Wednesday, April 4, 2012

அமீர் தீவிரவாதியா....?

அமீர் தனது வாய் பேசமுடியா 
தாயாருடன்
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த முஹம்மது அமீர் என்ற 18 வயது இளைஞரை,டெல்லி போலீஸ் வேன் ஒன்று வழிமறித்துக் கைது செய்தது. அவர் மீது கொலை செய்தல், பயங்கரவாதம், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

1996 டிசம்பர் மாதத்திலிருந்து 1997 அஃக்டோபர் மாதம் வரை டெல்லி, ரோக்தாக்,சோனாபெட்,காஸியாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இவரே மூல காரணம் என்று போலீஸ் அவர் மீது குற்றம் சாட்டியது.இதில் பேருந்துகளில் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளும்,டெல்லி சதார் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும்,பிராண்டியர் மெயிலின் (Frontier Mail) மூன்று கோச்சுகளில் நிகழ்ந்த (காஸியாபாத்தில் வைத்து) குண்டுவெடிப்புச் சம்பவங்களும் அடங்கும்.இந்த இருபது சம்பவங்களிலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். அமீரைக் கைது செய்த போலீசார் அவரைத் திகார் சிறையில் அடைத்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சகீல் என்ற இன்னொருவரும் கைது செய்யப்பட்டார்.விசராணை தொடங்கும் முன்னரே சகீல் பத்து வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிற வழக்குகளுக்காகச் சிறையில் இருந்த அவர் 20009 ஆம் ஆண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் அந்த நபரின் கதை முடித்து வைக்கப்பட்டது.

அமீர் 14 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு.2012 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த இருபது வழக்குகளில் 18 வழக்குகளின் அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லையென்றும், எந்த விதமான சாட்சிகளோ, ஆவணங்களோ இல்லாமல் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் கூறி ‘விசராணை நீதி மன்றம்’ அமீரை விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று வழக்குகளில் மட்டும்(அது ஏன் மூன்று வழக்குகளில் மட்டும்?) போலீஸார்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதி மன்றம் “குற்றத்தை நீரூபிப்பது இருக்கட்டும். எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் போலீஸார் அமீர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று தீர்ப்பளித்தது.

அமீரின் வழக்கறிஞரான திரு.என்.டி. பஞ்சோலியா இது பற்றிக் கூறும் போது “எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்,18 வயதான இளைஞர் இருபது இடங்களில் குண்டுகள் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது” என்கிறார்.

தனது 18 வது வயதில் கைது செய்யப்பட்ட அமீர் 14 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் சிறை வாசம் அனுபவித்து விட்டு 33 வது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்க்கையின் வசந்தகாலம் முழுவதையும் அவர் சிறையில் கழித்துள்ளார். தனது மகனைச் சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே கொண்டு வரமுடியாமல்,அமீரின் தகப்பனார் மனமுடைந்து இறந்து போனார் அவரது தாயார் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்து விட்டார்.அவரின் குடும்பமே நிர்மூலமாகிப் போயுள்ளது.

போலீஸ் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் அமீரைத் தொடர்புபடுத்தி பொய்யான வழக்குகள் தொடுத்த கதை இன்னும் வேதனையானது. பாகிஸ்தானில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக அமீர் அந்நாட்டுக்கு ஒரு முறை சென்று வந்துள்ளார்.12.2.1997 இல் பாகிஸ்தான் சென்ற அவர் 13.2.1998 அன்று அங்கிருந்து நாடு திரும்பினார்.

பாகிஸ்தான் செல்லுமுன்,விசா பெறுவதற்காக, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனர் அலுவலகத்திற்கு அவர் சென்றிருந்தபோது, வெளியில் நின்று கொண்டிருந்த இந்திய உளவுப் பிரிவைச் சார்ந்த இரண்டு பேர்,அவரைச் சந்தித்து பாகிஸ்தானிலிருந்து சில ஆவனங்களைக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். உளவுத்துறையினர் கொடுப்பதாக வாக்களித்த சிறு தொகைக்கு ஆசைப்பட்டு, அமீரும் அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் வாக்களித்தபடி அவரால் ஆவணங்கள் கொண்டுவர இயலவில்லை. இத்தகவல்களை உளவுத்துறையினரிடமிருந்து தெரிந்துக் கொண்ட டெல்லி போலீஸார் அவரை இந்தக் குண்டுவெடிப்புச் சமபவங்களுடன் தொடர்புப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது சகோதரியைப் பார்ப்பதற்காகப் பாகிஸ்தான் சென்ற அவரை,அங்கு சென்று பயிற்சி பெற்று வந்தாகக் கதை கட்டினர்.

