் மிக்க நன்றி.
  ஆண்களிடம் ஆபசம் இல்லையா என்ற பதிவில் இஸ்லாத்தினை வரம்பு மீறி விமர்சித்து இருபதினால் நானும் ஒரு சில இடங்களில் வரம்பு மீறி பின்னுட்டம் இட போகிறேன் தயவு செய்து நாடு நிலையான ஈழத்து சகோதர்கள் மன்னிக்கவும்.
  \\ எமது சமூகத்தைக் கேவலப்படுத்தும் தீயவர்களுக்கு எதிராகப் பதிவு போடுவது//

  அப்படின்னு ஒன்னு இருக்கா? ஸ்டார்ட் தி மியூசிக்..........

  \\அதனால் தான் நானும் சில நண்பர்களும் வெறியர்களுக்கு வேட்டு வைக்க கெளம்பியுள்ளோம்//

  எனது வேட்டு வைக்க போறிங்களா? போங்கடா போக்கத்த பசங்களா உங்களால சத்தாம காத்து குட விடமுடியாத அளவுக்கு ரப்பர் வச்சி அடசிட்டான் ஒருத்தன்,. இவங்க வந்து வேட்டு வைக்க போரனுன்கலாம்.....ஹெஹெஹெஹ் சிப்பு சிப்ப வருது.

  \\செவ்வாய்க்கிரகத்தில் மக்கள் குடியேறலாம் என்று கண்டுபிடித்தாகிவிட்டது!//

  அட எபோ கள்ளதனமா போக போறீங்க ? பிளீஸ் பிளிஸ் அந்த ஊரையாவது விட்டு வைங்கடா........

  \\செவ்வாய்க்கிரகத்தை நாறடிப்பதாக எமக்குத் தகவல் கிடைத்தது!//
  எப்படி ஜெர்மனி, பிரான்ஸ், கனடா என்று நாறடித்த மாதிரியா ?

  அப்படியே.. ஹைதர் புலி புலி னு சொல்லி புட்டு மியாவ் மியாவ் என்று " கதைகிறேர்களே " அந்த புலி எங்க இருக்குனு சொலுங்கோ....சர்கஸ் ல கொண்ட போய் வச்சிடலாம்...அங்க நமக்கு தெரிஞ்ச ரிங் மாஸ்டர் ஒருத்தர் இருக்காராம்.......ஹிஹிஹி மற்றபடி பதிவு சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 44. சகோ.ஹைதர் அலி,
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  உங்க பதிவை நேற்றே படித்துவிட்டாலும்... இதனை பாராட்டி எழுதவோ விமர்சித்து எழுதவோ தயங்கினேன். சரியான எந்த ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.

  இப்போது எழுதுவதன் காரணம்,
  சகோ.நாசர் அவர்களின் நெத்தியடி பின்னூட்டம்.

  ///நாய் நம்பள கடித்தால், நாம நாய கடிக்கிறோமா !!??///

  மிகச்சரி....
  சகோ.ஹைதர் அலி,
  இனி நாம் இதுபோல பதிவுகள் போட்டு நாயை கடிக்கவேண்டாம்.
  நமக்கொரு நல்ல பாடம்.

  மேலும், இன்றைய நாள்...
  ///"பிஸ்கோத்து பிட்டு பசங்க" உசுப்பு எத்தரானுங்க///....இதனை தெள்ளத்தெளிவாக.... நமக்கு அறிவித்துக்கொடுத்து விட்டது.

  ஒரே ஒரு நன்மை:-
  'யார் யார் எப்படி எப்படி' என்று நாம் நன்கு அறிந்து கொண்டோம். பலரின் முகத்திரையை இந்த இரண்டு நாட்களில் கிழித்து எறிந்து இருக்கிறோம். பலருக்கும் இவர்களைப்பற்றி அறிவித்துக்கொடுத்டும் இருக்கிறோம்.

  இதற்கு நாம் கொடுத்த விலை...
  ////உங்க பல பதிவுகளில் , நாகரிகம் , கண்ணியம் மிகையாக இருக்கிறது
  அத (ஒரு மொக்க பதிவர் புது வேடம் போட்டு) கெடுத்து கொள்ளாதீங்க
  என்பதே என்னைய போன்றவர்களின் அவா....////...இதுதான்..! :-((

  உங்கள் பதிவு சாட்டையடி என்றால்...
  சகோ.நாசரின் பின்னூட்டம் நெத்தியடி..!

  இதுபோல கடிவாள பின்னூட்டங்கள் வாசகர்களிடம் இருந்து நமக்கு அமைந்தால்... மிகவும் நல்லது.

  ஜசாக்கலாஹ் க்ஹைர் சகோ.நாசர், உங்கள் பின்னூட்டம் எனக்கும் நல்லதொரு பாடம்தான்.

  ReplyDelete
 45. சில வரலாறுகளை நாம் படிக்க மறந்து விடுவதால் பொய்களும் புரட்டுகளுமே வரலாறுகளாக வருங்கால தலைமுறைக்கு காட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாறு தான் இலங்கை முஸ்லிம்களை குறித்த வரலாறு. 1915 -ல் சிங்கள பேரினவாதத்திற்கு பலியாக ஆரம்பித்த முஸ்லிம்கள் (அன்றைக்கு ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் சர் . பொன் இராமநாதன் சிங்களவர்களுடன் கைகோர்த்து குற்றவாளிகளை இங்கிலாந்து வரை சென்று காப்பாற்றவும் செய்தார்.) தொடர்ச்சியாக தமிழ் மேலாண்மை பயங்கரவாதிகளினாலும் ஊரை விட்டு நிர்கதியாய் விரட்டப்படுதல் மற்றும் இனப்படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். ஆனால் இதை சரியாக நாம் வரலாற்றில் ஆவணப்படுத்தவில்லை. விளைவு இன்று முஸ்லிம்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைக்க முயற்சிக்கின்றனர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள். எவ்வளவு காலம் தான் உண்மை ஊரை ஆளும்? நம் மூத்த சகோதரர் வாஞ்சூர் அப்பா உண்மையை தொடராக வெளியிடுதலின் முயற்சியில் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறார். அதன் சுட்டி
  ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

  ReplyDelete
 46. ஐடியா சனியோட

  ///தாடியையும், மீசையையும் பார்க்கும் போது, பொண்ணுங்களுக்கு கிளர்ச்சி உண்டாகும்னு விஞ்ஞானம் சொல்லுதாம்///

  ///தாடிவைச்சிருக்கிறதே ஆபாசமாம்///

  ///உங்க பாலியல் உறுப்பாகிய தாடியை ரொம்ப நீளமா வளர்த்து, ஆபாசமா அலையுறீங்க!///

  வார வார ஐடியா குஞ்சுமனி பொம்பளை புள்ளையா அகிட்டுவறான அல்லது சைக்கோவா மறுகினா இப்பவெல்லம் தெரியா மட்டிங்குது பாஸ் மன்னார் சாமிக்கு தான் வெளிச்சம்

  ReplyDelete