Friday, January 20, 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்

‘தீனே இலாஹி’ இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு,எழுத்து வேண்டிகிடக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? சத்திய மார்க்கத்திற்கு எதிராக எழுந்த அசத்தியக் கொள்கைகள் எப்படித்தோற்று போயின என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியமானதல்லவா?
அக்பர்
அனைத்து வகையான ஊடகங்களும், இணையமும் சமகாலத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக தொடுக்கிற போரை விட பலமடங்கு அதிகமான சிலுவைப் போர்,தாத்தாரிய படையேடுப்பு, வாள், பேனாமுனை தாக்குதல்களை இஸ்லாம் சந்தித்து வென்று இன்றும் கலப்படமற்று நிற்கிறது. இதோ வரலாறு

முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக இந்து, முஸ்லிம் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. முகஸ்துதிபாடும் இந்து அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். “மகாத்மாவைக் கொண்ட ஓர் அரசன் பிறப்பான்;அவன் பசுவைக் காப்பான்” என்று கதை விட்டனர்.

நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் “அக்பரே வாக்களிப்பட்ட மஹ்தி” என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக “அக்பர் தான் இமாமுல் முஜ்தஹித்” என்றும் நீருபிக்க முனைந்தனர்.அரசவைப் பிரதானிகளில் ஒருவரான ‘சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன்’ என்றும் ‘தற்கால கலீஃபா’என்றும் ‘பூமியில் இறைவனின் அவதாரம்’ என்றும் பிரகடனப்படுத்தினார்.
ஆகவே இறைவனின் புதிய அவதாரம் அக்பர் புதிய மதத்தை தொற்றுவித்து அந்த மதத்துக்கு ‘தீனே இலாஹி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் அடிப்படைக் கொள்கை ‘லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீஃபத்துல்லாஹ்’ என்பதாகும். (அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.அக்பர் அவனது பிரதிநிதியாவார்) இப்புது மதத்தை தழுவியவர்கள் தம் ‘பாரம்பரிய மதமும் மூதாதையரிடமிருந்து கேட்டும் பார்த்தும் அறிந்துக் கொண்ட மார்க்கமாகிய இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் ‘தீனே இலாஹி’யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும்.

இம்மதத்தைத் தழுவியவர்கள் ‘சேலர்’ என அழைக்கப்பட்டனர். முகமன் கூறும் முறையும் மாற்றப் பட்டது.( ‘அஸ்ஸலாமு அலைக்கும்’என்பதற்கு பதில்) ஒருவர் ‘அல்லாஹ்’ என்று கூற மற்றவர் பதிலுக்கு ‘ஜல்லா ஜலாலுஹு’ என்பார்.இச்சொற்கள்,சக்கரவர்த்தியின் ஜலாலுதீன் அக்பர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும்.

சேலர்கள் தம் தலைப்பாகைகளில் அக்பரின் உருவத்தை ஒத்த உருவங்களை அணிமாறு பணிக்கப்பட்டனர்.அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் அரசனை அதிகாலையில் தரிசிப்பதைக் கொண்டு மக்கள் இதனை நிறைவேற்றினர்.அரசனின் திருமுன் வருவதற்கு யாருக்காவது அனுமதி கிடைத்துவிட்டால் முதலாவதாக அவர் அரசருக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.அவரே தம் பிராத்தனைகளையும் வேண்டுதல்களையும் நிரைவேற்றுவார் போல ஆலிம்களும்,சூஃபிகளும் கூட அரசனுக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.

இஸ்லாத்துக்கு முரணான இச்செயலை அவர்கள், ‘ஸஜ்தா தஹிய்யா’ (கண்ணியப்படுத்துவதற்காக காலில் விழுதல் ஸஜ்தா) ‘ஸமீன் போஸீ’ (பூமியை முத்தமிடல்) எனும் சொற்களைக் கொண்டு மறைக்க முயற்சி செய்தனர். தீ வழிபாடு பாரசீக ஸொரஸ்திரியர்களிடமிருந்து இரவல் பெறப் பட்டு, எப்போழுதும் அரசமாளிகையில் தீ எரிந்துக் கொண்டிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மாலைப் பொழுது கிரியைகளுக்காக விளக்குகளும் மெழுகுத்திரிகளும் ஏற்றப்படும் போது அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்யும் முறைமை உருவாக்கப்பட்டது.
‘மணி அடித்தல்’, ‘மும்மூர்த்திகளை வழிபடல்’ போன்ற சில கிரியைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து இரவலாகப் பெறப்பட்டன.எனினும் இந்து மதமே அதிக ஆதரவைப் பெற்றது. ஏனெனில் அதுவே நாட்டின் பெரும்பான்மை மக்களது மதம் என்கிற அரசியல் காரணம் இருந்தது.சாம்ராஜ்யத்தை ஆள்வதை உறுதிப்படுத்துவதற்கு இந்து மதத்துக்கு அதிக ஆதரவு அளிப்பது அவசியம் ஆயிற்று.

பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அரசமாளிகையில் ‘ஹவான்’ முறையாக நடைபெற்றது. அன்றாடம் நான்கு வேளை சூரிய வழிபாடு இடம்பெற்றது. சூரியனின் ஆயிரம் பெயர்களும் பக்தி சிரத்தையோடு ஜெபிக்கப்பட்டன.யாராவது சூரியனின் ஒரு பெயரைச் சொன்னால்,அதை கேட்டவர்கள் “அதன் புகழ் ஓங்குக” என்பர் மறுபிறப்புக் கொள்கை முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிராமணியத்திலிருந்து வேறு பல நம்பிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.இவ்வாறாகத்தான் பிற மதங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டது.

அதேவேளை அக்பரும் அரசவைப் பிரதானிகளும் இஸ்லாத்தைக் கேவலமாகவும் இழிவாகவுமே நடத்தினர். அஹ்மத்,முஹம்மத் போன்ற பெயர்கள்கூட வழக்கொழிக்கப்பட்டு, இச்சொற்களைக் கொண்ட பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டன.பாரசீக மொழியில் பெரோஸ்,பைரோஸ் போன்ற பெயர்கள் சூட்டப் பட்டன. உலகாசை பிடித்த ஆலிம்கள் தம் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தும் இடங்களில் வாழ்த்துச் சொற்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை கைவிட்டனர். சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலின் அடையாளங்கள் காணப்படுவதாகக் கூறும் அளவுக்கு துரோகிகளாக மாறினர் (இறைவன் மன்னித்தருள்வானாக!).

அரசனின் மாளிகை வளாகத்திற்குள் யாரும் தொழுகை நடத்தத் துணியவில்லை. அக்பரின் நம்பிக்கைக்குரிய அரசவைப் பிரதானியான அபுல் பஸல் தொழுகை, நோன்பு,ஹஜ் முதலிய கடமைகளை அவமதித்து அவற்றை இழித்துரைத்தார். அரசவைக் கவிஞர்கள் இக்கடமைகளைக் கிண்டல் செய்து புனைந்த கவிதைகளுக்கு உயர்ந்த சன்மானங்கள் வழங்கப்பட்டன. நேர்மையான ஆலிம்கள் உண்மையான இஸ்லாத்தை எடுத்துரைத்தால் அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால்,அத்தகைய ஆலிம்களுக்கு ‘ஃபக்கீஹ்’ (கவனிக்கத் தகாத முட்டாள்) எனப் பட்டம் சூட்டப்பட்டது.
(Akbar holds a religious assembly of different faiths in the Ibadat Khana in Fatehpur Sikri.)
எல்லா மதங்களையும் நுணுகி ஆராய்வதற்காக ஓர் அரசாணை மூலம்நாற்பது பேரைக் கொண்ட ஒரு சபை நியமிக்கப்பட்டது. இவர்கள் ஏனையமதங்களை ஆராயும் பொழுது மிக்க சகிப்புத் தன்மையோடும் கண்ணியமாகவும் நடந்துக் கொள்வர் என்றும், இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் வெளிப்படையாகவே அவமதிப்பர்கள்.இஸ்லாத்தை ஆதரிப்பவர் எதுவும் சொல்ல முற்பட்டால் உடனே அவர் அடக்கப்பட்டு விடுவார்.நடைமுறையில் இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன;அல்லது வெட்கக் கேடான முறையில் திருத்தப் பட்டன.

