Saturday, July 28, 2012

பணத்திற்காக பலரை பைத்தியமாக்கிய டாக்டர்

மருத்துவர் எஸ்.கே. குப்தாவை உங்களுக்கு தெரியுமா? 2004 ஆம் வருட பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்து வழக்கம் போல் காணமல் போனவர்.குப்தா ஒரு மனநல மருத்துவர்.ஆக்ராவில் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றியவர்.

குப்தாவின் பகுதிநேர வேலை என்ன தெரியுமா? ஏதுமறியாத, அப்பாவியான,நல்ல மனநலம் உள்ள பெண்கள் குறித்து “இவள் ஒரு மனநோயாளி.என்னிடம் இரண்டாண்டுகளாக அல்லது ஐந்தாண்டுகளாக அல்லது இரண்டு மாதங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறாள்” என போலிச் சான்றிதழ் எழுதிப் கொடுப்பது தான்.

இந்தப் போலி சான்றிதழுக்காக ரூ. பத்தாயிரம், ஐந்தாயிரம் என ஆளுக்கு தகுந்தாற்போல் பேரம் பேசி வாங்கி இருக்கிறார். நல்ல மனநலம் உள்ள பெண்களை மனநோயாளி என எதற்குச் சான்றிதழ் தர வேண்டும்? இந்த சான்றிதழ் யாருக்குத் தேவைப்படும்? இந்தச் சான்றிதழ் வாங்கிக் கொள்வதால் பயனைடைவது யார்? போன்ற கேள்விகளுக்கான விடை மிகப் பயங்கரமானது.
யாரை பைத்தியமாக்கனும் பணத்த கொடுங்க கச்சிதமாக முடிச்சுருவோம்
இருங்க நீங்க கொடுத்த பணம் சரியாக இருக்கானு எண்ணிப் பார்த்துகிறேன்.
ம்ம் பணம் சரியா இருக்கு
பொன்னு பெரு என்ன சொன்னீங்கே அவள் ஒரு பைத்தியம்.
டாக்டர் பைத்தியம் என்று வழங்கிய போலிச் சான்றிதழ்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மீராவின் குடும்பத்தினர் ‘யாதவீர் சிங்’ என்பவருக்கு பேசியபடி பணம், நகை, ஸ்கூட்டர் அனைத்தையும் வரதட்சணையாக கொடுத்து மணமுடித்து வைத்திருக்கின்றனர் அதை வாங்கிய பின்னரும் யாதவீர் சிங் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை தினமும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் இச்சூழ்நிலையில் மீராவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது பொம்பள பிள்ளையை பெற்று விட்டாயே என்று இன்னும் கொடுமை அதிகமாகியிருக்கிறது.

மாமியார் வீட்டில் கொடுமைபடுத்தப்பட்டு இறந்திருக்கிறார் அக்குடும்பம் சட்டத்திடம் சரியாக சிக்கிக் கொண்டது தண்டணை உறுதி என்று தெரிந்தவுடன் இந்த டாக்டரிடம் ஓடி இருக்கிறார்கள் இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பெண் பைத்தியம் எனது மருத்துவமனையில் தான் இருந்தார் என்று எழுதிச் சான்றிதழ் கொடுத்தின் மூலம் அவர்கள் இதை கோர்ட்டில் சமர்பித்து பைத்திக்காரப்பெண்  தற்கொலை செய்துக் கொண்டார் என வழக்கின் திசையை மாற்றி வெற்றிப் பெற்று இருக்கிறார்கள்.
மருத்துவரால் பாதிக்கப்பட்ட மீராவின் குடும்பத்தினார்

அதுமட்டுமல்ல இந்திய நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிப்பதில்லை அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதை உடைக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீருபித்தால் எளிதாக விவாகரத்து கிடைத்து விடும். இந்தச் சட்ட நுணுக்கத்தை குப்தா பயன்படுத்திக் கொண்டார். மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பும் நபர்கள் குப்தாவை அணுகியிருக்கிறார்கள். குப்தாவும் இன்னாரது மனைவியான இவள் என விவரமாக எழுதி போலி சான்றிதழ் கொடுத்து விடுவார் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்க வெறும் ஐயாயிரம் ரூபாய்!

இவ்வாறு பத்து பெண்களின் வாழ்வைப் பாழாக்கி இருக்கிறார்,இதனையே வேறு வார்த்தைகளில் விவாகரத்து தொடர்பாக பத்து நபர்களுக்கு உதவி இருப்பதாகச் சொல்லி பெருமிதப்பட்டிருக்கிறார், குப்தா. இந்த போலிச் சான்றிதழ் வழங்கும் மனநல மருத்துவரைத் தான் தெஹல்கா நிருபர் ‘ஜம்ஷெத் கான்’ கையும் களவுமாக(மேலேயுள்ள படங்கள்) ரகசியக் காமிராவில் பிடித்திருக்கின்றார்.

“அவரிடம் உம் மனைவியையும் இங்கே அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.பெயர் சொன்னால் போதும். ஸாலிட் காம் ஹோ ஜாயேகா (கச்சிதமாக வேலை முடிந்து விடும்)” என தம்பட்டம் அடித்திருக்கின்றார். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கற்பனை மனைவியின் பெயரில் போலிச் சான்றிதழ் வாங்கி விட்டார், ஜம்ஷெத்கான்.

போராசை,பணப்பித்து, ஊழல்,லஞ்சம்,நிர்வாகக் சீர்கேடு போன்றவை உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி இருந்தாலும் கூட இந்த ஆக்ரா மருத்துவரின் செயலை பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி விட முடியாது. ஆனால் வெறும் ஊழல் பிரச்சனையாக பணப்பித்து பிடித்த மனிதரின் குற்றமாக மட்டும் இதனை அணுகக் கூடாது.

திருமணம்,வரதட்சனை, விவாகரத்து போன்றவை குறித்த சமூகப் பார்வைகளையும்,மதிப்பீடுகளையும் மீள் பார்வை செய்ய வேண்டும் என்பது தான் இங்கு பொதிந்துள்ள கனமான செய்தி. ஆனால் வழக்கம் போலே அனைத்தையும் மறந்து விடுகிறோம்.

36 comments:

 1. படிக்கவே பயங்கரமா இருங்குங்க...

  பணத்துக்காக இன்னும் என்னன்ன அநியாயங்கள் இங்கு நடக்கும் தெரியலிங்க...

  எவ்வளவு விழிப்புணர்வு ஏற்ப்பட்டும் கூட இன்னும் இந்த வரதட்சணை கொடுமை ஒழியக்கமுடியாமல் இருக்குங்க...

  இதுபோல் டாக்டர்கள் இருக்கும் வரை மகளிருக்கு இது போன்ற கொடுமை ஒழியாது...

  மக்களிடையே இது போன்ற அநியாக்காரர்களை அடையாளம் காட்டி தகுந்த தண்டனை வாங்கித்தரவேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ///மக்களிடையே இது போன்ற அநியாக்காரர்களை அடையாளம் காட்டி தகுந்த தண்டனை வாங்கித்தரவேண்டும்...///

   கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டியவர்கள் இவர்கள்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  சாக்கடை புளுவாய் சமுகத்தில் நெளியும் சிலரின் மனித நேயமற்ற செயல்களை அடையாளம் காட்டும் அனல் பதிவு!

  பகிர்வுக்கு வாழ்த்துகள் மச்சான்!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் வஸ்ஸலாம் மச்சான்

   ஜஸக்கல்லாஹ் கைர மச்சான்

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 4. வணக்கம் சகோ நலமாக இருக்கிறீர்களா?...தங்கள் செய்தியைப் படித்தவுடன்
  வியப்படைந்தேன் இப்படியும் ஒரு வைத்தியரா!....இவர்கள்போன்ற பேராசை
  பிடித்த வைத்தியர்களை பணியில் இருந்து உடன் நிறுத்த வேண்டும் .பதிலுக்கு இந்த
  மோசடி விசையம் புயல் வேகத்தில் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் என்பதே
  இப்பொழுது என் மனதின் ஆதங்கமும் .வாழ்த்துக்கள் சகோ பணி தொடரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்கே சகோதரி நான் நலம் நீங்க நலமா?
   நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   Delete
 5. இது போன்ற டாக்டர்களின் லைசன்ஸ்ஸை ரத்து செய்யது மற்றும் நெற்றியில் அடையளமாக ஒரு முத்திரையும் இடவேண்டும். கடந்த பத்து வருடங்களகாக எந்த ஒரு டாகடரின் லைசன்ஸ்ஸை ரத்து செய்யவில்லை நம்ம மத்திய அரசு. எல்ல டாக்டரும் அப்பளுக்கற்ற தங்கங்கள்.

  நல்ல விழிப்புணர்வு பதிவு, இதெ போல் அதிகாகமாக எல்லோரும் எழுத வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ///டாகடரின் லைசன்ஸ்ஸை ரத்து செய்யவில்லை நம்ம மத்திய அரசு. எல்ல டாக்டரும் அப்பளுக்கற்ற தங்கங்கள்.///

   கொடுமை சகோதரரே மத்திய அரசுகள் இதில் எங்கே கவனம் செலுத்த் போகிறது

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. ஆத்த்தி! இதெல்லாம் சினிமாலதான் பாத்திருக்கேன்... கொடுமையே... எப்படிதான் மனம் வருகிறதோ இவர்களுக்கு! இதுல பீற்றல் வேற! எத்தனை பேரை பைத்தியம் என கூறி உண்மையிலேயே மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பான் இவன்? நெனைச்சாலே கொடுமையா இருக்கு!
  :(

  ReplyDelete
  Replies
  1. ///எத்தனை பேரை பைத்தியம் என கூறி உண்மையிலேயே மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பான் இவன்? நெனைச்சாலே கொடுமையா இருக்கு! ///

   ஆம் சகோ மன உளைச்சம் வலிமிகுந்தது பணபித்து பிடித்த மிருகங்கள் எப்படி உணரும்

   Delete
 7. அவன் முதலில் பிடிபட்டானா?
  சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டானா?
  இவனால் சட்டத்தை ஏமாற்றியவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?
  இப்படி எல்லாம் நீங்க யாரும் கேள்வி கேட்டால்......

  நீங்கள்தாம் மன நலம் பாதிக்கப்பட்டவ்ர்கள்.

  ReplyDelete
  Replies
  1. யாரும் கேட்கமாட்டார்கள் இங்குள்ள சட்டங்களை பற்றித் தெரியும் அவர்களுக்கு
   ஹா ஹா

   Delete
 8. //ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்க வெறும் ஐயாயிரம் ரூபாய்!/// :((

  ReplyDelete
  Replies
  1. பணத்திற்காக எது வேண்டுமானலும் செய்பவர்களுக்கு ஐயாயிரம் பெரிதாக தெரிந்திருக்கிறது உணர்ச்சியற்ற மிருகம் அவன்

   Delete
 9. //திருமணம்,வரதட்சனை, விவாகரத்து போன்றவை குறித்த சமூகப் பார்வைகளையும்,மதிப்பீடுகளையும் மீள் பார்வை செய்ய வேண்டும் என்பது தான் இங்கு பொதிந்துள்ள கனமான செய்தி. ஆனால் வழக்கம் போலே அனைத்தையும் மறந்து விடுகிறோம்.//

  :(((((((((((

  ReplyDelete
  Replies
  1. //திருமணம்,வரதட்சனை, விவாகரத்து போன்றவை குறித்த சமூகப் பார்வைகளையும்,மதிப்பீடுகளையும் மீள் பார்வை செய்ய வேண்டும் என்பது தான் இங்கு பொதிந்துள்ள கனமான செய்தி. ஆனால் வழக்கம் போலே அனைத்தையும் மறந்து விடுகிறோம்.//

   இது தான் நான் சொல்ல வந்த மிக முக்கியமான செய்தி :(((((((((((

   Delete
 10. sakotharare!

  enakku ippozhuthuthaan ivvisayam theriyum./

  pakirvukku mikka nantri!

  ReplyDelete
  Replies
  1. சகோதரரே
   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 11. பஞ்சாபில் ரூ.200 கட்டணம் செலுத்தாததால் பச்சிளம் குழந்தைக்கு எமனாக மாறிய டாக்டர்கள்
  Published: வியாழக்கிழமை, ஜூலை 26, 2012, 12:55 [IST]

  ஜலந்தர்: பஞ்சாபில் இன்குபேட்டருக்கு ரூ.200 கட்டணம் செலுத்தாததால் அதை மருத்துவர்களே அகற்றியுள்ளனர். இதனால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிறந்து 5 நாளே ஆன பெண் குழந்தை இறந்தது.

  பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி சுனிதாவுக்கு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததையடுத்து அதை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர். குழந்தையை மேலும் சில நாட்களுக்கு இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று தெரிவித்த மருத்துவர்கள் அதற்கான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

  ஆனால் சஞ்சீவிடம் அவ்வளவு பணம் இல்லை. அவர் பலரிடம் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் பணம் இல்லை என்று அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்குபேட்டர் கட்டணம் செலுத்தாததால் மருத்துவர்கள் இன்குபேட்டரை அகற்றினர். இதையடுத்து குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது.

  இது குறித்து சஞ்சீவ் கூறுகையில்,

  எனது குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இன்குபேட்டர் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் இல்லை என்று கொஞ்சம் தயவு காட்டுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் இன்குபேட்டரை அகற்றிவிட்டனர்.

