Monday, January 9, 2012

ஒரு பெண்ணின் கதை...!

“எதற்கு வந்தீர்கள்? என்னுடைய படத்தை எடுத்து அச்சடிக்கவா? என்னிடம் என்ன இருக்கிறது? பசி, வறுமை,பட்டிணி,குருட்டு கணவன்,நோஞ்சான் குழந்தைகள்-என்னிடம் வேறு என்ன இருக்கிறது?

வழி விடுங்கள் உங்கள் படமும் வேண்டாம்;ஒரு மண்ணும் வேண்டாம்”

கழுத்து நரம்பு புடைக்க கண்களில் கண்ணீர் மின்ன,கைகளை குவித்துக் கொண்டு,புகைப்படக்காரரைப் பார்த்ததும் பொரிந்து தள்ளுகிறார்,அந்தப் பெண்.பத்திரிக்கை,போட்டோ என்றதும் எள்ளும் கொள்ளுமாய் வெடிக்கிறார்.

ஏன் இந்த கோபம்?

காரணம் மிகவும் சோகமானது.இதயத்தைப் பிழியக் கூடியது.அந்த பெண்ணின் கதையைக் கேளுங்கள்.

அவளுடைய பெயர் பனிதா வயது 42.இன்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பு 1985-ல் ரூ 40க்கு விற்கப்பட்ட சிறுமிதான் இந்த பனிதா.

நாற்பது ரூபாய்க்கு விற்கப்பட்டார்,பனிதா.தேசத்தையே உலுக்கிய செய்தி அது.அபலையின் புகைப்படம் வாரத பத்திரிகையோ,நாளிதழோ கிடையாது.பனிதாவின் ‘விற்பனையை’க் கேள்விப்பட்ட பிரதர் ராஜீவ் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு மனைவி சோனியாவுடன் ஹெலிகாப்டரில் பறந்து வந்தார்.

வெகுசீக்கிரமே ஒரிஸா மாநிலத்தின் காலாஹண்டி மாவட்டத்தில் கஹ்ரியர் பிளாக்கில் இருக்கும் அன்லாபலி கிராமம்(அதுதான் பனிதாவின் கிராமம்) அரசியல் தலைவர்கள்,அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களின் சுற்றுலாத்தலமாகி விட்டது.
பனிதாவைப் பற்றி 1985ல் பத்திரிக்கை முகப்பு செய்தி (பனிதாவின் படம்)


ஆண்டுகள் உருண்டன.பனிதாவை அரசியல் உலகமும் பத்திரிக்கை உலகமும் மறந்து விட்டது. பனிதாவுடன் ஒட்டிக் கொண்ட வறுமையும் பசியும் தான் அவளை விட்டுப் பிரியவில்லை.இன்றும் ஒட்டுக் குடிசையில் நோஞ்சான் குழந்தைகளுடன் காலம் தள்ளுகிறார்,பனிதா.


இதயத்தை பிழியும் இன்னொரு தகவலும் உண்டு 28 ஆண்டுகளுக்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பனிதா இன்று தன்னுடைய கடைக்குட்டி மகளை விற்றுவிட முடிவு செய்துள்ளராம்.


அவர் முடிவை மாற்றிக் கொண்டாரா? பெற்றெடுத்த பிஞ்சை விற்று விட்டாரா?


யாருக்கு இருக்கிறது அக்கறை?

8 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் அண்ணன் ஹைதர் அலி,
  பல்லாயிரக்கணக்கான பனிதாக்கள் இந்த தேசம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். வல்லரசு கனவு கானும் நாமும் நம்முடைய ஆட்சியாளர்களும் இத்தகைய பனிதாக்களுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறோம்? வறுமையை ஒழிப்போம் என சுதந்திரம் அடைந்தவுடன் ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் முழங்கினார்கள். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் இதே முழக்கத்தை முன்வைக்கிறார்கள் ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள். ஒவ்வொரு வருடமும் ஒரே முழக்கத்தை வெவ்வேறு பிரதமர்கள் செங்கோட்டையில் முழங்குகிறார்கள்.

  இன்றைய செய்தி இதோ : //உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. // சொல்லவே வெட்ககேடாக இருக்கிறது சகோதரரே. தேவையான வளம் இங்கேயிருக்கிறது. ஆனால் அதை சரியாக திட்டமிட்டு பகிர்வதற்கான சரியான நெறிமுறைகள் நம் அரசிடம் இல்லை.

  ReplyDelete
 2. மனதைப் பிசையும் நிகழ்ச்சி!

  ReplyDelete
 3. வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 4. வல்லரசு கனவு காண்பதை விட்டு விட்டு ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை இப்படி பணிதாக்கள் போன்றோர்களுக்கு உதவலாம். ஆனா இதை சொன்னால் தேச துரோகி ஆகிவிடுவீர்கள்..;-(

  ReplyDelete
 5. அருமையான இடுகை.

  மக்களுக்கு இலவச, sorry, விலையில்லா பொருட்கள் கொடுப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் உயராது என்ற விஷயத்தை அரசியல்வாதிகள் தெரிந்து மக்களின் வாழ்வாதார உதவிகளை செய்து கொடுத்தாலே மக்கள் வறுமையிலிருந்து வெளியே வருவார்கள்.

  வல்லரசாக மாற்றுவதால் வறுமை ஓழியாது. பனிதாவை போல் பலர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

  விழிக்குமா தேசம், யோசிப்பார்களா தலீவர்கள்??

  ReplyDelete
 6. @காட்டான்

  /* ஆனா இதை சொன்னால் தேச துரோகி ஆகிவிடுவீர்கள். */

  அதெல்லாம் ஒன்னும் தேசதுரோகி ஆக மாட்டோம் காட்டான் அண்ணன்.. இங்க தேசியம் பேசும் 95 % பேர்கள் ஏதோ ஒரு விதத்தில் இந்திய அரசை ஏமாற்றும் பிராடுகள்....

  இவர்கள் தேச பக்தியெல்லாம்.. பாகிஸ்தானை எதிர்ப்பது, கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்பது.. இவ்வளவு தான்.... இதைத் தாண்டி எதுவுமே இல்லை...

  ReplyDelete
 7. நாட்டில பாதி பேர் சோறு இல்லாம செத்துகிட்டு இருக்கானுக... வல்லரசு ஆகுறாங்களாம்.... கிழிச்சோம்....

  வல்லரசுன்னா என்ன?? பாகிஸ்தான், பங்களாதேஷ் அல்லது இலங்கைய போரில் ஜெயிப்பதா??? இது தான் நம்மனால முடியும்... சீனா, அமெரிக்கா பக்கம் கூட போக முடியாது.... போருன்னு வந்தா ஒரு வாரத்தில் நம்மல டெமாலிஷ் பண்ணிடுவானுக...அப்புறம் எந்திரிக்க 200 வருஷம் ஆகும்.... வல்லரசு ஆகுறாய்ங்களாம்.... ஒழுஞ்கா இருக்கவனுக்கு சோறும், இருக்க இடமும் கொடுங்கப்பா...அது போதும்....

  வல்லரசு ஆவாம்ணு பேசுறவய்ங்கள பாக்கைல கடுப்பா இருக்கு... ஒரு இழவும் தெரியாத முட்டாள்கள்....

  ReplyDelete