வட்டி,சூதாட்டம்,மதுவருந்துதல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ் பண்டிகையின்போது மதுவருந்துதல் கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக் கருதப்பட்டது.அதிகாலையில் பன்றியின் முகத்தில் விழிப்பது நற்சகுனத்துக்குரிய செயலாகக் கொள்ளும் அளவுக்குப் பன்றி புனிதத்தன்மை பெற்றது.

இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன;அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்று யாரேனும் வற்புறுத்தினால்,அவ்வுடலின் கால்களைப் புதைகுழியில்‘கிப்லா’வுக்கு நேராக வைக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். சூஃபிஸத்தை ‘தீனே இலாஹி’யின்ஆதாரவு மதம் என்று ஆன்மீகத் தலைவர்கள் மற்றொரு நோயையும் மக்களிடையே பரவச் செய்தனர்
அவர்கள் கிரேக்கத்தத்துவங்களையும் கடுத்துறவு கோட்பாடுகளையும்,
வேதாந்தத்தையும் கலந்து புதுமையான,தத்துவரீதியான சூஃபித்துவக் கொள்கை ஒன்றை தோற்றுவித்தனர். அது எவ்வகையிலும் இஸ்லாமிய ஒழுக்க முறைக்கும் நம்பிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கவில்லை. இந்த சூஃபித்துவ அமைப்புகளுக்கும் ஷரீஅத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலை உருவாகி சூஃபிகள் ஷரியத்தை பின்பற்ற தேவையில்லை.என்றார்கள்.

இன்னும் விரிவாக “தீனே இலாஹி” என்ற மதத்தின் ஒரு சில அபத்த கொள்கைகளையும்.இறைவன் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலரை மேதைகளை உருவாக்குவான் அப்படி அந்த காலப் அப்குதியில் தோன்றி “தீனே இலாஹி” கொள்கையை எதிர் கொண்டு அழித்து சரியான மார்க்கத்தை நிலைநாட்டிய மார்க்க அறிஞர், மேதை 
‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’ அவர்களைப் பற்றியும் அடுத்த தொடரில்.

(இறைநாடினால் தொடரும்)

20 comments:

 1. சலாம். மார்க்கத்தின் எதிரியாய் அக்பர் செய்த மாபாதகங்களை விரிவாய் சொன்னீர்கள். அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன் (இறைவன் நாடினால்)

  ReplyDelete
 2. சலாம். மார்க்கத்தின் எதிரியாய் அக்பர் செய்த மாபாதகங்களை விரிவாய் சொன்னீர்கள். அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன் (இறைவன் நாடினால்)

  ReplyDelete
 3. நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!

  சகோ.ஹைதர் அலி,
  என்ன இது..?
  RSS சங் பரிவார ஹிந்துத்துவாக்களுக்கு மிகவும் பிடித்த அரசரை இப்படி போட்டு கிழிக்கிறீர்களே..?

  அந்த 'நடுநிலை முக்காடு'களிடம் வசமாக வாங்கி கட்டிக்கொள்ள போகிறீர்கள் பாருங்கள்.

  ReplyDelete
 4. இன்ஷா அல்லாஹ், எதிர்ப்பார்க்கிறேன்,

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஹைதர் அலி,மன்னர் அக்பர் "தீன் இலாஹி" என்ற புதிய மதத்தை நிறுவினார் என்பது மட்டும்தான் நான் தெரிந்துவைத்துள்ளேன்.எல்லா மதங்களைப்பற்றியும் ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன்.தங்கள் கட்டுரையின் வாயிலாகத்தான் முதன் முறையாக இந்த மதத்தையும்,மதத்தின் கோட்பாடுகள் பற்றிய செய்திகளையும் தெரிந்துகொண்டேன்.செய்தி பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.தங்களின் அடுத்த (‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’ )கட்டுரையை விரைவாக இடுமாறு கேட்டுகொள்கிறேன்.

  ReplyDelete
 6. அக்பர் பற்றி இதுவரை தெரியாத விடயங்களை தெரிந்து கொண்டேன். பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  படிக்கவே கேவலமா இருக்கு இப்படியும் ஒரு அரசரான்னு . மனித நேயம் வேறு மார்க்க சட்டங்கள் வேறு என்பது தெரியாமலா இருந்திருப்பார் :-(

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  ஹைதர், நல்ல பகிர்வை தந்தற்கு நன்றிகள். மன்னர் அக்பர் இந்தளவுக்கு மார்க்கத்திற்கு எதிராக இப்படி நடந்துள்ளது வருந்தத்தக்கது. இறைவன் அவரை மன்னித்து அருள்பாலிப்பானாக.

