Tuesday, July 12, 2011

மது ஒரு பொதுத்தீமை

மிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
"உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,
பயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.
இளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு"

இம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.

மதுவால் புத்தி பேதலித்தவர்கள் எத்தனைப்பேர்.....?
மதுவால் தற்கொலை செய்தவர்கள் எத்தனைப்பேர்....?
மதுவால் பிறரைக் கொண்றவர்கள் எத்தனைப்பேர்....?

ஒய்வறியாமல் உழைத்து உருக்குலைந்து குடிபோதையில் தடுமாறும் கணவன்மார்களின் கால்களில் மிதிபட்டு, பசி மயக்கத்தில் தள்ளாடும் பிள்ளைகளுக்கு சோறிடும் பொறுப்பைச் சுமந்தபடி அன்றாடம் வாழ்க்கையுடன் போராடும் இலட்சக்கணக்கான தமிழக கிராம பெண்களின் அவலம் உங்களுக்கு தெரியுமா?

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி, குடியானவனை கொன்று விட்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இது அந்த ஏழைக் குடியானவன் இதுவரை அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப ஒய்வூதியமா என்பதை இந்த அரசு விளக்குமா?

தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்த நிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, இனி மொத்த 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண்மக்களின் வாய்களில் மதுவைத் திணித்துவிட்டு.அப்புறம் என்ன மயி.....க்கு மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எச்சரிக்கை செய்கிறது?

குடிபோதையில் வீட்டிற்கு வராமல் தன் மனைவி குழந்தைகள் வீட்டில் என்னவானார்கள் என்பதைப்பற்றி கூட கண்டுக்கொள்ளாத அவர்களின் பாதுகாப்பு குறித்துக்கூட கவலைப்படாத கணவன்மார்கள்,மதுவால் தன் மகளிடம் தகாத முறையில் நடக்கும் தந்தை, தன் மருமகளிடம் மப்பில் மதி கேட்டு நடக்கும் மாமனார், தன் தாய் மது அருந்த காசு தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்ய துணியும் மகன்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது


மது அருந்தும் தனிப்பட்ட மனிதனோடு அதன் பாதிப்பு நின்றுவிடுவதில்லை. ஆனால் அது அருந்தியவனின் மனைவி, பிள்ளைகள், குடும்பம், வசிக்கும் பகுதி என பாதிப்பின் வலை விரிந்துகொண்டே செல்வதுதான் போராபத்து. சமூகத்தின் பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் ஒருசேர குழித்தோண்டிப் புதைக்கும்.

எனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த மதுவை குறித்த சிறு வரலாற்றுப்பார்வை:

மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறை (Distillation) அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது. இதில் ஒயினை விடவும் கூடுதல் போதை தரும் ‘அல்-கூகுல்’ எனும் திரவத்தைக் கண்டு பிடித்தவர் ஜாபர் இப்னு கையாம் என்பவர். இவர் ஒரு வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுலே பிறகு அல்கஹால்
 என்று அழைக்கப்பட்டது.

ஜாபர் இப்னு கையாம் அதை மருந்தாகத்தான் பயன்படுத்தினார். அவரது நோக்கமும் அதுவே. பிறகு 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். இன்றைய நவீன மது வகைகள் தோன்றிய வரலாறு இதுவே.

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பே மதுவை முறையாக அறிமுகப்படுத்தியவர்கள் ஆரியர்கள்தான். கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளையும் கையில் கொண்டு வந்தார்கள். மது அருந்தாததையே அடையாளமாகக் கொண்டு அசுரர்கள் என்று தமிழரை அழைத்தார்கள். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டு. சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

ஆனால் இன்று தமிழர்கள், திராவிடர்கள் என்று சொல்லப்படுகின்றன தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? சில புள்ளி விபரங்களை பார்ப்போம்.

1.குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.

2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.

3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

4.தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

5.மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம்.

6.மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

7.கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.

நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.


டாஸ்மாக் குடிவெறியில் மனைவி, மகனை 

கொன்ற விவசாயி

போதையில் தடுமாறும் தந்தை
போதையில் பொது இடத்தில் போலீஸ்
சத்தியமா இது திருவிழா கூட்டம் இல்லீங்கே
மாணவர்கள் எதிர்கால இந்திய எங்கே
நிற்கிறது பார்த்தீர்களா?

