Sunday, February 5, 2012

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இவர்களை தெரிந்துக் கொள்வோம்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) ஒர் அறிமுகம்

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் ஹிஜிரி ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் பிறந்தவர்.(பிறப்பு ஹி.661(கி.பி.1262) அன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தில் படிந்திருந்த எல்லா மாசுகளையும் அகற்றி,அதன் வாழ்க்கை முறையில் நுழைந்திருந்த தீமைகளை நீக்கி அதனைத் தூய உருவில் உலகுக்கு எடுத்துக் காட்டினார்.

அவர் தம் விமரிசனங்களில் சிறியவரோ,பெரியவரோ-யார் மீதும் தயவுதாட்சண்யம் காட்டவில்லை மக்களின் மரியாதைக்கும் பக்திக்கும் உரியவர்கள்கூட இமாம் அவர்களின் கண்டனத்திலிருந்து தப்ப முடியவில்லை.பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமய ஆங்கீகாரம் பெறப்பட்டு ஆலிம்களும் பொருட்படுத்தாத நிலையில் சமூகத்தில் நிலவிய தவறான பழக்கவழக்கங்களை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மிகக் கடுமையாக சாடினார்.

அவர் இவ்வாறு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்து ஒளிவு மறைவின்றித் தம் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தமையால் அவருக்கு எதிராக ஓர் உலகமே திரண்டெழுந்தது அதன் காரணமாக இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இன்றும்கூட பெருமளவு ஆலிம்களால் அன்பாகவும் இதமாகவும் நினைவுகூறப்படுவதில்லை. அதலால் நிறைய மார்க்க சகோதரர்களுக்கு இமாவர்களின் அறிமுகம் அற்றுப் போனது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்களால் விமர்சிக்கப்பட்டு மனம்நொந்த அக்கால அறிஞர்கள் பலர் அவரை விசாரணைக்கு உடபடச் செய்து பன்முறை சிறைக்கு அனுப்பினர். இமாவர்கள் கல்வித்துறையில் உயர்ந்த நிலையை அடைந்திருந்ததோடு,உண்மையை எடுத்துரைப்பதிலிருந்து உலகில் எந்த சக்தியும் அவரைத் தடுத்து நிறுத்த இயலாத அளவுக்கு மன உறுதி படைத்தவராகவும் மிளிர்ந்தார் இதனால் வெஞ்சிறை சித்ரவதை அனுபவித்து சிறையிலேயே மரணிக்கவும் நேர்ந்தது.(இறப்பு ஹி.728 (கி.பி.1327)

இமாவர்களின் காலகட்டத்தில் இஜ்திஹாத்- (இஸ்லாமிய ஆராய்ச்சி) என்பது ஒரு பாவச் செயலாகக் கருதப்பட்டதோடு,பொருளற்ற அன்றைய (பித்அத்) புதிய கொள்கைகள் ஷரீஅத்தின் ஒரு பகுதியாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டன.அல்லாஹ்வின் வேதத்தின் பாலும் அவனது தூதரின் வழிமுறையின் பாலும் எவரும் இஸ்லாமிய மக்களின் கவனத்தை ஈர்க்கத் துணியவில்லை.அவதூறுக்கு அஞ்சி யாவரும் வாளாவிருந்தனர்.

அறியாமையிலும் ஒழுக்கக் கேட்டிலும் ஆழ்ந்திருந்த பொதுமக்களும் உலகாசையும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட ஆலிம்களும்,கொடிய காட்டுமிராண்டி ஆட்சியாளர்களும் இணைந்து ஏற்படுத்தியிருந்த தீய சூழலுக்கு எதிராக சீர்திருத்தம் வேண்டி எவரும் குரல் எழுப்புவது எளிதான செயலாக இருக்கவில்லை இருள்மிக்க அந்த யுகத்தில் குர்ஆன்,ஹதீஸ் ஒளியை ஏந்தி சீர்திருத்தக் குரல் எழுப்பிய ஒரே செம்மல் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மட்டுமே (அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக).

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் ஆளுமை, மற்றும் சிறப்புகள்.


இமாவர்கள் குர்ஆனை ஆழ்ந்து நோக்கும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். ஹதீஸ் கலையில் அவர் ஓர் இமாமின் தகுதிநிலையை அடைந்திருந்தார். இமாம் இப்னு தைமிய்யா அவர்களுக்கு தெரியாத,அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத எந்த ஹதீஸும் ஹதீஸே அல்ல எனும் அளவுக்கு அவரது ஹதீஸ் பற்றிய அறிவு ஆழ்ந்து விரிந்திருந்தது. இஸ்லாமியச் சட்டத்துறையில் அவர் அதிகாரபூர்வமான வல்லுநர் என்று உரிய முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார்.

