Friday, January 27, 2012

'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...


இந்த பூமிப் பந்தை பற்றிபடர்ந்திருந்த அறியாமை இருளை அடித்துவிரட்டி, ஒளிமிக்க வாழ்க்கையை நிலைநாட்ட வந்த அருள்மிகு வேதமே திருக்குர்ஆன்.

குர்ஆனின் அடித்தளம் ஓரிறைக் கொள்கையே ஆகும்.

இதர மதங்களும்,நெறிகளும்கூட தொடக்கத்தில் ஓரிறைக் கொள்கையை போதித்தாலும்,காலப் போக்கில் அதில் நெகிழ்வுகளும்,பிறழ்வுகளும் ஏற்பட்டு ஒன்று மூன்றாகி,மூன்று முப்பதாகி,முப்பது முப்பது கோடியாகி எண்ணற்றக் கடவுள்கள் உருவாகி விட்டனர்.

ஆனால் இஸ்லாம் ஒரிறைக் கொள்கையில் ஏகத்துவ நெறியில் இன்றுவரை நிலைத்துநின்று நீடு புகழ் கொண்டுள்ளது.  ‘ரப்’ என்கிற இந்த சொல் குர்ஆனில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல். இந்த சொல்லின் உண்மையான பொருளை ஒருவர் விளங்கிக் கொண்டால் இணைவைப்பின் பக்கம் அவர் தலைவைத்தும் படுக்கமாட்டார். இணைவைப்புச் சிந்தனை அவருடைய கனவிலும் தோன்றாது.

சிலை வணக்கமும் உருவ வழிபாடும் மட்டுமே ‘இணைவைப்பு'  என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ‘ரப்’ என்கிற சொல்லின் பொருளை சரியாகவும், முழுமையாகவும் விளங்கிக் கொண்டால் ஆன்மீகத்தில் மட்டுமல்ல,சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களிலும் எத்தனை எத்தனை இணைவைப்புகள் அரங்கேறி வருகின்றன என்பதை நாம் அடையாளம் காண முடியும்.


‘ரப்’ சொற்பொருள் ஆய்வு
ர,ப, ப என்பது இந்தச் சொல்லின் மூலம் ஆகும்.அதன் முதன்மையான அடிப்படையான கருத்து பரிபாலித்தல் என்பதாகும்.பின்னர் அதிலிருந்து கவனித்தல், கண்காணித்தல்,சீரமைத்தல்,நிறைவு செய்தல் போன்ற கருத்துக்களும் ஏற்பட்டன,அதே அடிப்படையில் முதன்மை,தலைமை,தனியுரிமை மற்றும் ஆளுமை போன்ற பொருள்களும் ஏற்பட்டு விட்டன.அகராதியில் அந்தச் சொல் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

1.பரிபாலித்தால்,வளர்ச்சியூட்டல்,விரிவுபடுத்தல் அதாவது ஒரு பொருளை படிப்படியாக முன்னேறச் செய்து நிறைவுக்குக் கொண்டு வருதல். உண்மையில் அதற்குரிய பரந்த பொருளில் இதுவும் ஒரு பொருளெனக் கொள்ளலாம்.

2.பராமரிப்ப்வன்,தேவைகளை வழங்குபவன்,வழிமுறைகளையும் வளர்ச்சியையும் தருபவன்.

3.பொறுப்பாளன்,கண்காணிப்பவன்,வளர்த்து ஆளக்குபவன்,சீர்திருத்தம் செய்பவன்.

4.மைய தகுதியுடையவன்,அவனைச் சூழ்ந்து பல்வேறு மக்கள் குழுமி இருப்பார்கள்.

5.கீழ்படிய வைப்பவன், தலைவன்,அதிகாரம் கொண்டவன்,கட்டளை பிறப்பிப்பவன், முதன்மையையும் ஆதிக்கத்தையும் படிய வைப்பவன்,மற்றுவதற்குரிய அதிகாரம் உடையவன்.

6.அதிபதி, எஜமானன் இரட்சகன்


குர்ஆனில் ‘ரப்’ என்ற சொல்லின் பயன்பாடு
  قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا 
34:26“நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்;
  اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ 
9:31“அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும்,துறவிகளையும் தங்களின் ‘ரப்’ - கடவுளாக்கிக் கொண்டார்கள்.
وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ
3:64 “மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவானாய் ஆக்கிக் கொள்ளக் கூடாது”
 سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.
فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ
21:22“எனவே அவர்களின் பொய்யான வர்ணனையில் இருந்து அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

குர்ஆனில் இபுறாஹீம் நபி (அலை) அவர்களின் காலத்து மக்களின் வரலாறு.