போதை என்பதே விஷம் தான். அது எந்த வடிவத்தில் சமூகத்தில் நடமாடினாலும் சரி. இந்த பொதுத்தீமையை எதிர்த்துப் போர்த்தொடுப்போம். வைரஸ் காய்ச்சலை விட மிக வேகமாக பரவி வரும் இந்த போதைக் கலாச்சாரத்தை அழிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து நாம் நழுவினால், வருங்கால தலைமுறையினருக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.

26 comments:

 1. karuththum sameepaththiya pukaipadangkalum itukaiyai alakkaakkukinrna.. vaalththukkal

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.ஹைதர் அலி,
  அவசியமான அருமையான பதிவு.

  மனிதனின் அறிவுக்குத்திரையிடக்கூடிய மதுவை இஸ்லாம் தடை செய்துள்ளது.


  (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; ''அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப்பெரிது" (அல் குர்ஆன்-2:219).


  இறைநம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத்தவிர்த்துக்கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல் குர்ஆன்-5:90).


  நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத்தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக்கொள்ள மாட்டீர்களா? (அல் குர்ஆன்-5:91).


  "தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்" என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (ஸுனன் இப்னுமாஜா 3371)

  "அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் - குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது" என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (ஸுனன் இப்னுமாஜா 3392)

  இன்னோர் ஹதீஸ்:
  " 1. மதுபானம் தயாரிப்பவன் -
  2. யாருக்காக மதுபானம் தயாரிக்கப்பட்டதோ அவன்
  3. மதுபானங்களை குடிப்பவன் --
  4. மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்
  5. யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அவன்
  6. மதுபானங்களை பரிமாறுபவன்
  7. மதுபானங்களை விற்பவன்
  8. மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்
  9. மதுபானங்களை வாங்குபவன்
  10. மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்....
  -----ஆகிய இந்த பத்து சாரார் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது...", என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் (ஸுனன் இப்னுமாஜா 3380)

  மேலும்...

  இப்னு உமர்(ரலி) கூறினார். (என் தந்தை) உமர்(ரலி) சொற்பொழிவு மேடையின் மீது நின்று ‘திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை ஆகிய ஐந்து வகைப்பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் (மதுகுடிக்கத்தடை)"மதுவிலக்கு" வந்தது. ஆக, அறிவுக்குத்திரையிடுவதெல்லாம் மதுவேயாகும்’ என்று கூறினார்கள்.


  மதுவின் போதைக்கு அடிமையாகும் மனிதர்களும் சமுதாயமும் நன்மை நிறைந்த இயற்கைத்தன்மையை விட்டும் மாற்றமாக, தமக்கும் பிறருக்கும் கேடுதரும் கெட்ட சூழ்நிலையை நோக்கி செல்வதையே நாம் காண்கிறோம்.


  எனவேதான் போதைப் பொருட்கள் உபயோகிப்பதை இஸ்லாம் தடை செய்து சமுதாயத்தை காக்கிறது.


  இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களுக்கு ஏற்ற இயற்கையான மார்க்கமாகும்.

  ReplyDelete
 3. 14 சாராய ஃபேக்டரியா!!!??? தேவைதான், பின்ன அரிசி, மிக்ஸி, க்ரைண்டர், லேப்டாப் எல்லாம் கொடுக்கிறதுக்குப் பணம் வேண்டாமா?

  எல்லாம் ஃப்ரீயா கிடைச்சிட்டா, சம்பாதிக்கிற பணத்தை மக்களும்தான் என்ன செய்வாங்க? இப்படித்தானே செலவழிச்சாகணும்?

  மத்தச் செலவுகளை வீட்டுல வயசான அம்மாவும், பெண்டாட்டியும், மகளும் வேலைக்குப் போய் பாத்துகிடுவாங்கல்ல. உங்களுக்கு ஒலகமே தெரியல பாஸ்!!

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு!

  குடிமக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்,
  நிச்சயமாக நாம் பெருமைப்படத்தான் வேண்டும், இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஏற்று வாழ்வதால் பெரும்பாவங்களை செய்யாமல் இருக்கிறோம். இல்லை என்றால் மனம்போன போக்கில் யார் எதை சொன்னாலும் ஆம் அது சரிதான் என்று சமயத்திற்கு ஏற்ப முடிவு எடுத்து பிறருக்கு எது நேர்ந்தாலும் நமக்கு ஒன்றும் பதிப்பு இல்லை என்று வாழ வேண்டும்.
  இதில் கொடுமை என்னவென்றால் நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு இன்றைய இளைய சமுதாயம் மதுக்கடையில் மற்றவர்களுடன் மது அருந்துவதுதான். இது அவர்களை மட்டும் குறைகாண முடியாது, பெற்றோர்கள் சரியாக தனது பணியை செய்யாமல் பண வசதி இருக்கிறது என்று உலக கல்வியில் மட்டும் ஆர்வம் காட்டி மார்க்க கல்வியை ஒதுக்கி விடுகிறார்கள். உலக கல்விக்காக எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்கிறார்கள். இங்கு மற்றவர்களை காட்டிலும் நான் முஸ்லிம் என்று சொல்பவன் தன்னையும் தான் குடும்பத்தையும் இது போன்ற வழிகேட்டில் ஈடுபடாமல் இருக்க உலக கல்வியுடன் கூடிய மார்க்க கல்வி முறையை ஊக்குவிக்க வேண்டும்.

  ReplyDelete
 5. @மதுரை சரவணன் அவர்களுக்கு

  வாங்க நண்பரே உங்களின் முதல் வருகைக்கும் இந்த பதிவின் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 6. @சகோ
  முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'


  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
  குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மிக அருமையான பின்னூட்டம் இப்போது தான் என்னுடைய பதிவு முழுமையடைகிறது.
  நன்றி சகோ.

  ReplyDelete
 7. நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.

  சத்தியமான வார்த்தை.

  வருங்கால சமுதாயம் தடம் புரண்டு சீரழிவில் தான் சிக்கிக்கொள்ளுமோ?

  ReplyDelete
 8. @சகோ
  ஹுஸைனம்மா


  தமிழக முதல்வரின் தலைமை செயலகத்துக்கு உயர் பதவிக்கு ஒலகம் தெரிந்தவர்கள் தேவையாம் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள் பதவி நிச்சயம்.

  சகோ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. //நமது எதிர்கால சமூகத்தை நினைத்தால் பயமே ஏற்படுகிறது.//

  எதிர்காலம் அல்ல நிகழ்கால சமூகத்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் மூலம் சினிமா என்றால் அது மிகையில்லை.

  ReplyDelete
 10. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்July 13, 2011 at 8:02 AM

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அருமையான கட்டுரை நல்ல அழுத்தமாக சொல்லியிருக்கின்றீர்கள்.
  ///அப்புறம் என்ன மயி.....க்கு மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எச்சரிக்கை செய்கிறது?///
  நீங்கள் மயிர் என்றே சொல்லியிருக்கலாம் தமிழில் இது தவறான வார்த்தையே கிடையாது சகோ.

  ReplyDelete
 11. அபு ஃபைஜுல்July 13, 2011 at 9:33 AM

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ
  சகோ:ஹைதர் அலி.
  மதுவால் தன் மகளிடம் தகாத முறையில் நடக்கும் தந்தை,தன் மறுமகளிடம் மப்பில் மதி கேட்டு நடக்கும் மாமனார்,தன் தாய் மது அருந்த காசு தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்ய துனியும் மகன்,மது இப்படியேல்லாம் கருவையே கருவருக்கின்றது.
  இவை போன்ற பதிப்புகளை தவிர்க்கத்தான் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே மதுவை தடை செய்தது.

  ReplyDelete
 12. அண்ணா..........
  கலக்கிட்டிங்கண்ணா.
  மொபைல்ல கமெரா சேர்த்து வாறது பல தீமைகளுக்கு துணைபோனாலும் பல நல்ல காரியங்களுக்கும் துணைபோகின்றது என்பதற்கு தாங்கள் இணைத்துள்ல புகைப்படங்கள் உதாரணம்.
  திரைப்படங்களில்-மது,புகைப்பிடித்தல் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு-என்று விளம்பரம் செய்யும் அதே அரசு மதுக்கடை நடாத்துகிறது.அப்படியென்றால் அந்த விளம்பரத்தை போடவேண்டிய தேவை என்ன? அருமையான கேள்வி.

  "குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி, குடியானவனை கொன்று விட்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். "
  சுட்டிக்காட்டப்படவேண்டிய வசனம்.

  அப்புறம் இன்னொரு விசயம்.நம்மட ஆளுங்கதான் இப்ப குடியில் முன்னணில நிக்கிறதா சொல்லியிருக்கீங்க.அப்போ... நாங்களெல்லாம் சுரர்களாகவும் தேவர்களாகவும் ஆகிவிட்டோமா?-வடக்குக்காரர்களிடம் கேட்டுப்பார்ப்போம்.

  ReplyDelete
 13. குடி குடியைக் கெடுக்குமாடா?

  நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும்,நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.
  -------------------------
  எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்.

  அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?

  ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை.

  -------------------------

  ஒரு பாரில் நம்ம ஜோன்ஸ். அவருக்கு இருபுறமும் ஆட்கள் நின்றுகொண்டு மது வாங்கிக்கொண்டிருந்தனர்.

  ஒருவர் : ஜானி வாக்கர் சிங்கிள்.

  மற்றொருவர் : பீட்டர் ஸ்காட்ச் சிங்கிள்.

  இன்னொருவர் : நெப்போலியன் சிங்கிள்.

  அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ் கேட்டார், ஜோன்ஸ் மேரீட்.
  ---------------------------

  அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?

  அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.

  --------------------------
  ஏன் குடிச்ச?

  ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன்.

  அப்படி என்ன கவலை?

  நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.
  ------------------------------

  அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்?

  இரண்டு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவசமாம்...!


  குடி குடியை கெடுக்கும்னு எழுதுறான் ஆனால் குடிக்காதேனு எழுத மாட்டான்.

  நல்ல விளக்கமாக சொள்ளி உள்ளிர்கள் சகோ.

  இந்த துணுக்குகள் தேடிப் பிடித்து சேர்த்துள்ளேன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. நல்ல பதிவு. இது சம்பந்தமாக என்னுடைய பதிவு ஒன்று
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/07/blog-post_06.html

  ReplyDelete
 15. @சகோ
  M. Farooq


  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

  உங்களின் கூற்று உண்மைதான் சகோ

  பிள்ளைகள் கேடுவதற்கு தாய் தந்தையாரின் கவனிப்புயின்ன்மை மிகப்பெரிய காரணம்

  உங்கள் கருத்துக்கு நன்றி சகோ

  ReplyDelete
 16. @ சகோ
  மு.ஜபருல்லாஹ்


  உங்களின் கருத்துக்கும் கவலைக்கும் அக்கறைக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 17. @சகோ
  கார்பன் கூட்டாளி


  //இவை அனைத்திற்கும் மூலம் சினிமா என்றால் அது மிகையில்லை.//

  ஒரு காலத்தில் சினிமாவில் வில்லன் தான் தண்ணி அடிப்பான் இப்போ தண்ணி அடித்தால் தான் ஹீரோ

  சரியாகச் சொன்னீர்கள்

  ReplyDelete
 18. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

  சரிங்க சகோ அடுத்த முறை அப்படியே சொல்லி விடுவோம்

  ReplyDelete
 19. @அபு ஃபைஜுல்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  உங்கள் கருத்திற்கு நன்றி சகோ

  ReplyDelete
 20. @எஸ்.பி.ஜெ.கேதரன்
  வாங்கே நண்பரே உங்களின் முதல் வருகைக்கு நன்றி

  //அப்புறம் இன்னொரு விசயம்.நம்மட ஆளுங்கதான் இப்ப குடியில் முன்னணில நிக்கிறதா சொல்லியிருக்கீங்க.அப்போ... நாங்களெல்லாம் சுரர்களாகவும் தேவர்களாகவும் ஆகிவிட்டோமா?-வடக்குக்காரர்களிடம் கேட்டுப்பார்ப்போம்.//

  வடக்கு மட்டுமல்ல நண்பரே கிழக்கு, மேற்குக்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள் மதுவின் கொடுமையை சொல்வார்கள்

  ReplyDelete
 21. @அந்நியன் 2

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  நன்று சகோ

  அழகான பின்னூட்டத்திற்கு

  ReplyDelete
 22. @தோழர்
  R.Puratchimani


  தங்களின் முதல் வருகைக்கும் சுட்டிக்கும்
  நன்றி

  ReplyDelete
 23. @சகோ
  vidivelli


  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 24. மது தீமைகளின் தாய் - மிகவும் சரியானதே.... நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 25. @மாய உலகம்

  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete