மகிழ்ச்சியும் பரந்த மனமும் தேடலால் ஏற்படும்.
ஏனெனில்,தேடல் தெளிவற்றதைத் தெளிவுபடுத்தும்.
தவறிப் போனதைக் கண்டுபிடித்து தரும்.
மறைந்து கிடப்பதை கண்முன்னே நிறுத்தும்.
நேரமும் முடங்கிய பக்கீர்கள் சம்பாதிப்பதை(தடுக்கப்பட்டதாக) ஹரமாக்கிக் கொண்ட இவர்கள் திருமணம் செய்வதை(ஹரமாக) தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்ளவில்லை.ஏனென்றால் சந்நியாசம் போவதற்கு இஸ்லாத்தில் தெளிவான தடை இருந்தது.
நபியவர்களின் காலத்திலேயே பல (சஹாபக்கள்) தோழர்கள் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவதற்காகவும் முழுநேர அழைப்புப் பணி செய்வதற்கும் திருமணமும் ,குடும்ப வாழ்க்கையும் பெரும் தடையாக இருக்கிறது .எனவே திருமனம் செய்யாமல் இருப்பதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்ட போதேல்லாம்
திருமணம் செய்யாதவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டமான மறுப்பு தெரிவித்தார்கள்.
பக்கீர்கள் திருமண விஷயத்தில் பாதிரிமார்கள்,புத்தபிக்குகள் போன்ற துறவிகளிடமிருந்து வித்தியாசப்பட்டார்கள்.
.
அமீர் குஸ்ரோவின் கவிதைகளை பாருங்கள்
கீழேயுள்ள எழுத்து அரபி மொழி பார்சி
کافر عشقم، مسلمانی مرا در کار نیست
هر رگ من تار گشته، حاجت زُنار نیست
از سر بالین من برخیز ای نادان طبیب
دردمند عشق را دارو به جز دیدار نیست
ناخدا بر کشتی ما گر نباشد، گو مباش!
ما خدا داریم ما ناخدا در کار نیست
خلق میگوید که خسرو بتپرستی میکند
آری! آری! میکنم! با خلق ما را کار نیست
பராசீக கவிதையின் நேரடி தமிழ்
காஃபிர்-இ-இஷ்கம் முசால்மணி மாரா டார்கார் நீஸ்ட்
ஹார் ராக்-இ முன் டார் கஷ்டா ஹஜட்-இ ஜுன்னார் நீஸ்ட்;
ஆஜ் சார்-இ பாலீன்-இ முன் பார் கீஜ் ஐ நாடான் டாபீப்
டார்ட் மேண்ட்-இ இஷ்க் ரா டாரூ பாஜஸ் டீடார் நீஸ்ட்;
நாகுடா டார் காஷ்டி-இ மா கார் நாபாஷாத் கூ முபாஷ்
மா குடா டாரீம் மாரா நாகுடா டார் கார் நீஸ்ட்;
கால்க் மிகொயாத், கி குஸ்ராவ் பட்பராஸ்டி மிகுனாட்
ஆரே-ஆரே மிகுனம், பா கால்க் மாரா கார் நீஸ்ட்.
பாரசீக கவிதையின் தமிழ் அர்த்தம்
நான் ஒரு காதல் யாசகன் (தொழுபவன்): (முஸ்லீம்களின்) கொள்கை எனக்குத் தேவையில்லை;
என்னுடைய ஒவ்வொரு நரம்பும் (விறைப்பானதைப் போன்று) கம்பியாக மாறுகின்றன; (இந்து) வளையம் எனக்குத் தேவையில்லை.
என்னுடைய படுக்கைப் பக்கத்தில் இருந்து விட்டுவிட்டாய், நீ அறியாத மருத்துவர்!
காதல் நோயாளிக்கான ஒரே மருந்து அவனது காதலியின் பார்வை மட்டுமே –
இது தவிர வேறு எந்த மருந்தும் அவனுக்குத் தேவையில்லை.
நமது கப்பலுக்கு மாலுமி இல்லாமல் இருந்தால், அங்கு யாரும் இருக்க வேண்டாம்:
நம்மிடையே கடவுள் இருக்கிறார்: மாலுமி நமக்குத் தேவையில்லை.
குஸ்ராவ், உருவச்சிலைகளைத் தொழுகிறான் என்று உலக மக்கள் சொல்கிறார்கள்.