அக்காலகட்டத்தில் பகுத்தறிவுவாத கலை சார்ந்த தர்க்கவியல்,தத்துவவியல், இறைமையியல் ஆகிய துறைகளில் நியுணர்களாகத் திகழ்ந்தவர்களை இமாவர்கள் அவர்கள் விஞ்சியவராகவும் விவாதத்தில் எளிதாகத் தோல்வியுறச் செய்யும் திறமை வாய்ந்தவராகவும் விளங்கினார். மேலும் யூத கிறிஸ்தவ வேத நூல்கள் பற்றியும் அவர்களின் சமயப் பிரிவுகள் பற்றியும் ஆழ்ந்த அறிவு இருந்தது.அதன் காரணமாக,“ விவிலிய நூலில் (Bible) வருகின்றவர்களைப் பற்றி ஆராய விரும்பும் எவரும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் ஆய்வுகளை ஒதுக்கிவிட்டுத் தமது ஆராய்ச்சிகளை நடத்த முடியாது” என்று கோல்ட்ஸிஹர் எனும் அறிஞர் கூறியுள்ளார்.


இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களது மறுமலர்ச்சிப் பணியினை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.


1.அன்று செல்வாக்கில் இருந்த கிரேக்க தர்க்கவியலையும் தத்துவவியலையும் அதன் பொய்மையையும் பலஹீனங்களையும் தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டினார்.இஸ்லாமிய உம்மத்தில் கிரேக்க தத்துவத்திற்கு இருந்த முக்கியதுவத்தை உடைத்து எறிந்தார்.

2.இஸ்லாத்தின் கொள்கையை விளக்குவதற்குப் பொதுவான அறிவு வழியையே கடைப்பிடித்தார். அது இயல்பானதாகவும் அதிக பயனுள்ளதாகவும் குர்ஆன்,சுன்னாவின் நோக்கத்துக்கு ஏற்றதாகவும் இருந்தது. எனவே அவரது அணுகுமுறை இணையற்றதாக விளங்கிற்று. சமய அறிவு படைத்தவர்கள், இஸ்லாமியக் கட்டளைகளை எடுத்துக் கூற முடிந்ததே தவிர அவற்றுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க முடியவில்லை.

3. அவர் விடாப்பிடியாக பழைமைகளைப் பின்பற்றும் கொள்கைக்கு (தக்லீத்) வலிமையான எதிர்ப்புக் குரல் எழுப்பியது மட்டுமின்றி முன்னைய இமாம்களின் வழியில் இஜ்திஹாதையும் மேற்கொண்டார்.அவர் குர்ஆனிலிருந்தும் நபிவழியிலிருந்தும் நபித் தோழர்களின் வாழ்க்கையிலிருந்தும் நேரடியாக அகத்தூண்டுதலைப் பெற்றதோடு, பல்வேறு மத்ஹபுகளையும் திறனாய்வு செய்து சட்டவிதிகளை திருத்தினார்.
இவ்வறாக அவர் இஜ்திஹாதின்(இஸ்லாமிய ஆராய்ச்சி)  வாயிலைத் திறந்து விட்டதுமன்றி, அத்துறையில் ஒருவர் தன் ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்தலாம் என்பதற்கும் வழிகாட்டினார்.

4.இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் இம்மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்டதோடு அன்று இஸ்லாமிய உலகை ஆக்கிரமித்திருந்த தாத்தாரிய கும்பலின் நாசவேலைக்கும் இழிசெயல்களுக்கும் எதிராக வாளையும் ஏந்தினார். தாத்தாரியரின் தவிர்க்க முடியாத தாக்குதலிலிருந்து அதுவரை தப்பியிருந்த எகிப்து,சிரியா ஆகிய நாடுகளின் மக்களை பார்த்து தாத்தாரியரின் படையெடுப்பை தைரியமாகவும் வீரத்தோடும் எதிர்த்து நிற்க வேண்டுமென வேண்டினார்.

தாத்தாரியர் என்ற பெயரைக் கேட்டாலே பொதுமக்கள் அச்சத்தால் நடுநடுங்கி,இறப்பை எதிர்நோக்குவது போல அவர்களை எதிர்நோக்க அஞ்சுவர் என்று வரலாறு கூறுகிறது. ஆனால்,இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மக்களிடையே ஜிஹாத் உணர்ச்சியைத் தூண்டி அவர்களுக்கு வீரத்தையும் நம்பிக்கையும் ஊட்டினார்.

பின்குறிப்பு:
தாத்தாரிய மங்கோலிய படையெடுப்பை பற்றியும் அதனால் அன்றைய இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட அழிவை பற்றியும் ஓர் பதிவு வலையுகத்தில் (இன்ஷாஅல்லாஹ்) விரைவில்.

தமிழ்மண ஓட்டு போட  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138843

10 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..வபர..
  இப்படியான தியாகங்கள் புரிந்து சத்தியத்தை விளக்குவதில் பங்கெடுத்த இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)அவர்களை இது நாள் வரை அறியாமல் இருந்தது கவலையளிக்கிறது.
  அவரின் வரலாறை அழகான முறையில் அறிவித்து தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹு கைர்

  ReplyDelete
 2. அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ....
  இதுவரை அறியாத செய்திகளை தந்ததற்கு நன்றி..

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  இவர் யாரென்றே இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. ஜசாக்கல்லாஹ் சகோதரர்.

  சீர்திருத்தவாதிகள் காலந்தோறும் தோன்றி இருந்திருக்கின்றார்கள். ம்ம்ம்

  வஸ்ஸலாம்

  ReplyDelete
 4. புதிய தகவலுக்கு நன்றி சகோதரரே!

  ReplyDelete
 5. அஸ்ஸலாம் அலைக்கும் சகோ இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் அந்த கால தந்தை பெரியார் போன்றவர்களாவார்கள்......
  இவர் மறக்கமுடியாத சீர்திருத்தவாதி...
  தேவ்பந்தி ஆட்களுக்கு மிகவும் வேண்டியவர், பரிட்சயமானவர் ....
  பரோலி ஆட்களுக்கு வேண்டாதவர், அலர்ஜியானவர்....
  என் ஓட்டு இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களுக்கே.......

  ReplyDelete
 6. ஸலாம் சகோ.ஹைதர் அலி...
  மிகவும் அருமையான பதிவு. இவர் பற்றி முன்பு படித்தது. இயற்பெயர் அஹமத். சிரியாவில் பிறந்தவர். இஸ்லாமில் அப்போது புகுந்திருந்த களைகளை குர்ஆன் ஹதீஸ் ஒளி கொண்டு நீக்கியவர். மேலும், அனைவரும் பயந்து நடுங்கிய மங்கோலிய கொலைபாதக வெறியர்களான செங்கிஸ்கான் பேரனான மன்னரிடம் (இவர் மஹ்மூத் என்று பெயர் மாறி முஸ்லிம் ஆன பிறகு) அவருக்கு குர்ஆன் ஹதீஸ் போதனைகளை எல்லாம் எடுத்து விளக்கி, வாதாடி மேலும் அநியாயமாக போரிடாது தடுத்த மிகவும் தைரியசாலி ஆவர். தமிழில் இவரைப்பற்றி நிறைய சொன்னமைக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.ஹைதர் அலி. இது போல இன்ஷாஅல்லாஹ் இன்னும் நிறைய எழுதுங்கள் சகோ.

  ReplyDelete
 7. ஸலாம் சகோ.ஹைதர் அலி...
  மிகவும் அருமையான பதிவு. இவர் பற்றி முன்பு படித்தது. இயற்பெயர் அஹமத். சிரியாவில் பிறந்தவர். இஸ்லாமில் அப்போது புகுந்திருந்த களைகளை குர்ஆன் ஹதீஸ் ஒளி கொண்டு நீக்கியவர். மேலும், அனைவரும் பயந்து நடுங்கிய மங்கோலிய கொலைபாதக வெறியர்களான செங்கிஸ்கான் பேரனான மன்னரிடம் (இவர் மஹ்மூத் என்று பெயர் மாறி முஸ்லிம் ஆன பிறகு) அவருக்கு குர்ஆன் ஹதீஸ் போதனைகளை எல்லாம் எடுத்து விளக்கி, வாதாடி மேலும் அநியாயமாக போரிடாது தடுத்த மிகவும் தைரியசாலி ஆவர். தமிழில் இவரைப்பற்றி நிறைய சொன்னமைக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.ஹைதர் அலி. இது போல இன்ஷாஅல்லாஹ் இன்னும் நிறைய எழுதுங்கள் சகோ.

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும்
  நல்ல தகவல் அதேநேரம் சகோ ஆஷிக் அஹ்மத் போன்றவர்கள் இமாமவர்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்களைப் பற்றி தெரியாமல் இருந்துள்ளமைதான் வேதனையான விஷயமாகும் இமாமவர்களின் முழுமையான வரலாறு tamilislam.com என்ற தளத்தில் வரலாறு பகுதியில் பல வருடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டுளெளது பார்த்து பயனடையவும்
  குறிப்பு தமிழ்இஸ்லாம் முழுவதுமே சாருகேசி பான்டில் உள்ளதளமாகும் எனவே சாருகேசி பான்டை இன்ஷ்டால் செய்து கொண்டு பார்க்கவும் அங்கே பயனுள்ள தகவள்கள்

  ReplyDelete
 9. Aslamu alaikum,It is good .I did not know about Imam Ibnu thimiya(rah).but now I know Little bit, thank your for your work, All greeting belongs to Allah.

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் ’வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்’ என்ற நூல் இதோ இந்த லிங்கில் http://islamkural.com/home/?cat=2426

  இந்த நூலை PDF கோப்பாக கணினியில் இறக்கி வைத்து படிக்க இங்கே சுட்டவும் http://islamkural.com/downloads/Ibnu_thaimiya.pdf

  ReplyDelete