இறையமையுடன்முதலும் இரண்டாவதுமான பொருளில் வானுலக சந்திரன், சூரியன் நட்சத்திரங்களையும் பங்குதாராய் கணித்துக் கொண்டார்கள்.அதன் காரணமாக இறைவனுடன் அவற்றையும் வணக்கத்திற்குரியவைகளாக ஆக்கிக் கொண்டார்கள்.

முதலில் இப்றாஹீம் (அலை) அவர்களின் ஆரம்ப உணர்வுகளின் நிகழ்வை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் அவருடைய சத்தியதேடலின் நிலை இவ்வாறு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
  فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا ۖ قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ  فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ  فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَٰذَا رَبِّي هَٰذَا أَكْبَرُ ۖ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ  إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
6:76”இரவு அவரை மூடிக் கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்த போது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார்.”

6:77 “சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்” என்றார் அது மறைந்த போது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டா விட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகிவிடுவேன் என்றார்.”

6:78“பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.

6:79 “வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவானாக என் முகத்தைத் திருப்பிவிட்டேன்.நான் இணை
கற்பித்தவனல்லன்” (எனக் கூறினார்)

இபுறாஹீம் நபிக்கு முன்னால் வந்த நபிமார்கள் சரியான ஏகத்துவ கொள்கையை சொல்லி கொடுத்து விட்டு சென்றார்கள் ஆனால் காலப்போக்கில் திரிந்து இறையமையோடு சந்திரன் சூரியனை கூட்டு சேர்த்தனர் ஆகவே இபுறாஹீம் நபியவர்கள். நபித்துவத்திற்கு முன்னர் இந்த வினாவுக்கு விடை தேடுவதிலேயே அவர் முனைந்திருந்தார்கள்.

இபுறாஹீம் நபி (அலை) அவர்கள் இறைத்தூதராய் ஆனபோது மக்கள் சூரியன் சந்திரனை இரட்சகனாக,‘ரப்”ஆக நினைத்ததை மாற்றினார்கள் ஒரிறையின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள்.  
وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا ۚ فَأَيُّ
 الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
6:81.உங்களுக்குஅவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)
குர் ஆனின் அழைப்பு
‘ரப்’ என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் படைப்பினங்களின் பாரமரிப்பு, பதுகாப்பு,தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஆதரித்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாளி என்பதாகும். முந்தைய சமூக மக்களின் கண்ணோட்டத்தில் அதன் பொருள் வேறாக இருந்தது. மேன்மைக்குரிய ‘ரப்’பாக அல்லாஹ்வையே அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் இரண்டாம் தர சக்திகளாக சூரியன்,சந்திரன்,இறைநேசர்கள்,மற்றும் மதகுருமார்களையும் இணைத்துக் கொண்டார்கள்.


படைத்தவனோடு படைப்பினங்களை இறைவனுக்கு இணவைப்பது 
சரியாகாது இந்த அழைப்பை குர்ஆன் எந்த விதத்தில் அளிக்கிறது என்பதை அதன் வாயிலாகவே கேளுங்கள்:
قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ اللَّهُ ۚفَقُلْ أَفَلَا تَتَّقُونَ فَذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ
10:31“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.


10:32உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۗ أَلَا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ
39:5அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
 هُوَ الْحَيُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ ۗ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
40:65அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.


எனவே ‘ரப்’ எனும் சொல்லின் பொருளை விளங்கி விளையாட்டுக் கூட 
இணைவைப்பதிலிருந்து விலகி சரியான மார்க்கத்தை பின்பற்றுவோம்.

26 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ நன்கு ஆராய்ந்து எழுதியிருக்கின்றீர்கள்."ரப்" என்றால் இறைவன் என்ற பொருள் மட்டுமே என்று நினைத்திருந்தேன்.இறைவன் எத்தகைய தன்மையுடவன் என்பது அறிந்திருந்தும் "ரப்"என்ற வார்த்தைக்குறிய அர்த்தங்களை அறியாமலே இருந்திருக்கின்றேன்."ரப்" என்ற வார்த்தைக்குறிய அர்த்தங்களை அறிய வைத்தமைக்கு நன்றி சகோ.
    /////எனவே ‘ரப்’ எனும் சொல்லின் பொருளை விளங்கி விளையாட்டுக்
    கூட இணைவைப்பதிலிருந்து விலகி சரியான மார்க்கத்தை பின்பற்றுவோம்./////இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //இறைவன் எத்தகைய தன்மையுடவன் என்பது அறிந்திருந்தும் "ரப்"என்ற வார்த்தைக்குறிய அர்த்தங்களை அறியாமலே இருந்திருக்கின்றேன்.//

