Saturday, April 9, 2011

யார் இந்த புத்தர்?,புத்த மதம் ஓர் ஆய்வு. பா-2    சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்த எட்டுக் கட்டளைகளின் பொருள் என்ன? 
என்பதை பார்ப்போம்.

1.நல்ல நோக்கம் (சம்மாதிட்டி)-நான்கு அடிப்படை மெய்ம்மைகளையும் நன்கு உணர்ந்திருத்தல்.
(நான்கு மெய்ம்மைகள் என்றால் 1.துன்பம் 2.துன்பத்திற்கான காரணம்,3.துன்பத்தை நீக்கும் தீர்வு 4.துன்பத்தை நீக்கும் தீர்வுக்கான வழிமுறை )

2.நல்ல உறுதி (சம்மாசங்கப்போ)-ஆசைகளைத் துறப்பதற்கான நெஞ்சுரம்,மற்றவர்களுக்கு தீது பயக்காமல் உரியினங்களுக்கு துன்பமிழைக்காமல் விலகி இருக்கும் தன்மை.

3.நல்ல வாக்கு (சம்மா வாசா)-பொய்,புறம்,கோள்,வசவு மொழியினின்றும் விலகி இருத்தல்.

4.நல்ல செயல்(சம்மா கம்மந்தோ)-தீய நடத்தை,உயிர்க் கொலை,மோசடியிலிருந்து விலகி இருத்தல்.

5.நல்ல ஜீவனம்(சம்மா ஜீவோ)-முறையான வழிகளில் வருமானம் ஈட்டல்

6.நல்ல முயற்சி(சம்மா வாயா மோ)-தர்ம கட்டளையின்படி செயல்படுதல்.

7.நல்ல நினைவு(சம்மா ஸதி)-கடந்தகால செயல்களை நினைவிலிருத்தல்

8.நல்ல தியானம்(சம்மா சமாதி)-சுகம்,சந்தோஷத்தை விட்டு விட்டு இல்லாமை எனும் நிர்வாண நிலையை முன்னோக்கியிருத்தால்.

அஷ்டாங்க மார்க்கத்தை செயற்படுத்த பத்து கட்டளைகளை புத்தர் அறிவித்துள்ளார்.ஐந்து வலியுறுத்தப்பட்டுள்ளன.மற்ற ஐந்தும் கட்டாயமாக்கப்படவில்லை.

1.உயிர்க்கொலை புரியாமை
2.களவு செய்யாமை
3.காமம் கொள்ளமை
4.பொய் சொல்லாமை
5.மது அருந்தாமை
6.தகாத நேரத்தில் உணவு அருந்தலைத் தவிர்த்தல்
7.ஒழுக்கமற்ற செயல்கள் வேடிக்கை விளையாட்டுகளைத் தவிர்த்தல்.
8.நறுமணம்,மலர்கள்,ஆபரண அலங்கரிப்பைத் தவிர்த்தால்.
9.பஞ்சணைகளை,ஆடம்பர நடைமுறைகளைத் தவிர்த்தல்.
10.பொன்னையும் வெள்ளியையும் வைக்காதிருத்தல்.

இந்தஎட்டும்’ ‘பத்தும்தாம் பெளத்த மத தத்துவத்தையே விளக்கின்றன. வருமானம், சமுதாயம் தொடர்பாக தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு பெளத்த மதம் காட்டும் வழிகாட்டுதல்கள் யாவும்சுய மறுப்பையும் உலகு துறப்பையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. சுயத்தை மறுக்காமல் அதனுடைய இலக்கான நிர்வாணத்தை அடைய இயலாது.

ஆகையால் அதற்காக பல்வேறு கடினமான பயிற்சிகளை பெளத்தம் அறிமுகப்படுத்தியது. அழகுணர்வு மனதை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காக தாடி,மீசை,தலை முடிகளைப் பிடுங்கிப் பிடுங்கியே அகற்றுவது; நின்று கொண்டே இருப்பது; முள்படுக்கை,ஆணிப் படுக்கைளையே பயன்படுத்துவது; உடம்பில் மண்ணையோ சேறையோ பூசிக் கொள்வது; இன்னும் இது போன்றதொல்லைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் வயிலாக ஆன்மாவை நிர்மூலமாக்குவது பற்றை ஒன்றும் இல்லாமல் செய்வது(பெளத்தம் போதிக்கும் இவை போன்ற பயிற்சிகளை Dialogues of Budha நூலில் காணலாம்)

இது எதோ முற்றும் துறந்த புத்தபிக்குகளுக்கு உள்ள பயிற்சி என்று நினைத்து விடாதீர்கள்.

சாதாரண வாழ்க்கைக்கும் இதே போன்ற வழிமுறை களையே பெளத்தம் கடைப்பிடிக்கச் சொல்கின்றது. பக்கம் பக்கமாக அவை விரிவடைகின்றன.
சாராம்சத்தை மட்டும் இங்கு காண்போம்.
நான்கு விஷயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும்.

1.ஆண்-பெண் கலவி கூடாது.
2.புல்லைக் கூட திருடக் கூடாது
3.உயிருள்ள சின்னசிறு உயிர்க்கும் தீமை பயத்தலாகாது.
4.இயற்கைக்கு மற்றமாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகது.


துறவற வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு புத்தாடைகளை அணியலாகாது. குப்பைகளில் வீசப்பட்ட பழந்துணிகளையும் பிணங்களைப் போர்த்திய ஆடைகளையும் பொறுக்கி அவற்றை விரிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
(ஒர் இளவரசி புதைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த புத்தர் புதை குழியைத் தோண்டி உடலைச் சுற்றியிருந்த துணியை நீக்கி அருகிலிருந்த ஒரு வாய்க்காலில் கழுவித் தோய்த்து ஆடையாக்கிக் கொண்டார்)
(காண்க:நூல்:Sant Hilaire,Budha and His Relidion)

இத்தகைய கந்தலாடைகளும் மூன்றுக்கு மேல் இருக்கக் கூடாது. வருமானம் ஈட்ட எந்த முயற்சியும் செய்யக் கூடாது. பிக்ஷைப் பாத்திரமேந்தி (திருவோடு) வீடு வீடாகச் சென்று பிக்ஷை எடுக்க வேண்டும். பெளத்தைப் பொறுத்தவரை இதுவே தூய உணவாகும்.
(பிக்ஷை எடுப்பதினால்தான்பிக்ஷு’(பிக்கு) என்றழைக்கப்படுகிறார்கள்.புத்தரும் பிக்ஷை எடுத்தே வாழ்நாளைக் கழித்தார்தம்மை மஹா பிக்ஷு என அழைத்துக் கொண்டார்.)

தங்குவதற்காக வீடு எதையும் கட்டிக் கொள்ளக் கூடாது. வனாந்தரங்களில் மர நிழல்களிலேயே  உறைய வேண்டும். நோயுற்றால் நிவாரணமடைய மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறுநீர் கழிவதே போதுமான நிவாரணம் ஆகும்உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளக் கூடாது. தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குளித்துக் கொள்ளலாம்.

பணத்தை கைவசம் வைத்துக் கொள்ளவே கூடாது. வியாபாரம். வணிகம், கொடுக்கல்-வாங்கல்,தொழில் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பொன்னையோ வெள்ளியையோ பயன்படுத்தக் கூடாது.
(இங்கு (சவூதியில்) புத்த மதத்தை பற்றுடன் பின்பற்றக்கூடிய இலங்கையை சேர்ந்த சிங்கள நண்பர்களை சந்தித்து ஆய்வுக்காக கதைத்து கொண்டிருக்கும் போது மேலே கூறப்பட்ட சட்டதிட்டங்களை பின்பற்ற முடியுமா? என்று கேள்வியை வைத்தேன் அதற்கு அவர் சொன்ன ஒரே 
பதில் இன்றைக்கு புத்தர் சொன்னதை அப்படியே பின்பற்றி வாழ நினைத்தால் உயிர் வாழ முடியாது என்றார்.)

பெளத்த மதத்தை பொருத்த வரை அடிப்படை ஆதார விஷயங்களைப் பொறுத்தவரை பெளத்தம் அடிமுதல் நுனிவரை ஒரு தவறான கோட்பாடகவே காட்சியளிக்கின்றது.தவறான ஒரு கோணத்திலிருந்து அது மனித வாழ்வை அணுகியுள்ளது.தவறான இலக்கைக் குறிக்கோளகக் கொண்டுள்ளது.தவறான ஒரு பதையை,அதை அடையும் வழியாகச் சுட்டிக் காண்பிக்கிறது.

உலக நிகழ்வுகளையும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டு புத்தர் திகைத்துக் குழம்பிப் போனார். அதற்கான உண்மையான காரணம் என்னவென்று அவர் தேடவில்லை.அழமாக உள்ளிறங்கி அலசிப் பார்க்கவில்லை.உயர் குறிக்கோளை நோக்கி நெஞ்சுரத்தோடு பயணிக்கவில்லை.மாறாக மேலோட்டமாக மனிதப் பிரச்சினைகளை அணுகிப் பார்த்து வாழ்க்கையே வீண் என்னும் எளிய முடிவுக்கு விரைவில் வந்து விட்டார்.

மனிதனுடைய அறிவு,உணர்வு,சிந்தனை,பற்று,விருப்பம்,ஆசை,
உடற்திறன்கள் என்று அவனிடமுள்ள அனைத்துமே அவனைத் துன்பத்தில் தள்ளுகின்றனவேன்றி வேறுஎச்செயலுக்கும் பயன்படுவதில்லை இவ்வுலகின் களஞ்சியங்கள்.செல்வம்,பண்பாடு,நாகரிகம்,அரசியல்,
அரசாங்கம்,தொழில்,வணிகம் என அனைத்தும் பயனற்றவையே! ஆகையால் மனிதன் தன்னையன்றி இவ்வுலகிலுள்ள வேறு எதனோடும் எத்தொடர்பும் கொள்ளக் கூடாது என்கிறார்.

உலகத் துன்பங்களைக் கண்டு பீதியடைந்து உலகத்தையே துறந்து விட்டவன் சமூகத்தோடும் கூட்டமைப்போடும் உள்ள அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டு தன்னுடைய ‘வெற்றி’யை மட்டும் இலக்காக்கிக் கொண்டவன், அந்த’வெற்றி’அல்லது ’நிர்வாண’ நிலையை அடைவதற்காக-உலகத்துக்குள் அல்ல-உலகத்துக்கு வெளியே வெகுதூரம் அழைத்துப் போகின்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் தன்னுடைய சொந்தக்காரர்கள்,தான் சார்ந்திருக்கின்ற சமூகம்,
தன்னுடைய நாடு,தன் சக மனிதர்களுடைய நலன்களுக்காக வீரத்தோடு பாடுபடுவான் என்று எதிர்பார்க்க முடியுமா? 

சமூகத்தைச் சீர்திருத்துவதற்காகவும் முன்னேற்றுவதற்காகவும் தன்னுடைய உடற்திறமைகளையும் அறித்திறனையும் செலுத்துவான் என்றோ,வைராக்கியம் செறிந்த திடநெஞ்சோடு தன்னுடைய பொருளையும் ஆன்மாவையும் அதில் ஈடுபடுத்துவான் என்றோ,அநீதி, அராஜகம்,அக்கிரமம்,அட்டுழியம்,வரம்புமீறல்,வழிகேடு போன்ற தீமைகளுக்கெதிராகப் புறப்பட்டு போர் தொடுத்து உலகில் நீதியையும் நேர்மையையும் அமைதியையும் சமாதனத்தையும் சத்தியத்தையும் வாய்மையையும் நிலை கொள்ளச் செய்வான் என்றோ இயற்கை நியதிகளின்படி எல்லாச் செயல்களிலும் மனிதன் எதிர் கொண்டே தீர வேண்டிய இன்னல்கள்,இடையூறுகளை ஆண்மை யோடு எதிர்கொள்வான் என்றோ எதிர்பார்க்க முடியுமா?
தொடரும்(ஆய்வுகள் ஓய்வதில்லை)

13 comments:

 1. புத்தமதக்கோட்பாடுகளைப்படிக்கும்போது, இது நம் போன்ற சாதாரண மக்களால்கடைப்பிடிக்க முடியும் என்று தோன்றவே இல்லை. நல்லமனிதனாக
  இருந்தாலே போதும். அதுவே பெரியவிஷயம்.

  ReplyDelete
 2. புத்த மதத்தைப் பற்றி மேலோட்டமாக பார்த்திருக்கின்றேன் நீங்கள் கூறிய விசயத்தைப் பார்த்தால் பயந்து கிடக்கின்றது.

  அல்லாஹ்தான் அம்மக்கள்களை காப்பாற்ற வேண்டும்.

  தொடரட்டும்...

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
  இது ஒரு முற்றிலும் புதிய மிக நல்ல ஆய்வுக்கட்டுரைத்தொடர் சகோ.ஹைதர் அலி.

  வாழ்க்கையில் மனித சமுதாயம் கடைப்பிடித்தொழுக வேண்டிய... ஏதோ மிக உயர்ந்த தத்துவங்களை... புத்தர் சொன்னதாக பலரும் நம்பி வந்த நிலையில்... "அவை அத்தனையும் தவறான புரிதல்" என்றும்... "புத்தரின் உளறல்கள்தான்" என்றும்... உண்மையை ஆய்ந்து சுக்குநூறாய் போட்டு உடைத்திருக்கிறீர்கள்... என்று உங்கள் இரண்டு பதிவுகளில் விளங்குகிறது.

  இதனால்தான் இந்தியா வந்தால்... ராஜபக்சே கயா நகருக்கு போகாமல் திருப்பதிக்கு போகிறாரோ..?

  இந்திய சட்டத்தை இயற்றும் அளவுக்கு பொதுவாக தகுதிவாய்ந்தவராக பெரிய புத்திசாலியாக கருதப்பட்ட டாக்டர்.அம்பேத்கார், போயும் போயும் எப்படித்தான் இந்த மதத்தை தெரிந்தெடுத்தாரோ..?

  'மனித உயிர்களை எப்படி கொல்ல வேண்டும்' என்று பெளத்தர்களாகிய சிங்களர்களிடம்தான் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். தமிழர் உயிர் மட்டும் அவர்களுக்கு விதிவிலக்கோ..!

  இந்தியாவில் தோன்றி இந்தியர்களால் புறந்தள்ளப்பட்டவர் புத்தர் என்பதை நாம் மறக்கக்கூடாது.

  ம்ம்ம்... துவக்கப்பள்ளி பாடத்திட்டத்துக்கு பிறகும் பலரும் தொடாத... முற்றிலும் மறந்த பக்கம், புத்த மதம்...! இன்று கிழித்து தொங்கவிடப்பட்டு விட்டது... உங்களால்..!

  ReplyDelete
 4. நண்பர்களே.

  தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

  ReplyDelete
 5. @Lakshmi
  உங்கள் கருத்துக்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. @அந்நியன் 2

  வ அலைக்கும் வஸ்ஸலாம்

  நன்றி சகோ

  ReplyDelete
 7. @முஹம்மத் ஆஷிக்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //இது ஒரு முற்றிலும் புதிய மிக நல்ல ஆய்வுக்கட்டுரைத்தொடர்//

  உங்களின் அங்கீகாரத்திற்கு நன்றி சகோ

  ReplyDelete
 8. பெளத்தம் தவறென சொல்லி நீங்கள் இஸ்லாத்தை தானே வழிமொழிகிறீர்
  இதன் மூலம் ஒரு நுகத்தடியில் இருந்து இன்னொரு நுகத்தடிக்குத்தான் செல்வீர்கள்

  ReplyDelete
 9. @தியாகு

  //நுகத்தடி//

  அண்ணே நுகத்தடி அப்புடியின்ன

  என்னணே

  உங்கள் முதல் வருகைக்கு நன்றியுண்ணே

  ReplyDelete
 10. //உலக நிகழ்வுகளையும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டு புத்தர் திகைத்துக் குழம்பிப் போனார். அதற்கான உண்மையான காரணம் என்னவென்று அவர் தேடவில்லை.அழமாக உள்ளிறங்கி அலசிப் பார்க்கவில்லை.உயர் குறிக்கோளை நோக்கி நெஞ்சுரத்தோடு பயணிக்கவில்லை.மாறாக மேலோட்டமாக மனிதப் பிரச்சினைகளை அணுகிப் பார்த்து வாழ்க்கையே வீண் என்னும் எளிய முடிவுக்கு விரைவில் வந்து விட்டார்.//

  புத்தரையும், புத்த மதத்தைப் பற்றியும் வித்தியாசமான கோணம். முற்றிலும் புதிய கருத்து. இவ்வளவுதானா என்பது போலாகி விட்டது. பொன்னையும் வெள்ளியையும் வைத்துக் கொள்ளக்கூடாது சரி, அவற்றைக் கொண்டு கோவில்களுக்கு போட்டியாக செல்வ செழிப்பான ஆலயங்களை கட்ட அனுமதியுண்டோ?????

  ReplyDelete
 11. அல்ஹம்துலில்லா
  நல்ல பதிவு

  ReplyDelete
 12. அல்ஹம்துலில்லா
  நல்ல பதிவு

  ReplyDelete
 13. அல்ஹம்துலில்லா
  நல்ல பதிவு

  ReplyDelete