Friday, April 29, 2011

இஸ்லாமிய எதிர்ப்பலைகள்: எதிர்கொள்வது எப்படி? புத்தக அறிமுகம்.


திசை காட்டும் கருவியைக் கையில் வைத்துக் கொண்டு திசையறியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான் ஒரு பயணி..!

ஒளி பாய்ச்சும் சுடரைப் பைக்குள் வைத்துக் கொண்டு இருளுக்குள் தடுமாறிக் கொண்டிருக்கிறான் ஒரு வழிப்போக்கன்...!

இப்படிப்பட்டவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இவர்களுக்கு எப்படி வழிகாட்டுவீர்கள்?

அந்த பணியைத்தான் இந்த நூல் ஆசிரியர் செய்துள்ளார்.

இஸ்ஸாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எதிர்ப்பலைகள் ஆர்ப்பரிக்க என்ன காரணம்?

நாலா புறங்களிலும் அவர்கள் மீது துன்பமும் இழிவும் சூழ்ந்திருப்பது ஏன்?

முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிற்போக்குவாதிகள், முரடர்கள், மதவ்வெறியர்கள் என்றெல்லாம் பழி சுமத்தப்பட என்ன காரணம்?

எதிர்ப்பலைகள் ஏற்பட உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியமும், உள்நாட்டளவில் வகுப்புவாத பாசிசமும் மட்டும் தான் காரணமா?

வெளிப்பகையும் வெளிக் காரணமும் தவிர உட்பகையும் உட்காரணமும் எந்த அளவுக்குக் கோலோச்சுகின்றன?

இத்தகைய வினாக்கள் அனைத்தையும் முன்வைத்து -'நோய் நாடி முதல் நாடி..' எனும் அடிப்படையில் முழு சமுதாயத்தையும் ‘ஸ்கேன்’செய்து நோய்க் குறிகளையும் அவற்றுக்கான சிகிச்சைகளையும் அற்புதமாக விளக்கியுள்ளார்
டக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்.

1.இஸ்லாமிய எதிர்ப்பு அலை உருவான விதம்

2.நம்பிகையை இழக்காதே!

3.உணர்ச்சி வசப்படதே!

4.தோல்விகளுக்கு நாமும் ஒரு காரணம்

5.இதயங்களை வெல்வோம்!

6.அறிவே இன்றைய ஆயுதம்

7.ஊடகத்தை ஆள்பவரே உலகத்தை ஆள்பவர்!

8.கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்

9.கொடுத்துப் பெறுங்கள்

10.ஒன்றுபட்டல்...!

11களத்தில் இறங்குவோம்

பதினொன்று தலைப்புகளில் மிக விரிவாக தொகுத்துள்ளார்.

2.நம்பிகையை இழக்காதே! 
என்ற தலைப்பிலிருந்து ஒரு சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

இஸ்லாமிய எதிர்ப்பு அலைகள் பலமாக வீசும்போது முஸ்லிம்கள் இரண்டுவிதமான தவறுகளைச் செய்கிறார்கள். ஒன்று நம்பிக்கை இழந்து விரக்தி அடைகின்றனர்; அல்லது உணர்ச்சி வசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இவை இரண்டும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கி எதிரிகளின் திட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விடுகின்றன.

இஸ்லாத்திற்கு சோதனைகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்லவே! ஒவ்வோரு இறைத்தூதரும் சோதனைகளை சந்தித்தே வந்துள்ளனர். ஆது,ஸமூது கூட்டத்தார்,ஃபிரவ்ன், நம்ரூத், ஹாமன், காரூன் ஆகியவர்களின் கொடுமைகளை எதிர்கொண்டுதான் இஸ்லாத்தை இறைத்தூதர்கள் வளர்த்துள்ளனர். மக்கத்து குறைஷியர், மதீனத்து யூதர்கள்,நயவஞ்சகர்கள்,ரோம -பாரசீக சாம்ராஜ்யங்கள், மங்கோலியப் படையேடுப்புகள்,சிலுவை யுத்தங்கள், காலனி ஆதிக்காரர்கள். வல்லரசுகளின் சூழ்ச்சிகள் ஆகியவற்றை சமாளித்துதான் இஸ்லாம் வெற்றி பெற்றுள்ளது.

"உங்களுக்கு முன் சென்று விட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வாரமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? (அல்குர் ஆன் 2:214)"

உலகில் இஸ்லாம் மட்டுமல்ல எல்லா இயக்கங்களும் கொள்கைகளும் சோதனைகளை எதிர்கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன.எந்த சோதனைகளும் நெருக்கடிகளும் நிரந்தரமானதல்ல. நமது முயற்சியாலும் இறைவனின் துனையாலும் அவற்றை வெற்றி கொள்ள முடியும். இறைவனின் அருளில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து உழைத்தால் நிலைமைகள் மாறும்.

“அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை;ஊக்கம் குன்றிவிடவில்லை.(அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணித்திடவுமில்லை.நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.”(3:146)

சில வேளைகளில் எதிரிகளின் எதிர்ப்புப் பிரச்சாரமும் இறுதியில் இஸ்லாத்திற்கு சாதகமாக அமைந்து விடுவதுண்டு.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் செல்லுமிடமெல்லாம் அபூலஹபும் உடன் சென்று அவர்களைப் பற்றி பொய்ச் செய்திகளைப் பரப்பியது இஸ்லாம் பற்றிய ஆர்வத்தை மக்களிடையே தூண்டி விட்டு பலர் இஸ்லாத்தில் இணையக் காரணமாக அமைந்தது.

மதீனாவில் இஸ்லாம் பரவ யூதர்களும் ஒரு வகையில் காரணமாக இருந்தனர் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

"ஓர் இறைத்தூதர் வரப்போகிறார். அவரை நாங்கள் ஏற்று அவரின் துணைகொண்டு எங்கள் எதிரிகளை (அவ்ஸ்,கஸ்ரஜ்) வீழ்த்துவோம்" என்று யூதர்கள் அடிக்கடி கூறி வந்தனர். இதனைக் கேட்டுப் பழகிப் போன மதீனத்து மக்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா சென்றபோது நபி (ஸல்) அவர்களைச்  சந்தித்தனர். "ஓர் இறைத்தூதர் வரப்போகிறார் என்று யூதர்கள் கூறிவரும் இறைத்தூதர் இவர்தான் எனவே நாம் முதலில் இவரைப் பின்பற்றி விடுவோம்" எனக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். எனவே மதீனாவில் இஸ்லாத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் யூதர்களே!

இன்று மேலை நாடுகளில் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்பப் பட்டு வரும் எதிர்ப்பு அலை இஸ்லாத்தைப் பற்றி அறியும் ஆவலைத் தூண்டியுள்ளது.குர்ஆனும் இஸ்லாமிய நூல்களும் அதிக அளவில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அறிஞர்களைத் தேவாலயங்களுக்கு அழைத்து இஸ்லாமிய உரைகளை நிகழ்த்தச் செய்கின்றனர். அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

"அமெரிக்காவில் அறுபது லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அங்கு ஆண்டுதோறும் 25,000 பேர் இஸ்லாத்தைத் தழுவுவதாக ஒரு நியுணர் கூறுகின்றார். செப்டம்பர் 11க்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்லதாக சில மற்று மத குருமார்கள் கூறுகின்றர்" (நியூயார்க் டைம்ஸ் 22-10-2001)

எனவே நெருக்கடிகளையும் சோதனைகளையும் கண்டு துவண்டு விடாது துணிவுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

7.ஊடகத்தை ஆள்பவரே உலகத்தை ஆள்பவர்! 

என்ற அத்தியாத்தில்.
ஊடகத்துறையில் நாம் செய்ய வேண்டியவை என்ற தலைப்பிலிருந்து ஒரு சில வரிகள்.

1. அவதூறுகளைக் களைதல்

ஊடகத்தை அறிந்து கொள்ளுதல்:ஊடகத்தை நடத்துபவர் யார்,அதில் எழுதுபவர்கள் யார்,அவர்களின் சமூக,மத, அரசியல்,சித்தாந்தப் பின்னணிகளையும் அவர்களது முந்தைய எழுத்துகளையும் அறிந்திருந்தால்.

வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்

2.நாம் நடத்தும் ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும் 

அவதூறுகளுக்கு பதில் கூறுவது,பிறரால் நடத்தப்படும் பத்திரிக்கைகளைச் சார்ந்து நிற்பது என்பன ஒரு நிரந்தரத் தீர்வல்ல.எதுவுமே செய்யாதிருப்பதை விட அதையாவது செய்யலாம் என்ற அளவில் அதனை ஏற்றுக் கொள்ளலாம். 
ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு மத,வர்த்தக, அரசியல் பின்னணி இருப்பதால் தங்களின் நலன்களை பாதிக்கும் செய்திகளை அவர்கள் வெளியிட மாட்டார்கள் எனவே கீழ்க்காணும் கூறுகளை உள்ளடக்கிய பத்திரிக்கைகள்,சேனல்கள் ஆகியவை நமக்குத் தேவை.

*  சாதி, மத,இன, மொழி,தேச உணர்வுகளுக்கு அப்பால் நின்று உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும். முஸ்ல்லிம்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக் கட்ட வேண்டும்.

* சாதி, மத வட்டார வெறியைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.

* ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ,பலவீனமான மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

* வதந்திகளையும் யூகங்களையும் வெளியிடக் கூடாது. பரபரப்புக்காக செய்திகளை வெளியிடுவதை விட்டு விட வேண்டும்.