    நான்கு பதிவு போடும் அளவுக்கு விரிவான பொருள் கொண்டது நான் மிகவும் ஒரு சிறு பகுதியை மட்டும் சில அர்த்தங்களை மட்டும் சொல்லி இருக்கிறேன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  3. சலாம் சகோ ஹைதர் அலி,

    ரப் என்ற வார்த்தைக்கு உண்டான அதிகப்படியான அர்த்தங்களை தெரிந்து கொண்டேன். தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  4. சலாம்!சகோ ஹைதர் அலி!

    'ரப்' என்ற வார்த்தைக்கு அழகிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமளித்ததற்கு நன்றி!

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
    சகலரும் புரிந்து கொள்ளும் விதத்தில் ரப்- என்ற அரபி வார்த்தைக்கு மிக நல்லதோரு அவசியமான விளக்கம்.

    //எனவே ‘ரப்’ எனும் சொல்லின் பொருளை விளங்கி (...ரப்புக்கு மட்டுமே உள்ள ஆற்றலை படைக்கப்பட்ட ஒரு பொருளுக்கு காமடி கவிதையாகக்கூட நாம் தந்துவிடாமல்...) விளையாட்டுக்கூட இணைவைப்பதிலிருந்து விலகி சரியான மார்க்கத்தை பின்பற்றுவோம்.//---ஆமீன்.

    ReplyDelete
  6. சலாம் சகோ ...

    நல்ல விளக்கங்கள்...நான் அறியாத விளக்கங்களை அறிந்துகொண்டேன்..தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    மாஷா அல்லாஹ்! 'ரப்பு' என்ற சொல்லுக்கு தேவையான, போதுமான விளக்கம்.

    //‘ரப்’ எனும் சொல்லின் பொருளை விளங்கி விளையாட்டுக் கூட
    இணைவைப்பதிலிருந்து விலகி சரியான மார்க்கத்தை பின்பற்றுவோம்.//

    விளையாட்டான பேச்சுக்களில்தான் 'இணைவைப்பு' வராமல் இருக்க நாம் அதிகம் கவனமாக இருக்கவேண்டும் என்பது உரத்து சொல்லவேண்டிய ஒன்று. அதை முறையாக‌ சொன்ன உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அண்ணா... அருமையான ஆக்கம் மாசா அல்லாஹ்

    நானும் ரப் என்றால் இறைவன் என்ற அர்த்தில் மட்டுமே விளங்கி வந்தேன். இன்று தான் அதன் தன்மைகளை குறித்தும் விளக்கங்களுடன் தெரிந்துக்கொண்டேன். எல்லா புகழும் இறைவனுக்கு

    ஜஸக்கல்லாஹ் ஹைர்
    அற்புதமான ஆராய்ச்சி பகிர்வு

    ReplyDelete
  9. நல்ல தெளிவான விளக்கம் சகோ.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அல்ஹம்துலில்லாஹ்!

    ரப் எனும் வார்த்தையின் பொருளை வேத வரிகளில் வெளிக்கொணர்ந்து
    அவனின் மாட்சியமையை தெளிவாய் விளக்கியமைக்கு நன்றி!
    மிக்க நன்றி சகோ

    பகிர்ந்த பதிவுக்கு
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    classic பதிவு... மாஷா அல்லாஹ்.

    ரப் என்ற வார்த்தைக்கு மிகச்சரியான மாற்று மொழி வார்த்தைகள் இல்லை என்றே நினைக்கின்றேன். ரப் என்ற வார்த்தையின் அர்த்தங்களையே மொழிபெயர்க்கின்றார்கள் என்றே எண்ணுகின்றேன்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  12. @சிராஜ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    வருகைக்கும் ஆதாரவுக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  13. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    அஸ்ஸலமு அலைக்கும்
    //சகலரும் புரிந்து கொள்ளும் விதத்தில் ரப்- என்ற அரபி வார்த்தைக்கு மிக நல்லதோரு அவசியமான விளக்கம்.//

    அல்ஹம்துலில்லாஹ் இதை எழுத காரணமாக இருந்த சூழலுக்கும் இறைவனுக்கும் நன்றி

    ReplyDelete
  14. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    /சகலரும் புரிந்து கொள்ளும் விதத்தில் ரப்- என்ற அரபி வார்த்தைக்கு மிக நல்லதோரு அவசியமான விளக்கம்.//

    அல்ஹம்துலில்லாஹ்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. @NKS.ஹாஜா மைதீன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    உங்களின் தொடர்ச்சியான ஆதாரவுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  16. @asma

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //விளையாட்டான பேச்சுக்களில்தான் 'இணைவைப்பு' வராமல் இருக்க நாம் அதிகம் கவனமாக இருக்கவேண்டும் என்பது உரத்து சொல்லவேண்டிய ஒன்று. அதை முறையாக‌ சொன்ன உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!//

    சரியாகச் சொன்னீர்கள் விளையாட்டு போக்கில் சாதராணமாக. அவர் அல்லா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் என்பது போன்ற வார்த்தைகளை பேசக்கூடிய நிலையில் தான் தமிழக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்

    வருகைக்கும் துஆவுக்கும் நன்றி

    ReplyDelete
  17. @ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    //நானும் ரப் என்றால் இறைவன் என்ற அர்த்தில் மட்டுமே விளங்கி வந்தேன். இன்று தான் அதன் தன்மைகளை குறித்தும் விளக்கங்களுடன் தெரிந்துக்கொண்டேன். எல்லா புகழும் இறைவனுக்கு//

    அல்ஹம்துலில்லாஹ் வருகைக்கு நன்றியும்மா

    ReplyDelete
  18. @M.HIMAS NILAR

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  19. @G u l a m

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    இந்த பதிவு எழுதும் சூழலை ஏற்படுத்தி தந்த இறைவனுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் சகோ

    உங்கள் வருகைக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  20. @Aashiq Ahamed
    வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    //classic பதிவு... மாஷா அல்லாஹ்.//
    அல்ஹம்துலில்லாஹ்

    //ரப் என்ற வார்த்தைக்கு மிகச்சரியான மாற்று மொழி வார்த்தைகள் இல்லை என்றே நினைக்கின்றேன். ரப் என்ற வார்த்தையின் அர்த்தங்களையே மொழிபெயர்க்கின்றார்கள் என்றே எண்ணுகின்றேன்.//

    இருக்கலாம் இது சம்பந்தமாக மறுஆய்வு செய்கிறேன் இங்கு (சவூதியில்) அரபி இலக்கணம் சொல்லி தந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்களிடமும் கேட்கிறேன் இன்ஷா அல்லாஹ்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக'துஹு
    என்னைப் படைத்த என் இறைவனின் பெயரை பற்றி மேலும் தெளிவாக, தூய்மையாக விளங்கிக் கொள்ள உதவியதற்கு ஜஸாகல்லாஹு கைர்
    அல்லாஹ் உங்களிற்கும் எனக்கும் மென்மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக!

    ReplyDelete
  22. ALLAAHU AKBAR.MAY ALLAH BLESS YOU TO WRITE MORE ARTICLES,MASHA ALLAAH

    ReplyDelete
  23. @ashfa mowlana

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    //அல்லாஹ் உங்களிற்கும் எனக்கும் மென்மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக!//


    உங்கள் துஆ விற்கும் வருகைக்கும்

    ஜஸாக்கல்லாஹ் கைர்

    ReplyDelete
  24. @அர அல

    உங்கள் துஆவை கண்டு மிக்க மகிழ்ச்சி

    சகோ உங்கள் முதல் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  25. ரப், என்னும் சொல்லின் அற்தம் தமிழிலிலும் அரபியிலும் என்ன என்ன வார்த்தையில் பயன்படுத்தப் படுகிறது என்று ஐ.எஃப்.டி விளக்க உரயில் அறிந்தேன்.

    //ஆம் சகோ// ரப் என்ற வார்த்தைக்கு மிகச்சரியான மாற்று மொழி வார்த்தைகள் இல்லை என்றே நினைக்கின்றேன். ரப் என்ற வார்த்தையின் அர்த்தங்களையே மொழிபெயர்க்கின்றார்கள் என்றே எண்ணுகின்றேன்.// குர் ஆனை எந்த மொழியிலும் முழுமையான மொழியாக்கம் வரவில்லை என்று கருதுகிறேன் அதற்குச் சில காலம் பிடிக்கலாம் இப்போது இருக்கும் மொழிபெயப்புகளை எல்லாம் எவ்வாறு அனுக வேண்டும் என்றால் குர் ஆனுக்காண விளக்க உரைதான் என்று கருதவேண்டு ஏனெனில் தமிழில் வந்த பல மொழியாக்கங்கள் அவர்கள் மொழியாக்கம் செய்தவர்கள் சார்ந்த கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கின்றன என்பது என் கருத்து

    ReplyDelete
  26. salaam,
    Good one brother. Good explanation on RABB

    ReplyDelete