Tuesday, April 19, 2011

“மரபணு மாற்றம் (BT) மெல்லக் கொல்லும் நஞ்சு!”

பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில், சென்னை புதுக்கல்லூரில் உயிரி நுண்ணுயிர்த் தலைவராப் பணியாற்றி வருகிறார்.

புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் பள்ளிப் படிப்பை புதுச்சேரியில் முடித்து 1968இல் புதுக்கல்லூரி மாணவராக B.sc. முடித்து 1984-இல் புதுக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து தொடர்ந்து M.Phil.,Ph.D. Dsc முடித்தார். 1974 முதல் 2001 வரை விலங்கியல் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். 

மண்புழு ஆராய்ச்சியில் (இன்று பள்ளிப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள மண்புழு குறித்த பாடங்கள் இவர் எழுதியவையே) பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்தவருமான பேராசிரியர் அவர்கள் சமரசம் இதழ் ஆசிரியர் குழுவிற்கு மரபணு மற்றம் குறித்த கேள்விகளுக்கு அளித்த பதில்.அந்த நேர்காணலிருந்து....

பேராசிரியர் டாக்டர்
சுல்தான் அஹமது இஸ்மாயில்
.மரபணு மாற்றம் என்றால் என்ன?
குழந்தை பிறக்கிறது என்றால் பார்த்ததும் அம்மா போல் மூக்கு,அப்பா போல் காது என்று சொல்கிறோம். இதற்குக் காரணம் மரபணுக்கள். அதே போன்று செடி கொடிகளுக்கும் மரபணு உண்டு. ஒரு தாவரம் எத்தகைய பண்புடன் இருக்க வேண்டும் என இறைவன் நிர்ணயித்து இருப்பது தான் மரபணுக்கள். விஞ்ஞானம் என்ற பெயரில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பணத்திற்காக விதைகளில் ஜீன்களை மாற்றி தாவரங்களின் உண்மையான தன்மைகளை மாற்றி அமைப்பதுதான் மரபணு மாற்றம்.

.மரபணு மாற்றத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் விளக்கம் என்ன?
முன்பெல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு தாவரங்களை ஒட்டுப் போடுவது வழக்கம். அதாவது ஒரு வகை மாங்காயையும் மற்றொரு வகை மாங்காயையும் இணைத்து விவசாயம் பண்ணுவது
(இந்த முறை பண்டைக் கால அரபுகளிடமும் இருந்தது.இதனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் ஊக்கப்படுத்தினார்கள்.) புளியங்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இன்றும் கூட ஒட்டு முறையில் எலுமிச்சைப் பழ சாகுபடி செய்கிறார்கள். ஆக ஒட்டுமுறை போன்றதுதான் மரபணு மாற்றம் என விளக்கம் தருகிறார்கள்.

.ஒட்டு போடுவதற்கும் மரபணு மாற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களின் விளக்கமே பொய்யானது. ஒட்டுமுறை என்பது மாங்காயையும் மாங்காயையும் இணைத்து மாங்காய் உற்பத்தி செய்வது. ஆனால் மரபணு மாற்றம் என்பது அப்படியல்ல. ஒரு தாவரத்துடன் எந்த ஒரு வகையிலும் தொடர்பில்லாத மற்றொரு பொருளின் மரபணுவை எடுத்து அந்தத் தாவரத்தின் இயல்பையே மாற்றுவதுதான் மரபணு மாற்றம்.

அதாவது கணினியில் Cut &Paste செய்வது போன்றதுதான் இந்த மரபணு மாற்றம். எதை வேண்டுமானாலும் வெட்டி எதனோடும் ஒட்டலாம்.அப்படி ஒட்டும்போது கட்டு போடுகிறோம். அதைதான் நாங்கள் Anti Biotic என்கிறோம்.
அந்த ஒட்டுப் போடுதல் எங்கு ஆரம்பமாகிறது எங்கு முடிகிறது என ஒரு Zone உருவாக்குகிறோம்.அதற்குதான் Starterd Zone,Ter minated Zone என்கிறோம்.அந்த இடத்தில் Anti Biotic சேர்க்கிறோம்.
பொதுவாகவே தொடர்ந்து ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது Immunity அதிகரித்துவிடும்.நாம் உடலின் தனமை மாறிவிடும்.ஒரு நுண்ணுயிரின் விஷப் பகுதிலிருந்துமரபணுவை எடுத்து வேறொரு உயிரினத்தின் மரபணுவுடன் இணைக்கும் போது இந்த புரோட்டீன் வேறொரு சிஸ்டமுடன் வேலை செய்யும்.ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது.அது ஒரு புரோட்டீன்.அனைத்து வகையான புரோட்டீன்களையும் நமது உடல் ஏற்றுக் கொள்ளுமா என்பது நமக்குத் தெரியாது.
ஆரஞ்சு பளபளப்பிற்காகதவளையின் உயிரணுக்கள்
சேர்க்கப்படுகின்றன
மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் மனித உடலுக்கு எந்து அளவிற்கு ஆபத்தானவை?