அதனால் நான் அதைச் செய்கிறேன், அதனால் நான் அதைச் செய்கிறேன்; மக்கள் எனக்குத் தேவையில்லை,
இந்த உலகம் எனக்குத் தேவையில்லை.
அமீர் குஸ்ரோவின் இன்னோரு கவிதை
ஹிந்தி மூலத்தில்
छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलाइके
प्रेम भटी का मदवा पिलाइके
मतवारी कर लीन्ही रे मोसे नैना मिलाइके
गोरी गोरी बईयाँ, हरी हरी चूड़ियाँ
बईयाँ पकड़ धर लीन्ही रे मोसे नैना मिलाइके
बल बल जाऊं मैं तोरे रंग रजवा
अपनी सी रंग दीन्ही रे मोसे नैना मिलाइके
खुसरो निजाम के बल बल जाए
मोहे सुहागन कीन्ही रे मोसे नैना मिलाइके
छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलाइके
ஹிந்தி மூலத்தின் நேரடி தமிழ்
சஹாப் டிலக் சாப் சினி ரெ மோஸ் நைனா மிலைகெ
பாட் ஆதம் கெஹ் டினி ரெ மோஸ் நைனா மிலைகெ
பிரேம் பஹாய் கா மாத்வா பிலைகெ
மாட்வாலி கார் லின்ஹி ரெ மோஸ் நைனா மிலைகெ
கோரி கோரி பையன், ஹரி ஹரி சுரியன்
பையன் பகர் தார் லின்ஹி ரெ மோஸ் நைனா மிலைகெ
பால் பால் ஜாவ்ன் மெயின் டோர் ராங்க் ராஜ்வா
ஆப்னி சி கார் லின்ஹி ரெ மோஸ் நைனா மிலைகெ
குஸ்ரோ நிஜம் கெ பால் பால் ஜையெ
மொஹெ சுஹாகன் கின்ஹி ரெ மோஸ் நைனா மிலைகெ
பாட் ஆதம் கெஹ் டினி ரெ மோஸ் நைனா மிலைகெ
என் பார்வைகள், என் அடையாளங்களை உனது ஒரு பார்வையில் எடுத்துச் சென்றாய்.
தூய்மையான காதலில் இருந்து பழரசத்தை என்னைப் பருகச் செய்தாய்
உனது ஒரு பார்வையில் என்னை மயக்கமுறச் செய்தாய்;
என்னுடைய அழகான, மென்மையான மணிக்கட்டுகள் பச்சை நிற வளையல்களுடன் இருக்கின்றன,
அவை சில கணங்கள் உன்னால் இறுக்கமாகப் பிடிக்கப்படுகின்றன.
நான் என்னுடைய வாழ்வை உனக்குத் தருகிறேன், ஓ என்னுடைய ஆடைகள் வண்ணம் பெறுகின்றன,
உன்னுடைய ஒரு பார்வையில் உன் மூலமாக எனக்கு வண்ணம் தருகிறாய்.
நான் என்னுடைய முழு வாழ்க்கையையும் உனக்குத் தருகிறேன், ஓ நிஜாம்,
உன்னுடைய ஒரு பார்வையில் என்னை உன்னுடைய மணப்பெண் ஆக்குகிறாய்.
"ஜீஹால்-இ-மிஸ்கீன்" என்ற சொற்றொடர் அமீர் குஸ்டோரின் கவிதையில் இருந்து வந்தது. அந்தக் கவிதையில் இருக்கும் தனித்துவமான விசயம், அது பெர்சியன் மற்றும் பிரிஜ் பாஷா ஆகியவற்றில் எழுதப்பட்ட மேக்ரோனிக்காக இருக்கிறது. முதல் அடியில், முதல் வரி பெர்சியனில் இருக்கிறது, இரண்டாவது வரி பிரிஜ் பாஷாவில் இருக்கிறது, மூன்றாவது வரி மீண்டும் பெர்சியனில் இருக்கிறது மற்றும் நான்காவது வரி பிரிஜ் பாஷாவில் இருக்கிறது. மீதமுள்ள அடிகளில், முதல் இரண்டு அடிகள் பெர்சியனிலும், இறுதி இரண்டு அடிகள் பிர்ஜ் பாஷாவிலும் இருக்கின்றன. இந்தக் கவிதை அமீர் குஸ்ரோ இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவராக இருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஜீஹால்-இ மிஸ்கீன் மாகுன் டாகாஃபுல்,
டுராயே நைனா பனாயே பாட்டியன்;
கி டாப்-இ ஹிஜ்ரன் நாடாராம் ஐ ஜான்,
நெ லெஹோ காஹெ லகாயே சஹாடியன்.
ஷாபான்-இ ஹிஜ்ரன் டாராஸ் சன் சுல்ஃப்
வா ரோஸ்-இ வாஸ்லட் சோ உம்ர் கோட்டா;
சகி பியா கொ ஜோ மெயின் நா டெகூன்
டோ கைஸ் காடூன் அந்தேரி ராட்டியன்.
யாகாயாக் ஆஜ் தில் டு சாஷ்ம்-இ ஜாடூ
பாசாட் ஃபேர்பாம் பாபர்ட் டாஸ்கின்;
கிசே பாரி ஹாய் ஜோ ஜா சுனாவி
பியாரே பி கோ ஹமாரி பாட்டியன்.
சோ ஷாமா சோசன் சோ ஜாரா ஹெய்ரன்
ஹமேஷா கிர்யான் பெ இஸ்க் ஆன் மேஹ்;
நா நீண்ட் நைனா நா ஆங் சைனா
நா ஆப் ஆவென் நா பெஜென் பாட்டியன்.
பாஹாக்-இ ரோஜ்-இ விசால்-இ டில்பர்
கி டாட் மாரா காரீப் குஸ்ராவ்;
சாபெட் மான் கெ வராயே ராகூன்
ஜோ ஜாயே பாவ்ன் பியா கெ காட்டியன்.
அதன் மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் பின்வருமாறு:
என்னுடைய துன்பத்தை என்னால் கவனிக்க முடியவில்லை
கொஞ்சுகின்ற உனது கண்கள், கதைகள் புனைகின்றன;
என்னுடைய பொறுமை விளிம்பின் மேல் இருக்கிறது, ஓ மனதிற்கினியவனே,
ஏன் நீ என்னை உனது நெஞ்சுக்குள் எடுத்துச் செல்லவில்லை.
தனிமையான இரவுகள் கூந்தல்களைப் போன்று நீண்டதாக இருக்கின்றன,
நான் உன்னுடன் இணைந்திருக்கும் நாள் வாழ்க்கையைப் போன்று சிறியது;
என்னுடைய விருப்பமான நண்பரை நான் பார்க்க முடியாத போது,
இருண்ட இரவுகளை எப்படி நான் கழிப்பேன்?
உடனடியாக, இதயம் இருப்பதைப் போன்று, இரண்டு மயக்கும் கண்கள் இருக்கின்றன
ஆயிரம் மாயங்கள் மற்றும் அமைதியினை அழிக்கும் தன்மையுடன் அவை அலைகின்றன;
ஆனால் யார் அதற்காகச் சென்று புகார் அளிக்க இயலும்
என்னுடைய இனியவருக்கு, என்னுடைய விருப்பமான நிலைக்கு?
விளக்கு ஒளிர்கிறது; ஒவ்வொரு அணுவும் திளைக்கின்றன
நான் எப்போதும் காதல் நெருப்புடன் அலைகிறேன்;
என்னுடைய கண்களுக்கு உறக்கமில்லை, என்னுடைய உடலுக்கு அமைதி இல்லை,
எனக்கு எந்த செய்தியும் வருவதில்லை, நானும் அனுப்புவதில்லை
விருப்பமானவருடன் இணைந்திருக்கும் நாளுக்கு மதிப்பளிக்கும் வகையில்
யார் என்னை நீண்ட காலத்திற்கு வசப்படுத்துவார், ஓ குஸ்ராவ்;
நான் என்னுடைய இதயத்தை அடக்கி வைத்திருக்கப் போகிறேன்,
அவருடைய இடத்திற்குச் செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிட்டும் வரையில்.
பக்கீர்கள் இஸ்லாமிய சட்டங்களை சரியாக கடைப்பிடித்தவைகளில் இதுவும் ஒன்று.
ஒரு பயணிக்கு கிடைத்த நிலையில்லாத தற்கால காதலி என்று மனைவிமார்களை விளித்தார்கள்.
தங்களுடைய குடும்ப பொருளதார தேவைகளுக்காக ஆட்சியாளர்கள்,அன்றைய அரசியல்,அதிகாரவர்க்கத்திடம் பொருளதார உதவிகளை ஆரம்பத்தில் பெறவில்லையென்பதை விட ஆட்சியாளர்களின் நிழல் கூட தங்களின் மீது விழாமல் ஒதுங்கி கொண்டார்கள். அரசு விழாக்களில் கலந்துக்கொள்வதைக்கூட தவிர்த்தார்கள். இதற்கு நிறைய வரலாற்று சான்றுகள் இருக்கின்றன உதாரணத்திற்கு.
டெல்லியை ஆண்ட கியாஸுதீன் துக்ளக் டெல்லிக்கு அருகாமையில் துக்ளகாபாத் என்ற பெயரில் புதிய தலைநகர் கட்டி மிகப்பெரிய விழாவாக எடுத்து ஆடம்பரமாக புதிய தலைநகர் புது அரண்மனையில் சென்று அமர்ந்திருந்த சுல்தான் கியாஸுதீன் முன் மன்னர்களும் பிரபுக்களும் கலைஞர்களும், கவிஞர்களும் கியுவில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த அரசு விழாவை அன்றைய மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த
சூஃபி ஹஜ்ரத் நிஜாமுதீன் புறக்கனித்ததையும், மன்னன் கொலை மிரட்டல் விடுத்ததையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.
சாதரண பாமர மக்களிடம் தங்களுக்கு தேவையான நிதியுதவிகளை சில நிபந்தனைகளோடு பெற்றுக் கொண்டார்கள்.
1.அவர்களாக மக்களிடம் வலிந்து எதனையும் கேட்கக்கூடாது.
2.மக்களாக முன்வந்து தருவதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3.உணவுப்பொருட்கள் நாணயம் இவற்றை சேகரித்து வைக்கும் நோக்கில் வாங்கக் கூடாது அன்றைய தேவைக்கு மட்டும் வாங்க வேண்டும்.
4.ஆடைகளாக தந்தால் பழைய ஆடைகளை மட்டுமே வாங்க வேண்டும்.
5.தானியங்கள் வேக வைக்கப்பட்டதை மட்டுமே வாங்க வேண்டும். பின்னாளில் இந்த விதி தளர்த்திக் கொள்ளப்பட்டது.
பொதுவாக அக்காலங்களில் கிராமங்களில் ஹோட்டல்கள் கிடையாது ஊரு விட்டு ஊரு வந்து (முஸபராக) பயணியாக வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்திய பக்கீர்களுக்கு கிராம மக்கள் உணவளித்தார்கள்
(இன்றும் பெருநகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட குக்கிராம,மலைக் கிராமங்களில் இன பாகுபாடு இல்லாமல் உணவளிக்கிறார்கள்)
அல்லது தங்களிடமுள்ள தானியங்களை வீட்டுக்கு வீடு கொடுத்தார்கள் பல மாதங்கள் கிராமங்களில் சுற்றி திரிந்துவிட்டு தங்களுடைய வீடுகளுக்கு பக்கீர்கள் திரும்பும் போது மக்கள் கொடுத்த தானியங்களை(அரிசி, கோதுமை) மூட்டையாக கொண்டு செல்வார்கள் ஒரு சின்ன ரெஸ்ட் எடுத்து விட்டு மறுபடியும் வேறு கிரமங்களுக்கு கிளம்பி விடுவார்கள்.பக்கீர்கள் திரும்பி வரும் வரையில் அவர்களின் குடும்பத்தார் ஏற்கனவேயுள்ள சேகரித்த தானியங்களை வைத்து சமாளிப்பார்கள்.
தங்களின் கொள்கையை சொல்வதற்காக மக்களிடம் கையேந்த ஆரம்பித்த இவர்கள் நளடைவில் ஒழுக்க தன்மன உணர்ச்சிகள் மரத்துப் போய் சறுக்கி இன்று வீட்டு வாசல்களில் பிச்சைக்காரர்களாக எப்படி உறுமாறினார்கள் என்பதையும் அடுத்த தொடரில் பார்ப்போம்
தெளிவான விளக்கம் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்...
ReplyDeleteசகோ. ஹைதர்...
பக்கீர்ஷாக்கள் பற்றி பதிவு எழுதுகிறீர்களா...
அல்லது...
முனைவர் பட்டப்படிப்புக்கு ஆய்வறிக்கை சமர்பிக்கிறீர்களா...
எனத்தெரியவில்லை...
நிறைய புதிய விஷயங்கள்...
பன்மொழி ஃபாண்டுகள்...
என கடும் முயற்சி எடுக்கிறீர்கள்...!
மாஷாஅல்லாஹ்...
பக்கிர்ஷாக்களின் தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteமூணு வயசுப் பிள்ளையிடம் ,ஜனநாயகம், அல்லது பூமியை விட சூரியன் பெரிது என்பதை ஒருக்காலமும் விளங்கப்படுத்த முடியாது.இதை விட நீங்கள் தலையில் வைத்துக்கொண்டாடும் குர்ஆனில், ஹதீதில் அவர்களின் நடத்தை, செயல்களுக்கு மாற்றமானவைகளை விளங்கப் பண்ணலாம் .ஒன்று தெரியவில்லை என்பதற்கு புத்தியினூடு விளக்கம் சொல்ல வருகிறீர்கள் .இஸ்லாம் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களால் ஒழுங்காக பரிசுத்தமாக தரப்ப்பட்டதாயின் அக்காலத்தை அண்மித்தவர்கள். நீங்களா ? அவர்களா?உங்கள் மூதாதையர் எப்படி இஸ்லாமாகினர்? புதிதாக இத்தனை பிளவுகளும் பணவருவாயுமாக நீங்கள் போதிக்க வந்துள்ள இஸ்லாத்துக்கும் வன்முறைக்கும் சஊதி ,அமரிக்க , பிரித்தானிய கள்ளக் கூட்டை நாங்கள் இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை என நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் . நடத்துங்கடா சாமி உங்கள் பள்ளியில் குடி கொண்டிருக்கும் பரம பிதா ஆசீர்வதிக்கட்டும்.......நஸீறுதீன் .S
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteபுதிதாக இஸ்லாத்தை அறிந்து கொள்ள வலைத் த்ளங்களைத் தேடும் போது குழப்பம் தான் மிஞ்சுகிறது.ஆனால் அமீர் குஸ்ருவின் பாடல் வரிகளும் விளக்கங்களும் அருமை.நன்றி
சகோதரர் ஹைதர்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்
மிகவும் அருமை ,ஆஷிக் சொன்னது போல முனைவர் பட்டம் தான் உங்களுக்கு கொடுக்க வேண்டும். மிகவும் கடின உழைப்புடன் தொகுதுள்ளிர்கள், வாழ்த்துக்கள்,
மேலே பின்னுட்டம் இட்டுள்ள நண்பர் நசிருதீன் மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று புரிய வில்லை, மொத்தத்தில் அந்த பின்னுட்டத்திற்கு கோனார் தமிழ் உரை தான் வேண்டும்.
அருமையான விளக்கங்கள், நன்கு ஆராய்ந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் அதையே தான் கேட்க வந்தேன்...
ReplyDeleteஆராய்ச்சி பண்றீங்களோ....
பதிவு அருமை
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரர் ஹைதர் அலி,
ஆஷிக் சொல்வது போன்று ஆய்வுக் கட்டுரையின் பாணியில் தொடர் செல்கின்றது. எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பாகவும் செல்கிறது. இஸ்லாத்திற்கு முரணாக கவிதைகள் எழுதிய சூபிகள் பலருடைய கவிதைகளை நாம் படிக்கிறோமோ இல்லையோ இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் நன்றாக கவனித்து படிக்கின்றார்கள். சமீபத்தில் கூட அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய கமல்ஹாசனுக்கு எதிரான கட்டுரையில் சூபி கவிதாயினி ஒருவரின் கவிதையை மேற்கோளாக காட்டி ஆபாசம் இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதத்திலும் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அத்தகைய கவிதைகளை எடுத்தும் அவை இஸ்லாமிய வரம்பிலேயே இல்லை என்பதையும் தாங்கள் இந்த ஆய்வுத் தொடரில் நிறுவ வேண்டும்.
கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்கு சொர்க்கத்திற்கு செல்லும் வழியை அல்லாஹ் எளிதாக்குகின்றான். (புகாரி). நீங்கள் செய்யும் இந்த ஆய்வு சூபி கவிதைகளை இஸ்லாத்திற்கு ஆதாராமாக காட்டத் துணியும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கு பதிலடியாக இருக்க வேண்டும். இத்தகைய பணிகளுக்காக இறைவன் மறுமையில் உங்களுக்கு இதற்கான கூலியை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
சகோ ராஜவம்சம் அவர்களுக்கு
ReplyDeleteநன்றி தொடர்ந்து படியுங்கள்
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
ReplyDeleteசகோ முஹம்மத் ஆஷிக்
சகோ போன்றவர்கள் ஊக்கமளிப்பதால்
இன்னும் உற்சாகமாக இருக்கிறேன்
இஸ்லாத்தில் ஊடுருவியுள்ள தீய கொள்கைகளை கலைய வேண்டும் என்பதற்காக ஆதார பூர்வமாக எழுத முயற்சிக்கிறேன்
அல்ஹம்துலில்லாஹ்
சகோ அந்நியன் 2
ReplyDeleteஉங்களை நீண்ட நாட்களாக எதிர்பார்த்தேன் இப்போதுதான் முதன்முறையாக வந்துயிருக்கிறீர்கள்
நன்றி சகோ
சகோ na என்ற .நஸீறுதீன் .S அவர்களுக்கு
ReplyDelete//.இதை விட நீங்கள் தலையில் வைத்துக்கொண்டாடும் குர்ஆனில், ஹதீதில் அவர்களின் நடத்தை, செயல்களுக்கு மாற்றமானவைகளை விளங்கப் பண்ணலாம்//
கொஞ்சம் பொறுமையாக என்னையே திட்டிகிட்டே படிச்சுக்கிட்டு வாங்க அடுத்த
தொடர்களில் இறுதியாக ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் எப்படி தவறு என்று கண்டிப்பாக வெளக்குகிறேன்
பரம பிதா ஒங்களையும் ஆசிர்வதிக்கட்டும்
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
ReplyDeletejeevaflora அவர்களுக்கு
//புதிதாக இஸ்லாத்தை அறிந்து கொள்ள வலைத் த்ளங்களைத் தேடும் போது குழப்பம் தான் மிஞ்சுகிறது//
தேடுங்கள் நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள்
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்.. சகோதரர் ஜே ஜே அவர்களுக்கு
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ரொம்ப நன்றி சகோ
இளம் தூயவன் அவர்களுக்கு
ReplyDeleteநன்றி சகோ
சகோதரி அமீனா அவர்களுக்கு
ReplyDelete//ஆராய்ச்சி பண்றீங்களோ....//
ஆய்வுகள் ஒய்வதில்லை
நன்றி சகோ
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
ReplyDeleteஅன்பின் சகோதரர் ஷேக் தாவூத் அவர்களுக்கு
//அத்தகைய கவிதைகளை எடுத்தும் அவை இஸ்லாமிய வரம்பிலேயே இல்லை என்பதையும் தாங்கள் இந்த ஆய்வுத் தொடரில் நிறுவ வேண்டும்.//
கண்டிப்பாக அதற்காகத்தானே இந்த ப்ளாக் ஆரம்பித்திருக்கிறேன்
அல்லாஹ் போதுமானவன்
நிறைய நல்ல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன...
ReplyDeleteஉங்கள் தமிழும் அருமை நண்பா
வாழ்த்துக்கள்
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
ReplyDeletehttp://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
நண்பர் மகாதேவன்
ReplyDelete//உங்கள் தமிழும் அருமை நண்பா
வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றி நண்பா
சகோ, எம் அப்துல் காதர் அவர்களுக்கு
ReplyDeleteபுதியவன் என்னையும் நினைவு வைத்து அவார்ட் வழங்கியமைக்கு நன்றிகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteபக்கீர்ஷாக்களின் வரலாற்று பதிவு உங்களின் அபரித முயற்சியால் தெளிவாக விளங்குகின்றது., எவரும் ஆழமாக உள் நுழைய மறுக்கும் விசயங்கள் விளக்கமாய் அதுவும் எதிர் மறை சிந்தனை கருத்துக்களுடன் மாஷா அல்லாஹ் ... நிரம்ப நேரங்களை இதற்காக செலவழித்து இருக்கிறீர்கள் என்பது தெளிவு! அல்லாஹ் உங்களுக்கும் மென் மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக!
@G u l a m
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//நிரம்ப நேரங்களை இதற்காக செலவழித்து இருக்கிறீர்கள் என்பது தெளிவு! ///
ஆமா நிறைய நிறைய நேரங்கள் உங்கள் கனிப்பு மிகச்சரி