  இமாம் ஷேக் அஹ்மத் ஸிர்ஹிந்த் அவர்களை பற்றி விரைவாக எழுதுங்கள்.

  இன்ஷா அல்லாஹ், இமாம் ஔரங்கசீப் (ரஹ்) அவர்களை பற்றியும் முடிந்தால் எழுதுங்கள். நன்றி.

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  மாஷா அல்லாஹ் அருமையான பதிவு! ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்த அக்பருக்கும், நீங்கள் காட்டிக் கொடுக்கும் அக்பருக்கும் ஏக வித்தியாசங்கள்! நிறைய விஷயங்கள் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக!

  //நேர்மையான ஆலிம்கள் உண்மையான இஸ்லாத்தை எடுத்துரைத்தால் அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால்,அத்தகைய ஆலிம்களுக்கு ‘ஃபக்கீஹ்’ (கவனிக்கத் தகாத முட்டாள்) எனப் பட்டம் சூட்டப்பட்டது.//

  அதாவது இப்போது ஏகத்துவவாதிகளை நஜாதி என்றும் வஹ்ஹாபி என்றும் அதன் பொருள் அறியாமல் சொல்கிறார்களே சில அறிவீனர்கள் அவர்களை போலவே அக்பரின் அரசாட்சியிலும் இருந்துள்ளனர் போலும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

  ReplyDelete
 10. சிறந்த பதிவு! வரலாற்று நிகழ்ச்சிகளை நாம் பட்டியலிடும்போது அதற்கான ஆதார நூல்களையும் சேர்த்தே வெளியிடுவது பதிவை மேலும் மெருகூட்டும்.

  நனறி!

  ReplyDelete
 11. ஆர்எஸ்எஸ் களால் போற்றப்படும் முகலாய மன்னர் அக்பர் என்பதிலிருந்தே அவரைப் பற்றி உணர முடியும். எனினும் தகவல்கள் புதியவை. ஆதாரங்களுக்கான சுட்டியையும் கொடுத்தால் கூடுதலாக அறிய முயற்சிப்பவர்களுக்கு உதவியாக அமையும். ஜஸாகல்லாஹ்

  ReplyDelete
 12. பசுவின் புத்திரர்கள்!
  பசுவை நாம் தெய்வமென்று மதிக்கிறோம். முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் குடி கொண்டிருப்பதை நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
  நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

  ஆனால் நமது நாட்டில் இன்று மாமிசத்திற்காக தினசரி ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு துணிச்சலாக பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

  இந்தப் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டில் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களைக் கொல்வோர்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.

  பசுக்களைக் கொல்வதற்காக வாகனங்களில் ஏற்றிச் செல்வோர்; பசுக்களை வாங்கி விற்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மத்தியப் பிரதேச அரசை மனமாரப் பாராட்டுகிறோம் - இப்படி ஒரு தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் (27.1.2012) எழுதுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

  பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.
  இதன் மூலம் இந்து மதவாதச் சிந்தனையுடன்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை! பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

  உணவுப் பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் அரசு தலையிடுவது என்பது தவறானது.
  உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம் பெற்றுள்ளது. கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே!
  சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்தி வருவதைத் தட்டிப் பறிக்க இவர்கள் யார்?
  செத்துப் போன பசு மாட்டின் தோலை உரித்த அரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட தோழர்களைப் படுகொலை செய்தவர்கள் இந்தச் சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
  மனிதர்களைவிட செத்துப்போன பசுவின் புனிதம் இவர்களுக்கு முக்கியமானது என்பதிலிருந்தே - இவர்களுக்கு மனிதப் பண்பு அறவே கிடையாது என்பது விளங்கிடவில்லையா?


  பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

  மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா?
  எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிடலாமா?
  சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?

  ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார். மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

  பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!
  பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக் கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர். ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர். அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? என்று கேலியாகச் சொன்னார்.


