Sunday, July 17, 2011

மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்?ஃபஸாதிகளா? ஜிஹாதிகளா?

மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்? என்பதுக் குறித்து இதுவரை தெளிவாக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. 


ஆனால் நம்ம நம்பர் ஒன் பத்திரிக்கை தினமலர் முந்திக் கொண்டு வழக்கம் போல் 
இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. என்று செய்தி வெளியிட்டன தினமலரின் அரசியல் அனைவரும் அறிந்த ஒன்று தான். 


என்றாலும் இந்த முறை உள்துறைக்கே யார் குண்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை ஆனால் தினமலர் அதே உள்துறை பெயரைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்ட்டு இருப்பது தான் ஆச்சரியம். இந்த செய்தியை காண்பவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுவதே தினமலரின் நோக்கம். முஸ்லிம்கள் மீது பகையுணர்வும், வெறுப்பும் கொள்ளச் செய்வதே அதன் திட்டம்.


அடுத்தப்படியாக தினமனியில். இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுகிறார். 


சென்னை, ஜூலை.14: மும்பையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மும்பையில் நேற்று மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திக்கின்றனர். பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் உயிரிழக்கவும், பொருட்சேதமும் ஏற்பட காரணமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

குண்டு வேடிப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வண்மையாக கண்டிக்க தக்க செயல் தான் ஆனால் இன்ன பிரிவினர் தான் என்று சொல்வதின் மூலம் இவர்கள் எதற்காக அவசரப்படுகிறார்கள் என்று அம்பலப்பட்டு போயி விடுகின்றனார். இவ்வளவுக்கும் ராமகோபாலன் ரா உளவுப்பிரிவின் உயர் அதிகாரியும் இல்லை.

ஆனால் ரா மற்றும் பல உளவுப் பிரிவுகளை வைத்திருக்கின்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுகிறார்.

மும்பை தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கவில்லை: .சிதம்பரம்

First Published : 14 Jul 2011 11:00:22 AM IST
Last Updated : 14 Jul 2011 11:33:08 AM IST

மும்பை, ஜூலை.14: மும்பை தாக்குதல் தொடர்பாக நம்பகமான உளவுத் தகவல் எதுவும் வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட உள்துறை அமைச்சர் .சிதம்பரம், இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை சீர்குலைக்கச் செய்யும் முயற்சியும் இருக்கலாம் என்றார்.
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்காக பொதுமக்களிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த சிதம்பரம், இந்தியாவில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடிய தகுதி உள்ள அனைத்து பயங்கரவாதக் குழுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்த தாக்குதல் குறித்து குறிப்பிடத்தகுந்த உளவுத் தகவல் எதுவும் வரவில்லை. அதுபோன்று தகவல்கள் வந்தபோதெல்லாம் அதை அந்தந்த மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம்.

முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவதிகளாக தேசத் தூரோகிகளாக சித்தரிக்க நினைக்கின்ற அதனை பிரச்சாரம் செய்வதில் பல ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளும் துணை நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நடுநிலையாக உள்ள நல்லவர்களும், நேசஉணர்வு கொண்டவர்களும் இந்த சதிக்கு ஆளாகி விரோத உணர்வு கொண்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதற்கு விளக்கம் எழுதும்படி என் உள்ளுணர்வு தூண்டியது.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் (Criminal Laws) கடுமையானவை என்று விமர்சிக்கப்படுகின்றன. அந்தச் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் தண்டனைக்கும், சட்டம் அனுமதிக்காத ‘வெளிப்படை வன்முறை’(Overt Violence)க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிரது.

அதிலும் அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற சமுதாயத்திற்கும் முன்னதாக வழங்கப் பட்டதாகக் கூறுகிறது. அதனால் அனைவரும் பின்பற்றக் கூடிய பொதுசட்டமாக அதனை அறிவிக்கிறது. இதோ திருக்குர்ஆன்:


“கொலைக்குப் பதிலாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும்,ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்ம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.(அல்குர்ஆன் 5:32)

ஆகவே நியாயமான காரணங்களுக்காக நீதிபரிபாலன முறையில் வழங்கப்படும் தண்டனையை தவிர்த்து ஓர் உயிரைக் கொலை செய்வது அனைவரையும் கொலை செய்வதற்கு சம்மாகும் என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது. ஒருபடிமேல் சென்று ஓர் உயிரைக் காப்பாற்றுபவன் அனைவரையும் வாழ வைப்பவன் போலாவான் என்றும் முழங்குகிறது.

அந்தச் சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்களை. அப்பாவி மக்களை கொன்று பூமியில் குழப்பத்தை விளைவிப்பவர்களை “வரம்பு மீறியவர்கள்” என்று குர்ஆன் கண்டிப்பதை பாருங்கள். அவர்கள் "அல்லாஹ்வுடனும், அவன் தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள்"என்றும் அடுத்த வசனத்தில் அது சாடுவதுடன், அவர்களுக்குரிய தண்டனை என்ன என்பதையும் குர்ஆன் வரையறை செய்கிறது. இதோ குர்ஆன் பேசுகிறது :

கொல்லப்படுவது அல்லது சிலுவையில் அறையப்படுவது அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்.அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.(5:33)


அப்பாவி மக்களை எந்தக் காரணமும் இன்றி கொலை செய்து நாட்டில் கலவரங்களைத் தூண்டி குழப்பங்கள் விளைவிக்கும் கொடூரமான குற்றத்துக்கு மிகக் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்தும் திருக்குர்ஆன், அதனை எந்த சந்தர்ப்பத்தில் (Context) விதியாக்கியது என்பதையும் அறிவிக்கிறது. அதற்கு  குர்ஆனின் 5:32 வது வசனம் “இதன் காரணமாகவே” என்ற சொற்றொடருடன் ஆரம்பமாகி முன் வசனங்களின் கருத்துடன் இணைக்கிறது.

ஆதமுடைய புதல்வர்களான காபில் (Cain) ஹாபில் (Abel) இருவரிடையே எழுந்த சர்ச்சையில் ஒரு பாவமும் அறியாத அப்பாவியான ஹாபிலை காபில் கொலை செய்து கொன்று விடும் வரலாற்றுப் பின்னணியிலேயே மேற்கண்ட தண்டனை சட்டம் வழங்கப்படுகிறது.

ஆகவே அப்பாவி மக்களைக் கொல்வது எவ்வளவு பாவமானது, கொடூரமானது, இழிவானது என்பதை இதை விடவும் வன்மையாகவும் கடுமையாகவும் கண்டிக்க முடியுமா? இல்லை, குர்ஆனுக்கு நிகராக வன்முறையைக் கண்டிக்கும் வேதங்களையோ அல்லது சமூக வாழ்வியல் நூல்களையோ காட்ட முடியுமா?


ஆகவே நாட்டில் நடக்கும் குற்றங்களுக்குப் பெயர் ஜிஹாது(அறப்போர்) அல்ல. அதற்கு பெயர் 'ஃபஸாது'(குழப்பவாதிகள்) அதைச் செய்பவர்கள் ஜிஹாதிகளும் அல்ல. முஜாஹித்தீன்களும் அல்ல. அதனைச் செய்பவர்கள் ஃபாஸதிகள். (குழப்பவாதிகள்) ஃபாஸாது என்னும் அரபுச் சொல் உருதுவிலும் ஹிந்தியிலும் ஏன் தமிழ் முஸ்லிம்கள் மத்தியிலும் புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை. ஆகவே இது போன்ற குற்றங்களை வர்ணிப்பதானால் ஊடகங்கள் இனி அந்த வார்த்தையைப் பயன்படுத்தட்டும். சரியான வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் இருக்கும். முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரு அரபிச் சொல்லை பயன்படுத்திய திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும்.

திவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சட்டத்தை கையிலேடுத்து சதி செயல் செய்பவர்கள் இஸ்லாமியரும் அல்ல. இதனை இஸ்லாமிய வரலாறும் நபிகளாரின் வாழ்வும் நமக்கு கற்றுக் கொடுக்கும் உண்மைகள்.

இஸ்லாத்தின் இரண்டாவது கஃலீபா (மக்கள் பிரதிநிதி) உமர் அவர்கள். சிரியா, லெபனான், ஈரான், ஈராக், பாலஸ்தின் என்று 36 நாடுகளை மாநிலமாக கொண்டு ஆட்சி புரிந்த மிகப்பெரிய ஆட்சியாளர். அவர்களை தொழுதுக் கொண்டிருக்கும் போது எதிரி ஒருவன் கத்தியால் ஆழமாக குத்தி விட்டு ஒட முயற்சிக்கும் போது உமரின் மகன் அவனை தடுத்து நிறுத்தி வெட்டுவதற்காக வாளை ஒங்கிய போது.   உமர் அவர்கள் வெட்டு காயத்தோடு தடுத்து மகனே நீ அவனை தண்டிக்க முடியாது இஸ்லாமிய அரசாங்கம் இருக்கிறது கோர்ட் இருக்கிறது அவர்களுக்கு தான் தண்டிக்கும் உரிமை இருக்கிறது. எனவே அவனை பிடி என்றார்கள். அந்த காயத்தினால் உமர் ரலி அவர்கள் இறந்தார்கள். குத்தியவனுக்கு கோர்ட் மரணதண்டனை கொடுத்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


எவருடைய நாசவேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ, அவன் உண்மை முஸ்லிமல்ல.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா,நூல்: முஸ்லிம் 73)

16 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  இஸ்லாமியர்களை இப்படி சித்தரிப்பதை நினைத்து வேதனையாக தான் இருக்கிறது.

  சரியான தருணத்தில் சரியான பதிவுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோ.ஹைதர் அலி,

  தற்போதைய சூழலில் மிகவும் தேவையான இடுகை.

  நீங்கள் சொல்வதுபோல, குண்டு வைப்பவர்கள் "ஃபஸாதிகள்"--- "குழப்பம் விளைவிப்பவர்கள்"--- என்பதே சரியான வார்த்தை..!

  இந்த 'ஃபஸாதிகள்' என்ற வார்த்தைக்குள் யார் யாரெல்லாம் வருவார்கள் என்றால்... இதுவரை நம் நாட்டில் குழப்பம் விளைவிக்கும்-விளைவித்த... என அனைவரும் வருவார்கள் அல்லவா..?

  ReplyDelete
 3. இந்த குண்டு வெடிப்பு பற்றி என்னுடைய கருத்து..!

  மும்பையில் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்ற கொடூர நரகவாசிகளை - அவர்கள் யாராக இருந்தாலும் - மிக்க வன்மையாக கண்டிக்கிறேன்.

  அவர்களை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் உடனே தூக்கிலிட வேண்டும் என்று அரசு மற்றும் நீதித்துறையை கேட்டுக்கொள்கிறேன்.

  மும்பை & கோவை குண்டுவெடிப்பு நிகழ்த்திய "பச்சை பயங்கரவாதி"களுக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கியாகி ஆகிவிட்டது. மிக்க நன்றி... காவல்துறை & நீதித்துறை.

  ஆனால், அதற்கு காரணமான அதற்கு முந்தைய ஹிந்துத்துவா கலவர கொலையாளிகளுக்கு (ஆதாரம் கோவை-கோகுலகிருஷ்ணன் கமிஷன் மற்றும் மும்பை-ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்) இன்னும் விசாரணை-வழக்கு-கைது என்று ஏதும் ஆரம்பிக்கக்கூட இல்லையே இது ஏன்..?

  அஜ்மீர், ஹைதராபாத், நாண்டட், மாலேகான் 1 & 2, அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், வாரனாசி, தென்காசி, சென்னை, சம்ஜோதா, தானே, புனே, கேரளா ஆகிய இடங்களில் குண்டு வைத்த (ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் வாக்குமூலங்கள், ஹேமந்த் கார்கரே மற்றும் ATS கண்டு பிடித்த ஆதாரங்கள் அடிப்படையில்) கைது செய்யப்பட்ட "காவி பயங்கரவாதி"களுக்கும்...

  மும்பை-கோவை-ஒரிசா-குஜராத் கலவரக்கொளையாளிகளுக்கும்...

  லிபர்ஹான் கமிஷன் அறிக்கைப்படி ரத்த யாத்திரை நடத்தி பாபர் மஸ்ஜித் இடித்த "காவி பயங்கரவாதி"களுக்கும்...

  ஒரிசாவில் பாதிரியாரை உயிரோடு எரித்தவர்கள், தலித் மக்களை உயிரோடு எரித்தவர்கள், சுட்டுக்கொன்றவர்கள் போன்ற "காவி பயங்கரவாதி"களுக்கும்....

  அடிக்கடி ரயில் தண்டவாளங்களுக்கு குண்டுவைத்து, ஓடும ரயிலை கவிழ்த்து அப்பாவி மக்களை கொல்லும் "சிகப்பு பயங்கரவாதி"களுக்கும் தன்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும்.

  இதன்மூலம்... இந்தியாவில் நீதி என்றால் அது அனைவர்க்கும் பொதுவானது என்று நிலை நாட்ட வேண்டும்.

  ReplyDelete
 4. நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளை பொறுத்த மட்டில்...

  இதுவரை 90% க்கும் அதிக அளவில் "ஹிந்துத்துவா காவி பயங்கரவாதி"களே இருக்கிறார்கள் என்பது கடந்த இரண்டாண்டுகளில் நடந்த இந்திய அரசின் ஹேமந்த் கார்கரே புகழ் ATS புலனாய்விலும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களிலும் வெளிப்பட்ட அப்பட்டமான உண்மை.

  நிஜம் இப்படி இருக்கும்போது...

  மும்பையில் குண்டு வெடித்த அன்று உடனே வெளியிட்ட தினமலர் ட்விட்டில் "மும்பையில் மீண்டும் 26/11" என்பதாக தலைப்பிட்டு வாசகர்களுக்கு செய்தி சொல்வதற்கு பதில் தன் "ஹிந்துத்துவா கருத்தை" திணித்து விட்டது.

  ராமகோபாலன் போன்றவர்களின் இந்த ஆதாரமற்ற கேவலமான ஃபஸாதி அறிக்கைக்கு எவரும் கண்டனம் தெரிக்கவில்லை.

  கோவை-மும்பை என இரண்டு குண்டுவெடிப்புகள் தவிர மீதி அனைத்துக்கும் காரணமான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களுடன் கைதாகி இருந்தாலும் இதுவரை வழக்கும் நடக்கவில்லை தண்டனை ஏதும் பெறவில்லை. இதில் இன்னும் ஏகப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் "தலைமறைவாக இருக்கிறார்கள்". இவர்களை பிடிக்கவும், அதைப்பற்றி கேட்கவும், தண்டனை வழங்கவும் வக்கில்லை என்றாலும், இன்னும் மும்பை குண்டுவெடிப்பில் தண்டனை வழங்கப்பட்டும் சிக்காமல் உள்ள தாவூத் இப்ராஹீம் போன்ற சில குற்றவாளிகளை பற்றியே பேசிக்கொண்டு உள்ளார்கள்.

  நம் நாட்டில் 90% குழப்பங்களுக்கு ஆதாரங்களுடன் காரணம் ஆன பிரிவினரை அம்போவென விட்டுவிட்டு....

  ஆதாரம் இல்லாமல் ஒரு பிரிவினரை மட்டுமே இந்த குண்டுவெடிப்புக்கு குற்றம் சொல்லும் அனைவருமே ஃபஸாதிகளே...!

  அதை எடுத்துப்போடும் ஹிந்துத்துவா ஊடகங்களும், அதை கண்டிக்காமல் கண்டுக்காமல் இருக்கும் செய்தித்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர், மாநில அரசுகள் என அனைவருமே ஃபஸாதிகளே...!

  இந்த நேரத்தில்...

  இந்த வெடிகுண்டு சம்பவத்தவக்கு ராமகொபாலனை எல்லாம் முந்திக்கொண்டு காட்டமான கண்டன அறிக்கைகளை "தம் பாணியில்" பதிவு செய்யாமல் மவுனமாக இருந்த முஸ்லிம் அமைப்புகளை நினைத்தால்...

  ஹும்... வருத்தமாக இருக்கிறது.

  ReplyDelete
 5. //ஆனால் நம்ம நம்பர் ஒன் பத்திரிக்கை தினமலர் முந்திக் கொண்டு வழக்கம் போல்
  இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள் குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும்//

  இந்த நாய் பல சூடு போட்டாலும் திருந்தாது, பெரிய அளவில் அனைவரும் படிக்கும் வகையில் நாமே பத்திரிக்கை துவங்குவதே இதற்கான வழி.

  ReplyDelete
 6. ஆனால் நடுநிலையாக உள்ள நல்லவர்களும், நேசஉணர்வு கொண்டவர்களும் இந்த சதிக்கு ஆளாகி விரோத உணர்வு கொண்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் இதற்கு விளக்கம் எழுதும்படி என் உள்ளுணர்வு தூண்டியது.

  உங்கள் ஆதங்கம் மிக சரியானதே நண்பரே! இறைவன் உங்கள் நல்ல உள்ளத்துக்கு உறுதுணையாக இருப்பார்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!

  இந்த குண்டுவெடிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காரணமானவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.

  ஜிஹாத் (அறப்போர்) என்பது இன்று தவறாக கையாளப்படுகிறது என்பது கவலையான ஒன்று.

  ReplyDelete
 8. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்July 18, 2011 at 2:21 AM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  மும்பை குண்டு வெடிப்பு பற்றி தங்களிடம் ஒரு கட்டுரையை எதிர்ப்பார்த்தேன் சகோ.ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சார்பாக தாங்கள் கட்டுரையிலும் சகோ.முஹம்மது ஆஷிக் மறுமொழியில் ஆதங்கத்துடன் வெளிபடுத்தியுள்ளீர்கள்.பத்திரிக்கைகள் என்று நடுநிலையுடன் நடக்கிறதோ அன்றுதான் குற்றவாளி யார் என்பதை உலகறியும்.

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  தக்க நேரத்தில் உங்களின் பதிவு தெளிவூட்டுகிறது தகுந்த இஸ்லாமிய ஆதரத்துடனுடன் எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.

  சகோ ஆசிக் தகுந்த விளக்கத்துடனுடன் பின்னூட்டம் அளித்துள்ளார் என்பதினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது அதே நேரத்தில் அக்குண்டு வெடிப்பில் பலியானோரை நினைக்கும் போது மனது வலிக்கின்றது இஸ்லாம் தீவிரவாதத்தை முற்றிலுமாக எதிர்க்கின்ற மார்க்கம் என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான் ஆனால் குழப்பாவாதிகளால் தவரான சேதிகளை தரும் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் கண்டிக்கப் படவேண்டியதுதான்.

  எது எப்படியோ இவ்விசயத்தில் அரசு இதற்க்கு ஒரு முற்று புள்ளி வைக்காவிட்டால் இந்தியா கேட்ப்பாரற்று போயிவிடும்.

  மக்கள் தீவிரவாத அமைப்புகள் கலையப் படவேண்டும் இதில் மதத்தை இணைக்கக் கூடாது.

  ReplyDelete
 10. @ஆமினா

  வ அலைக்கும் வஸ்ஸலாம்..
  அன்பு தங்கை ஆமினா அவர்களே
  வருக வருக
  நீண்ட்ட்ட்ட்ட நாளைக்கு பிறகு வருகை தந்து கருத்துரை அளித்த்மைக்கு நன்றி

  ReplyDelete
 11. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  என்னுடைய பதிவிற்கு வலுசேர்க்கும் விதமாக அழகான கருத்துரை தந்த
  உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ

  ReplyDelete
 12. @கார்பன் கூட்டாளி

  ஆம் சகோ நமக்கேன்று ஒரு மீடியா கட்டமைக்க வேண்டும் சகோ

  இது காலத்தின் தேவை

  ReplyDelete
 13. @மாய உலகம்

  //உங்கள் ஆதங்கம் மிக சரியானதே நண்பரே! இறைவன் உங்கள் நல்ல உள்ளத்துக்கு உறுதுணையாக இருப்பார்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...//

  பதிவை சரியான முறையில் உள்வாங்கி கருத்து தெரிவித்த்மைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 14. @Abdul Basith

  தங்கள் வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 15. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //.பத்திரிக்கைகள் என்று நடுநிலையுடன் நடக்கிறதோ அன்றுதான் குற்றவாளி யார் என்பதை உலகறியும்.//

  சில பத்திரிக்கைகள் வகுப்பு கலவரத்தை தூண்டுவதற்காகவே திட்டமிட்டு நடத்துகிறார்கள் சகோ

  ReplyDelete
 16. @அந்நியன் 2

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete