Friday, July 29, 2011

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் (பாகம் - 1)

றைவன் குர்ஆனில் நபிமார்களைப் பற்றியும், இறைவனின் அருள் பெற்ற நல்லடியார்களைப் பற்றியும், அநியாயக்கார சமூகத்தினர்கள் பற்றியும் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான், எதற்காக? நாம் பழங்கதைகளை தெரிந்துக் கொள்வதற்காகவா? இல்லை அதன்மூலம் படிப்பினைப் பெறுவதற்காகவா? பழங்கால மனிதர்கள் செய்த தவறுகள் நவீன வடிவில் நம்மிடம் இன்று இருந்தால் படிப்பினைப் பெற்று நம்மை திருத்திக் கொள்வதற்காகத்தான் இறைவன் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான்.


இமாம் புகாரி போன்ற அறிஞர்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்? இந்த அறிஞர்கள் இஸ்லாத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? நமக்கு அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகள் என்ன? அவர்களின் தியாகங்கள் போன்ற‌வற்றை நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வளவு ஏன்? இமாம் புகாரி அவர்களின் இயற்பெயர் பெரும்பாலான நம்முடைய சகோதரர்களுக்கு தெரிவதில்லை.

இதை விடக் கொடுமை, சிலர் இமாம் புகாரி அவர்களைப் பற்றி தவறாக அறிந்து வைத்திருக்கிறார்கள். 'புகாரி ஷரீப் ஓதும் விழா'என்று சொல்லிக் கொண்டு 25, 30 வருடங்களாக அரபியில் ஒன்றும் புரியாமல் வேக வேகமாக ஓதி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

புகாரி ஷரீப் ஒதும் விழா


சரி, அரபியில் ஓதிவிட்டு அதற்கான விளக்கத்தை தமிழில் சொல்லிக் கொடுக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. மாறாக இமாம் அவர்களைப் பற்றியும் புகாரி நூலைப் பற்றியும் தவறாக சொல்லிக் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு கீழுள்ள இந்த செய்தியைப் பாருங்கள். (இது புகாரி ஷரீப் ஓதியவர்களின் ப்ளாகிலிருந்து எடுத்தது).

"அவர்களின் இப்புனிதமான கிரந்தம் பெரும் சிறப்புகளைப் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கிரந்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவன் தனது கடற்பயணத்தைத் தொடர்ந்தால் அவனது வாகனம் கடலில் ஒருபோதும் மூழ்கிவிட மாட்டாது. மழை இல்லாத கிராமத்தில் இந்தக் கிரந்தத்திலுள்ள நபிமொழிகள் பாராயணம் செய்யப்பட்டால் அங்கே அழ்ழாஹ்வின் அருள் மழை இறக்கப்படும். பஞ்சம், வறுமையுள்ள இடங்களில் இக்கிரந்தம் ஓதப்படும்போது அங்கே அழ்ழாஹ்வின் அருள் பரக்கத் இறங்கும்". 


இஸ்லாமிய வரலாற்றில் சரியான ஹதீஸ் எது? பலஹீனமான ஹதீஸ் எது? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் எது? அறிவிப்பாளர்களின் தரம் என்ன? போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து, ஸஹீஹான ஹதீஸ்களை கடுமையான உழைப்பிற்குப் பின் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற இமாமவர்களின் மீது இட்டுக்கட்டி (மேற்கண்ட‌) இப்படி ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்.இமாம் புகாரி அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக இணையத்தில் உலாவியபோது பல சகோதரர்கள் புகாரி இமாம் அவர்களின் பிறப்பு, பெயர், எழுதிய நூல், சொந்த ஊர், இறப்பு போன்ற விஷயங்களை மட்டும் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். (இறைவன் அந்த சகோதரர்களுக்குரிய நற்கூலியை வழங்குவானாக!) ஆனால் இமாமவர்களின் ஆளுமையைப் பற்றி படிக்கும்போது நம்மை வியக்க வைக்கிறது! "இன்று இறைவேதமான‌ குர்ஆனுக்கு அடுத்து உலக முஸ்லிம்களால் நம்பக்கூடிய ஒரு நூலாக புகாரி கிதாப் இருக்கிறது. இறைவன் இவ்வளவு பெரிய அந்தஸ்தை இந்த நூலுக்கு கொடுத்திருக்கிறான்."எனவே நாம், புகாரி இமாம் என்றால் யார்?
இந்த நூலை ஏன் அவர்கள் தொகுத்தார்கள்?
இந்த நூலில் என்னென்ன விஷயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது?
வாசிக்கப்படுக்கின்ற ஹதீஸ்கள் நடைமுறையில் நாம் பின்பற்றுகிறோமா?
அல்லது வெறும் புத்தகம் வாசித்து முடிப்போம் என்ற ரீதியில் வாசிக்கிறோமா?
போன்ற விஷயங்களை (இன்ஷா அல்லாஹ்) விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

16 comments:

 1. அபு ஃபைஜுல்July 31, 2011 at 12:23 AM

  சகோ:ஹைதர் அலி தங்களின் முயற்சி நல்லவையாக அமைய வல்ல அல்லாஹ்விடம் துஃஅ செய்கிறேன்

  ReplyDelete
 2. அபு ஃபைஜுல்August 4, 2011 at 8:16 AM

  சகோ:ஹைதர் அலி. இமாம் புஹாரி கட்டுரைக்கு கருத்துரை எதுவும் இல்லயே என்று என்னி, தங்களின் முயற்சியை விட்டுவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ் தெடருங்கள்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.

  தாமதமான வருகைக்கு மனம் பொருக்கவும் ரமதான் கரீம்.

  இமாம் புஹாரி அவர்களைப் பற்றிய தவரான அதாவது ஷிர்க்கான செய்தியை சில ப்ளாக்குகளிலிருந்து எடுத்து காண்பித்தமைக்கு நன்றி.

  இது போல தவறான செய்திகளை வழங்கும் ப்ளாக்குகளை பார்த்துதான் இறை மறுப்பாளர்கள் இஸ்லாத்தைப் பற்றி தவராக எண்ணி பல இஸ்லாமிய நண்பர்களிடம் வாக்குவாதம் செய்கின்றார்கள்.

  இது போன்ற ப்ளாக்குகள் நடத்தும் அப்பாவிகளை நாம் திறுத்த வேண்டும்,திறுந்தாவிட்டால்...திறுத்தி காட்டனும்.

  வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 4. @vidivelli

  நண்பரே உங்களுடைய தோழமைக்கு நன்றி

  ReplyDelete
 5. @அந்நியன் அவர்களுக்கு2

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //தாமதமான வருகைக்கு மனம் பொருக்கவும்//

  என்ன சகோ இதுக்கு போயி...
  ரமலான் கரீம் சகோ


  //இது போல தவறான செய்திகளை வழங்கும் ப்ளாக்குகளை பார்த்துதான் இறை மறுப்பாளர்கள் இஸ்லாத்தைப் பற்றி தவராக எண்ணி பல இஸ்லாமிய நண்பர்களிடம் வாக்குவாதம் செய்கின்றார்கள்.

  இது போன்ற ப்ளாக்குகள் நடத்தும் அப்பாவிகளை நாம் திறுத்த வேண்டும்,திறுந்தாவிட்டால்...திறுத்தி காட்டனும்.//

  நீங்க சொல்வது 100க்கு 100 சரி இது போன்ற ப்ளாக்குகளை படித்து மார்க்கத்தை தவறாக விளங்கி வழி தவறி நம்மிடம் விவாதம் செய்கிறார்கள் இது போன்ற ப்ளாக்குகளை நடத்துபவர்களிடம் தாவா செய்ய வேண்டும்.

  தங்களின் வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. @அபு ஃபைஜுல்

  அல்ஹம்துலில்லாஹ் இந்த ஒரு துஆ விற்காகத்தனே இவ்வளவு உழைப்பு நன்றி சகோ

  ReplyDelete
 7. @அபு ஃபைஜுல்

  //சகோ:ஹைதர் அலி. இமாம் புஹாரி கட்டுரைக்கு கருத்துரை எதுவும் இல்லயே என்று என்னி, தங்களின் முயற்சியை விட்டுவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ் தெடருங்கள்.//

  கருத்துரைக்காக பதிவு எழுதுபதில்லை சகோ கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன் உங்களின் அன்பிற்கு நன்றி சகோ

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  இமாம் புகாரி (ரஹ்) பற்றி அறிந்துக்கொள்ள மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றோம். தங்களின் வஹ்ஹாபியிசம், பக்கீர்ஷாக்கள், புத்தர் போன்ற அற்புத ஆய்வுக்கட்டுரைகளின் வரிசையில் இந்த தொடரும் இடம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  தங்களின் கல்வி ஞானத்தை இறைவன் மென்மேலும் அதிகமாக்குவானாக...ஆமீன்...

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ
  அன்னே உங்களுடைய உழைப்பிறகு அல்லாஹ் அதிக நண்மையை தருவானாக

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ
  உங்களுடைய உழைப்பிறகு அல்லாஹ் அதிகமாக நன்மையை வழங்குவனாக
  உங்களுடைய வெப்சைட்டில் வைரஸ் இஇருந்தது அதனால் இயங்கவில்லை என்று நீங்கள் முகநூல்லில் எழுதியதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

  ReplyDelete
 11. சிறந்த சேவை. ஜஸாகல்லாஹ் கைர்

  ReplyDelete
 12. சிறந்த சேவை ஜஸாகல்லாஹ் கைர்

  ReplyDelete
 13. அடுத்த பதிவுகளின் லிங்கை இதில் சேர்க்கலாமே சகோ..ஒவ்வொன்றாக தேடி படிக்க வேண்டிய நேரம் மீதமாகும்...
  இறைவன் உங்கள் தேடலை விரிவாக்கி வைக்கட்டும்..

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும்
  வரஹ்மதுல்லாஹி
  வபரகாதுஹீ ...
  அடுத்தடுத்த பதிவு தொடர்களின் லிங்கை இங்கே இனைக்கலாமே..இதனால் தேடும் நேரம் மீதமாகலாம்..

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ ஹைதர் பாய் is my rolemodel in facebook .but iam not in his friends list i tried lot of times but no problem now iam following him.எனக்கு புஹாரி இமாம் பற்றி அறிய வேண்டும் என்று ரொம்ப ஆவல் அந்த பணியை செய்த ஹைதர் பாய் அவர் களுக்கும் அவர் குடுபதருக்கும் நான் துவா செய்வேன் இன்ஷா அல்லாஹ் .அவருடைய பதிவுகள் எனக்கு இறை அச்சத்தை தருகிறது அல்ஹம்து லில்லாஹ்

  ReplyDelete