Saturday, April 30, 2011

காஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்

1953ஜூலை 26 அன்று மோன் காடாபாரக் தாக்குதல் வழக்கில் 76 நாள்கள் தனிமைச் சிறையில் இருந்துவிட்டு பிறகு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து கேட்டார்:

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்யும்போது எத்தனைக் காலமாக அவன் வேலையில்லாமல் இருந்தான் எனக் கேட்பதுண்டா? அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் வாரத்தில் அவன் எத்தனை நாள்கள் உணவு உண்டான்;எத்தனை நாள்கள் பட்டினி கிடந்தான் எனவும் நீங்கள் அவனிடம் கேட்பதுண்டா? நீங்கள் அவனது சமூக சூழ்நிலையைப் பற்றி விசாரிப்பது உண்டா? அதிகம் ஒன்றும் சிந்திக்காமல் அவனை சும்மா சிறையில் தள்ளுவீர்கள்.

ஆனால்,வர்த்தக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் தீ வைத்து காப்பீட்டுத் தொகையைக் கொள்ளையடிப்பவர்கள்,சில மனித உயிர்களும் இதில் சாம்பலாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சிறைக்குப் போகமாட்டார்கள்.இன்சூர் செய்தவர்களிடம் வழக்குரைஞரை நியமிக்கவும் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுக்கவும் தேவையான பணம் உள்ளது. பட்டினியால் வாடி வதங்கும் ஏழையை நீங்கள் சிறையில் அடைப்பீர்கள்.

ஆனால், அரசின் கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடிக்கின்ற கொடியவர்களில் எவரும் ஓர் இரவு கூட சிறைகளில் கழித்திருக்க மாட்டார்கள். ஆண்டின் இறுதியில் ஏதாவது ஒர் உன்னத கேளிக்கை விடுதியில் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பீர்கள்.அதன் மூலம் அவர்கள் உங்களுடய ஆதரவைப் பெறுகின்றனர்."


ஒருமுறை கலீஃபா உமருல் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் சில கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹாத்திப் இப்னு அபீபல் தஆ என்பவரது பணியாள்களாக இருந்தனர்.முசைனா குலத்தைச் சேர்ந்த ஒருவரது ஓட்டகத்தைத் திருடி அறுத்து சாப்பிட்டு விட்டனர் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவர்களை விசாரணை செய்தார் உமர்(ரலி) ஐயத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் முன்பே கலீஃபா அனைவரையும் திரும்ப அழைத்தார்.திருடியதற்கான காரணம் என்ன என்பதைக் குறித்து விசாரித்தார். கொடிய வறுமை மற்றும் பட்டினி காரணமாகவே இதனைச் செய்தாக அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

அது உண்மைதான் என்பதை விசாரித்து உறுதி செய்து கொண்ட கலீஃபா உமர் அவர்களின் முதலாளியான ஹாதிப் இப்னு அபீபல் தஆவை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அவரிடம் கூறினார்:

"நீங்கள் இவர்களிடம் கடினமாக வேலை வாங்கியுள்ளீர்கள். ஆனால் வாழ்வதற்குத் தேவையான கூலியை வழங்கவில்லை.அதுதான் இவர்கள் திருடத் தூண்டுகோலாய் அமைந்தது. எனவே இவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனைக்குத் தகுதியானவர் நீங்கள்தாம். நான் உங்கள் மீது பெரும் பாரம் ஒன்றைச் சுமத்தியே தீருவேன்."

உமரூல் ஃபாரூக் 400 திர்ஹம் விலையுள்ள அந்த ஒட்டகத்தின் மதிப்பைவிட இருமடங்கு தொகையை அதன் உரிமையாளருக்குத் தருமாறு ஹாதிப் இப்னு அபீபல் தஆவுக்கு ஆணையிட்டார். திருடிய தொழிலாளிகளைத் தண்டிக்காமல் விடுதலை செய்து விட்டார்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு கலீஃபா உமர் நடைமுறைப்படுத்திய நீதிக்காகத்தான் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அன்று உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்தார்; உடனடியாக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று...?

29 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மாஷாஅல்லாஹ்..!

  அமர்க்களம்..!

  ஆணித்தரம்..!

  இதற்குப்பெயர் தான் பதிவு..!

  ஈர்க்கிறது..!

  உண்மையான நியாயம்..!

  ஊமையாகும் அநியாயம்..!

  என்று மாறும் அநீதி..?

  ஏங்கும் நமக்கு எங்கே சமநீதி?

  ஐயம் திரிபற பிரித்தறிவித்திருக்கிறீர்கள்..!

  ஒன்றாம் தர அசல் இடுகை..!

  ஓடும் ஓட்டத்தில் இடப்படும்...

  ஒளரல் மொக்கை அல்ல..!

  ஃ)

  ReplyDelete
 2. சலாம். சகோ. ஹைதர்அலி!

  மிகச் சிறந்த இடுகை! கம்யூனிஸ்டு தோழர்கள் சற்று இந்த பதிவின் பக்கம் கவனம் செலுத்தலாம்.

  ReplyDelete
 3. சகோ...
  இந்த பதிவை...
  நாளை...
  மேதின ஸ்பெஷலாக வெளியிட்டு இருக்கலாம்..

  ReplyDelete
 4. சகோதரர் ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அல்ஹம்துலில்லாஹ். அசத்தலான பதிவு...


  தாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 5. @சுவனப்பிரியன்//கம்யூனிஸ்டு தோழர்கள் சற்று இந்த பதிவின் பக்கம் கவனம் செலுத்தலாம்.//
  ---சகோ.சுவனப்பிரியன்.....?!?

  அடடா..! உங்களுக்கு தெரியாதா...? பிடல் கேஸ்ட்ரோ ஒரு 'போலி கம்யிநிஸ்ட்' என்று வினவு கோர்ட்டில் சொம்பு சகிதம் வந்து நாட்டாமைத்தோழர்கள் எப்போதோ தீர்ப்பு எழுதி விட்டார்களே..!

  ReplyDelete
 6. @முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  அல்ஹம்துலில்லாஹ்

  ஜஸாக்கல்லாஹ் கைர சகோ

  ReplyDelete
 7. நல்ல கருத்துகள். ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ என்பதாக, தம் ஆட்சியில் குற்றம் நடக்கிறது என்றால், அதற்கு தண்டனை மட்டும் கொடுத்துப் போகாமல், குற்றம் செய்தவர்களின் பிண்ணனியையும் ஆராய்ந்து குறைபோக்குவதே ஆட்சியாளர்களுக்கு அழகு.

  இப்ப ஆட்சி எப்படின்னா, எனக்கும் பங்கு கொடுத்துட்டு நீ என்னவேணா செஞ்சுக்கோன்னுதான்!! :-(((((

  ReplyDelete
 8. சிறப்பான பதிவு

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  சிந்தனைப் பதிவு.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. சிந்தனையைத் தூண்டும் நல்ல தகவல்கள்

  ReplyDelete
 11. சகோ ஹைதர் அலி அவர்களுக்கு, பதிவுகள் மேம்பட்டுக்கொண்டே போகின்றன. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சுருக்கமான, ஆனால் முள்ளாய் குத்தக்கூடிய ஒரு கேள்வியை இறுதியில் படிப்பவர்களுக்கே விடை தேடும்படி விட்டிருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ். உலகம் கவனத்தில் கொண்டால் சரி..!!

  முஹம்மது ஆஷிக் பாய்,
  //ஐயம் திரிபற பிரித்தறிவித்திருக்கிறீர்கள்//
  ஏன் இப்படி? நல்ல தமிழ்ல எழுதினா எங்களுக்கும் புரிஞ்சிடும்ன்னா?? டவுட்டே வராத அளவுன்னு எழுதலாமே.... ஹெ ஹெ ஹெ... உங்களுக்கு தெரியாததல்ல என்னுடைய தமிழ் ஞானத்தைப் பற்றி... ஹெ ஹெ ஹெ...

  ReplyDelete
 12. @Aashiq Ahamed

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  உங்களுடைய துஆ விற்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 13. @ஹுஸைனம்மா

  //இப்ப ஆட்சி எப்படின்னா, எனக்கும் பங்கு கொடுத்துட்டு நீ என்னவேணா செஞ்சுக்கோன்னுதான்!! :-(((((//

  இதுதான் இன்றைய எதர்த்த அரசியல்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 14. @விடுதலை

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 15. @அந்நியன் 2
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 16. @சுல்தான்

  வாங்க சகோ உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 17. @அன்னு

  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 18. அல்ஹம்துலில்லாஹ். அசத்தலான பதிவு brother

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  நல்ல தகவல்கள்

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ.

  கருத்தாழம் மிக்க பதிவு. இன்றைய ஆட்சியாளர்களுக்கெல்லாம் கவனிக்க வேண்டிய சிறந்ததொரு முன்மாதிரியான ஆட்சி உமர்(ரலி) அவர்களின் ஆட்சி. அதனால் தான் தேசத் தந்தை காந்தி அடிகள் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி மலர வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

  உஙளின் மூலமாக நிறைய விஷயங்களை அறிந்து கொள்கிறேன் சகோ. வல்ல அல்லாஹ் உங்களின் அறிவை மென்மேலும் விசாலப்படுத்தி வைப்பானாக!!!

  ReplyDelete
 21. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
  தாமதமாக (தமிழ் தெரியாதவர்களுக்கு டிரான்ஸ்லேசன் இங்கே :"லேட்டாக" ) வந்து கருத்தை பதிவிடுவதற்கு மன்னிக்க வேண்டும். சுருக்கமாக நச்சென்று இருக்கிறது பதிவு. கொஞ்சம் புரியும்படி சொன்னால் நெத்தியடியாரின் பின்னூட்டத்தை விட கட்டுரை சிறிதென்றாலும் காரம் அதிகம். அதுவும் சிகப்பு கம்பெனியாருக்கு அவர்களின் முன்னுதாரணத்தை வைத்தே சொல்வது சாலச்சிறந்தது. (நெத்தியடியாருக்கு : பிடல் காஸ்ட்ரோ 1953 ல் எல்லாம் போலி கம்யூனிஸ்ட் இல்லை என்றே ம.க.இ.க கம்பெனியாரும் ஏற்றுக் கொள்வார்கள்.)

  ஆனால் பதிவின் இறுதி வரிகள் "அன்று உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இஸ்லாமிய சட்டம் முழுமையாக அமலில் இருந்தது.; உடனடியாக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று...? இவ்வாரிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

  ReplyDelete
 22. @பாத்திமா ஜொஹ்ரா
  அல்ஹம்துலில்லாஹ்

  உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 23. @தாஜுதீன்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  நன்றி சகோ

  ReplyDelete
 24. @Rafiq

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
  //உஙளின் மூலமாக நிறைய விஷயங்களை அறிந்து கொள்கிறேன் சகோ. வல்ல அல்லாஹ் உங்களின் அறிவை மென்மேலும் விசாலப்படுத்தி வைப்பானாக!!!//

  அல்ஹம்துலில்லாஹ்

  உங்கள் வருகைக்கும் துஆவுக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 25. @பி.ஏ.ஷேக் தாவூத்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  வாங்க சகோ
  //ஆனால் பதிவின் இறுதி வரிகள் "அன்று உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இஸ்லாமிய சட்டம் முழுமையாக அமலில் இருந்தது.; உடனடியாக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று...? இவ்வாரிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.//

  ஒகே சகோ மாற்றி விடுவோம்
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 26. அஸ்ஸலாம் அலைக்கும் வராஹ்.....
  ஹைதர் பாய், கலிபா உமர் அவர்களின் காலத்தில் நடந்த சம்பவம் நாம் அனைவரும்
  அறிந்த விடயமே ஆனால் பிடேல் காஸ்ட்ரோ சம்பவம் எனக்கு தெரியாது
  சரியான நேரத்தில் இரண்டுக்கும் முடிச்சு போட்டு கன கட்சிதமாக
  பதிவிட்டிற்றுக்கிர்களே அதற்காக உங்களுக்கு ஒரு
  ராயல் SALUTE.........................
  // பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு கலீஃபா உமர் நடைமுறைப்படுத்திய நீதிக்காகத்தான் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா நீதிமன்றத்தில் வாதிட்டார்.//

  ReplyDelete
 27. அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே.. !

  மாஷா அல்லாஹ்.. இவ்வளவு அருமையான பதிவை இன்றுதான் வாசிக்கிறேன்..!

  அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் கல்வி அறிவை விசாலப்படுத்தி வைப்பானாக ஆமீன்...!

  ReplyDelete
 28. அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்.....! படிப்பினை தரும் அருமையான பதிவு..!

  சாதாரண மனிதர்கள் அநீதி இழைக்கப்படுவதும் அதற்கு பழிவாங்க அவர்கள் வன்முறைகளை மேற்கொள்வதுமாக உலகம் மெல்ல மெல்ல இரத்தச்சகதி மிக்கதாக மாறிக் கொண்டிருக்கிறது..!

  இந்நிலையில் நீதிபோதம் தரும் இதுபோன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிறைய உலா வர வேண்டும் ..! நன்றி..!

  ReplyDelete