18 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அமீரின் மீது இன்னும் இரண்டு வழக்குகளே நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீருபணம் ஆனால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனையே கிடைக்கும். ஆனால், அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்து விட்டது.

தன்னை சந்திக்க வருபவர்களிடம் அமீர் கேட்கும் கேள்வி இதுதான் : “நான் செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டேன். ஹாஸிம்புராவில் பல முஸ்லிம்களைக் கொன்று குவித்த போலீஸ்காரர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு ஏன் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை?” அமீர் மட்டுமல்ல, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வியும் இதுதான்.

நன்றி : 7.2.2012 ‘ஹிந்து ஆங்கில நாளிதழ்
நன்றி : சேயன் இப்ராஹிம்
நன்றி : சமரசம்

32 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    கேட்கவே மிகவும் வேதனையாக இருக்கின்றது. இருப்பினும் இந்த உலக வாழ்க்கையானது, ஒருநாளின் சிறு பகுதி போலவே என்று இஸ்லாம் சொல்கின்றது. ஆகையால், அந்த சகோதரர் நம்பிக்கை தளராமல் வீறுநடை போட்டு நல்லதொரு வாழ்வை வாழ பிரார்த்திக்கின்றேன். இதற்கெல்லாம் சேர்த்து பன்மடங்கு நன்மைகளை மறுமையில் அவருக்கு இறைவன் தந்தருள பிரார்த்திப்போம்...

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  2. இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
    Vist Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.ஹைதர் அலி...

    ////////////ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு ஏன் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை?////////////

    நமது நாடு மதச்சார்பற்ற நாடு சகோ..!

    இன்ஷாஅல்லாஹ்,
    நிச்சயமாக மோடிக்கு உச்ச நீதி மன்றம் ஒரு நாள் தூக்குத்தண்டனை அளிக்கத்தான் போகுது..! அது உலக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படத்தான் போகுது..!
    அது நம் வலைப்பூவில் வீடியோ பதிவாக வரத்தான் போகுது..!

    நமது நாடு மதச்சார்பற்ற நாடு சகோ..!

    நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  4. சலாம் சகோ ஹைதர் அலி,

    செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பதை விட இந்த உலகத்தில் வேறு கொடுமை இல்லை.
    நல்ல பதிவிற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  5. இது ஒரு நன்றி இல்லாத சுயநலன் மிக்க உலகம் சகோ.
    இறுதி தீர்ப்புநாளில் நிச்சயம் அவர் இந்த கொடுமைக்கான கூலியை பெற்றுக் கொள்வார்.
    போஸ்ட் படிச்சவுடனே மனசு கணம் ஆயிருச்சு சகோ....

    ReplyDelete
  6. இது ஒரு நன்றி இல்லாத சுயநலன் மிக்க உலகம் சகோ.
    இறுதி தீர்ப்புநாளில் நிச்சயம் அவர் இந்த கொடுமைக்கான கூலியை பெற்றுக் கொள்வார்.
    போஸ்ட் படிச்சவுடனே மனசு கணம் ஆயிருச்சு சகோ....

    ReplyDelete
  7. அஸ்ஸலாம் அலைக்கும்.... சகோஸ்,
    என்னத்த சொல்ல !!! நாடு போற போக்க பார்த்தா
    சில நேரங்களில் மனசு உடஞ்சி போகுது , இருந்தாலும்
    என் நாட்டை மிகவும் நேசிக்கிறேன் ...
    இறைவன் இருக்கிறான், அவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் ,
    நிச்சயமாக பின்னாளில் தண்டனை கொடுப்பான் .......

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


    //இது பற்றிக் கூறும் போது “எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்,18 வயதான இளைஞர் இருபது இடங்களில் குண்டுகள் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது” என்கிறார்.//

    மதசார்பற்ற (?) நாட்டில் அமீரின் வழக்கறிஞரான திரு.என்.டி. பஞ்சோலியா போன்றவர்களின் கூற்று எதை மெய்பிக்கிறது என்பதை நடு நிலையாளர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்

    நல்ல பகிர்வுக்கு நன்றி மச்சான்...

    ReplyDelete
  9. வயிற்றெரிச்சலாக இருக்கிறது. அரசின் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க வேண்டும். இழப்பீடு பணம் முக்கியம் இல்லை என்றாலும் அந்த பணத்தை கைது செய்த போலீசை கொடுக்க வைக்க வேண்டும். வலி கொஞ்சமாவது தெரியும். மறுபடி இப்படி செய்ய யோசிப்பார்கள்.
    என்ன பண்ணினாலும் தண்டனை கிடையாது என்பதால் தான் மறுபடி மறுபடி இது போல செய்கிறார்கள்!

    ReplyDelete
  10. சலாம் அண்ணா!!

    சகோ அமீரின் நிலையை கேட்க ரொம்பவே வேதனையாக இருக்கிறது!

    செய்யாத ஒரு குற்றத்திற்காக இளமைகாலத்தை தொலைத்தது மட்டுமில்லாமல் தன் தந்தையும் இழந்து தாயும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு சொல்லமுடியாத துயரத்தில் வாழ்க்கையை கழிக்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லும் இந்த சமதர்மம் பேணும் அரசும்,சட்டமும்?

    வழக்கம் போல் கைது நிகழ்ச்சி பரபரப்பாகவும், விடுதலையான விஷயம் இருட்டடிக்கப்பட்டும் விட்டு இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் தான் என்ற முத்திரை குத்தும் பணியை ஜனநாயகத்தின் நான்காவது தூணான நடுநிலை ஊடகத்துறையும் செவ்வனே செய்திருக்கும்!!

    வாழ்க ஜனநாயகம்!

    ReplyDelete
  11. வேதனையான விடயம் நண்பா

    ReplyDelete
  12. வணக்கம் அண்ணா,

    பொலீஸின் போலிக் கேஸிற்காக..
    போலீஸாரின் ப்ரமோசனுக்காக
    பைலை குளோஸ் பண்ணும் நோக்கத்திற்காக நிரூபராதிகள் தண்டிக்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்! மனிதாபிமானமற்ற சில ஆப்பிசர்கள் செய்யும் செயலால் பல அன்பு உள்ளங்களின் வாழ்வு பாதிக்கப்படுகின்றது.

    எமது நாட்டு அரசுகள் சட்டங்கள் தொடர்பில் ஆதாரமற்று எவரையும் கைது செய்ய முடியாது எனும் இறுக்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்துவது தான் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்குரிய ஒரே வழி.

    ReplyDelete
  13. அஸ்ஸலாம் அலைக்கும்.... சகோ...

    படித்ததும் மனதுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. இதுபோல் நம்நாட்டில் நிறைய அமீர்கள் இருக்கிறார்கள். பொறுப்பில்லாத அந்த போலீஸார்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். ரோட்டில் நடந்து செல்லும் அப்பாவி முஸ்லிம்களிடம்தான் இவர்கள் அதிகாரத்தைக் காட்ட முடியும். பதவிகளில் இருந்து கொண்டு அநியாயம் செய்பவர்களுக்கு சாமரம் வீசுவார்கள். நீதித்துறையாவது இந்தளவு கடமையை செய்ததே. அதைச் செய்யவும் இவர்களுக்கு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஹ்..ம்.. என்னத்த சொல்ல...

    ReplyDelete
  14. @மனிதாபிமானி

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  15. @VANJOOR

    எதிர்ப்பை தெரிவிக்கலாம் அது அவர்களின் உரிமை அதற்காக கள்ளத்தனமாக செயல்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது

    ReplyDelete
  16. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நானும் எதிர்பார்க்கிறேன் சகோ

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. @சகோ
    சிராஜ்


    ///போஸ்ட் படிச்சவுடனே மனசு கணம் ஆயிருச்சு சகோ....///

    பத்திரிக்கையில் படிக்கும் போது எனக்கும் தான் சகோ ஒருவகையான விரக்தி கோபம் ஏற்பட்டது

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. @சகோ
    Nasar


    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. @தங்கை
    ஆமினா


    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    ////வழக்கம் போல் கைது நிகழ்ச்சி பரபரப்பாகவும், விடுதலையான விஷயம் இருட்டடிக்கப்பட்டும் விட்டு இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் தான் என்ற முத்திரை குத்தும் பணியை ஜனநாயகத்தின் நான்காவது தூணான நடுநிலை ஊடகத்துறையும் செவ்வனே செய்திருக்கும்!!///

    தீவிரவாதியின்னு கொட்டை எழுத்தில் எழுதுகின்ற ஊடகங்கள் இது போன்ற செய்திகளை பூதக்கண்ணாடி வைத்து படித்தால் தான் தெரியும் என்பது போல் ஏதோ ஒரு மூலையில் வேண்டா வெறுப்பாக செய்தி போடுவார்கள்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. @நண்பர்
    Sathish


    வருகைக்கும் வேதனையை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  21. @சகோ
    நிரூபன்



    ///எமது நாட்டு அரசுகள் சட்டங்கள் தொடர்பில் ஆதாரமற்று எவரையும் கைது செய்ய முடியாது எனும் இறுக்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்துவது தான் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்குரிய ஒரே வழி.///

    மிகச்சரியான தீர்வை சொன்னீர்கள் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை நல்லமனம் கொண்ட யாரலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. @சகோ
    enrenrum16


    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    ////நீதித்துறையாவது இந்தளவு கடமையை செய்ததே. அதைச் செய்யவும் இவர்களுக்கு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஹ்..ம்.. என்னத்த சொல்ல...///

    அதற்கு போலீஸ் தரப்பில் மேல்முறையீடு வழக்கு தொடுத்த கொடுமையை நினைத்தால் மனது வலிக்கிறது சகோ

    ReplyDelete
  23. படித்தவுடன் மனம் கனத்தது, இறைவன் அவருக்கு உதவி புரியட்டும்.

    ReplyDelete
  24. வாசிக்கவே கஸ்டமாயிருக்கு.அந்தக் அவர் வாழ்வேண்டிய காலம்.குடும்பாத்தாரின் நிலை.இதுபோல எத்தனை உறவுகள் நம் நாடுகளில் !

    ReplyDelete
  25. என்ன சொல்ல :(

    இது காவல் துறையின் தவறு. இதற்க்கு மத சாயம் பூச வேண்டாம் என்று சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன்.இதுபோல் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். குற்றம் ஒரு சிலருடையது....இது மதச்சார்புடைய நாடு எனில் அவரை விட்டே இருக்க மாட்டார்கள் என்பதை சகோதரர்கள் தயைகூர்ந்து சிந்திக்கவும்....

    //பாகிஸ்தான் செல்லுமுன்,விசா பெறுவதற்காக, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனர் அலுவலகத்திற்கு அவர் சென்றிருந்தபோது, வெளியில் நின்று கொண்டிருந்த இந்திய உளவுப் பிரிவைச் சார்ந்த இரண்டு பேர்,அவரைச் சந்தித்து பாகிஸ்தானிலிருந்து சில ஆவனங்களைக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். உளவுத்துறையினர் கொடுப்பதாக வாக்களித்த சிறு தொகைக்கு ஆசைப்பட்டு, அமீரும் அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்.//

    உளவுத்துறையும் அமீரும் செய்த முதல் தவறு இதுதான்....தன்னுடைய வேலைக்கு இவர்கள் எப்படி அமீரை நாடமுடியும்? அதற்க்கு ஏன் அமீர் ஒத்துக்கொண்டார்? ஒருவேளை இவர் ஒத்துக்கொள்ளாமல் போயிருந்தால் கூட அவருக்கு பிரச்சனை வந்திருக்கலாமோ?
    அது என்ன ஆவணங்கள்? ஒரு சராசரி மனிதனால் அப்படி என்ன ஆவணங்களை பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரமுடியும்? என்று பல கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    முறைப்படி தண்டிக்கவேண்டும் என்றால் முதலில் உளவுத்துரையினரைத்தான் தண்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. போலீசார் இதை பழி வாங்கும் நடவடிக்கையாக செய்துள்ளார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
    ஏதோ நீதித்துறை ஓரளவிற்கு ஒழுங்காக இருப்பதால் இவரை விடுதலை செய்துள்ளார்கள். நாடு போகும் போக்கை பார்த்தால் நாளை நீதித்துறையும் கெட்டுபோகும் அபாயம் உள்ளது.

    நீதி,நியாயம் , நேர்மை,மனிதாபிமானம் இவைகளுக்கு முக்கியத்துவம் தரும் கல்வியும், கலையும், தலைமையும் தான் நாட்டை காப்பாற்ற முடியும். வெறுப்பும், வன்முறையும் அகராதியிலிருந்தே நீக்கப்படவேண்டும். நாம் மக்கள் மனதில் விதைக்க வேண்டியது மதம் அல்ல மனிதம்.
    இறைவன் அமீருக்கு அருள்புரியட்டும் என்ற ஒரு வார்த்தையை தவிர நம்மால் என்ன சொல்ல முடியும். :(

    பல நாட்களுக்கு முன்பு எழுதிய பதிவு ஒன்று

    http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2011/06/blog-post_399.html

    உங்கள் மனிதாபிமானத்தை வரவேற்கிறேன் சகோ

    ReplyDelete
  26. வணக்கம் ஹைதர், பாவம் அந்த அன்பருக்கு ஆறுதல் சொல்லமட்டுமே எங்களால் முடியும். இதுபோன்று எத்தனை தமிழ் இளைஞர்கள் இலங்கை சிறைகளில் எதுவித குற்ற ஆதாரங்களும் இன்றி தடுப்புக்காவலில் பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அரசுகளின் தவறான கொள்கைகளிற்கு அப்பாவி மக்கள் பலவழிகளிலும் பலிக்கடாவாக இருப்பது உலகம் பூராவும் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது.

    ReplyDelete
  27. @சகோதர
    Syed Ibramsha


    உங்களின் வருகைக்கும் துஆவுக்கும் நன்றி

    ReplyDelete
  28. @சகோஹேமா

    பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தான் அந்த மனநிலை முழுமையாக புரியும் நீங்களும் போரினாலும் அடக்குமுறைகளினாலும் பாதிக்கப்பட்டு இருப்பதால் முழுமையாக புரிந்துக் கொள்கிறீர்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  29. @சகோதரர்R.Puratchimani

    ///இது காவல் துறையின் தவறு. இதற்க்கு மத சாயம் பூச வேண்டாம் என்று சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன்.///

    மதச்சாயம் பூசவில்லை சிறுபன்மை சமூகத்தை அநீதிக்குள்ளக்கின்ற எந்த சமூகமும் சிறந்த சமூகமில்லை

    பாகிஸ்தானில் சிறுபன்மை இந்துக்களை கொடுமைப்படுத்தினாலும் எங்களின்நிலைப்பாடு இதுதான்

    அழகிய புரிதலுக்கு நன்றி

    ReplyDelete
  30. @சகோதரர்அம்பலத்தார்

    ////அரசுகளின் தவறான கொள்கைகளிற்கு அப்பாவி மக்கள் பலவழிகளிலும் பலிக்கடாவாக இருப்பது உலகம் பூராவும் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது.////

    சரியாக சொன்னீர்கள் சகோதரரே

    வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  31. உலகுக்கு தெரிந்தது ஒரு அமீரும் ஒரு சகீலும்தான் . தெரியாதது எண்ணிக்கையில் அடங்காது. காவல்துறை பொய்வழ்க்கினால் எதை சாதிக்க நினைக்கிறது? புரியாத புதிர்!

    ReplyDelete
  32. @சகோதரர்மு.ஜபருல்லாஹ்


    ////காவல்துறை பொய்வழ்க்கினால் எதை சாதிக்க நினைக்கிறது? புரியாத புதிர்!////

    எவ்வளவு அமுக்கினாலும் பொய்யும் புரட்டும் வெளியே வந்தே தீரும்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete