இஸ்லாமிய புத்தகங்கள் என்றாலே பெரும்பாலும். மார்க்கச் சட்ட நூல்கள் அதாவது ஜனாஸாவின் சட்டங்கள், குளிப்பின் விதிமுறைகள், தொழுகையின் சுன்னத்துக்கள்- ஃபர்ளுகள், நபிமொழித் தொகுப்புகள், மண்ணறை வேதனைகள் போன்ற நூல்கள் தான் கிடைக்கின்றன இஸ்லாமிய பதிப்பகங்களும் இவை போன்ற நூல்களைதான் வெளியிடுகிறார்கள். இவைகளியிருந்து வித்தியாசப்பட்டு உலகமயமாக்கலின் உண்மை நிலையையும், சமூக, அரசியல்,பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் அது ஏற்படுத்தி வருகின்ற பாதிப்புகளையும், முஸ்லிம் இளைஞர்கள் மீது அது சுமத்துகின்ற பொறுப்புகளையும் இஸ்லாமிய மார்க்க பார்வையில் விவரிக்கிறது இந்நூல்.இந்த புத்தகத்திலிருந்து என்னைக் கவர்ந்த நான் கோடிட்ட சில பக்கங்களின் வரிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள சூழல் மாற்றங்களில் முஸ்லிம் இளைஞர்களும் சரிசமமாக பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார்.
முஸ்லிம்களில் பெரும்பாலோர் விவசாயிகளாக, சிறு வியாபாரிகளாக, தொழிலாளர்களாக, குடிசைத் தொழிலில் ஈடுபடுகிறவர்களாத்தான் இருக்கிறார்கள்.உலகமயம் குறி வைத்து முழுங்குவதும் இவர்களைத்தான்.
முஸ்லிம்களில் பெரும்பாலோர் விவசாயிகளாக, சிறு வியாபாரிகளாக, தொழிலாளர்களாக, குடிசைத் தொழிலில் ஈடுபடுகிறவர்களாத்தான் இருக்கிறார்கள்.உலகமயம் குறி வைத்து முழுங்குவதும் இவர்களைத்தான்.
வட இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலோர் குடிசைத் தொழில்களில்தான் ஈடுபட்டிருக்கின்றார்கள். முராதாபாதின் பித்தளைத் தொழில், பிவண்டி,மாலிகவுள்ள வாட்டாரத்தின் விசைத்தறித் தொழில், அலிகரின் பூட்டுத்தொழில், கான்பூரின் தோல் பதனிடும் தொழில்-இவையெல்லா தொழில்களும் தாராளமயமாக்கல்(liberalisation) கொள்கை காரணமாக இந்தத் தொழில்கள் அனைத்துமே பெரும் சரிவுக்கு உள்ளாகி நிற்கின்றன பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதை அழகாக விவரிக்கிறார்
உலகமயம் குறி வைத்து விழுங்குவது இவர்களைத்தான்
இந்த புத்தகத்தில் அத்தியாயம்:8 தலைப்பு: இது வளர்ச்சியா அல்லாது வீழ்ச்சியா? பகுதியில்
ஜியாவுத்தீன் சார்தர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
Touch of midas’மிடாஸின் தொடுதல்’ என்று பொருள்
’மிடாஸ்’ என்கிற மன்னனின் கதையைப் படித்திருப்பீர்கள். மிடாஸின் பக்தியை மெச்சிய தேவதைகள் “என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறோம்” என்கிறார்கள். போராசை பிடித்த மிடாஸ் “நான் தொட்டதெல்லாம் தங்கமாகி விட வேண்டும்” என்று கேட்கிறான்.தேவதைகள் ‘அவ்விதமே’ நடக்கும் என வரம் கொடுத்து விடுகிறார்கள்.
