சுமார் 16 வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து,மனதில் பதிந்து போன விடயம் இது.பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு குட்டிக் கதை, அல்லது வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல்.
கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?
பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,
"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?" என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.
இஸ்லாமிய கலீபா உமர் (ரலி) அவர்களை பற்றி எனக்கு கேள்வி பதிலின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர் பாக்யராஜ் அவர்கள் தான்.
அடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற நாளிதழ் நடத்திய அந்த விவாதத்தின் தலைப்பு: அறிஞர்களின் நூல்களை அரசுடைமை ஆக்குவது போல அரசியல்வாதிகளின் -அவர்களின் நேருங்கிய உறவினர்களின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நாள் எந்தாளோ?
இந்த விவாதத்தில் பங்கு கொண்ட வாசகர் ஒருவர், தேர்தல் மனுதாக்களின் போது என்ன சொத்து காட்டப்படுகிறதோ அதையும், 5 ஆண்டுகள் பதவி முடிந்தபின் என்ன சொத்து உள்ளதோ அதையும் கண்டறிந்து அவற்றை நாட்டுடமை ஆக்கவேண்டும். முடியுமா? அதற்கு நமது ஜனநாயகம் இடம் கொடுக்குமா? இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். நல்ல கற்பனை என்றார்.
ஆனால் நல்ல கற்பனை என்று சொல்லப்பட்ட விடயம் வரலாற்றில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றது.
கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக் காலம். உமர் அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் (அன்று மாநிலம் என்று சொன்னால் இரான், ஈராக்,சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் மாநிலமாக இருந்தன) ஆளுநர்களை நியமித்தார்.அவ்வாறு நியமிக்கும் போது ஆளுநர்களின் சொத்து மதிப்புகளை எழுத்து மூலமாகப் பதிவு செய்யும்படி அரசுக் கருவூல அதிகாரிக்கு ஆணையிட்டார். ஆளுநர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் சொத்து மதிப்பை மீண்டும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
சில ஆண்டுகள் கழித்து ஆளுநர் ஒருவர் ஓய்வு பெற்ற போது கலீஃபாவைச் சந்தித்து தம் சொத்து விவரங்களை ஒப்படைத்தார். ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துகளும் இப்பொழுது அவர் சமர்பித்த சொத்துகளும் ஒப்பு நோக்கப்பட்டன. முன்பை விட இரண்டு ஒட்டகங்கள் அவரிடம் அதிகமாக இருந்தன. உடனே அவற்றை அரசுக் கருவூலகத்தில் சேர்க்கும்படி கலீஃபா உத்தரவிட்டார்.
கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?
பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,
"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?" என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.
இஸ்லாமிய கலீபா உமர் (ரலி) அவர்களை பற்றி எனக்கு கேள்வி பதிலின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர் பாக்யராஜ் அவர்கள் தான்.
அடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற நாளிதழ் நடத்திய அந்த விவாதத்தின் தலைப்பு: அறிஞர்களின் நூல்களை அரசுடைமை ஆக்குவது போல அரசியல்வாதிகளின் -அவர்களின் நேருங்கிய உறவினர்களின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நாள் எந்தாளோ?
இந்த விவாதத்தில் பங்கு கொண்ட வாசகர் ஒருவர், தேர்தல் மனுதாக்களின் போது என்ன சொத்து காட்டப்படுகிறதோ அதையும், 5 ஆண்டுகள் பதவி முடிந்தபின் என்ன சொத்து உள்ளதோ அதையும் கண்டறிந்து அவற்றை நாட்டுடமை ஆக்கவேண்டும். முடியுமா? அதற்கு நமது ஜனநாயகம் இடம் கொடுக்குமா? இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். நல்ல கற்பனை என்றார்.
ஆனால் நல்ல கற்பனை என்று சொல்லப்பட்ட விடயம் வரலாற்றில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றது.
கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக் காலம். உமர் அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் (அன்று மாநிலம் என்று சொன்னால் இரான், ஈராக்,சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் மாநிலமாக இருந்தன) ஆளுநர்களை நியமித்தார்.அவ்வாறு நியமிக்கும் போது ஆளுநர்களின் சொத்து மதிப்புகளை எழுத்து மூலமாகப் பதிவு செய்யும்படி அரசுக் கருவூல அதிகாரிக்கு ஆணையிட்டார். ஆளுநர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் சொத்து மதிப்பை மீண்டும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
சில ஆண்டுகள் கழித்து ஆளுநர் ஒருவர் ஓய்வு பெற்ற போது கலீஃபாவைச் சந்தித்து தம் சொத்து விவரங்களை ஒப்படைத்தார். ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துகளும் இப்பொழுது அவர் சமர்பித்த சொத்துகளும் ஒப்பு நோக்கப்பட்டன. முன்பை விட இரண்டு ஒட்டகங்கள் அவரிடம் அதிகமாக இருந்தன. உடனே அவற்றை அரசுக் கருவூலகத்தில் சேர்க்கும்படி கலீஃபா உத்தரவிட்டார்.
வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை
ReplyDeleteமுஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.
கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக,
காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,
காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும்
உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.
இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.
இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.
இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி,
பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.
உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல;
அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை.
சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.
SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/
முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.
தகவல்களுக்கு நன்றி
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteசூப்பர்..... பாக்யராஜின் பதில்கள் எப்போதும் ஸ்பேஷல்தான் எல்லோருக்கும்....
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோதரரே
Deleteமிக அருமையான பகிர்வு. உண்மையான மற்றும் சரியான இறையச்சம் மாத்திரமே அரசியலையும் மனிதனையும் பண்படுத்தும் என்பதற்கு இப்பதிவில் உள்ள விடயங்கள் சாட்சி. சுப்ஹானல்லாஹ்!.
ReplyDeleteவருகைக்கும் மிக கருத்தாழமிக்க கருத்துரைக்கும் நன்றி
Deleteஉமர் (ரழி) அவர்களைப் பற்றி சுவாரசியமான, இன்றைய வாழ்வில் நம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத இரு சம்பவங்களை எங்களோடு பகிர்ந்ததுக்கு நன்றிண்ணே. வீடு கட்டி முடித்ததாக பதிவின் பின்னூட்டங்களில் வாசித்தேன்.(அடிக்கடி வந்து வாசித்தாலும் பின்னூட்டமிட முடியவில்லை... :-((( ) வாழ்த்துக்கள். புகழனைத்தும் இறைவனுக்கே!.
ReplyDelete///உமர் (ரழி) அவர்களைப் பற்றி சுவாரசியமான, இன்றைய வாழ்வில் நம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத///
Deleteஆமா இன்று அழகிய கற்பனை என்கிற அளவில் தான் இருக்கிறது
//வீடு கட்டி முடித்ததாக பதிவின் பின்னூட்டங்களில் வாசித்தேன்.(அடிக்கடி வந்து வாசித்தாலும் பின்னூட்டமிட முடியவில்லை... :-((( ) வாழ்த்துக்கள். புகழனைத்தும் இறைவனுக்கே!.///
ஆமாம் அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி
உமர் (ரழி) அவர்கள் மிகவு சிறந்த ஆட்சியாளர் அவரைப் போன்று இனி ஒரு ஆட்சியாளைரை இந்த உலகம் காணுமா என்றால் அது சிந்திக்க வேண்டியதுதான்.......
ReplyDeleteநல்லதொரு படிவு....
வாங்கே சகோதரரே
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
(கலீபா) உமர் பாரூக் (ரலி) PART 1
ReplyDeleteஇவர்களல்லவா ஆட்சியாளர்கள்!
நவம்பர் 11,2011,14:16 IST
அரபு மன்னர் (கலீபா) உமர் பாரூக் (ரலி) அவர்கள், ஒரு நாள் இரவு நகர்வலம் வந்தார்கள்.
அப்பொழுது எங்கிருந்தோ வந்த இனிமையான குரல் அவர்களின் காதில் விழுந்தது. சற்று நெருங்கிய போது அது பெண் குரலாக கேட்டது. இனிய ராகத்தில் அவள் பாடிக் கொண்டிருந்தாள். கூர்ந்து கவனித்த பொழுது, அது ஒரு காதல் பாட்டு என்று தெரியவந்தது.
அந்த வீட்டருகே வந்து, ""யார் அங்கே?'' என்று அதட்டும் தொனியில் கேட்டார்கள்.
அவ்வளவு தான். பாட்டு நின்று அமைதியானது. பயத்தில் பேச்சு வரவில்லை.
""யார் அங்கே?'' என்று திரும்பவும் உமர் கேட்டார்கள். இப்போதும் பதில் வரவில்லை. கதவைத்தட்டினார்கள். நிசப்தமே நீடித்தது. உள்ளே ஏதோ நடக்கிறதோ என்ற சந்தேகம் வலுத்தது. எனவே சுவரேறி கூரையைப்பிய்த்துக் கொண்டு உள்ளே இறங்கினார்கள். உமரைக் கண்ட பயத்தில், ஒரு பெண்மணி அப்படியே உறைந்து போய் தலை குனிந்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள்.
""யார் நீ? ஏன் இப்படி தனியாகப் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறாய்? அதுவும் காதல் பாட்டு இந்த நடுநிசி நேரத்தில்?''
உமருடைய ஆட்சி நீதிக்குப் பேர் போனது. கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த தைரியத்தில் அவள் , ""என்னை யாரென்று கேட்டு, என் மீது குற்றம் சுமத்தும் நீங்கள் இப்போது மூன்று குற்றம் செய்திருக்கிறீர்கள்,'' என்றாள்.
இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அசந்து விட்டார்கள்.
""என் மீதே குற்றச்சாட்டா? என்ன குற்றம் செய்தேன்?'' என அவளிடம் தயவோடு கேட்டார்கள்.
""முதலாவது நான் ஒரு அன்னியப்பெண், நான் தனியாக இருக்கும் போது அன்னிய ஆடவராகிய நீங்கள் எப்படி உள்ளே வரலாம்.
இரண்டாவது அல்லாஹ் கூறுகிறான். "வீட்டிற்குள் நேர்வழியாக வாருங்கள். பின்வாசல் வழியாக வருவது நன்மையல்ல' (குர்ஆன்2:189) என்று.
ஆனால், நீங்கள் நேர்வழியாக வரவில்லை.
அடுத்த வீட்டிற்குச் செல்லும் போது ஸலாம் சொல்லி முறையாக அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அனுமதி கிடைக்காவிட்டால் திரும்பிச் சென்றுவிட வேண்டும். "அனுமதியில்லாமல் உள்ளே நுழையாதீர்கள்' என்று குர்ஆனில் (24:27,28ல்) இறைவன் கூறுகிறான்.
நீங்கள் என் அனுமதியின்றி என் வீட்டினுள் பிரவேசித்துள்ளீர்கள். இதுமுறையா? திருக்குர்ஆனுக்கு விரோதமல்லவா?'' என்றாள்.
உமர் (ரலி) அவர்கள், தான் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டார்கள். இதற்காக பெரிதும் வருந்தி, இரவு முழுவதும் நின்று வணங்கி, இறைவனிடத்திலே பாவ மன்னிப்பு தேடினார்கள்.
காலையில் அந்தப் பெண்ணை அழைத்து வரச்செய்து, ""சரியம்மா நான் செய்தது தான் தவறு. நீ ஏன் நடுநிசியில் பிற ஆடவரை சுண்டி இழுக்கும் வகையில் காதல் ரசம் சொட்ட கவிதை பாடினாய்?'' என்றார்.
அதற்கு அவள், ""கல்யாணமாகி மூன்று மாதத்தில் என் கணவர் என்னை பிரிந்து போருக்கு போய்விட்டார். நீங்கள் தான் அவரை ஒரு படைப்பிரிவோடு அனுப்பிவைத்தீர்கள். அவரது பிரிவின் ஏக்கத்தை என் கவிதையில் வடித்துக் கொண்டிருந்தேன்,'' என்றாள்.
இப்போது உமர் (ரலி) அவர்களுக்கு பொறி தட்டியது.
"ஒரு இளம் பெண்ணை விட்டும் அவளது கணவரை பிரித்த தவறும் நான் செய்திருக்கிறேனா, அப்படியானால் கற்பொழுக்கமுள்ள ஒரு இளம்பெண்ணால் எவ்வளவு காலம் தனது கணவரை பிரிந்திருக்க முடியும்' என்று பெண்களிடம் ஆலோசனை கேட்டார்கள். மூன்று மாதம் வரை இருக்கலாம் என்று அவர்கள் சொன்ன அபிப்ராயப்படி ஒரு அரசாணை பிறப்பித்தார்கள்.