* எல்லா வகையான அநீதிகள், சுரண்டல்கள்,தீமைகள் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்ப வேண்டும்.

* ஆபாசம், மது,சூது, வட்டி,புகை, வன்முறை போன்ற ஒழுக்கச் சிரழிவுகளை ஊக்குவிக்கும் வகையில் செய்திகளோ விளம்பரங்களோ இடம் பெறக் கூடாது.

சுருங்கக் கூறின்,நடுநிலையோடும் நம்பகத்தனமையோடும் எல்லாத் தரப்பினரும் விரும்பக்கூடிய, பார்க்கக்கூடிய தரமான பத்திரிக்கையாக,சேனலாக இருக்க வேண்டும்.இதனைச் செய்ய பொருளாதாரம் ஒரு தடையல்ல.ஆர்வமும் அக்கறையும் துடிப்பும் உள்ளவர்கள் இணைந்து செயலாற்றினால் இது சாத்தியமே.

நூல்
இஸ்லாமிய எதிர்பலைகள்:எதிர்கொள்வது எப்படி...?
ஆசிரியர்
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை-600012

13 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோ.ஹைதர் அலி,
  மிக அருமையான புத்தக அறிமுகம். தற்போதைய இஸ்லாமிய சூழலில் மிகவும் பிபலமான மருத்துவர் KVS.ஹபீப் முஹம்மதுவின் இந்த புத்தகம் நமக்கு மிக அவசியமான புத்தகம். மிக்க நன்றி சகோ,ஹைதர் அலி.

  எனக்கு அதில் மிகவும் பிடித்த வரிகள்...

  ///இஸ்லாமிய எதிர்ப்பு அலைகள் பலமாக வீசும்போது முஸ்லிம்கள் இரண்டுவிதமான தவறுகளைச் செய்கிறார்கள். ஒன்று நம்பிக்கை இழந்து விரக்தி அடைகின்றனர்; அல்லது உணர்ச்சி வசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இவை இரண்டும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கி எதிரிகளின் திட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விடுகின்றன.//

  இதனால், ஆரோக்கியமான விவாதங்கள், சரியான இஸ்லாமிய சான்றுகள்... மற்றும் அதைவிட மிக மிக மிக மிக மிக முக்கியமாக இஸ்லாம் சொன்னபடி நம்முடைய வாழ்க்கையை உண்மை முஸ்லிமாக வாழ்ந்துகாட்டி... என இவை மூலமே தூய இஸ்லாத்தை எதிர்ப்பவர்களிடம் நாம் எடுத்து சொல்ல முடியும்.

  ReplyDelete
 2. @முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'
  அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //இதனால், ஆரோக்கியமான விவாதங்கள், சரியான இஸ்லாமிய சான்றுகள்... மற்றும் அதைவிட மிக மிக மிக மிக மிக முக்கியமாக இஸ்லாம் சொன்னபடி நம்முடைய வாழ்க்கையை உண்மை முஸ்லிமாக வாழ்ந்துகாட்டி... என இவை மூலமே தூய இஸ்லாத்தை எதிர்ப்பவர்களிடம் நாம் எடுத்து சொல்ல முடியும்.//

  ஆமாம் சகோ முதலில் நாம் வாழ்வில் முழுமையாக பின்பற்ற வேண்டும்

  நன்றி சகோ

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்!

  மிகச்சிறந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மாற்று மதத்தவரிடம் சிறந்த முறையில் அணுகுபவர் டாக்டர் ஹபீப். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  பல பொக்கிஷங்களை வழங்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.

  ///இஸ்லாமிய எதிர்ப்பு அலைகள் பலமாக வீசும்போது முஸ்லிம்கள் இரண்டுவிதமான தவறுகளைச் செய்கிறார்கள். ஒன்று நம்பிக்கை இழந்து விரக்தி அடைகின்றனர்; அல்லது உணர்ச்சி வசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இவை இரண்டும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கி எதிரிகளின் திட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விடுகின்றன.//

  இஸ்லாமிய எதிர்ப்பு அணியினரின் நோக்கமே எப்படியாவது இஸ்லாமியர்கள் மீது களங்கம் சுமத்தி அவர்க்ளை பின்னுக்கு தள்ளுவதுதான்.

  இன்ஷா அல்லாஹ் இந்தப் புத்தகம் கைய்யில் கிடைத்ததும் படிக்கின்றேன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்களின் பேச்சுக்கள் மாதிரியே எழுத்துக்களும் அமைந்துள்ளன, மாஷா அல்லாஹ்!

  "நாம் நடத்தும் ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் சொன்னவை அத்தனையும் அருமை! பகிர்வுக்கு நன்றி சகோ, ஜஸாகல்லாஹு ஹைரா.

  ReplyDelete
 6. @சுவனப்பிரியன்
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  k.v.s அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

  உங்கள் கருத்திற்கு நன்றி சகோ

  ReplyDelete
 7. @அந்நியன் 2

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //இன்ஷா அல்லாஹ் இந்தப் புத்தகம் கைய்யில் கிடைத்ததும் படிக்கின்றேன்.//

  கண்டிப்பாக வாங்கி படியுங்க சகோ

  வலைப்பதிவில் எழுதும் சகோதரர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூல் இது

  ReplyDelete
 8. @அஸ்மா
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //நாம் நடத்தும் ஊடகங்கள் எப்படி இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் சொன்னவை அத்தனையும் அருமை!//
  இது போன்ற ஊடகத்தை கட்டமைப்பதற்கு துஆ செய்யுங்கள் சகோ

  //பகிர்வுக்கு நன்றி சகோ, ஜஸாகல்லாஹு ஹைரா.//

  இறைவன் உங்களுக்கும் நன்மைகளை வழங்குவானாக.

  ReplyDelete
 9. சகோதரர் ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  இந்த காலகட்டத்திற்கு தேவையான புத்தக அறிமுகம். ஜசக்கல்லாஹு க்ஹைர். நிச்சயம் வாங்கி படிக்க வேண்டும்.

  "உங்களுக்கு முன் சென்று விட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வாரமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? (அல்குர் ஆன் 2:214)"

  என்னை என்றென்றும் ஊக்கப்படுத்தும் இறைவசனம். அல்ஹம்துலில்லாஹ்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 10. Dr.K.V.S Habib Mohammed அவர்களின் பேச்சுக்களும், கட்டுரைகளும் மிக மிக எளிதாக, பாமரனையும் சென்றடையும் விதம். அதே நேரம் அதற்கென அவர் செய்துள்ள ஆய்வுகளை கடைசி பக்கத்தில் போட்டால் தாள்கள் பற்றாது. நான் அவரின் பேச்சுக்களையும், பேட்டிகளையும், (எந்த சேனல்னு பேர் ஞாபகமில்லை) டீவியில் அவரின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் விடாது பார்த்து வந்தது ஒரு காலம். அவரின் புத்தகமும், அதே தரத்தில் இருக்கும் என்பதை உங்கள் விமர்சனம் மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளது.

  அதே போல், ஊடகங்களில் முஸ்லிம்களின் பணியும், முஸ்லிம் ஊடகங்களுக்கான சப்போர்ட்டும் நம் மக்களிடம் வேண்டும். மில்லிகேஜட் போன்ற பத்திரிக்கைகள் வீடெங்கும் பரவ தொடங்கினால் இன்னும் மற்ற திறமையான, தைரியமான ஊடகங்களும் வரத் தொடங்கும். இன்ஷா அல்லாஹ் அதுவரை நம்மால் இயன்றவரை பதிவுலகம் என்னும் ஊடகத்தின் மூலமாவது மக்களை சென்றடைவோம்.

  ReplyDelete
 11. டாக்டர் ஹபீப் அவர்களின் உரையை டிவியில் ஒன்றிரண்டு முறை மட்டுமே கேட்க நேர்ந்தது. அருமையாய் இருந்தது. இப்போதிருக்கும் சில முஸ்லிம் தலைவர்கள் பின்பற்ற வேண்டியவர். இரண்டு புத்தகங்களும் கிடைத்தன. வாசிக்க எளிதாகவும், புரிந்துகொள்ள ஏதுவாகவும் இருந்தன.

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.ஹைதர் அலி,
  அனைவரும் படிக்கவேண்டிய அற்புதமான புத்தகம். நல்லதோர் அறிமுகம்!

  ReplyDelete
 13. அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்..

  டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவ‌ர்க‌ளிட‌ம் மாற்று ம‌தத்தினர்க‌ளால் கேட்க‌ப்ப‌ட்ட‌ 78 "ந‌ச்" கேள்விக‌ளுக்கு

  டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவ‌ர்க‌ளால் அளிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌தில்க‌ளை காணொளியில் (VIDEO) கீழுள்ள‌ சுட்டியை சொடுக்கி காணுங்க‌ள்.

  திரை ட‌வுன்லோட் ஆக‌ சிறிது அவ‌காச‌ம் பிடிக்க‌லாம்.


  **** டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவ‌ர்க‌ளிட‌ம் மாற்று ம‌தத்தினர்க‌ளால் கேட்க‌ப்ப‌ட்ட‌ 78 "ந‌ச்" கேள்விக‌ளுக்கு டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவ‌ர்க‌ளால் அளிக்க‌ப்ப‌ட்ட‌ 78 ப‌தில்க‌ள். VIDEO *****

  .

  ReplyDelete