Monday, December 27, 2010

மலேசியா கள்ளக்குடியேறி

         மலேசியா என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது உயர்ந்த கட்டிடங்கள் அகலமான சாலைகளும் வித விதமான கார்களும் பூங்காக்களும் உங்கள் நினைவில் வந்து மறைகிறதா உங்களுக்கு மட்டுமல்ல நம்ம குத்துப்பாடல்களின் நாயகன் விஜய்க்குகூட அதுதான் நினைவுக்கு வருகிறதாம்  
video
                        இந்த வீடியோவை பாருங்கள் 
மக்களுக்கு ஜனரஞ்சக மீடியாக்களும் சினி விழா நடத்துகிறோம் என்ற பெயரில் சினி கூத்தாடிகளும் மேனா மினிக்கிகளும் நமக்கு அது போன்ற மலேசியாவைத்தான் பொறுப்போடு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் (வீடியோவை பார்த்தீர்களா விஜய் பேசும்போது வயசுப்புள்ளைகே பக்கம் கேமராவ திருப்பி விஜயை உத்து உத்து பாத்து ஜொள்ளு விடுவதை எவ்வளவு அருமையாக சன் டிவி மாமா பயல்க படம் பிடித்து இருக்கிறார்கள் இப்புடித்தான் சன் டிவி பிரபலமானது)
மலேசியாவின் மறுபக்கத்தை எந்த பொறுப்புள்ள மீடியாக்களும் வெளிக் கொண்டு வந்தது கிடையாது இது அவர்களுக்கு தேவையற்றது
உங்களுக்கு தெரியுமா? 10 இலட்சம் இந்திய தொழிலாளிகள் 20 இலட்சம் இந்தோனேஷியா தொழிலாளிகள் உயிர்க்குக்கூட எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் கள்ளக்குடியேறியாக பயந்து பயந்து வாழ்ந்து மலேசியாவை ஜொலிக்க வைத்து ஒவ்வாரு கட்டிடங்களையும் உயர வைத்து விட்டு போலீஸில் பிடிபட்டு வாழ்க்கையை தொலைத்து ஊர் வந்து சேர்கிறார்கள்
video
                 இந்த அவலமான வீடியோவை பாருங்கள்         
1999ல் இருந்து 2001 வரை இரண்டு வருடங்கள் கள்ளகுடியேறியாக எப்ப புடிப்பாய்ங்கேன்னு தெரியாம பயந்து போலீஸை கண்டு ஒளிந்து சக கட்டிட தொழிலாளிகளோடு ரத்தமும் சதையுமாக நான் வாழ்ந்திருக்கிறேன் மலேசியாவின் பெரிய கன்ஷேக்ஸன் கம்பேனியான
I.J.M கம்பேனியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து இறுதியில்  2001ல் போலீஸில் பிடிபட்டு (நெகிரி சிம்பிளான்) 9 நகரங்கள் என்று சொல்லப்படுகிற ஊரியுள்ள 30 அடி அகலம் 100 அடி நீளம் கொண்ட மரப்பலகையான சிறையில் 600 பேர்களோடு 1 மாத சித்ரவதைகளை அனுபவித்து சுகாதர கேட்டின் விளைவாக உடம்பு முழுவதும் அரிப்பு நோய் ஏற்பட்டு மெலிந்து ஊர் வந்து சேர்ந்தேன். வீடியோவில் பார்த்தீர்களா எவ்வளவு அந்த சிறை சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது சாப்பட்டை பார்த்தீர்களா அந்த நைஜீரியா நண்பர் சொல்வதுபோல் நாய் கூட அந்த உணவை திங்காது. அவர்கள் வைக்கிற அந்த ஒரு கை சோறு தான் சிறையில் எங்களின் ஒருநாள் உணவு காலையில் பிளாக் டீ இரண்டு பிஸ்கட் மதியம் இந்த அவித்த ஒரு கை சோறு பசியின் கரணமாக அதையும் விடாமால் தின்று உயிர் வாழ்ந்தோம் 
நானாவது பரவயில்லை தனி ஆளு குடும்பத்தோட கள்ளக்குடியேறியாக பிடிப்பட்டவர்கள் இருக்கிறார்களஅவர்களின் சூழலை புரிந்துக்கொள்ள அதே நிலையில் வாழக்கூடிய இன்னோரு ஈழ தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சொல்லுவதை கேளுங்கள் 
video
               இந்த பரிதாபமான வீடியோவையும் பாருங்கள்
இவர்களை போன்று இரண்டு வருடங்கள் மலேசியாவின் மறுபக்க வாழ்க்கையையும் உழைத்ததை தவிர எந்த பாவமும் செய்யாத அப்பாவி தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் பற்றி இன்னும் அடுத்த தொடரில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

எரிந்து கொண்டிருக்கும் உள்ளத்தோடும் உணர்வோடும் வாழும் வாழ்க்கை,
எந்த உனர்ச்சியும் இல்லாமல் செத்துப் போன இதயத்தோடு வாழும்
வாழ்க்கையை விடச் சிறந்தது; தூய்மையானது.


47 comments:

 1. அருமையான கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே....

  ReplyDelete
 2. மலேசியாவில் இருக்கும் போது அத்தா இது மாதிரி 1 வாரம் பிடிபட்டதாகவும் ஆனா மரியாதையாக நடத்தினார்கள் என தான் சொல்வார். அப்போதே அந்த நாட்டின் மேல் அதிக பாசம் வரும். இது நடந்தது 1989ல. ஆனா உங்க கதையை கேட்டா மனது பாரமாகிரது!!

  தொடர்ந்து எழுதுங்க சகோ

  ReplyDelete
 3. //"மலேசியா கள்ளக்குடியேறி"//

  தலைப்பிலேயே பதில் இருக்கிறது.தவறு என்று தெரிந்தே செய்துவிட்டு பின் எதற்கு ஒப்பாரி.

  ReplyDelete
 4. @ரஹீம் கஸாலி
  நன்றி நண்பரே
  உங்களுடைய முதல் வருகைக்கும்
  ஆதரவுக்கும்

  ReplyDelete
 5. சகோ ஆமினா அவர்களுக்கு
  நன்றி சகோ

  ReplyDelete
 6. @Dharan அவர்களுக்கு
  //தலைப்பிலேயே பதில் இருக்கிறது.தவறு என்று தெரிந்தே செய்துவிட்டு பின் எதற்கு ஒப்பாரி.//

  தலைப்பு அப்படி வைத்ததிற்கு வேறு கரணங்கள் இருக்க கூடாதா?

  மலேசியா நண்பன் பத்திரிக்கையில் அடிக்கடி இந்த தலைப்பில் செய்தி வரும் அதே ஸ்டைலில் தலைப்பு வைத்தேன்
  மற்றபடி எல்லாரும் தெரிஞ்கிட்டே வர்ரவங்க கேடையாது
  அந்த குடும்பத்தினர் உட்பட

  ReplyDelete
 7. மலேசியா 'உயர்ந்திருப்பதின்' பின்னே உள்ள சுரண்டலை ஒரு வாழ்க்கை அனுபவமாக விளக்கும் தொடருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. நண்பர் ஹைதர் அலி,

  சிறந்ததொரு பணியை தொடங்கியிருக்கிறீர்கள். மலேஷியா மட்டுமல்ல பணக்கார நாடுகள் அனைத்திலும் திரையை விலக்கிப் பார்த்தால் இதுபோன்ற கொடூரங்களே நிறைந்திருப்பதைக் காணலாம். நீங்கள் இரட்டைக் கோபுரங்களின் உயரத்தைவிட அதை உயர்த்தியவர்களின் அவலங்களை காட்சிப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்திருக்கிறீர்கள். உங்களையும், உங்கள் எழுத்தையும் வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

  செங்கொடி

  ReplyDelete
 9. நண்பர் வினவு அவர்களுக்கு
  நன்றி

  ReplyDelete
 10. நண்பர் செங்கொடி அவர்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 11. ஹைதர் அலி, தொடர்ந்து எழுதுங்கள். எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 12. தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக, சகோதரர் ஹைதர் அலி.

  தாங்கள் அனுபவித்த உண்மைச்சம்பவங்களை படித்தபோது மனது கனத்தது. என்னதான் சட்டத்திற்கு புறம்பாக வந்திருந்தாலும் இப்படி இதயமே இல்லாமல் மலேசிய அரசு கைதிகளை கொடுமை படுத்தி இருந்திருக்கக்கூடாது.

  தங்களை ஒரு இஸ்லாமிய நாடு என்று சொல்லிக்கொள்வதில் எந்த பெருமையோ நன்மையோ இல்லை. இஸ்லாம் சொன்னபடி கைதிகளை கண்ணியத்துடன் நடத்துவதிலே இறையச்சம் இன்றி பாவம் இழைத்திருக்கிறது. இது கண்டனத்துக்குரியது & தண்டனைக்குறியது.

  இந்த கொடுமையை வலையேற்றி அம்பலப்படுத்திய உங்கள் இடுகை மற்றவர்க்கும் பயனுள்ளது.

  ReplyDelete
 13. நன்பர் குருத்து அவர்களுக்கு
  கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 14. சகோதரர்
  முஹம்மத் ஆஷிக்


  ///தங்களை ஒரு இஸ்லாமிய நாடு என்று சொல்லிக்கொள்வதில் எந்த பெருமையோ நன்மையோ இல்லை. இஸ்லாம் சொன்னபடி கைதிகளை கண்ணியத்துடன் நடத்துவதிலே இறையச்சம் இன்றி பாவம் இழைத்திருக்கிறது. இது கண்டனத்துக்குரியது & தண்டனைக்குறியது.///

  நன்றி சகோ
  இஸ்லாமிய அடிப்படைச் சட்டம் கைதிகளை சக மனிதர்களாக நடத்த சொல்லுகிறது
  கைதிகளுக்கு நிதியுதவி இஸ்லாம் செய்ய சொல்கிறது
  ஜகாத் பெறக்கூடிய தகுதி பெற்ற 7 நபர்களில் கைதிகளும் அடங்குவார்கள்
  ஆனால் மலேசியா...

  ReplyDelete
 15. மலேஷியா வந்தால் IC வாங்கித் தருகிறேன் என்று சொன்னதின் பேரில் (திருமணத்திற்கு முன்) என் ஹஸ் கூட (அதே 1988, 89 வாக்கில்) மலேஷியா சென்று, முதலில் 15 நாட்கள் இப்படி மாட்டிக் கொண்டார்களாம். ஆனா, காலைல பால், சப்பாத்தி, ஈரல் சூப், மதியத்திகு ஃபுல் மீல், பொரித்த மீனுடன் என்று நல்ல எஞ்சாய் பண்ணி இருக்காங்க. ஆமினா சொல்வதுபோல் மரியாதையாகவேதான் நடத்தப்பட்டுள்ளார்கள்! அதுவும் இவங்க செல்லில் இருந்த கைதிகளில் பெரும்பான்மை நம் நாட்டுக்காரர்களாக இருந்ததால், ஒவ்வொரு வக்துக்கும் ஜமாஅத் தொழுகை, வெள்ளிக் கிழமை ஜும்ஆ உட்பட சிறப்பாக நடத்திக் கொள்வார்களாம். மேலும் வாரத்திற்கு ஒருமுறை வெளியிலிருந்து ஒரு ஆலிம் வந்து ஜெயிலுக்குள்ளேயே திறந்த வெளியில் அழைத்துப் போய் பயான் செய்வாராம்!

  ஆனால் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க. கோலாலம்பூர் ஜெயிலில் கெடுபிடி அதிகம்தான் என்று ஹஸ் சொன்னாங்க. ஆனா இவையெல்லாம் தெரிந்தே நிறைய பேர் சென்றாலும், நீங்க சொல்ற மாதிரி தெரியாமல் வயிற்றுப் பிழைப்புக்குப் போய் மாட்டிக் கொள்பவர்களின் நிலை பரிதாபம்தான் :(

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர் ஹைதர் அலி.. கைதிகளாயினும் அவர்களும் மனிதர்களே என்ற எண்ணம் வராத வரையில் இது போன்ற அவலங்கள் இருக்கத்தான் செய்யும் போல..

  உங்களுக்கு ஏற்பட்ட அவலத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்.. வெளியில் சொல்ல இயலாத நிலையில் எத்தனை சகோதரர்களோ?

  ஒரு சிலர் அங்குள்ள சிறைகளில் கன்னியமாக நடத்தப் பட்டுள்ளனர் என்று கூறுகிறீர்கள். தங்களுக்கு ஏற்பட்ட வலிகளை உங்களிடம் அவர்களும் மறைத்திருக்கலாம் அல்லவா? ஏனென்றால் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களை பெரும்பாலும் தங்களது குடும்பத்தினரிடம் வெளிப்படுத்துவதே கிடையாது.

  சகோ. ஹைதர் அலி, தங்களுடைய கட்டுரையை தொடருங்கள். வெளிநாடுகளில் உள்ள அவலங்களை வெளிநாட்டு கனவுகளில் மிதந்து கொன்டிருக்கும் சகோதரர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

  முஹம்மது ரஃபீக்.

  ReplyDelete
 17. ஹைதர் அலி சொன்னது…
  @Dharan அவர்களுக்கு
  //தலைப்பிலேயே பதில் இருக்கிறது.தவறு என்று தெரிந்தே செய்துவிட்டு பின் எதற்கு ஒப்பாரி.//

  தலைப்பு அப்படி வைத்ததிற்கு வேறு கரணங்கள் இருக்க கூடாதா?

  மலேசியா நண்பன் பத்திரிக்கையில் அடிக்கடி இந்த தலைப்பில் செய்தி வரும் அதே ஸ்டைலில் தலைப்பு வைத்தேன்
  மற்றபடி எல்லாரும் தெரிஞ்கிட்டே வர்ரவங்க கேடையாது//

  விதிமுறைகள் தெரியாமல் செல்பவர்களுக்காக வேண்டுமாணால் பரிதாபப்படலாம் மற்றபட்டி தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு தண்டணை மிகக் கடுமையாக இருக்க வேண்டும்(அந்தந்த நாட்டு சட்டப்படி). கள்ளக் குடியேறிகளால் நேர்மையாக பயணம் செய்பவர்களுகும் தொந்தரவு. சிறையில் சொகுசு வாழ்க்கை கொடுத்தால் மற்ற கள்ளக் குடியேறிகளுக்கும் குளிர் விட்டுப்போகும். குற்றங்கள் குறைய கடும் தண்டணை அவசியம்.

  ReplyDelete
 18. @ Dharan கூறியது...

  தமிழக அரசாங்கமே டாஸ்மாக் திறந்து, தன் ஊழியர்கள் மூலமே சரக்கு விற்குமாம். ஆனால், 'குடி குடியை கெடுக்கும்' என்று கூறிக்கொண்டு குடித்து விட்டு வண்டி ஓட்டினால் பிடிக்குமாம். என்ன அறுகதை உண்டு? ச்சீ.. த்தூ.. கேவலமா இல்லை..?

  அதே போல, கள்ளக்குடியேறிகளை கைது செய்யுமாம் மலேசிய அரசு, ஆனால், அவர்கள் வரும் பாதையை அடைத்திருக்கிறதா?

  அதனை தடுக்க என்ன மாற்று முயற்சிகளை எடுத்திருக்கிறது?

  க.கு-க்களை மலேசியாவுக்கு அழைத்து வருபவர்களுக்கு, அவ்வரசு என்ன கடும் தண்டனை கொடுத்திருக்கிறது?

  அல்லது... க.கு-க்களை மலேசியாவுக்கு அனுப்புபவர்களை பிடித்து தண்டிக்க இன்டர்போல் உதவியையோ.. பிறநாட்டு உதவியையோ நாடி இருக்கிறதா?

  முதலில் மலேஷியா... விஷச்செடியின் வேரை வெட்டட்டும்... அப்புறம் கனிகள் மட்டும் எப்படி தனியே பழுக்கின்றன என்று பார்ப்போம்...! அப்படியும் மீறி கள்ளத்தனமாய் காற்றினிலே காயத்தால்... இஸ்லாமிய அடிப்படையில் என்ன தண்டனை வேண்டுமானாலும் தரட்டும்..! அதுதான் நியாயம்..!

  ReplyDelete
 19. உங்களுக்குப் பின்னால் இப்படியொரு கதையா நண்பா?

  சிறந்த உதாரணத்துடனும் ஆதாரத்துடனும் பதிவிட்டிருக்கின்றீர்கள் உங்களின் உண்மை கண்டு மேலும் மரியாதையை உங்கள் மேல் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா படிக்கலாம்.

  ReplyDelete
 20. 1.
  சன் டீவி மாமா வேலை பார்த்து பிரபல்யமானது என்று சொல்லிவிட்டு, விஜயை காட்டி நீங்க பிரபல்யமாகாமல் இருந்தால் அது தான் சூப்பர்.

  2.
  நிறையப் பேருக்கு தெரியாத பிரச்சினைகலைச் சொல்லி இருக்கீக, நன்றி

  ReplyDelete
 21. சகோதரர் ஹைதர் அலி அவர்களே நீங்கள் எழுதி இருப்பது உண்மைதான் என்பது சாதாரண தொழிலாளியாக மலேசியாவில் வேலை பார்த்து பின் விசா இல்லாத காரணத்தால் camp அல்லது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்களுக்கே தரிந்தவிடயம் அதை அதிகமான மக்கள் வெளியே சொல்லுவது இல்லை ஆனால் நீங்கள் மிக துணிவோடு விடயத்தை சொல்லி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்,

  சிறை சாலை கொடுமைகள் ஒருபுறம் இருக்க நாம் நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைசெய்யும் நேரங்களில் அங்கே உள்ள குடிமக்களில் இருக்கும் ஒருசில காலிகள் நாமை படுத்தும் படு இருக்கிறேதே அதைசொல்லி மாளமுடியாது. நாம்மை கண்டாலே ஒருமையில் அழைப்பது நாம் அங்கே சென்று வேலை பார்ப்பதை அவர்களுக்கு அவமானமாக நினைப்பது அதனாலே நம்மை தொல்லை படுத்துவது என் அங்கே வாழும் ஒரு ஒரு நாளும் மிகுந்த மனக்கஷ்ட்டதொடுதான் வாழ்வை நகர்த்தவேண்டும்
  வேலைப்பளு ஒருபுறம், முதளில்கள் தரும் தொல்லைகள் ஒருபுறம், சகதொளிலாளியாக வந்து நம்மை எல்லாம் நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நம்மவர்கள் தரும் தொல்லை ஒருபுறம், என் தினம் தினமும் தொழிலாளியாக போகும் நம்மவர்கள் படும் வேதனை இருக்கிறதே அதை எழுதி வடிக்க முடியாது.
  பவம் நாம் இந்திய தேசத்தின் குடிமக்கள்.
  அவர்களின் நிலையை தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 22. அன்புச் சகோதரா
  நல்ல முயற்சி. உண்மைச் சுடும் என்பார்கள் தமிழில். இங்கே உண்மை நம் இரத்த ஓட்டத்தை உறைய வைக்கிறது. வல்ல நாயன் எல்லா மக்களையும் காக்க வேண்டுகிறேன். மேலும் தாங்கள் மேன் மேலும் உயர வல்ல நாயனை வேண்டுகிறேன். அன்புடன் முஸ்தபா

  ReplyDelete
 23. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்December 29, 2010 at 7:21 AM

  முஹம்மத் ஆஷிக் கூறியது...
  //////என்னதான் சட்டத்திற்கு புறம்பாக வந்திருந்தாலும் இப்படி இதயமே இல்லாமல் மலேசிய அரசு கைதிகளை கொடுமை படுத்தி இருந்திருக்கக்கூடாது.//////////
  ஹைதர் அண்ணே
  மலேசியாவில் அந்த ஒரு சிறைச்சாலையில் மட்டும்தான் இந்த கொடுமையா (அ) எல்லா இடங்களிலுமா?
  ஏன் கேட்கிறேன் என்றால் துபாயில் ஒரு சிறைச்சாலைக்கும் இன்னொரு சிறைச்சாலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.ஒன்றில் எல்லா வசதிகளும் கிடைக்கும் (உண்ண,உறங்க & கழிப்பிட வசிதிகள்) ஆனால் மற்றொன்றில் நிறையவே குறைகள் உண்டு என்று என் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 24. பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்கள் பிரச்சினைக்கு அதிக முக்கியம் கொடுப்பதே இல்லை... அவை கேளிக்கைகளிலே அதிக ஆர்வம் காட்டி பணம் சேர்க்கின்றன. பிரான்சில் அகதி வாழ்க்கை இவ்வளவு மோசம் இல்லை யெனினும்... எப்போதும் அச்சத்துடன் வாழ்வேண்டிய சூழ்நிலை!!!

  ReplyDelete
 25. சகோ அஸ்மா அவர்களுக்கு

  உங்க ஹஸ் இருந்தது சிறையில்
  நாங்கள் இருந்தது கேம்பில்
  நகரை விட்டு துண்டிக்கப்பட்டு மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட கேம்ப்
  உங்க ஹஸ்ட்ட கேளுங்க கேம்பில் இருந்திருக்க மாட்டார்
  அனைத்து வசதிகளும் கொண்ட நகர்புற சிறைச்சாலையில் இருந்திருப்பார்
  நமக்கு சப்போர்ட்க்கு ஆள் இருந்து(போலீஸ்க்கு இலஞ்சம் கொடுத்து) டிக்கட் எடுத்து தந்து அனுப்ப ஆள் இருந்த சிறைச்சாலையிலிருந்தே ஊருக்கு அனுப்பி விடுவார்கள்
  ஆனால் எனக்கு ஆள் இல்லை சில நண்பர்கள் இருந்தார்கள் அவர்களும் என்னை போல் ஒடி ஒளியக்கூடிய வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள்

  ஒர்க் பர்மிட் உள்ள நண்பர் என்னை கேம்பில் பார்க்க வந்தார் கேம்ப் வாழ்க்கை சாப்பாடு இவைகளைப் பற்றி அவருக்கு தெரியும் அதனால் வரும்போதே பொறித்த கோழியிம் நல்ல சாப்பாடும் வாங்கி வந்தார்
  அதனையும் அங்கு காவலுக்கு இருந்த போலீஸ்காரய்ங்கே பறித்து திண்டார்கள் எனக்கும் என் நண்பர்களுக்கும் எலும்பு கூட கேடைக்கல
  இன்னும் எழுத வேண்டியிருக்கிறது

  நன்றி சகோ
  தொடர்ந்து படியுங்கள்

  ReplyDelete
 26. சகோதரர் ரபீக் அவர்களுக்கு

  //உங்களுக்கு ஏற்பட்ட அவலத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்.. வெளியில் சொல்ல இயலாத நிலையில் எத்தனை சகோதரர்களோ?//

  வெளியே சொல்லாம சும்மா இருந்தாலும் பரவயில்ல சூழலுக்கு எதிர்மறையாக வடிவேலு மாதிரி ஊரில் பந்தா காட்டி மப்ளா பயப்புடமா வா மலேசியாவுல உள்ள டத்தோ நம்ம சொந்தகாரரு டுரிஸ் விசா முடிவதற்குள் ஒர்க் பர்மிட் எடுத்துறலாம் சொல்லிட்டு மறைஞ்சு போயிட்டாய்ங்கே

  ReplyDelete
 27. Dharan

  //கள்ளக் குடியேறிகளால் நேர்மையாக பயணம் செய்பவர்களுகும் தொந்தரவு. சிறையில் சொகுசு வாழ்க்கை கொடுத்தால் மற்ற கள்ளக் குடியேறிகளுக்கும் குளிர் விட்டுப்போகும். குற்றங்கள் குறைய கடும் தண்டணை அவசியம்.//

  சும்மா வாயே கேளராதீக
  கள்ளக்குடியேறி இல்லையேன்றால் மலேசியாவில் ஒரு கட்டிடம் கூட உயராது இது உங்களுக்கு மட்டுமல்ல மலேசியா அரசங்கத்திற்கே தெரியும்

  ReplyDelete
 28. சகோ முஹம்மத் ஆஷிக்
  எனது சார்பாக தகுந்த உதரணத்தோடு பதில் கொடுத்ததிற்கு நன்றி

  ReplyDelete
 29. @மகாதேவன்-V.K
  நன்றி நண்பா
  பதிவு எழுதுவது பொழுது போக்கிற்காக என்ற நிலையில் இருந்து நான் மாறுபடுகிறேன்
  என்னுடைய பதிவுகள் உண்மையான மிகைப்படுத்தல் இல்லாமல் சமூக அவலங்களை பேச வேண்டும் என்பது என் நோக்கம்
  ஒருவேளை அந்த நோக்கம் திசை மாறினால் பதிவுலகை விட்டு வெளியேறி விடுவேன்

  ReplyDelete
 30. சகோ Issadeen Rilwan

  ///நிறையப் பேருக்கு தெரியாத பிரச்சினைகலைச் சொல்லி இருக்கீக, நன்றி//

  ரொம்ப நன்றி சகோ

  ReplyDelete
 31. சகோ முகம்மது ஆதம்.
  நீங்கள் நிறையா தேரிந்து வைத்திருகிறீர்கள்
  ஒரு மலேசியா தமிழர் என்னிடம் கேட்ட கேள்விகளை பாருங்களேன்

  ஆமாவா நீங்க ஈன்டியவா ஈன்டியாவுல
  காருலாம் இருக்கா? கட்டிடமேல்லாம் இருக்கா?

  இங்கே ஈன்டியா என்று நான் எழுத்து பிழையாக எழுதவில்லை
  அந்த மலேசியா தமிழர்களின் வாட்டார மொழி அப்படி

  ReplyDelete
 32. அன்பு சகோதரர் முஸ்தபா
  உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும்
  பிரார்த்தனைகளுக்கும்
  ரொம்ப ரொம்ப நன்றி

  ReplyDelete
 33. சகோ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

  //மலேசியாவில் அந்த ஒரு சிறைச்சாலையில் மட்டும்தான் இந்த கொடுமையா (அ) எல்லா இடங்களிலுமா?//

  எல்லா இடங்களிலும் அப்படித்தான்

  ReplyDelete
 34. @டி.சாய்
  //பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்கள் பிரச்சினைக்கு அதிக முக்கியம் கொடுப்பதே இல்லை... அவை கேளிக்கைகளிலே அதிக ஆர்வம் காட்டி பணம் சேர்க்கின்றன. பிரான்சில் அகதி வாழ்க்கை இவ்வளவு மோசம் இல்லை யெனினும்... எப்போதும் அச்சத்துடன் வாழ்வேண்டிய சூழ்நிலை!!!//

  பிரான்சிலுமா???

  ReplyDelete
 35. //1999ல் இருந்து 2001 வரை இரண்டு வருடங்கள் கள்ளகுடியேறியாக எப்ப புடிப்பாய்ங்கேன்னு தெரியாம பயந்து போலீஸை கண்டு ஒளிந்து சக கட்டிட தொழிலாளிகளோடு ரத்தமும் சதையுமாக நான் வாழ்ந்திருக்கிறேன் மலேசியாவின் பெரிய கன்ஷேக்ஸன் கம்பேனியான
  I.J.M கம்பேனியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து இறுதியில் 2001ல் போலீஸில் பிடிபட்டு (நெகிரி சிம்பிளான்) 9 நகரங்கள் என்று சொல்லப்படுகிற ஊரியுள்ள 30 அடி அகலம் 100 அடி நீளம் கொண்ட மரப்பலகையான சிறையில் 600 பேர்களோடு 1 மாத சித்ரவதைகளை அனுபவித்து சுகாதர கேட்டின் விளைவாக உடம்பு முழுவதும் அரிப்பு நோய் ஏற்பட்டு மெலிந்து ஊர் வந்து சேர்ந்தேன்//


  சகோ, இன்று தான் பதிவை படித்தேன்.
  இத்தனை கஷ்டங்களை அனுபவித்து
  தாண்டி வந்து இருக்கீர்கள்.
  அல்லாஹ் எல்லோருடைய கஷ்டங்களை
  நீக்கி,நீண்ட ஆயுளையும்,நோய் இல்லாத
  வாழ்வையும் தந்தருள்வானாக!ஆமீன்.

  உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. வாழக்கயய் தொலைத்து விட்டு
  திரவியம் தேடி புற்ப்பட்வர்கள் படும்
  பாட்டய் என்ன வென்றூ சொல்ல
  இளய் சமுதாயம் பார்த்தூ விழிப்புற்
  ந்ல்ல செய்தி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. என்ன ஹைதர் அலி கம்னிஸ்ட் தோழர்கள் எல்லாம் வந்து வாழ்த்தியிருக்காக அப்போ சரியான நடையில தான் போய்கிட்டு இருக்கிங்க

  நானும் ஒரு வாழ்த்து சொல்லிகிறேம்பா மீதியை இன்ஸா அல்லாஹ் நேரில்.

  ReplyDelete
 38. நடந்த நிகழ்வுகளைப் பார்த்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று வாயால் சொல்லி உங்களைப் போன்று சிறையிலும் கேம்பிலும் அவதிப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட முடியாது தான்.

  கேள்விப்பட்டவர்கள் எழுதியதைப் படித்து பழக்கப்பட்டு இப்ப அனுபவித்தவரே எழுதுவதை படிக்கும்போது ஒருவித அதிர்ச்சி ஏற்படுகிறது. இன்னும் எழுதுங்கள். மலேசியாவில் மட்டுமல்ல, உலகில் இருக்கும் இது போன்ற கேம்ப்களில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம்.

  ReplyDelete
 39. மலேசியாவின் மறு பக்கத்தின் உண்மைகளை வெளிபடுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. @ஆயிஷா அபுல் அவர்களுக்கு
  தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும்
  ரொம்ப நன்றி

  ReplyDelete
 41. சகோ நேரில் சந்திக்கிரனு சொன்னீங்க ஆளையே பார்க்க முடியவில்லை பிஸியா

  ReplyDelete
 42. @enrenrum16
  அவர்களுக்கு
  உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
  நான் தொடர்ந்து எழுதுகிறேன்
  நன்றி

  ReplyDelete
 43. சகோதரர் அப்துல் அவர்களுக்கு

  திரைகடல் ஒடி துயரம் தேடியவர்களைப் பற்றிய என்னுடைய பதிவுகள் தொடரும்

  தொடர்ந்து படியுங்கள் ஆதரவு தாருங்கள்

  நன்றி சகோ

  ReplyDelete
 44. நண்பர் சந்திரன் அவர்களுக்கு

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 45. சகோதரர். NKS.ஹாஜா மைதீன்

  உங்களின் முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

  ReplyDelete

 46. மலேசியாவின் மறு பக்கத்தின் உண்மைகளை வெளிபடுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.keep it up

  ReplyDelete