மார்க்கம் கூறுவதற்கு எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் மரியாதை தந்துள்ளார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=3161
நன்றி தினமணி
Deleteஅருமையான பதிவு சகோ. விளக்கங்கள் கருத்தாழமிக்கவை.. கலீபாவின் ஆட்சிகாலத்தில் நடந்தவைகள் தற்போது எங்களுக்கும் கண்முன்னே காட்சியளித்தது பதிவில்.. நன்றி சகோ
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி
Delete(கலீபா) உமர் பாரூக் (ரலி) PART 2
ReplyDeleteபிற சமய மக்களின் வழிப்பாட்டு உரிமையை எவ்வாறு இஸ்லாம் பாதுகாத்துள்ளது என்பதை பறைச்சாற்றும் வகையில்
" அல்லாஹ்வின் அடிமையும் மூமீன்களின் கலீபாவுமாகிய உமரிடமிருந்து: ஜெரூஸலம் நகரவாசிகளின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இந்த ஒப்பந்தம் பாதுகாப்பளிக்கிறது.
அவர்களுடைய தேவாலயங்களும் சிலுவைகளும் பாதுகாக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் நகரின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும். அவர்களின் வணக்கத் தலங்களில் வழிபாடுகள் செய்ய எந்த தடையும் இல்லை.
அவை முஸ்லிம்களின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்படவோ உடைக்கப் படவோ மாட்டாது.
மக்கள் அனைவரும் தங்களது மார்க்கத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த விதமான பிரச்சினைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்......"
நகரின் வாசல்கள் திறக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்கள் நேராக Temple of David (மஸ்ஜிதுல் அக்ஸா) ஐ நோக்கிச் சென்றார்கள். அங்கு David's Arch இன் கீழ் தொழுதார்கள்.
பின்னர் நகரின் மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கிருந்த வேளை ழுஹர் தொழுகைக்கான நேரம் வந்தது. "நீங்கள் இங்கேயே தொழுது கொள்ளலாம்" என்று தேவாலயத்தின் பிஷப் கூறினார். " இல்லை, இல்லை", உமர் (ரலி) சொன்னார்கள்,
" நான் இவ்விடத்தில் தொழுதால், இந்த இடத்தை உங்களிடமிருந்து கைப்பற்றுவதற்குக் காரணமாக ஒரு காலத்தில் இதை முன் வைக்க முடியும்".
பின்னர் தேவாலயத்தின் படிக்கட்டுகளில் நின்று தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர் பிஷப்பிடம் ஒரு கடிதத்தையும் கையளித்தார்கள். அதன் வாசகங்கள் பின்வருமாறு இருந்தன. "இந்தப் படிக்கட்டுகள் அதான் சொல்லும் இடமாகவோ கூட்டுத் தொழுகை நடாத்தப்படும் இடமாகவோ எச்சந்தர்ப்பத்திலும் இருக்கக் கூடாது."
இஸ்லாம் கூறும் மதநல்லிணக்கம்
சமத்துவம்;
நீதி நேர்மை என்ன என்பதை உலக ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய உமர்(ரலி) அவர்களின் செங்கோல் ஆட்சிக் காலத்தில் ஒரு யூதனுக்கும்,முஸ்லிமுக்கும் பிரச்சனை ஏற்பட இருவரும் நீதி தேடி கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து முறையிடுகின்றனர்.
இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த கலீபா அவர்கள் யூதனின் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்து அவனுக்கு சாதகமாக தீர்ப்புக் கூறினார்கள் பிரதிவாதி முஸ்லிம் தன் இனத்தை சார்ந்தவர் அல்லது தன் மார்க்கத்தை சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை. இங்குதான் மதநல்லிணக்கம் உணர்த்தப்படுகின்றது.
சமநீதி;
கலீபா உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சி உங்களின் மனதைத் தொடும் என நினைக்கிறேன் ஹஜ்ஜுடைய காலத்தில் ஒரு சமயம் கலீபா உமர் ரலி தம்இருப்பிடம் அமர்ந்திருக்க அருகில் அம்ரு பின் ஆஸ் ரலி அவர்களும் அவரது மகன் அம்ரு என்பவரும் அமர்திருந்தனர்
அச்சமயம் மிஸ்ரு நாட்டைச் சார்ந்த ஒரு மாற்று மதத்தவன் கலீபாவிடம் வந்து இதோ உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கக் கூடிய அம்ரு என்னை அநீதமாக அடித்து விட்டார் அவரிடம் நான் உங்களைப் பற்றி கலீபாவிடம் முறையிடுவேன் எனக் கூறியபோது அவர் என்னிடம் தாரளமாகக் கூறிக்கொள் நான் சங்கை மிக்க கவர்னரின் மகனாவேன் எனவே கலீபா{ மாற்று மத்ததவனான} உனக்கு எதிராக என்னை ஒன்றும் செய்துவிடமட்டார் எனக்கூறினார்
இது பற்றி தங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன் எனக்கூறி நின்றான்.
