Showing posts with label இளைஞர்கள். Show all posts
Showing posts with label இளைஞர்கள். Show all posts

Thursday, January 13, 2011

உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்-புத்தக அறிமுகம்

ஸ்லாமிய புத்தகங்கள் என்றாலே பெரும்பாலும். மார்க்கச் சட்ட நூல்கள் அதாவது ஜனாஸாவின் சட்டங்கள், குளிப்பின் விதிமுறைகள், தொழுகையின் சுன்னத்துக்கள்- ஃபர்ளுகள், நபிமொழித் தொகுப்புகள், மண்ணறை வேதனைகள் போன்ற நூல்கள் தான் கிடைக்கின்றன இஸ்லாமிய பதிப்பகங்களும் இவை போன்ற நூல்களைதான் வெளியிடுகிறார்கள். இவைகளியிருந்து வித்தியாசப்பட்டு உலகமயமாக்கலின் உண்மை நிலையையும், சமூக, அரசியல்,பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் அது ஏற்படுத்தி வருகின்ற பாதிப்புகளையும், முஸ்லிம் இளைஞர்கள் மீது அது சுமத்துகின்ற பொறுப்புகளையும் இஸ்லாமிய மார்க்க பார்வையில் விவரிக்கிறது இந்நூல்.இந்த புத்தகத்திலிருந்து என்னைக் கவர்ந்த நான் கோடிட்ட சில பக்கங்களின் வரிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
 உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள சூழல் மாற்றங்களில் முஸ்லிம் இளைஞர்களும் சரிசமமாக பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார்.

முஸ்லிம்களில் பெரும்பாலோர் விவசாயிகளாக, சிறு வியாபாரிகளாக, தொழிலாளர்களாக, குடிசைத் தொழிலில் ஈடுபடுகிறவர்களாத்தான் இருக்கிறார்கள்.உலகமயம் குறி வைத்து முழுங்குவதும் இவர்களைத்தான்.
வட இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலோர் குடிசைத் தொழில்களில்தான் ஈடுபட்டிருக்கின்றார்கள். முராதாபாதின் பித்தளைத் தொழில், பிவண்டி,மாலிகவுள்ள வாட்டாரத்தின் விசைத்தறித் தொழில், அலிகரின் பூட்டுத்தொழில், கான்பூரின் தோல் பதனிடும் தொழில்-இவையெல்லா தொழில்களும் தாராளமயமாக்கல்(liberalisation) கொள்கை காரணமாக இந்தத் தொழில்கள் அனைத்துமே பெரும் சரிவுக்கு உள்ளாகி நிற்கின்றன பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதை அழகாக விவரிக்கிறார்


                உலகமயம் குறி வைத்து விழுங்குவது இவர்களைத்தான்

இந்த புத்தகத்தில் அத்தியாயம்:8 தலைப்பு: இது வளர்ச்சியா அல்லாது வீழ்ச்சியா? பகுதியில்
  ஜியாவுத்தீன் சார்தர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
Touch of midas’மிடாஸின் தொடுதல்என்று பொருள்
மிடாஸ்என்கிற மன்னனின் கதையைப் படித்திருப்பீர்கள். மிடாஸின் பக்தியை மெச்சிய தேவதைகள் என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறோம்என்கிறார்கள். போராசை பிடித்த மிடாஸ் நான் தொட்டதெல்லாம் தங்கமாகி விட வேண்டும்என்று கேட்கிறான்.தேவதைகள் அவ்விதமேநடக்கும் என வரம் கொடுத்து விடுகிறார்கள்.
மகிழ்ச்சியில் திளைத்த மிடாஸ் கும்மளமிட்டுக் கொண்டு வீடு திரும்புகிறான். ஆனால் அவனுடைய மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. சாப்பிடுவதற்காக உனவைத் தொட்டால் அது தங்கமாகி விடுகிறது.குடிக்கிற நீரும் தங்கமாகி விடுகிறது. உடுத்துகிற ஆடையும் தங்கமாகி விடுகிறது. அன்பு மனைவி, அருமை மகள் எல்லாருமே தங்கப் பதுமைகளாகி விடுகிறார்கள்.
தன்னுடைய நூலின் தொடக்கத்தில் போராசை பிடித்த மிடாஸின் கதையை எழுதுகிற ஜியாவுத்தீன் சர்தார், நவீன அறிவியல் வளர்ச்சி கூட மிடாஸ் பெற்ற வரம் போன்றது தான். இந்த மிடாஸின் தொடுதலால் எல்லாமே, எல்லா வசதிகளுமே கிடைத்து விடுகிறது. ஆனால் நீர்வளம், உணவு தானியங்கள், மழை போன்ற வாழ்வாதாரங்களும் அடிப்படைத் தேவைகளும் அழிந்து போகின்றன, என்று அழகாக சுட்டிக்காட்டியுள்ளார்.
9.வளர்ச்சிக்கான மற்று வழி இருக்கின்றதா?
10.படிப்படியான மாற்று வழிகள்
11.எளிமையான வாழ்க்கை முறை
12.நுகர்வியப் பண்பாட்டிலிருந்து விடுதலை
13.சமூக ஏற்றத்தாழ்விலிருந்து விடுதலை
14.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம்
15.அறிவுக் களங்களைக் கைப்பற்றுவோம்

 உலகமயமாக்கலின் உண்மை முகங்களையும் அவற்றிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்று விரிவாக சில தலைப்புகளில் விளக்கியுள்ளார் புத்தகத்தை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
நூல்:
உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
ஆசிரியர்கள்:
சையத் சஆதத்தில்லாஹ் ஹீஸைன்
     டாக்டர் மன்சூர் துர்ரானி
போராசிரியர் மலிக் முஹம்மத் ஹீஸைன்

        தமிழில்
T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
       வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்