எந்த ஒரு செடி கொடியும் ஒவ்வொரு வகையான தன்மைகளை வெளிப்படுத்தும்.அது மனித உடலில் அலர்ஜி நமைச்சல் போன்றவற்றை வெளிப்படுத்தும். இது குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.அப்படிப்பட்ட ஆய்வுகள் நம் நாட்டில் செய்யப்படவில்லை. ஆனால் அவர்களுடைய நாட்டில் சில ஆய்வுகள் செய்யப்பட்டன எனச் சொல்கிறார்கள். அந்த ஆய்வுகளும்  வெளிப்படையாகச் செய்யப்படவில்லை.இந்த விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களே ஆய்வுகள் மேற்கொண்டதால் அதனுடைய எதிர்விளைவுகள் மக்களுக்குச் சொல்லப்படவில்லை.

யாரும் அந்த ஆய்வுகள் குறித்து பார்ப்பதற்கோ மறு ஆய்வு செய்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை.ஆக எதுவுமே வெளிப்படையாக இல்லை(Transparency). உடல் ரீதியாகவும் பல இழப்புகளை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ளது. இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் செயற்கை கருத்தரிப்பு மருத்துவ மனைகளே இதற்கு சன்று.ஆண்களுக்கு ஆண்மை இழப்பு, பெண்களுக்கு கருச்சிதைவு போன்றவையும் இந்தப் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படலாம்.இது குறித்த முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை.

எந்த நோக்கத்திற்காக இது கண்டுபிடிக்கப்பட்டது?
அதாவது,நெல்லை எடுத்துக் கொண்டால் கதிராக இருக்கும்.அதைச் சுற்றி களைகள் இருக்கும்.கதிர் வளர வளர அறுவடை நேரத்தில் அந்தக் களைகள் பிரித்தெடுக்கப்படும்.அப்படித்தான் அந்தக் காலத்தில் விவசாயம் செய்யப்பட்டது.குதிரைவால் சம்பா போன்றவை எல்லாம் அப்படித்தான்.
ஆக, மனிதன் இப்படி யோசிக்க ஆரம்பித்தான் நெல்லுக்கு போடப்படுகின்ற உணவில் களைக்கும் பெரும்பகுதி போய் விடுவதால் கதிர் வந்தவுடன் களைகளை வெட்ட வேண்டும் என்றான்; வெட்டப்பட்டது.

இதைப் பார்த்த பூச்சி ஆஹா கதிர் இருக்கின்றது என கதிரை பூச்சி தாக்கப் பார்த்தது. அதற்காகப் பூச்சிக் கொல்லியை அடித்தார்கள். பூச்சிக் கொல்லியை அடிக்க அடிக்க பூச்சிக்கே எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடுகின்றது.ஆக பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து விட்டதால் அதனைக் கட்டுப்படுத்த மரபணுக்களை மாற்றி விவசாயம் செய்யலாம் என்றார்கள். மரபணு மாற்றம் அந்தக் கதிரை சாப்பிடக்கூடிய பூச்சியைக் கொல்லும் என்றால் அந்த நெல்லை சாப்பிடக்கூடிய மனிதனை எந்த வகையில் பாதிக்கும் என்று கேள்வி எழுகிறது.
இது ஒரு நியாயமான கேள்வி.பூச்சி உடனடியாக செத்து விடும் என்றால் அதிகப்படியான தன்மைகள் கொண்ட மனித உடல் பகுதிபகுதியாகச் சாக வாய்ப்புள்ளது.

BT பருத்தி இருக்கும் போது BT கத்தரிக்காயை எதிர்க்க காரனம் என்ன?

நமது நாட்டில் இல்லாத கத்தரிக்காய் வகைகளே இல்லை. பல வகையான கத்தரிக்காய்களை நாம் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஒரு வகை கத்தரிக்காயின் விதையைப் பயிரிடச் சொல்வது எதற்கு?
இத்தனை வகையான காய்களை விட்டு விட்டு BT  காத்தரிக்காயில் நிற்பது ஏன்? வட மாநிலங்களில் பைஙன் பர்தா என்பார்கள். அவர்களின் அனைத்து வகையான நிகழ்ச்சிகளிலும் இந்தபைஙன் பர்தா இடம் பேறும்.
பல வகையான இந்திய கத்தரிக்காய்கள்
இங்கு தென்னகத்தில் கத்தரிக்காய் பச்சடி இல்லாமல் பிரியாணி இல்லை; கத்தரிக்காய் இல்லாமல் சம்பர் இல்லை.ஆம் அதிகப்படியாக விற்பனை ஆகக் கூடிய ஒரு காயைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது. அந்த காய்தான் அதிகப்படியான விற்பனை ஆகக்கூடியாது. அதனால் அதிகப்படியான  
இலாபம் கிடைக்கும் என கம்பெனிகள் ஆசைப்படுகின்றன.


BT கத்தரிக்காயின் விளக்கப் படம்
இத்தனை நாள் விவசாயிகளே தங்களுக்குரிய விதைகளை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது இந்த BT விதைகளால் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அந்த நிறுவனங்களிடமே விதைகளை வாங்க தள்ளப்படுகின்றனர். அதனால் ஒட்டுமொத்த பணமும் அந்த மேற்கத்திய நிறுவனங்களுக்குப் போய்விடுகின்றன. நமது நாட்டில் உள்ள மிகப் பெரிய பலம் பல்லுயிர்(Bio Diversity) இப்படிப்பட்ட பலமுள்ள நாட்டிற்கு இது தேவையா?


இயற்கை விவசாயத்தில் வல்லுநர்கள் ஆன நமது விவசாயிகளிடத்தில் இந்த மரபணு மாற்ற விவசாயத்தை திணிப்பது சரியா? தடுக்க என்ன வழி?


நல்ல கேள்வியை கேட்டு உள்ளீர்கள். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதைத் தடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்தது போன்றல்ல.நல்ல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.எருக்கள் மட்டுமல்ல நுண்ணுயிர்களைப் பிரித்து விவசாயம் செய்தல் எனப் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.இதில் நல்ல இலாபமும் நல்ல உற்பத்தியும் கிடைத்துள்ளன.

ஆக பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இது குறித்து போதிய அக்கரையுடன் விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும்.கான்வென்ட் கல்விச் சூழலில் குழந்தைகளுக்குத் தானியங்கள் குறித்து பாடம் கற்றுத் தர வேண்டும். குறிப்பாக தாய்மார்கள் சீரியல்களைக் குறைத்துவிட்டு Cerials மீது கவனம் செலுத்த வேண்டும். Cerials என்றால் சத்துள்ள உணவு தானிய வகை பயன்படுத்த வேண்டும். பாஸ்ட் புட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை மரபணு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

யாரலும் கண்டுபிடிக்க முடியாது. கடைகளில் அனைத்து வகையான காய்கறிகளையும் சேர்த்து வைத்துள்ளனர். அதனால் பார்த்ததும் கண்டுபிடிப்பது கடினம்.ஆக லேபிலிங் கொடுத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆபத்தானவை என்றால் அரசு எப்படி அனுமதிக்கிறது?

நமது அரசு இதைத் தள்ளி வைத்திருக்கிறது. நிராகரிக்கவில்லை. இதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரும் கூறியுள்ளார். ஒரு குழு அமைத்து இதைக் கண்காணிக்க வேண்டும்.

19 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  மிக நல்ல விழிப்புணர்வூட்டல்.
  அருமையான பதிவு. மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.

  மேலும், நான் அறிந்த சில தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன்: தாங்கள் எழுதிய கட்டுரையில் வந்துள்ள BT என்பது Bacillus Thuringinesis எனும் ஒரு பாக்டீரியா வகை பெயரின் சுருக்கம். இந்த நுண்ணுயிரிக்கு பயிரைத்தாக்கும் காய்ப்புழுவை கொல்லும் திறன் உண்டாம்.

  Genetic engineering மூலம் இந்த வகை நுண்ணுயிரியின் மரபணுவை தாவரத்தின் மரபணுவுடன் இணைத்து உருவாக்கப்படுபபவைதான் Bt பயிர்கள். இவ்வகை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் காய்ப்புழுவை கொல்லும் நஞ்சை தானாகவே உற்பத்தி செய்துகொள்ளுமாம்.

  எனவே விவசாயிகள் காய்ப்புழுவுக்கென தனியே பூச்சிக்கொல்லி வாங்கத்தேவையில்லை என்றும் அதற்கான செலவும் மிச்சமாகும் என்பதும் இப்பயிரைப்பற்றி சொல்லப்படும் ஒரே சிறப்பியல்பு.

  ஆனால், காய்கறியில் இருக்கும் அந்த 'நச்சு நுண்ணுயிரி மனித உடம்பில் என்னேன்ன பாதிப்புகளை உண்டாக்கும்' என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

  இதில் இன்னொரு முக்கிய விஷயம் இந்த பயிர்களின் விதைகள் திரும்ப முளைக்காது. விதைகளை மொன்சன்ட்டோவிடம்தான் வாங்கவேண்டும். ஆக, மொத்த ஒரிஜினல் கத்தரிக்காய் செடிகளும் ஒரு சமயம் இலலாமல் போய்விட்டால்...? அவர்கள் விக்கும் விலைதான். மொத்த கத்திரிக்காய் மார்க்கெட்டும் மொன்சன்ட்டோவிடம்தான் என்றால்...? நிலைமை பயங்கரம்.

  இதைவிட பயங்கரம் என்னவென்றால், பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committee ).

  அப்போது...(BT கத்தரிக்காய் வரும்போது), நடந்த அரசியல்வாதிகளின் அமளி துமளி போலிக்கண்ணீர் நாடகங்களை செய்திகளாக இங்கேயும் அப்புறம் இங்கேயும் படியுங்கள். என்னவொரு நாடகம்...?

  இவ்விஷயத்தில் இந்திய மக்கள் மேற்கத்தியர்களின் சோதனைச்சாலை எலிகள்..! எலிகளை விற்றவர்களுக்கும் இது நிச்சயம் தெரியும். அதற்கு விலை எவ்வளவு என்றுதான் தெரியவில்லை.

  ஆனால், நான் எப்போதோ போராட்டத்தை ஆரம்பித்துவிட்டேன்.

  அனைவரும் இந்த போராட்டத்தை செய்தால்... அதுதான் புரட்சி..!

  என் போராட்டம் என்ன என்றால்... கத்தரிக்காயை காய்கறி கடையில் வாங்குவது இல்லை...!

  :)

  அப்புறம்... சாம்பாருக்கும் பச்சடிக்கும்...?

  எல்லாமே, எங்கள் வீட்டுகொல்லையில் போட்டிருக்கும் கத்தரிக்காய் தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய்கள் மட்டுமே..!

  வச்சிசிட்டோம்ல ஆப்பு... மொன்சன்ட்டோவுக்கும் மன்மோகன் சிங்குக்கும்...!

  எப்பூடி..?

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்!

  சிறந்த கட்டுரை சகோ. ஹைதர் அலி! சகோ. ஆஷிக் சொல்வது போல் நமது வீட்டு தோட்டங்களிலும், மொட்டை மாடிகளிலும் இது போன்ற காய்கறிகளை பயிரிட்டு உடல் நலத்தைப் பேண வேண்டும். உடலுக்கும் ஆரோக்கியம். செலவும் மிச்சம்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அருமையான விழிப்புணர்வு பதிவு.

  //இத்தனை நாள் விவசாயிகளே தங்களுக்குரிய விதைகளை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது இந்த BT விதைகளால் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அந்த நிறுவனங்களிடமே விதைகளை வாங்க தள்ளப்படுகின்றனர்//

  சுய லாபத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் இந்த அநியாயம் பிற்காலத்தில் பொருளாதாரத்திற்கும் மக்களின் உடல்நிலைக்கும் பெரும் ஆபத்தையே கொடுக்கும். மக்கள் அனைவரும் சேர்ந்து இதை எதிர்க்கவேண்டும்.

  //ஆக பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இது குறித்து போதிய அக்கரையுடன் விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும்//

  கண்டிப்பாக எல்லா பக்கங்களிலிருந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும், இன்ஷா அல்லாஹ்! பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில் அவர்களுக்கும் உங்களுக்கும் இறைவன் நற்கூலி வழங்குவானாக!

  ReplyDelete
 4. சகோ. முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //எல்லாமே, எங்கள் வீட்டுகொல்லையில் போட்டிருக்கும் கத்தரிக்காய் தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய்கள் மட்டுமே..!//

  சூப்பர் ஐடியாதான். ஆனா எல்லோர் வீட்டிலும் கொல்லை இருக்கணுமே?! :( ம்ஹூம்.. இப்படியே விட்டால் நிலமை என்னாகுமோ தெரியாது. அதன் பயன்பாட்டுக்கு கொடுத்த அனுமதியை அரசாங்கம் ரத்து செய்யும்படியாக‌ வலுவான‌ எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் தயாராகவேண்டும்.

  ReplyDelete
 5. @ சகோ முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  ரொம்ப உபயோகமான பின்னூட்டம் சகோ நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்

  நன்றி சகோ

  ReplyDelete
 6. @சுவனப்பிரியன்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  நன்றி சகோ

  ReplyDelete
 7. @அஸ்மா

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  பதிவின் நொக்கத்தை சரியாக புரிந்துக் கொண்டீர்கள் சகோ

  போராடாமல் எதனையும் பெற முடியாது சகோ
  நன்றி

  //பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில் அவர்களுக்கும் உங்களுக்கும் இறைவன் நற்கூலி வழங்குவானாக!//

  அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நன்றி சகோ

  ReplyDelete
 8. @அஸ்மா
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  சகோ அஷிக் வீட்டில் தோட்டம் போட்டுக் கொண்டே மற்றவர்களுக்காக போராடவும் செய்வர் இன்ஷா அல்லாஹ்.

  இந்த பதிவுக்கு முதல் பின்னூட்டமாக நீளமான கருத்து கொடுத்ததிலிருந்து இதனை நான் புரிந்துக் கொள்கிறேன்

  நன்றி சகோ

  ReplyDelete
 9. This article is written with lots of errors. Why don't you consult a scientist before attempting to write something on transgenic crops ?

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  விளக்க படத்துடன் பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  பெயர் சொல்ல விரும்பாதவர் கேட்ட கேள்விக்கு பதில் என்ன சகோ.?

  ReplyDelete
 11. @பெயரில்லா

  அண்ணே ஒரு சில லிங்க் உங்களுக்காக

  a) பி.டி எனப்படும் ஒருவகை பேக்டீரியாவின் மரபணுவின் கூறுகளை பாரம்பரிய ரக பருத்தியின் மரபணுவோடு இனைத்து தான் பி.டி பருத்தி
  உருவாக்கப்பட்டுள்ளது.. இதில் உடல் நலனுக்கு கேடானா க்ரை (Cry) ரக ப்ரோட்டீன் உள்ளது. குறிப்பாக மனிதர்கள் உட்கொள்ள தகாத
  க்ரை1ஏசி மற்றும் க்ரை1ஏபி வகை ப்ரோட்டீன் உள்ளது ( இது பிடி கத்தரிக்கும் பொருந்தும்)
  b) இதில் க்ரை1ஏசி உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறனை முறியடிக்கும் தன்மை கொண்டது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை (mucosal immunogen)..
  c) பிலிபைன்ஸ் நாட்டில் பி.டி வகை பயிர்களை விளைவித்த தோட்டங்களில் வேலை செய்த விவசாயிகள் சிலர் மரணம் அடைந்துள்ளனர்
  ( ஆதார சுட்டி = http://www.i-sis.org.uk/GMBanLongOverdue.php)
  d) ஆந்திராவில் பி.டி பருத்தி வயல்களில் வேலை செய்த விவசாயிகளுக்கு இன்னதென்று இனம் காணவியலாத பல மர்ம நோய்கள் தாக்கியுள்ளது.
  அவ்வயல்களில் மேய்ந்த ஆடுகள் நூற்றுக்கணக்கில் செத்துப்போய் உள்ளது (ஆதார சுட்டி = http://www.i-sis.org.uk/GMeggplant.php )
  e) பி.டி கத்தரியைப் பற்றி க்ரீன்பீஸ்
  இயக்கத்தினர் சுயேச்சையான விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளை வாசித்துப் பார்க்கலாம். குறிப்பாக ப்ரென்ச் விஞ்ஞானியான
  செராலினி நடத்திய ஆய்வு முடிவுகள் பி.டி கத்தரி மனிதர்கள் உட்கொள்ளத் தகாதது என்று தெளிவாகச் சொல்கிறது
  f) விஞ்ஞானிகள் பிடி கத்தரிக்காயை சோதனைச் சாலை எலிகளின் மேல் பரிசோதித்த போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்பட்டது.
  சாதாரணமாக எலியின் குணம் என்னவென்றால் கண்ணில் கண்டதையெல்லாம் அது கடித்துக் கொண்டேயிருக்கும் – ஏனெனில் அதன் பல்
  நாளொன்றுக்கு இரண்டு மில்லி மீட்டர் வளரும் தன்மை கொண்டது.. எலி எதையும் கடிக்காமல் இருந்தால் பல் வேகமாக வளர்ந்து எதையும்
  சாப்பிடாமல் இறந்து போய் விடும். எனவே அது எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டேயிருக்கும். பரிசோதனைக்காக எலி இருந்த கூண்டுக்குள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி கத்தரியை வைத்தபோது விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் படிக்கு எலிகள் அந்த கத்தரியில் வாயே
  வைக்கவில்லை. பின்னர் வேறு வகைகளில் அந்தக் கத்தரியை எலி உட்கொள்ளுமாறு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி பிடி கத்தரிக்காயை
  உட்கொண்ட எலிகள் கடும்வயிற்றுப்போக்குக்கு உள்ளாகியிருக்கிறது; வெறிகொண்டதைப் போல நிறைய தண்ணீரை குடித்துக்
  கொண்டேயிருந்திருக்கிறது. மேலும் அதன் கல்லீரல் சாதாரண எலிகளைவிட மிகவும் சுருங்கிப் போய் இருக்கிறது; அவற்றின் ரத்த உறைவுத்
  தன்மையும் கூட குறைந்திருக்கிறது (prothrombin), மேலும் ரத்தத்தில் ஆல்கலின் பாஸ்பேட்டின் அளவு அச்சமூட்டும் விதமாக உயர்ந்து
  கொண்டேயிருந்திருக்கிறது. இறுதியில் அவை புற்று நோய் கண்டு செத்தே போயிருக்கிறது.
  மேலும் பி.டி ரக பயிர்கள் தாம் வளரும் வயல்களை மட்டுமல்லாது தனது சுற்றுப்புற வயல்களில் வளரும் பாரம்பரிய பயிர்களைக் கூட ஊடுருவி
  தாக்குதல் செய்யும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட ஒன்றாகும். இதன் மகரந்தங்கள் மிக எளிதில் பட்டாம்பூச்சிகள், தேனீக்களால் கடத்தப்பட்டு
  பக்கத்து வயல்களில் உள்ள நாட்டு ரக பயிர்களையும் ஊடுருவி அதன் இயல்பான தன்மையை மாற்றியமைத்து விடும் ஆற்றல் கொண்டது. பி.டி
  விதைகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், அவ்விதைகளை மறுவிதைப்பு செய்யமுடியாதபடிக்கு அதன் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது – அதாவது விளைவித்த பி.டி கத்தரிக்காயிலிருந்து மீண்டும் விதையெடுத்து விதைக்க முடியாது – இதனை டெர்மினேட்டர் தொழில்நுட்பம்
  என்கிறார்கள்.
  g) பி.டி பருத்தி விளைவித்த விவசாயிகளுக்கு நாடெங்கிலும் வித விதமான தொல்லைகள் –

  ReplyDelete
 12. @பெயரில்லா தொடர்ச்சி
  1) பி.டி ரக பயிர்கள் சாதாரண நாட்டு ரகங்களைக் காட்டிலும் தண்ணீரை அதிகம் உறிஞ்சக் கூடியது.. எனவே ஆந்திரத்தில் ஒரே வயலில்
  ஒன்றுக்கு மேல் கிணரு வெட்டியிருக்கிறார்கள் ( கடன் வாங்கி )
  2) பிடி ரக பயிர்கள் சாதாரண நாட்டு ரகங்களைக் காட்டிலும் 30% அதிக பூச்சிக் கொல்லி மருந்துகளை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை
  கொண்டது ( பி.டி பயிர்களுக்கு பூச்சி மருந்து தேவையில்லை என்பது பொய்) அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மருந்து தெளிக்க வேண்டும்..
  அதுவும் சாதாரண பூச்சி கொல்லி மருந்து / உரம் போன்றவை செல்லாது – அதிக விலையும் அதிக வீரியமும் கொண்டு மருந்துகளே தெளிக்க
  வேண்டும்.. இதனால் நிலம் பாழ்பட்டது ஒருபுறம் என்றால் கடனில் விழுந்தது மறுபக்கம்
  3) தர்மபுரி, சேலம் பகுதிகளில் பி.டி பருத்திச் செடிகள் மரம் அளவுக்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்த பின்னும் பருத்திக் காய்கள் காய்க்கவில்லை!
  தர்மபுரி கலெக்டர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ5000/- இழப்பீட்டை மான்சாண்டோ விடம் இருந்து விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆந்திர
  அரசாங்கம் மான்சாண்டோ மேல் வழக்குத் தொடர்ந்துள்ளது
  4) விதர்பா பகுதிகளில் பி.டி பருத்தி நாட்டு ரக பருத்தியை விட மிகக் குறைவான சாகுபடியையே தந்திருக்கிறது
  5) மொத்தமாக எல்லாமும் சேர்ந்து விதர்பா, ஆந்திர விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளி விட்டுள்ளது. நிலமும் செத்துப் போய் விட்டதால் இப்போது அதில் விவசாயமும் பார்க்க முடியாமல் அக் குடும்பங்கள் தவித்துக் கிடக்கிறார்கள்
  h) பி.டி ரக வயல்களில் சாதாரணமாக பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை விட மிக அதிக வீரியம் கொண்ட புதிய வகை பூச்சிகள் உருவாகி
  உள்ளது ( ம்யூட்டேஷன்) இப்பூச்சிகள், பி.டி வயல்களைக் கடந்து அக்கம்பக்கம் இருக்கும் நாட்டுப் பயிர்களையும் தாக்கியிருக்கிறது ( இதையும்
  மீறித்தான் நாட்டு ரகங்கள் பி.டி ரகங்களைக் காட்டிலும் அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது)

  அண்ணே அடுத்த முறை தைரியமாக பெயரோட வரவும்

  ReplyDelete
 13. @அந்நியன் 2

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  உங்கள் வருகைக்கு நன்றி சகோ
  நல்ல வேளை நினைவுப் படுத்தினீர்கள்

  அந்த பெயரில்லாதவர்க்கு இந்த பதில் போதுமா?

  ReplyDelete
 14. ஹைதர், நல்ல பகிர்வு. நாம் விரும்பினாலும் தடுக்க முடியாத அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை.

  ஆஷிக் பாய், உங்க கத்தரிக்கய்த் தோட்டத்தைப் பாதியும் எழுதுங்களேன். எங்கே விதை வாங்குனீங்க, எப்படி விதச்சீங்க, என்னென்ன (இயற்கை) உரம், மருந்து, எப்படி வளர்கின்றனன்னு விவரமா ஒரு பதிவு போட்டா சிலருக்கு ஆர்வம் வரலாம். பயன்பெறலாம்.

  நம் வீட்டுப் பெண்கள் சீரியல்களில் நேரத்தைத் தொலைக்காமல், இப்படியான பயனான வழிகளில் நேரத்தைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புறத்தில் இடம் இல்லாவிட்டால் என்ன, செடித்தொட்டிகளில் வாசல் புறத்தில் அல்லது முற்றத்தில் வைத்து அரிசி கழுவிய நீர் மட்டுமே ஊற்றி வளர்க்கலாம். சகோதரர்கள் தத்தம் வீட்டம்மாக்களை ஊக்கப்படுத்தலாம்.

  ReplyDelete
 15. @ஹுஸைனம்மா

  //நம் வீட்டுப் பெண்கள் சீரியல்களில் நேரத்தைத் தொலைக்காமல், இப்படியான பயனான வழிகளில் நேரத்தைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புறத்தில் இடம் இல்லாவிட்டால் என்ன, செடித்தொட்டிகளில் வாசல் புறத்தில் அல்லது முற்றத்தில் வைத்து அரிசி கழுவிய நீர் மட்டுமே ஊற்றி வளர்க்கலாம். சகோதரர்கள் தத்தம் வீட்டம்மாக்களை ஊக்கப்படுத்தலாம்.//

  அருமையான யோசனை நன்றி சகோ.
  எங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே கொல்லையில் அகத்தி கீரை பசல்லி கீரை தண்டங்கீரை அனைத்தையும் வைத்து இருக்கிறார்கள் இப்போது கத்தரிக்காயையும் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விரைவில் இது சம்பந்தமாக அவுங்க பிளாக் ஆரம்பித்து சொல்லிக் கொடுப்பார்கள்.

  ReplyDelete
 16. மாஷா அல்லாஹ் அருமையான இடுகை சகோ. நிறைய விஷயங்களை பின்னூட்டமாக நீங்கள் கொடுத்துள்ளதால் பின்னூட்டம் படிக்காமல் தவிர்க்கும் மக்கள் அந்த ஆதாரங்களை கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்புண்டு. எனவே அவற்றையும் பதிவின் இறுதியில் சேர்த்தவும்.

  முஹம்மது ஆஷிக் சகோ சொன்னது போலத்தான் நானும் என் அம்மாவிடல் சொல்லிக் கொண்டுள்ளேன். வீட்டிலேயே சில காய், கீரைகளை இட்டு, அதையே சாப்பிடும்படி. இன்னும் விவரமாக பதிவிட்டால் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அனுப்பலாம். முடிந்தவரை நம் கையே நமக்குதவி என்று வாழ்வதுதான் இந்தியாவில் சர்வைவ் செய்ய வைக்கும் போலவே??

  சகோ. ஹைதர் அலிக்கு, மிக மிக அவசியமான, கனமான இடுகை. இதை எப்பொழுதும் முகப்பில் காணுமாறு வைப்பது நலம். மற்றபடி புது டெம்பிளேட் கலக்கல். படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. :))

  ReplyDelete
 17. //எங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே கொல்லையில் அகத்தி கீரை பசல்லி கீரை தண்டங்கீரை அனைத்தையும் வைத்து இருக்கிறார்கள் இப்போது கத்தரிக்காயையும் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விரைவில் இது சம்பந்தமாக அவுங்க பிளாக் ஆரம்பித்து சொல்லிக் கொடுப்பார்கள். //

  இதுவல்லவோ வீரம். ஆஹா எப்ப ஆரம்பிக்கிறாங்க சொல்லுங்க. நான் மொத ஃபாலோவர். இந்தியாவிலிருந்து நான் ‘மிஸ்’ செய்யும் உணவுப்பொருள்களில் முதன்மையானது கீரை...!! ஆர்வமாக இருக்கிறேன். சீக்கிரமே அண்ணி, பதிவுலகில் நுழைய ஏற்பாடு செய்து கொடுங்கள் பாய். :))

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  ஆரஞ்சுபழத்துல தவக்காவா?? வுவ்வே :((

  //ஆஷிக் பாய், உங்க கத்தரிக்கய்த் தோட்டத்தைப் பாதியும் எழுதுங்களேன். எங்கே விதை வாங்குனீங்க, எப்படி விதச்சீங்க, என்னென்ன (இயற்கை) உரம், மருந்து, எப்படி வளர்கின்றனன்னு விவரமா ஒரு பதிவு போட்டா சிலருக்கு ஆர்வம் வரலாம். பயன்பெறலாம்.//// ஹுசைனம்மா அக்காவின்( ?! ) கமெண்டை நான் வழிமொழிகிறேன்...

  //அருமையான யோசனை நன்றி சகோ.
  எங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே கொல்லையில் அகத்தி கீரை பசல்லி கீரை தண்டங்கீரை அனைத்தையும் வைத்து இருக்கிறார்கள் இப்போது கத்தரிக்காயையும் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விரைவில் இது சம்பந்தமாக அவுங்க பிளாக் ஆரம்பித்து சொல்லிக் கொடுப்பார்கள்./// சீக்கிரமா சொல்லித்தர சொல்லுங்கண்ணே... இனி ஆரஞ்ச பார்த்தா தவளை நெனப்புதான் வரும் எனக்கு அவ்வ்வ்வ்

  மிகவும் பயனுள்ள ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிண்ணே...

  அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்த போதுமானவன்...!

  வஸ்ஸலாம்

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  ஆரஞ்சுபழத்துல தவக்காவா?? வுவ்வே :((

  //ஆஷிக் பாய், உங்க கத்தரிக்கய்த் தோட்டத்தைப் பாதியும் எழுதுங்களேன். எங்கே விதை வாங்குனீங்க, எப்படி விதச்சீங்க, என்னென்ன (இயற்கை) உரம், மருந்து, எப்படி வளர்கின்றனன்னு விவரமா ஒரு பதிவு போட்டா சிலருக்கு ஆர்வம் வரலாம். பயன்பெறலாம்.//// ஹுசைனம்மா அக்காவின்( ?! ) கமெண்டை நான் வழிமொழிகிறேன்...

  //அருமையான யோசனை நன்றி சகோ.
  எங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே கொல்லையில் அகத்தி கீரை பசல்லி கீரை தண்டங்கீரை அனைத்தையும் வைத்து இருக்கிறார்கள் இப்போது கத்தரிக்காயையும் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விரைவில் இது சம்பந்தமாக அவுங்க பிளாக் ஆரம்பித்து சொல்லிக் கொடுப்பார்கள்./// சீக்கிரமா சொல்லித்தர சொல்லுங்கண்ணே... இனி ஆரஞ்ச பார்த்தா தவளை நெனப்புதான் வரும் எனக்கு அவ்வ்வ்வ்

  மிகவும் பயனுள்ள ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிண்ணே...

  அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்த போதுமானவன்...!

  வஸ்ஸலாம்

  ReplyDelete