அதைக்கேட்டு கலீபா அவர்கள் கோபமுற்றவர்களாக அந்த மிஸ்ரு நாட்டவனிடம் சவுக்கைக் கொடுத்து கண்ணியமிக்க கவர்னரின் மகன் உன்னை அடித்ததைப் போன்று நீயும் அவரை அடித்து பழிதீர்த்துக்கொள்! எனக் கூறி நீதிக்கு முன் ஆட்சியாளர்,பொது மக்கள் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியதோடு நீதிக்கு முன் சாதிமத வேறுபாடு இல்லை என்பதை உணர்த்தி மதநல்லிணக்கத்திற்கு ஓர் முன்னுதாரணம் கட்டினார்கள்.
(கலீபா) உமர் பாரூக் (ரலி) PART 3
ReplyDeleteஇறையச்சத்தின் பரிசு!
உமர் கத்தாஃப் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம். தன் ஆட்சியின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு மக்களைச் சென்றடைகிறது அல்லது அவர்களை எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதை அறிய வேவுக்காரர்களையோ மற்றைய வீரர்களையோ அந்தப் பணியில் நியமிக்காது தானே ஒவ்வொரு இரவும் மாறு வேடத்தில் நகர்வலம் வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
ஒருநாள் நகர்வலம் விட்டு வருங்கால், கிழக்கு வெளுக்க ஆரம்பித்த சுபுஹக் வேளை. ஒரு குடிசையின் அருகில் வந்த உமர் கத்தாஃப்(ரலி) அவர்களின் காதில் உள்ளிருந்தவர்களின் உரையாடல் விழுந்தது.
தாய்க்கும் மகளுக்கும் இடையே அந்த விவாதம் நிகழ்கிறது. தாய் கூறுகிறாள், "மகளே! கறந்த பாலில் தேவையான அளவு சிறிது தண்ணீரும் கலந்து விடு. அப்போதுதான் நாம் கொடுக்க வேண்டியவர்களுக்கு முழுமையாய் வழங்க முடியும்.''
""என்னம்மா சொல்கிறீர்கள்? பாலின் அவசியம் அதிகம் தேவைப்பட்டால் அதற்காக தண்ணீரைக் கலப்பதா? நியாயமற்ற செயலாயிற்றே? இப்படிச் சொல்ல எப்படி உங்களுக்கு மனம் வந்தது? கலீபா உமரின்(ரலி) நேர்மையான ஆட்சியில் உங்களைப் போன்ற குடிமக்கள் எப்படி உருவாகிறார்கள்?'' என்று மகள் கடிந்து கொண்டாள்.
""மகளே! உமருக்காகப் பயப்படுகிறாயா? அவர் என்ன இந்த நடுநசியில் நம்மைப் பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறார்?'' - தாயின் அலட்சியமான வார்த்தைகள்.
""அம்மா! உமர்(ரலி) வேண்டுமென்றால் நம்மைப் பார்க்காமல் இருக்கலாம். நம்மைப் படைத்த அல்லாஹ் நம்மின் ஒவ்வொரு செயல்களையும், அது இரவோ, பகலோ, எந்த நேரமோ உற்று நோக்கியவனாகவே இருக்கிறான் என்ற நபி மொழியை மறந்து விட்டாயா? அல்லது நம்பிக்கை இழந்து விட்டாயா? நீ சொல்லும் தீய காரியத்தை, நீ தாயிருந்தும் நான் கேட்பதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். நானும் செய்யப் போவதில்லை. உன்னையும் செய்வதற்கு அனுமதிப்பதற்கில்லை'' - மகள் கோபமாய்ச் சொன்னாள்.
மகளின் குரலில் தொனித்த சத்தியத்தில் தாய் அடங்கிப் போனாள்.
உமர் கத்தாஃப்(ரலி) அவர்களும் ""என் ஆட்சியில் இப்படிப்பட்ட சத்தியசீலர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்வின் அச்சத்தை இதயத்தில் தாங்கியவர்கள் வாழ்கிறார்கள். அதற்கு உதவி செய்த எல்லாம் வல்ல அல்லாவிற்கே எல்லாப் புகழும்'' என்று மனநிறைவு கொண்டவர்களாக அங்கிருந்து நகர்ந்தார்கள்.
மறுநாள் காலை. சஹாபாக்களை அனுப்பி அக்குடிசையில் வாழும் இருவரையும் அழைத்து வரச் செய்தார்கள். முந்தின நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகள் பற்றி வினவினார்கள். தாயும் தான் தவறு செய்யவிருந்ததையும், தனது மகளால் தவறை திருத்திக் கொண்டதையும் ஒப்புக் கொண்டாள்.
""இந்நிகழ்ச்சிகள் பற்றி ஏற்கெனவே நான் அறிவேன். நான் இப்போது உங்களை அழைத்தது, எனது மகன் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு தங்களின் மகளை மணமுடிக்க பெண் கேட்கத்தான் வரவழைத்தேன்'' என்றார்கள் உமர் கத்தாஃப் (ரலி) அவர்கள்.
கலீபாவின் மகன் தனக்கு மருமகனா? மகளின் இறையச்சத்திற்கு இறைவன் அளித்த அரிய பெரிய பரிசல்லவா இது என்று எண்ணியவளாக, ""கலீபா அவர்களே! என் மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் மகனை மணப்பதற்கு'' என்றாள்.
""இல்லையம்மா இல்லை. உலக ஆசைகளில் இந்த இளவயதிலேயே பற்றற்றவளாக இறைவனின் திருப்பொருத்தத்தையே முழுவதுமாய் நம்பியவளாக உள்ள உங்கள் மகளை நாங்கள் மருமகளாய் பெற பேறு பெற்றிருக்க வேண்டும்'' என்றார்கள் உமர்(ரலி) அவர்கள்.
இஸ்லாமியத் தத்துவங்கள் வேறுபாடுகளை எல்லாம் தாண்டி வேரூன்றி நின்றதென்றால் இது போன்ற நம்பிக்கைகளின் வெளிப்பாடால்தான். இந்தப் புதுமண தம்பதிகள் பிற்காலத்தில் இஸ்லாத்திற்காக எத்தனையோ பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள் என்று இன்றும் சரித்திரம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு பாடமாக, சரித்திரமாக இன்றைய முஸ்லீம்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது -.
எம். முஹம்மது யூசுப்
நன்றி- தினமணி
" கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும் " -- காந்தீஜீ PART 1.
ReplyDeleteகலிஃபா உமர் (ரலி)
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.
அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.
ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள்.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள்.
அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.
அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள்.
கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.
அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார்.
உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”
அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.
குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள்.
மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள்.
வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள்.
Continued……
” கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும் " -- காந்தீஜீ PART 2
ReplyDeleteகலிஃபா உமர் (ரலி)
அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்.
வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.
அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!
உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள்.
செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”
வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்.
****************************************************
"அந்த கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும்" என்ற காந்தீஜீயின் கூற்றை ஏற்க பிடிக்காமல்,ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சே,நம் தேச தந்தையை சுட்டுக்கொன்றான்.
நன்றி :-PEACE TRAIN
சிறந்த பகிர்வு. இவரைப் போல நமது அரசியல்வாதிகள் மாறி விட்டால்....இந்தியாவை எங்கோ கொண்டு சென்று விடலாம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே
Deleteஇஸ்லாமின் நிறைய விஷயங்கள், நானும் பிறர் அறிமுகத்திலேதான் அறிந்திருக்கிறேன். பிறப்பிலேயே முஸ்லிமாக இருப்பதால் வந்த அலட்சியமென்று இல்லை; அறியாமைதான் காரணம். அல்ஹம்துலில்லாஹ், தற்போது மாறிவருகிறது.
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
Delete20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இன்று இல்லை
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நன்றி சகோ...கலிபாக்களின் ஆட்சியை எடுத்துகாட்டாய் எழுதிய பாக்ய ராஜுக்கும் ...அதை இங்கு குறிப்பிட்ட உங்களுக்கும்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே
Deleteசலாம் சகோ ஹைதர்...
ReplyDeleteஅருமையான வரலாற்று சம்பவத்தை நினைவு படுத்தி உள்ளீர்கள்... இது போன்ற என்னற்ற சம்பவங்கள் உமர் ரலி அவர்களின் வாழ்வில் உண்டு...
ஆம் என்னற்ற சம்பவங்கள் உண்டு
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இவரை விட முஹம்மது நபியை தான் மக்கள் பின்பற்றி நேசித்தல் வேண்டும் .............
ReplyDeleteஆமாம் ...
Deleteஎன் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக தன் பெற்றோர் இன்னும் பிள்ளைகளைவிடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி
(ஒருநாள்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களையும் விட உங்களை நான் மிகவும் நேசிக்கின்றேன் என உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக உன்னை விட நான் மிக நேசமுள்ளவராக ஆகும் வரை நீர் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இப்போது நீங்கள் என் உயிரை விடவும் என்னிடத்தில் மிக நேசமானவர்கள் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இப்போதுதான் நீங்கள் உண்மையான முஃமீன் எனக்கூறினார்கள். நூல் : புகாரி
இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நபி(ஸல்) அவர்களை உண்மையான முறையில் நேசிப்பது கட்டாயமாகும்.
///இவரை விட முஹம்மது நபியை தான் மக்கள் பின்பற்றி நேசித்தல் வேண்டும்//
Deleteஇதில் என்ன மாற்றுகருத்து இருக்கு
உமர் (ரலி) அவர்கள் முஹம்மது நபி ஸல் அவர்களின் தோழர் என்பதால் தான் இந்த சிறப்பு
அவருடைய நல்லாட்சிகு காரணம் அல்லாஹ்வுடைய வேதமும் நபி ஸல் அவர்களின் வழிகாட்டலும் தான்
thats why he got the place of 65th ( 63rd?) in book of WORLD MOST 100 INFLUENTIAL PEOPLE LISTED by Michael H Heart!
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பின் தங்கள் வருகைக்கும் கருதுரைக்கும் நன்றி
DeleteNalla pathil pakiyarajin sollamal sollukirar sila vidayankalai ( thatpothaya arisiyal vathikalai patri)
ReplyDeleteவருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Deleteஸலாம்
ReplyDeleteஇதிலிருந்து தாங்கள் சொல்ல வருவது என்ன ?!
ஸலாம்
ReplyDeleteஇதிலிருந்து தாங்கள் சொல்ல வருவது என்ன ?!
சரியான இறைபக்தி உள்ள மனிதர்களால் நேர்மையான ஆட்சியையும் உலக்குக்கு அமைதியையும் வழங்க முடியும் என சொல்ல வருகிறேன்
Deletemaasha allah!
ReplyDeletenalla pakirvu!
ஸலாம் சகோ! நல்ல தகவல்கள்.
ReplyDeleteஅண்ணல் நபி(ஸல்) அவர்களின் பிரச்சாரத்தால் உருவான இறையச்சம் அவர்களின் தோழர்களிடத்திலும் மிளிர்ந்தது, சுப்ஹானல்லாஹ்! இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் உலக மாந்தர் அனைவரும் படிப்பினை பெறவே!
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Delete///அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பிரச்சாரத்தால் உருவான இறையச்சம் அவர்களின் தோழர்களிடத்திலும் மிளிர்ந்தது, சுப்ஹானல்லாஹ்! இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் உலக மாந்தர் அனைவரும் படிப்பினை பெறவே!///
அருமையாக சொன்னீர்கள் ஜஸக்கல்லாஹ் கைர
SALAAM,
ReplyDeleteபயனுள்ள நல்ல கட்டுரை சகோ.நம்மை ஆளும் தலைவர்கள் இதுபோல இருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.
அன்பான வேண்டுகோள்:இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை(பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்) அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.
Read more: http://tvpmuslim.blogspot.com/2012/07/baitul-maal-thiruvalaputhur-A-beautiful-model.html
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteவணக்கம் ஹைதர் அலி சார். நலம்தானே?நல்ல தகவல்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நலம் சகோதரரே
Deleteவாழ்த்துகளுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமிக அருமையான பதிவு
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Deleteஜஸக்கல்லாஹ் கைர
நண்பரே!
ReplyDeleteஏன் உமர் தேனிற்காக மக்களிடம் அனுமதி கேட்டிருக்கவேண்டும்? ஓசியில் பயன்படுத்திக் கொள்ளவா? தன்னுடைய வருமானத்திலிருந்து தேனை வாங்கியிருந்தால் அரசாங்கத்திற்கும் வருமானம் கிட்டியிருக்குமே?
சந்தானம்
Deleteஹா ஹா ஹா சரியான கமாடி ஹா ஹா
அடுத்த முறை இதைவிட பேஸ்ட்ட ட்ரை பன்னுங்கே
Alhamdu lilah Allahke alapuhalum.
ReplyDelete