Tuesday, April 26, 2011

ஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகள், வீடியோ.

பயிற்சிக்குள் நுழையும் முன் ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன்
இப்பயிற்சியை குறைந்தது தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாவது செய்ய வேண்டும் அப்போதுதான் பயிற்சியும் கைகூடும் பலனும் கிடைக்கும்.

வீடியோ பயிற்சியாக சொல்லிக் கொடுப்பதற்கு காரணம் இது போன்ற பயிற்சிகளை ஒரு ஆசிரியர் இல்லாமல் பயிலுவது தவறு. அதனால் விளக்கம் மட்டும் எழுதினால் தவறாக செய்ய வாய்ப்பிருக்கிறது என்ற பயத்தினால் முடிந்த வரை சரியாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அக்கரையினால் தான் வீடியோ பதிவாக இடுகிறேன் மற்றபடி என்னை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் கடுகளவும் இல்லை.

சரி வாங்க பயிற்சிக்குள் போவோம்


இந்த வீடியோக்களை பாருங்கள்
முதல் நிலை வீடியோ

செய்முறை விளக்கம் முதல் நிலை
முதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.
நன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும்  எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் விரல்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி வேகமாக அசைக்கவும் பாட்டாம் பூச்சி சிறகுகளை அசைப்பது போல் உள்ள தொற்றம் வருகிற மாதிரி செய்யவும். ஆரம்பத்தில்25 என்னிக்கையில் செய்யலாம்


இரண்டாம் நிலை வீடியோ

இரண்டாவது பயிற்சி செய்முறை விளக்கம்
முதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.
நன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும்  எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் முழங்கால்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி கைகளால் அழுத்தி தரையை தொட முயற்சி செய்யுங்கள் அப்போது கால் இயல்பாக மேலெழும்பும் இப்படியே செய்யவும்.இப்படி ஆரம்பத்தில் 10 முறை செய்யலாம்.




மூன்றாம் நிலை பயிற்சி செய்முறை விளக்கம்
நன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும்  எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் முழங்கால்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி கைகளால் அழுத்தி தரையை தொடுங்கள்இந்த மூன்றாம் நிலை பயிற்சி செய்வதற்கு முன் முதல்நிலை இரண்டாம் 
நிலை பயிற்சியைக் கொண்டு உங்கள் உடலை தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை போதுமானது.
.

இறுதி நிலைப் பயிற்சி செய்முறை விளக்கம்

முதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.
நன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும். பின்பு, வலது கையால் வலது காலின் உள்ளங்காலையும்,இடது கையால் இடது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திக் கொண்டு, நன்றாக குனிந்து தலையைக் கொண்டு கால் கட்டை விரலைத் தொடவும். இப்படி ஆரம்பத்தில் ஐந்து முறையும் போக போக கூட்டிக் கொண்டே போகலாம்.

இப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்

இது ஒரு யோகா வகை பயிற்சியைச் சார்ந்தது இதை யோகா பயிற்சியாளர்கள் பக்த கோணாசனம் என்பார்கள்.

இப்பயிற்சியினால், சிறுநீரகத்தின் செயற்படு நன்றாக அமையும்.இதனால் சிறுநீரகத்தில் எந்தவித குறைபாடும் இருக்காது. மூத்திரக் கடுப்பு போன்ற குறைபாடுகளிலிருந்தும் விடுபட இப்பயிற்சி பெரிதும் துணைபுரியும்.

மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும். பிரசவ காலத்தில் சுகப் பிரசவம் ஏற்படவும்,வயிற்றில் கட்டிகள் உண்டாகாமல் இருக்கவும், கர்ப்பப்பை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கவும், பெண்கள் எல்லாருமே இந்த பயிர்சியைச் செய்து பழக வேண்டியது அவசியம்.
சரியாக மர்மஸ்தானத்துக்கு செல்லக்கூடிய நரம்புகளை குறிவைத்து இப்பயிற்சி செய்யப்படுவதால் மர்மஸ்தானம் சம்பந்த நோய்கள் வாரது
இப்பயிற்சி ஆண்மை கோளறுகளை நீக்கி ஆண்மையை அதிகரிக்க செய்யும்.ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டிய மிக முக்கியமான பயிற்சி இது.

இபபதிவில் எதாவது சந்தேகம் இருந்தால் கருத்து சொல்லுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.

11 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்!

    உபயோகமான பல தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  2. உங்களின் வீடியோ பதிவுகள் எல்லாமே அருமையா இருக்கு ஆனால் அதை நம்மால் செய்ய முடியுமா என்பதுதான் எனதின் பயம்.

    முயற்சி செய்து பார்க்கிறேன் சகோ.

    ReplyDelete
  3. @?????????????

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. @???????? 2

    முயற்சி செய்யுங்க சகோ

    ReplyDelete
  5. ஆகா நீங்கதான இது நண்பா?

    அருமையான விளக்கமும் பயீட்ச்சியும் இது மாதிரி தொடர்ந்து கொடுங்கள் படிக்கலாம்.

    ReplyDelete
  6. @மகாதேவன்-V.K

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  7. சஹோதரரே
    உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி சிறிது சிரமம் ஏற்ப்படும் என்று நினைக்கேறேன்

    அவர்ககளுக்கான பயிற்சி முறை ஏதும் உண்டா

    ஜசாகல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  8. சஹோதரரே
    உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி சிறிது சிரமம் ஏற்ப்படும் என்று நினைக்கேறேன்

    அவர்ககளுக்கான பயிற்சி முறை ஏதும் உண்டா

    ஜசாகல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  9. சஹோதரரே
    உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி சிறிது சிரமம் ஏற்ப்படும் என்று நினைக்கேறேன்

    அவர்ககளுக்கான பயிற்சி முறை ஏதும் உண்டா

    ஜசாகல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  10. பைல்ஸ் பற்றி விளக்கம் வேண்டும் ! பாய் ஒரு பதிவு போடுவீர்களா ?

    ReplyDelete
  11. பைல்ஸ் பற்றி விளக்கம் வேண்டும் ! பாய்
    ஒரு பதிவு போடுவீர்களா ?

    ReplyDelete