மகிழ்ச்சியில் திளைத்த மிடாஸ் கும்மளமிட்டுக் கொண்டு வீடு திரும்புகிறான். ஆனால் அவனுடைய மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. சாப்பிடுவதற்காக உனவைத் தொட்டால் அது தங்கமாகி விடுகிறது.குடிக்கிற நீரும் தங்கமாகி விடுகிறது. உடுத்துகிற ஆடையும் தங்கமாகி விடுகிறது. அன்பு மனைவி, அருமை மகள் எல்லாருமே தங்கப் பதுமைகளாகி விடுகிறார்கள்.
தன்னுடைய நூலின் தொடக்கத்தில் போராசை பிடித்த மிடாஸின் கதையை எழுதுகிற ஜியாவுத்தீன் சர்தார், நவீன அறிவியல் வளர்ச்சி கூட மிடாஸ் பெற்ற வரம் போன்றது தான். இந்த மிடாஸின் தொடுதலால் எல்லாமே, எல்லா வசதிகளுமே கிடைத்து விடுகிறது. ஆனால் நீர்வளம், உணவு தானியங்கள், மழை போன்ற வாழ்வாதாரங்களும் அடிப்படைத் தேவைகளும் அழிந்து போகின்றன, என்று அழகாக சுட்டிக்காட்டியுள்ளார்.
9.வளர்ச்சிக்கான மற்று வழி இருக்கின்றதா?
10.படிப்படியான மாற்று வழிகள்
11.எளிமையான வாழ்க்கை முறை
12.நுகர்வியப் பண்பாட்டிலிருந்து விடுதலை
13.சமூக ஏற்றத்தாழ்விலிருந்து விடுதலை
14.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம்
15.அறிவுக் களங்களைக் கைப்பற்றுவோம்
உலகமயமாக்கலின் உண்மை முகங்களையும் அவற்றிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்று விரிவாக சில தலைப்புகளில் விளக்கியுள்ளார் புத்தகத்தை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
நூல்:
உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
ஆசிரியர்கள்:
சையத் சஆதத்தில்லாஹ் ஹீஸைன்
டாக்டர் மன்சூர் துர்ரானி
போராசிரியர் மலிக் முஹம்மத் ஹீஸைன்
தமிழில்
T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.ஹைதர் அலி,
உலகமயமாக்கல்... சிறு தொழில் முனைவோரை ஒடுக்கி, நவீனமயமாக்கல்... நம் உடலுழைப்பை குறைத்து, தாராளமயமாக்கல்... சுற்றுப்புறசீர்கேட்டை ஏற்படுத்தி... படுத்தி எடுக்கிறது மக்களை.
புலிவாலை பிடித்த கதை... இதிலிருந்து விடுபடுவது எப்படி என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.
மிகச்சிறப்பான ஒரு நூல் அறிமுகம். நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteநூலை பற்றிய உங்கள் விளக்கம் அருமையாக இருந்துச்சு அண்ணா
வாழ்த்துக்கள்
நீங்க சொன்ன பிறகு தான் மிடாஸ் கதைக்கும் அறிவியலையும் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது...
ReplyDeleteகண்டிப்பாக இன்று பல இடங்களிலும் குடிசை தொழில் நசுக்கப்பட்டு வருவதற்கு உலகமயமாக்கல்,நவீனமயமாக்கலெ காரணம். வேறு வழியின்றி வாழ சூழலற்ற நிலையை ஏற்படுத்திவிட்டது வேதனைக்குரியது
send ur number to my cell, i talk little much more than this book
ReplyDeleteநூல் அறிமுகம் அருமை .
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteநூலை பற்றிய உங்கள் விளக்கம் அருமை.
வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteசகோதரர் ஹைதர் அலி,
சிந்திக்க தூண்டும் நூல் அறிமுகம். இது மிக விரிவாக பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய தலைப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி...
ஸலாம்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
ReplyDeleteஉலக மயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும் நூல் அறிமுகம் நல்ல தகவல்,
"Touth of midas’மிடாஸின் தொடுதல்" இந்த ஆங்கில வார்த்தை டத் என்று வருகிறது, Touch டச் என்று வர வேண்டும் என்று நினைக்கிறன், சரியாக இருப்பின் திருத்திக் கொள்ளவும்.
இப்பணி தொடர வாழ்த்துகள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், நாளுக்கு நாள் மாறுண்டு வரும் உலகியல் உண்மைகளில் குறிப்பாக எமது முஸ்லிம் இளைஞர்கள் குறித்த ஆய்வும் வழிகாட்டல்களும் முக்கியம் பெறுகின்றன. அதற்கு இந்த நூலும் நூல் தொடர்பான அறிமுகமும் துணைநிற்க என் பிரார்த்தனைகள் எப்போதும்.. இந்த புத்தகம் இணையத்தளத்தில் கிடைத்தால் எனக்கு கொடுத்துதவவும். நன்றி
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
ReplyDeleteசகொ. முஹம்மது அஷிக்
///புலிவாலை பிடித்த கதை... இதிலிருந்து விடுபடுவது எப்படி என்றுதான் யாருக்கும் தெரியவில்லை//
எல்லாத்துக்கும் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்பதும் கண்டிப்பாக இருக்கும் சரிதானே சகோ
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
ReplyDeleteதங்கை ஆமினா அவர்களுக்கு
///கண்டிப்பாக இன்று பல இடங்களிலும் குடிசை தொழில் நசுக்கப்பட்டு வருவதற்கு உலகமயமாக்கல்,நவீனமயமாக்கலெ காரணம். வேறு வழியின்றி வாழ சூழலற்ற நிலையை ஏற்படுத்திவிட்டது வேதனைக்குரியது///
நம்முடைய முன்னோர்கள் பொருளாதார தன்னிறைவு பெறுகின்ற நோக்கத்தோடு கைத்தொழில்களைக் கற்றுக் கொண்டனர்.
(இந்த தொழில்களை உலகமயம் அழிப்பது வேறு விஷயம்)
ஆனால் நாம்?
சகோதரர்.ஷர்புதீன் அவர்களுக்கு
ReplyDeleteஇந்த தளத்தில் என்னைப்பற்றி என்கிற இடத்தில் என்னுடைய ஈ மெடில் ஐடி
இருக்கிறது மெயில் பன்னுங்கள் மேலும் பேசுவோம்
rriyasali15@gmail.com
சகோ.ரஜவம்சம்
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு நன்றி
@சகோதரி ஆயிஷா அபுல்
உங்களுடைய வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
ReplyDeleteசகோதரர். அஷிக் அஹமது
///தூண்டும் நூல் அறிமுகம். இது மிக விரிவாக பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய தலைப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி...///
இது போன்ற மறுபட்ட எழுத்தாளர்களையும் சிந்தனைகளையும் மேலும் பதிவிடலாம் என்று இருக்கிறேன் துஆ செய்யுங்கள்
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்....
ReplyDeleteசகோதரர். ரிள்வான் அவர்களுக்கு
இந்த புத்தகம் மின் நூலாக கிடைக்கவில்லை தேடிப்பார்த்து விட்டேன்
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
ReplyDeleteசகோ. பாரூக் அவர்களுக்கு
பிழையை சுட்டி காட்டிமைக்கு மிகவும் நன்றி திருத்தி விட்டேன்
நன்றி சகோ
I will InshAllah read this book....Thanks for a overview on the book.
ReplyDelete@ truth seeker அவர்களுக்கு
ReplyDeleteகண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்
புது அனுபவ அறிவு பெறுவீர்கள்
நன்றி சகோ
முஸ்லிம்கள் படும் இன்னல்களை இந்தியாவில் உள்ள மீடியாக்கள் மறைத்தாலும், சில சகோதரர்கள் அவற்றை வெளிக்கொண்டு வருகிறார்கள். நல்ல பகிர்வு.
ReplyDeleteநண்பர் இளம் தூயவன்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு,
முதலில் இந்த நூலை பற்றி அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி. இஸ்லாமிய
இளைஞர்கள் என்றாலே தீவிரவாதிகளாக சித்தரிக்க படுகின்ற இன்றைய கால கட்டங்களில் உலக மயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பே மிகவும் கவர்ந்து இழுகின்றது.
\\ கான்பூரின் தோல் பதனிடும் தொழில்-இவையெல்லா தொழில்களும்//
இது நான் கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கும் நசிந்த தொழில் களில் இதும் ஒன்று. எனது சொந்த காரர்கள் எங்கள் ஊரில் சிறிய அளவில் தோல் பதனிடும் டேனரிஸ் வைத்து கொண்டு சிறப்பாக நடத்தி கொண்டு வந்தனர். உலக மயமாக்கல் காரணமாக இன்று அனைத்து டேனரிகளும் மூடு விழாவை சந்தித்து உள்ளன.
நமது இஸ்லாமிய புத்தக வெளியீட்டாளர்கள் மார்க்க கல்வி சம்பந்த பட்ட நூல்களை மட்டும் விற்காமல் இது போன்ற உலக கல்வி விசயங்களிலும் தங்கள் கவனத்தை திசை திருப்பி இது போன்ற நூல்களை விற்க பாடு படவேண்டும்.
நன்றி
சகோ ஜே ஜே
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
ReplyDeleteசகோதரர்.ஜே ஜே
//நமது இஸ்லாமிய புத்தக வெளியீட்டாளர்கள் மார்க்க கல்வி சம்பந்த பட்ட நூல்களை மட்டும் விற்காமல் இது போன்ற உலக கல்வி விசயங்களிலும் தங்கள் கவனத்தை திசை திருப்பி இது போன்ற நூல்களை விற்க பாடு படவேண்டும்.///
மார்க்க கல்வி உலக கல்வி என்று யார் பிரித்தார்கள் என்று தெரியவில்லை
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இப்படி பிரிக்கவில்லை
முஹம்மது நபி ஸல் அவர்கள் கல்வியை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்
பயனுள்ள கல்வி, பயனற்ற கல்வி
அஸ்ஸலாமு அலைக்கும் ஹைதர் அண்ணே
ReplyDeleteஇந்த தம்பியின் வருகையில்லாமல் இருப்பதைக்கண்டு அண்ணனுக்கு என்மேல் நிறைய கோபமுண்டென்று நினைக்கிறேன்.அலுவலக பணி அதிகமாயிருப்பதால் என்னால் சரியாக வலைத்தளங்களை பார்வையிடமுடியவில்லை .தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.
உங்களுடைய நூல் அறிமுகவுறையை படித்தவுடன் அந்த புத்தகத்தை படித்தே தீரவேண்டுமென்று ஆவல் அதிகமாயிடுச்சு.இன்ஷா அல்லாஹ் நானும் படிக்கிறேன் பிறரிடத்திலும் அந்த புத்தகத்திலுள்ளதை எத்தி வைக்கிறேன்.
உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்
ReplyDeleteதயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.
http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_17.html
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோதரர் அவர்களே.
மிக அருமையான பகிர்வு. நூல் விமர்சனம் சிறப்பாக உள்ளது..
nailla oru pathiuu...
ReplyDeleteஇந்த வருட புத்தகச் சந்தையில் ஐ.எப்.டி ஸ்டாலில் இந்த புத்தகத்தை தலைப்பிற்காகவே வாங்கினேன்.இஸ்லாமியர்களுக்கு மாத்திரமல்ல..விளிம்பு நிலை மாந்தர் எவருக்கும் பொருந்தும்.நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
ReplyDeleteதம்பி முஹம்மது ஷஃபி
//இந்த தம்பியின் வருகையில்லாமல் இருப்பதைக்கண்டு அண்ணனுக்கு என்மேல் நிறைய கோபமுண்டென்று நினைக்கிறேன்.அலுவலக பணி அதிகமாயிருப்பதால் என்னால் சரியாக வலைத்தளங்களை பார்வையிடமுடியவில்லை .தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.//
உங்களைப் போன்ற சகோதரர்களை ஏற்ப்படுத்தி தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்
தங்கை ஆமினா அவர்களுக்கு
ReplyDeleteதங்கள் கொடுத்த விருதுக்கு நன்றி
பெற்றுக்கொண்டேன்
சகோதரி மலிக்கா அவர்களுக்கு
ReplyDeleteஉங்கள் கருத்துக்ககும் ஆதரவுக்கும் நண்றி
பெயரில்லா அவர்களுக்கு
ReplyDeleteநன்றி
அடுத்தமுறை பெயரொடு வர முயற்சி செய்யுங்கள்
சகோதரர்.எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு நன்றி
ReplyDelete///.இஸ்லாமியர்களுக்கு மாத்திரமல்ல..விளிம்பு நிலை மாந்தர் எவருக்கும் பொருந்தும்.நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.///
நான் பதிவில் சொல்ல மறந்ததை நீங்கள் அழகாக பின்னூட்டத்தில் சொல்லி விட்டீர்கள்
ரொம்ப நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஅவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய அருமையான நூல்! நல்ல அறிமுகம் தந்துள்ளீர்கள் சகோ. நன்றி. சிறுவர்களும் சேர்ந்து உழைக்கும் படங்கள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது :( உழைப்பாளிகளுக்கு இறைவன் உதவி செய்வானாக!
இப்போது அல்லாஹ் உதவியால் உடல்நிலை கிட்டத்தட்ட முழுமையான குணம் தெரிகிறது. நேற்று நீங்க விட்ட 'டோஸ்'க்காக இந்த தகவல் :-)
இன்றைய பதிவைப் பாருங்க சகோ.
http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html
நன்றி!இறைப்பணியாளர் ஹைதர் அவர்களே! இந்த நூல் தமிழ்நாட்டில் கிடைக்குமிடத்தை கூறினால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteநிட்ச்சயம் நூல் என் கைக்கும் கிடைக்கும் போது படித்து அறிந்து கொள்வேன் நண்பா
ReplyDeleteமுஸ்லிம்கள் படும் இன்னல்களை இந்தியாவில் உள்ள மீடியாக்கள் மறைத்தாலும், சில சகோதரர்கள் அவற்றை வெளிக்கொண்டு வருகிறார்கள். நல்ல பகிர்வு.
ReplyDeleteவணக்கம் நண்பர் ஹைதர் அலி,
ReplyDeleteநல்ல ஒரு நூலைப்பற்றி அறிமுகம் செய்துவைத்திருக்கிறீர்கள். படிக்க ஆவலாயிருக்கிறேன்.
@kalai
ReplyDeleteகம்யூனிஸ தோழர் கலை
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை-600012
தொலைபேசி:26624401
fax:26620682
இதுதான் அட்ரஸ்
@மகாதேவன்-V.K
ReplyDelete//நிட்ச்சயம் நூல் என் கைக்கும் கிடைக்கும் போது படித்து அறிந்து கொள்வேன் நண்பா//
நல்லது நண்பரே படியுங்கள் சிந்தியுங்கள்
@சுவனப்பிரியன்
ReplyDeleteசகோதரர் அவர்களுக்கு
உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@செங்கொடி
ReplyDeleteநன்றி நண்பரே
இந்த புத்தகம் மின் நூலாக கிடைக்கவில்லை கிடைத்தால் பதிவேற்றுகிறேன்
நன்றி!
ReplyDeleteஉலகமயமாக்கலை அதுவும் மேற்கத்திய நாடுகளுக்கு வழிஅமைத்து கொடுக்க நம் நாட்டு மேல் வகுப்பு மக்களுக்கான பிரதிநிதிகளாக மட்டுமே செயல்படும் மன்மோகன் ப சி வகையறாக்கள்
ReplyDeleteஅதை மட்டுமே இலக்காக வைத்து செயலாற்றுவது கண்டிக்கதக்கது
மேலும் மறு காலனிஆதிக்கமாகஇந்தியாவை ஊடுருவும் மேல்நாட்டு சதி முஸ்லிம்களின் பிழைப்பில் மண்ணை அள்ளி போடுவதற்காக என்பதே இதன் மூலம் அறிய முடிகிறது