  மாட்டுக்குப் பிறந்தவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மத்தியப் பிரதேச சட்டத்தைப் பார்த்தால் தெரிகிறதே!
  ------------------- "விடுதலை” தலையங்கம் 21-1-2012

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஹைதர் அலி,மன்னர் அக்பர் "தீன் இலாஹி" என்ற புதிய மதத்தை நிறுவினார் என்பது மட்டும்தான் நான் தெரிந்துவைத்துள்ளேன்.எல்லா மதங்களைப்பற்றியும் ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன்.தங்கள் கட்டுரையின் வாயிலாகத்தான் முதன் முறையாக இந்த மதத்தையும்,மதத்தின் கோட்பாடுகள் பற்றிய செய்திகளையும் தெரிந்துகொண்டேன்.செய்தி பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.தங்களின் அடுத்த (‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’ )கட்டுரையை விரைவாக இடுமாறு கேட்டுகொள்கிறேன்.//
  ethe than enathu karuthum

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மாஷா அல்லாஹ். நிறைய தகவல்கள் கொண்ட கட்டுரை. இங்கு சிலர் சொல்லியுள்ளது போல, இந்த தகவல்களை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற ஆதார நூல்களையும் கொடுத்தால் மூலத்திற்கே சென்று அறிய விரும்புபவர்களுக்கு உபயோகமாக இருக்கும். பரிசீலனை செய்யுங்கள்.

  இஸ்லாத்தை பொருத்தவரை, குரான் அதன் மூல மொழியில் மற்றும் அதனை மனனம் செய்த ஒருவர் இவ்வுலகில் இருக்கும் வரையிலும் இந்த தீனுல் இலாஹி போன்ற மதங்கள் நிலைத்து நிற்க முடியாது. காரணம், மூலம் அதன் ஒரிஜினல் வடிவில் இருக்கும் போது, மக்கள் அங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம். ஆகையால் இது போன்ற குழப்படி கொள்கைகள் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியாது.

  இன்ஷா அல்லாஹ், இதே நிலைதான் தர்காகளுக்கும். எதிர்க்காலத்தில், நம் சந்ததியினர், தர்கா போன்ற முட்டாள்தனங்கள் முன் காலத்தில் அரங்கேறியதாக படிப்பார்கள். :)

  வஸ்ஸலாம்,

  ReplyDelete
 15. நல்ல அருமையான பதிவு சகோ.இந்தப் பதிவும் சில தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கிறேன்.

  மகா துரோகி அக்பர்
  http://tamilkhilafa.blogspot.com/2011/06/blog-post_4187.html

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  நான் படிக்கும் காலத்தே... மொகலாய மன்னர்களை கொடுரராக, மத வெறி பிடித்தவராக, சகிப்புத்தன்மையற்றவராக இன்னும் கொள்ளைக்காரராக உருவகப்படுத்தப்பட்டே வரலாறுகள் அச்சேறப்பட்டன.. ஆனால் அக்பர் தவிர.,

  தீன் இலாஹி! என்ற ஒரு மத உருவாக்கம் மட்டுமே அவரது பிரதான ஹீரோயிஸத்து முக்கியக் காரணமாக இருக்கலாம் என்பதை இந்த ஆக்கம் வாயிலாக அறிய தந்தமைக்கு நன்றி ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

  இதைக்குறித்த செய்திகளை இன்னும் எதிர்ப்பார்க்கிறோம்
  இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஹைதர்,
  RSS மற்றும் பார்ப்பனர்கள் அக்பரை உயர்த்தியும், ஒளரங்கசீப் அவர்களை தாழ்த்தியும் பரப்புரைகளை பரப்பிய மர்மம் உங்கள் பதிவை படித்தபின் அழகாக விளங்கியது.தொடருங்கள்!

  ReplyDelete
 18. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 19. சலாம் சகோ ஹைதர் அலி,

  தீன் இலாஹி என்ற ஒரு மதத்தை அக்பர் ஆரம்பித்தார், அதில் 17 நபர்கள் மட்டுமே இணைந்தார்கள் என்ற அளவில் தான் எனக்கு தெரியும். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். பஹிர்விர்க்கு நன்றி.

  ReplyDelete
 20. அறிந்தும் அறியாத தகவல்கள்.. ரொமபவும் நன்றி...
  அது போல் தாத்தாரியர் படையெடுப்பு பற்றியும் விபரமாக எழுதினால் அறியார்களும் அறிய அரிய வாய்ப்பாக அமையும்.
  நன்றி
  அன்ஸார்

  ReplyDelete