  மேலும் கட்டண பாக்கி இருந்ததால் குழந்தைக்கு ஏற்றிய குலுகோஸையும் நிறுத்திவிட்டனர்.

  இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை என்னால் நம்பமுடியவில்லை. குழந்தையின் தந்தையை இது குறித்து புகார் கொடுக்க சொல்லியிருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கிறேன் என்றார்.

  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  SOURCE: http://tamil.oneindia.in/news/2012/07/26/india-infant-dies-as-father-can-t-pay-rs-158432.html

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் UNMAIKAL
   மிகவும் புதிய செய்தியை கொடுத்து இன்னும் தொடரும் கொடுமையை சுட்டிகான்பித்ததற்கு நன்றிகள்

   Delete
  2. கண்முன் காணும் இந்த ஒரு குழந்தையின் கதி போல் வெளிவராத இது போன்ற சம்பவங்கள் எத்தனை எத்தனையோ.

   இது மட்டும் ஒரு முஸ்லீம் நாட்டில் சம்பவித்ததாக இருந்திருந்தால் ?

   ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி கைகால் மூக்குநாக்குடன் தும்பிக்கையும் அமைத்து வாலையும் வளர்த்து மதச்சாயம் பூசி வலையுலகில் வரிசைபிடித்து மாறி மாறி இஸ்லாமிய கோட்பாடுகளையும் அனைத்துலக முஸ்லீம்களையும் அட்ராஅட்ராநாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க என்று காலத்துக்கும் குத்தாட்டம் ஆடி வறுத்தெடுப்பது மட்டுமே குறியாக கொண்டிருக்கும் சில‌ ஜந்துகளும் அவைகளின் சொம்பு தூக்கிகளும் ஐயோ வடை போச்சே!!!! என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

   Delete
 12. இவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா சகோதரரே தண்டனைகள் கடுமையாகும் போது தான் குற்றங்கள் குறையும்
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  காசு கொடுத்தால் தன் சொந்த மகளையும்,மனைவியையும்கூட பைத்தியம் என்று சான்றளிக்க தயங்கமாட்டார்கள் இந்த கயவர்கள்.இப்படியும் சிலதுகள் மருத்துவர் என்னும் பட்டத்தை வைத்துகொண்டு சமுதாயத்தில் நடமாடிக்கொண்டிருக்கிறது.மருத்துவம் என்பது குணப்படுத்துவது என்று போய் நோயாளிகளை பெருக்குவதிலேயே குறியாக இருக்கிறது.கொடுமையிலும் கொடுமை.

  ReplyDelete
 14. தூக்கில் போடலாமே!

  Sunday, July 29, 2012 விடுதலை

  தூக்குத் தண்டனை தூக்கி எறியப்படும் வரை - அந்தத் தண்டனை வழங்கப் பெற முழுத் தகுதி உள்ளவர்தான் குஜராத் மாநில முதல்அமைச்சர் நரேந்திர தாஸ் தாமோதரதாஸ் மோடி.  அவருடைய ஆட்சியில்தான் 2000 முசுலிம்கள் படு கொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டன.

  203 தர்க் காக்கள், 205 மசூதிகள் சாம்பலாக்கப்பட்டன.

  4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகளும் நெருப்பின் பசியை ஆற்றின. ரூ 3,800 கோடி இழப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  70 ஆயிரம் முசுலிம்கள் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினர் 10,000 தோட்டக்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

  இவ்வளவும், மோடி முதல் அமைச்சராக இருந்த நிலையில்தான் நடைபெற்று இருக்கின்றன.

  குறைந்த பட்சம் இவற்றிற்குப் பொறுப்பேற்று, நரேந்திர மோடி முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா?

  அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு லால்பகதூர் சாஸ்திரியும், ஓ.வி.அளகேசனும் பதவி விலகி இருக்கும்போது,

  இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கும் ஒரு மாநிலத்தில் அவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் அம்மாநில முதலமைச்சர் என்பது, அரசியலில் பாலபாடமாகும்.

  அதனைக் கூடச் செய்ய முன்வராத ஒருவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் தவறு செய்திருந்தால், என்னைத் தூக்கில் போடுங்கள்! என்று குரல் கொடுப்பது அசல் பசப்பும், நயவஞ்சகமும், நரித்தனமும் கொண்டதே!

  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பிரபல சட்ட வல்லுநருமான கபில் சிபல் கிளப்பிய வினாவுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.

  10 வருடங்களாக மோடி மீது ஒரே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி நாணயமான கேள்வி அல்லவா?

  ஏதாவது நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறினால் அதனை வீரவாளாகச் சுழற்றுவார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள்.

  இதே மோடி மீது உச்சநீதிமன்றம் எப்படிப்பட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்தது?

  முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னனுககு ஒப்பிட்டுக் கூற வில்லையா? அப்போது தம் வீரத்தைக் காட்டாமல் மவுனிகள் ஆனது ஏன்?

  மனித நேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான், மனிதம் உண்டாக்கப்பட்டது.

  இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப்போய்விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தவர்கள் என்பதற்காகவா, இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வியை எழுப்ப வில்லையா?

  மொத்தம் 4,252 வழக்குகளில் 2000 க்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்குகளுக்கும் புலனாய்வு மீண்டும் செய்யப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வைத்த குட்டு, மோடியின் தலையில் அல்லவா?

  மோடியின் அமைச்சரவையில். முக்கியப் பொறுப்பில் இருந்தவர் ஹரேன் பாண்டியா; மக்கள் விசாரணை ஆணையத்திடம் நடந்தவற்றை அப்படியே வெளியிட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப் பட்டதன் பின்னணி என்ன?

  தனது மகன் படுகொலைக்குக் காரணம், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தாரே!

  குஜராத் கலவரம் நடைபெற்றபோது காவல் துறையில் உயர்ந்த பொறுப்பில் இருந்த அதிகாரிகளான ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ் பட் முதலியோர், வன்முறையின் பின்னணியில் முதல் அமைச்சர் மோடி இருந்தார் என்று கூறி இருக்கிறார்களே - நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளனரே!

  இவ்வளவுக்குப் பிறகும் நான் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று ஒரு முதல் அமைச்சர் சொல்கிறார் என்றால், எவ்வளவு அசட்டுத் துணிவும், நீதித் துறையின் மீது ஏளன உணர்வும் இருக்க வேண்டும்?

  இப்படிப்பட்ட நரவேட்டைப் பேர்வழியை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள் - எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய காட்டு மிருக உணர்வைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாரீர்! -

  வாய்ப்பு இருந்தால் முதலில் இத்தகையவர்களைத் தூக்கில் போட வேண்டுமே!

  SOURCE: Sunday, July 29, 2012 “விடுதலை “

  ReplyDelete
 15. என்ன வாழ்க்கை இது? இப்படியும் மனிதர்களா?

  ReplyDelete
 16. படித்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது....
  ஆம்.. நாம் பலவற்றை மறந்து விடுகிறோம்!!

  அதன் காரணமாகவே இன்னும் பல கரையான்கள் நம்மைச் சுற்றி புற்று கட்டிக்கொண்டிருக்கிறன!

  ReplyDelete
 17. நல்லதொரு பதிவு....இன்னும் இவ்வாறானவர்கள் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது..

  வாழ்த்துக்கள்.கொம் மாற்றியதுக்கு

  ReplyDelete
 18. போராசை,பணப்பித்து, ஊழல்,லஞ்சம்,நிர்வாகக் சீர்கேடு போன்றவை உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி இருந்தாலும் கூட இந்த ஆக்ரா மருத்துவரின் செயலை பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி விட முடியாது. ஆனால் வெறும் ஊழல் பிரச்சனையாக பணப்பித்து பிடித்த மனிதரின் குற்றமாக மட்டும் இதனை அணுகக் கூடாது.

  திருமணம்,வரதட்சனை, விவாகரத்து போன்றவை குறித்த சமூகப் பார்வைகளையும்,மதிப்பீடுகளையும் மீள் பார்வை செய்ய வேண்டும் என்பது தான் இங்கு பொதிந்துள்ள கனமான செய்தி. ஆனால் வழக்கம் போலே அனைத்தையும் மறந்து விடுகிறோம்.//

  அதிர்ச்சியூட்டிப் போனாலும்
  விழிப்புணர்வூட்டிப்போகும் அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை

  முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

  கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

  எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும், காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.

  இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.

  இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.

  இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.

  உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை. சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.


  SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/


  முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.

  ReplyDelete
 20. //திருமணம்,வரதட்சனை, விவாகரத்து போன்றவை குறித்த சமூகப் பார்வைகளையும்,மதிப்பீடுகளையும் மீள் பார்வை செய்ய வேண்டும் என்பது தான் இங்கு பொதிந்துள்ள கனமான செய்தி. ஆனால் வழக்கம் போலே அனைத்தையும் மறந்து விடுகிறோம்.//

  :-((((

  ReplyDelete